Showing posts with label ஊர் சுற்றலாம்.. Show all posts
Showing posts with label ஊர் சுற்றலாம்.. Show all posts

November 23, 2013

பேப்பூர்.

 கோழிக்கோடில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில்  பேப்பூர் (BEYPORE) என்ற அருமையான சுற்றுலா தளம் உள்ளது.அழகிய கடற்கரை,அதனை ஒட்டி பேப்பூர் துறைமுகம்,அருகிலேயே கப்பல் கட்டும் தளம் ,கடலுக்குள் பயணிக்கும் கல் பாலம், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் என்று செல்ல வேண்டிய இடங்கள் எராளமாக உள்ளன.

மாபெரும் இலக்கிய மேதை ,சுதந்திர போராட்ட வீரர் வைக்கம் முஹம்மது பஷீர் வாழ்ந்து மறைந்த ஊர் என்ற பெருமையும் இந்த பேப்பூர் நகருக்கு உணடு.


பேப்பூர் பீச் மிக அழகாக காட்சி அளிக்கிறது.நாங்கள் சென்றது வீக் எண்ட் தினத்தில்.ஆகையால் கூட்டம் மெரினா பீச்சை நினைவூட்டியது.கடல்காற்று வாங்கிய படி குடும்பத்துடன் அமர்ந்து கொள்வதற்கு வசதியாக  பீச் நெடுக கிரானைட் தளம் போட்ட உட்காரும் மேடை பீச் ஓரம் நீளமாக போடப்பட்டுள்ளது.பீச்சுக்கு செல்லும் பொழுது பெட்ஷீட்டோ,ஜமக்காளமோ சுமந்து செல்லும் வேலை மிச்சம்.வழி நெடுகிலும் அழகான விளக்கலரங்காரக்கம்பங்கள் கலை நயத்துடன் கண்களை கவர்ந்தாலும் பாராமரிப்பின்றி இருந்ததுதான் சோகம்.


கட்டணம் செலுத்தி துறைமுகத்துக்குள் நுழைந்தால் ஆங்காங்கே பெரிய பெரிய படகுகள் காணப்பட்டன.பல அடி ஆழமுள்ள கடலுக்கு அருகிலேயே தரைத்தளம் எந்த வித கைப்பிடி சுவரும் இல்லாமல் இருந்தது கிலியை கொடுத்தது.எங்கள் வீட்டு குட்டியின் கையை இறுக பற்றிக்கொண்டேன்..அருகில் போய் கடலை குனிந்து பார்த்தால் பயத்தில் விழி பிதுங்கிப்போனது.கொச்சிக்கு அடுத்த பெரிய துறை முகம் என்ற பெயரை பேப்பூர் துறைமுகம் பெற்றுள்ளது.



பேப்பூர் கப்பல் கட்டுமானத்தொழிலுக்கு புகழ் பெற்ற ஒரு கட்டுத்தளமாகும்.பண்டைய காலத்தில் உருசு என்ற மரக்கலன்கள் தயாரிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக இத்தளத்தை குறிப்பிடுகின்றனர்.சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே அனுபவம் நிறைந்த தொழிலாளர்கள் தொழில் நுணுக்கத்துடன் கப்பல் கட்டும் பணியில் ஈடு பட்டு இருந்தனராம்

 வெயில் மழை படாமல் நேர்த்தியாக மறைக்கப்பாட்ட பின்னர்தான் கப்பல் தயாராகின்றன.

உருவாகிக்கொண்டு இருக்கும் கப்பல்.


கப்பலின் அடிப்பாகம்.


கத்தார் மன்னருக்காக தயாராகிக்கொண்டுள்ள சொகுசுக்கப்பல்.இது அங்கிருந்த காவலாளி சொன்ன தகவல்.


கப்பலின் பக்கவாட்டுப்பகுதி..கப்பல் நிர்மாணிக்கப்பட்டு மலேஷியாவுக்கு எடுத்துச்சென்று எஞ்சினும் ஏனைய அலங்காரமும் மேற்கொள்ளப்படுமாம்.


