April 5, 2010

மலர்&காய்கனி கண்காட்சி - கத்தார்

கத்தார் ஃபெர்டிலைச‌ர் நிறுவனத்தினர்(QAFCO )கத்தார் நாட்டில் உள்ள உம்மு சைத் என்ற இடத்தில் மலர்.காய்கனி கண்காட்சி கடந்த வெள்ளி அன்று நடத்தினர்.எங்கு பார்த்தாலும் இந்திய முகம் குறிப்பாக தமிழ் முகங்கள்.ஆவலுடன் உள்ளே நுழைந்தால் வதங்கிய காய்கள்,மலர்கள் நம்மை அழுது வடித்து வர‌வேற்கின்றன."த்சோ..ஹைப்பர் மார்க்கெட்டில் கூட இதைவிட அழகா,பசேலென்று இருக்குமே.இந்தியாவில் எப்படிப்பட்ட மலர்கண்காட்சிகளை பார்த்து இருக்கிறோம்இதற்கா இவ்வளவு தூரம் வந்தோம்((நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஷோ நடந்தது சுமார் 60 கிலோ மீட்டர் தூரம்.இடம் தெரியாமல் சுற்றி அலைந்தது சுமார் 10 கிலோ மீட்டர் தூரம்)"என்ற வந்த ஏமாற்றத்தை புறந்தள்ளி விட்டு கூட்டத்தைக்கடந்து உள்ளே நுழைந்ததும் இந்த காய்வண்டிதான் நம்மைப்பார்த்து சிரித்தது
ஹை...தக்காளி..நம்ம சகோதரர்கள் மங்குனியும்,ஜெய்லானியும் ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றி இந்த காயின் பெயரை சொல்லிக்கொள்வார்களே!
இந்த மலர்களும் மெல்ல சிரித்து உள்ளே வந்து முழுக்க பார்த்துட்டு அப்புறம் உங்கள் அபிப்ராயத்தை சொல்லுங்க என்பது போல் தலையை அசைத்தது.
சூரியகாந்திப்பூகளைப்பர்த்ததும் மனதில் உற்சாகம் ஆரம்பமாகி விட்டது.
தர்பூஸ் பழத்தை செதுக்கி மற்ற காய்கனிகளை வைத்து அலங்காரம் செய்து இருந்ததைப்பார்க்க புருவங்கள் மேல் எழும்பின.எனக்கு மட்டுமல்ல.(புல் வெளியில் சிகப்பு நிற பட்டுப்பூச்சி(இதனை எப்படி நீங்கள் சொல்லுவீர்கள்)சிறு பிராயத்தில் மழைக்காலங்களில் வரும் இந்த மெத்தென்ற பூச்சை உள்ளங்கையில் வைத்து ஓடும் பொழுது கைகள் குறுகுறுக்கும்.சிலிர்த்து குழந்தைகள் மகிழ்வார்கள்.அந்த ஞாபகம் வந்து விட்டது).
கடுகு,மற்றும் பருப்பு வகைகளை வைத்து இந்த வாத்து.அதிரா பாஷையில் "தாரா" தாரா..தாரா..வந்தாரா..சங்கதி ஏதும் சொன்னாரா என்று பாட வைத்த‌து.இதன் அழகில் ரொம்ப நேரம் அங்கேயே நின்று விட்டேன்.பின்னால் கேமராவை வைத்துக்கொண்டு காத்திருக்கும் ஒருவரின்"எக்ஸ்க்யூஸ்மி"காதில் விழும் வரை.
தர்பூஸ்,திராட்சை,ஆரஞ்சு,கிவி போன்ற பழங்களை வைத்து செய்த‌ இந்த அழகு சிற்பத்தைப்பாருங்கள்.
தர்பூஸில் செய்த கார்விங்.நல்லா இருக்கு இல்லே.மங்குனி ஐயா அப்படியே எடுத்து சாப்பிடுங்க‌.
பாஸ்தா மற்றும் ரெட் பீன்ஸில் செய்யப்பட்ட கோபுரம்.உங்களுக்கு வேறு மாதிரி தெரிந்தால் சொல்லுங்கள்.(ஜலி..பாஸ்தாவை காட்டியாச்சு.பாஸ்தாவில் ஏதாவது குறிப்பு போடுங்கோ)
உருளைக்கிழங்கு,மற்றும் இஞ்சியினால் உருவாக்கப்பட்ட அரேபிய சாது விலங்கு.பல கோணரத்தில் கிளிக் செய்தேன்.(உருளைக்கிழங்கில் மசால் தோசை போடலாம ஆசியா)
சாக்லேட்டினால் ஆன மந்தியார்.முறைக்குது இல்லே.அதிரா, குரங்கை சாப்பிடலாமா?
இதென்னன்னு பார்க்கறீங்களா?நம்புங்க.பட்டர் கார்விங்.அத்தனை தத்ரூபமாக செதுக்கி இருந்தவர் கைக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.யார் என்று தெரியலியே?மிகவும் அழகான சிற்பம்.இதே போல் வெண்ணெய் கொண்டு மூன்று சிற்பங்கள் இருந்தன.அத்தனையும் அழகு.
வேறொண்ணுமில்லே.ஐஸ் கார்விங்.நேரில் பார்க்கும் பொழுது இதை விட நன்றாக இருந்தது.




