April 11, 2012

அடாவடி அலமு

”கீரைக்காரம்மா,நேற்று தந்த கீரை ஒரே கசப்பு.கீரை கூட்டுக்கு போட்ட எண்ணையும் தேங்காயும் தண்டம்.இத்தனை காலம் கீரை தர்ரீங்க பக்குவமா தரத்தெரியலே”பிலு பிலு வென்று கீரைக்கார அம்மாவை பிடித்துக்கொண்டாள் அலமு.

அலமுவுடன் மல்லுக்கு நின்றால் வேலைக்கு ஆகாது என்பது கீரைக்கார அம்மாவுக்கு தெரியும்.
வழக்கம் போல் ஒரு பெரிய கீரைக்கட்டை இலவச இணைப்பாக கொடுத்து விட்டு நடையைக்கட்டினாள் கீரைக்கார அம்மா.

கீரைக்காரி என்றில்லை பால்காரர்,காய்காரர்,தையல்காரர்,மளிகைக்கடை,பழைய துணிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் தருபவரில் இருந்து அனைவரிடமும் அடாவடி செய்தே சாதிப்பதில் மகா கில்லாடி அலமு.சாதித்து விட்டு அவளது முகத்தில் பொங்கும் சிரிப்பை பார்க்க வேண்டுமே.காண கண் கோடி வேண்டும்.

மணி ஆர்டர் கொண்டு வந்து தரும் தபால்காரர் பணத்தைக்கொடுத்துவிட்டு தலையை சொறிந்து கொண்டு நின்றால் ”என்ன என்ன என்ன..?”என்று கே பி சுந்தராம்பாள் ஆகி விடுவாள்.”

“இப்ப என்னத்துக்கு நிக்கறீங்க.இப்படி தலையை சொறிந்து கொண்டு..?இருக்கற ஒண்ணு ரெண்டு முடியும் போய்டப்போகுது.உங்கள் டியூட்டி.முடிச்சுட்டீங்க.அதுக்குத்தான் கவர்மெண்ட் சம்பளம் தருதில்லை..”இப்படி நீட்டி முழங்கியதுமே தபால்காரர் தடாலடியாக எஸ்கேப்தான்.

இவ்வளவு ஏன்?அலமு பாஸ்போர்டுக்கு அப்ளை பண்ணி,போலீஸில் இருந்து என்கொயரி வரும்பொழுது போலீஸ் காரருக்கு அன்பளிப்பு தராமல் “ஹி..ஹி..மாசக்கடைசியா வந்துட்டீங்க சார்.இல்லேன்னே இருநூறென்னா முன்னூறாகவே தந்திருப்பேன்”என்று கூறி அரை டம்ளர் நீர் மோரை பாசமாக கொடுத்து அனுப்பிவைத்தவளாயிற்றே!

போன மாதம் அப்படித்தான்.அலமுவின் உத்தம புத்திரன் புத்தகங்கள் வைக்க அலமாரி வேண்டும் என்று ஒற்றைக்காலில் பலிகிடக்க போனால் போகிறது என்று ஒரு கார்பெண்டரை அழைத்து நாலடி உயரத்தில் ஒரு புக் செல்ஃப் செய்ய பத்தாயிரத்தில் ஆரம்பித்த பேரம் ஆறாயிரத்து ஐநூற்றில் முடித்து அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

அப்பாவி கார்பெண்டரும் சொன்ன நாளில் மினி லாரியில் புத்தக அலமாரியை கொண்டு வந்து இறக்கினார்.

புத்தக அலமாரியை தடவி,நுணுக்கமாக பரீசீலித்த அலமு ”என்ன இது பழைய சாமான் விக்கற கடையில் இருந்து தூக்கி வந்த மாதிரி இருக்கு.நான் கேட்ட மெட்டீரியல் ,டிசைன் ஒன்றுமே இல்லை.சரியான பித்தலாட்டக்காரானா இருப்பே..”

