April 10, 2010

ராணி கீரீடம்

சக சகோதரப்பதிவர்களுக்கு ராஜகிரீடம் கொடுத்தோம்.எனது 50ஆவது இடுகையில் சக பெண்பதிவர்களுக்கு ராணிகிரீடம் கொடுப்பதாக இருந்தது.ஆனாலும் அதுவரை பொறுமை இல்லை.இதோ என் அன்பு சகோதரிகள் இந்த கிரீடத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் வைக்கின்றேன்.


முன்னர் சொன்னது போல் வலைஉலகில் புகுந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி,எண்ணங்களைப்பகிர்ந்து,ஆலோசனை,அறிவுரை,குறிப்புரை,வரலாறு,நகைச்சுவை,கவிதை,மொக்கை,சமையல்,கதை.கற்பனை என்று கலக்கி தங்கள் வலைப்பூவை ஆட்சி செய்யும் ராணிகளுக்கு இவ்விருது பொருந்தும்தானே.முகம் அறிந்த சில சகோதரிகள் தலையில் இக்கிரீடத்தை மாட்டி கற்பனை செய்து மகிழும் பொழுது மகிழ்வாக உள்ளது.

1.என் அன்புத்தோழி,தங்கை.என் முதல் பதிவுலக நட்பு,தினம்,தினம் தொடர்பு கொண்டு எண்ணங்களைப்பறிமாறிக்கொள்ளும் நெருக்கம்,தொடர்ந்தார்ப்போல் மூன்று நாள் தொடர்பில்லாவிட்டாலும் "அக்கா என்ன ஆச்சு" என்று பதறும் பாசம் ,சமையலில் ராணியாக அசைக்கமுடியாத இடத்தில் இருந்தாலும் அக்கா இப்படி செய்யலாமா?அக்கா அப்படி செயலாமா என்று என்னிடம் கேட்டு நான் எது சொன்னாலும் அதில் நம்பிக்கைக்கொண்டு,நல்லதைத்தான் நான் சொல்லுவேன் என்று அதீத நம்பிக்கை வைத்து இருக்கும் என் அன்பு உடன் பிறவா தங்கை
ஜலீலாவுக்கு இவ்விருதினைக்கொடுத்து மகிழ்கிறேன்.

2.எப்பொழுதும் என்னை கலாய்த்து மகிழும் ,பதிவில் பூஸைக்காட்டி காட்டி என்னை பயமுறுத்தும் அன்புத்தங்கை
அதிரா.

3.சமையலில் புதுமை புகுத்துவதிலும் சரி,விருதுகளை வாரி வழங்குவதிலும் சரி முன்னிலை வகிக்கும்
மேனகா.

3.டிரங்குப்பொட்டி திறந்து பல்சுவைகளை வழங்கும்,பதிவில்தான் கிண்டலும் கேலியும்,குத்தலும்,குடைச்சலுமாக இருந்தாலும் தனிபட்ட முறையில் அந்த ஹுசைனம்மாவா ?என்று ஆச்சரியப்படவைக்கத்தோன்றும் அம்சஅடக்கமான தங்கை
ஹுசைனம்மா.

4.பதிவுலகில் என் நெருங்கிய அன்பு ஸ்நேகிதி,அலுவலக,வீட்டு வேலைகள் இவரை இறுகப்பிடித்து இருந்தாலும் ஆர்வத்துடன் பதிவிட்டு,எதனை செய்தாலும் பொறுமையுடன்,நேர்த்தியுடன் பாங்குற செய்வது இவருக்கு கை வந்த கலை. மலர்வனத்தில் பூக்களை பதமாக அழகுற பயிரிடும் என் தோழி
செந்தமிழ்செல்வி.

5.பிற தளங்களில் அதிகம் எழுதி அதன் மூலம் தொடர்பு கொண்ட சொற்ப நாட்களிலே நெருக்கமாகிவிட்ட,பதிவுலகில் நன்முத்துக்களை சிதற விடுபவர் , எழுத்தாளர்,கவிஞர்,ஓவியர்,சமையல்கலை வித்தகர் ,பாடகி கிட்டத்தட்ட எண்ணங்களிலும் ரசனைகளிலும் என்னை ஒத்துப்போகும்,அது பற்றிக்கூறி சிலாகிக்கும் என் அன்பு அக்கா
மனோ சுவாமிநாதன்.

