April 27, 2012

வாசிப்பு என்னும் சுவாசிப்பு


அந்தக்காலத்தில் குழந்தை அழுதால் தாலாட்டு பாடி குழந்தையின் அழுகையை நிறுத்துவார்கள்.இப்பொழுதோ ரிமோட்டை கையில் கொடுத்து விட்டால் குழந்தையின் அழுகை ஸ்விட்ச் போட்டாற் போல் நின்று விடுகின்றது. வாசிப்புதன்மை சமூகத்தில் அருகி வருவதற்கு இதுதான் ஆரம்பகாரணம்.

நான்கு மாத குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நாம் டிவி முன் அமர்ந்தால் அந்த சிசு கண்ணிமைக்காமல் டிவி திரையை பார்க்க ஆரம்பிக்கின்றது.குழந்தையின் வாசிப்புத்திறன் குறைவதற்கு அடிக்கல் நாட்டு விழா இங்கேதான் ஆரம்பம்.

வாசிப்பு திறன் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சில் தெளிவும்,ஞாபகசக்தியும்,கருத்தாழமும்,சொல்வதை கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும் ,பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று.பிற்காலத்தில் அறிவு செறிந்த மாணாக்கனாக தெளிவான கருத்துடையவனாக அவனது வாழ்கை மேம்பட துணை நிற்கும்.

வாசிப்புத்திறமை பெற்ற மாணவனுடைய செயல்களும்,சிந்தனையும் ஞாபகசக்தியும் வாசிப்புத்திறன் இல்லாத மாணவனில் இருந்து வித்தியாசப்படும்.வாசிப்புத்திறன் இல்லாத மாணவன் பள்ளியில் மட்டுமின்றி,சமூகத்திலும் சிறப்பு நிலை அடைவதென்பது மிகவும் கஷ்டமே.

வாசிப்பின் மூலமே மனிதன் சிறப்படைகின்றான்.இந்த வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.நான்கு மாதக் குழந்தை டிவி திரையை நோக்க ஆரம்பித்தால் அதனை அணைத்து விட்டு கலர் கலர் படங்கள்,பூக்கள் போட்ட புத்தகத்தை விரித்து காட்டுங்கள்.குழந்தை வளர வளர புத்தகங்களின் பக்கங்களை புரட்ட கற்றுக்கொடுங்கள்.குழந்தை பேச ஆரம்பிக்கும் பொழுது புத்தகத்தைகாட்டி கற்றுக்கொடுத்தலை ஆரம்பியுங்கள்.வாசிப்பின் ஆர்வம் தானாகவே ஆரம்பித்து விடும்.

குழந்தைக்கு பிறந்த நாளா?வீட்டில் விஷேஷமா?பொம்மை,வீடியோ கேம்,விளையாட்டு சாதனங்கள் என்று வாங்கி பரிசளிப்பதில் காட்டும் ஆர்வம் புத்தகம் வாங்கி பரிசளிப்பதில் இல்லை என்பது கவலை தரும் உண்மை.

ஒரு வீட்டை பற்பல கற்பனைகோட்டைகள் அடுக்கடுக்கடுக்காய் மின்ன பார்த்து பார்த்து கட்டுகின்றோம்.துணிவகைகள் வைக்க அலமாரி,நகைகள் வைக்க,மளிகை வைக்க,பொம்மைகள் வைக்க,பாத்திரங்கள் வைக்க,டப்பாக்கள் அடுக்க என்று ஒவ்வொன்றுக்கும் பார்த்து பார்த்து செய்கின்றோம்.எத்தனை வீட்டில் புத்தகங்களை பாதுகாத்து வைக்க என்று புக் செல்ஃப் அமைக்கின்றோம்?இதுவும் கவலை தரக்கூடிய உண்மையே.

பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகள்,பஸ்ஸில்ஸ்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களில் இளைய தலைமுறைகள் மிக மிக குறைவு என்பது கவலைக்குறிய விடயம்.குறுக்கெழுத்துப்போட்டியை பதினைந்து நிமிடங்களில் முழுமையாக நிரப்பி விடும் திறன் பள்ளிப்படிப்பை தாண்டாத தாய்க்கு அமையப்பெற்று இருந்தால், பல்கலைகழகம் படிக்கும் அவளது மகனுக்கு 4 கட்டங்களைக்கூட நிரப்ப இயலாத அளவிற்கு அவர்களது திறமை வேறு பக்கம் சிதறி இருக்கின்றது.