வானத்துக்கும்,பூமிக்கும் அலமு குதித்த குதியில் சுனாமியே வந்து விடும் போல் இருந்தது.

கார்பெண்டர் சொன்ன எதுவும் அலமுவின் முன்னால் எடுபடவே இல்லை.

“நான் பேலன்ஸ் தரப்போறதில்லை.இந்த அலமாரி இப்படியே ஓரமா இருக்கட்டும், மெட்டீரியல எடுத்துட்டு வந்து எங்க வீட்டு காம்பவுண்டுக்குள் வைத்து என் கண் முன்னாடி செய்து தந்துட்டு,பேலன்ஸை வாங்கிக்கொண்டு,இந்த பாடாவதி அலமாரியையும் எடுத்துட்டு போ.நான் அப்பவே சொன்னேன்.வீட்டிலே வைத்து செய்.அதான் இத்தனாம் பெரிய காம்பவுண்ட் இருக்கேன்னு.இல்லை மேடம் நொள்ளை மேடம் என்று சல்ஜாப்பு சொல்லிட்டு அலமாரின்ன பேரிலே குப்பையை கொண்டு வந்து போட்டு இருக்கியே..கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?”

கார்பெண்டர் மானஸ்தன்.அடுத்த வாரமே அலமுவின் காம்பவுண்டுக்குள் மெட்டீரியல் கொண்டு வந்து இறக்கினான்.இரண்டு நாட்கள் வேலை பார்த்து அலமாரி வேலையை முடித்துக்கொடுத்து விட்டு பேலன்ஸ் பணத்திற்காக காத்திருந்தவனிடன்”ஓரமாக இருந்த அலமாரியைக்காட்டி எற்கனவே பண்ணிய இந்த குப்பை அலமாரியை என்ன பண்ணப்போறே”மெதுவாக கேட்டாள்.

“வேறென்னம்மா பண்ண..வீட்டுக்குத்தான் தூக்கிட்டு போகணும்”

“அதுக்கு வேற லாரி வாடகை கொடுக்கணும்.உன் பத்துக்கு பத்து வீட்டுக்குள்ளே இதைப்போய் எங்கே கொண்டு வைப்பே.போனாப்போகுது.செருப்பு வைக்கும் கப்போர்டா யூஸ் பண்ணிக்கறேன்.ஒரு விலை போட்டுக்கொடுத்துட்டு போ.”

ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் அலமாரி வெறும் ஆயிரத்து ஐநூறுக்கு முடிக்கப்பட்டது.

இதில் ஹைலைட் என்னவென்றால் அடுத்த நாளே பக்கத்து தெரு காமாட்சி வீட்டு கூடத்தை அலமாரி அலங்கரித்துக்கொண்டிருந்தது.

காமாட்சியிடம் சாதுர்யமாக பேசி ஆறாயிரத்து சொச்சத்துக்கு அவளது தலையில் கட்டி விட்ட அலமுவின் சாமர்த்தியத்தை சொல்லவும் வேண்டுமோ.?

அலமுவின் சின்னப்பொண்ணுக்கு அன்று பிறந்த நாள்.குடும்பத்துடன் பிரபலமான உணவகத்துக்கு பஃபே சென்றனர்.

முதலில் பறிமாறப்பட்ட ஸ்டார்டர்களை சர்வரின் காதில் விழுவது போல் குறை சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

“ஏய்..மானத்தை வாங்காதேடீ.நீ சொல்லுறாப்போல் அவ்வளவு மோசமில்லை.வாயை மூடிட்டு சாப்பிடு”பற்களை கடித்து கடுகடுத்த கணவரை சட்டை செய்யாமல் “வாயை மூடிக்கொண்டு எப்படி சாப்பிடுறதாம்” என்று ஜோக் அடித்தவள் சாப்பாட்டை இஷ்டத்திற்கு ஒரு வெட்டு வெட்டி விட்டு சரவரிடம்”எங்கே உங்கள் மேனஜர்.கூப்பிடு அவரை..”அலமுவின் அதிகாரத்தைப்பார்த்து அரண்டு போய் மேனஜர் ஓடி வந்து விட்டார்.