49 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு...
நான்தான் பஸ்ட்டு...

சீமான்கனி said...

அத்தனையும் அருமை ...நல்ல பகிர்வு...கிளிக்குகள் அழகு கலக்குங்கள்...நான்தான் பஸ்ட்டு...

ப்ரியமுடன் வசந்த் said...

ஆவ்வ்வ்வ்....அக்கா கத்தாருல இருக்காங்க மீ த எஸ்கேப்பு....

ஜெய்லானி said...

ஸாதிகாக்காவ் போட்டோ எல்லாம் சூப்பரா இருக்கு. பொருமையா அழகா எடுத்திருக்கீங்க!! (Fuji Finepix z2)

Chitra said...

Verrry nice photos............!!!
Thank you for sharing them with us through your blog post. :-)

athira said...

ஸாதிகா அக்கா சூப்பர்ர்ர்ர்ர். நான் கண்காட்சியைச் சொன்னேன். அயகா போட்டோ எடுத்து கலக்கிட்டீங்க.... தாராவுக்குப் பக்கத்தில நீங்களும் நின்று ஒரு ஷொட் எடுத்திருக்கலாமே ஸாதிகா அக்கா.... அதிராவோடு நின்று படமெடுத்த பீலிங்ஸ்சாவது கிடைத்திருக்கும்.... இட்ஸ் ஓக்கை முறைக்காதீங்கோ..

அதென்ன கதையோடு கதையாக.. அதிரா குரங்கு என்றெல்லாம் காதில விழுந்துது...:), இது நமக்குள்ளேயே இருக்கட்டும் ஸாதிகா அக்கா:)... நல்லவேளை ஜெய்..லானி அதைக் கவனிக்கவில்லைப்போலும்... அப்பாடா தப்பிட்டேன்....

சும்மா இருக்கிற ஜலீலாக்கா, ஆசியாவை உசுப்பி விட்டுவிட்டீங்கள், பாருங்கோ நாளைக்கே குறிப்புப் போடப்போகிறார்கள்...கடவுளே.. அதிராவைக் காப்பாத்து.

ஹைஷ் அண்ணனின் புரூட்ஸ் கார்வெஸ்ட் படங்கள் பார்த்து, நேரில் பார்த்தால் எப்படியிருக்கும் என ஆசைப்பட்டேன், நீங்கள் நேரில் பார்த்துவிட்டீங்கள்.... கெதியா ஊருக்கு வாங்கோ ஸாதிகா அக்கா... நிறையப் “புறுணம்” சொல்ல இருக்கு.

Anonymous said...

amazing talents.nice clicks.

Asiya Omar said...

very interesting.ஸாதிகா அந்த தற்பூசணி மட்டும் போதும் எனக்கு,அது அப்படியே என் மனதை கொள்ளைகொண்டு விட்டது.

நாஸியா said...

ஐ! சூப்பரா இருக்கே!!

பட்டர் கார்விங் சூப்பர்..

நீங்க சொல்லும் அந்த சிகப்பு நிற பட்டுப்பூச்சி... ஐ எனக்கு நினைவு வந்துட்டு!! நானு ஹாஸ்டலில் இருக்கும்போது பார்த்திருக்கேன்னு நினைக்குறேன்..

மங்குனி அமைச்சர் said...

