August 27, 2012

மகிழ்ச்சி மிகு தருணம்!


நேற்று நடந்த பதிவர் சந்திப்பு இன்று இனிமையாக மனதில் பொதிந்து மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் தந்து விட்டது.மறக்கவியலாத இனிமையான தருணம் அது.

ஒரு திருமணத்தை நடத்துவது போல் குழுக்கள் அமைத்து,ஆலோசனை நடத்தி,யார் மனமும் புண்படாமல் இருக்க வேண்டும் என்று அதிகம் அதிகம் மெனகெட்டு,எதிர்பார்த்தை விட மிகவும் சிறப்பாக அனைவரும் நிறைவுகொள்ள வைக்கும் படியாக விழாவை நடத்த உழைத்த சகோக்களுக்கு வாழ்த்துக்கள்.

விழாவினைப் பற்றி பலர் பதிவு எழுதியதில் ஒருவர் ஒரு பின்னூட்டத்திற்கு பூதக்கண்ணாடி மட்டுமல்ல,பேய் கண்ணாடி,பிசாசுக்கண்ணாடி,ஆவிக்கண்ணாடி எது வைத்துப்பார்த்தாலும் குறைகள் கண்டு பிடிக்க இயலாது என்று பின்னூட்டி இருந்தார்.அதுதான் உண்மையும் கூட.இந்த சந்திப்பு ஆயத்தங்களும்,நிகழ்வுகளும்,ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தது.


எழுத்துமூலமும்,புகைப்படங்கள் மூலமும் பலரை சந்தித்து இருக்கிறோம்.அவர்களை எல்லாம் இன்று நேரில் சந்தித்த பொழுது எழுந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.இறுதியாக நடந்த கவியரங்கில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் வீட்டிற்கு வந்து கணினி மூலம் பார்த்து மகிழ்ந்தேன்.

விழாவினை புகைப்படம் எடுப்பதற்காக கேமரா கொண்டு வந்திருந்தாலும் மற்ற நட்புக்கள் தூக்கிய கேமராக்களால் என் கேமரா பையில் இருந்து வெளியில் வர மறுத்து விட்டது.அதே போல் சக பதிவர்களும் விழாவினை பற்றி மிக அருமையான படங்களுடன் தங்கள் கருத்துக்களையும் பொழிந்துள்ளார்கள்.அந்த கருத்துக்களை இங்கு என் பதிவில் திரட்டி தந்துள்ளேன்.இனி வரும் பதிவுகளையும் அவ்வப்பொழுது சேர்த்துக்கொள்கிறேன்.

படம்:நன்றி வீடுதிரும்பல் மோகன்குமார்

1.திடுக்கிடவைக்கும் தலைப்பை தந்து விட்டு இறுதியில் //ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.//
இவ்வார்த்தைகளை ஆறுதலாக தந்திருக்கும் ஐயா சென்னை பித்தன் அவர்களின் தீர்மானத்தை சக பதிவர்கள் போல் நானும் மறுபரிசீலனை செய்து சிறப்பான முடிவெடுத்து மீண்டும் வருவார் என்ற ஆவலுடன் இப்பதிவின் மூலம் கோரிக்கை வைக்கிறேன்.


2.எந்த ஒரு பாகுபாடும் பிரச்சனைகளும் இல்லாமல் தமிழால் அன்பால் மட்டுமே ஒருங்கிணைந்து இந்த பதிவர்களின் வரலாற்றில்
ஒரு அருமையான நிகழ்வாகும்.என்று சிலாகிக்கும் கிராமத்து காக்கையின் பதிவு இது.

3.பதிவுலக நட்புக்களை சந்தித்த மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் படத்தில் காணும் தன் முகத்தில் பிரதிபலிக்கும் அன்பு வல்லிம்மாவின் எண்ணங்களையும்,அவர் பகிர்ந்த புகைப்படங்களும் இங்கே.

4.இருபதாம் தேதியிலிருந்து தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் டி என் முரளிதரனுக்கு இதை யாரும் அவ்வளவா கண்டுக்கலைன்னா அதுக்கு காரணம் பதிவர் திருவிழாதான் என்று கருத்தை தன் பதிவின் தலைப்பாக வைத்து பதிவர் விழாவைப்பற்றி கூறும் கருத்து.

