April 6, 2012

அன்றும் இன்றும்.2


அரைகிலோவுக்கும் மேலுள்ள எடையில் கருப்பு நிற வஸ்துவை அந்நாளில் தொலைபேசியாக உபயோகித்து வந்தனர்,ஒவ்வொரு எண்ணிலும் ஆட்காட்டி விரலை நுழைத்து டயல் செய்து விரல் நுனி தேய்ந்து போகும்.இதில் ராங் காலகள் வேறு தொல்லை படுத்தும்.தொலைதூர ஊர்கள் நாடுகளுக்கு பேசுவதென்றால் கேட்கவே வேண்டாம்.டிரங்கால் புக் செய்து விட்டு போனுக்கடியில் மணிக்கணக்கில் பலி கிடந்தே ஆகவேண்டும்.இன்றோ கைக்குள் அடங்கும் செல்பேசிகள் நம் விரல் நுனியில் உலகையே சுற்றி வருகின்றதே.
1857 பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டு பிடித்து கொடுத்தது உலகம் முழுக்க மூலை முடுக்கு,பட்டி தொட்டி எல்லாம் புகழ் பாடியது கிராம போன் என்ற பெயரில்.குழல் வடிவ மெகா பெரிய ஸ்பீக்கர். இன்றளவும் செம்பருத்திப்பூவைப் பார்த்தால் ஸ்பீக்கர் பூ என்று அடை மொழியுடன் அழைக்கிறோம்.மொத்தத்தில் ரேடியோ பெட்டி வீட்டையே அடைத்துக்கொள்ளும் அள்வு பெரிதாக இருக்கும்.பாடல்கள் அடங்கிய கருப்பு நிற இசைத்தட்டுகள் வலம் வந்த காலம் போய் சிறிய அளவில் கேஸட் வடிவில் வந்தது.அதுவும் மறைந்து சிடிகள்.டி வி டிக்கள் என்பது போக இன்றோ விரலளவு உபகரணத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பதிவு செய்து கண்களை சிமிட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றன ஐ பாட்கள்.சார் தந்தி என்றால் அரண்டு விடுவார் அந்நாளில்.எந்த ஒரு செய்தியும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றால் தந்திதான் தொலைத்தொடர்பு சாதனமாக இருந்து வந்தது.இன்றோ குறுந்தகவல்,மின்னஞ்சல்,பேக்ஸ் என்று அந்நாளில் நினைத்துப்பார்க்காத வசதிகள் எல்லாம் நம் முன்னே வலம் வருவது விஞ்ஞான முன்னேற்றம்.