6.நெல்லை சமையலில் கலக்கிக்கொண்டிருக்கும் மற்றொருதோழி இவர்.இணையதளங்களில் வரும் குறிப்புகளுக்கெல்லாம் பின்னூட்டமிட்டு அனைவரையும் உற்சாகமூட்டும் மிக நல்ல,பெரிய,பொறுமையான மனது இவருக்கு.இவரிடம் பிடித்ததும் இதுவேஅவ்வப்பொழுது தொடர்பு கொண்டு ஸ்நேகிதத்தை தொய்வில்லாமல் வைத்துக்கொண்டு,புதியதாக வலைப்பூ ஆரம்பித்து சமையலில் அசத்திக்கொண்டிருக்கும்
ஆசியாஉமர்


7.சைவசமையலில் வெளுத்துவாங்கும் ,முகமறியாவிட்டாலும் பேச்சில் அனபையும் பாசத்தையும் குழைத்து விருந்தாக்கி,ஊட்டிமகிழும் விஜி

8.நகைச்சுவையாக நல்ல விசயங்களை நல்கும் சித்ரா

9.கவிதையில் கலக்கி,அனுபவங்களை அழகுற அள்ளித்தெளித்து படிப்பவர்களை நெகிழ்ச்சி அடையச்செய்யும் மலிக்கா

10.இவர் கவிதை கண்டு அசந்து போன கணங்கள் பல உண்டு.நான் வசிக்கும் நகரமே இவர்வசிக்கும் நகரமென்பதில் எனக்குண்டு பெருமிதம்.யாரு?நம்ம
தேனம்மை அக்காதான்.

11.கலகலப்பாக கலக்கும்
கவிசிவா.

12.புதியதாக வலைஉலகில் மினுமினுக்கும்
மின்மினி

13.பிரியாணி என் தலைப்பிட்டு பிரியாணி பிரியாணியை கண்ணிலேயே காட்டாவிட்டலும் விரைவில் பெரிய விருந்தே படைக்கப்போகும்
நாஸியா

14.அம்சமாக ஹதீஸ்களை எடுத்து சொல்லும் பாத்திமாஜொஹ்ரா.

15சமையலில் கலக்கும்
சுஸ்ரீ

16.மகளுக்கென்றே வலைப்பூ பின்னும்
ஹார்ஷினி அம்மா

17.அத்திப்பூத்தார்ப்போல் பதிவிட்டாலும் சிந்திக்கத்தூண்டும் பதிவிடும்,அவ்வப்பொழுது என்னை மறந்தே போகும்
இலா

18.சமைப்பது சுலபம்.சமைப்பதை பாங்குற அலங்கரிப்பது சிரமம்.அந்த வேலையை அழகுற செய்து பார்ப்பவர்களை வாவ் சொல்ல வைக்கும்
அம்முமது.

19.மற்ற இணையதளங்களுக்கு சென்று உபயோகமான பதிவுகளை திரட்டித்தரும் சிங்கப்பூர்
பிரபாதாமு.

20.போட்டோக்களை அழகுற கிளிக் செய்து அதனையே சக பதிவர்களுக்கு அன்பளிப்பாகத்தரும்
இமா.

21
.
செபா மேம்.இவரிடம் நான் அதிகம் பேசாவிட்டாலும் மரியாதைகலந்த அன்பு என்றும் உண்டு மூத்தபதிவரென்று.

22.இவர் சமையலறையில் உள்ளதை அழகுற பறிமாறும்
கீதாஆச்சல்.

23.சிறுகதைகள் சிறப்பாக‌ எழுதி வரும் வானதி.