5.பிரமாண்டமான பதிவர் சந்திப்புக்கு ஊக்கமாக உழைத்த சில சகோக்களில் மோகன் குமாரும் ஒருவர்.அவ்வப்பொழுது மேடையேறி உரையாற்றினாலும் கேமராவை தூக்கவும் மறக்கவில்லை.அப்படி ஓடி ஓடி பதிவுகளை தன் புகைப்படக்கருவியினுள் மிக அழகாய் சிறைபிடித்து நம்முடன் பார்ட் பார்ட் ஆக பகிர்ந்திருக்கும் இவரது உழைப்பை பாராட்டாமல் இருக்க இயலாது.

6.கவிதை பாடி நெகிழ வைப்பதில் வல்லவர் இந்த பெரியவர்.வயோதிகத்தை காரணம் காட்டி ஒதுங்கி விடாமல் விழா ஏற்பாட்டுக்கு ஊக்கமுடன் ஒத்துழைத்து,விழாவை சிறக்க வைத்த புலவரய்யாவின் கருத்துக்களை கவிதை வரிகளில் காண்போமே.


7.வலைப்பதிவர்கள் கலையுலக
தலைப் பதிவர்களாக வரவேண்டும்
என வாழ்த்தி
என் கவியுரையை நிறைவு செய்கிறேன். என்று வாழ்த்தி கவிபாடிய ரிஷ்வனின் கவிதையை முழுமையாக கேட்போமா?

8.ஆதி மனிதன் பதிவர் மாநாட்டின் நேரலையை சுடச்சுட சுட்டிகளுடன் பதிவிட்டுள்ளார்.சந்திப்பை நேரில் காணாவிட்டாலும் நேரலையில் கண்டு பகிர்ந்திருக்கும் இவரது ஆரவத்திற்கு மிக்க நன்றி.//பதிவர்கள் பக்கம் கேமரா திரும்பிய போது பதிவர்கள் முகங்களை காண முடிந்தது. அதிகமானோர் சற்று முதிய பதிவர்களாக கட்சி அளித்தார்கள். அதுவும் சற்று வருத்தம் தான்.// ஆதிமனிதனின் கருத்திது.பெருமையும்,மகிழ்ச்சியும் கொள்ளவேண்டிய விஷயத்தில் வருத்தம் கொள்ள வேண்டியது ஆச்சரியம் அளிக்கின்றது.9.இங்கிருந்து கடல்கடந்து வாழ்ந்தாலும் ஆர்வம் மிகுதியால் ”தமிழ் பதிவர் சந்திப்பு - புதிய படங்கள் ”என்று சூடாக பதிவிட்டு அவசர அவசரமாக தலைப்பை பார்த்தவுடன் பதிவுக்கு போன சக பதிவர்களை எமாற்றி விட்டோமே என்ற பரிதவிப்பில் உடனே பதிவை தூக்கி விட்டு பாங்காக மன்னிப்பும் கேட்ட சின்னத்தம்பி பாசிதின் பெரிய மனதினை பிரதிபலிக்கும் பாங்கான பதிவிது.

10.வெளிநாட்டில் வாழ்ந்தாலும் விழாவை நேரலையில் கண்டு விட்டு பதிவிட்டு இருக்கும் கும்மாச்சியின் கருத்துக்கள் இது.


11.”தமிழ்நாட்டில் இருந்து கொண்டே செல்ல முடியலை என்ன செய்ய.” ஆதங்கப்பட்டு இருக்கிறார் சின்னமலை.


12.பேசுவதற்கு வார்த்தை வராமல்,வார்த்தைகள் மனதுக்கு வசப்படாமல்,எல்லாம் சரியாக நடக்குமா,நேரத்துக்கு நடக்குமா என்று வினாடிக்கு வினாடி டென்ஷன் பட்டு(அப்போது அண்ணாவின் பி பியை செக் பண்ணி இருந்தால் எக்குத்தப்பாக எகிறி இருந்திருக்கும்)இறுதியில் விழாகுழுவினருக்கு பிரசவ வேதனைக்கு பின் மழலை முகத்தைக்கண்டதும் தாய்க்கு கிடைக்கும் சந்தோஷத்தைப்போல விழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் சந்தோஷத்தில்,நெகிழ்ச்சியில் அன்று நடந்த நிகழ்வுகளை இரவெல்லாம் ரீவைண்ட் பண்ணி தூக்கத்தை தியாகம் செய்து உணர்வுமழையை கொட்டிய கணேஷண்ணாவின் சந்தோஷத்தை பார்ப்போமா?


