குளம் , மலை , ஆறு , பட்டி, பேட்டை, வலசு, பாளையம், பட்டினம், புரம், நகர், ஊர் போன்றவை பொதுவான இடப்பெயர்களாகும்.
சென்னையின் பல ஏரியாக்களின் பெயர்கள் பாக்கம்,பேட்டை,ஊர்,புரம் நகர்,சாவடி,மேடு என்று முடிகின்றன.
பாக்கம்,வாக்கம் என்று முடியும் அரும்பாக்கம் ,ஆதம்பாக்கம் ,கோடம்பாக்கம் ,நுங்கம்பாக்கம் ,கீழ்ப்பாக்கம் ,பாலவாக்கம் ,காட்டுப்பாக்கம் ,
பட்டிணம்பாக்கம் ,மடிப்பாக்கம் ,வில்லிவாக்கம் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் ,புரசைவாக்கம் ,கொட்டிவாக்கம் ,அச்சரப்பாக்கம் ராஜாகீழ்ப்பாக்கம் ,மாதம்பாக்கம் ,பெரும்பாக்கம் ,ஊரப்பாக்கம் ,புதுப்பாக்கம் ,மாம்பாக்கம் ,சித்லப்பாக்கம் ,கோலப்பாக்கம் ,தொரைப்பாக்கம் ,ஈஞ்சம்பாக்கம் ,மவுலிவாக்கம் ,ஆலப்பாக்கம் ,கேளம்பாக்கம் ,புழுதிவாக்கம் ,நெசப்பாக்கம் ,சேப்பாக்கம் ,ஊரப்பாக்கம் , பட்டினப்பாக்கம் ,செம்பரம்பாக்கம் ,மீனம்பாக்கம் ,நந்தம்பாக்கம் ,முகலிவாக்கம் என்றும்
பேட்டை என்று முடியும் கொருக்குப்பேட்டை ,வண்ணாரப்பேட்டை ,முத்தியால்பேட்டை ,சைதாபேட்டை ,சௌகார்பேட்டை ,தண்டையார்பேட்டை ,தேனாம்பேட்டை ,ஜாபர்கான்பேட்டை ,ராயப்பேட்டை ,குரோம்பேட்டை ,ஆழ்வார்ப்பேட்டை ,நசரத்பேட்டை ,புதுப்பேட்டை ,சூரப்பேட்டை என்றும்
ஊர் என்று முடியும் கொரட்டூர் ,கொளத்தூர் ,போரூர் ,ஸ்ரீபெரும்புதூர் ,திருப்போரூர் ,பொழிச்சலூர் ,நாவலூர் ,வண்டலூர் ,நொளம்பூர் ,ஆலந்தூர் ,கொரட்டூர் ,பெருங்களத்தூர் ,சோழிங்கநல்லூர் ,மைலாப்பூர் ,திருவான்மியூர் ,முடிச்சூர் ,நங்கநல்லூர் ,கானாத்தூர் ,பையனூர் ,பெரம்பூர் ,குன்றத்தூர் ,சேலையூர் ,அனங்காபுதூர் ,எழும்பூர் ,கொடுங்கையூர் ,திருவொற்றியூர் ,பெரவள்ளூர் ,அம்பத்தூர் ,எண்ணூர் என்றும்,
முன்னர் ஏரி இருந்த இடங்களை இப்பொழுது நிலத்தடியாக்கிய குடி இருப்பு பகுதிகளை கடைசியில் ஏரி என்று முடியும் படியாக ரெட்டேரி ,பொத்தேரி ,வெப்பேரி ,ஒட்டேரி என்றும்,
புரம் என்று முடியும் ராயபுரம் ,ராமாபுரம் ,ராஜஅண்ணாமலைபுரம் ,மகாலிங்கபுரம் ,தசரதபுரம் ,கோட்டூர்புரம் ,பல்லாவரம் ,மாதாவரம் ,அயனாவரம்,கோபாலபுரம் ,ரங்கராஜபுரம் ,டிரஸ்ட்புரம் ,சோழாவரம் என்றும்,
நகர் என்று முடியும் எம்ஜிஆர் நகர் ,கே கே நகர் ,அசோக்நகர் ,தியாகராயநகர் ,அழகிரிநகர் ,அண்ணாநகர் ,ஆழ்வார் திருநகர் ,செனாய் நகர் ,வள்ளலார் நகர் ,பெசண்ட் நகர் ,மறைமலை நகர் என்றும்,
சாவடி என்று முடியும் கொத்தவால்சாவடி ,சுங்கன்சாவடி ,வேலப்பன்சாவடி ,கந்தன்சாவடி ,குமணன்சாவடி ,
பஜார் என்று முடியும் சைனாபஜார் ,பர்மாபஜா ,பாண்டிபஜார் ,ஜாம்பஜார் என்றும் நமகரணங்கள் சென்னை ஏரியாக்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இனி பெயர் சூட்டிய காரணக்களைப்பார்ப்போம்.
இஸ்லாமியர்கள் இங்கு பள்ளிவாசல்களை கட்டி தொழுகை நடத்தி வந்தனர்.ஆகவே மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.முற்காலத்தில் சென்னபசவ நாயக்கன் என்ற மன்னர் தான் ஆண்ட பகுதியான இப்போதைய சென்னையை கிழக்கிந்திய நிறுவனத்திற்கு விற்று விட்டார்.அவர் ஆண்ட பகுதியின் ஞாபகார்த்தமாக சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் இப்போது சென்னை என்றும் சொல்கின்றனர்.