“என்ன சார் சிட்டியிலேயே எவ்வளவு பேமசான ரெஸ்டாரெண்ட் இது.இப்படி மட்டமான புட் ஐட்டங்களை போட்டு கடுப்பேத்தறீங்களே.என் பொண்ணு பர்த்டேயை சந்தோஷமாக செலிபரேட் பண்ண உங்கள் ஹோட்டலில் கையை நனைத்து வயிற்றை நோக வைத்துதுதான் மிச்சம்..”நீட்டி முழங்கி பேச ஆரம்பித்ததுமே அலமுவின் ஆத்துக்காரர் எங்கேயோ எஸ்கேப் ஆகி விட,பிள்ளைகள் எல்லாம் தர்ம சங்கடத்துடன் அம்மாவை கோபப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.

“மேடம் ,மேடம்..கஸ்டமர் நிறைய இருக்காங்க..சப்தம் போட்டு பேசாதீங்க..அசிங்கமா போய்டும்.இனி இப்படி குறை வராத அளவு கவனமாக இருக்கோம்.”

“இப்படி என் பொண்ணு பிறந்த நாள் அதுவுமா அப்செட் பண்ணிட்டீங்களே.அதான் வருத்தமாக உள்ளது.நாலு பேரிடம் உங்கள் ரெஸ்டாரெண்ட் பற்றி எப்படி பெருமையா சொல்லிக்கறது.”

“ஓ..இவளுக்குத்தானா பர்த்டே..ஹேப்பி பர்த்டேடா செல்லம்.மேடம் நீங்கள் சாப்பிட்டதுக்கு பணமே தர வேண்டாம் போய்ட்டு வாங்க”கும்பிடாத குறையாக அவர்களை அனுப்பி வைப்பதில் மும்முரமானார் உணவக மேலாளர்.

இப்படித்தான் அன்று தினசரி பேப்பரினுள் வைத்து வந்த பிட் நோட்டீஸில் புதிய கேக் ஷாப் திறப்புவிழா பற்றி விளம்பரம் இருந்தது.ஒரு பிளாக் பாரஸ்ட் கேக் பீஸ் வாங்கினால் மற்றொன்று இலவசம் என்று.

அலமுவுக்கு கேக் ஷாப்புக்கு ஆஜர் ஆகாமல் இருக்க முடியாதே.பேப்பர் பிளேட்டில் வைத்துதந்த கேக்கை சப்புக்கொட்டிக்கொண்டு திவ்யமாக சாப்பிட்டு விட்டு,வீட்டிற்கு நான்கு பீஸ் பார்சல் வாங்கிக்கொண்டு கடைக்காரர் கொடுத்த பில்லை பார்த்து இவள் போட்ட கத்தலில் கேக் ஷாப்பில் எரியாமல் இருந்த ஓவன் பற்றிக்கொண்டு எரிந்து இருக்கும்.

“ஒண்ணு வாங்கினால் ஒண்ணு ஃபிரீ விளம்பரம் போட்டுட்டு இதென்ன பிராடுத்தனம்?”

“மேடம்,அது வாரத்துக்கு மட்டும்தான் மாசம் முழுக்க இல்லை”

“அதென்ன..காலக்கெடு எதுவும் போட்டு இருந்தீங்களா?இப்படி பிராடுத்தனம் பண்ணினால் எப்படி?”குரலை உயர்த்தியவளை அடக்கி பில்லில் பாதித்தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு கை எடுத்து கும்பிடாத குறையாக அனுப்பி வைத்தார் அந்த கேக் ஷாப்காரர்.

இவ்வாறாக அதட்டல் போட்டு அடாவடி பண்ணும் அலமுவாகிய அலமேலு அன்று மயில் கழுத்துப்பச்சை காஞ்சிபுரப்பட்டு படபடக்க,தலைகொள்ளாமல் பிச்சுப்பூவும்,கழுத்தில் தாம்பு கயிராட்டம் ரூபி எமரால்ட் கற்கள் பதித்து மோப்பு வைத்த காப்பிக்கொட்டை செயினும்.தோளில் ஹேண்ட்பேக் சகிதமாக கிளம்பி விட்டாள்.

