April 1, 2010

கிரீடம்


அன்பை பலப்படுத்த அன்பளிப்புகளை கொடுத்து வாங்குங்கள் என்பது நபி மொழி.நான் பிளாக் ஆரம்பித்த இந்த ஏழுமாத காலத்திற்குள் இனிய நட்புகள்,நிறைய சகோதர,சகோதரிகள்,அவர்கள் தரும் ஊக்கங்கள் மட்டுமின்றி விருதுகள் தந்து,தொடர் பதிவுகளுக்கும் அழைத்து எழுத்துக்கு ஊக்கமெனும் டானிக்கை தந்து இருக்கின்றனர்.

ஆனால் நான் இதுவரை யாருக்குமே விருதும் தரவில்லை.தொடர்பதிவுகளுக்கும் அழைத்ததில்லை.காரணம் யாருக்கு கொடுக்கலாம்,யாரை அழைக்கலாம் என்று யோசிப்பதற்குள் எனக்கு அறிமுகமான எல்லா பதிவர்களுக்கும் பறிமாறப்பட்டு விடுகின்றது.

வாங்கி,வாங்கி வைத்துக்கொண்டு பேசாமல் இருப்பது முறை அல்லவே?அதனால் நானும் கொடுக்க விழைந்துள்ளேன்.

ம்ம்..யாருக்கு கொடுக்கலாம்?என்ன கொடுக்கலாம்.யோசிக்கயோசிக்க தலையினுள் இருக்கும் வெள்ளைப்பிரதேசம்(அதாங்க..ஏதோ எனக்குள் இருக்கும் சிறிய சைஸ் மூளை) டிரை ஆகிவிடுகின்றது.

சரி ..கொடுக்கலாம் என்று மனம் வைத்தாயிற்று.கொடுத்துடுறேன்.முதலில் ஜெண்டில் மேன் ஃபர்ஸ்ட்.(ஜெண்டில் வுமெண்களுக்கு ஸ்பெஷல் ஆக என் ஐம்பதாவது பதிவில் கொடுக்கறேன்(தாய்குலங்கள் அவசரப்பட்டு சபிச்சிடாதீங்க)

அரசவையில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் அரசருக்கு மட்டுமா கிரீடம் சொந்தம்?பதிவுலகில் கோலோச்சும் இவர்களுக்கும் கிரீடம் சொந்தம்தான்.எனவே இந்த அழகிய வைரகற்கள் பதிக்கபட்ட பிளாட்டினத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை சமர்ப்பிகின்றேன்.

1.சகோதரர் ஸ்டார்ஜன்(அமைதிப்புறாவாக பதிவிடுவிடுவதற்காக)

2.சகோதரர் ஜெய்லானி(சிந்திக்கத்தூண்டும் பதிவுகள் மட்டுமின்றி சிரிக்கவைக்கும் பின்னூட்டங்களுக்காக)

3.சகோதரர் ஜமால்(குறிஞ்சிப்பூவாக பதிவிட்டாலும் பதிவர்களுக்கு பின்னூட்டம் இட்டு பிற பதிவர்களின் வளர்ச்சிப்படிகளுக்கு நிற்கும் தூண்களில் ஒன்றாக இருப்பதற்காக)

4.சகோத‌ரர் ஷஃபி(அருமையான ஆக்கங்களை பகிர்ந்து கொண்டதோடு பதிவர்களுக்கு ஜமாலைப்போலவே ஊக்கம் தருவதற்காக)

5சகோதரர் .சீமான்கனி(தொடகட்டுரை,தொடர் கதை போன்று தொடர் கவிதை தந்து கன்னித்தீவு சிந்துபாத் ஆகிக்கொண்டிருப்பதற்காக)

6.சகோதரர் எஸ்.சரவணக்குமார்(மொக்கை,கவுஜை,கலக்கல்,கவிழ்த்தல் என பதிவுலகம் உற்சாக நடைபோடும் வேலையில் தனக்கே உரிய பாணியில் அமைதியாக பதிவிட்டு,பதிலிட்டு வருவதற்காக)