இன்லாண்ட் லெட்டர் போஸ்ட் கார்ட்,கவர் என்று உலா வந்த காலம் அன்று.”சார் போஸ்ட்”என்ற குரலுக்காக காத்திருப்போர் அநேகர்.சிரத்தையாக கடிதம் எழுதி சிகப்புவர்ண பெட்டிக்குள் போட்டு விட்டு வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காத்திருந்தது போக இன்றோ உலகம் சிறிதாகி உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது.மெயில் போட்ட அடுத்த நொடி பதில் கிடைத்து பரவசப்படுதும் இன்னாள் பொன்னாள்தானே!
பண்டைய காலத்தில் பல பல பொருட்களில் இருந்து மைதயாரித்து ஓலைகளில் எழுதி சேமித்து வைப்பர்.அரிசியை வாணலியில் கருப்பாக வறுத்து,நைஸாக பொடித்து வெது வெதுப்பான நீரில் கரைத்து பாட்டிலில் சேமித்து வைத்தால் வருடக்கணக்கில் வரும்.இதனை மூங்கிலில் ஆன எழுதுகலத்தில் தோய்த்து ஓலைகளில் எழுதி வந்தனர்.அதன் பிறகு பேனா பென்ஸில் என்று தோன்றி ஓலைச்சுவடிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.இன்றோ கணினியில் நோட் பேடை திறந்து நோகாமல் பக்கம் பக்கமாக எழுதி ஜமாய்த்து விடுகின்றோம்.தவறாக எழுதியதை அழிக்க இரேசர் தேவை இல்லை,கண் சிமிட்டும் நேரத்தில் அழித்து விடுகிறோம்.இது காலம் நமக்கு கொடுத்த பெரும் கொடை இல்லாமல் வேறென்ன?அந்தக்காலத்தில் சீமை ஓடு நாட்டு ஓடு என்று வேயப்பட்ட கூரைகளுடன் கூடிய ஓட்டு வீடு இன்று காணாமலே போய் விட்டன.மிகக்குறைந்த பட்ஜெட்டில் குக்கிராமத்தில் கட்டப்படும் வீடு கூட காங்கிரட் கூரையுடன் அமையப்பெற்று இருக்கின்றன.ஜல் ஜல் என்று சலங்கை ஒலியுடன் கூடிய செவலை மாடு.அலங்கரிக்கப்பட்ட பொட்டுவண்டிகளில் பூட்டி ஆடிக்கொண்டே அன்று சவாரி செய்தனர்.இலவம் பஞ்சால் செய்யப்பட்ட திண்டு அல்லது வைக்கோல் அடைத்து செய்யபட்ட திண்டு,வண்டியில் உபயோகப்படுத்தும் பர்மா தேக்கு பலகை அல்லது வேம்பலகை,வண்டியின் பக்கவாட்டில் தைக்கப்பட்டு இருக்கும் சீட்டி துணி அல்லது சாட்டின் துணி போன்றன வண்டியின் சொந்தக்காரர்களுக்கு மதிப்பை கூட்டும்.பொட்டுவண்டிகளில் செய்யப்படும் அலங்காரங்கள் வண்டிக்கு சொந்தக்காரர்களின் வசதியை பறை சாற்றும்.இன்றோ வித விதமான வாகனங்கள் சர்வ வசதிகளுடன் கூடிய வாகனங்கள் லட்சங்களையும் கோடிகளையும் கொட்டிக்கொடுத்து சாலைகளில் உலா வருகின்றன காரின் சொந்தக்காரர்களின் வசதிவாய்புகளை பறைசாற்றிக்கொண்டு.அந்த நாட்களில் கூட்டுக்குடும்பம் அதிகம் இருந்த காலம்.வீடுகளில் இருக்கும் பாத்திர பண்டங்கள் இரும்பிலும்,செம்பிலும்,துத்தநாகத்திலும் மெகா சைஸில் இருக்கும்.இன்றுள்ள சிங்குகளில் வைத்து சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு அளவில் பெரிதாக இருக்கும்.பாத்திரங்கள் தேய்ப்பதென்றால் கிணற்றடிக்குத்தான் எடுத்து செல்ல வேண்டும்.இன்றோ கால ஓட்டத்திற்கேற்ப சிறிய அளவுகளில் காப்பர் பாட்டம்,நான் ஸ்டிக்,போரோசில் என்று அடுக்களையை அலங்கரிப்பது காலத்தின் கட்டாயம்.காலை சாப்பாட்டுக்கு பிறகு முதற்காரியமாக இல்லத்தரசிகள் அமரும் இடம் அம்மியின் முன்புதான்.பகல் வேளைக்குத்தேவையான மசாலா ஐட்டங்களை மாங்கு மாங்கென்று அரைத்து உருண்டை பிடித்து வைப்பார்கள்.முழு விரலி மஞ்சலை நங் நங் என்று அம்மியில் இடித்து அரைக்கும் சப்தம் பக்கத்து வீட்டிற்கே கேட்கும்.இன்றோ பள பள பாக்கெட்டுகளில் மசாலா பொருட்கள் மார்கெட்டில் விறபனைக்கு கிடைப்பது போக மிச்சம் மீதி வேலையை மிக்ஸி செய்து விடுகின்றதே!