13.தீபாவளிக்குத்தான் பட்டாசு விடுவார்கள்.பதிவர் விழாவுக்கும் பட்டாசு கொளுத்தி (தலைப்பை சொன்னேன்.அப்புறம் யாரும் பட்டாசு சப்தம் கேட்கவே இல்லை என்று சொல்லிவிடக்கூடாது)மகிழ்ந்திருக்கின்றனர் கவுண்டமணி செந்தில்.

14.ஓடி ஓடி நிகழ்ச்சிக்காக உழைத்து சடுதியில் புகைப்படங்களும் எடுத்து பதிவிட்டு இருக்கும் மெட்றாஸ்பவன் சிவாவின் பகிர்வு.

15.அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை கண்டு களித்து //கவியரங்கத்தை தவிர்த்திருக்கலாம் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது. அந்த நேரத்தில், பதிவர்களுக்கு பயனளிக்கும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். நண்பர் சுரேகா, கேபிள் போன்றோர் இருந்தனர். அவர்களை இன்னும் நல்லவிதமாக உபயோகப்படுத்தி இருக்கலாம்.// தன் கருத்தை கூறி இருக்கின்றார் எல் கே.மேலும் பார்க்க எல் கே தளத்திற்கு செல்லுங்கள்.


16.பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த கவித்துளிகளைப்பற்றி பந்தியிலிட்டவர் தமிழ்ராஜா.


17.கவிதாயினிக்கு கவிபாட மட்டுமல்ல கட்டுரையாக்கவும் கதையாக்கவும் தெரியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சசிகலா.ஆம் சசிகலாவும் அலமு மாமியும் சம்பாஷித்த சுவாரஸ்ய நிகழ்வுகளை வாசித்து களியுங்கள்.


18.பதிவர் சந்திப்புக்காக 750 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து விட்டு மேலும் 30 கிலோ மீட்டர் தாண்டி வருவதற்குள் நேரம் சதி செய்து விட்டதை ஆதங்கத்துடன் பகிர்ந்து அடுத்த பதிவர் சந்திப்புக்காக இப்பொழுதே காத்திருக்கும் கூடல் பாலா.


19.சென்னை திணற போகிறது,சென்னையை நெருங்கும் சுனாமி,
பதிவர்கள் செய்யும் அட்டகாசங்கள்( மனதை வருத்தும் செய்தி ) ,இப்படி அதிரடியாக தலைப்பு வைத்து பார்ப்பவர்களை ஆவலுடன் பரபரப்புடன்,திகிலுடன் பதிவை படிக்க வைப்பது இப்போதைய டிரண்டாகவே மாறிவிட்டது.சென்னை பதிவர் சந்திப்பை திட்டி 10 தலைப்புகள் என்று தலைப்பிட்டு எழுதி இருப்பவர் சங்கவி.


20.நானும் வருகிறேன் என அடம் பிடித்த இணையை சமாளித்து விட்டு தனியே வந்து பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட இரா.மாடசாமி. அவர்கள் மனநிறைவுக்காக எழுதிய பகிர்வு இது.


21.எங்கெங்கோ பிறந்து வளர்ந்தவர்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் இந்தப் பதிவுலகம் - ஓட்டு, பின்னூட்டம், மொக்கை, கும்மி, அரசியல், வம்பு என்ற பொழுது போக்குகள் கடந்து சமூகம் சார்ந்த உதவிகளுக்கு மிக முக்கியப் பங்காற்றும் ஒரு சக்தியாக மாறும் என்ற நம்பிக்கை//பலாபட்டறை சங்கரின் இந்த நம்பிக்கைதான் அனைத்து பதிவர்களின் நம்பிக்கையும்.