7.சகோதரர் ஷாஜஹான் என்ற மங்குனி அமைச்சர்(மனம் கனத்தால் தியானம் புத்தகம்,இசை,மழலை என்று
இருந்தது போக இவரது இடுகைகளையும்,பின்னூட்டங்களையும் பார்த்து மனங்கள் இலேசாகிப்போவதற்காக)

8.சகோதரர் ஹைஷ்(இவரும் பிரயோஜனமான முறையில் இடுகை இட்டு,சந்தேகங்களை சாந்தமாக தீர்ப்பதற்காக)

9.சகோதரர் வசந்த்(கட்டுரையானாலும் சரி,மொக்கையானாலும் சரி கலக்கிற கலக்கலில் பர்ர்ப்பவர்கள் ஆடிப்போவதற்காக)

10.சகோதரர் நிஜாமுதீன்(இவர் சிரிக்காமலே சிரிக்கவைக்கும் நகைச்சுவைக்காக)

மேற்கண்ட பத்து பேர்களுக்கும் இந்த கிரீடத்தை சமர்ப்பிகின்றேன்.கிரீடத்தை எடுத்து தங்கள் சிரத்தில் அணியா விட்டாலும்,உங்கள் வலைப்பூவின் சிகரத்தில்(உச்சியில்)அணிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கேட்டுக்கொள்கிறேன்.

கிரீடத்திற்கு பொருத்தமானவர்கள் இன்னும் நிறைய சகோதரர்கள் இருந்தாலும் கிரீடம் பெற்றவர்களும் இதனை பகிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் மேற்கண்ட பத்து பேர்களுக்கும் மட்டும் இக்கிரீடம் வழங்கப்ப்டுகின்றது.நீங்களும் உங்களுக்கு தோன்றியவர்களுக்கு கொடுத்து இந்த கிரீடம் நூறு சிரங்களிலாவது அலங்கரிக்கப்பட வேண்டும்.

குறுகிய காலத்தில் பதிவுலகத்தில் இருந்து கற்றுக்கொண்டது நிறைய..நிறைய.கவுஜை,ஆணிபிடுங்கல்,பொட்டிதட்டுதல்,கொசுவத்தி சுற்றல், மொக்கை எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ரா..என் தலையாய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த பாடாகபடுத்தும் பதிவுலகில் எதோ ஒன்று போட்டுக்கொண்டு இருக்கிறேன்.

தவறாது படித்து,தவறாது ஓட்டளித்து,தவறாது பின்னூட்டமிட்டுவரும் நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த இடத்தில் என் மகிழ்ச்சியையும் சமர்ப்பிக்கின்றேன்.மீண்டும் மீண்டும் தங்களின் நல் ஆதரவை தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.(ஆஹ்..வந்துட்டீர்களா ஜெய்லானி சார்!இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க?அரசியலில் இறங்க ஐடியா இருக்கான்னு கேட்கவர்ரீங்க.அப்படித்தானே?ஐடியா வந்துச்சுன்னா கண்டிப்பா ஓட்டு கேட்டு வர்ரேன் ‍ வெள்ளிகாயினுடன்.மங்குனி ஐயா என்ன வாறு வாறப்போகிறாரோ?அதற்குள்ளே என்னை ஸ்டெடி பண்ணிக்கறேன்.)

டிஸ்கி

(யாரது அங்கே? ஹுசைனம்மாவா?அக்கா..ரொம்ப பில்ட் அப் கொடுக்க்றீங்க ஓவரா இல்லேன்னு முணுமுணுக்கறது..அதிரா.. ஜெனரேட்டர் ஓடுற சப்தம் உங்கள் பக்கமிருந்து வருது.பல்லை ரொம்ப கடிக்காதீங்கோ)

35 comments:

சீமான்கனி said...