ஒரு புத்தகத்தை முழுதாக படிக்கும் நேரத்தில் கம்பியூட்டரில் டவுன் லோட் செய்து முழுதாக ஒரு படத்தினை பார்த்துவிடுவது இக்காலத்தின் கோலம்.இணையத்தில் தேவையற்ற தளங்களோ,சமூக தளங்களோ ஆற்றலை முழுமையாக தந்து விட இயலாது.ஒரு மாணவனை பரிபூரணமானவானாக,சிறப்பான மாணவனாக,அறிவான மாணவனாக இணையதளங்கள் உருவாகுவதை விட அம்மாணவனின் வாசிப்புதன்மை அவனது சிறப்பை வளப்படுத்துகின்றது.

குடும்பத்தில் விஷேஷமா?உடனே ரெஸ்டாரெண்டுக்கு குடும்பத்துடன் சென்று கற்றையாக பணத்தை கொடுத்து உண்டு மகிழ்கின்றோம்.ஒரு முறை சற்றே வித்தியாசமாக ஒரு புத்தகக்கடைக்கு அழைத்துச்செல்லுங்களேன்.வயிறு நிரம்புவதை விட மூளை நிரம்புவது நன்றல்லவா?

ஸ்விம்மிங்க் கிளப்பில் மெம்பராக,டென்னின்ஸ் கிளப்பில் மெம்பராக.கிரிகெட் கிளப்பில் மெம்பராக குழந்தைகளை சேர்த்து விடும் ஆர்வம் ஏன் நூலகத்தில் சேர்த்து விடுவதில் இல்லை?சிந்தியுங்கள்.சிறப்படைவீர்கள்.

குழந்தைகள் இன்னாள் விதைகள்.பின்னாள் விருட்சங்கள்.எதிர்காலத்தில் விருட்சங்கள் மரச்சட்டங்களாகவும்,அடுப்பெறிக்க உதவும் விறகுக்கட்டைகளாகவும் ஆகாமல் நல் விருட்சங்களாக,நிழல் தந்து உதவும் விருட்சங்களாக,காற்றினை சுத்தப்படுத்தும் ஊக்கிகளாகவும் சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடிய விருட்சங்களாகவும் ஆற்றல் பெற வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து வாசிப்புத்திறனை நலவே வளர்த்து வாழ்க்கையெனும் இனிய பயணத்தை சீருடன்,சிறப்புடன்,பயனுள்ள வகையில் கழிப்போம்.


64 comments:

நிரஞ்சனா said...

Haiyoo! Me, the first Dear S.S.!

நிரஞ்சனா said...

I'm lucky இந்த விஷயத்துல. எங்க வீட்ல எனக்கு நிறைய புக்ஸ் வாங்கிக் குடுத்திருக்காங்க. But, Englishலதான். இப்பத்தான் தமிழ்ல நிறையப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். So, நீங்க சொல்லியிருக்கற ஒவ்வொரு வார்த்தையையும் புரிஞ்சு ரசிக்க முடிஞ்சது. Very Very Nice and also Useful Sharing Sister! Hats Off to you!

ஸாதிகா said...

மீ த பர்ஸ்ட்ஊஊஊஊஊஊஊஉ..என்று முதலாவதாக வருபவர்களுக்கு பிலாக் உலகம் சூடான வடையை அன்பளிப்பாக கொடுக்கும்.என் குட்டித்தங்கை நிரூவுக்கு ஒரு பெரிய பீஸ் பிளாக் பாரஸ்ட் கேக்..
எனக்கு நிறைய புக்ஸ் வாங்கிக் குடுத்திருக்காங்க. //ரொம்ப மகிழ்ச்சி நிரூ.தொடருங்கள்.குடு குடு வென முதலாவதாக ஓடி வந்து பின்னூட்டிய நிரூவுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...

பால கணேஷ் said...

ஆஹா... குட்டிப் பொண்ணு என்னை முந்திடுச்சா! உண்மையில இந்தப் படிவைப் படிச்சதும் எனக்கு கோபம் கோபமா வந்தது ஸாதிகா! உங்க மேல இல்ல... என் மேலயே - ‘எப்படிடா மிஸ் பண்ணினே?’ன்னு! நான் எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. ஒவ்வொரு வரியையும் நான் எவ்வளவு ரசிச்சிருப்பேன்னு இதுலயே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். இந்த விஷயத்தை என் தங்கை எழுதினதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்!

