June 24, 2012

பி.ஆர்.மத்ஸ்யா

"ரெஸ்டாரெண்ட் போய் நாளாகிறது "என்று எங்கள் குடும்ப ஜூனியர்ஸ் அடம் பிடிக்க,வெஜ் ரெஸ்டாரெண்ட் என்றால் ஒகே.இல்லை என்றால் ம்ஹும்..என்று கறார் ஆக கூறி விட்டேன்."வெஜ்ஜாஆஆஆஆஆ..ரெஸிடென்ஸி ஹோட்டல் சின் சின் போலாம்"உச்சஸ்தாயியில் அலறியதை பொருட்படுத்த வில்லை.

கடைசியில் வெஜ் என்று ஒரு மனதாக தீர்மானித்து அண்ணாச்சி உணவகத்திலும்,ஐயர் உணவகத்திலும் சாப்பிட்டு போர் அடித்து விட வித்தியாசமான வெஜ் ரெஸ்டாரெண்ட் எது என்று தேடியதில் அதே ஜூனியர் ஹிந்து மெட்ரோ பிளஸை தூக்கிக்கொண்டு வந்து காட்டிய பொழுது கண்ணில் பட்டது பி ஆர் மத்ஸ்யா.அடுத்த அரை மணி நேரத்தில் மத்ஸ்யாவில் இருந்தோம்.

கூட்டத்தையும் வரிசையாக அடுக்கி இருந்த பஃபே உணவு வகைகளையும் பார்த்த பொழுது சாப்பாடு செமத்தியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு போய் அமர்ந்தோம்.முதலில் பரிமாறிய சூப்பை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு இருந்த பொழுது எங்கள் வீட்டு வால் பாகற்காய் சூப் என்று சற்று சப்தமாகவே சொன்னாள்.

அடுத்து கொண்டு வந்த சாட் ஐட்டமான பேல் பூரியும் தஹி பூரியும் பிரமாதமாக இருந்ததில் சூப் மறந்தே போய் விட்டது.உண்மையில் இப்படி ஒரு சுவையான சாட் ஐட்டம் சென்னையில் சாப்பிட்டதே இல்லை.அத்தனை அருமை.



வித விதமான சாலட் வகைகள்.கேபேஜ்ஜை க்ரீமியாக வைத்து இருந்தது டாப்

பாலக் பன்னீரும் பட்டர் பனீர் மசாலாவும்.
புதினா பூரி,நான் ஸ்டஃப்டு சப்பாத்தி இட்லி சட்னி வகையறாக்களுக்கும் குறைவில்லை.
தால் மக்கானியும் வெஜ் ரைஸும்
பொடொடோ பிரை காலி பிளவர் மஞ்சூரியன்
தயிர் சாதம் ,மோர் மிளகாய் ,அப்பளம் ,ஊறுகாய்

நூடுல்ஸ்,லெமன் ரைஸ் ,பாஸ்தா என்று எதை சாப்பிட எதை விட என்று குழம்ப வைக்கும் வகை வகையான உணவு வகைகள்.








மற்ற மாநில உணவு வகைகளை சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடலாம்.அதே நேரம் தமிழ்நாட்டு ஸ்பெஷலான இட்லி சட்னி,காரச்சட்னி,வெஜ் ரைஸ்,சாம்பார்,பாயஸம் போன்றவை பலரால் தொடப்படாமல் இருந்தது அதன் சுவையினால்.

இத்தனை ஐட்டங்களையும் சற்று குறைத்து ரேட்டையும் கம்மி பண்ணினால் வயிற்றுக்கும்,பர்ஸுக்கும் பங்கம் வராது.

ஞாயிறன்று சென்றதால் ஐட்டங்களும் அதிகம் விலையும் சற்று அதிகம்.ஒரு நபருக்கு 300 ரூபாய் பிளஸ் டாக்ஸ்,சர்வீஸ் சார்ஜ்.மற்ற நாட்களில் 240.

வடமாநில சைவ உணவுப்பிரியர்களுக்கான நல்லதொரு ரெஸ்டாரெண்ட்.