எங்கே என்று கேட்கின்றீர்களா?

அடாவடி பண்ணி சேமித்த பணம் உடனடியாக உண்டியலில் போடப்படும்.எந்த ஒரு அவசரதேவைக்கும் திறக்கப்படாத உண்டியல் ஒரு அட்சய திருதியை அன்று மங்களகரமாக திறக்கப்பட்டு உண்டியல் பணம் முழுக்க நகைகடைக்கு சென்று ஒரு தோடாக மாறி விடும்.

வருடந்தோறும் சாதாரணத்தோடு வாங்கிய நம்ம அலமு இந்த வருடம் வைரத்தோடு வாங்கப்போகின்றாளாக்கும்.அடுத்த வருட டார்கெட் நெக்லெஸாகக்கூட இருக்கலாம்.


54 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அடேங்கப்பா.. கில்லாடிக்கி கில்லாடியா இருப்பாங்க போல இந்த அலமு.. இந்தமாதிரி 2 பொம்பளைங்க இருந்தா ஊரே விலைக்கு வாங்கிப்புடலாமே... ஹிஹிஹிஹி..

Asiya Omar said...

நான் கதாபாத்திரம் பகுதிக்கு பெரிய ரசிகை.
டெய்லர் கிச்சா அப்புறம் அடாவடி அலமுவா?அய்யோ ! இப்படி அடாவடி அலமுவை கண் முன்னாடியே கொண்டு வந்தீட்டீங்க.உங்களுடைய கதாபாத்திர ரசிப்புத்திறன் சூப்பர்.அதனை எழுத்தில் வடிப்பது சூப்பரோ சூப்பர்.

Mahi said...

அடாவடி அலமு இல்ல, அல்ப அலமு-ன்னு பேர் வைச்சிருந்தா கரெக்ட்டா இருந்திருக்கும்!;)

:))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் அலமாரி வெறும் ஆயிரத்து ஐநூறுக்கு முடிக்கப்பட்டது.

இதில் ஹைலைட் என்னவென்றால் அடுத்த நாளே பக்கத்து தெரு காமாட்சி வீட்டு கூடத்தை அலமாரி அலங்கரித்துக்கொண்டிருந்தது.

காமாட்சியிடம் சாதுர்யமாக பேசி ஆறாயிரத்து சொச்சத்துக்கு அவளது தலையில் கட்டி விட்ட அலமுவின் சாமர்த்தியத்தை சொல்லவும் வேண்டுமோ.?//

அலமேலு சாமர்த்தியசாலி;
சமத்தோ சமத்து தான்.
சந்தேகமே இல்லை.

நல்ல பகிர்வு. நன்கு ரசித்தேன்.

இமா க்றிஸ் said...

;)) உங்க கதாபாத்திரத் தெரிவு சூப்பர் ஸாதிகா. ரசித்துப் படித்தேன். மனிதரில் எத்தனை நிறங்கள்! ;)

மெய்ல் பாருங்க, ஒரு மெசேஜ் வருது.

துளசி கோபால் said...

சூப்பர் ஸாதிகா!

வெகுவாக ரசித்தேன்.

ஒரு இடத்தில் மட்டும் பொண்ணு பையனா மாறி இருக்கே!

//“இப்படி என் பையன் பிறந்த நாள் அதுவுமா அப்செட் பண்ணிட்டீங்களே.அதான் வருத்தமாக உள்ளது.நாலு பேரிடம் உங்கள் ரெஸ்டாரெண்ட் பற்றி எப்படி பெருமையா சொல்லிக்கறது.”//

அப்பறம் இந்த நீர் மோர் சமாச்சாரம்.....

