June 24, 2012

பி.ஆர்.மத்ஸ்யா

"ரெஸ்டாரெண்ட் போய் நாளாகிறது "என்று எங்கள் குடும்ப ஜூனியர்ஸ் அடம் பிடிக்க,வெஜ் ரெஸ்டாரெண்ட் என்றால் ஒகே.இல்லை என்றால் ம்ஹும்..என்று கறார் ஆக கூறி விட்டேன்."வெஜ்ஜாஆஆஆஆஆ..ரெஸிடென்ஸி ஹோட்டல் சின் சின் போலாம்"உச்சஸ்தாயியில் அலறியதை பொருட்படுத்த வில்லை.

கடைசியில் வெஜ் என்று ஒரு மனதாக தீர்மானித்து அண்ணாச்சி உணவகத்திலும்,ஐயர் உணவகத்திலும் சாப்பிட்டு போர் அடித்து விட வித்தியாசமான வெஜ் ரெஸ்டாரெண்ட் எது என்று தேடியதில் அதே ஜூனியர் ஹிந்து மெட்ரோ பிளஸை தூக்கிக்கொண்டு வந்து காட்டிய பொழுது கண்ணில் பட்டது பி ஆர் மத்ஸ்யா.அடுத்த அரை மணி நேரத்தில் மத்ஸ்யாவில் இருந்தோம்.

கூட்டத்தையும் வரிசையாக அடுக்கி இருந்த பஃபே உணவு வகைகளையும் பார்த்த பொழுது சாப்பாடு செமத்தியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு போய் அமர்ந்தோம்.முதலில் பரிமாறிய சூப்பை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு இருந்த பொழுது எங்கள் வீட்டு வால் பாகற்காய் சூப் என்று சற்று சப்தமாகவே சொன்னாள்.

அடுத்து கொண்டு வந்த சாட் ஐட்டமான பேல் பூரியும் தஹி பூரியும் பிரமாதமாக இருந்ததில் சூப் மறந்தே போய் விட்டது.உண்மையில் இப்படி ஒரு சுவையான சாட் ஐட்டம் சென்னையில் சாப்பிட்டதே இல்லை.அத்தனை அருமை.வித விதமான சாலட் வகைகள்.கேபேஜ்ஜை க்ரீமியாக வைத்து இருந்தது டாப்

பாலக் பன்னீரும் பட்டர் பனீர் மசாலாவும்.
புதினா பூரி,நான் ஸ்டஃப்டு சப்பாத்தி இட்லி சட்னி வகையறாக்களுக்கும் குறைவில்லை.
தால் மக்கானியும் வெஜ் ரைஸும்
பொடொடோ பிரை காலி பிளவர் மஞ்சூரியன்
தயிர் சாதம் ,மோர் மிளகாய் ,அப்பளம் ,ஊறுகாய்

நூடுல்ஸ்,லெமன் ரைஸ் ,பாஸ்தா என்று எதை சாப்பிட எதை விட என்று குழம்ப வைக்கும் வகை வகையான உணவு வகைகள்.
மற்ற மாநில உணவு வகைகளை சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடலாம்.அதே நேரம் தமிழ்நாட்டு ஸ்பெஷலான இட்லி சட்னி,காரச்சட்னி,வெஜ் ரைஸ்,சாம்பார்,பாயஸம் போன்றவை பலரால் தொடப்படாமல் இருந்தது அதன் சுவையினால்.

இத்தனை ஐட்டங்களையும் சற்று குறைத்து ரேட்டையும் கம்மி பண்ணினால் வயிற்றுக்கும்,பர்ஸுக்கும் பங்கம் வராது.

ஞாயிறன்று சென்றதால் ஐட்டங்களும் அதிகம் விலையும் சற்று அதிகம்.ஒரு நபருக்கு 300 ரூபாய் பிளஸ் டாக்ஸ்,சர்வீஸ் சார்ஜ்.மற்ற நாட்களில் 240.

வடமாநில சைவ உணவுப்பிரியர்களுக்கான நல்லதொரு ரெஸ்டாரெண்ட்.

பி.ஆர் மத்ஸ்யா,
29/31,தணிகாசலம் சாலை,
தி.நகர்,
சென்னை - 17

டிஸ்கி:போய் உட்கார்ந்ததும் ஹேண்ட் பேகில் இருந்து கேமராவை தூக்கினால் சார்ஜ் சுத்தமாக இல்லை.பக்கத்தில் இருந்த வாண்டுவின் கேலக்சி டேபில் இருந்து அவனை விட்டே எடுத்த படங்கள் .சராமாரியாக படத்தை எடுத்து தள்ளி விட்டாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பாருங்கள்.