பி.ஆர் மத்ஸ்யா,
29/31,தணிகாசலம் சாலை,
தி.நகர்,
சென்னை - 17

டிஸ்கி:போய் உட்கார்ந்ததும் ஹேண்ட் பேகில் இருந்து கேமராவை தூக்கினால் சார்ஜ் சுத்தமாக இல்லை.பக்கத்தில் இருந்த வாண்டுவின் கேலக்சி டேபில் இருந்து அவனை விட்டே எடுத்த படங்கள் .சராமாரியாக படத்தை எடுத்து தள்ளி விட்டாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பாருங்கள்.

June 14, 2012

வலைப்பதிவர்கள் தினவாழ்த்துக்கள்

வாழ்த்துகள்!!

சர்வதேச வலைப்பதிவர் நாளான இன்று சக வலைப்பதிவு நட்புக்களுக்கும் இனிய
வாழ்த்துக்கள்.

1.1997ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 17 ஆம்தேதி ஜான் பெர்கர் - John
Barger என்பவர் Webblog என்ற பெயரினை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்தார்.

2.1999 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் முதல் பீட்டர் மெர்ஹால்ஸ் - Peter
Merholz என்பவர் Webblog ன் சுருக்கமான blog என்ற பெயரை பயன்படுத்த
தொடங்கினார்.அதுவே இன்றளவும் நிலைத்து விட்டது.

3.1996 ஆம் ஆண்டு எக்சான்யா (Xanya) என்ற நிறுவனம் வலைப்பூ வசதியை
நிறுவத்தொடங்கியது.பிற்பாடு வலைப்பூவின் அசூர வளர்ச்சியைக்கண்டு கூகுள்
நிறுவனம் இதனை விலைக்கு வாங்கி உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வலைப்பூ
ஆரம்பிக்கும் வண்ணம் சேவையை ஆரபித்தது.

4.2003 ஜனவரி திங்கள் 26 ஆம்தேதி குடியரசு தினத்தன்று தமிழிலான வலைப்பூவை
நவன் என்ற வலைப்பதிவர் ஆரம்பித்தார்.இருப்பினும் கார்த்திகேயன் ராமசாமி
என்பவர் முதல் வலைப்பூதாரர் என்று விக்கிப்பீடியாவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

5.தமிழ் வலைப்பூக்கள் பற்றிய தகவல்கள்,உருவாக்கும் விதம்,அதன் பயன்
பாடுகள் போன்றவை பத்திரிகைகள் வாயிலாக வெளியிடப்பட்டு அதன் பயன்
பாடும்,வலைப்பூவின் சக்தியும் மக்களிடையே தெரிய வந்தது.

6.தமிழ் வலைப்பூ தொடங்கிய வருடமான 2003 முதல் 2005 வரை வெறும் 1000
வலைப்பூக்கள் மட்டுமே தொடங்கப்பட்டு உலா வந்தன.அடுத்த மூன்றாண்டுகளில்
அதன் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்து விட்டன.பின் வந்த ஆண்டுகளில்
பற்பல மடங்குகள் அதிகரிக்கத்தொடங்கி விட்டன.

7.தமிழ் வலைப்பூ வளர்ச்சியால் இணைய எழுத்தாளர்கள் பெருகி தமிழ்
இலக்கியங்கள் அனைத்து வகை மக்களுக்கும் சென்று அடையக்கூடிய ஒன்றாகி
விட்டது.தமிழ் மொழியின் வளர்ச்சி உயர்ந்திடவும் வலைப்பூக்கள் உதவுகின்றன
என்றால் மிகை ஆகாது.

8.ஜஸ்டின் ஹால் (Justin Hall) உலகில் முதன் முதலில்வலைப்பூ எழுத
ஆரம்பித்தவர் என்ற சிறப்பைப்பெறுகின்றார்.

9.உலகிலேயே அதிகம் வயதுடைய வலைப்பதிவர் ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்த ஆலிவ்
ரைலி ஆவார்.இவரைப்பற்றிய எனது கட்டுரையை காண இங்கு சொடுக்குங்கள்.