//தர்பூஸில் செய்த கார்விங்.நல்லா இருக்கு இல்லே.மங்குனி ஐயா அப்படியே எடுத்து சாப்பிடுங்க‌//

அப்படியே சாப்பிட்டேன் , ரொம்ப நன்றி மேடம்,

//சாக்லேட்டினால் ஆன ஜெயலானி.முறைக்குது இல்லே. அதிரா குரங்கை சாப்பிடலாமா?//

ஹெலோ மேடம் ஜெயலானிய இப்படியெல்லாம் அசிங்க படுத்த கூடாது , அப்புறம் அப்படியே சாபிடாதிக , நல்லா உப்புபோட்டு வேகவச்சு அப்புறம் பிறை பண்ணிசாப்பிடுங்க

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இரண்டு பாஸ்டா குறிப்பு ரெடி பண்ணிட்டு இங்கு வந்து பார்த்தா பாஸ்தா, எப்பூடி நம்ம இரண்டு ப்பேருக்கும் கனெக்ஷன்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இரண்டு பாஸ்டா குறிப்பு ரெடி பண்ணிட்டு இங்கு வந்து பார்த்தா பாஸ்தா, எப்பூடி நம்ம இரண்டு ப்பேருக்கும் கனெக்ஷன்.

அதென்னா எங்கு யார் போனாலும் அதிராவிற்காக அன்னம் வந்து விடுகீறது.

நானும் லீவில் பிள்ளைகளுடன் ஜூ சென்றிருந்தேன் , அங்கும் அன்னம் தான் உட்னே அதிராவிற்காக படம் எடுத்தாச்சு. ஆனால் பதிவு போட் தான் முடியல.

அட அங்கே தக்காளியா மங்கு தான் கொசு லேகியத்த சாப்பிட முடியாம தவிக்கிறார், உடனே ஜெய்லானி கொசு லேகிய்தத தக்காளிக்குள் ஒளித்து வைத்து சாப்பிட வைப்பார்.


தர்பூஸ் முழுவதும் மங்குவுக்கா, இது நான் ஒத்துக்க முடியாது.

Jaleela Kamal said...

வெண்ணை கார்விங் ரொம்ப சூப்பர்.

பித்தனின் வாக்கு said...

// ஹெலோ மேடம் ஜெயலானிய இப்படியெல்லாம் அசிங்க படுத்த கூடாது , அப்புறம் அப்படியே சாபிடாதிக , நல்லா உப்புபோட்டு வேகவச்சு அப்புறம் பிறை பண்ணிசாப்பிடுங்க //

மேடம் மசாலா தடவ மறந்துறாதிங்க. நல்ல அழகான பதிவு, நல்ல படங்கள். நன்றி ஸாதிகா. அந்தப் பூச்சிகளைகளை நாங்கள் தீப்பெட்டி பாக்ஸில் வைத்து விளையாடுவேம். சிவப்பு வண்ண கரும் புள்ளிகள் உடைய கிறு,கிறு என ஒலியெழுப்பும்.

அன்புத்தோழன் said...

ஏங்க.... இதுக்கா இம்புட்டு பீல் பண்ணீங்க... 70 கி.மி போனதுக்கு இது வொர்த் தானே...? படங்கள் அருமையா இருக்கு.... பலரின் திறமைகளின் ஒட்டுமொத்த குவியல்... பகிர்வுக்கு நன்றி....

SUFFIX said...

எல்லா படங்களும் அருமை, குறிப்பாக வாத்து, புல்வெளி படங்கள் நல்லா இருக்கு, இதயெல்லாம் பார்த்துட்டு நீங்க ஏதாச்சும் முயற்சி செய்து பார்த்திங்களாக்கா?...க்க்கும்:)

ஜெய்லானி said...

//athira said...அதென்ன கதையோடு கதையாக.. அதிரா குரங்கு என்றெல்லாம் காதில விழுந்துது...:), இது நமக்குள்ளேயே இருக்கட்டும் ஸாதிகா அக்கா:)... நல்லவேளை ஜெய்..லானி அதைக் கவனிக்கவில்லைப்போலும்... அப்பாடா தப்பிட்டேன்...//

உங்களை பாக்க 60 கிலோ மீட்டர் கஷடப்பட்டு போய் இருக்காங்க நான் இப்படியெலாம் கிண்டல் பண்ணுவேனா ? நான் அவ்வளவு மனசாட்சி இல்லாத ஆளா என்ன !!

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...

