July 1, 2012

ரோல்ஸ் ராய்ஸ் கார்டிஸ்கி:தலைப்பை பார்த்ததும் "என்னக்கா இந்தக்கார் வாங்கப்போறீங்களா?"என்று ஹுசைனம்மா,ஸ்டார்ஜன் போன்றோர் நக்கல் கமண்ட் போட்டு விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இந்த டிஸ்கி.இந்தக்கார் வாங்கும் அளவுக்கு வசதியோ,தகுதியோ,ஆசையோ இல்லை என்று பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்)

படிப்பு முடிந்ததும் ஐ டி கம்பெனியில் வேலை,சொந்தவீடோ,இருக்கும் வீட்டை ரிப்பேர் பண்ணவோ,ரயில் நிலையத்தில் இருந்து இரண்டே நிமிடம் என்று தொலைக்காட்சிகளில் கூவி கூவி விற்கும் மலிவு விலை பிளாட்டை வாங்கிப்போடும் எண்ணமோ,அட அம்மாவின் வெற்றுக்கழுத்துக்கு ரெண்டு சவரனில் ஒரு செயினோ வாங்கிக்கொடுக்க மனதில்லாமல்,இவ்வளவு ஏன் வேலைதான் கிடைத்து விட்டதே காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்ற எண்ணம் தலைதூக்காமல் இருக்கும் இன்றைய இளைய தலை முறையினருக்கு கார்தான் உயிர் மூச்சு.அதிலும் சென்னை போன்ற நகரில் வாழ்பவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.

ஐந்தாயிரம் ரூபாய் வாடகையில் சிறு பிளாட் எடுத்து வசிப்பவன்,சற்றும் தயங்காமல் பதினைந்தாயிரம் ஈ எம் ஐ ஆக கட்ட தயக்கப்படுவதே இல்லை.அவ்வளவு ஏன் மேன்ஷன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்க்கை ஒட்டுபவன் கூட சந்தினுள் தன் காரை பார்க் பண்ணி வைத்துக்கொள்கிறான்.அந்தளவு இன்றைய மனிதனின் வாழ்க்கைக்கு அந்தஸ்தாக போய் விட்டது இந்தநாற்சக்கரவாகனம்.

சாமானியப்பட்டவர்களுக்கே இப்படி என்றால் பணத்தில் புரளும் பிரபலங்களைப்பற்றி சொல்லவா வேண்டும்.ஆடி,பி எம் டபிள்யூ,மெர்ஸிடஸ் பென்ஸ்,ரேஞ்ச்ரோவர்,செரா போன்ற பல லட்சங்களை கோடிகளை கொட்டிக்கொடுத்து வாங்கிய வாகனங்கள் சென்னையின் கரடு முரடு சாலையை அலங்கரித்துக்கொண்டிருப்பது அதிகரித்து வந்தாலும் இப்பொழுது பணக்காரர்களின் ராஜபரம்பரையினரின் அந்தஸ்த்து காரான ரோல்ஸ்ராய்(Rolls-Royce) கார் பவனி வர ஆரம்பித்து விட்டது.ஆம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிரமாண்டமான கார்.தமிழகத்திற்கு வந்திருக்கும் முதல் ரோல்ஸ்ராய்ஸ்.திரை உலகினரை மட்டுமல்லாமல்,தகுதியுடையோரையும் ஏக்கத்துடன் திரும்பி பார்க்கவைக்கும்.

இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் ஆகிய இருவராலும் 1906-ல் ஆரம்பிக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் புகழ் பெற்றது .ஆரம்பத்தில் காலத்தில் இங்கிலாந்து அரசே ஏற்று நடத்தினாலும் பின்னர் தனியாருக்கு சொந்தமாகி இப்போது பிரபல BMW கார் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது. பெரும் பணக்கார,அந்தஸ்த்துள்ள வி வி வி ஐ பிக்களுக்காக தாயாரிக்கப்பட்டு,அவர்களால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வரும் புகழ்பெற்ற வாகனமாகும்.

இந்தியாவில் மும்பை டெல்லி.ஹைதராபாத் போன்ற இடங்களில் பிரமாண்டமான ஷோரூம்களை திறந்து விறபனை செய்யப்பட்டு வருகின்றது.

