July 21, 2012

ரயில் பயணம்பொதுவாக தென் மாவட்டங்களுக்கு,குறிப்பாக ராமேஸ்வரத்துக்கு சென்னையில் இருந்து செல்லும் சேது எக்ஸ்பிரஸ்,இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போன்ற வண்டிகளில் வடநாட்டவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்த முறை அந்த வண்டியில் பயணம் செய்து வெந்து நொந்து போய் விட்டேன்.

வழக்கம் போல் படுக்கையுடன் கூடிய முன் பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மெண்டில் பயணிக்கையில் எதிரே வட நாட்டு வாலிபர்கள் கூட்டமாக கூட்டமாக ஏறியது கண்டு மனம் பக் என்றாகி விட்டது.
ரயில் புறப்பட ஆரம்பிக்கும் முன்னரே இவர்களது லூட்டி ஆரம்பித்து விட்டது.ஒரு பெரிய பாலித்தீன் கவர் நிறைய உடைக்கபடாத வேர்கடலைகளை உரித்து சாப்பிட்டு அதன் தோல்களை கொஞ்சமும் மன சாட்சி இல்லாமல் கம்பார்ட்மெண்டுக்குள் போட்டுக்கொண்டு அவர்களது அட்டூழியத்தை அமர்க்களமாக ஆரம்பித்து விட்டனர்.

ரயில் வாசலை மூடாமல் திறந்து வைத்துக்கொண்டு இருந்தனர்.சிறு குழந்தையுடன் பயணித்த ஒருவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

கெக்கே பிக்கே சிரிப்புகளுடன் ஆளுக்கொரு செல்போனில் ஹிந்தி பாடல்களை சப்தமாக ஒலிக்க விட்டு அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்தனர்.கம்பார்ட்மெண்டில் கூவி கூவி விற்கும் பழக்காரர்,சமோசா விற்பவர்,சிக்கி விற்பவர் ஒருவரையும் விட்டு வைக்காமல் கேலியும் கிண்டலும் தூள் பறந்தது.

சைட் அப்பரில் நான்கு இளைஞர்கள் கால்களை தொங்க விட்டுக்கொண்டு சப்தமாக பேசி ஓ வென்று சிரித்து அனைவரையும் எரிச்சல் படுத்தினார்கள்.ஹைலைட்டாக தலை மேல் வெள்ளரிக்காய்களை கூறு கட்டி கூடையில் வைத்து எடுத்து செல்லும் வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் பெண்மணி இவர்களை தாண்டி செல்லும் போது கூடை மேல் இருந்த வெள்ளரிக்காய்களை நைசாக லபக்கியதைக்கண்டு மனம் அதிர்ந்து விட்டது.கண்கள் படுக்கைக்கு கீழே உள்ள நகைகள் இருக்கும் எங்கள் பெட்டியின் மீது என் பார்வை ஜாக்கிரதையாக ,பயமுடன் சென்று வந்தது.

தூங்கும் நேரம் வந்த பொழுது விளக்குகளை அணைக்காமல் பான் பராக்கை மென்று கொண்டே ரம்மி விளையாட ஆரம்பித்து விட்டனர்.செல்போனில் ஹிந்திபாடல்கள் வேறு.இவர்களைக் கேட்பதற்கு ஆளேஇல்லை.

ஹேண்ட் பேகில் இருந்த சைக்கிள் செயின்களை எடுத்து முக்கியமான பெட்டிகளை கட்டி வைத்து இருந்தாலும் மனம் முழுக்க பயம் நிறைந்திருப்பதை தடுக்க முடியவில்லை.வேறு கம்பார்ட்மெண்டுகளில் இருந்து இவர்களின் சகாக்கள் கூட்டம் கூட்டமாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.சிகரெட் நெடி தூங்கியவர்களைக்கூட எழுப்பி இரும வைத்து விட்டது.கையில் சார்ட்டுடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த டி டி ஆர் கூட இதைப்பற்றி கேட்கவில்லை.