ஹெலோ மேடம் ஜெயலானிய இப்படியெல்லாம் அசிங்க படுத்த கூடாது , அப்புறம் அப்படியே சாபிடாதிக , நல்லா உப்புபோட்டு வேகவச்சு அப்புறம் பிறை பண்ணிசாப்பிடுங்க//

// பித்தனின் வாக்கு said...மேடம் மசாலா தடவ மறந்துறாதிங்க. //

அடப்பாவிங்களா!! விட்டா நீங்களே பிடிச்சி என்னை நரபலி குடுத்துடுவீங்க போலிருக்குதே!! ஜெய்லானி ,,,,உஷார் இல்லாட்டி மண்டையிலேயே தேங்காய் உடச்சிடுவாங்னுங்க!!!

Ahamed irshad said...

நானும் இந்த மலர் கண்காட்சிக்கு வந்திருந்தேன். உம்- சயீதில் நடந்தது. பரிசளிப்பு விழாவை பார்க்க இயலவில்லை.. நீங்கள் பார்த்தீங்களா...

ஹுஸைனம்மா said...

கண்காட்சின்னு காய்கறி, பழங்களை திறந்து வைத்தால், வாடித்தானே போகும். இருந்தாலும் கார்விங்க்ஸ் அழகு. இமா பார்த்தால் உடனே செய்துவிடுவார்.

/பாஸ்தா மற்றும் ரெட் பீன்ஸில் செய்யப்பட்ட கோபுரம்/

இந்தக் கோபுரம் வேறு எதனாலோ செய்யப்பட்டு, அதன்மேல் பாஸ்தா, ரெட் பீன்ஸை ஒட்டி வைத்திருக்கா மாதிரி இருக்கு, அப்படியாக்கா? அதே போலத்தானா வாத்தும்?

ஹுஸைனம்மா said...

கத்தார்ல நீங்க இருக்க ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுதுச்சு போல!! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, உடனே ஒரு பதிவர் சந்திப்பு நடத்துங்க!!

ஹுஸைனம்மா said...

அதுசரி, நீங்க ஏன் ரகசியமா கத்தார் போனீங்க, படம் எதுவும் வரைஞ்சீங்களா? ;-))

அப்புறம் ’அவரை’ப் பாத்தீங்களா? கத்தார் குடியுரிமை கிடைக்கிறது அவ்வளவு ஈஸியாமா?

SUFFIX said...

//ஹுஸைனம்மா said...
அதுசரி, நீங்க ஏன் ரகசியமா கத்தார் போனீங்க, படம் எதுவும் வரைஞ்சீங்களா? ;-))

அப்புறம் ’அவரை’ப் பாத்தீங்களா? கத்தார் குடியுரிமை கிடைக்கிறது அவ்வளவு ஈஸியாமா?//

ட்ரேசிங்க் பேப்பர் இல்லாம முதல்ல ஒழுங்கா படம் வரையக் கத்துக்கிட்டு அப்புறமா அப்ளை பண்ணுங்க!!

ப்ரியமுடன் வசந்த் said...

ஹூசைனம்மா காத்தாரில் ஃபேமிலி விசா வாங்குவதற்க்கு மாதம் 7000 ரியால் சேலரி சர்டிஃபிகேட் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் எளிதாக ஃபேமிலி விசா வாங்கி விடலாம்...ஒரு மாததிற்குள்ளாகவே...

ஆனால் மாதம் 7000 ரியால் சேலரி வாங்குபவர்களுக்கு ஹவுஸ் ரெண்ட் 3000 ரியால் செலவாகும் மாதம்....குடும்ப செலவு 2000 ரியால் ஆகும் மீதம் 2000 ரியால் சேமிக்கலாம் ....

ரொம்பவும் காஸ்ட்லி சிட்டி தோஹா...

ஹுஸைனம்மா said...

வசந்த் தம்பி, நான் சொன்னது “சிட்டிஸன்ஷிப்”, அதான் எம்.எஃப்.ஹுஸைன் வாங்கிருக்காரே, அது!!

//ஹவுஸ் ரெண்ட் 3000 ரியால் செலவாகும் மாதம்....குடும்ப செலவு 2000 ரியால்//

அபுதாபிய ஒப்பிடும்போது, இது கொஞ்சம் சீப்பாத்தான் தெரியுது!! ;-)) இப்ப நல்லதா ஒரு தனி ஃப்ளாட் வேணும்னா, மாசம் குறைஞ்சது 5000 திர்ஹம் வேணும். ஷேரிங்லதான் (ரெண்டுமூணு குடும்பம் ஒரே வீட்டில்) 3000 திர்ஹம்!!

