September 20, 2010

டியூஷன் கொள்ளைகள்





தனியார் பள்ளிகளில் பீஸ் அதிகமாக வாங்குகின்றனர் என்று சென்னையில் அவ்வப்பொழுது ஆர்ப்பாட்டம் நடந்து நடந்து அடங்கும்.உச்சகட்டமாக போய் பள்ளி வளாகத்தினுள் நுழைந்து பொருட்களை சேதம் செய்யும் கொடூரமும் நடந்தேறி இருக்கின்றது.குறிப்பிட்ட பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்களுக்குள் ஒரு அசோசியேஷன் உருவாக்கி பள்ளிகளுக்கு எதிராக கொடி பிடிக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றது.

டியூஷன் செண்டர் நடத்தி சைலண்டாக கொள்ளை அடிக்கும்,ஒரே பாய்ச்சலில் லட்சாதிபதியாக உயரே போக நினைக்கும் டியூஷன் செண்டர் நிறுவனங்களை இந்த பெற்றோர்கள் கண்டு கொள்வதே இல்லை.

தங்கள் பிள்ளைகளை டியூஷன் செண்டரில் சேர்த்து விட்டு ,பணத்தை அப்படியே தயங்காமல் கொட்டிக்கொடுத்து விட்டு கண்டிப்பாக 98 சதவிகிதம் மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்று பெற்றோர்கள் கனவில் மிதந்து விடுகின்றனர்.அவர்களும் 98 % மதிப்பெண்கள் எடுக்க வைக்கின்றோம் என்று உறுதியாக கூறி நம்ப வைத்து விடுகின்றனர்.

ஏஸி கிளாஸ் ரூம்,ப்ரொஜெக்டர் மூலம் பாடங்களை கற்பித்தல் என்று ஹை டெக்காக வலம் வந்து பெற்றோரை கவர்ந்து இழுத்து விடுகின்றனர்.இதில் டீபார்ட்டியுடன் கூடிய பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்,சாதுர்யமான பேச்சு,நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் இத்யாதி..இத்யாதி..

ஒரு சப்ஜெக்டுக்கு 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வருடாந்திர கட்டணம்.வாரத்தில் மூன்றே நாள் ,ஒரே ஒரு மணி நேர வகுப்பு.ஒரு மாணவன் நாண்கு சப்ஜெக்டுகள் வரை டியூஷன் படிக்கின்றான்.ஒரு வகுப்புக்கு மூன்று முதல் நாண்கு பேட்ச்.ஒரு பேட்சில் சுமார் 60 முதல் 70 மாணவர்கள்.(ஸ்கூலில் உள்ள வகுப்பறையில் கூட இத்தனை மாணவர்கள் இருக்க மாட்டார்கள்)கலெக்ஷன் எவ்வளவு ஆகும் என்று நீங்களே கணக்குப்போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

நட்சத்திர அந்தஸ்த்துடன் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் டியூஷன் வகுப்புகள் மூன்று மாணவர்கள் அமரும் இருக்கையில் நாண்கு மாணவர்களை அமர வைத்து பாடம் சொல்லிக்கொடுக்க விழைகின்றனர்.

டியூஷன் செண்டர் ஆசிரியர்களிடம் டெஸ்டில் பெறும் மதிப்பெண்களைப்பார்த்த பெற்றோர்கள் "என்ன சார் எதிர்பார்த்த மார்க் வரவில்லையே?" என்று பெற்றோர் ஆதங்கத்துடன் கேள்வி கேட்கும் பொழுது தயவு தாட்சண்யமின்றி"வேறு டியூஷன் பாருங்கள்:வீட்டிலேயே இருந்து படிக்கச்சொல்லுங்கள்"என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டென பதில் வரும்.அப்பொழுது அவர்கள் வருடாந்திர பீஸ் முழுவதையும் வாங்கி இருப்பார்கள்.

இன்னொரு காமெடி என்னவென்றால் பள்ளியில் இருந்து படிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.நாங்கள் கொடுக்கும் பயிற்சிதான் என்று மார்தட்டிகொள்வதும்,அதனை கேட்கும் பெற்றோர்கள் புளங்காங்கிதபடுவதும்தான் கொடுமை

புயல் வேகத்தில் பாடங்களை அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடிப்பது டியூஷன் செண்டர் நடத்துபவர்களுக்கு கை வந்த கலை.

அக்டோபர் மாதத்திற்கு அப்புறம்தான் இவர்களின் தகிடுதத்தம் வெளிப்படுகின்றது.பாடங்கள் எல்லாம் நடத்தி முடித்தாகி விட்டது இனி டெஸ்ட் மட்டும்தான் என்று வாரத்தில் ஒரு நாள்,பத்து நாட்களுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் டியூஷன் இருக்கும்.