தூக்கம் வரும் கண்களை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு பெட்டிகளை பாதுகாக்கும் நிமித்தமாக தூக்கத்தை தியாகம் பண்ண வேண்டி இருந்தது.

ரயில் ராமனாதபுரத்தை நெருங்கும் பொழுது ரயிலில் கொடுத்த போர்வைகளில் நல்லதாக தேர்ந்தெடுத்து அதனை கொண்டு வந்திருந்த பையில் அடுத்தவர் பார்க்கிறார்களே என்ற லஜ்ஜை இன்றி எடுத்து வைத்துக்கொண்டதை பார்க்கும் பொழுது இழுத்து நான்கு சாத்து சாத்த வேண்டும் போல் இருந்தது.

ஸ்டெஷன் வந்ததும் பெட்டிகளை எண்ணி காரில் வைத்துக்கொண்ட பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.

இரவு முழுக்க அனுபவித்த தூக்கமில்லா திகில் பயண அவஸ்தையே வேண்டாம் என்று திரும்பி வரும் பொழுது ஆம்னி பஸ்ஸில் திரும்பி சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்து நாளிதழை புரட்டும் பொழுது இந்த செய்தி கண்களில் பட்டது.படித்துப்பாருங்கள்.


66 comments:

Unknown said...

இது போன்ற தொல்லை அதிகரித்து வருவது மன வருத்தத்தை தருகிறது.அதே போல் கேரளா சேர்ந்த

பல ..ய்கள் கூட்டமாக ஏறினாலே இதே தொல்லைதான்.

Unknown said...

இது போன்ற தொல்லை அதிகரித்து வருவது மன வருத்தத்தை தருகிறது.அதே போல் கேரளா சேர்ந்த

பல ..ய்கள் கூட்டமாக ஏறினாலே இதே தொல்லைதான்.

Unknown said...

இது போன்ற தொல்லை அதிகரித்து வருவது மன வருத்தத்தை தருகிறது.அதே போல் கேரளா சேர்ந்த

பல ..ய்கள் கூட்டமாக ஏறினாலே இதே தொல்லைதான்.

MARI The Great said...

என்ன செய்யலாம் இவர்களை?
(TM 2)

MARI The Great said...

என்ன செய்யலாம் இவர்களை?
(TM 2)

CS. Mohan Kumar said...

ரயிலில் உடன் பிரயாணம் செய்வோருக்கு சிரமம் தர கூடாது என்கிற எண்ணம் பலருக்கும் இல்லை தான் :((

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா... தப்பித்தோம்.. (த.ம. 4)

Yaathoramani.blogspot.com said...

எழுத்தில் படிக்கவே சங்கடமாகத்தான் இருந்தது
உங்கள் சங்கட நிலைமையைப் புரிந்து கொள்ள முடிந்தது
இறுதி பத்திரிக்கைச் செய்தி அதைவிட அதிர்ச்சி
ரெயில்வே போலீஸ் வசம் அவர்கள் ரகளையைச் சொல்லி
இருக்கலாமோ எனப் பட்டது
மனம் சங்கடப்படுத்திப் போனாலும்
நல்ல எச்சரிக்கைப் பதிவு

Yaathoramani.blogspot.com said...

tha.ma 5

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு பயணத்தை இனிமையாக அனுபவிக்க விடாமல் செய்த இவர்களை என்ன செய்யலாம்?.. ஆனால் இவங்கல்லாம் யாரு சொன்னாலும் கேக்க மாட்டாங்கன்னு டிடியாருக்கும் தெரியும். அதான் சும்மா இருந்துட்டார். வடக்கேயுள்ள ரயில்களின் நடக்கும் அட்டூழியங்கள் அதிகமாம்..

Avargal Unmaigal said...

