July 24, 2012

பிக்னிக்



எங்களூரின் தெற்குப்பகுதி முழுக்க தென்னந்தோப்புகள் சூழப்பெற்ற கடற்பகுதி,பசேல் என்று இருக்கும் தென்னை மரங்கள்,குலை குலையாக காய்த்துக்குழுங்கும் தென்னைகள் முக்கிய விவசாயமாக உள்ளது.

தோட்டங்களில் குட்டியாக நீச்சல்குளம்,ஓய்வெடுக்க தோட்ட வீடுகள்,பறித்து சாப்பிட கொய்யா,மா,மாதுளை,சப்போட்டா,நாவல்,பப்பாளி போன்ற பழவகைகள்,குடிக்க குடிக்க திகட்டாத இளநீர்,பதனீர்,என்னதான் பிஸ்ஸா பர்கர் என்று மேற்கத்திய உணவுக்கலாச்சாரம் தொற்றிக்கொண்டாலும் சுட்ட பனங்கிழங்கு,நுங்கு,தவன்,பனம்பழம் போன்ற தின்ன தின்ன சலிக்காத இயற்கை உணவு வகைகள் கடற்காற்றுடன் சேர்ந்து கலக்கும் தென்னைமரத்தின் சலசலத்த காற்று,தூரத்தே தெரியும் குட்டி குட்டி தீவுகள்,இத்யாதி,இத்யாதி..இவைகள்தான் எங்களூர்வாசிகளை பிக்னிக் பிரியர்களாக மாற்றி விட்டது என்றால் மிகை ஆகாது.ம்... என்றாலே தோட்ட பிக்னிக்,தீவு பிக்னிக் என்று தங்கள் விடுமுறை நாட்களை ஜமாய்த்து விடுவார்கள்.

பிக்னிக்கைப்பற்றி எங்களூர் பதிவரொருவர் பதிவிட்ட இந்த பதிவை படித்துபாருங்கள் புரியும்.

வழக்கம் போல் இந்த முறையும் ஊர் சென்று இருந்த பொழுது பிக்னிக் செல்ல தவறவில்லை.அங்கு கிளிக்கிய காட்சிகள் உங்கள் பார்வைக்கு.




வரிசை கட்டி நிற்கும் தென்னைமரகூட்டம் தென்னந்தோப்பை பசுமையாக்கிகொண்டுள்ளது.


தூரத்தே தெரியும் பனை மர வரிசைகள்.இனிப்பான பனம்பழம்,பனங்கிழங்கு,நுங்கு,பதனீர்.தவன்,பனங்குருத்து(சாப்பிட சுவையாக இருக்கும்),பனை ஓலை(அழகிய பெட்டிகள் கைவினைப்பொருட்கள் தயாரிப்பார்கள்),பனை நார்,பனை கழிவுகள் (எரிபொருளுக்காக),பனை மரச்சட்டங்கள் என்று பலவும் தரவல்ல அமுத சுரபி அல்லவா அவைகள்.

மனிதர்களுக்குத்தான் உடலில் கட்டிகள் தோன்றுமா என்ன?கட்டி தாவர இனத்தையும் விட்டு வைக்கவில்லை.முருங்கை மரம் ஒன்றின் கிளையில் பெரிதாக இருந்த ஒரு கட்டி ஆச்சரியப்படுத்தியது.உடனே என் கேமராவில் அதனை சிறைப்படுத்தி விட்டேன்.தூரக்கிளையில் தோன்றிய இக்காட்சியை உன்னிப்பாக கண்டு பிடித்து,என்னிடம் சொன்னதுமட்டுமில்லாமல் என்னை படம் எடுக்க தூண்டி,படம் எடுப்பதற்கு ஏதுவாக கிளையை கஷ்டபட்டு வளைத்து பிடித்து படம் எடுக்க உதவிய என் இரத்த பந்தங்களுக்கு எனது நன்றிகள்:)

இனி,பிக்னிக்கின் கிளைமாக்ஸ்,பொதுவாக பிக்னிக் சென்றால் சாப்பாடு சமைத்து அதனை பனை ஓலையில் செய்த பட்டையில் நிரப்பி பச்சை பனை ஓலை மணத்துடன் களறிக்கறி,தாளிச்சாவுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது உள்ள சுவை இருக்கிறதே..வார்த்தகளில் அடங்காது.கோழிகளில் மசாலா தடவி எண்ணெயில் பொரித்தோ சுட்டோ சாப்பிட்டும் மகிழ்வார்கள்.