கன்னிதீவு கனிக்கும் கிரீடமா...!!!நன்றி அக்கா...இவ்வளவு அழகான கிரீடம் எனக்கே எனக்கா??!!!! கைகளை களவாடிய விருது அன்று...
சிரசில் சிங்காரமாய் கிரீடம்...இன்று.இது புதுசு...பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

Jaleela Kamal said...

எல்லா ரங்கமணிகளுக்கும் கொண்டாட்டம் தான் அதுவும் ராஜ கிரீடம், ம்ம்ம் வாங்க வாங்க எல்லோரும் வாங்கிக்கஙக் உங்கள் பிளாக்குக்கு நீங்களே தான் ராஜா.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள், குறிப்பிட்ட அனைவரும் சரியான அடிபுலி பதிவர்கள்.

மேலும் நல்ல பதிவுகள், கட்டுரைகள், கதைகள், கவுஜ, மொக்கை,கலாய்க்கல், எல்லாத்துலேயும் கலக்குக்குங்கள்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்காவுக்கு , ஹுஸைனாம்மாவ இழுக்கலன்னா தூக்கம் வராது, அதிராவ இழுக்கலன்னா எனக்கு தூக்க்கம் வராது

ஜெய்லானி said...

//ஐடியா வந்துச்சுன்னா கண்டிப்பா ஓட்டு கேட்டு வர்ரேன் ‍ வெள்ளிகாயினுடன்//

ஐடியா வேனுமுன்னா என்னை கேளுங்க.24 மணி சர்விஸ்.

வெள்ளி காயின் தாத்தா காலத்து டெக்னிக்.2015ல ஆட்சிய புடிக்கனுமின்னா . கிராமமா இருந்தா வீட்டுக்கு தகுதிக்கு ஏத்தமாதிரி ஆடு அல்லது மாடு,,சிட்டியா இருந்தா மீன் தொட்டி , ல்வ் பேர்ட்ஸ் ,நாய் குட்டி ,அதிரா ச்செ..பூனைக்குட்டி , வயசான தாத்தா பாட்டிக்கு தாய கட்டை , பல்லாங்குழி , பரமபதம் போர்ட் குடுத்தா போதும். நிறை பேசவே வாணாம்.

முக்கியமா 80 பிரசண்ட் கள்ள ஓட்டுக்கு நான் கேரண்டி.

athira said...

ஸாதிகா அக்கா.. இது ரொம்ப ஓவர்... எதிர்ப்பாலாருக்கு முன்னுரிமையா? ஏன் ???????? எங்களுக்கு ஏன் முன்னுரிமை தரவில்லை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஹக்க்க்க்க்ஹக்க்க்க்க் ஹாஆஆஆஆஆஆ..... ஹிக்ஹிக்.....ஹிக்கீஈஈஈஈஈஈஈ....

ஸாதிகா அக்கா ரொம்ப கரெக்ட் கிரீடத்தை இன்று நிட்சயம் எதிர்ப்பாலாருக்குத்தான் கொடுக்கோணும் குடுங்கோ குடுங்கோ..... இப்பத்தானே திகதி பார்த்தேன்... எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்திடும்போல இருக்கே:). சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.

ஸாதிகா அக்கா அழகான கிரீடம். பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் தாய்க்குலம் சார்பில் வாழ்த்துக்கள்..... கொஞ்ச நாட்களாவது கழட்டாமல் போடுங்கோ.

ஸாதிகா அக்கா!!! எங்களுக்காவது நல்லநாள்பார்த்துத் தந்திடுங்க:):) சீயா...மீஈஈஈயா.....

ஜெய்லானி said...

(ஏப்ரல் 1ல்) விருது கொடுத்த எங்கள் தானைத்தலைவி ,வருங்கால முதலமைச்சர் , வருங்கால பிரதம மந்திரி , வருங்கால ஜனாதிபதி டாக்டர் ஸாதிகா அவர்களுக்கு நன்றி.....நன்றி.

( உங்கள் ஓட்டுகளை கிரிடம் சின்னம் பார்த்து பட்டனை உடைக்கவும்)

ஜெய்லானி said...