பல்வேறு முன்னணி கார் நிறுவங்களின் டீலராக இருக்கும் குன் மோட்டார்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தை அடுத்து விரைவில் சென்னையிலும் ஷோ ரூமை திறக்க உள்ளது.

உலகின் மதிப்புமிக்க காராக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அரசப் பரம்பரையினர், பிரபல நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும்தான் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க முடியும்.உலகில் உள்ள பெரும் புள்ளிகளிடம் மட்டுமே இருக்கக்கூடிய இந்த கார் யாரிடமும் பணம் கோடி கோடியாக கொட்டிக்கிடந்தாலும் அவ்வளவு சுலபத்தில் அனைவராலும் வாங்கி விட இயலாது.வாங்குபவர்களில் பின்புலம்,குடும்பம் ,பெரும் புள்ளிகளுக்கு காரை விற்பனை செய்வதால் தன் நிறுவனத்திற்கு கிடைக்கவிருக்கும் புகழ்போன்றவற்றை தீர விசாரித்த பிறகே அதனை விற்பனை செய்யும் கொள்கையை இந்நிறுவனம் கடைப்பிடித்து உலகில் தன் நிறுவனத்திற்கான மதிப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புதிதாக உற்பத்தியாகும் காருக்குத்தான் இத்தனை விலை என்றில்லை
பிரிட்டன் நாட்டில் 1915 முன்பாக தயாரிக்கப்பட்ட ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் அண்மையில் 3.5 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போய் சரித்திரம் படைத்துள்ளது.

பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதற்கு புக் செய்ய சென்றுள்ளார். வழக்கம்போல் வாடிக்கையாளரின் தகுதி குறித்து ஆராய்ந்த ரோல்ஸ் ராய்ஸ், உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போதிய பின்புலம் இல்லை என்பதை கூறி கார் தர மறுத்துவிட்டது.

உலகின் ஒவ்வொரு பெரும்பணக்காரரும் விரும்பும் விஷயங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் காரை இந்தியாவில் திரைஉலகத்தினர் சிலர் சொந்தமாக்கி வைத்துள்ளனர்.ஆமிர் கான்,அமிதாப்பச்சன்,தயாரிப்பாளர் விது வினோத்சோப்ரா,சஞ்சய்தத் குடும்பத்தினர் போன்ற சொற்பசிலரே வைத்திருக்கின்றனர்.

கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தின் வாரிசான மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் 90ஆவது பிறந்தநாளுக்காக 5 கோடி மதிப்புள்ள காரை அவரின் அறக்கட்டளை சார்பாக பரிசளிக்கப்பட்ட்து.

பிரபல ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லரி குழுமத்தினர் பிரிட்டனில் இருந்து பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்தனர்.

எர்ணாகுளத்தை சேர்ந்த பிரபல கல்வி குழுமங்களின் தலைவரான டாக்டர் ஜிபிசி.நாயரும் இக்காருக்கு சொந்தக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

மறைந்த சாய்பாபாவும் இக்காருக்கு சொந்தக்காரராக இருந்திருகின்றார்.சாய் பாபாவின் காரை மும்பை பந்த்ரா பகுதியை சேர்ந்த டொயோட்டோ டெக் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இர்பான் மொகுல் விலைக்கு வாங்கி உள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் பிரபல பாப் பாடகர்

பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டேல்லன்

அமெரிக்கா பாடகி ஆரோன் ப்ரெஸ்லி

புருணை சுல்தான்

பிரன்ஞ்ச் நடிகை brigitti bardot

பிரிட்டன் பாடகி ஜான்லெனான்

பிரான்ஸ் தொழிலதிபர் sir alan sugar

இங்கிலாந்து பாடகர் ஜேசன் கே

ஜிம்பாப்வே அதிபர் robert mugambe

அமெரிக்கபாடகி டிட்டி மற்றும் கிறிஸ்டினா ஆகீலேரா

பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம்

அமெரிக்க நடிகை எட்டி மர்பி

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் டோனால்ட் டிரம்ப்

அமெரிக்காவைச்சேர்ந்த டான்ஸர் மைக்கேல் ஃப்லேட்லி

பிரிட்டனை சேர்ந்த இசையமைப்பாளர் imon cowe போன்ற பிரபலங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர்கள் என்ற பெறுமையை தட்டிச்செல்கின்றனர்.