இந்த முறை மீன் பிக்னிக்.தூரத்தே தெரியும் நாட்டுப்படகுகளுக்காக கரையில் காத்திருந்து படகு கரைக்கு வந்ததும் துள்ளிக்குதிக்கும் மீன்களை மொத்தமாக விலைக்கு வாங்கிக்கொள்வோம்.



தோட்டக்காராம்மாவிடம் மீனை சுத்தம் செய்ய கொடுத்து விட்டு ஹாயாக நீச்சல் குளத்தில் குளியலோ,கடற்கரையில் கால் நனைத்தலோ ஒரு புறம் நடக்கும்.




கொழு கொழுவென்ற சுவையான சுத்தம் செய்த பாறை மீனில் பதமாக மசாலா தடவுகிறார்கள்.
தீ மூட்டி மீனை சுட்டெடுக்கும் காட்சி.அடிக்கும் கடல்காற்றுடன் போட்டி போட்டு மீனை சுடுவது ஒரு சவால்தான்.பீச் காற்றிலேயே பீடி பற்ற வைப்போம் என்ற சினிமா வசனம் போல் கடற்காற்றிலேயே ,எந்த தடுப்பும் இல்லாமல் மீன் சுடுவது ஒரு சவால்தானே?
பக்குவமாக வெந்துள்ளதா என்று சுட்ட மீன்களை டிரேயில் போட்டு பரிசோதித்து விட்டுத்தானே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்?
சுட்ட மீன்கள் பறிமாறுவதற்கு ஏதுவாக பேப்பர் பிளேட்டில்.
எங்கள் குடும்பத்து வாலு மீனை சுவைத்துக்கொண்டே அடித்த கமெண்ட் என்ன தெரியுமா?சூடா இருக்கு..சுவையா இருக்கு..காரமா இருக்கு..ராகம் போட்டு பாடாத குறைதான்.
சூடாக சுவைத்த மீனுக்கு அப்புறம் நாவுக்கு இதமாக இளநீர்.தோட்டக்காரர் வெட்டித்தர தர ஒன்று இரண்டு என்று வயிறை நிரப்பிக்கொண்டோம்.
குடித்த இளநீருக்கப்புறம் காயை இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் வழுக்கையையும் விட்டு வைக்க மாட்டோம்.தேங்காய் வழுக்கையை எடுத்து சாப்பிட ஏதுவாக தேங்காய் மட்டையிலேயே செய்யப்பட்ட ஸ்பெஷல் ஸ்பூனையும் பாருங்கள்.


59 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

இதை படிப்பவர்களும் உங்ககூட சேர்ந்து சுற்றியதுப்போல இருக்கு ...நல்ல படங்கள.

புதிய வரவுகள்:இந்தியன்னு சொல்லவே கேவலமா இருக்கு,குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?-www.tvpmuslim.blogspot.com

செய்தாலி said...

நல்ல பிக்னிக்தான் சகோ
சுட்ட மீன் சுவை சூப்பரா இருக்கும்

திண்டுக்கல் தனபாலன் said...

சுகமான இனிய அனுபவத்தை படங்கள் மூலம் சொல்லி அசத்துட்டீங்க... பாராட்டுக்கள்...
நன்றி. (த.ம. 2)

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

Seeni said...

sako!

entha oorunnu sollaliye....

ramnad maavattamaa..?

oorai kannukku munnaal niruthitteenga....

Unknown said...

படங்கள் அருமை.. சுட்ட மீனை பார்த்தாலே நாவூ நீர் ஊருகிறது.. உங்க ஊர் பக்கம் ஒரு முறை பிக்னிக் வந்துவிடவேண்டியது தான்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்கநன்றி திருவாளப்புத்தூர் முஸ்லீம் .

MARI The Great said...

இளநீருக்குள் இருக்கும் வழுக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்..போன முறை இந்தியாவுக்கு வந்திருந்த போது ஒரு 40 இளநீர் குடிச்சுருப்பேன்..ஒண்ணுல கூட இந்த வழுக்கையை விடலையே ஹி ஹி!

(TM 3)

ஸாதிகா said...

சுட்ட மீன் சுவை சூப்பரா இருக்கும்//எனக்கு மீன் உணவு மிகவும் உகந்தது அல்ல.இருப்பினும் குடும்பத்தாருடன் இணைந்து உண்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.கருத்துக்கு மிக்க நன்றி சகோ செய்தாலி

பால கணேஷ் said...