விருது கொடுத்த உங்களுக்கு நன்றி. பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Chitra said...

April 1st!!!

ஸாதிகா said...

siimaanசீமான் கனி நன்றி.சிகரத்தில் கிரீடத்தை மாட்டியதற்கும் மிக்க நன்றி.

ஜலி,உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டம்..ம்ம்..பேஷ்..பேஷ்..பில்டர் காபி குடித்த மாதிரி ஃபிரஷ் ஆக இருக்கு.நன்றி.என்ன செய்ய?இந்த ஹுசைனம்மா தங்கச்சியை இழுக்கலேன்னா தூக்கம்தான் வரமாட்டேன்கிறது.

//ஐடியா வேனுமுன்னா என்னை கேளுங்க.24 மணி சர்விஸ்.
//ஜெய்லானி இதற்கு சர்வீஸ் சார்ஜ் உண்டா?கருத்துக்கும்நன்றி.

அதிரா,ஆங்..கொளுத்திப்போட்டாசா?போன ஜென்மத்தில் பட்டாசு தயாரிப்பவரா சிவகாசியிலே பிறந்தீர்களோ?கொளுத்திப்போடுவதில் இவ்வளவு நல்லவரா,வல்லவரா இருக்கீங்களே.இப்ப பாருங்க ஜெய்லானி,சித்ரா வரை பிடித்து விட்டது.இன்னும் யார் யார் இப்படிக்கேட்கப்போகின்றார்களோ.நான் அன்போடு,பண்போடு,பணிவோடு கொடுத்த பரிசை இப்படி நாள்,கிழமை எல்லாம் சுட்டிக்காட்டி இந்த பிஞ்சு மனதை நோகசெய்து விட்டீர்களே!ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஸாதிகா said...

ஜெய்லானி உங்கள் கழுக்குப்பார்வை பதிவில்///அதனால் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் . இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம்.
/// இப்படி போட்டு விட்டு இந்த கேள்விகேட்கறீங்களே.???அன்போடு,பண்போடு தந்த நான் கொடுத்த பரிசினை சிகரத்தில் மாட்டுவதை விட்டு விட்டு இப்படி போலீஸ் பார்வை பார்க்கின்றீர்களே..இந்த பூஷ் பேச்சை கேட்டா?

எல்லாவற்றையும் விட்டுவிட்டு கடைசியா போட்ட டிஸ்கியை பிடித்துக்கொண்டே தொங்கறீங்க.பிரதம மந்திரி பதவி கிடைத்தால் கண்டிப்பா உங்களை நிதி மந்திரியாக்கி விடுறேன்,இப்ப மேட்டரை க்ளோஸ் பண்ணிடுங்கோ

///April 1sட்!!!///
சித்ரா நீங்களுமாஆஆஆஆஆ???என்னை நம்பலே?இறைவா இந்த கொடுமையைப்போய் நான் எங்கே சொல்ல?

மின்மினி RS said...

ஆஹா ஸாதிகா அக்கா... சூப்பர்விருதுதெல்லாம் கொடுத்து அசத்துறீங்க..

அவங்களுக்கு மட்டும் ராஜா கிரீடமா..அப்ப எங்களுக்கு ராணிகிரீடம் தந்திடவேணும்..,ஆமா சொல்லிப்புட்டேன்.

ஸாதிகா அக்காவின் பொன்னான கையினால் பொன்கீரீடம் வாங்குனவர்கள் உங்கள் பொன்னானவாக்குகளை ஸாதிகா அக்காவுக்கு போட்டுவிட ஸாதிகாஅக்கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

மிக்க மகிழ்ச்சி ஸாதிகா..