22.வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி என்று வெற்றியை முழங்கும் ரஹீம் கசாலி.பதிவர் சந்திப்புக்காக இவரது உழைப்பும் அபரிதமானது அல்லவா?

23.எல்லோரும் பதிவர் சந்திப்பில் நேரில் கலந்து விட்டோ,நேரலையில் கண்டு விட்டோ விமர்சனம் செய்து பதிவிடுகின்றார்கள் ஆனால் சதீஷ் செல்லதுரை பதிவர் சந்திப்பு பதிவுகளில் எவை சிறந்தவை என்று பட்டியலிடுகின்றார்.


24.பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட அசதியிலும்,காலையில் மதியம் மாலையில் என்ன நடந்தது என்று விலாவாரியாக பதிவிட்டதுமில்லாமல்,பழைய பதிவர் சந்திப்புகளையும் தேடிப்பிடித்து சுட்டிகளுடன் தந்து "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" என அசந்து,படிப்பவர்களை அசத்தி பதிவிட்டு இருக்கும் தமிழ்வாசி பிரகாஷின் இடுகை.


25.வலைப்பூவின் தலைப்பைப்போல் பேச்சிலும் சுறுசுறுப்பிலும் அசத்திய அட்ரா சக்க செந்தில் குமார் வேலைப்பளுவிலும் , கணக்கு பயின்று விட்டு கணக்கில்லாமல் புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு இருக்கின்றார். //அவ்வ்வ்..பல்பு பல்பு..//என் மூலமாக சி.பி.செ.கு தம்பி பல்பு வாங்கியதில் எனக்கு மட்டற்றமகிழ்ச்சி.

26.கடிகார முள்ளோ டிக் டிக்
என இசைக்கிறது
நெஞ்சமோ தக் தக்
என களி நடமிடுகிறது.//சந்திப்புக்கு சென்று விட்டு உணர்வுகளை கவிபாடி இருக்கு ஸ்ரவாணியின் கவிதை வரிகள்.

27.பதிவர் திருவிழாவை பற்றி இருபத்து ஐந்து குறிப்புகளாக கொடுத்து சில்வர் ஜூப்ளியே கொண்டாடிவிட்ட ஆர் வி சரவணனின் சுவாரஸ்ய பதிவு.


28.இது பதிவர் வலைமனை சுகுமார் சுவாமிநாதனின் சந்திப்பனுபவம்.சந்திப்புக்கு பாதியில் சென்றாலும் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

29.அருமையான குழுமம்.ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு இந்தக்குழு அந்தக்குழு என்றில்லாமல் அனைவருமே ஒரே குழு என்ற மனஎண்ணத்தோடு செயல்பட்டு இருக்கின்றார்கள் என்று சந்திப்பை சிலாகித்து பேசும் உண்மைதமிழனின் கருத்துக்களை காண்போமா?


30.சேலம் தேவாவின் சுருக்கமான பகிர்விது


31.இதுவரை யாருக்கும் முகம் காட்டாமல் இருந்த பதிவர் சேட்டைக்காரன் என்ற திரு ராஜாராமன் அத்தனை பேரின் அன்புமழையில் நனைந்ததால் ஜலதோஷம் பிடித்து தும்மிக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்.நண்பர்கள் பொழிந்த அன்பு மழையில் நனைந்த இவர்//எனது சூழ்நிலையைப் பொறுத்து, இனி இதுபோன்ற சந்திப்புகள் எங்கு நிகழ்ந்தாலும் கட்டாயம் வர முயற்சி செய்வேன். என்றும் சொல்லுகின்றார்.

32.பட்டுக்கோட்டை பிரபாகரின் கைகுழுக்களிலும்,சுரேகாவின் வாழ்த்திலும் சிலாகித்துப்போன மயிலன் பாடிய கவிதையை பாருங்கள்.

33.பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்கு இருதயமாக செயல் பட்ட கவிஞர் மதுமதி தனக்கேற்பட்ட திக் திக் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.சுறு சுறுப்பாக உழைத்த அவரது பணி பாராட்டுக்குறியது.

34.பதிவர் சந்திப்பின் மூலகர்த்தாக்களை பட்டியலிடுகின்றார் சகோ மோகன்குமார்.சுறுசுறுப்பாக உழைத்து மாபெரு பதிவர் விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமைக்கு உரியவர்களை நாமும் வாழ்த்துவோமே!