கப்பலின் உயரத்தைப்பார்த்து அங்கிருந்த மர ஏணியில் ஏற நான் தயங்கினாலும் என்னவரும் எங்கள் வீட்டு குட்டி ஆமிரும்  சரசர வென்று அங்கிருந்த மர ஏணியில் ஏறி கப்பலின் உச்சிக்கு சென்று எடுத்து வந்த படங்கள்.

கப்பலின் உள் அலங்காரம்.சொகுசுக்கப்பல் ஆகையால் கப்பலினுள் ஒவ்வொரு மில்லி மீட்டரும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

December 27, 2012

அறுசுவைத்திருவிழா





கடந்த அக்டோபர் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் பெஸண்ட் நகர் பீச்சுக்கு அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு திண்டாட்டம்தான்.வாகனங்களும்,மக்கள் கூட்டமுமமாக தெருக்களில் நடக்க முடியாமல்,வாகனங்கள் பார்க் செய்ய முடியாமல் .ஏன்...வாகன‌ங்கள் நுழையவே இடம் இல்லாமல் ஏரியாவே தத்தளித்தது.அறுசுவை திருவிழாவால்.

திருவிழா என்றதும் ஆட்டம் பாட்டம் குடைராட்டினம்,விளையாட்டு ரயில், இதெல்லாம் இல்லை.எலியட்ஸ் பீச் மணலில் ஷாமியானா போடபட்டு வகை வகையான உணவுகளின் வாசனை மூக்கை துளைக்க மக்கள்ஸ் வாய்க்கும் கைக்கும் போராட்டமே நடத்திகொண்டிருந்தனர் அவசரகதியில்.

சாலையோரக்கடைகளில் வாங்கி சாப்பிட ஆசைபட்டும் செயல் படுத்த இயலாமல் லஜ்ஜை கொள்ளும் மக்களுக்கு அன்றைக்குகொண்டாட்டம்தான்.

தமிழ் நாட்டு உணவு மட்டுமின்றி  ,கேரளா.ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா,கோவா,பஞ்சாப்,பெங்கால்.குஜராத்,ராஜஸ்தான்,காஷ்மீர் மாநில உணவுவகைகள் அத்தனையும் சுடசுட கிடைத்தன.

நுழைவு வாசலில் குறைந்தது 100 ரூபாய்க்கு டோக்கன் வாங்கிக்கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.ஆனால் கண்டிப்பாக ஒருவருக்கு அந்த 100 ரூபாய் டோக்கன் போதவே போதாது.ஏனெனில் விலை அத்தனை அதிகம்.

வகை வகையான பிரியாணி வகைகள்,சிக்கன் வகைகள்,கபாப் வகைகள்,வடை போண்டா பஜ்ஜி வகைகள்,சாட் ஐட்டம்,பாயச வகைகள்,சூடான,குளிர் பான வகைகள் என்று எண்ணிலடங்கா உணவு வகைகள்.என்ன ஒன்று,விரும்பிய உணவை வாங்க பெரிய கியூவில் நிற்க வேண்டும்.

முதல் நாள் உணவு வகைகளின் விலை சற்றே குறைவாக இருந்தது.அடுத்த நாளே விலையை உயர்த்தி விட்டார்கள்."எவ்வளவு விலை உயர்த்தினாலும் நாங்களும் வந்து சாப்பிடுவோம்ல"என்பதை மக்கள் கூட்டம் நிரூபித்துக்கொண்டிருந்தது.



இரண்டு கீரை வடை 40 ரூபாய்.



ரோட்டோரக்கடையில் தாளத்துடன் டொடய்ங் டொடய்ங் என்ற மியூஸிக்குடன் கொத்து பரோட்டோ கொத்தும் ஓசையைத்தான் கேட்டு இருக்கிறேன்.நேரில் பார்த்ததில்லை.நீண்ட நாள் ஆசை .ஆரம்பம் முதல் இறுதிவரை கொத்துபரோட்டோ கொத்துவதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.மின்னல் வேகத்தில் எண்ணி பத்தே நிமிடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிளேட் கொத்துபரோட்டா செய்து விடுகிறார் கொ.ப மாஸ்டர்.சூடான கொத்து பரோட்டாவை ஒரு விள்ளல் ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டால்...ம்ஹும்..நான் செய்யும் கொ.ப வுக்கு அடிக்காது.