24.விருந்து படைக்கும் மகி

25.பல்கலை வித்தகர்,இப்பொழுதெல்லாம் இவர் வலைப்பூவைத்திறந்தால் புதியபூ பூக்காமல் வெறுமையோடுகின்றது.கிடைக்கும் நேரத்தில் வந்து பதிவிட வேண்டி சுஹைனா விற்குஅழைப்பு விடுகின்றேன்

26.தனது இனிய இல்லத்தில் விதவிதமான அழகுப்பூக்களைப்பூக்கச்செய்யும்,கைவினைப்பொருட்கள் மட்டுமின்றி அனைத்திலும் வித்தகியாக சகலகலாவல்லி,புதியதாய் இவ்வுலகில் ஒரு சிறு பூ உதயமாக ஓய்வெடுத்தாலும் பதிவுலகில் தொய்வில்லாமல் இருக்க அவ்வ‌ப்பொழுது நற் பதிவுகளை வெளிவரசெய்துகொண்டுஇருக்கும் மிகப்பொருப்பான தங்கை பாயிஷாகாதர்.

27.அழகுற கவிதை எழுதும் பவி

28.அழகிய கருத்துக்கள் வழங்கும் மலர்.

29.ஆவக்காயில் பிரியாணி போடுபவர்.ஹைதையை அவ்வப்பொழுது செலவில்லாமல் சுற்றிக்காட்டுபவர்,நல்ல உணவகங்களை அறிமுகப்படுத்துபவர்..யாராக இருக்கும்?புதுகைதென்றல்தான்

30.அழகுற இணையதளம் நடத்தி நன் அதிகம் பங்கேற்காவிட்டாலும் தவறாது படித்துவரும் தமிழ்க்குடும்பம்

31.வித விதமான கோலங்களில் கலக்கும் சாருஸ்ரீராஜ்

32.சமையல் மற்றும் வித்தியாசமான படங்கள் மூலம் அசத்தும் சின்னுரேஸ்ரி மாதேவி

ஆகியோருக்கு இந்த ராணி கிரீடத்தை வழங்கி மகிழ்கின்றேன்.வலைஉலகராணிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.நீங்களும் உங்களுக்கு ப்ரியப்பட்ட ராணிகளுக்கு கொடுத்து மகிழுங்கள்!




நன்றி ஜெய்லானி
சகோதரர் ஜெய்லானி தந்த இவ்வைர விருதினை என் வலைப்பூவில் பதித்து பத்திரப்படுத்தி மகிழ்கின்றேன்.நன்றி சகோதரரே!

43 comments:

ஜெய்லானி said...

ஒவ்வொருவரையும் அறிமுக படுத்திய அழகு உங்க நல்ல மனசை( ரசனையை ) காட்டுது. வாழ்த்துக்கள் விருது பெற்ற ராணிகளுக்கு !! ( ராணிக்கிரீடம் பேர் நல்லா இருக்கு )

Menaga Sathia said...

வாவ்வ்வ் அக்கா ராணிகீரிடம் ரொமப் அழகா இருக்கு,பெயர் கூட....ஒவ்வொருவரையும் அறிமுகபடித்திய விதம் அருமை அக்கா...அனைவருக்கும் கொடுத்து அசத்திருக்கிங்க....சந்தோஷமும்,நன்றியும் அக்கா....

athira said...

அக்காஆஆஆஆஆஆஆஆஆ... ஸாதிகா அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ சூப்பர் கிரீடம் தந்திட்டீங்கள் எமக்கு, இன்று ராணிமுத்துக் கலண்டர் எல்லாம் செக் பண்ணினேன் சூஊப்பர் நாள். யாரும் எம்மை எதுவும் பண்ணமுடியாது....கிக்..கிக்...கிக்...
“அண்டைக்கு” கொடுத்ததைவிட இது 100 மடங்கு சூப்பர்..... எப்ப குடுத்ததைச் சொல்றீங்கள் என குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

எம்மை வாழ்த்தப்போகும் சகோஸ்க்கு நன்றி:), முக்கியமாக ஓடிவந்து வாழ்த்துத் தெரிவிக்கப்போகும் ஜெய்..லானிக்கு மிக்க மிக்க நன்றி:), அட்வான்ஸாக சொல்லிட்டால் பெட்டர்..