அந்தக்காலத்தில் திருட்டு பொருட்களின் விற்பனையகமாக இருந்த பர்மா பஜார் பகுதியையை ஆங்கிலேயர்கள் தீவ்ஸ் பஜார் என்று அழைத்து வந்தனர்.பின்னர்.பர்மியர்களின் குடியிருப்பு பெருக அதுவே பர்மாபஜார் ஆகி விட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நரிமேடு என்ற மணற்குன்றில் இருந்து கொண்டுவந்து பள்ளமாக இருந்த இப்போது இருக்கும் மண்ணடி பகுதியை நிரப்பியதால் மண்ணடி என்ற பெயர் வந்தது.
கொத்தவால் என்பதற்கு அர்த்தம் வரி வசூலிப்பவன்.இந்தப்பகுதி அந்தக்காலத்தில் வரிவசூலிப்பு எல்லையாக இருந்ததால் கொத்தவால்சாவடியாகநிலை பெற்றுவிட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தங்கசாலையில் வெள்ளிக்காசு அச்சடிக்கும் ஒருவர் இருந்தார்.அதுவே தங்கசாலையாகி விட்டது.
ஊர் செய்திகளை தண்டோரா போடும் ஆட்கள் இருக்கும் இடமே இப்போதைய தண்டையார் பேட்டை.
பல்லவர் ஆட்சிக்காலத்தில் மன்னரின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ராயர்புரமாகி இன்று ராயபுரம் ஆகி விட்டது.
அக்காலத்தி புரசை மரங்கள் புதர் போன்று மண்டி காடு போல் காட்சி அளித்தது.அதுவே இன்றைய புரசைவாக்கம்.
போரில் லவகுசர்களால் தோல்வி அடைந்து அமர்ந்த இடம் அமர்ந்தகரை அமைந்தக்கரையாகி இப்போது அமிஞ்சகரையாகி விட்டது.
பெரிய குளங்கள் நிறைந்த பகுதியாதலால் அதுவே பெருங்குளமாகி அதுவே மருவி பெருங்குளத்தூர் ஆகிவிட்டது.
பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம் ஆகும்.
அன்றைய மா அம்பலம் இன்றைய மாம்பலத்தின் சிவாலயத்தின் நந்தவனம் இருந்த பகுதியே இன்றைய நந்தனம்.இங்கு பூமியிலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிலை பிரசித்தம்.
நூல் நெய்யும் தறியாளர்கள் வசிக்கும் பகுதியாக சிந்தாதிரிபேட்டை ஒரு காலத்தில் இருந்தது.அகவே இது சின்னத்தறிபேட்டையாக இருந்து காலப்போக்கில் சிந்தாதிரிபேட்டையாக மாறிவிட்டது.
சென்னையில் வசிக்க வேண்டுமானால் வரிகட்டவேண்டும் என்ற திட்டத்தை கொண்டுவரப்பார்த்தவர் ஆங்கிலேயர் பேப்பமன்ஸ் பிராட்வே .வரிகட்டவேண்டுமென்பதற்காக சென்னையை காலி செய்து விட்டு செல்ல திட்டமிட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.அந்த யோசனையைக்கூறிய பேப்பமன்ஸ் பிராட்வே பெயரே இப்போதைய பிராட்வேக்கு சூட்டப்பட்டுள்ளது.
செட்டியார்கள் நிறைந்து வசித்த பகுதி செட்டிப்பட்டி இப்போதைய சேத்துப்பட்டு.
மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்து வந்த இடம் இன்று மாம்பலம் ஆகி விட்டது.
கோடா-பாக் என்றால் குதிரைகள் நிறுத்தும் இடம் என்ற அர்த்தம் உண்டாம்.ஆற்காடு நவாபுடைய குதிரைப்படைக்கான இடமே கோடாபாக் இப்போதிய கோடாம்பாக்கம் ஆகி விட்டது.
பரங்கிமலை .பரங்கியர் என்றால் தமிழில் வெள்ளையர் என்றொரு அர்த்தமும் உண்டு.வெள்ளையரின் நினைவாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் தமிழில் பரங்கி மலையாகி விட்டது.
சென்னை நகரை பொருத்த மட்டில் முதலில் சூர்யோதயம் விழுவது எழும்பூர் பகுதியிலாம்.முதலில் விடிவதால் அதனை எழுமூர் என்றனர் காலப்போக்கில் மருவி எழும்பூர் ஆகிவிட்டது.
ஆதிகாலத்தில் வசித்த முனிவர் ஒருவர் தான் தவம் செய்த பொழுது பூஜைக்கான கிண்டியை இவ்விடத்தில் பொருத்தியதால் கிண்டியாகி விட்டது.
அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் திருவல்லிக்கேணி இப்பெயரைப் பெற்றது.
பண்டைய காலத்தில் குரோம் லெதர் தொழிற்சாலை இங்கு அமையப்பெற்று இருந்ததால் குரோம் பேட்டை ஜனித்தது.
நட்புகள் பதிவில் வராத ஏரியாக்களின் பெயர்காரணங்களை பின்னூட்டலாம்..
Tweet |