52 comments:

vanathy said...

Super restaurant. Mouth watering dishes.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சுவையான பதிவு.
அழகான படங்கள்.
பாராட்டுக்கள்.

Asiya Omar said...

ஆஹா ! ஏதோ மகி வீட்டு பார்ட்டிக்கு போய் வந்த மாதிரி ரெசிப்பீஸ் அணிவகுப்பு.சூப்பர்.கேபேஜ் கிரிமீயாக எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்,ரூ 300/ க்கு இத்தனை வகைகள் என்றால் ஆச்சரியம் தான்.

MARI The Great said...

இப்படி விதவிதமான இந்திய உணவு வகைகள் இங்கே கிடைக்கமாட்டேங்குதே என்று ஏக்கத்தில் நான் இருக்க இப்பிடி கலர் கலரா படத்தை போட்டு கடுப்பை ஏத்துகிறீர்களே சகோதரி :)

படமும் விளக்கமும் அருமை :)

துளசி கோபால் said...

தகவலுக்கு நன்றி ஸாதிகா.

ஒருமுறை போகணும்தான் சமீபிக்கும் சென்னை விஜயத்தில்:-)

Yaathoramani.blogspot.com said...

ஐட்டங்களும் படங்களும்
ஒரு முறை போய்ப்பார்க்கத் தான் சொல்கிறது
படமெடுத்த வாண்டுக்கு
என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 3

செய்தாலி said...

வித விதமான உணவுகள்
ஆனா எல்லாம் போட்டாவில் இருக்கு
சாப்பிட முடியலியே சகோ ..ம்(:

நல்ல பதிவு

Radha rani said...

குடும்பத்தோட போய் நபருக்கு 300ரூ கொடுத்தாலும் திருப்தியா சாப்பிட்டிங்கதானே..வட மாநில உணவு எப்பவுமே உங்களுக்கு பிடிக்காதுன்னா கொடுத்த 300ரூபா வேஸ்ட்தான்.

குறையொன்றுமில்லை. said...

என்னங்க காலங்காத்தால இப்படி பசியைக்கிலப்பி விட்டுட்டீங்களே? நீங்க சென்னையிலா இருக்கீங்க நான் அடுத்தமாசம் வரேன் எங்க எப்படி மீட் பண்ணலாம்?

நிரஞ்சனா said...

கேலக்ஸி டாபில் எடுத்தாலும் படங்கள் நல்லாவே வந்திருக்குக்கா. ஒருமுறை போய்ப் பார்த்துடலாமான்னு ஆசையை உண்டு பண்ணிட்டீங்க... சூப்பர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹோட்டல்ல போய் ஒரு கட்டுகட்டு வந்திட்டீங்க.. செம சாப்பாடு.. போட்டோஸ் அருமை. பர்ஸ் காலியாயிருக்குமே :‍))

பால கணேஷ் said...

இத்தனை ஐட்டத்தையும் படிக்கறப்பவே நாக்கு சப்புக் கொட்டுது. படங்களை வேற போட்டாச்சா..? ஒருமுறை விஸிட் அடிச்சுட வேண்டியதுதான்.

MANO நாஞ்சில் மனோ said...

போட்டோ எல்லாம் போட்டு இப்பிடி பசியை தூண்டி விட்டுட்டீங்களே...!!!

Unknown said...

இப்படி வெரைடியா படம் காட்டி நாக்கில் நீர் ஊற வைக்குரிங்களே இது நியாயமா? இங்க இப்படி கண்ணில் பார்க்க முடியல என்ற ஏக்கத்தில் இருக்கேன்

Unknown said...

இனி அடுத்த முறை போகும் முன்பே கேமராக்கு சார்ஜ் போட்டுவிடுவிங்களே..

ஸ்ரீராம். said...

ஆஹா.... போய் விட வேண்டியதுதான்.....

Mahi said...