சிலு சிலு வென்ற வேப்பமர அரசமர காற்று,சுள் என அடிக்கும் வெயிலை தடை போடும் மரநிழல்,தனது தளவாடங்களை சுற்றிலும் பரப்பி வைத்துகொண்டு மரநிழலில் அமர்ந்து முடியை சீர்திருத்தும் நாவிதர்.வெள்ளைத்துணியை போர்த்திக்கொண்டு கண்களை சுகமாக மூடிக்கொண்டு நாவிதரிடம் தலையை கொடுத்துக்கொண்டு அரசியல் முதல் சினிமா வரை நாவிதர் பேசும் பேச்சினை கேட்டு உம் கொட்டிக்கொண்டு முடிவில் சில்லரையை பொறுக்கி கூலியாக கொடுத்து முடியை திருத்தியது போய் இன்றோ குளிரூட்டப்பட்ட சலூனில் குஷன் சீட்டில் ஜம் என்று சாய்ந்து கொண்டு எதிரே இருக்கும் எல் ஈ டி ஸ்க்ரீனில் ”வாடி வாடி வாடி க்யூட் பெண்டாட்டி”என்று குத்தாட்டம் போடும் சிம்புவின் நடனத்தை ரசித்துக்கொண்டே,”சார்,பேஷியல் பண்ணட்டுமா?முடிக்கு மசாஜ் பண்ணட்டுமா”என்று கேட்கும் சலூன் கடைக்காரரிடம் தலையை ஆட்டி விட்டு இறுதியில் பர்ஸை திறந்து கற்றையாக பணத்தை எடுத்துக்கொடுத்து விட்டு எதிரே இருக்கும் ஜம்போ கண்ணாடியில் முகத்தைப்பார்த்து தலையை கோதிவிட்டுக்கொண்டு வரும் காலம் வந்து பலகாலமாகி விட்டன்.

பெரிய நீள் சதுரமான மர பாக்ஸினுள் மேற்பகுதியில் ரோமன் லெட்டரில் எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட கடிகார எண்கள்,கனமான முட்கள்.கீழ் பகுதியில் பெண்டுலம் என்று சுவற்றினை அடைத்துக்கொண்டு ஹாலில் கம்பீரமாக வீற்றிருக்கும் கடிகாரம்.ஒவ்வொரு மணி நேரத்திற்கும் முதலில் இனிமையான மியூஸிக் ஒலித்து டொய்ங் டொய்ங் என்று பெண்டுலம் அடிக்கும் நாதம் காதில் இனிமையை நிறைக்கும்.அடிக்கும் பொழுது கடிகாரத்தினை ஏறிட்டு பார்க்கும் கண்கள் அடித்து முடிக்கும் வரை பார்வை நகராமல் இருக்க வைக்கும் ரீங்காரம்.இன்றோ காலஓட்டவெள்ளத்தில் காணாமல் போய் மினியேச்சரில் கடிகாரங்கள் பவனி வருகின்றது.


டிஸ்கி:உங்கள் எண்ணத்தில் உதயமான பொருட்களை பின்னூட்டுங்கள்.அன்றும் இன்றும் மூன்றாம் பாகம் போட்டு விடலாம்.உஷ்..அப்பாடா..அடுத்த பதிவுக்கு தேற்றியாச்சு:)47 comments:

விச்சு said...

சூப்பர்.படங்களோடு அழகாக தொகுத்துள்ளீர்கள். படிக்கவும் சுவராஷ்யமாக இருந்தது.

எம் அப்துல் காதர் said...

படங்களும் பதிவும் நிறைவாய் நம்மை பழையதையும் புதியதையும் ஒப்பீடு செய்ய வைத்தது அருமை ஸாதிகாக்கா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்றும் இன்றும் அருமையான தொகுப்பு தான்.

INLAND LETTER, POST CARD போன்றவை இன்றும் கிடைக்கின்றன. பெரும்பாலோர் உபயோகித்தும் வருகின்றனர்.

கவி அழகன் said...

Shooping ippa online shopping . Frozen roti. Parada . Library ipa online . Online study no need to go uni.

கவி அழகன் said...

Shooping ippa online shopping . Frozen roti. Parada . Library ipa online . Online study no need to go uni.

கவி அழகன் said...

Shooping ippa online shopping . Frozen roti. Parada . Library ipa online . Online study no need to go uni.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஓட்டுவீடுகள் இன்னும் ஆங்காங்கே காணமுடிகிறது.