//இரவு நேரத்தில் விழிப்புடன் இருக்க தமிழக போலீஸார் வேண்டுகோள்//

தூங்கும் நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டுமா? பாதுகாப்பு இல்லாத மாநிலமாக போய்விட்டதா?

இந்த மாதிரி இரவு பயண நேர்த்தில் ஆட்டம் போடும் வாலிபவர்களை டிடி ஆர் அடுத்து வரும் ஸ்டேசனில் வரும் போலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து அந்த ஸ்டேசன் வந்தது இறக்கி வைத்து நாலி சாத்து சாத்தி அடுத்தநாள் அனுப்ப வேண்டும் அப்பதான் கொஞ்சமாவது புத்திவரும்

துளசி கோபால் said...

அடப்பாவிகளா? அடுத்தவனைக் கஷ்டப்படுத்துவதில் இவ்வளவு குஷியா? :(

Seeni said...

ada pakkikalaa....!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது மிகவும் அநியாயம் தாங்க. படிக்கும் போதே அவர்கள் மேல் எனக்கு எரிச்சல் ஏற்படுகிறது.

சுத்தமாக நாகரீகம் இல்லாத, அடுத்த சக பயணிகளின் கஷ்டங்களை உணராத ஜன்மங்கள்.

வடக்கே தான் இதுபோல RESERVED COMPARTMENTS களில் கூட UNRESERVED PERSONS ஏறி தொல்லை கொடுப்பார்கள். இப்போது அது இங்கும் தென்னக இரயில்வேயிலும் ஆரம்பித்துள்ளது போலிருக்கு.

கொடுமை தான்.

அதுவும் பத்திரிகைச் செய்திகளைப் படித்தது மேலும் பயங்காமாகவே உள்ளது. ;(

நல்லதொரு அனுபவப்பகிர்வு.

vanathy said...

It is very scary to read. I never travelled by train when I was in India.

enrenrum16 said...

கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே இது போன்றவர்களைத் திருத்த முடியும். சுகமான ரயில்பயணத்தில் இப்படியொரு பகீர் அனுபவமா? எச்சரித்தமைக்கு நன்றிக்கா.

TM-7

குறையொன்றுமில்லை. said...

இவங்கல்லாம் இப்படி நடந்து கொள்வத பாத்தா ரயிலில் பயணம் செய்யவே பயம்மாதான் இருக்கு.

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆரிஃப்

ஸாதிகா said...

ரயிலில் உடன் பிரயாணம் செய்வோருக்கு சிரமம் தர கூடாது என்கிற எண்ணம் பலருக்கும் இல்லை தான் :((///உண்மைதான் சகோ..கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

என்ன செய்யலாம் இவர்களை? //நல்ல கேள்விதான் வரலாற்றுசுவடுகள்.வருகைக்கு நன்றி!

ஸாதிகா said...

//அப்பாடா... தப்பித்தோம்..//ஸ்டேஷனில் இறங்கி பெட்டிகளை சரிபார்த்து காரில் ஏற்றி அமர்ந்த பிறகு இந்த வார்த்தைகள் தான் மனதில் உதித்தது.மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ஸாதிகா said...

ரெயில்வே போலீஸ் வசம் அவர்கள் ரகளையைச் சொல்லி
இருக்கலாமோ எனப் பட்டது//செய்து இருக்கலாம்தான் போலும்.கருத்துக்கு மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

வடக்கேயுள்ள ரயில்களின் நடக்கும் அட்டூழியங்கள் அதிகமாம்..//ஹ்ம்ம்ம்...கொலை,கொள்ளை சம்பவங்களில் வடக்கத்திக்காரகள் சமப்ந்தப்படுத்தி பத்திரிகை செய்திகளாக படிக்கும் பொழுது பயமாகத்தான் உள்ளது.இதில் நல்லவர்களைக்கூட தேவை இல்லாமல் சந்தேகப்பாடவேண்டியுள்ளது.கருத்துக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்.

ஸாதிகா said...