Menaga Sathia said...

எல்லா போட்டோஸ்களும் கொள்ளை அழுகு.எனக்கு ரொம்ப பிடித்த போட்டோ வெண்ணெய் மற்றும் தர்பூஸ் கார்விங் தான்...

ஸாதிகா said...

தம்பி சீமான்கனி,ஆமாமாம்..நீங்கதான் பஸ்ட்டு..நீங்கதான் பஸ்ட்டூடூடூ.கருத்துக்கு மிக்க நன்றி.

ஏனுங்கோ தம்பி வசந்து...என்னியைப்பார்த்து என்ன அப்படி பயம்.இப்படி பின்னங்கால் பிடரியில் அடிக்க இப்படி ஓடுறீக..?கருத்துக்கு நன்றி.

தம்பி ஜெய்லானி,அட..எப்படீங்க கரெக்டா கண்டு பிடிச்சீங்க.(Fuji Finepix z2)
மந்திரம்,கிந்திரம் வச்சிருக்கீங்களா?அடுத்த பதிவு வேறு கேமராவில் எடுத்து படம் காட்டுகிறேன்.அப்பவும் கண்டு பிடிங்கோ.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சித்ரா,நீங்களும் உங்கள் கருத்தைப்பறிமாறிக்கொண்டத்தில்மகிழ்ச்சி.நன்றி.

அதிரா தாராவுக்கு பக்கத்திலே நான் நிற்கின்றேனே..நல்லா பூஸ்கண்ணை அழுத்திப்பாருங்கோ.ஜெய்லானி அவர் பாட்டுக்கு சும்மா இருந்தார்.நீங்க சும்மா இருந்த சங்கை ஊதிகெடுத்த கதையாச்சு.தோ ..ஜெய்...லானி வந்துட்டார்.சென்னையில் நடக்கும் கண்காட்சியை வந்து பாருங்கள்.அசந்து போவீர்கள்.

அம்மு கருத்துக்கு மிக்க நன்றி.

Vijiskitchencreations said...

ஸாதிகா வாங்க நிறய்ய பிக்ஸர்ஸ் எல்லாம் எடுத்து போடுங்க.
எனக்கு ரொம்ப பிடித்தது. பட்டர் ஹார்விங். இங்கும் இது போல் கன்காட்சி நடக்கும். அடுத்த முறை போக ட்ரை செய்கிறேன்.விண்டரில்
ஐஸ் ஹார்விங்க் இங்கு சூப்பரா இருக்கும். என்னிடம் கொஞ்சம் பிக்ஸர்ஸ் இருக்கும் விரைவில் போடுகிறேன்.
உண்மையிலேயே ஜஸ் ஹார்விங் நேரிலே பார்க்க ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். ஆனால் பாதுகாத்து வைப்பதிலே தான் இருக்கு. வாவ் எல்லா பிக்ஸர்ஸும் அருமை.

ஸாதிகா said...

ஆசியா,தர்பூஸ்தான் பிடித்து இருந்ததா?பட்டர் கார்விங் பிடிக்கலியா?எனக்கு அதுதான் மிகவும் பிடித்து இருந்தது.

நாஸியா,நலமா?ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.வீட்டில் தூங்கி,தூங்கி எழறீங்களா?உங்க\ள் வலைப்பூவிற்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறேன்.விரைவில் புது பதிவு போடுங்கள்.கருத்துக்கு நன்றி
\
முழு தர்பூஸையும் சாப்பிட்டு விட்டு மங்குனி ஐயா வீராவேசத்துடன் முழங்கும் முழக்கத்திப்பாரு.நீங்கள் சொல்வதைப்போல் அவித்து சாப்பிட்டால் அப்புறம் உங்களுடன் மல்லுக்கட்ட ஆளே இருக்காதே?பிழைத்துப்போகட்டும்.

ஸாதிகா said...

அட..ஜலி பாஸ்தா ரெடியா?போடுங்கோ..போடுங்கோ..மங்குனி தர்பூஸ்முழுதையும் சப்பிட்டாச்சு,இப்பவந்து ஒத்துக்க முடியாது என்றால்.?வேண்டுமென்றால் பட்டரை எடுத்துக்குங்க.கேக் செய்து அட்டகாசம் பண்ணுங்க.

