தேனாம் பேட்டை எஸ் ஐ ஈ டி மகளிர் கல்லூரியில் இன்றும் நாளையும்
- charisma 14 திருவிழா நடை பெற்றுக்கொண்டுள்ளது.அங்கு ஒரு நெருங்கிய நட்பு ஸ்டால் அமைத்து இருப்பதால் காலையிலே ஆஜராகி விட்டேன்.
குவிந்து இருந்த கூட்டத்தையும் இளசுகளின் உற்சாக ஆராவாரத்தையும் பார்க்கும் பொழுது அது நமக்கும் தொற்றிக்கொண்டு விட்டது
டீன்ஸ்கள் முதல் ஆண்ட்டிகள் வரை பயன்படுத்தக்கூடிய ஆடை அலங்கார அணிகலன்கள் வகை வகையாக டிஸ்ப்ளே செய்யப்பட்டு கண்களையும் மனதையும் கவர்ந்து பர்ஸை பதம் பார்த்துக்கொண்டிருந்தன.சேலைகள் சுடிதார்கள் குர்தீஸ் லெகின்ஸ் பர்தா ஷால்கள் துப்பட்டாக்கள் என வித விதமாக கண்காட்சியில் இருந்து கண்களை கவர்ந்திழுத்தன.
ஆடிட்டோரியத்தில் பலவித கலை நிகழ்ச்சிகள் களைகட்டிக்கொண்டிருந்தன.அங்கிருந்து எழுந்து செல்ல மனதில்லாமல் தோழியின் அழைப்பை ஏற்று ஸ்டால்கள் அமைந்திருந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
எதிர் புறமாக அத்தனையும் சாப்பாட்டுக்கடைகள்.வழக்கம் போல் பலாபழத்தில் ஈ மொய்த்தது போல் மொய்த்துக்கொண்டிருந்தனர்.சிக்கன் வகைகள் கபாப் வகைகள் ரைஸ் ஐட்டங்கள் சாட் ஐட்டங்கள் ஐஸ் க்ரீம் கூல் டிரிங்ஸ் டீ காஃபி வடை கட்லட் சமோசா ரோல் சைனீஸ் ஐட்டங்கள் என்று மக்கள் கஞ்சத்தனம் பார்க்காமல் வக்கணையாக வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்ததைப்பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு நாமும் ஒரு சாப்பாட்டு ஸ்டாலை போட்டு சல்லிசா சல்லி அள்ளலாமே என்ற ஆர்வம் தலை தூக்கியதை மறுப்பதுக்கில்லை.
வீட்டுபயோகப்பொருட்கள்,கைவிணைப்பொருட்கள்,அலங்காரப்பொருட்கள் என்று விதம் விதமாக அடுக்கி வைப்பட்டு இருந்தன.
ஒரு இளம் தாய் தன் குழந்தையை அருகில் படுக்க வைத்துக்கொண்டு மிஷின் போல் நிமிடத்தில் பாசி மாலைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.கைகள் மணிமாலைகளை கோர்த்துக்கொண்டும் வியாபாரமும் நடத்திக்கொண்டும் இருந்த பொழுது கிளிக் செய்தேன்.புகைப்படம் எடுக்கட்டுமா என்று கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் ஓப்புக்கொண்டார்.அத்தனையும் அவரது சொந்த தயாரிப்புக்கள்.
க்வில்லிங்கில் அணிகலன்கள்.பார்க்கவே அழகாக இருந்தன.இரு தோழியர் சேர்ந்து கடையை நடத்துகின்றனர் போலும்.முதலாமவர் மட்டும் பொழுது இருந்த பொழுது அவரது அனுமதி பெற்று இரண்டு படங்களை க்ளிக் செய்து விட்டேன்.மூன்றாவதாக க்ளிக் செய்த பொழுது இன்னொரு நண்பி வந்து தடுத்து விட்டார்.எங்களைப்பார்த்து காப்பி அடித்து விறபனைக்கு வைத்துவிடுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.தயவு செய்து படம் எடுக்காதீங்க என்று ரொம்ப தாராள மனதுடன் கூறும் பொழுது நமது வலை உலகத்தோழி க்வில்லிங் குயீன் ஏஞ்சலின் கை வண்ணத்தில் மலர்ந்து வலைப்பூவில் மணக்கும் வகை வகையான க்வில்லிங் வேலைப்பாடுகள் நினைவுக்கு வந்தன.
இதுவும் க்வில்லிங் அணிகலன்கள்தான்.
மாலைகள் மோதிரங்கள் என்று பலவும் டிஸ்ப்ளேயில் வைத்து இருந்தார்.
இவைகளும் அவரது தயாரிப்பில் உருவானவை.
Tweet |