பொதுவாக வட இந்திய உணவகங்கள் எல்லாவற்றிலுமே இட்லி-சட்னி-சாம்பார் எல்லாம் அப்படித்தான் ஸாதிகாக்கா இருக்கும். இங்கே பெரும்பாலும் அதே அனுபவம்தான் எனக்கு கிடைச்சிருக்கு. எந்த ரெஸ்டாரன்டுக்கு சாப்பிடப் போனாலும் இட்லி-தோசை-சாம்பார் பக்கம் மட்டும் திரும்பமாட்டேனே! ;)

/சராமாரியாக படத்தை எடுத்து தள்ளி விட்டாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பாருங்கள்./ சராமாரியாக படங்களை போட்டு ஜொள்ளு விடவைச்சுட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பார்க்கச் சொன்னா எப்புடி? அப்படியே ஒரு பாக்கட் டிஷூ-வையும் வைச்சிருக்கலாம்! ;))))

Seeni said...

pasikkumpadiyaaka aakivittathu-
pukai padathai paarthathum!

Minmini RS said...

பார்க்கும்போதே சாப்பிடத்தோணுது.. போட்டோஸ் அருமை.

Anonymous said...

அடக் கடவுளே! வாயூறுகிறதே!...இப்படியா ஆசையைத் தூண்டுவது!...நிசமாகப் பசிக்கிறது. படங்கள் அதை விடக் கிளறுகிறது...நாம எப்பே இந்தியா வருவது....!!!.மிக்க நன்றி ஸாதிகா. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

Mahi said...

/ஏதோ மகி வீட்டு பார்ட்டிக்கு போய் வந்த மாதிரி / ஆத்தாடீ...இதை எப்பூடி நேத்து பாக்காம விட்டேன்ன்ன்?! ;))))

ஆசியாக்கா, பார்ட்டி வைச்சே பலநாளாச்சு, நீங்க வேற! :)))

enrenrum16 said...

நிஜமாவே வாண்டு போட்டு தாக்கிட்டான் :)))best wishes to வாண்டு...

ஒரு மாற்றத்துக்கு ஒரு நாள் இங்கு போய் பார்க்கலாம்....பகிர்வுக்கு நன்றிக்கா.

ஸாதிகா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வான்ஸ்

ஸாதிகா said...

வரவுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்

ஸாதிகா said...

ரூ 300/ க்கு இத்தனை வகைகள் என்றால் ஆச்சரியம் தான்.///உண்மைதான் ஆசியா.2அனைத்தையும் சாப்பிட கண்யடிப்பாக முடியாது

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி துளசி கோபால்.சென்னை வந்தால் சென்று பாருங்கள்

ஸாதிகா said...

இப்படி விதவிதமான இந்திய உணவு வகைகள் இங்கே கிடைக்கமாட்டேங்குதே என்று ஏக்கத்தில் நான் இருக்க இப்பிடி கலர் கலரா படத்தை போட்டு கடுப்பை ஏத்துகிறீர்களே சகோதரி :)///உங்கள் வரிகளைப்பார்த்து சிரித்து விட்டேன் வரலாற்றுசுவடுகள்.சென்னை வந்தால் செல்வதற்கு நேரமா செல்லப்போகின்றது

மதுமிதா said...

பார்த்தவுடன் சாப்பிடத்தோணுதே ஸாதிகா:)

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா.. படங்கள் அருமை ! பசிக்கிறது .... நன்றி சகோ !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.karpom.com/2012/06/feedburner.html) சென்று பார்க்கவும். நன்றி !

மாதேவி said...

தி்.நகரிலா அடுத்த பிளேன் பிடித்தால் வந்து விடலாம்தானே :))

மனோ சாமிநாதன் said...

இது ரொம்ப நல்ல வேலை ஸாதிகா! என்னைப்போல வெளியூர்க்காரர்களுக்கு ரொம்பவும் உபயோகமான பதிவு! அடிக்கடி இது போன்ற பதிவு போடுங்கள்!!‌

ஸாதிகா said...

ஒருமுறை போகணும்தான் சமீபிக்கும் சென்னை விஜயத்தில்:-)//சென்று பாருங்கள் சகோ துளசி கோபால்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

படமெடுத்த வாண்டுக்கு
என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்//வாண்டுக்கு வாழ்த்தை சொல்லி விட்டேன் ரமணி சார்.ஓட்டுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

ஸாதிகா said...