ஆ....ங....ங்... நான் அழுவேன் இப்ப... பனம் பொருள்கள், பதநீர்... கடற்காற்று, குளியல். காரமான சுவையான மீன்... நான் கொடுத்து வைக்கலியே ஸாதிகாம்மா... நகரத்து நெரிசல்ல மூச்சுத் திணறிட்டிருக்கற என்னை மாதிரி ஆளுங்களுக்கு இதைப் படிக்கறப்பவே ரெண்டு காதுலயும் பொகை வருதே.... என்னமோ போங்க... நீங்களாவது அனுபவிச்சதுல சந்தோஷம்தான்.

vanathy said...

பார்க்கவே சூப்பரா இருக்கு. படங்கள் அழகோ அழகு.

Yaathoramani.blogspot.com said...

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
இப்படிப் போய் வந்தால்
நிச்சயம் டென்சனுக்கு
வழியே இருக்காது என நினைக்கிறேன்
படங்க்களுடன் பதிவு அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 5

அமர பாரதி said...

நல்ல பிக்னிக். எங்க எங்க ஊருன்னு சொல்லியிருக்கீங்க, ஆனா எந்த ஊருன்னு சொல்லலையே.

அமர பாரதி said...

நல்ல பிக்னிக். எங்க எங்க ஊருன்னு சொல்லியிருக்கீங்க, ஆனா எந்த ஊருன்னு சொல்லலையே.

மாதேவி said...

உங்க கூட தென்னம் தோப்புக்கு பிக்னிக் வந்து விட்டேன்.

நல்ல கொண்டாட்டம்.

குறையொன்றுமில்லை. said...

பிக்னிக் அனுபவம் சுவாரசியம். எஞ்சாய்

ஸாதிகா said...

sako!

entha oorunnu sollaliye....

ramnad maavattamaa..?
//// சகோ சீனி,கரெக்டாக கண்டு பிடித்து விட்டிர்களே! ராமனாதபுரம் மாவட்டமேதான்.அதன் அடுத்துள்ள கீழக்கரை.உங்களின் கவிதை வரிகளில் சில வாசகங்களை தோரணையை பார்க்கும் பொழுது நீங்களும் முகவை மாவட்டத்துக்காரர் என்று புரிந்து கொள்ள முடிகிறது.என் அனுமானம் சரிதானே?மிக்க நன்றி சீனி சகோ

ஸாதிகா said...

கருத்துக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் மிக்க நன்றி சகோ திண்டுக்கல் தனபாலன்.

ஸாதிகா said...

உங்க ஊர் பக்கம் ஒரு முறை பிக்னிக் வந்துவிடவேண்டியது தான்///காயல் பக்கமும் இந்த பிக்னிக் உண்டுதானே? கருத்துக்கு மிக்க நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

போன முறை இந்தியாவுக்கு வந்திருந்த போது ஒரு 40 இளநீர் குடிச்சுருப்பேன்///அடேங்கப்பா..இளநீரென்ரால் வரலாற்றுச்சுவடுகளுக்கு அத்தனை விருப்பமோ?கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

போன முறை இந்தியாவுக்கு வந்திருந்த போது ஒரு 40 இளநீர் குடிச்சுருப்பேன்///அடேங்கப்பா..இளநீரென்றால் வரலாற்றுச்சுவடுகளுக்கு அத்தனை விருப்பமோ?கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

என்னமோ போங்க... நீங்களாவது அனுபவிச்சதுல சந்தோஷம்தான்.//தங்கை பிக்னிக் சென்று வந்ததில் மகிழ்ந்து கருத்திட்டதில் மகிழ் நன்றி கணேஷண்ணா

ஸாதிகா said...

பார்க்கவே சூப்பரா இருக்கு. படங்கள் அழகோ அழகு.//கருத்துக்கு மிக்க நன்றி வானதி.

ஸாதிகா said...

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
இப்படிப் போய் வந்தால்
நிச்சயம் டென்சனுக்கு
வழியே இருக்காது என நினைக்கிறேன்///கண்டிப்பா ரமணி சார்.அதிலும் குடும்பத்தினருடன் தனியாக ,நட்புக்களுடன் தனியாக என்று போனாலும் இன்னும் மகிழ்வே.கருத்துக்கும்,ஓட்டுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

நல்ல பிக்னிக். எங்க எங்க ஊருன்னு சொல்லியிருக்கீங்க, ஆனா எந்த ஊருன்னு சொல்லலையே.//நான் கொடுத்துள்ள சுட்டியை சொடுக்கினாலே எந்த ஊர் என்று அறிந்திருப்பீர்களே அமரபாரதி.முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி அமர பாரதி.தொடர்ந்து வருகை தாருங்அக்ள்.

ஸாதிகா said...