கிரீடம் பெற்ற “குயின்ஸ்” களுக்கும் வாழ்த்துக்கள்... ஸாதிகா அக்கா கிரீடத்தோடு ஒவ்வொருவரைப்பற்றி உங்கள் மனதில் உள்ள உண்மைகளை எழுதியிருக்கிறீங்க அதுவும் சூப்பர்.. மிக்க மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

ஆ.... எனக்கு புது புதுஷா கிடைக்குதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. அடுத்த தலைப்புபோட(என் வீட்டில்) ஆரிட்ட கடன் வாங்கலாம் என காத்திருந்தேன் தக்க நேரத்தில கிரீடம் தந்து உதவிட்டீங்க... கிக்...கிக்...கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ(இது நமக்குள் இருக்கட்டும்).

ஊசிக்குறிப்பு:
ஸாதிகா அக்கா, உங்களுக்குத்தான் தெரியுமே நான் பிஸியான ஆள் என. என்னை ஒபாமா அழைக்கிறார்..., அதனால், நான் ஒருமாதம் விடுமுறையில் போகிறேன் என.... என்னை இங்கு தேடும்???? எல்லோருக்கும் சொல்லிவிடுங்கோஓஓஓஓஓ. ஸ்பெஷல் பிளேன் வந்திட்டுது.... ஓகே பூஸார்...சீயா...மீயா.... ஹைஷ் அண்ணன் பதட்டத்தில தண்ணிக்குள்ள இறக்கிடாமல் ஒபாமாவின் மொட்டைமாடியில பத்திரமா இறக்கிவிடுங்கோ...

சீ யூ சூன் பட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நேற்று தோஹா மியுஸித்தில் பார்த்த வைர நெகலஸ், தங்கத்திலான பெல்கான் நல்ல இருக்குன்னு தானே சொன்னேன், அதற்குள் இப்படி ஒரு பெரிய கிரிடமே வாஙகி மாட்டி விட்டீர்களே, அழகுற நம் நட்பை சொல்லி , அதே போல் மற்ற தோழிகளையும் நல்ல விமர்சித்து இருக்கீங்க.

அனைத்து தோழிக‌ளும் என‌க்கும் ந‌ல்ல‌ அறிமுக‌மான‌வ‌ர்க‌ளே, ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

உங்கள் இடுகைக்கள் அனைத்தும் கலக்கலே. 50 ஆவது இடுக்கைக்கு இப்போதோ வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

நான் வருவதற்குள் இந்த பூஸார் முந்தி கொண்டு பதில் போட்டு விட்டாரா?


காதில் புகைஈஈஇ ஈஈஈ ஹ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்ன்னூஊஊஊஉ சுத்துதூஊஊஊஊ

Jaleela Kamal said...

ஆஹா என்ன ஒபமா அரண்மனையில் வேலை கிடைத்து விட்டதா, தெரியும் சிக்கின் கறி கொடுத்து பூஸார அனுப்பி பிடித்து வேலய பிடித்து விட்டீர்கள் போல, இந்த பூஸார் வரவில்லை என்றால் சுவரஸியமே இருக்காதே....

மின்மினி RS said...

ஹைய் அக்கா விருது கொடுத்திருக்காங்கடோய்.. எல்லோரும் அக்காவுக்கு ஒரு ஓ போடுங்க.., ரொம்ப தேங்க்ஸ் அக்கா.

நீங்க ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட விதம் மிக அருமை. உங்களுக்கும் நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கும் உண்டான பாசம் பற்றி அறிந்துகொண்டேன். என்னையும் நீங்கள் குறிப்பிட்டது பெருமையாக உள்ளது. நன்றி அக்கா அறிமுகத்துக்கு.

Chitra said...

சூப்பர்! சூப்பர்! சூப்பர்!
உங்களுக்கு முதலில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
நீங்கள் தான், ராணி மகா ராணி ஆச்சே!

என்னையும், இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்து கொடுத்த உங்கள் அன்புக்கு, வணக்கம்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

athira said...