உலகில் பல லட்சம் அமெரிக்க டாலர்களை விலையாக கொண்ட ரோல்ஸ்ராய்ஸ்காருக்கு நிகரான ,அதனை விட பலமடங்கு அதிகம் விலையுள்ள சொகுசு கார்களான Lamborghini Reventon,Aston Martin One,Bugatti Veyron,agani Zonda Clinque Roadster ,Ferrari Enzo ,Porsche Carrera போன்ற பிரமிக்க வைக்கும் கார்கள் உலகின் பணக்கார நாடுகளில் கம்பீரமாக வலம் வந்தாலும் ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு தனி மவுசு என்பதுதான் உண்மை.இதற்கு காரணம் தரம்,பயன்பாட்டாளாருக்கான வசதிகள் மட்டுமில்லாமல் அந்த நிறுவனத்தின் கொள்கை ,கட்டுப்பாடும் காருக்கான ராஜமரியாதைக்கு காரணங்களாகும்.

கோடிகளை கொட்டிக்கொடுத்து இக்காரை சொந்தமாக்கி தார்ச்சலையில் உலாவ்ர பெரும் கோடீஸ்வரக்கூட்டம் காத்திருக்கின்றன.இனி வரும் காலங்களில் சென்னையிலும்.

54 comments:

MARI The Great said...

பல கோடி ரூபாய் போட்டு வாங்கினாலும் பெரும்பாலானவர்கள் வீட்டில் அந்த காரை இயக்குவது ஓட்டுனர்களாகத்தான் (Driver) இருக்கும்., ஆகவே அந்த காரை இயக்க..., தகுதி தேவையில்லை கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் போதும்!

informative post! thanks for sharing!

எம் அப்துல் காதர் said...

அவங்க ரெண்டு பேரும் வந்து கிண்டல் பண்ணுவாங்க என்பதற்காக அந்த ஆசையை மனதில் இருந்து கிள்ளி எரிந்து விட வேண்டாம். ஆசை இல்லாமல் இவ்வளவு விஷயம் வெளியே வராது.சென்னையில் கிளை திறந்த பின் கொஞ்சம் ஆற அமர யோசிங்க ஸாதிக்காக்கா :)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படும் கார்கள் பற்றியும், அதனை வாங்கி வைத்திக்கொண்டுள்ள பிரபலங்கள் பற்றியும் அழகாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.


//வழக்கம்போல் வாடிக்கையாளரின் தகுதி குறித்து ஆராய்ந்த ரோல்ஸ் ராய்ஸ், உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போதிய பின்புலம் இல்லை என்பதை கூறி கார் தர மறுத்துவிட்டது.//

அடடா! சபாஷ்!!

பணம் கொடுத்துவிட்டால் மட்டும் காரைத் தந்து விடுவார்களா என்ன!

படித்ததும் சிரித்து விட்டேன்.

அன்புடன்
vgk

ஸாதிகா said...

பல கோடி ரூபாய் போட்டு வாங்கினாலும் பெரும்பாலானவர்கள் வீட்டில் அந்த காரை இயக்குவது ஓட்டுனர்களாகத்தான் (Driver) இருக்கும்., ஆகவே அந்த காரை இயக்க..., தகுதி தேவையில்லை கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் போதும்!
//அட இப்படியும் ஒன்று உள்ளதோ?கருத்துக்கு மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்

ஸாதிகா said...

கிள்ளி எரிந்து விட வேண்டாம். ஆசை இல்லாமல் இவ்வளவு விஷயம் வெளியே வராது.சென்னையில் கிளை திறந்த பின் கொஞ்சம் ஆற அமர யோசிங்க ஸாதிக்காக்கா :))))//அஸ்தஃபிருல்லாஹ்..சகோ அப்துல்காதருக்கு ஏனிந்த கொலவெறி??????நீங்கள் தான் அப்பப்போ வதனப்புத்தகத்தில் உங்கள் கற்பனைக்கார்,கற்பனை வில்லாக்களின் படங்களைப்போட்டு அசத்துவீர்கள்.அதுப்போல் நினைத்துக்கொண்டீர்களா?:))))))))))

ஸாதிகா said...

பதிவு சிரிப்பை வரவழைத்து விட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி வி ஜி கே சார்

Yaathoramani.blogspot.com said...