நாங்க பூனாவில் இருந்தப்ப...ஒருநாள் ஸ்ரீராமநவமி தினம். வீட்டுலே நீர்மோர் பானகம் எல்லாம் வச்சு சாமி கும்பிடும்சமயம் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு போலீஸ்காரர் மஃப்டியிலே வந்தார். அப்போ இந்த லஞ்சம் ,அன்பளிப்பு எல்லாம் எனக்கு நிஜமாவே தெரியாது. மோர் மட்டும்தான் கொடுத்தேன். அப்புறம் அவரை வழி அனுப்ப கோபால் பஸ் நிறுத்தம்வரை போனப்பதான் 'காசு வேணுமுன்னு போலீஸ்காரர் சொன்னாராம். 'சட்டைப்பையில் இருந்த நூறைக்கொடுத்து சமாளிச்சாராம். 32 வருசத்துக்கு முன்னே நாங்க குடுத்த முதல் லஞ்சம்:-)))))

பால கணேஷ் said...

கேரக்டர்களை கவனித்து எழுதுவது மிகக் கடினமான விஷயம். அதை அனாயாசமாகச் செய்கிறீர்கள் தங்கையே... சில பெண்களின் வாய் இப்படித்தான்... திறந்தால் அனைவரையும் அஞ்சி நடுங்க வைத்து விடும். அலமு சுவாரஸ்யமான கேரக்டர்தான்!

-தொடரும் கேரக்டர்களுக்காய் ஆவலுடன் என் காத்திருப்பு.

ஸாதிகா said...

2 பொம்பளைங்க இருந்தா ஊரே விலைக்கு வாங்கிப்புடலாமே... ஹிஹிஹிஹி..//அட ஆமால்ல.எப்ப பாரு கில்லாடிகளைப்பற்றியே எழுதிக்கொண்டு இருக்கேன்.அடுத்து அப்பாவி பற்றி எழுத வேண்டும்.முதல் வருகைக்கும் மிக்க நன்றி ஷேக்.

ஸாதிகா said...

Asiya Omar said...
நான் கதாபாத்திரம் பகுதிக்கு பெரிய ரசிகை///ரொம்ப மகிழ்ச்சி தோழி.உற்சாகமூட்டும் வரிகளில் அடுத்து வெகு சீக்கிரமே மற்றுமொரு கதாபாத்திரம் உதயமாகிவிடும்.மிக்க நன்றி ஆசியா.

ஸாதிகா said...

அடாவடி அலமு இல்ல, அல்ப அலமு//மகிக்கு அலமு மேல் ஏகப்பட்ட கோபம் போலிருக்கு.ஹி..ஹி..கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கேரக்டரை ரசித்து பின்னூட்டிய வை .கோபால்சாமி சாருக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

கேரக்டரை ரசித்து பின்னூட்டிய வை .கோபாலகிருஷ்ணன் சாருக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ரசித்து படித்த இமாவுக்கு அன்பின் நன்றிகள்.மெயிலும் பார்த்தேன்.பதிலும் வந்துஇருக்குமே?

ஸாதிகா said...

ஒரு இடத்தில் மட்டும் பொண்ணு பையனா மாறி இருக்கே!//இப்ப பொண்ணா மாறியாச்சு துளசிகோபால்.நுண்ணிய பார்வைக்கு ஒரு சல்யூட்.

அட முப்பத்திரெண்டு வருஷத்துக்கு முன்னே உங்கள் வீட்டிலும் நடந்ததை நான் நேரில் பார்த்துவிட்டு எழுதியது போல் இருக்கில்லே:)

மிக்கநன்றி சகோ துளசி கோபால்

ஸாதிகா said...

கதாபாத்திரத்தை ரசித்து பின்னூட்டிய கணேஷண்ணாவுக்கு நன்றிகள்.உற்சாகமூட்டும் வரிகளுக்கு ஸ்பெஷல் நன்றி:)

GEETHA ACHAL said...

ரொம்ப சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...எழுத்து நடையில் எழுதுவது மிகவும் கடினம்...அதனையும் கலக்கி இருக்கின்றிங்க...