ஸாதிகா அக்கா, ஜலீலாக்காவைக் கண்டனிங்களோ? இருந்தாலும் நீங்கள் அவவை அறிமுகப்படுத்தியவிதம் ரொம்ப ஓஓஓஓஓஓஓவர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

ஓ ஜலீலாக்கா இருக்கிறீங்கள்...

அரண்மனையில் வேலை கிடைத்திருக்கோ/////கர்ர்ர்ர்ர்ர்.. அவர் என்னை ஸ்பெஷலாக கூப்பிட்டிருக்கிறார்..... சில ஆலோசனைகள் பெறுவதற்காக.... நான் மாட்டேன் எனச் சொல்லியும் விடவேயில்லை.... இனிமேலாவது எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் பூஸாரின் பெருமைபற்றி...

Asiya Omar said...

ஸாதிகா எனக்கும் விருது கொடுத்து அதுவும் முதல் பத்தில் என் பெயர் மிக்க மகிழ்ச்சி.ராணி கிரீடம் ரொம்பவும் அழகு.பார்த்துகிட்டே இருக்கலாம்.
விருது பெற்ற அனைவருக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

அக்கா...ஒரே நேரத்தில் இவ்ளோ ராணிகளுக்கு முழுக்க முழுக்க வைரத்தினாலையே செய்யப்பட்ட அழகு கிரீடம் தந்து அனைவரையும் ஊக்கு விக்கும் உங்களை என்ன சொல்லி பாராட்ட தெரியவில்லை இறைவன் அருளால் உங்கள் தாங்க பட்டறை மேலும் செழிக்க வாழ்த்துகள்...அக்கா ஒரு ரகசியம் இப்போதுதான் மங்குனி அமைச்சர் ஓலை அனுப்பினார் இவ்வளவு வைரங்களை இதனை வைரங்களுக்கு கொடுத்து இருப்பதால் பதிவுலகம் இன்னும் ஜோளிக்கபோவது உண்மைதான் இருந்தாலும் நம் கஜான காலியாகி விடும் என்று அவருக்கு வருத்தமாம்...உளவுத்துறை செய்தி ஒன்றும் வந்துள்ளது எந்த நேரத்திலும் விஜிலன்ஸ் ரைடு வருமாம்... நீங்கள் ஒரு அறிக்கை விடுங்கள் கிரீடத்தில் அத்தனையும் கண்ணாடி கற்கள் என்று...மற்றதை மங்குனி பார்த்துகொள்வார்.வைர கிரீடம் பெற்ற அணைத்து வைரங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்து ராணிகளையும் அழகுற அறிமுகப்படுத்தியவிதம் உவகை தந்தது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Chitra said...

Thank you very very very much!
QUEEN AWARD! - super!

அன்புடன் மலிக்கா said...

ராணிகளுக்கு விருதுகொடுத்து.ராணி மாகராணீயாயிட்டீங்கக்கா.
விருதுமழையில் நனைவதுகண்டு உள்ளம் பூரிப்படைகிறது.

விருதுவாங்கிய அத்தனை தோழிகள் அக்காமார்கள். தங்கைகள் அனைவருக்கும் அதை அன்போடு[வைரம் விற்க்கும்விலையில்]வாரிவழங்கிய ஸாதிகா அக்காவிற்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

Unknown said...

நன்றி ஸாதிகா
உங்களின் விளக்கம் மிகவும் பிடித்தது
நன்றி
தமிழ்குடும்பம்.காம்

நாஸியா said...

எப்படிங்க இப்படி எல்லாம்.. ஹிஹி... ரொம்ப அழகா எல்லாரையும் அறிமுகப்படுத்திட்டீங்க (ஆமா அதென்ன விருந்து..? ஹிஹி)... நமக்கு தெரியாத சில பதிவர்களும் இருக்காங்க போலயே.. போய் பாத்துற வேண்டியது தான்..

ரொம்ப நன்றி, விருதுக்கு

தக்குடு said...

//ஒவ்வொருவரையும் அறிமுக படுத்திய அழகு உங்க நல்ல மனசை( ரசனையை ) காட்டுது. வாழ்த்துக்கள் விருது பெற்ற ராணிகளுக்கு // விருது பெற்ற எங்க ஊர்கார சித்ரா அக்காவுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்...:)

pudugaithendral said...