Radha rani said...

ஸாதிகா..நீங்க பதிவுல ஆதங்கப்பட்டது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை.எங்க ஊர் நூலகத்தில் தேடி தேடி புத்தகங்களை முன்பு படித்தார்கள்.இப்போ புத்தகங்களை படிக்க ஆளில்லாமல் அங்க வர்ற லைப்ரேரியன் ஒரு நாளைக்கு காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் வந்துட்டு போயிடராங்க..

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களின் இந்தப்பதிவின் தலைப்பைப் படித்ததுமே எனக்கு நினைவுக்கு வந்தது “பதிவர் மணிராஜ்” அவர்களையே.

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன் வலைப்பதிவின் தலைப்பில் எழுதியிருப்பது

வாசிப்பது என்பது சுவாசிப்பது!
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!!

http://jaghamani.blogspot.com/

மீண்டும் கருத்திட வருவேன்.

அன்புடன் vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வாசிப்பு திறன் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சில் தெளிவும்,ஞாபகசக்தியும்,கருத்தாழமும்,சொல்வதை கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும் ,பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாலர்களின் கூற்று.பிற்காலத்தில் அறிவு செரிந்த மாணாக்கனாக தெளிவான கருத்துடையவனாக அவனது வாழ்கை மேம்பட துணை நிற்கும்.//

வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
;))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//லர் கலர் படங்கள்,பூக்கள் போட்ட புத்தகத்தை விரித்து காட்டுங்கள்.குழந்தை வளர வளர புத்தகங்களின் பக்கங்களை புரட்ட கற்றுக்கொடுங்கள்.குழந்தை பேச ஆரம்பிக்கும் பொழுது புத்தகத்தைகாட்டி கற்றுக்கொடுத்தலை ஆரம்பியுங்கள்.வாசிப்பின் ஆர்வம் தானாகவே ஆரம்பித்து விடும்.//

அருமையான ஆலோசனைகள்.

நல்ல பயனுள்ள கருத்துக்கள் கொண்ட சிறப்பான பதிவு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk

குறையொன்றுமில்லை. said...

வாசிப்பு அனுபவத்தை எவ்வளவு நல்லா சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு..

அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) said...

அவ்வ்வ்வ்வ்வ் வடை மட்டின் பிர்ர்ர்ராணி எல்லாம் போயே போச்ச்ச்ச்ச்ச்:((((.

அழகாகச் சொல்லிட்டீங்க.... வாசிக்கோணும்... வாசிக்கோணும் நிறைய வாசிக்கோணும்....

Yaathoramani.blogspot.com said...

அனைவருக்குமான பயனுள்ள அருமையான பதிவு
வாசித்தல் உண்மையில் சுவாசித்தல் போன்று
வாழுதலுக்கு மிகத் தேவையானதே
விரிவான நல்ல அழுத்தமான பதிவாக்கித்
தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Angel said...

அருமையான பதிவு ஸாதிகா.பெற்றோரும் மற்றும் பள்ளியில் ஆசிரியரும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மாணவரிடையே ஏற்படுத்த வேண்டும் .
.கம்ப்யூட்டர் கேம்சும் கேம் consoles ஆகியவற்றுக்கு நிறைய பிள்ளைகள் அடிமையாகிக்கிடப்பது வருத்தத்துக்குரியது .

அங்கே சென்னைல லைப்ரரி மெம்பர்ஷிப் இலவசமா இல்லை பணம் கட்டனுமா ?

ஸாதிகா said...

எப்படிடா மிஸ் பண்ணினே?’ன்னு! நான் எழுதியிருக்க வேண்டிய பதிவு //உண்மைதான் கணேஷண்ணா.என்னை விட இதை நீங்கள் எழுத்தில் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

ரசித்து மகிழ்ந்து பின்னூட்டியதற்கு நன்றி

ஸாதிகா said...