ஒரு காருக்குள் இவ்வளவு விஷயம் இருக்கா
சென்னையில் யாராவது வாங்கினால்
வேடிக்கை பார்க்க வரலாம் என நினைக்கிறேன்
(நாங்கள் அப்படித்தான் சிறு பையனாய் இருக்கையில்
3 கி.மீ நடந்து போய் விமானத்தை வேடிக்கைப் பார்த்து வருவோம்)
அறியாத பல தகவல்களை பதிவாக்கி கொடுத்தமைக்கு நன்றி
சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

//சென்னையில் யாராவது வாங்கினால்
வேடிக்கை பார்க்க வரலாம் என நினைக்கிறேன்// போகிற போக்கைப்பார்த்தால் விரைவில் மதுரையில் கூட உலா வரும் காலம் அதிக தூரமாக இருக்காது.கருத்துக்கு மிக்க நன்றி ரமணி சார்.

ஹுஸைனம்மா said...

//என்று ஹுசைனம்மா,ஸ்டார்ஜன் போன்றோர் நக்கல் கமண்ட்//

இம்புட்டு பயமா என்னைப் பாத்து??!! :-)))

//மறைந்த சாய்பாபாவும் இக்காருக்கு சொந்தக்காரராக//
!!!!!

என்னதான் பணத்தைக் கொட்டிக் கொடுத்து வாங்கினாலும், சென்னை ரோடுகள் அவற்றிற்கு ஏற்றவையுமல்ல. பிற வாகன ஓட்டிகளிடமிருந்து உரசாமல் காப்பாற்றுவதும் பெரிய கவலை. அதனால, நானோதான் சென்னைக்குச் சரி.

மற்றபடி, நானோவோ, ரோல்ஸ்ராய்ஸோ, உயிர், பாதுகாப்புக்கு இறைவனே பொறுப்பு.

இதுபோல பிரபல பெரிய பெரிய கார்களை அதிகப் பாதுகாப்பு என்ற பெயரில் விற்க முற்படும் விளம்பரங்களைப் பார்க்கும்போது 90களில் நடந்த ஒரு விபத்து ஞாபகம் வரும். திருநெல்வேலியின் பிரபல அரசன் குடும்பத்தினரின் பென்ஸ் கார், ஒரு ஆடு குறுக்கே வந்ததால், மரத்தில் மோதி இரண்டு துண்டாகப் பிளந்தது. மெரிஸிடிஸ் பென்ஸின் சிறப்பே “unbreakable chassis" என்பதுதான் இதில் விசேஷம்!!

Athisaya said...

ஓஓஓஓஓஓ...இவ்வளவு இருக்கா....எப்பாவது கார் வாங்கினால் சொல்லுங்க..அங்க வறேன்...சந்திப்போம்.

அன்புடன் அதிசயா
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

Angel said...

அக்கா :)))
தலைப்ப பார்த்ததும் நானும் நீங்க சொன்னமாதிரிஎதான் நினைச்சேன் .
அம்மாடி எவ்ளோ விலை !!!அப்ப விரைவில் ரோல்ஸ்ராய் சென்னைல பவனி வரப்போகுது


சென்னைல இப்ப ஒரு வீட்டிலேயே மூணு கார் வச்சிருக்காங்க !!! .இங்கே ஒரு ப்ரிடிஷ்காறரை சென்ற வாரம் சந்திச்சப்போ சொன்னார் அவர் சென்னைல எண்பதுகளில் இருந்தாராம்
மீண்டும் இந்த வருடமும் சென்றிருக்கார் ,அவருக்கு கொஞ்சமும் பிடிக்கலையாம் .அந்த கால சென்னை மவுன்ட் ரோடை புகழோ புகழ் என்று புகழ்ந்தார் .இப்ப சென்னைல ஒரே ஹார்ன் சத்தம் ட்ராபிக் ஜாம்
பாதி மக்கள் ஜிம்லதான் வாழறாங்க :)))

Anonymous said...

ம்...ம்...விலையுயர்ந்த வாகனம் பற்றி நிறைய தகவல் தந்தீர்கள். நாம் இதையெல்லாம் ஏன் தேடப் போகிறோம். நன்றி சகோதரி கேட்டாவது அறிவோம்.
வேதா. இலங்காதிலகம்.