அழகான அறிமுகங்கள்,

ராணீ கீரிடமா சந்தோஷமா இருக்கு. நன்றி

இமா க்றிஸ் said...

அன்பு ஸாதிகாவுக்கு,

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ;) ஏதோ பொழுது போகாமல் தட்டுவதை வலைப்பூவில் வெளியிட்டு அனைவரையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் எனக்கு கிரீடம் கொடுத்துக் கௌரவிக்கிறீர்கள். மறைமுகமாக எல்லோரும் என்னை 'ஒழுங்காக இரு,' என்று சொல்வதாகப் படுகிறது எனக்கு. ;) மிக்க நன்றி ஸாதிகா.

ராணிகளனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

வாழ்த்தியோர் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன் இமா

Pavi said...

"அழகுற கவிதை எழுதும் பவி".
எனக்கும் ராணி பட்டம் கொடுத்து என்னையும் மகிழ்வித்தமைக்கு நன்றிகள் ஸாதிகா அக்கா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா பெண்களுக்கு ராணிக்கிரீடம் ரொம்ப நல்லாவே பொருந்திருக்கு.., ரொம்ப நல்லாருக்கு..

விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிசிவாவின் இணைப்பு சரியாக இல்லியே.., கொஞ்சம் கவனிங்க ஸாதிகா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிசிவாவின் இணைப்பு லிங் இருந்தா கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன்.

மனோ சாமிநாதன் said...

அன்புத்தங்கை ஸாதிகா!

உங்கள் அன்புக் கிரீடம் என்னை அசத்தி விட்டது. உடனேயே எடுத்து அணிந்து கொண்டேன். என் முத்துச்சிதறலில் அது ஒளி வீசிக்கொண்டிருக்கிறது!

ஸாதிகா said...

ஜெய்லானி

மேனகா

அதிரா

ஜலீலா

மின்மினி

சித்ரா

ஆசியா

சீமான்கனி

நிஜாமுதீன்

சித்ரா

மலிக்கா

தமிழ்குடும்பம்

நாஸியா

தக்குடுபாண்டி

புதுகைத்தென்றல்

இமா

பவி

ஸ்டார்ஜன்

மனோ அக்கா

அனைவருக்கும் என் அன்பு,மகிழ்ச்சி கலந்த நன்றி!நன்றி!!

SUFFIX said...

ஜெய்லானி கூறியது போல், ஒவ்வொரு பதிவர்களுக்கும் முன்னுரை கொடுத்து, விருது வழங்கியிருப்பது அருமை!!

செந்தமிழ் செல்வி said...

ஸ்னேகிதி ஸாதிகா,
அனேகமாக நான் தான் கடைசின்னு நினைக்கிறேன். மன்னிக்கணும். வேலை முடித்து வர நேரமாகி விட்டது.
ஒவ்வொருவர் பற்றிய விமர்சனமும் அழகாய், ரசிக்க வைக்கிறது. டாப் 10-ல் நானும் ஒருத்தின்னு சந்தோஷமாக இருக்கு. இந்நட்பு என்றென்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
விருதுக்கு மிக்க நன்றி. வாசலில் தொங்க விட்டாச்சு.
வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. விருது பெற்ற ராணிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா said...
அதிரா
.....
......
அனைவருக்கும் என் அன்பு,மகிழ்ச்சி கலந்த நன்றி!நன்றி!!///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாழ்க!!! நல்லாயிருங்கோ... நல்லாயிருங்கோ....

vanathy said...

ஸாதிகா அக்கா, நன்றி. எனக்கும் கிரீடம் சூட்டி அழகு பார்ப்பதற்கு. நேற்றே பதிவு போட்டேன். எங்கே போச்சு என்றே தெரியவில்லை. அது தான் இன்று மீண்டும் பதிகிறேன். எனக்கென்னவோ அதிராவில் தான் சந்தேகமாக இருக்கு. அதீஸ் வருவதற்குள் நன்றி சொல்லிக் கொண்டே ஒடி விடுகிறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் விருதுக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...அதிலும் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தவிதம் அருமையிலும் அருமை..நன்றி

பாத்திமா ஜொஹ்ரா said...