உங்க கூட தென்னம் தோப்புக்கு பிக்னிக் வந்து விட்டேன்//வரிகளில் மிக்க மகிழ்ச்சி மாதேவி.இலங்கையிலும் இது போல் தென்னந்தோப்புக்கள் அதிகமுண்டுதானே?நன்றி

ஸாதிகா said...

பிக்னிக் அனுபவம் சுவாரசியம். எஞ்சாய்//பத்து நாட்கள் ஊரில் இருந்து நன்ராகவே எஞ்சாய் பண்ணி விட்டு வந்தாச்சு லக்ஷ்மிம்மா,

Seeni said...

allahu akbar!

naan saayalkudi pakkathula ulla-
oppilan kiraamam!

pathiluraithathukku mikkka nantri !
sako!

Mahi said...

ஆஹா! சூப்பர் பிக்னிக்கு! என்சொய்...என்சொய்!! :)))

Anonymous said...

நல்ல பிகனிக்! எனக்கு மீனெல்லாம் சரிவராதது. இளநீர் ஓ.கே. நல்ல பதிவு நல்வாழ்த்து. வரலாமே என் பக்கமும். நல்வரவு.
வேதா. இலங்காதிலகம்.

unknown said...

வணக்கம்
புகைப்படங்கள் அழகு
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

ராமலக்ஷ்மி said...

குதூகலமான பிக்னிக். சிறுவயதில் எங்களை டாப் திறந்த பேபிஆஸ்டின் காரில் பனைமரங்கள் நிறைந்த இடத்துக்கு அப்பா அழைத்துச் செல்வார்கள். பனைமரப் பிக்னிக் என்றே சொல்லுவோம். மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டது தங்கள் பகிர்வு.

ஸ்ரீராம். said...

மிகச் சுவையான பதிவு போல.... ! ஒரு வேலையாக கீழக்கரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சுமார் இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன்! வலப்பக்கம் தோப்பாக இருக்க இடதுபுறம் எதிர்பாராமல் ஒரு கட்டிடம் என்று ஆச்சர்யப் படுத்திய இடம்!

ரஹீம் கஸ்ஸாலி said...

ரசனையான பதிவு

ஹுஸைனம்மா said...

ம்ம்ம்.. அம்மா கொடநாடு போய் ரிலாக்ஸ் பண்ற மாதிரி, நீங்களும் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்திருக்கீங்க!!

ஆமா, இப்படியொரு அழகான தென்னந்தோப்பு -நீச்சல்குளம், பண்ணைவீடு வசதிகளோடு உங்களுக்கு இருப்பதைச் சொல்லவேயில்லியே!! :-))))

/தீவு பிக்னிக் //
போன வருஷம்தானே அந்தக் கொடுமை நடந்தது - படகு விபத்து!! மறக்கமுடியுமா!! :-((( இன்னும் தீவுக்கு பிக்னி போய்ட்டுதான் இருக்காங்களா மக்கள்?

VijiParthiban said...

ஓஓ... அருமையான அனுபவம் ..நல்ல பகிர்வு... எங்கள் வீட்டு தோட்டமும் அழகாக இருக்கும் ... தென்னைமரம், மா, பல, வழை , கொய்யா, சப்போட்டா பழம் என்று எல்லாமே கிடைக்கும்..... நீங்கள் சொன்னவுடன் தான் எனக்கும் சுட்ட மீன் சாப்பிடனும் போல் தெரிகிறது... இந்த முறை எங்கள் ஊருக்கு செல்லும் பொழுது மீன் சுட்டு சாப்பிட வேண்டும்... ஆமாம் இப்ப அதுவும் எங்களின் தோப்பிலே கிடைக்கும்.... நல்ல பதிவு....

அம்பாளடியாள் said...

கடலில் ஊறும் தண்ணீர் அளவு சொல்ல முடியாது சுட்ட மீனைக் கண்டதும் ஒரு கடலே வாயில ஊறுது பாருங்க :):)
வாழ்த்துக்கள் இந்த சுகம் இன்ப சுகம் இன்றுபோல் என்றுமே தொடரட்டும் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

கோமதி அரசு said...

அருமையான பிக்னிக் ஸாதிகா.
அவ்வப்போது இப்படி பிக்னிக் செல்வது, உடலுக்கும், மனதுக்கும் புத்தணர்ச்சி.

படங்கள் எல்லாம் அழகு.

சாந்தி மாரியப்பன் said...

உங்க கூட நானும் பிக்னிக் வந்த உணர்வு.. என்னதான் சொல்லுங்க, குடும்பத்தோட லூட்டியடிக்கற அனுபவமே சுவைதானே :-)

ஸாதிகா said...