அடாவடி அலமு மாதிரி நிறைய பேர் இருக்காங்க...

குறையொன்றுமில்லை. said...

இந்த அலமு அம்மா பண்ற அடாவடிதனத்தால பொம்பிளைகளே வெக்கப்பட்ட்டு ஓடிடுவாங்கபோல. இப்படியும் சில பேரு இருக்காங்கதான் போல நினைக்கவைக்குதே,

தினேஷ்குமார் said...

ஆஹா கிளம்பிட்டாய்ங்கப்பா அடுத்த அடாவடிக்கு ... சூப்பர் சகோ...

Radha rani said...

எனக்கு தெரிந்த மாமி ஒருத்தர் இந்த அலமு கேரக்டர் மாதிரிதான்..பழைய துணிகளை எடுத்துகொண்டு பாத்திரம் விற்கும் வியாபாரியிடம் நல்ல பெரிய பாத்திரமாக எடுத்து கொண்டு அவங்க வச்சிருக்கிற பழைய பேண்ட்,சட்டைகளில் பாதியைத்தான் கொடுப்பாங்க..கட்டாதும்மா,துணி இல்லையின்னா கூட கொஞ்சம் பணம் போட்டு கொடுங்க என்று வியாபாரி கேட்டால்,போட்ட துணி அவ்வளவும் புதுசு,இருக்கமா இருக்குன்னு தான் உன்கிட்ட போடறேன்..பணம் தரமாட்டேன் மேற்கொண்டு இந்த பேன்ட்டை வச்சுக்கோ என்று தையல் பிரிந்த துணிகளை போட்டு (உபயோகபடுத்த முடியாத பல நல்ல துணிகளும் இருக்கு)பேரத்தை முடித்து விடும் இந்த மாமி..நீங்க எழுதினதை படித்த உடன் எனக்கு இந்த மாமி நியாபகம் வந்துடிச்சு..:)

தமிழ் மீரான் said...

வரிகளை வாசிக்க வாசிக்க அப்படியே அடாவடி அலமு மனக்கண்ணில் உருவெடுக்கிறார்.

ஆனாலும் அந்த தலை சொறியும் தபால்காரர், வீட்டுக்குள்ளே வந்து பிச்சை கேட்கும் போலீஸ்காரர், விளம்பரத்தில் பித்தலாட்டம் செய்து வியாபாரத்தை அள்ள நினைக்கும் கேக் ஷாப்காரர் இவங்களுக்கெல்லாம் அடாவடி அலமுதான் சரியான கேரக்டர்!

நல்ல ரசிக்க வைத்த பதிவுக்கு நன்றி.!

Menaga Sathia said...

உங்கள் கதாபாத்திர பதிவுக்கு நான் ரசிகை அக்கா...மிகவும் ரசித்தேன்!!

Yaathoramani.blogspot.com said...

அடாவடி அலமு கதாப்பாத்திரச் சித்தரிப்பு
மிக மிக அருமை.ரசித்துப் படித்தோம்
வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு. நன்கு ரசித்தேன்.

Anisha Yunus said...

ha ha haa... sema kathai sathika akkaa.... thalaippae ennai ulle kondu vanthuduchu, kathaiya neenga sonna vitham pakkathula alamu-nnu per vechu yaaraavathu utkaarnthirunthaal thalaila naalu kottu vechiruppen.... ha ha haa... sema ending.... paavam Mr.Alamu :))

நிரஞ்சனா said...

My Sweet sister! ஒருநாள் நான் ஆட்டோவுல வந்துட்டிருக்கறப்ப ஆட்டோ டிரைவர் பூக் கொண்டு வந்த லேடி மீது லேசா உரச... அந்த லேடி கன்னா பின்னான்னு பேச... அதைக் கண்டு அசந்து போயிருக்கேன். இந்த கேரக்டர் படிச்சப்ப அதுதான் ஞாபகம் வந்துச்சு... பிரமாதம்.

கோமதி அரசு said...

