September 29, 2010

நன்றி!நன்றி!!

சென்ற ஆண்டு இதே நாள் ஏதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கபட்ட வலைப்பூ.'வலைப்பூ சம்பாதிக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டதா' என்ற ஒரு கேள்விக்கு இல்லை என்று பதில் அளித்திருந்தேன்.உண்மை என்னவென்றால் சம்பாதித்து இருக்கின்றேன் என்பதே.

நல்ல அருமையான நட்புக்களை,அன்புள்ளங்களை,உண்மையான கரிசனத்துடன் அறிவுரையும்,சந்தேகநிவர்த்தி செய்யும் பாங்குள்ளங்களையும் நிறையவே சம்பாதித்து இருக்கின்றேன் என்று இந்த நேரத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

74 பதிவுகள்,124 பாலோவர்ஸ்,2632 பின்னூட்டங்கள்(இதில் என்னுடைய பதில் பின்னூட்டங்களும் அடங்கும்.பிரித்தறியத்தெரியவில்லை)229565 ஹிட்டுகள் அனைத்தும் நான் பெற்ற சந்தோஷங்கள்.

நிறைய பேர் பின்னூட்டம் இடாவிட்டாலும் தவறாது வந்து ஓட்டளித்து பதிவிட்ட சில மணித்துளிகளுக்குள் மோஸ்ட் பாபுலர் பதிவாக்கி விடுகின்றனர் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

எனது பதிவுகள் படித்து ஓட்டளித்து,பின்னூட்டும் அன்புள்ளங்கள்,என் வலைப்பூவை பின் தொடரும் அன்புள்ளங்கள்,உற்சாக ஊக்கம் கொடுத்து மேலும் எழுதத்தூண்டும் பின்னூட்டங்கள்,தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவும் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் அன்பான நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.

தொடர்ந்து என் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்குமாறு விரும்பி,கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி!

52 comments:

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் அக்கா..எனக்கு நீங்கள் வலைப்பூ மூலமாக தான் தோழியாக அறிமுகமானிங்க ...
நல்ல நப்புகள் கிடைக்க இந்த வலலப்பூ காரனமாக இருக்கிறது என்று நினனக்கும் பொழுது சந்தோஷமாக தான் இருக்கிறது.. எல்லா புகழும் இறைவனுக்கே

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்...... முதல் வயசு குழந்தைக்கு...வாழ்த்துக்கள.....
]வாழ்த்துக்கள்....இன்னும் ஓடியாடி வளர ...வாழ்த்துக்கள்....... வாழ்த்துக்கள்...

ஜெய்லானி said...

எல்லாமே பச்சை காய்கறியா வச்சிட்டீங்களே யக்கா..!! ஒரு ஸ்வீட்டா ஒன்னுமில்லையா..அவ்வ்வ்வ்


இதையும் சேர்த்து மொத்தம் 75 வது பதிவுன்னு போடுங்க :-)))) பொன்விழா கண்டதுக்கு பார்ட்டி எப்போது குடுக்கப்போறீங்க ..?...!!!!

ஹாய் அரும்பாவூர் said...

வாழ்த்துக்கள்
இன்னும் பல ஆண்டுகள் வெற்றி
நடை போட வாழ்த்தும்
சகோதரன்

ஹாய் அரும்பாவூர்
(முபாரக் கான் )

Mahi said...

வாழ்த்துக்கள் ஸாதிகாக்கா! விஷ் யூ மெனி மோர் ஹேப்பி இயர்ஸ் இன் ப்ளாகிங்! :)

Menaga Sathia said...

congrats akka!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

Congrats Shadiqah Akka.

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள். என்ன ஸாதிகாக்கா, கேக் கட்டிங் இல்லையா. பர்த்டே என்றால் கேக், ஸ்விட்ஸ், பட்டர் பிஸ்கட்டாவது குடுப்பிங்க என்று இங்கு வந்தேன். சரி
மேலும் மேலும் பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

முதல் வாழ்த்துக்கு நன்றி சகோ ராஜவம்சம்.