என்ன சுதாகர்சார்.மங்குனியோடு நீங்களும் சேர்ந்து மசாலா சேர்க்க சொல்லுறீங்க?வேண்டும் வேண்டும் எங்களுக்கெல்லாம் மங்குனி&ஜெய்லானி கூட்டயின் அட்டகாச,அதிரடியான,சிரிக்கவைக்கும் பின்னூட்டங்கள்.நீங்களும் அப்ப பட்டு பூச்சியைப்பார்த்து இருக்கீங்களா?இப்பதான் ஞாபகத்திற்கு வருது.நாங்களும் காலி தீப்பெட்டிக்குள் வைத்து வளர்ப்போம்.இப்ப அந்த இனமே அழைந்து விட்டதோ?கருத்துக்கு நன்றி.

அன்புத்தோழன்,கருத்துக்கு நன்றி.உண்மைதான்.முதலில் அப்படி நினைத்தேன்.உள்ளே முழுக்க பார்த்து விட்டு அந்த எண்ணம் மறைந்து விட்டது.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ஷஃபி.///இதயெல்லாம் பார்த்துட்டு நீங்க ஏதாச்சும் முயற்சி செய்து பார்த்திங்களாக்கா?///முயற்சியா?சென்னையில் எங்கள் வீட்டிற்கு நாண்கு வீடு தள்ளி இந்த கார்விங்க் கிளாஸ் புதியதாக ஆரம்பித்து இருக்கின்றார்கள்.சரி நாமும் போய் கற்றுக்கொள்ளுவோமே என்று போனால் 1 வாரம் முதல் 1 மாதம் வரை கற்றுத்தர 7000 முதல் 35000 வரை பீஸ் கேட்கின்றார்கள்.ஃபுரபஷனல் ஆக செய்பவர்களுக்குத்தான் இது சரி என்று எஸ்கேப் ஆகி விட்டென்.

//உங்களை பாக்க 60 கிலோ மீட்டர் கஷடப்பட்டு போய் இருக்காங்க நான் இப்படியெலாம் கிண்டல் பண்ணுவேனா ? நான் அவ்வளவு மனசாட்சி இல்லாத ஆளா //அதிரா பெரிய டிஷ்யூ பாக்ஸனுப்பிவைக்கறேன் .வாங்கிக்குங்க.ஜெய்லானி ஆனாலும்...இருங்க அதிரா வந்து உங்களுக்கு சரியான பதிலடி தருவாங்க(ஹப்பா,,பதிலுக்கு பதில் கொளுத்திப்போட்டாசு..இல்லே..அதிராமா...?)ஜெய்லானி..உஷாராகிட்டார்.ஆனாலும் யாரும் விடுவாதக இல்லை.

கருத்துக்கு நன்றி அஹ்மது இர்ஷாத்.பரிசளிப்பு விழாவை நாங்கள் பார்க்கவில்லை.மேடையை ரெடி செய்து கொண்டு,கப்புகளை அடுக்கிவைத்துக்கொண்டு இருந்தனர்.எங்களை ஆசுவாசபடுத்திக்கொள்ள சற்று நேரம் முன் இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருந்த பொழுது ஒரு அரபி இது வி ஐ பி சீட் என்றார்.என்னுடன் கூடவந்த என் உடன் பிறப்பு நாங்களும் வி ஐ பிதான் என்று ஜோக் அடித்து விட்டு வந்தார்.அங்கிருத்து எழும்வரை முன்னிருக்கையை விட்டு எழவில்லை போங்கள்

மனோ சாமிநாதன் said...

ஸாதிகா!

கத்தாரில் நன்கு சுற்றிப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்களென்பதை இதைப்படித்துப் பார்த்து தெரிந்து கொண்டேன். எல்லா அனுபவங்களும் உங்களை மகிழ்விக்குமென நினைக்கிறேன். எப்போது துபாய் வருகை?

செந்தமிழ் செல்வி said...

ஸ்னேகிதி ஸாதிகா,
பயணம் முடிந்ததா? இனிதானா?
நல்லா ஜாலியா பொழுது போகுது போல். போட்டோஸ் ரொம்ம்ப அழகா இருக்கு.
இன்னும் பார்க்கும் எல்லாவற்றையும் எங்கள் பார்வைக்கும் வையுங்கள்.