சுடச்சுட கொ.ப‌


பெரிய பெரிய அடுப்புகளில் கிரில்  கம்பிகளில் மாட்டி சிக்கன் கபாப் தயாரித்து குவித்த வண்ணம் இருக்கின்றார்கள்.உடனுக்குடன் விற்றும் தீர்ந்து விடுகிறது.



பிராஸ்டட் சிக்கன்.பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்க எக்கசக்க‌ கலர் பவுடர் போட்டு சாப்பிட தயங்க வைத்து விட்டனர்.


சூடான திருநெல்வேலி அல்வா.அதெப்படி எந்நேரமும் சூடாக கொடுக்கின்றார்கள்?இரண்டே ஸ்பூன் அல்வா 40 ரூபாய்.


ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு மூங் தால் அல்வா.இதுவும் 40 ரூபாய்.





வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி.


கூட்டத்தின் இன்னொரு பகுதி.



ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ஸ் 3230 என்ற அமைப்பு இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. ரோட்டரி சங்கத்தினர் அமைத்துள்ள மகிழ்ச்சியான கிராமம் என்ற திட்டத்துக்காக வசூல் ஆகும் தொகையை அவர்கள் தத்து எடுத்த
118 கிராமங்களுக்கும்  தேவையான வசதிகளை செய்து கொடுத்து மேலும் கிராம முன்னேற்றத்துக்கான‌  நலத்திட்டங்க‌ள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளிய மக்க‌ளின் கண்ணீரை போக்குவதே இத்திருவிழாவின் நோக்கம்.

நல்லதொரு நோக்கம்.வரவேற்ககூடிய திட்டம்.
சிற‌ப்பான‌ இத்தொண்டு செய்யும் இந்த அமைப்பை பாராட்டவும் வேண்டும்.விலையைப்பற்றி கவலை கொள்ளாமல் எவ்வளவு விலை கொடுத்தாயினும் வாங்கி சாப்பிட்டு ஆதரவு கொடுக்கும் சென்னை மக்கள் ஃபுட்டீஸ் மட்டுமல்ல இரக்க சுபாவமும் உள்ளவர்கள் தான் :)



June 12, 2012

ஏழு அதிசயங்கள்

சென்னை தீவுத்திடலில் ஏழு அதிசயங்கள் கண்காட்சி நடை பெற்று வருகின்றது.அத்தனை நாடுகளுக்கும் சென்று அத்தனை அதிசயங்களையும் வாழ்நாளில் கண்டு வர முடியாது.இந்த செயற்கையையாவது சொற்ப பணத்தில் பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பியதில் என் கேமராவில் கிளிக் செய்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்
(Leaning Tower of Pisa)

இத்தாலி நாட்டில் பைசா நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான சாய்ந்த கோபுரம்.இத்தாலியின் பைசா நகரப் பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், 1173 ஆண்டு கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

சுதந்திரதேவி சிலை
(The Statue of Liberty)
அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய உலக வரலாற்றின் ஒப்பற்ற அன்பளிப்பு சின்னமாக திகழும் எழில் கொஞ்சும் நியூயார்க் நகரின் லிபர்டி தீவில் அமையப்பெற்ற சுதந்திர தேவி சிலை.