ஸாதிகா said...

நன்றி பாயிஜா.உண்மையில் உங்களைப்போல் இனிய நட்புக்கள் வலைதளம் மூலம் கிடைக்கப்பெற்று இருப்பது மனமகிழ்வைத்தருகின்றது.

Asiya Omar said...

வாழ்த்துக்கள் தோழி ஸாதிகா.பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் சாதனை.

இமா க்றிஸ் said...

வாழ்த்துக்கள் ஸாதிகா. ;)

ஸாதிகா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெய்லானி.//எல்லாமே பச்சை காய்கறியா வச்சிட்டீங்களே யக்கா..!! ஒரு ஸ்வீட்டா ஒன்னுமில்லையா// நீங்க பச்சைக்காய்கறின்னு சொல்றதை எடுத்து சாப்பிட்டுப்பாருங்க.அது ஸ்வீட்டா?காயான்னு தெரியும்?என்ன நீங்க அந்த காலத்திலேயே இருக்கீங்க..அப்போ எல்லாம் வட்ட,செவ்வக,நீள் சதுர வடிவங்களில் ஸ்வீட் தாயாரித்தது அவுட் ஆஃப் பேஷன்.இப்ப பழ,காய்,பூ வடிவங்களில் கண்ணுக்கு கவர்ச்சியாக கிடைகின்றது.இன்னும் கொஞ்ச நாளில் பாம்பு,பல்லி வடிவங்களில் கூட தாயாரித்துவிடுவார்கள்.அப்படித்த்யாரித்தால் 2 கிலோ வாங்கி சார்ஜாவுக்கு பார்சல் போடுகின்றேன்.

//பொன்விழா கண்டதுக்கு பார்ட்டி எப்போது குடுக்கப்போறீங்க ..?...!!!// சூப்பரா உப்புமா கிளறிக்கொடுக்கின்றேன்.

ஸாதிகா said...

சகோ.முபாரக் கான் உங்கள் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

உமாபதி,உங்கள் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

மகி வாழ்த்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வாழ்த்துக்கு நன்றி மேனகா.

ஸாதிகா said...

வாழ்த்துக்கு நன்றி ஸ்டார்ஜன்

ஸாதிகா said...

//. என்ன ஸாதிகாக்கா, கேக் கட்டிங் இல்லையா// விஜி நான் என் பிறந்தநாளுக்கு கூட கேக் கட் பண்ணுவதில்லை.பிள்ளைகளையும் எனக்காக கேக் பண்ண அனுமதிப்பதுமில்லை.நீங்க வாங்க..உங்களுக்கு ஸ்பெஷல் ஆக வெஜ் பிரியாணியே செய்து போடுகின்றேன்.வாழ்த்துக்களுக்கு நன்றி விஜி.

ஸாதிகா said...

ஆசியா தோழி வாழ்த்துக்கு நன்றிப்பா.நான் இதனை சாதனை என்று நினைக்கவில்லை,செய்ய வேண்டிய சாதனைகள் இன்னும் எவ்வளவோ உள்ளது.

ஸாதிகா said...

இமா வாழ்த்துக்களுக்கு நன்றி!

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா அருசுவை தோழியே/
வலை உலக அன்பான நட்பே/ உங்கள் நட்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.
உங்கள் வீட்டிற்கு வந்த் போது ரொம்ப பரபரப்பில் வந்தேன், நாள் முழுவதும் உங்களுடன் பேசி கொண்டிருந்தால் நல்ல இருக்குமே இவ்வளவு சீக்கிரம் வந்து விட்ட்டோமே என்று நினைத்து கொண்டே போனேன்.

பதிவு இன்ன்னும்போட என் பிலாக்குக்கு யாரோ கண்ணு போட்டுட்டாஙக. கிட்ட நெருங்கவே முடியல

ஹுஸைனம்மா said...

அட, ஒரு வருஷம் ஆச்சா?!! வாழ்த்துகள் அக்கா. 75-வது பொன்விழா பதிவுக்கும் வாழ்த்துகள் அக்கா.