நன்றி சகோ சீனி.

ஸாதிகா said...

ஆஹா! சூப்பர் பிக்னிக்கு! என்சொய்...என்சொய்!! :))).///நன்றி மகி.

ஸாதிகா said...

வேதா. இலங்காதிலகம்.///நன்றி சகோ வேதா. இலங்காதிலகம்.உங்கள் தேசம்தான் இளநீருக்கு புகழ்பெற்றதாயிற்றே:)

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செழியன்.

ஸாதிகா said...

தங்களுக்கு மலரும் நினைவுகளை இப்பதிவு கிளறி விட்டதில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி..

ஸாதிகா said...

வலப்பக்கம் தோப்பாக இருக்க இடதுபுறம் எதிர்பாராமல் ஒரு கட்டிடம் என்று ஆச்சர்யப் படுத்திய இடம்!//இந்த வரிகளைப்படித்ததும் எனக்கு அந்த இடத்தைப்பார்க்கணும் போல் உள்ளது ஸ்ரீராம். .தொடர் வருகைக்கு மிக்கநன்றி.

ஸாதிகா said...

பதிவை ரசித்த ரஹீம் கஸ்ஸாலிக்கு நன்றி.

ஸாதிகா said...

ம்ம்ம்.. அம்மா கொடநாடு போய் ரிலாக்ஸ் பண்ற மாதிரி, நீங்களும் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்திருக்கீங்க!!
//யம்மாடி ஹுசைனம்மா..இந்த பிக்னிக்கை கொடநாடுடன் கம்பேர் பண்ணுகின்ரீர்களே.நான் எங்கே போய் முட்டிக்கொள்ள?ஒரு முறை கீழை வாருங்கள்.உங்களையும் அழைத்து செல்லுகிறேன்.

ஸாதிகா said...

விரிவான பின்னூட்டலுக்கு மிக்க நன்றி விஜிபார்த்திபன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அம்பாளடியாள்.

ஸாதிகா said...

அவ்வப்போது இப்படி பிக்னிக் செல்வது, உடலுக்கும், மனதுக்கும் புத்தணர்ச்சி.
//கண்டிப்பாக.சென்னையிலும் கூட குடும்பத்தினருடன் பெரிய குரூப்பாக சென்று வருவோம்.கருத்துக்கு மிக்க நன்றி கோமதிம்மா.

ஸாதிகா said...

உங்க கூட நானும் பிக்னிக் வந்த உணர்வு.//அந்த உணர்வை இப்பதிவு ஊட்டியதில் மிக்க மகிழ்ச்சி அமைதிச்சாரல்.மிக்க நன்றி.

Athisaya said...

வயக்கம் சொந்தமே!அப்பிடியே எங்க ஏரியா அமைப்பும் படங்களும்.அருமை.ஆனாலும் இப்பிடி தராம சாப்பிட்டீங்களே!!!வாழ்துக்கள் இப்பகிர்விற்காய்.சந்திப்போம் சொந்தமே!

Angel said...

பிக்னிக் அனுபவம் அருமை ஸாதிகா .சொர்ர்க்கமே என்றாலும் நம்மூரில் பிக்னிக் போவது போல வருமா .அப்பா அடிக்கடி கீழக்கரை பற்றி சொல்வாங்க
அங்கிருந்துதான் மாசி கொண்டாருவாங்க .
சுட்ட பனம்கிழங்கு சாப்பிட்டதே இல்லை .டேஸ்டியா இருக்குமா .

Anonymous said...

வந்தேன்...இனிய வாரஇறுதி அமையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

நிரஞ்சனா said...

அட... பிக்னிக் அனுபவங்களை ரொம்ப ரொம்ப ரசிச்சேன் - மீன் தவிர. படங்களோட உங்கள் எழுத்தில படிக்கறப்ப ரொம்ப ரசிக்க முடியுது. சூப்பரான பகிர்வுக்கா.

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பதிவு
இங்க சிக்கன் சுடுவோம் நீங்க மீன் சுடுரீங்கள

நடக்கட்டும்


நன்றி,
ஜோசப்
--- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Seeni said...

இந்த பதிவை வலைச்சரத்தில் -
அறிமுகம் செய்துள்ளேன்!

வருகை தாருங்கள்!
http://blogintamil.blogspot.sg/

”தளிர் சுரேஷ்” said...

பிக்னிக் அனுபவங்கள் அருமை! நன்றி!
வலைச்சரம் மூலம் முதல் வருகை! தொடர்கிறேன்!

இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...