10.ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் சர்வதேச வலைப்பதிவர்கள் நாளென்று
குறிப்பிடும் தமிழ் விக்கி பீடியா அதே சர்வதேச பதிவர்கள் நாளை
ஜூன் மாதம் 14 ஆம் தேதி என்று குறிப்பிடுவது குழப்பத்தை தருகின்றது.

11.வலைபூக்கள் தமிழின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கின்றன என்றால்
மிகை ஆகாது.முன்னொரு காலத்தில் பத்திரிகைகள் மட்டுமே இருந்தன.இப்பொழுதோ
பதிவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதனை அந்நொடியே எழுதி இணையத்தில்
வெளிட்டு உடனுக்குடன் கருத்துரையும் பெற்று விடுகிறோம்.நினைத்ததை
எழுதுவது,அதனை எடிட் செய்யாமல் உடனுக்குடன் வெளியிடுவது,போன்ற பற்பல
வசதிகளைப்பயன் படுத்தி இன்றைய கால கட்டத்தில் பதிவர்கள் சிலரின்
கருத்துக்களும்,பதிவுகளும் படிப்போரை மிகவும் வேதனைக்கு
உட்படுத்துகின்றன.

12.ஒருவர் நம்பிக்கையை மற்றவர் கிண்டலடித்தல்,மதப்பூர்வமான
சண்டைகள்,குடும்ப உறுப்பினர்களைக்கூட கீழ்த்தரமாக வர்ணிக்கும் அவலம்,நான்
பெரியவனா நீ பெரியவனா என்ற ஈகோ,குழு குழுக்களாக செயல் படுதல் இப்படி
பற்பல விரும்பத்தகாதவைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அவலம் மறைய வேண்டும்.

12.வரும் காலங்களிம் முகம் சுளிக்க வைக்கும் இத்தகைய செயல்கள் அறவே
மறைந்து பதிவர்களுக்கிடையே நல்லுறவும்,ஒருவரை மற்றவர்
மதித்தலும்,சகிப்புத்தன்மையும் வளர்ந்து ஊடகங்களில் மகத்தானது
பதிவுலகம்தான் என்ற சிறப்பை பெற வேண்டும் என்பதே என் அவா.


June 12, 2012

ஏழு அதிசயங்கள்

சென்னை தீவுத்திடலில் ஏழு அதிசயங்கள் கண்காட்சி நடை பெற்று வருகின்றது.அத்தனை நாடுகளுக்கும் சென்று அத்தனை அதிசயங்களையும் வாழ்நாளில் கண்டு வர முடியாது.இந்த செயற்கையையாவது சொற்ப பணத்தில் பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பியதில் என் கேமராவில் கிளிக் செய்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்
(Leaning Tower of Pisa)

இத்தாலி நாட்டில் பைசா நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான சாய்ந்த கோபுரம்.இத்தாலியின் பைசா நகரப் பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், 1173 ஆண்டு கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

சுதந்திரதேவி சிலை
(The Statue of Liberty)
அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய உலக வரலாற்றின் ஒப்பற்ற அன்பளிப்பு சின்னமாக திகழும் எழில் கொஞ்சும் நியூயார்க் நகரின் லிபர்டி தீவில் அமையப்பெற்ற சுதந்திர தேவி சிலை.

கொலோசியம்
(Colosseum)

இத்தாலி நாட்டில் ரோம் நகரில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு நீள்வட்ட வடிவமான அரங்கம் இது. கி.பி. 80 - ல் கட்டப்பட்டது. கி.பி. 847 - ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வட்ட வடிவம் உடைய கொலோசியத்தின் பாதிப் பகுதி இடிந்து விழுந்தது. தற்போது பாதி அழிந்த நிலையில் வரலாற்றுச் சின்னமாகவும், உலக அதிசயமாகவும் திகழ்கிறது. இது பயங்கரமான குற்றவாளிகளுடனும் விலங்குகளுடனும் சண்டையிடுவதற்காக பண்டைய ரோமப் பேரரசன் வெஸ்பாசியனால் கட்டப்பட்டது. அரங்கின் உட்புறத்தின் நடுவே போட்டிகள் நடக்கும் போது அதனைச் சுற்றி அதை பார்க்கும் மக்களுக்காக வட்டமாக படிகள் அமைத்திருக்கும்
சிச்சென் இட்சா
(Pre-Hispanic City of Chichen-Itza)