வித விதமான உணவுகள்
ஆனா எல்லாம் போட்டாவில் இருக்கு
சாப்பிட முடியலியே சகோ ..ம்(://சான்ஸ் கிடைப்பவர்கள் போய் சாப்பிடலாம் என்பதற்காகவே இந்த பதிவு செய்தாலி.சென்னைக்கு வந்தால் டிரை பண்ணுங்கள்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வட மாநில உணவு எப்பவுமே உங்களுக்கு பிடிக்காதுன்னா கொடுத்த 300ரூபா வேஸ்ட்தான்.//பக்கா தமிழ் நாட்டு உணவுவகைகளுக்காக இங்கு போனால் ஏமாற்றம்தான் ராதாராணி கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

என்னங்க காலங்காத்தால இப்படி பசியைக்கிலப்பி விட்டுட்டீங்களே? //ஹா..ஹா.ஹா..லக்ஷ்மிம்மா.பேஸ் புக்கில் மெசேஜ் வைத்திருக்கிறேன் பாருங்கள்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சூப்பர் என்று பாராட்டிய தங்கை நிரஞ்சனாவிற்கு என் நன்றி

ஸாதிகா said...

போட்டோஸ் அருமை. பர்ஸ் காலியாயிருக்குமே :‍))பர்ஸ் காலியானாலும் வயிறு ஃபுல் ஆகி விட்டது ஷேக்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

பதிவும் படமும் கணேஷண்ணாவை சப்புக்கொட்ட வைத்து விட்டதா?பேஷ்..நன்றி கருத்துக்கு,

ஸாதிகா said...

போட்டோ எல்லாம் போட்டு இப்பிடி பசியை தூண்டி விட்டுட்டீங்களே...!!!//போட்டோ போடாமல் இருந்தால் நீங்கள் இப்படி வந்து பின்னூட்ட மாட்டீர்களே மனோ சார்.கருத்துக்கு மிக்க நன்றி,.

ஸாதிகா said...

இனி அடுத்த முறை போகும் முன்பே கேமராக்கு சார்ஜ் போட்டுவிடுவிங்களே..///பின்னே?அடுத்த முறை சென்னை வர்ரச்சே போகலாம் பாயிஷா.

ஸாதிகா said...

அப்படியே ஒரு பாக்கட் டிஷூ-வையும் வைச்சிருக்கலாம்! ;))))//இனி உண்வகம் லேபிளில் பதிவு போடும் பொழுது ஒரு டிஷ்யூ பாக்ஸ் போட்டோவையும் கூட போட்டுவிடணும் போலும்.ஐடியாவுக்கு நன்றி மகி.

ஸாதிகா said...

பதிவிட்டு நிறைய நட்புக்களின் பசியை ஹூண்டி விட்டது குறித்து வருத்தப்படுவதா?சந்தோஷப்படுவதா என்று புரியவில்லை சீனி.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

நாம எப்பே இந்தியா வருவது....!!!//சீக்கிரம் வந்துடுங்க வேதா இலங்கா திலகம்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஆசியாக்கா, பார்ட்டி வைச்சே பலநாளாச்சு, நீங்க வேற! :)))//மகி உங்கள் வீட்டு பாட்டி பதிவு த்சோ....சாரி சாரி பார்ட்டி பதிவுக்கு நான் ரசிகை.விரைவில் எதிர்பார்கிகலாமா?அல்லது பிளாகில் எழுத வேண்டும் என்பதற்காக ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணுங்க.

ஸாதிகா said...

நிஜமாவே வாண்டு போட்டு தாக்கிட்டான் :)))best wishes to வாண்டு...
//உண்மையில் அது செம வாண்டுதான்(என் தம்பி பையன்)கருத்துக்கு மிக்க நன்றி பானு.

ஸாதிகா said...

மதுமிதா வாங்க.ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க.உங்கள் வீட்டில் இருந்து நடந்தே போய்டலாம் இந்த ரெஸ்டாரெண்டுக்கு.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

பதிவை படிக்கிறேன் சகோ தனபால்.அத்துடன் உங்கள் வேண்டுகோளையும் ஏற்கிறேன்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

தி்.நகரிலா அடுத்த பிளேன் பிடித்தால் வந்து விடலாம்தானே :))//ஆனால் மாதேவி பிளேனில் நேரே மத்ஸ்யா போக முடியாது..ஹா ஹா..கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

என்னைப்போல வெளியூர்க்காரர்களுக்கு ரொம்பவும் உபயோகமான பதிவு! அடிக்கடி இது போன்ற பதிவு போடுங்கள்!!‌//ஊக்கத்திற்கு மிக்க நன்றிக்கா.என் நட்புக்கள் கூட ரெஸ்டாரெண்ட் செல்வதென்றால் என் பிளாக்கை ஓப்பன் செய்து பார்த்து விட்டுத்தான் செல்வார்களாம்.அவர்களுக்காக சக பதிவர்களின் உணவக பதிவுகளின் லின்கையும் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன்.மிக்க நன்றி மனோ அக்கா.