Seeni said...

adengappaaaa!?

nalla thakavalkal sonnathukku nantri!

CS. Mohan Kumar said...

அருமையான தகவல்கள் நன்றி

ஸாதிகா said...

இம்புட்டு பயமா என்னைப் பாத்து??!! :-)))//உங்களைப்பார்த்து பயமில்லை.உங்கள் நக்கலைப்பார்த்துத்தான் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..ஹி..ஹி..//. அதனால, நானோதான் சென்னைக்குச் சரி.
// இது ரொம்ப அநியாயம்.நானோ கார் சென்னைக்கு சரியே இல்லை என்பதுதா ன் உண்மை. கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஓஓஓஓஓஓ...இவ்வளவு இருக்கா....எப்பாவது கார் வாங்கினால் சொல்லுங்க..அங்க வறேன்...சந்திப்போம்.//கார் வாங்கிவிட்டுத்தான் சந்திக்கலாம் என்றால் நம் சந்திப்பு நிகழவே செய்யது அதிசயா.கருத்துக்கு மிக்கநன்றி.

ஸாதிகா said...

அக்கா :)))////ஹ்ம்ம்ம்ம்.ஏஞ்சலின் இப்ப நீங்களும் ஆரம்பிச்சாச்சா:) .இப்ப சென்னைல ஒரே ஹார்ன் சத்தம் ட்ராபிக் ஜாம்
பாதி மக்கள் ஜிம்லதான் வாழறாங்க :)))// உண்மைதான் ஏஞ்சலின்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சீனி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மோகன்குமார்.

குறையொன்றுமில்லை. said...

கார் வாங்குவது பெரிசில்லே யானையைக்கட்டி தீனி போடுவதுபோல அதைப்பராமரிக்கனுமே. ஸாதிகா ஃபேஸ்புக்ல எந்தமெஸேஜும் இல்லியே

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத பல தகவல்கள் ... விளக்கமாக கொடுத்துள்ளீர்கள் ! பகிர்வுக்கு நன்றி சகோதரி !

தருமி said...

ஓஷோ எத்தனை ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்தார்?

ஸாதிகா said...

கார் வாங்குவது பெரிசில்லே யானையைக்கட்டி தீனி போடுவதுபோல அதைப்பராமரிக்கனுமே. //இது எல்லா வகை காருக்கும் பொருந்துதானே லக்ஷ்மிம்மா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி திண்டுக்கள் தனபாலன்.

ஸாதிகா said...

ரஜ்னிஷ் சந்திர மோகன் தன் அமெரிக்க ஆஸ்ரமத்தில் 90க்கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வைத்து ஆடம்பரமான ஆன்மீக வாழ்க்கை நடத்தி இருக்கிறார் என்று நான் முன்னர் படித்தது உங்கள் கருத்தைப்படித்ததும் ஞாபகத்திற்கு வந்தது.வருகைக்கு மிக்க நன்றி தருமி சார்.

Wanderer said...

நம்ம சென்னையில் லேட்டஸ்டாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருப்பவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்!

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ் ஸாதிகா அக்கா இவ்ளோ விஷயம் கலக்ட் பண்ணி வைத்துக்கொண்டு, கண் பட்டுவிடும் என்றுதானே வசதி இல்லை என்கிறீங்க? ஒருநாளைக்கு றைவர் சீட்டிலிருந்து ஸ்டைலா படமெடுத்துப் போடுங்கோ ஸாதிகா அக்கா... ஒண்ணும் கண் படாதூஊஊஊஊ:).

ராமலக்ஷ்மி said...

உண்மைதான் ஸாதிகா. ஏறும் பெட்ரோல் விலை சாலையில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்கவில்லை. குறைந்த மைலேஜ் கொடுக்கிற இவ்வகை வாகனங்களின் விற்பனையையும் குறைக்கவில்லை.

பால கணேஷ் said...

அரிய தகவல்கள். இந்தக் காரை சென்னையில் யாராவது வைத்திருக்கிறார்கள் எனில் சென்று பார்த்தாவது வந்துவிட வேண்டும் என்று தோன்றி விட்டது. ஒருவேளை ஸாதிகா வாங்கினால் என்னை (காருக்குள்) வைத்து ஒரு ஸிட்டி ரவுண்ட் அடிப்பீர்கள் தானே...