ஸாதிகா said...

நீங்கள் சொல்வது உண்மைதான் ஹுசைனம்மா.குரங்கு,வாத்து எல்லாமே முழுக்க,முழுக்க அந்தந்த பொருட்களால் செய்யப்பட்டவை இல்லை.
//கத்தார்ல நீங்க இருக்க ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுதுச்சு போல!!//இதிலே என்ன ரகசியம் இருக்கு.கிளம்ப ரெடி ஆகிவிட்ட உடன் உங்களுக்கு சொல்லிட்டேனே.
கத்தார் குடிஉரிமை கிடைப்பது ஈசியா என்பதெல்லாம் தெரியாது.ஹுசைனுக்கு கொடுத்தது போல் சிட்டிசன் கொடுத்து ஒரு நல்ல வேலையும் ஐந்து இலக்க கத்தார் ரியாலில் சம்பளமும் தந்தால் நானும் இங்கேயே குடியேறி விடுவேன்.ஹி..ஹி..ஹி..

//ட்ரேசிங்க் பேப்பர் இல்லாம முதல்ல ஒழுங்கா படம் வரையக் கத்துக்கிட்டு அப்புறமா அப்ளை பண்ணுங்க!//நல்லா கேட்டீங்க ஷஃபி தம்பி.

உண்மைதான் வசந்த்.தோஹா காஸ்ட்லியான சிட்டிதான்.(EZDAN) ஹோட்டலுக்கு பக்கத்தில் முப்பது மாடி கட்டிடத்திற்கு போனோம்.அங்கே மூன்று படுக்கை அறைகளுடன் ஃபர்னிஷ் செய்த பிளாட்டுகள் நட்சத்திர அந்தஸ்த்துடன் ஜொலித்தது.வாடகையைக்கேட்டால் மயக்கமே வந்து விட்டது.17000 கத்தார் ரியால்.அங்கேயே நாண்கு படுக்கை அறை கொண்ட டியுபிளக்ஸ் அபார்ட்மேன்ட்டும் உள்ளது.அது எவ்வளவு இருக்கும் என்று கணக்குப்பார்த்துக்கொள்ளுங்கள்.

ஸாதிகா said...

மேனகா,கருத்துக்கு நன்றி.புரஃபைல் போட்டோவில் ஷிவானியா?சுற்றிப்போடுங்கள்.

விஜி பதிவு போட ஏகப்பட்ட விஷயங்கள்.அழகழகு இடங்கள்.முடிந்த பொழுது போடுகிறேன்.

மனோ அக்கா,கருத்துக்கு மகிழ்ச்சி.அங்கு வந்தால் சார்ஜாவில்தான் தங்குவேன்.அப்படி வந்தால் கண்டிப்பாக போன் செய்கின்றேன்.

athira said...

//உங்களை பாக்க 60 கிலோ மீட்டர் கஷடப்பட்டு போய் இருக்காங்க நான் இப்படியெலாம் கிண்டல் பண்ணுவேனா ? நான் அவ்வளவு மனசாட்சி இல்லாத ஆளா என்ன !!/// அதுதானே ஸாதிகா அக்கா, ஜெய்..லானி எவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறார்.... பார்த்துவிட்டும் பார்க்காதமாதிரிப் போகிறார்...இந்த எம்பிதான் மீண்டும் கொப்பி + பேஸ்ட் செய்து போட்டுக்கொடுத்திட்டார்:), சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ். ஸாதிகா அக்கா நான் இப்பவும் கட்டிலுக்குக் கீழேதான் என்பதனை வெளியே சொல்லிடாதீங்கோ.... உள்ளே தள்ளிடுவார்கள்..அமைச்சரெல்லோ... இருப்பினும் அமைச்சரின் முகப்பிலே ஒரு கவிதை.... எங்கேயோ அதைப் பார்த்திருக்கிறேனே:).... ஆங்.... ஞாபகம் வரல்லே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

சொக்கலேட்டினாலான அந்த அழகிய உருவத்துக்கு ஏதோ ஒரு பெயர் சொல்லியிருக்கிறார்களே... மேலே... ஆ..... ஞாபகம் வரல்லே பெயர், இட்ஸ் ஓக்கை அதுவும் போகட்டும்..