எங்க ஊர் நூலகத்தில் தேடி தேடி புத்தகங்களை முன்பு படித்தார்கள்.இப்போ புத்தகங்களை படிக்க ஆளில்லாமல் அங்க வர்ற லைப்ரேரியன் ஒரு நாளைக்கு காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் வந்துட்டு போயிடராங்க..//உண்மைதான் ராதாராணி..நான் செல்லும் லைப்ரரியிலும் கூட லைப்ரரியன் எபொழுதும் பூட்டியே வைத்திருப்பார்.செல்லும் பொழுதெல்லாம் பூட்டு தொங்கும்.இப்பொழுது செல்லவே சோம்பலாக உள்ளது..கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

வருகைக்கு மிக்க நன்றி வை. கோ சார்.


http://jaghamani.blogspot.com///லின்கை முழுமையாக தந்தால் குறிப்பிட்டு இருந்த பதிவை நானும் வாசித்திருப்பேனே:(

கருத்துக்கும் ஊக்கப்படுத்தும் வரிகளுக்கும் மிக்க நன்றி சார்.

ஸாதிகா said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி லக்‌ஷ்மிம்மா.

ஸாதிகா said...

வாங்கோ அதீஸ்....பிரியாணி இல்லை.பிளாக் பாரஸ்ட் கேக் பீஸ் போச்சு.

வாசிக்கோணும்... வாசிக்கோணும் நிறைய வாசிக்கோணும்....// மிக்க நன்றி அதீஸ்.

ஸாதிகா said...

விரிவான நல்ல அழுத்தமான பதிவாக்கித்
தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்// கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

பெற்றோரும் மற்றும் பள்ளியில் ஆசிரியரும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மாணவரிடையே ஏற்படுத்த வேண்டும் .
.கம்ப்யூட்டர் கேம்சும் கேம் consoles ஆகியவற்றுக்கு நிறைய பிள்ளைகள் அடிமையாகிக்கிடப்பது வருத்தத்துக்குரியது .
//வாங்க ஏஞ்சலின்.எப்படி இருக்கீங்க.இப்ப நார்மலுக்கு வந்திருப்பீங்க.


பெற்றோரும் மற்றும் பள்ளியில் ஆசிரியரும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மாணவரிடையே ஏற்படுத்த வேண்டும் .
.கம்ப்யூட்டர் கேம்சும் கேம் consoles ஆகியவற்றுக்கு நிறைய பிள்ளைகள் அடிமையாகிக்கிடப்பது வருத்தத்துக்குரியது .
//உண்மைதான்..


அங்கே சென்னைல லைப்ரரி மெம்பர்ஷிப் இலவசமா இல்லை பணம் கட்டனுமா ?//அரசாங்கத்தால் நடைபெறுக்கொண்டிருக்கும் நூலகத்திற்கு பணம் கட்டத்தேவை இல்லை.சிபாரிசுக்கடிதத்துடன் போனாலே மெம்பராகி விடலாம்.தனியார்வ் லைப்ரரிகளில் மாதாமாதம் பணம் செலுத்த வேண்டும்..

சர்குலேஷன் லைப்ரரியில் வீட்டுக்கே கொண்டு வந்து புத்தகங்கள் தருவார்கள்.

தமிழ் மீரான் said...

நீங்க சொல்றது முற்றிலும் உண்மை.
என் ஒரு வயசு குட்டிப் பையன் டிவில வர்ற விளம்பரங்களைப் பார்த்தா அப்படியே வச்ச கண்ணு வாங்காம பாக்குறான். வாசிப்பு ஆர்வம் குறைந்து வருவது வருத்தமாதான் இருக்கு.
நல்ல விஷயம் சொன்னீங்க நன்றி!

அப்படியே என் மழலைப் பருவத்து அனுபவத்தையும் இங்கே வந்து படிச்சிப் பாருங்களேன்

Asiya Omar said...

வாசிப்பின் அவசியம் பற்றிய நல்ல விழிப்புணர்வு பகிர்வு ஸாதிகா.

Riyas said...

நலமா? மிக நீண்ட நாளைக்கு பிறகு உங்கள் பக்கம் வருகிறேன்.. எங்களை மறந்துட்டிங்களோ தெரியாது..

வாசிப்பை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள்.. வாசிப்புத்தான் மனிதனை புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது,,

இன்று எனது பதிவிலும் வாசிப்பின் அருமை பர்றித்தான்..

ஸ்ரீராம். said...