இந்த மாதிரி இரவு பயண நேர்த்தில் ஆட்டம் போடும் வாலிபவர்களை டிடி ஆர் அடுத்து வரும் ஸ்டேசனில் வரும் போலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து அந்த ஸ்டேசன் வந்தது இறக்கி வைத்து நாலி சாத்து சாத்தி அடுத்தநாள் அனுப்ப வேண்டும் அப்பதான் கொஞ்சமாவது புத்திவரும்///இப்படி செய்தால் உண்மையில் குற்றங்கள் குறைய நிறைய வாய்ப்புண்டு.அவர்கள் உண்மைகளுக்கு நன்றிகள்.

ஸாதிகா said...

அடப்பாவிகளா? அடுத்தவனைக் கஷ்டப்படுத்துவதில் இவ்வளவு குஷியா? :(//அப்படித்தான் தோன்றுகிரது சகோ துளசி.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ada pakkikalaa....!//:)நன்றி சீனு.

ஸாதிகா said...

வடக்கே தான் இதுபோல RESERVED COMPARTMENTS களில் கூட UNRESERVED PERSONS ஏறி தொல்லை கொடுப்பார்கள். இப்போது அது இங்கும் தென்னக இரயில்வேயிலும் ஆரம்பித்துள்ளது போலிருக்கு. ////சிலர் ரிசர்வ் செய்யாமல் உடகார்ந்து கொண்டு அழைச்சாட்டியம் பண்ணியதை கண்டுள்ளேன்.டி டி ஆர் அவருடன் மல்லுக்கு நின்று விரட்டி அனுப்பியதை வேடிக்கை பார்த்த சம்பவமும் உண்டு.ந்ன்றி வி ஜி கே சார்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி பானு.

ஸாதிகா said...

இவங்கல்லாம் இப்படி நடந்து கொள்வத பாத்தா ரயிலில் பயணம் செய்யவே பயம்மாதான் இருக்கு.////உண்மைதான் லக்ஷ்மிம்மா.நன்றி.

Anonymous said...

வாசிக்கும் போதே ரயிலில் உட்கார்ந்தவர் பட்ட அவத்தையாக இருந்தது.
இவ்வுலகில் வாழ்வதே இப்படியான அவத்தையாகவே உள்ளது.
அனுபவப் பகிர்வு நல்லது. பிறரிற்கு உதவும்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஹுஸைனம்மா said...

வரவர ரயில் பயணங்கள், முன்காலத்தைப்போல இனிமையாகவே இருப்பதில்லை. ரிஸ்க் என்றாலும், சாலைப் பயணம்தான் மேற்கொள்ளவேண்டி வருகிறது.

Radha rani said...

நல்ல பகிர்வு ஸாதிகா..இந்த அவஸ்தை எல்லாம் வேண்டாம்னு தான் நான்கு சக்கர வாகனம் நிறைய புழக்கத்திற்கு வந்துடுச்சோ..

mohan baroda said...

Generally, it is horrible to travel by 2nd class compartments from anywhere in north towards south and travelling by southern railways used to be a pleasant one and your experience is an off shoot of influx of north population in south. This is just a beginning and days are not far away to realize why biharis are hatred by the mumbaikars.

mohan baroda said...

Generally, it is horrible to travel by 2nd class compartments from anywhere in north towards south and travelling by southern railways used to be a pleasant one and your experience is an off shoot of influx of north population in south. This is just a beginning and days are not far away to realize why biharis are hatred by the mumbaikars.

மகேந்திரன் said...

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத
இவர்கள் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
இரயில் பயணமே சலித்துப் போகும் அளவுக்கு...

என்னுடைய முதல் வருகை தங்களின் தளத்திற்கு..
வந்ததுமே ஒரு காட்டமான பதிவு...
வாழ்த்துக்கள் சகோதரி..

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ வேதா இலங்கா திலகம்.

ஸாதிகா said...