கொலோசியம்
(Colosseum)

இத்தாலி நாட்டில் ரோம் நகரில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு நீள்வட்ட வடிவமான அரங்கம் இது. கி.பி. 80 - ல் கட்டப்பட்டது. கி.பி. 847 - ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வட்ட வடிவம் உடைய கொலோசியத்தின் பாதிப் பகுதி இடிந்து விழுந்தது. தற்போது பாதி அழிந்த நிலையில் வரலாற்றுச் சின்னமாகவும், உலக அதிசயமாகவும் திகழ்கிறது. இது பயங்கரமான குற்றவாளிகளுடனும் விலங்குகளுடனும் சண்டையிடுவதற்காக பண்டைய ரோமப் பேரரசன் வெஸ்பாசியனால் கட்டப்பட்டது. அரங்கின் உட்புறத்தின் நடுவே போட்டிகள் நடக்கும் போது அதனைச் சுற்றி அதை பார்க்கும் மக்களுக்காக வட்டமாக படிகள் அமைத்திருக்கும்
சிச்சென் இட்சா
(Pre-Hispanic City of Chichen-Itza)

மெக்சிகோ நாட்டின் யுகட்டான் என்ற இடத்தில் கட்டப்பட்ட கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களமாகும். இது மாயன் நாகரீகக் காலத்தை சேர்ந்து.
ஏசு கிருஸ்துவின் சிலை
(Christ the Redeemer)
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோவில் 1931 கட்டப்பட்டதாகும். அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள ஏசு கிருஸ்துவின் பிருமாண்டமான உருவச்சிலை.

சீனப் பெருஞ் சுவர்
(Great Wall of China)

ஆறாம் நூற்றாண்டில் சீனப் பேரரசைக் காப்பதற்காக கட்டப்பட்ட அரண். எல்லைப்பாதுகாப்பாகவும்,தலைச்சிறந்த சுற்றுலத்தளமாகவும் ,உலக அதிசயங்களின் ஒன்றாகவும் விளங்கும் சீனப்பெருஞ்சுவர் 7,200 கிலோ மீட்டர் நீளமும், 3.5 மீட்டர் உயரமும், 4.5 மீட்டர் அகலமும் உடையதாகும்.

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இந்த சுவரின் மீது ஏறி மற்ற உலக அதிசயங்களை கண்டு களிக்குமாறு கண்காட்சியில் நிர்மாணித்து இருக்கின்றனர்.
தாஜ்மஹால்
(Taj Mahal)
அனைவரும் அறிந்த நினைவுச் சின்னமான தாஜ்மகால் 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்குள் முகலாய மன்னன் ஷாஜஹானால் கட்டப்பட்டது. இது இந்தியா ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் முழுதுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.


தாஜ் மஹால் கட்டும் பொழுது புனித குர் ஆனிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்த மன்னர் ஷாஜஹான்
இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் அமானாத்கான் மூலமாக திருகுர் ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்டது



ஆக்ராவில் இருக்கும் நிஜ தாஜ்மஹாலுக்கருகே யமுனை ஆறு சலசலத்து ஓடிக்கொண்டு இருக்கும்.இங்கு சென்னையில் உள்ள செயற்கை தாஜ்மஹால் அருகே கூவம் ஆறு ஓடிக்கொண்டுள்ளது.என்னே பொருத்தம்!

சிறியவர்களுக்கு நுழைவு கட்டணம் 100,பெரியவர்களுக்கு 150 கேமராவுக்கு 50 என்று வசூல் செய்தாலும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய கண்காட்சி.அதிசயங்கள் பற்றி ஒலி பெருக்கியில் விலா வாரியாக விவரித்துக்கொண்டிருப்பதுடன் ஆங்காங்கே போர்டுகளிலும் விளக்கங்கள் எழுதப்பட்டு இருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

கண்காட்சிக்கு செல்லும் பொழுது குழந்தைகளுக்கான ஸ்னாக்ஸும் தண்ணீர் பாட்டிலும் கூடவே எடுத்து செல்லுவது நலம்.

ஒவ்வொரு பொருளும் மூன்று நான்கு மடங்கு விலை,சுத்தமில்லாத உணவுவகைகள்,புட் கோர்ட் அமைந்திருக்கும் பக்கம் ஈக்களின் ராஜ்ஜியத்தையும்,எச்சில் பாத்திரங்களுடன் அலங்கோலமாகி கிடக்கும் டேபிள்களைப்பார்க்கும் பொழுது கண்களை இறுக்க மூடிக்கொள்ளத்தோன்றுகிறது.இதனையும் மீறி நிறைய மக்கள்ஸ் உட்கார்ந்து கட்டு கட்டுவதைப்பார்க்கும் பொழுது பரிதாபமாக உள்ளது.