உங்கள் மேலான அன்புக்கு மிக்க கடமைப்பட்டுள்ளேன். நாளையராஜாவுக்கு கிரீடம் அணிவித்து என்னை ராஜாவாக்கிய ஸாதிகாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

கீரிடம் பெற்ற அனைத்து பதியுலக அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.வழங்கிய ஸாதிகாவின் பெரிய மனதிற்கு ஒரு ஓஓஓஓஓஓஓ.....கீரிடம் சின்னத்திற்கு எங்க தொகுதியில் நான் தான் ,இப்பவே சொல்லிட்டேன்.முதல்வர் ஸாதிகா என்னை அமைச்சராக்கி,வேளாண் துறையை நம்ம பக்கம் ...கனவு ரொம்ப பெரிசால போவுது.

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

//எல்லோருக்கும் வாழ்த்துக்கள், குறிப்பிட்ட அனைவரும் சரியான அடிபுலி பதிவர்கள்.//

அப்படின்னா என்ன ஜலீலாக்கா.

Vijiskitchencreations said...

ஸாதிகா நிங்க கொடுத்த விருது நல்ல சூப்பரான விருது அதுவும் இந்த நாளில் குடுத்தலாம் வாங்க கூடியவர்கள் கொஞ்சம் கவனமாக தான் பெற்று கொள்வார்கள். உங்க நல்ல உள்ளடத்திற்க்கு நன்றி. அதெ போல் நல்ல கிரிடம் குடுத்து ராஜ பதவியில் இருக்க வெச்சிட்டிங்க. எப்ப ராணி பட்டம் யார் யார் ராணி என்று வழிமேல் விழிவைத்து காத்திருக்காங்க. ம். அடுத்து ராணி பட்டம் தான். அடுத்த ஏப்ரல் 1 எதிர் பார்க்கலாமா.

விருது பெற்ற எல்லா அரசவை ராஜக்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். மேலும் விருதுங்கள் ,மகுடங்கள் பெற வாழ்த்துகிறேன்.

Menaga Sathia said...

ஸாதிகா அக்காவின் பொன்னான கையில் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

அக்கா ஒரு சந்தேகம் // இது ஏப்ரல் ஃபூல் இல்லையே // ஹி...ஹி...

ஸாதிகா said...

மின்மினி,கண்டிப்பா ராஜகிரீடம் உண்டு.வாழ்த்துக்கும்,விருது பெற்றவர்களை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி.

ஸ்டார்ஜன்,தொடர் வருகைக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

ஆசியா,கருத்துக்கு நன்றி.நான் முன்பு பார்த்த அமைத்தித்திலகம் ஆசியா காணாமல் போய் விட்டார்.ஹ்ம்ம்..பிளாக் உலகம் உங்களையும் மாற்றி விட்டது.//ரிடம் சின்னத்திற்கு எங்க தொகுதியில் நான் தான் ,இப்பவே சொல்லிட்டேன்.முதல்வர் ஸாதிகா என்னை அமைச்சராக்கி,வேளாண் துறையை நம்ம பக்கம் .//இந்த வரிகளுக்காக சொன்னேன்.இந்த கெட் அப்பும் நல்லாத்தான் இருக்கு.கீப் இட் அப் வேளாண்துறை அமைச்சர் அவர்களே!

ஸாதிகா said...

சகோ அக்பர் கருத்துக்கு நன்றி.லிஸ்ட்டில் நீங்களும்தான் இருந்தீர்கள்.உங்கள் நண்பர் ஸ்டார்ஜன் கையால் பெற்வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுத்துவிட்டேன்.வரவுக்கு நன்றி."அடிப்புலிகள்" என்றால் என்ன என்று ஜலீலாவிடமே கேட்டேன்.மலையாளிகள் இதனை சூப்பர் என்பார்களாம்.அதாகப்பட்டது சுப்பரான பதிவர்கள் என்று அர்த்தமாம்.மேலதிக விபரங்களுக்கு சனிக்கிழமை வரும் ஜலீலாவிடம் கேளுங்கள்.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

சூப்பரான விருது என்று பாராட்டி தட்டிக்கொடுத்து விட்டு இப்படி குட்டி விட்டீர்களே விஜி?ராணி பட்டம் அடுத்த ஏப்ரலிலா?இதற்காகவே உடனேதந்து விடுகிறேன்.