இரட்டை மாட்டு வண்டிகள் இன்னும் சில கிராமங்களில் உபயோகித்து வருகின்றனர்.

//பாத்திர பண்டங்கள் இரும்பிலும்,செம்பிலும்,துத்தநாகத்திலும் மெகா சைஸில் இருக்கும்.//

சில கல்யாண மண்டபங்களில் மட்டும் இன்றும் பயன் படுத்தப்படுகின்றன.

தங்குதடையின்றி மின்தடை இருந்து வருவதால் சமயத்தில் விசேஷ நாட்களில் அம்மி, குழவி, ஆட்டுக்கல் முதலியவற்றை தேடிச் செல்வோர் பலர் இன்றும் உள்ளனர்.

ஆனால் தாங்கள் சொல்வதுபோல நகர்புறங்களில் பலவித மாற்றங்கள் வந்துவிட்டன என்பதை மறுப்பதற்கு இல்லை.

அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said...

படங்களும் பதிவும் நிறைவாய் நம்மை பழையதையும் புதியதையும் ஒப்பீடு செய்ய வைத்தது அருமை ஸாதிகா. வாழ்த்துகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அருமை.
சைக்கிள் ரிக்ஷா பற்றியும் எழுதுங்கள் (முதல் பாகத்தில் குறிப்பிடாவிட்டால்)

Asiya Omar said...

ஸாதிகா அன்றும் இன்றும் சூப்பர்.படங்களோடு பகிர்வு அருமை.

Menaga Sathia said...

அழகான படங்களோடு சூப்பரா தொகுத்து தந்திருக்கீங்க.நீங்கள் சொல்லியதில் எதுவும் மறுப்பதற்க்கில்லை...

பால கணேஷ் said...

ஊசி போட்டு, கையால் சுற்றி ஓட வைக்க வேண்டிய ரெக்கார்ட் பிளேயரில் பாட்டுக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் நான். இப்போது ஐ பாடையும் பயன்படுத்தி வருகிறேன். இதுபோல பழமை, புதுமையாய் மாறியதை படங்களுடன் பார்த்து ரசிகக முடிந்தது ஸாதிகா! ஆனால் இன்லண்ட் லெட்டர்கள் போய் ஈமெயிலும், எஸ்.எம்.எஸ்ஸும் ஆட்சி செய்வதை வரம் என்றாம்மா நினைக்கிறீர்கள்? எனக்கு சாபம் என்றுதான் தோன்றுகிறது உண்மையில்..!

ராமலக்ஷ்மி said...

அருமையாகத் தொகுத்து அந்த நாட்களை அசை போட வைத்து விட்டீர்கள். ஃபோனை டயல் செய்வதற்கும் முன் ஒரு காலம் இருந்தது.70பதுகளில் நாம் ஃபோனை எடுத்ததும் எக்ஸ்சேஞ்சிலிருந்து ‘நம்பர் ப்ளீஸ்’ என்பார்கள். நாம நம்பரை சொல்லணும்:)!

நட்புடன் ஜமால் said...

பலவற்றை ஞாபகப்படுத்தும் பதிவு ...

நட்புடன் ஜமால் said...

நிழல் பார்த்து நேரம் சொன்னது அந்தக்காலம்,
கரண்ட் வருவதைப்பார்த்து நேரம் சொல்வது இந்தக்காலம்

Radha rani said...

என்னதான் பழையன கழிந்து புதியன புகுந்தாலும், புதுமைவரும்போதே தீமைகளையும் சேர்த்தே கொண்டுவருதே.

Unknown said...

அன்றுமுதல் இன்னுவரை ஒவ்வொரு
துறையும் பெற்றுள்ள வளர்ச்சியை மிக
அழகாக அரிய,உரிய படங்களுடன்
தந்தது,சிற்பான ஒன்று!
நன்று நன்றி!

சா இராமாநுசம்

ஸாதிகா said...

படிக்கவும் சுவராஷ்யமாக இருந்தது.//வருகைக்கு மிக்க நன்றி விச்சு

ஸாதிகா said...