“அதுக்கு வேற லாரி வாடகை கொடுக்கணும்.உன் பத்துக்கு பத்து வீட்டுக்குள்ளே இதைப்போய் எங்கே கொண்டு வைப்பே.போனாப்போகுது.செருப்பு வைக்கும் கப்போர்டா யூஸ் பண்ணிக்கறேன்.ஒரு விலை போட்டுக்கொடுத்துட்டு போ.”//

நல்ல கதாபாத்திரப் படைப்பு.
இப்படியும் சிலர் இருக்கிறார்கள் அடாவடி அலமு போல்.
கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் அலமுவை.

Jaleela Kamal said...

ம்ம் அலமு கதை அப்படியே நேரில் பார்த்தது போல் இருக்கு
கில்லாடி அலமு தான்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்

ஸாதிகா said...

இந்த அலமு அம்மா பண்ற அடாவடிதனத்தால பொம்பிளைகளே வெக்கப்பட்ட்டு ஓடிடுவாங்கபோல. //என்ன் லக்‌ஷ்மிம்மா இப்படி சொல்லிட்டீங்க:)இப்படி மாதிரி பெண்கள் எவ்வளவு பேர் இருக்காங்க..!கருத்துக்கு மிக்க நன்றிம்மா.

ஸாதிகா said...

இந்த அலமு அம்மா பண்ற அடாவடிதனத்தால பொம்பிளைகளே வெக்கப்பட்ட்டு ஓடிடுவாங்கபோல. //என்ன் லக்‌ஷ்மிம்மா இப்படி சொல்லிட்டீங்க:)இப்படி மாதிரி பெண்கள் எவ்வளவு பேர் இருக்காங்க..!கருத்துக்கு மிக்க நன்றிம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி தினேஷ்குமார்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ராதா ராணி.//பேரத்தை முடித்து விடும் இந்த மாமி..நீங்க எழுதினதை படித்த உடன் எனக்கு இந்த மாமி நியாபகம் வந்துடிச்சு..:)//நானும் பார்த்த கேட்ட சில கேரக்டர்களை வைத்து கற்பனையும் கலந்துதான் எழுதுகிறேன்.

ஸாதிகா said...

ஆனாலும் அந்த தலை சொறியும் தபால்காரர், வீட்டுக்குள்ளே வந்து பிச்சை கேட்கும் போலீஸ்காரர், விளம்பரத்தில் பித்தலாட்டம் செய்து வியாபாரத்தை அள்ள நினைக்கும் கேக் ஷாப்காரர் இவங்களுக்கெல்லாம் அடாவடி அலமுதான் சரியான கேரக்டர்//தமிழ் மீரான் வித்த்யாசமான கோணத்தில் சிந்திக்கிறார்.மிக்க நன்றி கருத்துக்கு.

ஸாதிகா said...

உங்கள் கதாபாத்திர பதிவுக்கு நான் ரசிகை அக்கா.//மிக்க நன்றி,மகிழ்ச்சி மேனகா

ஸாதிகா said...

ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி ரமணி சார்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

ஸாதிகா said...

வெகு நாள் கழித்து வந்திருக்கிங்க அன்னு.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி நிரஞ்சனா ஸிஸ்டர்

ஸாதிகா said...

நல்ல கதாபாத்திரப் படைப்பு.
இப்படியும் சிலர் இருக்கிறார்கள் அடாவடி அலமு போல்.
கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் அலமுவை.//கருத்துக்கு மிக்க் நன்றி கோமதி அரசு

ஸாதிகா said...

மி்க்க நன்றி ஜலீலா

இராஜராஜேஸ்வரி said...

இவ்வாறாக அதட்டல் போட்டு அடாவடி பண்ணும் அலமுவாகிய அலமேலு அன்று மயில் கழுத்துப்பச்சை காஞ்சிபுரப்பட்டு படபடக்க,தலைகொள்ளாமல் பிச்சுப்பூவும்,கழுத்தில் தாம்பு கயிராட்டம் ரூபி எமரால்ட் கற்கள் பதித்து மோப்பு வைத்த காப்பிக்கொட்டை செயினும்.தோளில் ஹேண்ட்பேக் சகிதமாக கிளம்பி விட்டாள்.