மெக்சிகோ நாட்டின் யுகட்டான் என்ற இடத்தில் கட்டப்பட்ட கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களமாகும். இது மாயன் நாகரீகக் காலத்தை சேர்ந்து.
ஏசு கிருஸ்துவின் சிலை
(Christ the Redeemer)
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோவில் 1931 கட்டப்பட்டதாகும். அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள ஏசு கிருஸ்துவின் பிருமாண்டமான உருவச்சிலை.

சீனப் பெருஞ் சுவர்
(Great Wall of China)

ஆறாம் நூற்றாண்டில் சீனப் பேரரசைக் காப்பதற்காக கட்டப்பட்ட அரண். எல்லைப்பாதுகாப்பாகவும்,தலைச்சிறந்த சுற்றுலத்தளமாகவும் ,உலக அதிசயங்களின் ஒன்றாகவும் விளங்கும் சீனப்பெருஞ்சுவர் 7,200 கிலோ மீட்டர் நீளமும், 3.5 மீட்டர் உயரமும், 4.5 மீட்டர் அகலமும் உடையதாகும்.

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இந்த சுவரின் மீது ஏறி மற்ற உலக அதிசயங்களை கண்டு களிக்குமாறு கண்காட்சியில் நிர்மாணித்து இருக்கின்றனர்.
தாஜ்மஹால்
(Taj Mahal)
அனைவரும் அறிந்த நினைவுச் சின்னமான தாஜ்மகால் 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்குள் முகலாய மன்னன் ஷாஜஹானால் கட்டப்பட்டது. இது இந்தியா ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் முழுதுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.


தாஜ் மஹால் கட்டும் பொழுது புனித குர் ஆனிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்த மன்னர் ஷாஜஹான்
இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் அமானாத்கான் மூலமாக திருகுர் ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்டது



ஆக்ராவில் இருக்கும் நிஜ தாஜ்மஹாலுக்கருகே யமுனை ஆறு சலசலத்து ஓடிக்கொண்டு இருக்கும்.இங்கு சென்னையில் உள்ள செயற்கை தாஜ்மஹால் அருகே கூவம் ஆறு ஓடிக்கொண்டுள்ளது.என்னே பொருத்தம்!

சிறியவர்களுக்கு நுழைவு கட்டணம் 100,பெரியவர்களுக்கு 150 கேமராவுக்கு 50 என்று வசூல் செய்தாலும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய கண்காட்சி.அதிசயங்கள் பற்றி ஒலி பெருக்கியில் விலா வாரியாக விவரித்துக்கொண்டிருப்பதுடன் ஆங்காங்கே போர்டுகளிலும் விளக்கங்கள் எழுதப்பட்டு இருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

கண்காட்சிக்கு செல்லும் பொழுது குழந்தைகளுக்கான ஸ்னாக்ஸும் தண்ணீர் பாட்டிலும் கூடவே எடுத்து செல்லுவது நலம்.

ஒவ்வொரு பொருளும் மூன்று நான்கு மடங்கு விலை,சுத்தமில்லாத உணவுவகைகள்,புட் கோர்ட் அமைந்திருக்கும் பக்கம் ஈக்களின் ராஜ்ஜியத்தையும்,எச்சில் பாத்திரங்களுடன் அலங்கோலமாகி கிடக்கும் டேபிள்களைப்பார்க்கும் பொழுது கண்களை இறுக்க மூடிக்கொள்ளத்தோன்றுகிறது.இதனையும் மீறி நிறைய மக்கள்ஸ் உட்கார்ந்து கட்டு கட்டுவதைப்பார்க்கும் பொழுது பரிதாபமாக உள்ளது.