பின்னூட்டகுக்கும் பார்ராட்டுக்கும் மிக்க நன்றி அப்துல்காதர்.

ஸாதிகா said...

நீங்கள் சொல்வதிலும் உண்மை உள்ளது வி ஜி கே சார்.சில பொருட்கள் அடியோடு மறைந்து விட்டன.சில பொருட்கள் ஆங்காங்கே உலாவுகின்றது.விரிவான கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி லக்‌ஷ்மிம்மா,

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோ நிஜாமுதீன்.சைக்கிள் ரிக்‌ஷா என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.அதற்கு தனிப்பதிவே போடலாம்.

இதுவரை சைக்கிள் ரிக்‌ஷாவில் பயணம் செய்யாத எனக்கு அதிலும் பயணம் செய்ய ஆசை.ஒரு முறை பாரீஸ் கார்னருக்கு சென்ற பொழுது ஆர்வம் மிகுதியால் உயரமான சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறி விட்டேன்.அப்படியே என் எஸ் ஸி போஸ் சாலையை வலம் வந்த பொழுது மிக உற்சாகமாக இருந்தது.சைக்கிள் ரிக்‌ஷா சவாரி முடிந்து அதில் இருந்து இறங்குவதற்குள் நான் பட்டபாடு...தொபுகடீர் என்று குதித்துத்தான் இறங்க முடிந்தது.

அது ரைல்வே பிளாட் பாரத்தில் இருந்து குதிப்பதை விட கஷடமாக இருந்த்து.:(

ஸாதிகா said...

மிக்க நன்றி தோழி ஆசியா.

ஸாதிகா said...

மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

ஆனால் இன்லண்ட் லெட்டர்கள் போய் ஈமெயிலும், எஸ்.எம்.எஸ்ஸும் ஆட்சி செய்வதை வரம் என்றாம்மா நினைக்கிறீர்கள்? எனக்கு சாபம் என்றுதான் தோன்றுகிறது உண்மையில்..!//என்ன கணேஷண்ணா இப்படி சொல்லிட்டீங்க.லெட்டர் போட்டு மாசக்கணக்கில் காத்திருந்த்து போக இப்பொழுது மறு நொடியே பதில் கிடைத்து விடுவது வரமின்றி சாபமா?:(கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

70பதுகளில் நாம் ஃபோனை எடுத்ததும் எக்ஸ்சேஞ்சிலிருந்து ‘நம்பர் ப்ளீஸ்’ என்பார்கள். நாம நம்பரை சொல்லணும்:)!//அட இது எனக்குத்தெரியாதெ,இப்படியும் கூட இருந்ததா?தகவலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி.

ஸாதிகா said...

என் வலைச்சர அறிமுகம் உங்களை மீண்டும் என் வலைப்பூவுக்கு இழுத்து வந்து விட்டது சகோ ஜமால்.மிக்க நன்றி.தொடர்ந்து வந்து கருத்தினை தாருங்கள்.

ஸாதிகா said...

தீமைகளையும் சேர்த்தே கொண்டுவருதே.//உண்மைதான் ராதா ராணி.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி புலவரய்யா!

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ஸாதிகா அக்கா சூப்பரான பதிவு

எப்படி தான் நீங்கள் போட்டோக்களை பொருத்தமாக தேடி தேடி பிடிக்கிறீஙக்ளோஒ

vanathy said...

நல்ல பதிவு. என்ன சொன்னாலும் அம்மியில் அரைத்து சமையல் செய்யும் ருசியே தனி தான்.

pudugaithendral said...

super

pager, wet grinder (குழவி சுத்துமே அது) டேபிள் டாப் இப்போ, மாவுமில்
கும்மிட்டி அடுப்பு என்று ஒன்று உண்டு. அது பத்தியும் போடலாம். வேற ஏதும் நினைவு வதா சொல்றேன்

கோமதி அரசு said...

அன்றும், இன்றும் இரண்டாம் பாகமும் அருமை.