இந்த சமயம் ஹோம் டியூஷன் எடுக்க வசதிவாய்ப்பான வீடுகள் நோக்கி படை எடுத்து விடுவார்கள்.ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை.மாலை ஐந்து மணிக்கு சென்று பத்து மணிக்கு திரும்பினால் 2000 முதல் 2500 வரை சம்பாதித்து விடுகின்றனர்.

டிஸ்கி:இவர்களுக்கு மத்தியில் டியூஷன் சொல்லித்தருவதை ஒரு வழிப்பாடாக,ஒரு தவமாக மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு,டியூஷன் செண்டர் வைத்திருக்கும்,பல பல கலெக்டர்கள்,பொறியாளர்கள்,மருத்துவர்கள்,கல்வியாளர்கள்,தொழிலதிபர்கள் போன்றோர் உருவாக காரணியாக இருந்து,மாணவர்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் சென்னையின் பிரபல டியூஷன் ஆசிரியர் ஒருவரைப்பற்றி அவரது சம்மதத்தை பெற்ற பின் மற்றுமொரு இடுகையில் பார்ப்போம்.

35 comments:

Gayathri said...

மிகவும் உண்மை மேடம் நீங்க சொல்வது..கண்டிப்பா இதையெல்லாம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்..கல்வி என்பதே இப்போது வியாபாரம்தானே

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

டியூஷன் சென்டர்களின் வாய் உதார்களை நன்றாக,
அலசி, காயப் போட்டுவிட்டீர்கள்.

//மாணவர்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் சென்னையின் பிரபல டியூஷன் ஆசிரியர் ஒருவரைப்பற்றி அவரது சம்மதத்தை பெற்ற பின் மற்றுமொரு இடுகையில் பார்ப்போம்//

அவசியம் எழுதுங்கள்...

சீமான்கனி said...

உண்மைதான் அக்கா நான் பத்தாவது படிக்கும்போது ஒரு பாடத்துக்கு நூறு ரூபாய் இருந்தது இப்போது பார்த்தால் நானூறு ஐநூறுனு சொல்றாங்க...பெற்றோர்களின் பார்வை மாறனும் நல்ல இடுக்கை வாழ்த்துகள்...அக்கா...

Anisha Yunus said...

waiting waiting waiting!!!

wonderful post, very useful. Thanks sis.

Menaga Sathia said...

உண்மைதான் அக்கா..கல்வி இப்போழுது வியபாரமாகிவிட்டது..அடுத்த பதிவு சீக்கிரம் எழுதுங்கள்...

ஹுஸைனம்மா said...

ஆஹா.. வட போச்சே.. என்னோட +2 கணக்கு டியூஷன் சாரைப் பற்றி எழுதணும்னு நேத்த்துதான் நினைச்சேன்.. டெலிபதி தெரியுமோ உங்களுக்கு? புடிச்சுகிட்டீங்களே!!

டியூஷனும் இப்ப பிரயோஜனமில்லாம ஆகிப்போச்சுன்னு ஆகிடுச்சு!!

மனோ சாமிநாதன் said...

அருமையான விழிப்புணர்வுக்கான பகிர்வு! சுரண்டலில் இது ஒரு ரகம்! அதுவும் நான்கு இலக்கங்களில் கட்டணம் என்றால் மூச்சு முட்டுகிறது! சென்னையில்தான் இப்படி என்று நினைக்கிறேன். உள்ளே இருக்கும் சிறு நகரங்களில் இந்த நிலை இன்னும் வரவில்லை! தொடர்ந்து எழுதுங்கள் ஸாதிகா! இதைப்படித்து சில பெற்றோருக்காவது விழிப்புணர்வு வரட்டும்!!

Unknown said...

அக்கா சென்னையில் மட்டும் இல்லை சாதாரண கிரமங்களில் கூட ஒரு 10 , 12ம் வகுப்பு பாடத்துக்கு ரூபாய் 3000 கேட்கிறாங்க..
பள்ளி கட்டணத்தை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கு டியூஷன் பீஸ்... என்னத்த சொல்ல.. இனி வரும் காலத்தில் இன்னும் என்னவாகுமோ... தெரியலை..
உங்களின் அடுத்த பதிவில் அந்த ஆசிரியரை பற்றி எழுதுங்கள்.. படிக்க ஆர்வமாக இருக்கோம்.

சிநேகிதன் அக்பர் said...

குழந்தைகள் புத்திசாலியாக இருக்க நினைத்து மனநோயாளியாக்கி விடுகிறோம்.