சௌந்தர் said...

முதல் வருடத்திற்கு வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

ஸாதிகா said...

ஜலி,பின்னூட்டத்திற்கும்,வாழ்த்துக்கும் நன்ரி,மகிழ்ச்சி.//திவு இன்ன்னும்போட என் பிலாக்குக்கு யாரோ கண்ணு போட்டுட்டாஙக. கிட்ட நெருங்கவே முடியல
// இப்படி எல்லாம் சொல்லி தமதபடுத்தாதீர்கள்.வழக்கம் போல் அடிக்கடி பதிவு போடுங்கள்.

ஸாதிகா said...

ஹுசைனம்மா..ம்ம்..ஆச்சு ஒரு வருடம்..அதற்குள் வெகு சீக்கிரமாக ஒரு வருடம் ஆகிவிட்டது.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

சவுந்தர் வாழ்த்துக்கு நன்றி!

ஸாதிகா said...

சகோ ஜமால் வாழ்த்துக்கு நன்றி.

மின்மினி RS said...

வாழ்த்துக்கள் ஸாதிகாக்கா

சீமான்கனி said...

அக்கா!!! பூக்களுடன் வாழ்த்துகள்...

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் சகோ!

Jerry Eshananda said...

வாழ்த்துகள் ஸாதிகா மேம்....

vanathy said...

வாழ்த்துக்கள், அக்கா.

Anisha Yunus said...

ஸாதிகாக்கா,

வாழ்த்துக்கள்.:))

உங்களுடைய ஒவ்வொரு வலைப்பூவும் ஒவ்வொருவிதமான வகையில். நிறைய பதிவுகள், அதனால் நிறைய சவாபுகள். மாஷா அல்லாஹ். அல்லாஹ் இவை எல்லாவற்றிற்கும் இரு உலகின் நன்மைகளையும் தரட்டும். ஆமீன்.

இன்னும் பல வருடங்கள் இப்படியே அல்லது, இதைவிட மேலாகவும் தொடர வாழ்த்துக்கள் :)).

ஸாதிகா said...

மின்மினி வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸாதிகா said...

சீமான் கனி பூக்களுடனான வாழ்த்து கிடைத்தது.மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஜெரி சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வானதி வாழ்த்துக்களுக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ஸாதிகா!
மேலும் மேலும் சாதனைகள் தொடரட்டும்!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாழ்த்துக்கள் ஸாதிகா... இன்னும் பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

//.இன்னும் கொஞ்ச நாளில் பாம்பு,பல்லி வடிவங்களில் கூட தாயாரித்துவிடுவார்கள்.அப்படித்த்யாரித்தால் 2 கிலோ வாங்கி சார்ஜாவுக்கு பார்சல் போடுகின்றேன்.//


ஐ...இதை கேட்டதும் ஸ்வீட் கேக்கும் ஆசையோ போயிடுச்சி..!!
ச்சீ..ச்சீ..ஸ்வீட் எனக்கு பிடிக்காது..வேண்டாம் ..(( யப்பா கொஞ்ச நேரத்துல தலை சுத்த வச்சிட்டாங்களே ))

Unknown said...

வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து வலைப்பூ உலகில் வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

மனோ அக்கா,மிக்க நன்றி.சிறிது நாட்களாக இணையம் பக்கமே உங்களை காண இயலவில்லையே?

ஸாதிகா said...

அப்பாவித்தங்கமணி உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஜெய்லானி,சின்ன வயதில் நரி@திராட்சை தோட்டம் கதை நினைவுக்கு வந்து ரொம்பவே சிரித்து விட்டேன்.உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்துவிட்டு.

ஸாதிகா said...

சகோதரர் அபுல்பசர்,உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

Unknown said...

"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது

உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்..

ஸாதிகா said...

நன்றி அஹ்மது இர்ஷாத்

ஹைஷ்126 said...

வாழ்த்துகள்.

தாங்களும், தங்களின் வலைப்பூக்களும் வாழ்க வளமுடன்