ஸாதிகா அக்கா...///மசாலா தடவ மறந்துறாதிங்க. //
ஒருவேளை மறந்திடுவீங்களோ என மீண்டும் ஞாபகப் படுத்தினேன்... மறந்திடாதீங்க... நல்லாஆஆஆஆஆஆஆஆஆ தடவி.... ஊஊஊஊஊஊஊறவச்சிட்டு அப்புறமாஆஆஆஆஆஆஆ ஓக்கை???? அப்பாடா இப்பத்தான் என் சூடு கொஞ்சம் ஆறியிருக்கு...கிக்...கிக்..கீஈஈஈஈஈ

prabhadamu said...

ஸாதிகா அக்கா சூப்பர். மனதை கொள்ளைகொண்டு விட்டது.

அன்புடன் மலிக்கா said...

ஸாதிக்காக்கா. போட்டோஸெல்லாம் சூப்பரப்பூ..

அதுசரி யாரந்த குரங்கு அய் சொன்னா அடிப்பீங்க..

ஜெய்லானி said...

// athira said...சொக்கலேட்டினாலான அந்த அழகிய உருவத்துக்கு ஏதோ ஒரு பெயர் சொல்லியிருக்கிறார்களே... மேலே... ஆ..... ஞாபகம் வரல்லே //

அச்சச்சோ !! உங்க பேரே ஞாபகத்துக்கு வரலியா ? கையில் பச்சை குத்தி வச்சுகோங்க ஐயோ பாவம் !!

// அப்பாடா இப்பத்தான் என் சூடு கொஞ்சம் ஆறியிருக்கு..//

ஹா..ஹா..நாங்கலெல்லாம் கொஞ்சம் ஆறினதும் தான் திரும்ப கொதிக்க வைக்கிறது. இப்ப ரிலாக்ஸ் அடுத்த கமெண்ட்ட பாருங்க!!

ஜெய்லானி said...

//அன்புடன் மலிக்கா said...

ஸாதிக்காக்கா. போட்டோஸெல்லாம் சூப்பரப்பூ..

அதுசரி யாரந்த குரங்கு அய் சொன்னா அடிப்பீங்க..//


மலீக்காக்காவ்!!, ஏங்க அடிக்க போறாங்க , அதான் பேரையே போட்டுட்டாங்களே . அதுக்கு பயந்துகிட்டுதான் அவங்க இன்னும் கட்டிலுக்கு அடியிலேயே ஓளிஞ்சிகிட்டு வெளியே வரலை( இப்ப வெளியே வர வச்சிட்டோமுல்ல )

ஸாதிகா said...

ஸ்நேகிதி செல்வி,நீண்ட இடைவேளைக்குப்பிறகு தரிசனம்!!!!பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது.தொடர்ந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்/கருத்துக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

அத்தனையும் அருமை. போட்டோக்கள் நல்ல தெளிவாகவும் ரசிக்கும்படியும் எடுக்கப்பட்டுள்ளது அருமை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கண்காட்சி.., வாவ் வாவ் எவ்வளோ அழகாக உள்ளது கண்காட்சி. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.

ஸாதிகா உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸாதிகா said...

பிரபாதாமு உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

போட்டோ சூப்பர் என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.அது சாக்லேட்டினால் செய்யப்பட்ட குரங்கு.

ஜெய்லானி எங்கட அதிரா இருக்க்ற ஊரிலே குளிர் ஜாஸ்தி.அதான் கட்டிலுக்கு கீழே இருக்கிறார்.மற்றபடி உங்களுக்கெல்லாம் பயந்து இருக்கிறதா நினைக்காதீங்க.

அக்பர் கருத்துக்கு மிக்க நன்றி.\\

ஸ்டார்ஜன்,உங்கள் கருத்துக்கு நன்றி.விருதுகளும்,தொடர் பதிவுகளும் பதிவர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தினையும்,பதிவுலகில் சுறுசுறுப்பையும் கொடுப்பது உண்மை.நன்றி.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

சசிகுமார் said...

நல்ல வித்தியாசமான படங்கள் அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மின்மினி RS said...

அச்சசோ நாந்தான் லேட்டா.., சே.. சாரிக்கா.

அழகழகான படங்கள். கண்காட்சியில் உள்ளவை ரொம்ப அழகாக‌ இருக்கு., கண்டு ரசித்திருக்கீங்க..

இமா க்றிஸ் said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஸாதிகா. ;)

அதீஸ் ;)))

தாங்க்ஸ் ஹுசேன். ;)