புத்தகங்கள் நிறைய இருந்தாலும் இந்தக் காலத்தில் யாரும் அவற்றைப் படிக்க முனைவதில்லை என்பது வருத்தமான விஷயம்...! எங்கள் வீடு உட்பட. கணினி மற்றும் கிரிக்கெட், நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள், படங்கள் என்று மனத்தைக் கலைக்கும் விஷயங்களைக் காட்டும் தொ(ல்)லைக்காட்சி... அந்தக் காலத்தில் இந்த சலனங்கள் இல்லாததால் எங்களால் புத்தக அனுபவம் நிறையவே பெற முடிந்தது. ஆனால் அப்போதும் இந்தப் புத்தகம் படிக்கும் பழக்கம் 'பாடம் படிக்கும் வேலையை விட்டு விட்டு வெட்டிப் பொழுது போக்கும்' கேளிக்கை விஷயமாகவே பார்க்கப் பட்டது!! நீங்கள் சொல்லியிருப்பது போல குழந்தைகளை ஆரம்பம் முதலே இப்படிப் பழக்கப் படுத்தினால் புத்தகம் படிக்கும் பழக்கம் வரலாம். 'வீட்டில் புத்தகங்கள் சேமிக்க என்று எங்கே பார்த்து கட்டுகிறோம்....' .ஆம், உண்மையான கவலை.

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

நல்ல பொருளில் எழுதியிருக்கிறீர்கள்...

பாராட்டுக்கள்.

பிழைகளின்றியும் எழுத முயற்சியுங்களேன்..எழுதிய பின் ஒரு முறை படித்தால் பிழைகளைத் தவிர்க்கலாம்..

||ஆய்வாலர்களின் கூற்று.||
ஆய்வாளர்களின்

||அறிவு செரிந்த மாணாக்கனாக||
அறிவு செறிந்த..

எல்லா வீடுகளிலும் புத்தக அலமாரிகள் வைக்கச் சொல்லும் உங்கள் கருத்துக்குப் பாராட்டுக்கள்.

இளையர்கள் பலருக்கும் இணையமும் அலைபேசியிலும் இருக்கும் ஆர்வம் புத்தகங்களைத் தொடுவதிலும் இருப்பதில்லை என்பது என் அவதானிப்பு.

நல்ல பதிவுக்கு பாராட்டு.

Avargal Unmaigal said...

மிகவும் பயனுள்ள பதிவு. எனது குழந்தையை லைப்ரேரியில் சேர்த்து அவளுக்கென்ற ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் அவள் தனக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்து படிப்பாள் அதுமட்டுமல்லாமல் இங்குள்ள புத்தக கடைக்கு எனது மனைவி அவளை அழைத்து சென்று புதிய புதிய புத்தகங்களை படித்து அங்கேயே சாப்பிட்டுவருவார்கள் இங்குள்ள புத்தக கடையினுள் காபி கடை உண்டு

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி தமிழ் மீரான்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.

ஸாதிகா said...

நலமா? மிக நீண்ட நாளைக்கு பிறகு உங்கள் பக்கம் வருகிறேன்.. எங்களை மறந்துட்டிங்களோ தெரியாது//
நலமே ரியாஸ்.நீண்ட இடைவெளிக்கு பின் வந்து பின்னூட்டியதற்கு மிக்க நன்றி.
நான் யாரையும் அவ்வளவு விரைவில் மறக்கமாட்டேன்:)

ஸாதிகா said...

கணினி மற்றும் கிரிக்கெட், நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள், படங்கள் என்று மனத்தைக் கலைக்கும் விஷயங்களைக் காட்டும் தொ(ல்)லைக்காட்சி... அந்தக் காலத்தில் இந்த சலனங்கள் இல்லாததால் எங்களால் புத்தக அனுபவம் நிறையவே பெற முடிந்தது. ஆனால் அப்போதும் இந்தப் புத்தகம் படிக்கும் பழக்கம் 'பாடம் படிக்கும் வேலையை விட்டு விட்டு வெட்டிப் பொழுது போக்கும்' கேளிக்கை விஷயமாகவே பார்க்கப் பட்டது!! // மிக்கச்சரி ஸ்ரீராம். நீண்ட பின்னூட்டமிட்டு உறசாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் மிக்க நன்றி அறிவன்.

தவறினை திருத்தி விட்டேன்.எடுத்துக்காட்டியதற்கு மிக்க நன்றி.இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் இன்னும் ஜாக்கிரதை உணர்வுடன் எழுதத் தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கோமதி அரசு said...