35.மூத்தோர் பாராட்டுவிழா பதிவர் சந்திப்புக்கு ஒரு மகுடமாக இருந்தது.அதனை வெகு அழகாக படம் எடுத்து போட்டு இருப்பவர் மோகன் குமார்.


36.பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன என்று பரபரப்பான தலைப்பை வைத்து எழுதி இருப்பவர் அனந்து.

37.பதிவர் சீனுவின் பதிவர் சந்திப்பின் முதல் பார்வை இது.படங்களுடன் பகிர்ந்துள்ளார்.


38.பதிவர் சந்திப்பில் படுத்திய நான் பேச பயந்த நண்பர்கள் ! இப்படி தலைப்பிட்டு தான் எடுத்த படங்களை பகிர்ந்திருக்கின்றார் சசிகலா.

39.அரிய புகைப்படங்களுடன் நம்மை டைனிக் ஹாலுக்கு அழைத்து செல்கின்றார் மோகன்குமார்.நிகழ்வுகளை பதிவில் ஏற்றி வராதவர்கள் எல்லாம் பார்க்க வேண்டு என்ற ஆவலில் பாங்காக படம் எடுத்து பகிர்ந்த மோகன் குமாரை பாராட்டாமல் இருக்க முடியாது.


40.பதிவர் சந்திப்பால மீண்டும் உயிர்த்தெழுந்தது பதிவுலகம் என்று பாராட்டும் சங்கவி.


41பதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும் என்று தலைப்பிட்டு கவிஞர் மதுமதியின் பதிவைக்கணடு மனம் விட்டு சிரிக்கலாம்.42.வெகு அருமையாக நிகழ்ச்சிகளை தொகுத்து பலரின் பாராட்டுக்களைபெற்ற கவிஞர் சுரேகாவின் பதிவை பாருங்கள்.

43.பதிவர் சந்திப்பினால் கடுப்பாகிப்போன முருகபெருமான் இப்படி தலைப்பிட்டு தன் கருத்தை பதிந்து இருக்கின்றார் சகோ ராஜி.

44.பதிவர் சந்திப்பில் பி கே பி சாரின் உரையும் எனது பதிவும் என்று ஒப்பீடு செய்யும் அதிரடி ஹாஜா.

45.சந்திப்புக்காக சுறுசுறுப்பாக உழைத்த ஜெயக்குமார் வரவு செலவு கணக்கை என்ன ஒரு பொறுப்பாக தொகுத்து பதிவு செய்து இருக்கின்றார்!!இவரது ஆர்வமும்,உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது.

46கோவை பதிவர் சந்திப்புதான் டாப்..மற்ற சந்திப்புகளை விட! என்று தலைப்பிட்டு கடுப்பாக்கிய ஷர்புதீன் பதிவின் முடிவில் வழக்கம் போல் சிரிக்கவைப்பதை பாருங்கள்.

47.பதிவர் சதிப்பு வெற்றிக்கு உழைத்தவர்ள் அனைவரையும் படங்களுடனும் குறிப்புகளுடனும் நமக்கெல்லாம் பதிவாக்கித்தந்திருப்பவர் கவிஞர் மதுமதி


48.பதிவர் சந்திப்பில் அலுக்காமல் எக்கசக்கமாக புகைப்படங்கள் எடுத்து நிகழ்ச்சிக்கு வராதவர்களுக்கு மட்டுமல்ல வந்தவர்களும் மகிழ்ச்சியுடன் ரீவைண்ட் பண்ணி பார்க்கும் வகையில் அழகிய படங்கள் எடுத்து பகிர்ந்திருப்பது வேறு யாராக இருக்க முடியும்.ஆம்; மோகன் குமார்தான்.

49.ஒவ்வொருவரும் சமைத்து
கொண்டு வந்திருந்தனர்
பரிமாறுவதற்கான அன்பை ....
பார்வைகளால் மட்டும்
அதிகமாய் பரிமாறப்பட்டது . இப்படி அழகாக கவிதை சமைத்து பந்தியிலிட்டு இருப்பவர் கோவை மு சரளா


50.தன் மனதில் பொக்கிஷமாக பதிந்து போன பதிவர் திருவிழாவை வெகு அருமையாக பதிவிட்டு இருப்பது ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்கள்.கூடவே தனக்கு கிடைத்த பரிசு மற்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கின்றார்

51.சென்னை பதிவர் மாநாடு சாதித்தது என்ன?விளக்கமளிப்பவர் மோகன்குமார்.