லை. ரிஸ்க் என்றாலும், சாலைப் பயணம்தான் மேற்கொள்ளவேண்டி வருகிறது.//கரெக்ட் ஹுசைனம்மா.என் மனதில் உதித்ததை சொல்லி விட்டீர்கள்.நன்றி.

ஸாதிகா said...

தான் நான்கு சக்கர வாகனம் நிறைய புழக்கத்திற்கு வந்துடுச்சோ..//இருக்க்கலாம்.வருகைக்கு மிக்க நன்றி ராதாராணி.

ஸாதிகா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ மோகன்.

ஸாதிகா said...

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத
இவர்கள் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
இரயில் பயணமே சலித்துப் போகும் அளவுக்கு///உண்மைதான் சகோ மகேந்திரன்.முதல் வருகைக்கும்,பின் தொடர்தலுக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப வருத்தமாகவே இருக்கிறது. ரயில் பயணம் என்பது இனிமையான ஒன்று. அதனை அனுபவிக்கவிடாமல் இப்படி அல்லல்படுத்துவோரை மக்களே சேர்ந்து விரட்டியடிக்க வேண்டும். அவர்களுக்கு வல்ல இறைவன் தகுந்த தண்டனை தருவான்.

முற்றும் அறிந்த அதிரா said...

ரயில் பயணம், ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும்...

நோன்பு எப்படிப் போகுது ஸாதிகா அக்கா?

ஸ்ரீராம். said...

மிகக் கொடுமையான அனுபவமாக இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. சென்னை மாநகர பஸ்களில் மாணவர்கள் பஸ்ஸையே தட்டித் தட்டித் தாளம் போட்டு செய்யும் ஆர்ப்பாட்டங்களே தாங்க முடியாது. இந்த மாதிரி நெடும்பயனங்களில் இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க டி டி ஆருக்குக் கூட முடியவில்லை என்பதும் நெருடுகிறது.

விச்சு said...

ரொம்ப ஜாக்கிரதைதான் நீங்கள். வேறு வழியுமில்லை. நம் பொருட்களை நாம்தான் பாதுகாக்க வேண்டியுள்ளது. மற்றவர்களை மதிக்காத குணம் உள்ளவர்கள் மனிதர்களே அல்ல.

VijiParthiban said...

ஒரு பயணத்தின் பொழுது எவ்வளவு தொல்லைகள் இருக்கு என்பதை பற்றி உங்களின் எழுத்துக்களின் மூலம் தெரிகிறது... படிக்கும் பொழுதே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.... ஆமாம் இவ்வளவு சங்கடங்களை கொடுக்கும் இவர்களை என்ன செய்வது....

கோமதி அரசு said...

நாங்கள் வட மாநிலங்களுக்கு போகும் போது இந்தமாதிரி கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம்.

இந்த முறை அப்படி எங்களை கீழே இறங்க விடாமல் கஷ்டப்படுத்தியவர்களிடமிருந்து காப்பாற்றிய இள வயதினரும் வட மாநிலத்தவர்கள் தான்.

பால கணேஷ் said...

அடுத்து வந்த ஏதாவது ஸ்டேஸன்ல அவங்க புகை பிடிச்சதை யாரும் புகார் பண்ணைலயா ஸாதிகாம்மா? பண்ணி அதுங்களை கம்பார்ட்மெண்டை விட்டு துரத்திருக்கலாமே? இதுமாதிரி அவஸ்தைய நான் அனுபவிச்சதில்லங்கறதால உங்க அனுபவம் படிக்கறப்ப பாவமாவும் அவங்க மேல கோபமாவும் இருந்துச்சு.

நிரஞ்சனா said...

படிக்கவே பகீர்ன்னு இருந்துச்சுக்கா... இவங்க அராஜகத்தால உறக்கம் கெட்டு எவ்வளவு அவஸ்தைப்பட்ருக்கீங்க... யார் தண்டிக்கறது இவனுங்களை...?

கோமதி அரசு said...