குழந்தைகள் இன்னாள் விதைகள்.பின்னாள் விருட்சங்கள்.எதிர்காலத்தில் விருட்சங்கள் மரச்சட்டங்களாகவும்,அடுப்பெறிக்க உதவும் விறகுக்கட்டைகளாகவும் ஆகாமல் நல் விருட்சங்களாக,நிழல் தந்து உதவும் விருட்சங்களாக,காற்றினை சுத்தப்படுத்தும் ஊக்கிகளாகவும் சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடிய விருட்சங்களாகவும் ஆற்றல் பெற வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து வாசிப்புத்திறனை நலவே வளர்த்து வாழ்க்கையெனும் இனிய பயணத்தை சீருடன்,சிறப்புடன்,பயனுள்ள வகையில் கழிப்போம்.//

பெரியவர்கள் புத்தகம் படிப்பதை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வாசிப்பு அனுபவம் தேவை என்பதை வலியுறுத்தும் நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் ஸாதிகா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்,

உங்கள் மகளை சிறிய வயதிலேயே படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக கொண்டு செல்வது குறித்து மிக்க மகிழ்ச்சி.தொடருங்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப ரொம்ப அவசியமான பதிவு ஸாதிகாக்கா. இப்ப குழந்தைகளுக்கு நூலகங்கள் எங்கு இருக்கிறது என்று கூடத் தெரியவில்லை. அதற்கு ஒருவிதத்தில் பெற்றோராகிய நாமும் காரணம்தான். நல்ல ஒரு
விழிப்புணர்வு மிக்க பகிர்வு. மிக்க நன்றி.

வலையுகம் said...

அருமையான பதிவு சகோதரி

//ஸ்விம்மிங்க் கிளப்பில் மெம்பராக,டென்னின்ஸ் கிளப்பில் மெம்பராக.கிரிகெட் கிளப்பில் மெம்பராக குழந்தைகளை சேர்த்து விடும் ஆர்வம் ஏன் நூலகத்தில் சேர்த்து விடுவதில் இல்லை?சிந்தியுங்கள்.சிறப்படைவீர்கள்.///

சரியாகச் சொன்னீர்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உங்களின் இந்தப்பதிவின் தலைப்பைப் படித்ததுமே எனக்கு நினைவுக்கு வந்தது “பதிவர் மணிராஜ்” அவர்களையே.

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன் வலைப்பதிவின் தலைப்பில் எழுதியிருப்பது

வாசிப்பது என்பது சுவாசிப்பது!
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!!

http://jaghamani.blogspot.com/

மீண்டும் கருத்திட வருவேன்.

அன்புடன் vgk//

oooooooooooooooooooo

ஸாதிகா said...
வருகைக்கு மிக்க நன்றி வை. கோ சார்.

http://jaghamani.blogspot.com///லின்கை முழுமையாக தந்தால் குறிப்பிட்டு இருந்த பதிவை நானும் வாசித்திருப்பேனே:(//

oooooooooooooooooooo

அடடா! அவர்களின் எந்தப்பதிவுக்கு நீங்கள் சென்றாலும், தலையில் கொட்டை எழுத்துக்களின் இந்த வாசகம் கண்ணில் படுமே!

பொதுவாக அவர்கள் ஆன்மிகப் பதிவுகளாகவே அதிகம் தந்து வருவதால் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு ஏதும் இதுவரை இருந்திருக்காது தான்.

சமீபத்திய நேற்றைய வெளியீட்டின் லிங்க் இதோ:

http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_27.html

இவர்கள் தினமும் ஒரு பதிவுக்குக் குறையாமல் தருபவர்கள்.

2011 ஜனவரியில் ஆரம்பித்து, இதுவரை 465 நாட்களில் 518 பதிவுகள் தந்து சாதனை புரிந்துள்ளார்கள்.

தினமும் இவர்கள் பதிவைத்தவறாமல் படித்து பின்னூட்டமிடுபவன் நான்.

தங்கள் தகவலுக்காக மட்டும்.

அன்புடன் vgk

மாதேவி said...

மிகவும் நல்ல பகிர்வு ஸாதிக்கா.

வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு புத்தகம்தான் பரிசாகக் கொடுப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மை ஸாதிகா. அந்த விஷயத்தில் எங்கள் குழந்தைகளும் அவர்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களையே பரிசாக அளிக்கிறார்கள்.
தொலைக்காட்சிக்கு அரைமணி என்றால் புத்தகங்களுக்கு இரண்டு மணி என்ற விகிதத்தில் தான் வளருகிறார்கள்.
மிக மிக தேவையான பதிவு. வாழ்த்துகள் அம்மா.