Chitra said...

இவர்களுக்கு மத்தியில் டியூஷன் சொல்லித்தருவதை ஒரு வழிப்பாடாக,ஒரு தவமாக மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு,டியூஷன் செண்டர் வைத்திருக்கும்,பல பல கலெக்டர்கள்,பொறியாளர்கள்,மருத்துவர்கள்,கல்வியாளர்கள்,தொழிலதிபர்கள் போன்றோர் உருவாக காரணியாக இருந்து,மாணவர்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் சென்னையின் பிரபல டியூஷன் ஆசிரியர் ஒருவரைப்பற்றி அவரது சம்மதத்தை பெற்ற பின் மற்றுமொரு இடுகையில் பார்ப்போம்.


......பிறருக்கு முன் மாதிரியாக இருப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். விரைவில் எழுதுங்கள்.

vanathy said...

நான் படித்த நாட்களிலேயே இந்த டியூசன் தொல்லைகள் நிறைய இருந்தன. இப்ப இன்னும் அதிகமாக இருக்கும் போல. நல்ல business தான்.

ramalingam said...

இது மட்டுமல்ல. பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறேன் என்று எங்கள் தெருவுக்கு அருகில் ஒரு பெண்மணியும் ஒரு செண்டரும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் முட்டாள் ஜனங்களும் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று எல்லா விஷயங்களுமே கமர்சியலாகி விட்டன. அல்லது அரசியலாகி விட்டன. எல்லாம் உலக அழிவுக்கான கவுண்ட்டவுன்தான்.

மாதேவி said...

இந்த ரியூசன் சென்றர்கள் படுத்தும் பாடுகள் இருக்கே.மாணவர்கள் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக ..அடி..உதை. இவற்றை எல்லாம் மிஞ்சி தங்கள் மாணவர்களுக்கு யூனிபோம். பாடசாலையால் வந்து மதிய உணவு உண்ணவே நேரமில்லாதபோது :( இந்த உடையையும் மாற்றிச் செல்லவேண்டும்.இதுவும் கிராமத்தில் நடக்கிறது.

GEETHA ACHAL said...

உண்மை தான் ஸாதிகா அக்கா...ரொம்ப ஒவராக தான் இப்படி கொள்ளை அடிக்கின்றாங்க...என்னத சொல்ல...இன்னும் குறைந்தது 10 வருடங்கள் கழித்து தான் நான் புலம்பனும்...

நட்புடன் ஜமால் said...

நீங்க ரொம்ப கொஞ்சமாத்தான் சொல்லியிருக்கீங்க

புல்லாங்குழல் said...

எல்லாம் சொத்தை என சொல்லி விடாமல். அற்புதமான நல்லவர்களைப் பற்றியும் கூற முனையும் உங்கள் நடுநிலையான் விமர்சனம் பாராட்டுகுரியது.

Asiya Omar said...

தேவையான பதிவு. ஸாதிகா சமூக அக்கறையுள்ள உங்கள் பதிவுகள் மிக பாராட்டும் படி உள்ளது.அடுத்த பதிவிற்க்காக வெயிட்டிங்.

Denzil said...

இந்த கொள்ளையையும் வேற யாரையும் அடிக்க விட மாட்டோம்னு தனியார் பள்ளிகளிலேயே கிளாஸ் நேரத்துக்கு அப்புறம் டியூஷன் வேற நடக்குதே, இதை என்னன்னு சொல்ல? ஆமா, அப்ப வகுப்பறையில என்னதான் பண்ணுறாங்க?

Thenammai Lakshmanan said...

ரொம்ப கரெக்டா சொன்னீங்க ஸாதிகா.. கல்வி வியாபாரமாகிட்டுத்தான் இருக்கு எல்லா இடத்திலும்..

Jaleela Kamal said...

எல்லா இடத்திலும் சுரண்டல் தான்.
சென்னை அருமையா டியுஷன் மாஸ்டர்களும் இருக்கின்றனர்.

இப்ப சில செண்டர்களில் பேட்ச் பேட்சாக வைத்து சுரண்டலும் இருக்கு,

ஸாதிகா said...

காயத்ரி

நிஜாமுதீன்

சீமான்கனி

அன்னு

மேனகா

ஹுஸைனம்மா

மனோ அக்கா

பாயிஜா

அக்பர்

சித்ரா

வானதி

ராமலிங்கம்

மாதேவி

கீதாஆச்சல்

ஜமால்

நூருல் அமீன்

ஆசியா

டென்ஷில்

தேனம்மை

ஜலீலா

உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!!