மேனகா,இனி ஏப்ரல் ஒன்றாம் தேதி பிளாக் பக்கம் என்ன பிசி பக்கமே தலை வைத்து படுக்கமாட்டேன்.நான் ஏப்ரல் ஒன்றாம் தேதி பதிவு அதுவும் பரிசு தரும் பதிவு போட்டதும் போதும்.இப்படி தங்கைமார்கள் கலாய்ப்பதும் போதும்.இப்படி எல்லாம் ஆகும் என்று தெரிந்து இருந்தால் இன்று இந்த பதிவைப்போடமல் நாளைக்கே போட்டு இருப்பேன். :(

athira said...

ஜெய்லானி said...
(ஏப்ரல் 1ல்) விருது கொடுத்த எங்கள் தானைத்தலைவி ,வருங்கால முதலமைச்சர் , வருங்கால பிரதம மந்திரி , வருங்கால ஜனாதிபதி டாக்டர் ஸாதிகா அவர்களுக்கு நன்றி.....நன்றி//// ஸாதிகா அக்கா... நான் வச்ச நெருப்பு இவ்வளவு சீக்கிரத்தில் பத்திவிட்டதே... கிக்...கிக்..கிக்...


.நான் அன்போடு,பண்போடு,பணிவோடு கொடுத்த பரிசை இப்படி நாள்,கிழமை எல்லாம் சுட்டிக்காட்டி இந்த ”பிஞ்சு மனதை நோகசெய்து விட்டீர்களே!”//// கடவுளே..... வழிவிடுங்கோ வழிவிடுங்கோ... நான் தேம்ஸ்க்குப் போகிறேன்... அதுக்கு முன்னமே ரோட்டிலேயே மயங்கிடுவேன் போல இருக்கே..


மேனகா,இனி ஏப்ரல் ஒன்றாம் தேதி பிளாக் பக்கம் என்ன பிசி பக்கமே தலை வைத்து படுக்கமாட்டேன்/// ஸாதிகா அக்கா... வடிவாப் பாருங்கோ... கரெக்ட் திகதியில கரெக்ட் ஆகத்தான் மகுடம் சூட்டியிருக்கிறீங்களென நான் வாழ்த்தியிருக்கிறேனே... ஏதோ என் கிட்னிக்கு எட்டியது கிக்..கிக்...கிக்....

ஜலீலாக்கா அடுத்த நல்ல நாள்ல எங்களுக்கு மகுடமாம்.... ஸாதிகா அக்கா பிளீஸ் எனக்கு இப்போ வேண்டாம் இங்கே நிறையப்பேர் கழுகுக் கண்ணோடு திரிகிறார்கள்.. பழிக்குப் பழிவாங்கிவிடுவினம்.... மீயா எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊஊ

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சகோதரர் நிஜாமுதீன்(இவர் சிரிக்காமலே சிரிக்கவைக்கும் நகைச்சுவைக்காக)//

இந்தக் கடும் வெயில் காலக் கொடுமையில்
இருந்து தப்புவிக்கும்வண்ணம்
குளிர்ச்சியான கிரீடம்
கொடுத்து கூல்
செய்திட்டீங்களே!

நன்றி சகோதரி ஸாதிகா!

ஜெய்லானி said...

//athira said...ஸாதிகா அக்கா பிளீஸ் எனக்கு இப்போ வேண்டாம் இங்கே நிறையப்பேர் கழுகுக் கண்ணோடு திரிகிறார்கள்.. பழிக்குப் பழிவாங்கிவிடுவினம்.... மீயா எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊஊ///

மண்டையில ஏத்தியாச்சு. இப்ப எஸ்கேப்பா ஓகே,,,ஒகே...எப்படியும் பூஸு வெளியே வந்துதான் ஆகனும் . அப்ப பாக்கிரேன்.

Jerry Eshananda said...

இந்த கிரீடத்தை "அடகு வச்சா துட்டு தருவாங்களா மேம்."

செ.சரவணக்குமார் said...

நன்றி அக்கா.