அதிக கட்டணத்தால் ரைடுகள் அனைத்தும் காலியாக ஓடிக்கொண்டுள்ளது.
கண்காட்சிக்கு போய் பார்க்கலாம்.கண்ணால் பார்த்து ரசித்து விட்டு புகைப்படக்கருவி எடுத்து சென்று இருந்தால் காட்சிகளை படம் எடுத்துக்கொண்டு மட்டும் வரலாம்.


June 10, 2012

சர்வதேச நாட்கள்



ஜனவரி

10 உலக சிரிப்பு தினம்
12 தேசிய இளஞர் நாள்
15 இராணுவ தினம்
16 விக்கிபீடியா நாள்
19 மதங்கள் தினம்
20 சமூக நிதி தினம்
22 சாரணியர் தினம் .
26 சுங்கவரிதினம்
27 ஹோலோ காஸ்ட் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோர் தினம்
28 நோயாளர் தினம்
29 அரசியலமைப்பு நாள்
30 தொழுநோய் ஒழிப்பு தினம்&தியாகிகள் தினம்

பிப்ரவரி

02 புனித வாழ்வுக்கான தினம்&சதுப்புநிலதினம்
08 பரிநிர்வாண நாள் - பௌத்த வழிபாட்டு நாள்
11 காதலர் தினம்
12 டார்வின் நாள்
21 தாய் மொழிகள் தினம்
24 கலால் வரி தினம்
28 அறிவியல் தினம்

மார்ச்

06 புத்தகங்கள் தினம்
08 பெண்கள் தினம்&எழுத்தறிவுதினம்
11 பொது நலவாய அமைப்பு தினம்
13 சிறுநீரக விழிப்புணர்வுதினம்
15 நுகர்வோர்தினம்
20 ஊனமுற்றோர்தினம்&சிட்டுக்குருவிகள் தினம்
21 காடுகள்தினம்&சர்வதேச இனவேறுபாட்டுக்கு எதிரான தினம்&கவிதைகள் தினம்
22 தண்ணீர்தினம்
23 தட்பவெப்பநிலை தினம்
24 காசநோய் தினம்
28 கால் நடை மருத்துவ தினம்

ஏப்ரல்

01 முட்டாள்கள் தினம்
02 சிறுவர் நூல் நாள்
04 நிலக்கண்ணி வெடி விழிப்புணர்வுதினம்
05 சமுத்திரதினம்
07 சுகாதார தினம்
08 உரோமர் கலாச்சாரதினம்
12 வான் பயண தினம்&வீதியோர சிறுவர்களுக்கான தினம்
14 அமைதி தினம்
15 அரவாணிகள் தினம்&நூலகர்கள் தினம்
17 இரத்த உறையாமை தினம்.
18 மரபு தினம்
19 புகைப்பட தினம்
22 பூமி தினம்
23 புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம்
25 இறைச்சல் விழிப்புணர்வு தினம்
26 அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
30 குழந்தை தொழிலாளர்கள் தினம்

மே

01 உலக தொழிலாளர் தினம்
03 பத்திரிகை சுதந்திர தினம்&சக்தி தினம்
04 தீயணைக்கும் படையினர் நாள்
02 ஆவது ஞாயிறு அன்னையர் தினம்
08 செஞ்சிலுவை தினம்&விலங்குகள் பாதுகாப்பு தினம்
12 சர்வதேச செவிலியர் தினம்
15 குடும்பங்கள் தினம்
17 தொலைத்தொடர்பு தினம்
16 தொலைக்காட்சி தினம்
18 அருங்காட்சியக தினம்
19 கல்லீரல் நோய் தினம்&பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
21 உலக பண்பாட்டு தினம் &வன்முறை ஒழிப்பு தினம்
22 உயிரின பல்வகைமை தினம்
23 ஆமைகள் தினம்
24 காமன் வெல்த் தினம்
29 ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதிக்காப்போர் தினம்&தம்பதியர் தினம்
31 புகையிலை எதிர்ப்புதினம்