52.மோகன் குமாரின் ஆதங்கமான பகிர்வு.கூடவே ஒரு பொருத்தமான கழுதைகதையினையும் சொல்லி இருக்கின்றார்.


53.வெற்றிகரமான பதிவர் சந்திப்பை நடத்தி சாதனை செய்துவிட்டு பதிவர் சந்துப்பு பிரபல பதிவர்களை புறகணித்ததா என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்து இருப்பவர் கவிஞர் மதுமதி.

54.தன் பங்கிற்கு பதிவர் சந்திப்பைபற்றி சொல்லி இரூகும் அரசனின் பதிவு இது.

55.லக்ஷ்மியம்மா படங்களுடன் பதிவிட்டு இருக்கின்றதைப் பாக்கலாமா?


56.ஆமினாவின் அட்டகாசப்பகிர்வு.அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாக ,படங்களுடன் பகிர்ந்துள்ளதைப்பாருங்கள்.


57.பட்டுக்கோட்டை பிரபாகரின் தீவிர ரசிகரான இவர் அவரை பதிவர் சந்திப்பில் நேரில் பார்த்துவிட்டு மனம் எப்படி துள்ளிக்குத்தித்தது என்பதை விளக்குகின்ரார் ஃபாரூக்August 17, 2012

வலையோசை - 3,4

மதுரையைச்சேர்ந்த மதுரை தமிழன் எழுதும் வலைப்பூ இவ்வார மதுரைப்பதிப்பில் அவர்கள் உண்மைகள் என்ற வலைப்பூவாக அறிமுகமாகி உள்ளது.தான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி இவர் வலைப்பூவில் பகிர்ந்துகொள்கின்றார்

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளத்தைச்சேர்ந்த ஹாஜா மைதீன் அதிரடி ஹாஜா என்ற தன் வலைப்பூவில் அரசியல்,சமூகம்,சினிமா,உடல்நலம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை எழுதி வருகிறார்.
சென்னையைச்சேர்ந்த ராஜேஸ்வரி சாஃப்ட்வேர் இன்ஜினியர்.சமூகம் தத்துவம் வாழ்க்கை என்று சகல தளங்களைப்பற்றியும் தன்னுடைய ரசனைக்காரி என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார்.

அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைபேராசிரியையாக பணி புரியும் கல்பனா கல்பனா சேக்கிழார் என்ற வலைப்பூவில் தமிழ் மொழி பண்பாடு இலக்கியம் சம்பந்த பட்ட பதிவுகளை எழுதி வருகிறார்.குவைத்தில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த காயத்ரி பாலைத்திணை என்ற தன் வலைப்பூவில் ரசனைமிக்க கட்டுரைகளை எழுதி வருகிறார்.
கௌரி, சாதரணமானவள் என்ற வலைப்பூவில் தான் ரசித்ததை, உண்ர்ந்து மகிழ்ந்தை மற்றும் தன்னுடைய கற்பனைகளை எழுதிவருகிறார். போட்டோ ஆல்பம் டிசைனிங் செய்து வரும் இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர்

திருச்சி பி.ஹெச்.இ.எல். டவுன்ஷிப்பில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ் - மாலா தம்பதியினர் ஞானவயல் என்ற வலைப்பூவில் ஆன்மீகம், இலக்கியம், வரலாறு என்று பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்கள்.


கோவில்பட்டிய சேர்ந்த செங்கோவி வசிப்பது குவைதில்.சினிமா அரசியல் சமூகம் இப்படி பல தளங்களைப்பற்றியும் செங்கோவி என்ற தளத்தில் எழுதி வருகிறார்.

சிதம்பரத்தை சேர்ந்த நக்கீரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் நாய்-நக்ஸ் என்ற வலைப்பூவில் தான் ரசித்த விஷயங்கள்,நகைச்சுவை,துணுக்குகள்,போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்..