ஸாதிகா said...

நம்ம சென்னையில் லேட்டஸ்டாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருப்பவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்!////இதனையும் பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றேன் சகோ தேசாந்திரி .வரவுக்கு நன்றி.

ஸாதிகா said...

ஒருநாளைக்கு றைவர் சீட்டிலிருந்து ஸ்டைலா படமெடுத்துப் போடுங்கோ ஸாதிகா அக்கா... ஒண்ணும் கண் படாதூஊஊஊஊ:).//வழக்கம் போல் நக்கலா?நாளைக்கே நான் ராஜஸ்தான் போய் கோட்டையை படம் எடுத்து வந்து பதிவிட்டால் அப்பொழுதும் இதே கேள்வி கேட்பீர்களோ அதிரா.?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

ஸாதிகா said...

. ஒருவேளை ஸாதிகா வாங்கினால் என்னை (காருக்குள்) வைத்து ஒரு ஸிட்டி ரவுண்ட் அடிப்பீர்கள் தானே..///அவ்வ்வ்வ்வ்வ்..கணேசண்ணா நீங்களுமா....?

கோமதி அரசு said...

கோடிகளை கொட்டிக்கொடுத்து இக்காரை சொந்தமாக்கி தார்ச்சலையில் உலாவ்ர பெரும் கோடீஸ்வரக்கூட்டம் காத்திருக்கின்றன.இனி வரும் காலங்களில் சென்னையிலும்.//

ஸாதிகா, எல்லா தொலைக்காட்சிகளும் மக்கள் எல்லோரையும் கோடீஸ்வர்களாய் ஆக்கப் போகிறது. பிறகு என்ன கோடீஸ்வர கூட்டம் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பவனி வரட்டுமே.

Barari said...

ரோல்ஸ்ராயிஸ் நிறுவனத்தின் நிபந்தனையினால் கடுப்பாகி போன ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் இந்த காரை குப்பை அள்ள உபயோகபடுத்தினார் மேலும் துபையில் உள்ள ஒரு அரபி இந்த காரை வேண்டும்மென்றே வாடகை (டாக்சி) வண்டியாக ஓட விட்டார் என்பது கூடுதல் தகவல் .

சாந்தி மாரியப்பன் said...

நீங்க வாங்குனதும் சொல்லியனுப்புங்க. ஓட்டிப் பார்த்துட்டு நல்லாருக்கா இல்லையான்னு சொல்றேன் :-))))

mohan baroda said...

Interesting facts about this white elephant sorry rolls royce. When the bikes are being sold in lakhs (I expect an article from you regarding bikes), crores for rolls royce is nothing - anyway neither I will become a crorepati to buy this nor the rolls royce will reduce the price to such a level that I can buy one.

mohan baroda said...

Interesting facts about this white elephant sorry rolls royce. When bikes are sold in lacs, crores for rolls royce is nothing. Anyway I will neither become a crorepati to buy this one nor rolls royce will reduce the price to such a level that I can buy one.

VijiParthiban said...

ஆமாம் உண்மை தான் நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நமக்கு மதிப்பு தருவது கார்தான் என்று வாங்குபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.. நல்ல தகவல்....

allursree said...

ella detailum sonna neenga evvalavu mileage tharumnu sollave illiyae?

ஸாதிகா said...

எல்லா தொலைக்காட்சிகளும் மக்கள் எல்லோரையும் கோடீஸ்வர்களாய் ஆக்கப் போகிறது. பிறகு என்ன கோடீஸ்வர கூட்டம் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பவனி வரட்டுமே//haa haa..கோமதிம்மா,உங்கள் கருத்து சிரிப்பை வரவழைத்து விட்டது.நன்றி.ஏன் பதிவுகளைக்காணோம்.

ஸாதிகா said...

ரோல்ஸ்ராயிஸ் நிறுவனத்தின் நிபந்தனையினால் கடுப்பாகி போன ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் இந்த காரை குப்பை அள்ள உபயோகபடுத்தினார் மேலும் துபையில் உள்ள ஒரு அரபி இந்த காரை வேண்டும்மென்றே வாடகை (டாக்சி) வண்டியாக ஓட விட்டார் என்பது கூடுதல் தகவல் ///கூடுதல் தகவலுக்கு மிக்க் நன்றி Barari .கேரளாவில் ஒருவர் இதனை வாடகைக்கு விட்டு இருக்கிறார் ஒரு நாள் வாடகை 50000.!