ஜூன்

01 சர்வதேச சிறுவர் தினம்
05 சுற்றுபுறதினம்
08 சமுத்திர தினம்
03 வது ஞாயிறு தந்தைகள் தினம்
12 சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம்
14 இரத்ததான தினம்&வலைப்பதிவர் நாள்
15 மேஜிக் வித்தை தினம்
20 அகதிகள் தினம்
21 உலக இசை நாள்
23 இறைவணக்க தினம்
26 போதை ஒழிப்பு தினம்&26 சித்திரவதைக்கு ஆளான்னோருக்கான ஆதரவு நாள்
27 நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
28 ஏழைகள் தினம்

ஜூலை

01 கேளிக்கை தினம்& மருத்துவர்கள் தினம்
01வது சனிக்கிழமை கூட்டுறவுதினம்
11 மக்கள் தொகை தினம்
15 கல்வி நாள்
3 வது ஞாயிற்று கிழமை தேசிய ஐஸ் கிரீம் தினம்
20 சதுரங்க தினம்

ஆகஸ்ட்

01 தாய்ப்பால் தினம்&சாரணர் தினம்
02 ந‌ட்பு ‌தின‌ம்
06 ஹிரோஷிமா தினம்
09 நாகசாகி தினம்&ஆதிவாசிகள் தினம்
12 இளஞர் தினம்
13 இடதுகை பழக்கமுடையோர் தினம்
14 கலாசார ஒற்றுமை நாள்
18 உள்நாட்டு மக்களின் சர்வதேசதினம்
30 காணாமற்போனோர் நாள்

செப்டம்பர்

05 இந்திய ஆசிரியர் தினம்
08 எழுத்தறிவு தினம்
18 அறிவாளர்கள் தினம்
15 மக்களாட்சி நாள்
16 ஓஷோன் தினம்
21 பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 ஊமை&காது கோளாதோர் தினம்
27 சுற்றுலா தினம்

அக்டோபர்

01 முதியோர் தினம்&இரத்ததான தினம்
02 சைவ உணவாளர் தினம்&அகிம்சை தினம்
03 குடியிருப்பு (உறைவிடம்) தினம்&வனவிலங்குகள் தினம்
04 விலங்குகள் நல தினம்
05 இயற்கை சூழல் தினம்
08 இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
10மரணதண்டனை எதிர்ப்பு தினம்
09 அஞ்சலக தினம்
12 உலக பார்வை தினம்
14 தர நிர்ணய நாள்
15 விழிப்புலனற்றோர் தினம்
16 உணவுதினம்
17 வறுமை ஒழிப்பு தினம்
18 இடப்பெயர்வாளர் தினம்
24 ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 சிந்தனைகள் தினம்
31 சிக்கன நாள்

நவம்பர்


11நினைவுறுத்தும் நாள்
14 நீரிழிவு நோய் தினம்
16 உலக சகிப்பு நாள்
17 அனைத்துலக மாணவர் நாள்
03 ஆவது வியாழக்கிழமை உலக தத்துவ நாள்
19 தேசிய ஒருமைப்பாட்டு தினம்
24 படிவளர்ச்சி நாள்
25 பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
26 சட்ட தினம்
29 பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச தோழமை தினம்

டிசம்பர்

01 எயிட்ஸ் தினம்
02 அடிமைத்தனம் ஒழிப்பு தினம்&ஒளிபரப்பு தினம்
03 ஊனமுற்றோர் தினம்
05 பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்
06 மத நல்லிணக்க தினம்
07 கொடிதினம்
08 தேசிய மனவளர்ச்சி குன்றியோர் தினம்
09 விமானபோக்குவரத்து தினம்&ஊழல் எதிர்ப்பு நாள்
10 மனித உரிமைகள் தினம்
11 சர்வதேச மலை நாள்
17 பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
18 சிறுபான்மையினர் உரிமை தினம்
21 சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
23 விவசாயிகள் தினம்










June 3, 2012

ஆமை



சிறிய வயதில் கடற்கரைக்கு செல்லும் பொழுது கரையில் குடு குடு வென்று வரிசைகட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் கருப்பு நிற ஆமைக்குட்டிகளைக்களைக்கண்டால் மனம் குதூகலமாகி விடும்.