அருமையான வர்ண்னை அடாவடி அலமுவை கண்முன் கொண்டுவந்தது.. பாராட்டுக்கள்..

ஹுஸைனம்மா said...

//அடாவடி அலமு இல்ல, அல்ப அலமு//
ஸேம் ப்ளட் மகி.

இப்படி அடாவடி செஞ்சு பணம் சேர்த்த அலமுவை ‘அக்ஷ்ய திரிதியை’யைச் சொல்லி ஏமாற்றத் தயாராக இருக்கும் நகைக்கடைக்காரரைத் தானே தேடிப் போகிறாளே- இதுதான் விதியின் சதியோ?

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!! :-)))))

பாச மலர் / Paasa Malar said...

கில்லாடிச் சமர்த்து அலமுதான்....இயல்பாக வந்துள்ளன பல சமாச்சாரங்கள்..
ரசித்தேன் ஸாதிகா.

Anonymous said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
அப்பப்பா அலமு போல ஆட்கள் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாது நமக்கு ஒத்து வராதப்பா!. மிக அருமையாக எழுதியிருந்தீர்கள் சகோதரி. அத்தனை பேரின் கருத்துகளும் சாட்சி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

//அருமையான வர்ண்னை அடாவடி அலமுவை கண்முன் கொண்டுவந்தது.. பாராட்டுக்கள்..//பாராட்டி பின்னூட்டியதற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

ஸாதிகா said...

//அருமையான வர்ண்னை அடாவடி அலமுவை கண்முன் கொண்டுவந்தது.. பாராட்டுக்கள்..//பாராட்டி பின்னூட்டியதற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

ஸாதிகா said...

//அடாவடி அலமு இல்ல, அல்ப அலமு//
ஸேம் ப்ளட் மகி. //ஹுசைனம்மா இதுக்கே இப்படீன்னா அல்ப கேரக்டர் ஒன்றை அறிமுகப்படுத்தினால் என்ன சொல்லப்போறீங்க..?

//வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!! :-))))// அடேங்கப்பா.. அலமு மேல் ஹுசைனம்மாவுக்கு என்னா கோபம் என்னா கோபம்.இது நான் எழுதிய என் கற்பனையில் உதித்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி தங்கையே!

ஸாதிகா said...

பாசமலர் கேரக்டரை ரசித்து வாசித்து பின்னூட்டிய உங்களுக்கு என் நன்றி.

ஸாதிகா said...

அலமு போல ஆட்கள் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாது நமக்கு ஒத்து வராதப்பா!//வாங்க சகோதரி வேதா இலங்கா திலகம்.கருத்திட்டதுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.

fcrights said...

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
for readmore www.fcrights.in

ஸ்ரீராம். said...

கடைசியில் எதாவது பாடம் புகட்டப் படுவார் என்று நினைத்தேன். எனக்கும் இது மாதிரி கேரக்டர்களைத் தெரியும்!! :)))

ஸாதிகா said...

கடைசியில் எதாவது பாடம் புகட்டப் படுவார் ///சிறுகதை என்ற தொனியில் எழுதி இருந்தால் பாடம் புகட்டலாம்.ஒவ்வொரு கேரக்டர்களை பற்றியுமல்லவா எழுதுகிறேன்:)

கதாபாத்திரங்கள் என்ற லேபிளை சொடுக்கி நான் அறிமுகப்படுத்திய மற்ற கேரக்ட்ரகளை படித்துப்பாருங்கள் ஸ்ரீராம். கருத்துக்கு மிக்க நன்றி!

MARI The Great said...

இதுக்கு பேருதான் ஊரை அடிச்சு உலையிலே போடுறதுன்னு பேரோ...,

கடைசியில் அலமு திருந்துவது போல் முடியும்னு பார்த்தேன் ...!