Menaga Sathia said...

நீங்க சொல்லியிருப்பது முற்றிலும் உண்மைதான் அக்கா...இன்னும் நான் எந்த புத்தகம் கிடைத்தாலும் அதை படித்து முடித்துவிட்டுதான் மறுவேலை..அதேபோல என் பொண்ணும்...வாசித்தலும்,கேட்டலும் நம் கண்களுக்கும்,காதுகளுக்கும் நன்று மட்டுமில்லாமல் நல்லதொரு பயற்சியும் கூட..

ஸாதிகா said...

அதற்கு ஒருவிதத்தில் பெற்றோராகிய நாமும் காரணம்தான். //உண்மைதான் புவனேஸ்வரி ராமநாதன்.கருத்துக்கு நன்றி>

ஸாதிகா said...

வாங்க ஹைதர் அலி.நீண்டநாட்களுக்கு பின் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

அடடா! அவர்களின் எந்தப்பதிவுக்கு நீங்கள் சென்றாலும், தலையில் கொட்டை எழுத்துக்களின் இந்த வாசகம் கண்ணில் படுமே!
//பார்த்து விட்டேன் வி ஜி கே சார்.நான் சகோதரி இராஜராஜேஸ்வரி தனிப்பதிவே பொட்டு இருக்கிறார் என்று தவறுதலாக புரிந்து கொண்டேன்.நானும் அவரது பக்கங்களுக்கு அவ்வப்பொழுது சென்று பின்னூட்டம் இட்டுள்ளேன்.நன்றி சார்.

ஸாதிகா said...

குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு புத்தகம்தான் பரிசாகக் கொடுப்பேன்.//நல்ல காரியம் மாதேவி.கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோ வல்லி சிம்ஹன்.

அந்த விஷயத்தில் எங்கள் குழந்தைகளும் அவர்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களையே பரிசாக அளிக்கிறார்கள்.
தொலைக்காட்சிக்கு அரைமணி என்றால் புத்தகங்களுக்கு இரண்டு மணி என்ற விகிதத்தில் தான் வளருகிறார்கள்.//மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

வாசித்தலும்,கேட்டலும் நம் கண்களுக்கும்,காதுகளுக்கும் நன்று மட்டுமில்லாமல் நல்லதொரு பயற்சியும் கூட..//மேனகா இந்த கோணத்தில் சிந்திக்கின்றீர்களா?:)

கருத்துக்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

நான் என் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்கும் ஆசையை வளர்த்தேன்.

பேரன் , பேத்திகளுக்கும் புத்தங்கள் வாங்கி கொடுப்பேன்.

பிறந்தநாள் என்று வரும் பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கும் புத்தகம் பரிசு அளிப்பேன் அவர்கள் வயதுக்கு ஏற்றாற் போல்.

உங்கள் பதிவு தேவையான ஒன்று இந்த காலகட்டத்திற்கு.

ஹுஸைனம்மா said...

அக்கா, ராமலக்ஷ்மிக்காவின் பதிவில் புத்தக அலமாரியை சிலாகித்துப் பேசிக்கொள்ளும்போதே, புத்தகங்களின்மீதான உங்கள் ஆர்வம் புரிந்தது. :-))))

எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே கலர்ப் படங்களுடன், கிழிக்க முடியாதபடி லேமினேஷன் செய்த புத்தகங்கள்தான் விளையாட்டுப் பொருள். ஏனோ, விளையாட்டுப் பொருடக்ள், PSP, ப்ளே ஸ்டேஷன், ஜிகினா ஆடைகள் என்று வாங்கித்தரும் பெற்றோர் புத்தகங்களுக்குச் செலவழிக்கத் தயங்குகின்றனர்.

வீட்டிற்கொரு நூலகம் வேண்டும் என்கிற உங்களின் ஆசை மிகவும் சரியானதே. தொலைக்காட்சியை ஒழித்துவிட்டால், தானாகவே புத்தக அலமாரி நிரம்பிவிடும். அனுபவ உண்மை!!

ராமலக்ஷ்மி said...

ஆம், காலத்துக்கு அவசியமான நல்ல பகிர்வு ஸாதிகா.

Vijay Periasamy said...