உள்ளங்கைக்குள் அடங்கி விடும் சிறிய ஆமைக்குட்டிகளை கையால் தொட்டு பிடித்து விளையாட பயமாக இருக்கும்.இருப்பினும் ஒரு நாள் கூட வந்த சகாவிடம் பிடிக்க சொல்லி ஒரு பையில் போட்டு வீட்டிற்கு எடுத்து வந்து விட்டேன்.

எல்லோரும் கோழி வளர்க்கின்றார்கள்,குருவி வளர்கின்றார்கள்,முயல் வளர்கின்றார்கள்.நாம் வித்தியாசமாக ஆமை வளர்த்தால் என்ன என்ற ஒரு ஆர்வத்தில் குட்டித் தம்பிக்கு வாங்கிய இன்ஸ்டண்ட் மில்க் பவுடர் காலி டப்பாவை ஆமைக்கு வீடாக்கி அதனுள் பத்திரப்படுத்தி விட்டேன்.

இதனைக்கண்ட எங்கள் வீட்டிற்கு வரும் பாட்டி முறை வரும் ஒருவர்”ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள்.நீ ஆமையை வீட்டிற்கு கொண்டு வந்து இருக்காயே”அம்மாவின் காதில் விழுமாறு சப்தமாக கூறுவதைப்பார்த்து பாட்டியை எரித்து விடுவதைப்போல் ஒரு பார்வை பார்த்து விட்டு ஆமை வீட்டை பாட்டியின் கண்களில் படாமல் ஒரு ஓரமாக வைத்து விட்டேன்.

என்ன உணவு கொடுப்பது என்று தெரியவில்லை.அரிசி,கம்பு போன்றவற்றை போட்டாலும் ஆமை சாப்பிடுவதாக தெரியவில்லை.

மறுநாள் ஆமையை தகர டப்பாவுடன் காணவில்லை.வீட்டிற்கு வந்த தோட்டக்கார அம்மாவிடம் கொடுத்து கடற்கரையில் விட்டு விடும்படி அம்மா கொடுத்தனுப்பி விட்டார்கள்.அத்தோடு ஆமை வளர்க்கும் ஆசைக்கு சமாதி கட்டியாகி விட்டது.

நான் சிறிய வயதில் வளர்க்க ஆசைப்பட்ட ஆமையைப்பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

ஆமை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய முட்டை இட்டு குஞ்சு பொரிக்கவல்ல ஊர்வன இனத்தைச்சார்ந்த ஒரு சாது விலங்காகும்.தனிமையை விரும்பும் உயிரினமாகும்.

உலகில் 300 வகையான ஆமை இனங்கள் உள்ளன.பெண் ஆமைகளுக்கு சிறிய அளவில் வாலும் ஆண் ஆமைக்கு பெரிய வால்களும் கொண்டிருக்கும்.

விதைகள், இலைகள் கொண்ட பச்சைக் காய்கறிகள், மற்றும் சில பழங்கள் ,புற்பூண்டுகள் இலைதழைகள்,சிலவகைபூக்கள்,சிறியவகை பூச்சிவகைகளை உணவாக உட்கொள்கிறது.

கட‌லி‌ல் வாழு‌ம் பெ‌ண் ஆமைக‌ள், கரு‌த்த‌ரி‌த்தது‌ம், கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாக பய‌ணி‌க்க‌த் துவ‌ங்கு‌ம். கரையை அடை‌ந்தது‌ம் ம‌ண்‌ணி‌ல் பள்ளம் பறித்து மு‌ட்டைகளை இ‌ட்டு‌வி‌ட்டு மணலால் மூடி வைத்துவிட்டு செ‌ன்று‌விடு‌ம். 90 முதல் 120 நாட்கள் வரைஇயற்கை வெப்பத்தால் முட்டைகளில் இருந்து குஞ்சுபொரிந்து வெளிப்படும்.