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப சாரி மேடம் , ஆபிசுல கொஞ்சம் ஆணிபுடுங்க சொல்லிடாணுக , அது தான் லேட் , நமக்கு எந்த பரிசும் நேர்ல வாங்குனா புடிகாதுங்க , இன்னைக்கு நைட் வந்து நான் அந்த பரிசாஆட்டயபோட்டுறேன்

Ahamed irshad said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..

ஹுஸைனம்மா said...

அக்கா, ஏப்ரல் 1ந்தேதி கிரீடம் கொடுத்ததாலே, உங்க அன்பை சந்தேகிக்கிறாங்கன்னு நினைச்சா... கண்ணுல தண்ணி தண்ணியா வருதுக்கா!! உங்களைப் போய்.... சே... என்ன உலகம் ....

(அக்கா, நிறைய பேரு பெண்ணீயம், அதுஇதுன்னு கத்துகத்துன்னு கத்திகிட்டு இருக்க வேளைல, நீங்க சைலண்டா 1ந்தேதி ஆண்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பரிசு கொடுத்து, “சேதி” சொன்னீங்கோ பாருங்கோ, நீங்க நீங்கதான்க்கா!!)

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்!

தேதியில் என்ன இருக்கு அக்கா! ‍

எல்லா நாளும் நன்னாளே

நம்மையும் இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றிங்கோ!

Anonymous said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

SUFFIX said...

ரொம்ப வெயிட்டான கிரீடம் கொடுத்து இருக்கீங்களே அக்கா, மிக்க மகிழ்ச்சி. சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அதிரா,உங்கள் சகுனி வேலை எல்லாம் பலிக்காது.பாருங்க.சகோதரர்கள் நம்பி கிரீடத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.இப்ப என்ன செய்வீர்கள்?இப்ப என்ன செய்வீர்கள்?நன்றி

சகோ நிஜாமுதீன்//இந்தக் கடும் வெயில் காலக் கொடுமையில்
இருந்து தப்புவிக்கும்வண்ணம்
குளிர்ச்சியான கிரீடம்//அட இப்படிக்கூட இருக்கா?ரொம்ப சந்தோசம்.நன்றி

ஜெய்லானி,அதானே?அதிராப்பொண்னு நல்லாகேட்டுக்கோங்கமா.நன்றி

ஐயா சாமி ஈசானந்தா சார்,எப்படியெல்லாம் யோசிக்கறீங்க!!லகிரீடம் இல்லை சார் உங்கள் யோசனைக்கு பொற்கிளியே கொடுக்கலாம்.கருத்துக்குநன்றி

ஸாதிகா said...

சரவணக்குமார்,கருத்துக்கு நன்றி.

மங்குனி சார் லேட்டா வந்தாலும் அஜர் ஆகிட்டீங்களே .ரொம்ப நன்றி சார்.

அஹ்மது இர்ஷாத்,முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஹுசைனம்மா,லேட்டா வந்து பட்டாசு கொளுத்தறீங்க.பட்டாசெல்லாம் நமுத்துப்பொய் விட்டது.கருத்துக்கு நன்றி.

சகோ ஜமால் ,//தேதியில் என்ன இருக்கு அக்கா!// சரியா சொன்னீங்க தம்பி.கருத்துக்கு நன்றி

அம்மு கருத்துக்கு நன்றி.

//ரொம்ப வெயிட்டான கிரீடம் கொடுத்து இருக்கீங்களே அக்கா.மிக்க மகிழ்ச்சி.//எனக்கும் ரொம்ப சந்தோஷம் ஷஃபி தம்பி.

Jaleela Kamal said...

ஆஹா இத கவனிக்கலையே அக்பர், அடிபுலின்னா "சூப்பர்" செம்ம சூப்பர் என்றெல்லாம் அர்த்தம்,

ஆமாம் அதிரா ஒரே விருதா என்று எல்லோரும் க‌ழுகு க‌ண்ணோடு தான் பார்த்து கொண்டு இருக்கிறார்க‌ள்.