ஸாதிகா, உங்களுக்கு ரமலான் நோன்பு நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

இரயில் பயணம் பற்றி அறிந்தேன்.
என் பையன் ஹாஸ்டல் போய் சேருவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிடும். பாஸ்போட், பணம் எல்லாம் ஒழுங்கா வையுன்னு இரண்டு நாள் பயணம் முழுவதும் போனில் சொல்லி கொண்டே இருப்பேன்.

பக்கத்து சீட்டில் யார் என்னனு விசாரிப்பேன்.

Jaleela Kamal said...

கல்யாணத்துக்கு நகை எடுத்து செல்பவர்கள் எல்லாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும்.

pudugaithendral said...

ரொம்ப கஷ்டம். :((

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஷேக் தம்பி.

ஸாதிகா said...

ரயில் பயணம், ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும்...

நோன்பு எப்படிப் போகுது ஸாதிகா அக்கா?//பயணம் என்றாலே ஜாக்கிரதை அதிகம் வேண்டும்.அதிலும் இந்த ரயில் பயணத்தில் திருட்டு மிகவும் ஜாஸ்தி.கருத்துக்கு நன்றி அதீஸ்.

ஸாதிகா said...

மிகக் கொடுமையான அனுபவமாக இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. சென்னை மாநகர பஸ்களில் மாணவர்கள் பஸ்ஸையே தட்டித் தட்டித் தாளம் போட்டு செய்யும் ஆர்ப்பாட்டங்களே தாங்க முடியாது.//இதனைக்கூட ஒரு பதிவாக எழுதலாம் ஸ்ரீராம். கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ரொம்ப ஜாக்கிரதைதான் நீங்கள்.//சில சமயம் கோட்டையும் விட்டு இருக்கிறேன் விச்சு சார்:( கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

தொடர்ந்து வருகை தந்து கருத்தளித்து வரும் சகோ விஜி பார்த்திபனுக்கு இதய நன்றிகள்.

ஸாதிகா said...

இந்த முறை அப்படி எங்களை கீழே இறங்க விடாமல் கஷ்டப்படுத்தியவர்களிடமிருந்து காப்பாற்றிய இள வயதினரும் வட மாநிலத்தவர்கள் தான்.//நல்லவர்களும் இருக்கின்றார்கள்தான் .ஆனால் இப்படி சிலரை காணும் பொழுது அனைவரையும் சந்தேகக்கண்ணோடுதான் பார்க்க வேண்டியுள்ளது.ஆனால் எப்பொழுது ஜாக்கிரதை உணர்வு அவசியம் .நன்றி கோமதியம்மா.

ஸாதிகா said...

உங்க அனுபவம் படிக்கறப்ப பாவமாவும் அவங்க மேல கோபமாவும் இருந்துச்சு.//அருமையான கருத்துக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

நிரூ என் பதிவை படித்து விட்டு என்னை விட காரமாகிட்டீங்களே? நன்றி நிரூ.

ஸாதிகா said...

ரமலான் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோமதியம்மா.

ஸாதிகா said...

என் பையன் ஹாஸ்டல் போய் சேருவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிடும். பாஸ்போட், பணம் எல்லாம் ஒழுங்கா வையுன்னு இரண்டு நாள் பயணம் முழுவதும் போனில் சொல்லி கொண்டே இருப்பேன்.

பக்கத்து சீட்டில் யார் என்னனு விசாரிப்பேன்.//இதே மனோ பாவம்தான் எனக்கும் ஜலி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி புதுகைத்தென்றல்.

ராமலக்ஷ்மி said...

சங்கடமான பயணம்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ரமலான் வாழ்த்துகள்!

Rathnavel Natarajan said...

ரயில் பயணங்களில் உள்ள சிரமங்கள். ஒரு அனுபவப் பதிவு.
படித்துப் பாருங்கள். நன்றி திருமதி ஸாதிகா.