அதிக கட்டணத்தால் ரைடுகள் அனைத்தும் காலியாக ஓடிக்கொண்டுள்ளது.
கண்காட்சிக்கு போய் பார்க்கலாம்.கண்ணால் பார்த்து ரசித்து விட்டு புகைப்படக்கருவி எடுத்து சென்று இருந்தால் காட்சிகளை படம் எடுத்துக்கொண்டு மட்டும் வரலாம்.


March 13, 2012

தக்‌ஷின் சித்ரா - 2

தக்ஷின் சித்ராவில் பழங்கால வித விதமான

இல்லங்களைப்பார்த்தோம்.இப்பொழுது அந்த இல்லங்களுக்குள்

நுழைந்து

அங்கிருக்கும் பொருட்களைப்பார்ப்போமா.?


ஐயராத்து மாமியும் அவரது பொண்ணும் தாயகட்டம் விளையாடுகின்றார்கள்.

பழங்காலத்து தூணுக்கு பின்னால் பானை முறம்,கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளும் பனைஓலையிலான பட்டை(வாளிக்கு முன்னர் உபயோகத்தில் இருந்தது.)தண்ணீர் சேகரித்து வைக்கும் குடுவை,ஓலையிலான பெட்டிகள் இத்யாதி..


மியூஸிக் உபகரணங்கள்
அந்தக்காலத்தில் மச்சி வீட்டிற்கு(மாடி)செல்லும் மரத்தில் ஆன ஏணி.


ஐயராத்து அம்பிக்கு சிரத்தையாக சொல்லிக்கொடுக்கும் குரு.பணிவாய் கற்றுக்கொள்ளும் சிஷ்யன்
தேக்கு மரத்தில் ஆன் பெட்டகம்.
பழங்கால அலமாரி
விலையுயர்ந்த பொருட்கள் வைத்துக்கொள்ளும் குட்டியூண்டு அலமாரி.
துளசிமாடத்திற்கு கீழே கோலம் போடும் மடிசார்மாமி.
பித்தளை செம்பினால் ஆன பாத்திரங்கள்.
கலை உணர்வு மிக்க கைவினைப்பொருட்கள்.
விஷேஷங்களுக்கு மூன்று கல் அடுப்பில் வைத்து விறகு எரித்து சமைக்கும் பித்தளை அண்டா.
குழந்தைகளை தூங்கவைக்க வித வித மரதொட்டில்கள் துணித்தூளி.
பனை ஓலையினால் முடையப்பட்ட வித விதமான ஓலை உபகரணங்கள்.



குயவர் வீட்டில் குவிந்து கிடக்கும் மினியேச்சர் பாத்திரங்கள்.

நெசவாளர் வீட்டில் கைராட்டிணம்.
முற்றத்தில் துளசி மாடம்.மினு மினுக்கும் உச்சி வெயில் ஜொலி ஜொலிக்க.
தறியில் நெசவாளர் பட்டு நெய்கின்றார்.பத்தாயிரம் விலை மதிப்பிலான பட்டை நெய்ய ஆறு நாட்களுக்கும் மேல் வேலை செய்ய வேண்டுமாம்.ஏழை நெசவாளிகளின் தொழில் நசிந்து வருவது வேதனைக்குறிய விஷயம்.

நெசவாளர் வீட்டுக்குள்ளேயே ஒற்றை மாட்டு பொட்டு வண்டி.


நெசவாளரும் அவரது சகதர்மினியும்.பின்னனியில் பாருங்கள்.மரத்திலான ஸ்டாண்டில் குடைக்கம்பு (வாக்கிங் ஸ்டிக்),டர்பன்.குடை,துணிவேலைபாட்டினால் ஆன பெரிய விசிறி.
கேரளா வீட்டு ஹால்.
கேரளா ஸ்டைல் மரத்தில் ஆன குள்ளப் படிக்கட்டு.
ஊறுகாய் ஜாடிகள்
சமையலுக்கு பயன் படும் வாசனைப்பொருட்கள்.