ரொம்ப அவசியமான கருத்துக்கள் .
யோசிக்க வைத்தமைக்கு நன்றி ...

இவண்
இணையத் தமிழன் , விஜய் .
http://inaya-tamilan.blogspot.com

Jaleela Kamal said...

மிகச்சரியே ஸாதிகா அக்கா

எங்கே இந்த கணனி வந்ததில் இருந்து நிறைய பேருக்கு வாசிப்பார்வம் குறைந்து விட்டது
பள்ளியில் லைப்ரியில் மாதம் ஒரு புக் எடுத்து வந்து படிக்க கொடுத்து விடுவஙக் என் பையன்கள் இருவருக்கும் வாசிப்பார்வம் உண்டு
இன்னும் கூட இருக்கும் எல்லா புத்தகங்கலும் பத்திர படுத்தி வைத்துள்லேன்

Kanchana Radhakrishnan said...

அருமையான ஆலோசனைகள்.

நல்ல பயனுள்ள பதிவு.

Mahi said...

பயனுள்ள நல்லதொரு பதிவு ஸாதிகாக்கா! இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு வாசிப்பு என்னும் பழக்கம் குறைந்தே விட்டது..பாடப் புத்தகத்தை வேறுவழியில்லாமல் படிக்கிறார்கள். மற்றபடி வாசிப்பு என்பதே இல்லாத நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது!
விழிப்புணர்வூட்டும் எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள்!

விச்சு said...

வாசிப்பின் முக்கியத்துவத்தினை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் ஏன் நூலகத்துக்கு கொடுப்பதில்லை? நல்லா கேளுங்க...

ஸாதிகா said...

கோமதி அரசு said...
நான் என் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்கும் ஆசையை வளர்த்தேன்.

பேரன் , பேத்திகளுக்கும் புத்தங்கள் வாங்கி கொடுப்பேன்.

பிறந்தநாள் என்று வரும் பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கும் புத்தகம் பரிசு அளிப்பேன் அவர்கள் வயதுக்கு ஏற்றாற் போல்.//வெரி குட் கோமதி அரசு.மிக்க மகிழ்ச்சி,நன்றி!

ஸாதிகா said...

விளையாட்டுப் பொருடக்ள், PSP, ப்ளே ஸ்டேஷன், ஜிகினா ஆடைகள் என்று வாங்கித்தரும் பெற்றோர் புத்தகங்களுக்குச் செலவழிக்கத் தயங்குகின்றனர்.//நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஹுசைனம்மா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ ஹைதர் அலி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

ஸாதிகா said...

விஜய் பெரியசாமி முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஜலீலா

ஸாதிகா said...

கருத்துக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகி.

ஸாதிகா said...

எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் ஏன் நூலகத்துக்கு கொடுப்பதில்லை? நல்லா கேளுங்க...//நியாயமான வினா விச்சு.கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸாதிகா! எத்தனையோ அருமையான விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருதல் போல இந்த வாசிப்பு என்னும் பழக்கமும் அருகிக்கொன்டுதானிருக்கிறது.

அந்தக் காலத்தில் நல்ல பழக்க வழக்கங்களை பெரியோர்கள் சொல்லித்தந்தை விடவும் புத்தகங்கள் அபாரமாய் சொல்லிக்கொடுத்தன. இன்றைக்கு கணினியும் திரைப்படங்களும் ஆக்ரமிப்பது போல, புத்தகங்கள் யார் வீட்டிலும் ஆக்ரமிப்பதில்லை என்பது மிகவும் வருத்தப்படும்படியன விஷயம்.

நல்ல விழிப்புணர்வு பதிவு!

பால கணேஷ் said...

உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html

mohamedali jinnah said...

வாசிப்பை வாசித்தேன்.நிறைய உள்வாங்கிக் கொண்டேன். குடுபத்தில் உள்ள அனைவரையும் வாசிக்கச் சொல்லி அதிலுள்ள அருமையான கருத்துகளை மனதில் நிறுத்தி தினமும் செயல்பட ஆர்வப் படுத்தினேன்.அருமையான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் தொண்டு, வாழ்த்துகள்

mohamedali jinnah said...

வ அலைக்கும் சலாம் வபரகாதுகு சகோதரி சாதிகா அவர்கள் தந்த அன்பு வாழ்த்துக்கு நன்றி
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
“Allâh will reward you [with] goodness.”