ஸ்வீட் said...

teSt

Starjan (ஸ்டார்ஜன்) said...

உண்மையை உரைக்க எழுதியிருக்கீங்க அக்கா..

நேற்றே கமாண்ட் போடணுன்னு நினைச்சேன்.. வேலைபிசியால் லேட்

இலா said...

நல்ல பதிவு! எங்க பக்கத்து வீட்டில ரெண்டு பேர் அண்ணன் தம்பி. அண்ணன் அதி புத்திசாலி.. தம்பி நேர் எதிர் ( ஆன்டி கோயிலுக்கெல்லாம் வேண்டினாங்க இவன் பாஸாகணும் என்று 10 & + 12)

ரெண்டு பேருக்கும் டியூசனோ டியூசன் தான்... தம்பி எங்கூர்ல அரசு மேல் நிலை பள்ளியில் படிச்ச பெண்ணை விட மதிப்பெண் கம்மி.. ஆனா இஞினியரிங் சேர்ந்தாச்சு... இது பெற்றோர்களின் குறையும் தான்... பிள்ளைகள் மேல அதீத பாசம். இருக்கறதிலே பெஸ்ட் ட்யூசன் சென்டருக்கு போகணும் சரி!ஆனா அங்க கொடுக்கிற அட்டென்ஷன் போதுமா 30பேருக்கு ஒரு வாத்தியார்/வாத்தியாரம்மா என்றால் பள்ளியில் என்றால் பரவாயில்லை.. கூட்டம்... பணம் கொடுத்து படிக்கவைக்கும் இடத்தில் பெர்சனல் அட்டென்ஷன் இருக்கான்னு பார்க்கணும்..பாதி நேரம் பிள்ளகள் பேரை கூட மறந்திடுவாங்க இதில அவங்க ப்ராக்ரெஸ் பத்தி கவலைபடுவாங்களா?

பிள்ளைகள் நல்லா படிக்க முக்கியமான தேவை அவர்களுக்கு நாம் கொடுக்கும் கவனம். டியூஷனுக்கு அனுப்பதான் வேண்டும் என்றால் அக்கறை கொண்டவர்களிடம் அனுப்பணும்.

Mahi said...

யூஸ்புல்லான பதிவு ஸாதிகாக்கா!அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!:)

thiyaa said...

அருமையான பகிர்வு!

Ahamed irshad said...

நல்ல பதிவுங்க..

ஸாதிகா said...

ஸ்டார்ஜன்

இலா

மகி

தியாவின் பேனா

இர்ஷாத்

உங்கள் அனைவருக்கும் நன்றி!

thiyaa said...

ஐயோ... ஐயோ...

அன்புடன் மலிக்கா said...

கல்வி என்பதே இப்போது வியாபாரம்தானே
.
அங்குமட்டுமல்லக்கா எங்கும்தான்.இந்த கொள்ளைகள்

நன்றாக அலசிய விழிப்புணர்வு கட்டுரை ..

Unknown said...

கல்வி என்பதே இப்போது வியாபாரமாகிவிட்டது.
அருமையான பகிர்வு!

Admin said...

பல பேர் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆரம்பிப்பதே பணம் சம்பாத்திக்கத் தான். ஆறு மணி நேரம் பள்ளியில் சொல்லித் தராததையா ஒரு மணி நேர டியுஷனில் சொல்லித்தர போகிறார்கள்?

http://bloggernanban.blogspot.com

SUFFIX said...

டியூஷன் வைத்தால் தான் முடியும் என்கிற மனப்பான்மை மாணவர்களிடம் தினிக்கப்பட்டு விட்டது.

ஜெய்லானி said...

இதுக்கு முழு காரனம் யார் ..? நாமதான் ..படிக்கக்கூடிய பிள்ளைகள் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல கூட நல்லாதான் படிக்கும் .ஆனா நாமதான் அதை ஆரம்பத்திலிருந்து பிரைவேட் ஸ்கூல்ன்னு சொல்லி பணம் குடுத்து சேர்த்துட்டு டியூசன்னும் சேர்த்துட்டும் புலம்ப வேண்டி வருது..


ஒரு ஊரில(( இல்ல கிராமத்தில )) இவ்வளவு பணத்துக்கு மேல தரமாட்டோமுன்னு சொல்லி பாருங்க மேனேஜ் மெண்ட்தானா வழிக்கு வரும்

ஸாதிகா said...

ஸ்டார்ஜன்

இலா

மகி

தியாவின்பேனா

மலிக்கா

ஜிஜி

அப்துல் பாஷித்

ஷஃபி

ஜெய்லானி

உங்கள் அனைவருக்கும் நன்றி