தங்கள் அன்புக்கும்,பகிர்வுக்கும் மிக்க நன்றி அக்கா

Mahi said...

ஸாதிகா அக்கா,விருதிற்கு நன்றி! விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கொஞ்சம் வேலை இருப்பதால் உடனே வந்து நன்றி சொல்லவும் முடியவில்லை,கிரீடத்தை என் வலைப்பூவில் பதிக்கவும் நேரமில்லை...விரைவில் பதித்துவிடுகிறேன்! :)
நன்றி!

ஹுஸைனம்மா said...

/அம்சஅடக்கமான தங்கை ஹுசைனம்மா//

அக்கா, என்னை அடக்கமான பொண்ணுன்னு சொல்லிருக்கீங்க பாருங்க, அதுக்காகவே உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்கணுங்கிற அளவுக்கு எனக்கு சந்தோஷமா இருக்கு!! முதல்முறை இப்படிச் சொல்லிக் கேட்கிறேன், அதான் ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு!! இதுதான் எனக்குப் பெரிய விருது!! :-))

விருதுக்கு ரொம்ப நன்றி அக்கா, சீக்கிரம் எடுத்து வச்சுக்கிறேன்.

seba said...

அன்பு ஸாதிகா,


உங்கள் அன்புக்கும் விருதுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இப்போதுதான் உங்கள் பதிவுகளை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
மிக அருமையான பதிவுகள்.


அன்புடன்,
செபா.

ஸாதிகா said...

சகோ ஷஃபி

ஸ்நேகிதி செந்தமிழ்செல்வி

வானதி

கீதாஆச்சல்

பாத்திமா ஜொஹ்ரா

மகி

ஹுஸைனம்மா

செபா மேம்

அனைவருக்கும் என் அன்பு மகிழ்ச்சி கலந்த நன்றி!!

மங்குனி அமைச்சர் said...

நடத்துங்க , நடத்துங்க வாழ்த்துக்கள் , அப்புறம் ஜலீலா , ஆசியா ஓமர் மேடம் களுக்கு எப்படி சமைப்பதுன்னு என் ப்ளாக்ல சொல்லி கொடுத்துரிக்கேன் போய் பாருங்க .( என்னைக்கு நீங்க நம்ம ஜெயலானிய சமைச்சு சாப்டின்களோ அன்னைக்கே நீங்க நம்ம கட்டி ஆகிடிங்க அதுனால உங்கள இழுத்து விடல )

Vijiskitchencreations said...

ஸாதிகா அக்கா எங்கேயோ போயிட்டிங்க. வார்த்தக்களே இல்லை. அதிலேயும் வைர கிரிடத்தை குடுத்து அதன்கூட எல்லாரையும் உங்க மனதில் இடம் பிடித்திருக்கிற எல்லாரையும் அன்பான, அழகான வார்த்தைகளால் வாழ்த்தி குடுத்திருப்பதை நானும் அன்போடு ஆசையோடு பெற்றுகொள்கிறேன். நன்றி. உங்க்ளோட் எழுத்து நடை அழகே தனி, யாரும் தொடகூட முடியாது. நான் உங்க எழுத்துக்களை ரசித்து படிக்கும் ரசிகை.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஸாதிகா!

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மாதேவி said...

ஸாதிகா விருது வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.

"ராணிகீரிடம்" விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

மங்குனி அமைச்சர்

விஜி

மனோ அக்கா

மாதேவி

உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றி!!

இமா க்றிஸ் said...

Shadiqahhh,

Just visit imma's world for once. ;) There is a surprise waiting for youuuu. ;))

Thanks in advance. ;)

Love
imma

Anonymous said...

ராணி கிரீடம் சூப்பர்ப்.ரொம்ப ரொமப ரொம்ப நன்றி ஸாதிகா.

Unknown said...

நன்றி அக்கா இன்று தான் உங்கள் விருதை பார்க்கிறேன்.. நன்றி..