2 முதல் 200 மு‌ட்டைகளைக்கூட ஒரே சமய‌த்‌தி‌ல் கூட இ‌டக்கூடிய வல்லமை படைத்தது ஆமையினம்.30 கிராம் முதல் 50 கிராம் வரை எடையுள்ள முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருகின்றன.

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது.சில ஆமைகள் 150 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. இதன் காரணமாக, சீனக் கலாசாரங்களில் இவை நீண்ட ஆயுளின் சின்னமாக விளங்குகின்றன.லெதர்பேக் (leatherback) என்ற கடல் ஆமை தான் மிகவும் நீண்ட வாழ்நாள் கொண்டது, அது 550 கிலோ எடை வரை வளரும் தன்மைக்கொண்டது.

ஆமை தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர்.அதனால்தான் குறைந்த வேக நடையை ஆமை நடை என்று கேலி செய்கின்றனர்.

மனிதர்களுக்கெல்லாம் இனப்பெருக்கம் முடிந்து ஓய்ந்து போகும் வயதில் தான் ஆமைக்கு இனப்பெருக்கமே ஆரம்பிகின்றது.ஆம்,45 வயதில்தான் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக மாறுகிறது. அதாவது, சராசரியாக 45 வயதில்தான் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பக்குவத்திற்கு வருகின்றன. அதற்கு பிறகுதான் முட்டையிட ஆரம்பிக்கின்றன.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரை நாகை மாவட்டம் கோடியக்கரை, பழையாறு, நாகை, விழுந்தமாவடி, தரங்கம்பாடி, பகுதிகளில், முட்டையிடுவதற்குத் தகுந்த தட்ப வெப்ப சூழல் மற்றும் அடர்ந்த மரங்கள் இருப்பதால், இப்பகுதிகளில் முட்டையிட, ஆமைகள் அதிகளவில் வருகின்றன.

உலகம் முழுதும் மே 23 ஆம் தேதி ஆமைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை உயிரினமான ஆமை இனங்கள் அழியும் நிலையில் செல்வதால் ஆமை இனத்தை காக்க வேண்டியது சமுதாயத்தின் அரசாங்கத்தின் கடமையாகும்.

டிஸ்கி:

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள்.இது எனக்கு நெடு நாள் புரியவில்லை.பாவம் அப்பாவி பிராணி வீட்டினுள் நுழைந்தால் என்ன கேடு என்று நினைப்பேன்.பிறகுதான் அறிந்து கொண்டேன்.ஆமை என்று அப்பாவி உயிரினமான ஆமையைக்குறிப்பிடவில்லை என்று.

ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,முதியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்படாது.சரிதானே?

ஆமை முயல் கதையை சிறியவயதில் படித்திருப்போம்.வேகமும் உறுதியும் உடையவர்களிடம் பொறுமையும், ஈடுபாடும் உள்ளவர்கள் தோற்றுவிடுவார்கள் என்ற கருத்துக்காக கூறுப்பட்ட கதையது.

கவிஞர் கண்ணதாசன் உள்ளத்தை ஆமையுடன் ஒப்பீடு செய்கிறார்.அதனையும் கொஞ்சம் கேட்டு ரசியுங்கள்.



அப்புறம் ஒன்று வழக்கம் போல் வரும் டவுட்டு.பருப்பு போட்டு செய்யும் வடையை ஆமை வடை என்கிறார்கள்.நான் சிறிய வயதில் ஆமைக்கு வடைபோட்டு பார்த்தேன் சாப்பிடவே இல்லை.வடையின் ஷேப்பும் ஆமை போல் இல்லை. கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் ஏன் ஆமை வடை என்று பெயர் வந்தது என்று புரிய வில்லை?புரிந்தவர்கள் சொல்லுங்களேன்.