ஸாதிகா said...

நீங்க வாங்குனதும் சொல்லியனுப்புங்க. ஓட்டிப் பார்த்துட்டு நல்லாருக்கா இல்லையான்னு சொல்றேன் :-))))//என்ன அமைதிச்சாரல் இப்படி ரொம்ப சுளுவா சொல்லிட்டு போய்ட்டீங்க...?:)

ஸாதிகா said...

white elephant sorry rolls royce./////ரோல்ஸ்ராய்ஸுக்கு இப்படி ஒரு பட்டப்பெயரா?கருத்துக்கு மிக்க நன்றி மோகன்.

ஸாதிகா said...

நமக்கு மதிப்பு தருவது கார்தான் என்று வாங்குபவர்கள்தான் அதிகம் உள்ளனர்..//கருத்தை ஆமோதிக்கிறேன்.நன்றி விஜி பார்த்திபன்.

ஸாதிகா said...

ella detailum sonna neenga evvalavu mileage tharumnu sollave illiyae?///இதோ சொல்லிடுறேன்.ஹைவேஸில் 18 முதல் 22 கிலோ மீட்டரும்,சிட்டிக்குள் 10 முதல் 13 கிலோ மீட்டரும் கொடுக்குமாம்.ஒவ்வொரு மாடலைப்பொருத்து.தகவல் போதுமா?நன்றி allursree .

நிரஞ்சனா said...

டியர் S.S.! கவலையே படாதீங்க. நான் சம்பாதிச்சதும் இந்தக் கார் வாங்கி உங்களோட ஊர் சுத்தறேன். நல்ல பகிர்வு. பல விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.

எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். என் தளத்துக்கு வந்து இந்த விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்தும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

http://nirusdreams.blogspot.com/2012/07/blog-post.html

ஸாதிகா said...

டியர் S.S.! கவலையே படாதீங்க. நான் சம்பாதிச்சதும் இந்தக் கார் வாங்கி உங்களோட ஊர் சுத்தறேன். நல்ல பகிர்வு. பல விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.//// ஆஹா...நிரூ..உங்களின் தன்னம்பிக்கைக்கு என் ராயல் சல்யூட்.விருது தந்தமைக்கு மிக்க நன்றிம்மா.

kumar said...

thagavalukku nandri

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி குமார்

mohamedali jinnah said...

Assalamuallikum
Please visit

http://nidurseasons.blogspot.in/2012/07/what-killed-arafat.html
What Killed Arafat? யாசர் அரபாத் கொல்லப்பட்டாரா?

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் SUMAZLA/சுமஜ்லா
நீடூர் அலி Nidur Ali
http://nidurseasons.blogspot.in/2012/06/blog-post_3728.html?showComment=1339261829552#c5970274388131888175
ஹுஸைனம்மா says...

தொடர..

Mahi said...

எனக்கு கார் பத்திய நாலேட்ஜ் ரொம்ப கம்மி. எனக்கும் சேர்த்து, என்னவர் எல்லாத் தகவலும் விரல்நுனியில் வைச்சிருப்பார்! ;) :)

சித்ரா பௌர்ணமியன்று பீச் போனபோது, அங்கே ஒரு ரோல்ஸ்ராய்ஸ் நின்றிருந்தது, அதை சுத்தி சுத்தி படமெடுத்தார்! அப்பதான் எனக்கு அந்த காரைப் பத்தியே கொஞ்சம் தகவல் தெரிந்தது. இப்ப உங்க பதிவில் கார் பற்றிய தெரியாத தகவல்கள் பலவற்றை தெரிந்துகொண்டேன். நல்ல ஹோம் வொர்க் பண்ணிருக்கீங்க ஸாதிகாக்கா! :)

LKS.Meeran Mohideen said...

அன்பு சகோதரிக்கு ,என்னை போன்ற கார் கலா ரசிகர்கள் அறியாத பல தகவல்கள் தங்களின் பதிவில் பார்த்து வியந்தேன்.அரிய தகவல்களுக்கு நன்றி.