என் மாமியார் இன்றும் அம்மி, ஆட்டுக்கல், உரல், திருவை மகிமையை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இப்போது யாராலும் பழமைக்கு மாற முடியாதபடி பழகி விட்டோம் கஷ்டம் தான் பழமைக்கு திரும்ப வேண்டும் என்றால். நமக்காகவாவது அம்மி, ஆட்டுக்கல், திருவை, தெரியும் நம் பேரன் பேத்திகளுக்கு அதுவும் காட்சி பொருளே!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
என்னென்ன மாற்றங்கள்.
நன்றி.

முத்தரசு said...

பழசும் புதுசும் படங்களுடன் விளக்கமும் ஒப்பீடும்... வாவ்..........பக்ர்வுக்கு நன்றி

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலீலா

ஸாதிகா said...

அம்மியில் அரைத்து சமையல் செய்யும் ருசியே தனி தான்.//உண்மைதான்.ஆனால் அரைக்க சோம்பல் வருகின்றதே.மாசி சட்னி போன்ற ஐட்டங்கள் அம்மியில் அரைத்தால் அதன் டெஸ்டே தனிதான்.கருத்துக்கு மிக்க நன்றி வானதி

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி புதுகை தெனறல்.நீஙகள் சொன்ன பொருடகள் சிலவற்றை முதல் பாகத்திலேயே பகிர்ந்துள்ளேன்,நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கோமதிஅரசு.நம் பேரன் பேத்திகளுக்கு அதுவும் காட்சி பொருளே!//உண்மைதான்.இப்பொழுது நம் பிள்ளைகளுக்கே பல பொருட்கள் தெரியாமல்த்தான் உள்ளது

ஸாதிகா said...

மிக்க நன்றி ரதனவேல்சார்.

ஸாதிகா said...

மிக்க நன்றி மனசாட்சி

மனோ சாமிநாதன் said...

மறுபடியும் ஒரு ' அன்றும் இன்றும்' தொகுப்பு! அருமையாக இருக்கிறது!!

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரான தொகுப்பு..

enrenrum16 said...

ஓ... ஓலையில் எழுத இன்க் இப்படித்தான் செய்றாங்களோ... படங்கள் மட்டுமல்ல்...அதன் விளக்கங்களும் அருமை. எனக்கும் தோழிகளுக்கு, பெற்றோருக்கு கடிதம் எழுதி அனுப்ப ரொம்ப ஆசை...ஆனால் செய்ததில்லை :( இனிமேல் பெருநாட்களுக்கு கடிதம் மூலமா வாழ்த்து அனுப்பனும்னு இதோட நாலாவது தடவையா முடிவெடுக்கிறேன்..ஹி..ஹி..

எனக்கு தோன்றியது..

1. அந்த காலத்தில் பாசிப்பயிறு,கடலைமாவு அப்டி இப்டி ஏதோ செய்வாங்க..இப்ப க்ரீமும்,விதவிதமாசோப்பு.,ஷாம்பூ.

2. ஆற்றில் குளிப்பது..இப்ப அவங்கவங்க வீட்டில் ஸ்விம்மிங் பூல்/ஷவர் பாத். ஊர்களில் ஆறு என்பதே இல்லாமல் போய்விட்டது..இருந்தாலும் அன்றுபோல் சுத்தமாக இருப்பதில்லை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகான படங்களுடன் திரும்பி பார்க்க வைத்த கட்டுரை. நன்றி ஸாதிகாக்கா.

அன்புடன் மலிக்கா said...

படத்துடன்கூடிய அருமையான விளக்கம் அந்தாகலத்தில் இருந்த சிலபொருள்கள் இப்போதுதான் நானும் பார்கிறேன். அருமைக்கா..

Anonymous said...

அன்றும் இன்றும் இடுகை மிக சுவையே. ஆனாலும் பலர் அன்றையவற்றை மிக விரும்புகின்றனர். எனது தம்பி அம்மா பாவித்த சருவப் பானையைக் கொண்டு வந்து அழகாக மினுக்கி வீட்டில் அழகிற்கு வைத்துள்ளான். அம்மியில் அம்மாவிற்கு அன்று அரைத்துக் கொடுத்தததெல்லாம் நினைவிற்கு வருகிறது. வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.