இலக்கியம்,சமுதாயம்,உணர்வுகள் என்று சகல தளங்களைப்பற்றியும் நினைத்தேன் எழுதுகிறேன் என்ற தலைப்பில் எழுதும் மாலா வாசுதேவன் சென்னையை சேர்ந்தவர்.

August 14, 2012

அலை கடலென திரண்டு வாரீர்!சென்னையில் மாபெரும் பதிவர்கள் திருவிழா நடக்கவிருப்பது மிகவும் மகிழ்வைத்தருகின்றது.விழா சிறப்புற நடைபெற வாரந்தோறும் டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துதல் போன்ற பற்பல ஆயத்தங்கள் விழா எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக நடைபெறும் என்பதைகாட்டுகிறது.

காணும்போதெல்லாம் அண்ணன் கணேஷ் அவர்களின் அன்பு அழைப்பும்,விழா நடைபெறும் மண்டபம் நான் வசிக்கும் இடத்தில் இருந்து மிக பக்கமாக இருப்பினும் ஈது பெருநாளைக்கு ஊருக்கு செல்லவிருப்பதால் வருவதற்கு தடை போடுகின்றது.இருப்பினும் பதிவுலகில் பதிவர்கள் பதிவிடும் உற்சாக அழைப்பு எப்படியாவது வந்து கலந்து கொள்ளும் ஆவலை ஏற்படுத்துகின்றது.கலந்துகொள்ள முயல்கிறேன் இன்ஷாஅல்லாஹ்.

ஏனைய பதிவர்கள் இயன்ற மட்டும் விழாவில் கலந்து விழாவினை சிறப்பிக்க என் வலைப்பூ சார்பாக அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன்.மாபெரும் பதிவர் சந்திப்பு பதிவுலகில் ஒரு முத்திரை பதித்து சரித்திரம் படைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி,வாழ்த்துகின்றேன்.

பதிவர் சந்திப்புக்காக அழைத்த மற்ற பதிவுலக சகோதர,சகோதரிகளின் அழைப்பினை பார்வை இட கீழ் கண்ட இணைப்புகளை கிளிக் செய்து பார்க்கலாம்.

August 2, 2012

வலையோசை - 2


இவ்வார ஆனந்தவிகடன் என்விகடன் பதிப்புகளில் அறிமுகப்படுத்தபட்ட வலைப்பூதாரர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தஞ்சாவூர் ஹரணி என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வரும் அன்பழகன், சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்.சமூகம்,தமிழ் இலக்கியம் பற்றி இவருடைய கருத்துக்களை ஹரணி பக்கங்கள் என்ற தன் வலைப்பூவில் எழுதி வருகிறார்.புதுவைபதிப்புமயிலாடுதுறையைச்சேர்ந்த பாலமுருகன் தனியார்தொலைக்காட்சியில் பணிபுரிபவர்.பார்த்த கேட்ட ரசித்த விஷயங்களை குங்குமப்பூ www.saffroninfo.blogspot.in என்ற தன் தன் வலைப்பூவில் எழுதி வருகிறார்.திருச்சி பதிப்பு

கோவில்பட்டியில் கணினி பயிற்சி மையம் நடத்தி வரும் பாபு முத்துக்குமார் தன்னுடைய சொந்த அனுபவங்கள்,சமூக நிகழ்வுகள்,அரசியல்,எண்ணங்கள் போன்றவற்றை இம்சைஅரசன் என்ற தன் வலைப்பூவில் எழுதி வருகிறார்.மதுரைபதிப்பு


சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராக பணியாற்றும் ஹரிபாண்டி அனுபவங்கள்,சமுதாயம்,சினிமா என்று பல்வேறு விஷயங்களைப்பற்றி ஹரிபாண்டி என்ற பெயரில் வலைப்பூவில் எழுதுகிறார்.சென்னை பதிப்பு.

பொள்ளாச்சியை சேர்ந்த பவளராஜா பெங்களூரு மென் பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றுபவர்.ராசபார்வை என்ற தன் வலைப்பூவில் சுவையான பல தகவல்களை எழுது வருகிறார்.கோவை பதிப்பு