August 29, 2010

காணவில்லை.





பதிவுலகில் முன்னர் தொடர்ந்து பதிவிட்டு வந்த பதிவுலக நட்புக்களில் சிலர் இப்பொழுது பதிவிடுவதில்லை.என் ஞாபத்தில் வந்தவர்களை வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றேன்.

தோழி செந்தமிழ்செல்வி.மலர்வனம் என்ற தலைப்பில் தனது டைரியையே மற்றவர்களுக்கு சமையலறையில் உதவிட பதிவிட்டவர்.தனிப்பட்ட முறையில் இவருடனான தொடர்பு இருந்தும் செல்போனில் இரு முறை தொடர்பு கொண்டும் பேசமுடியவில்லை.

ஷஃபிக்ஸ் என்ற தலைப்பில் பதிவர்களுக்கு எல்லாம் பாங்குற பின்னூட்டி,உற்சாகப்படுத்தி,தான் மட்டும் மிக குறைந்த அளவே பதிவிட்டு வந்த பதிவுலகத்தூண் ஷபி

பிரியாணி என்ற சுவாரஸ்யமான தலைப்பை வைத்து பிரியாணியை கண்களிலே காட்டாமல் மற்ற ஆக்கப்பூரவாமான கட்டுரைகள் தந்து தன் பிளாக்கை கலகலப்பாகிக்கொண்டிருந்தவர்

கருவாச்சி என்ற பெயரில் சுவாரஸ்யமாக பதிவுகளிட்டு வந்த சகோதரர் காஜா ஷரிப்.

ஹர்ஷினியின் அம்மா ஹர்ஷினிக்காக என்ற தலைப்பில் தன் மகளைப்பற்றி சுவாரஸ்யாமாக எழுதி வந்ததுடன்,கதம்பம் என்ற பெயரில் தனது சமையல்,கைவினைப்பொருட்களை பகிர்ந்து வந்த சகோதரி

அம்முவின் சமையல் என்ற தலைப்பில் தனது சமையல் குறிப்புகளுடன் செய்த சமையலை எழிலுற அலங்கரித்து கண்களை கட்டிப்போட்ட அம்மு மது

பித்தனின் வாக்கு என்ற பெயரிட்டு பதிவர்களை கற்பனை செய்து நாடகமே போட்டு அசத்திய சுதாகர் சார்

வெல்கம் டு சுஸ்ரீ கிரியேஷன் என்று அனைவரையும் வரவேற்று தன் சமையல் திறனைகாட்டி வந்த சுஸ்ரீ

விமர்சனம் என்ற தலைப்பிட்டு கட்டுரைகளோடு,கவிதைகளையும் அள்ளித்தெளித்த மலர்

என் ஐ ஆர் இதயத்தை கடைசியாக கவிதையில் வடித்து விட்டு ஊருக்கு போய் வருகின்றேன் என்று புறப்பட்டுப்போன சகோதரர் மனவிலாசம் நவாஸுதீன்

அதே கண்கள் என்ற தலைப்பில் சென்னைதமிழிலில் டெக்னிக்கல் விஷயங்களை பாங்குற பகிர்ந்த டவுசர் பாண்டி அண்ணாத்தே,இவர் இருப்பிடம் மரியாத்தா கோவிலாண்டே இருக்கின்றது என்று குறிப்பிட்டதால் மாரியாத்தா கோவில் பக்கமாக வழி நடக்கும் போழுது அந்த கண்கள் தென்படவே இல்லையே

சகபதிவர்களுக்கு ஓட்டும்,பின்னூட்டங்களும் சளைக்காமல் போட்டு வந்து பதிவுகளை மட்டும் மிகக்குறைந்த அளவில் போட்டு வந்த அண்ணாமலையான்

மற்றும் இப்பட்டியலில் இடம் பெறாத காணாமல் போன சக பதிவர்களும் தொடர்ந்து வந்து பதிவுலகை தங்கள் பதிவுகளால் கலக்கி சுவாரஸ்யம் கூட்ட அன்புடன் மற்ற பதிவுலக நட்புக்களின் சார்பில் அன்போடு அழைக்கின்றேன்.

67 comments:

நட்புடன் ஜமால் said...

இதில் சில பேரை நானும் தேடுகிறேன்

கண்டாக்க வர சொல்லுங்கோ

செ.சரவணக்குமார் said...

அக்கா நானும் நவாஸுதீன் அண்ணனை ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கேன். மக்கா எங்க இருக்கீங்க எல்லோரும்? வந்து கலக்குங்க.

பகிர்வுக்கு நன்றி அக்கா.

GEETHA ACHAL said...

Me too searching for them...

நாஸியா said...

ஸலாம் சகோதரி!!

ஹிஹி.. நம்மளையும் நினைவு வெச்சிருக்கீங்களே.. ரொம்ப சந்தோஷம்.. ஹிஹி..

துவா செய்யுங்க.. கூடிய சீக்கிரம் எழுதறேன் இன்ஷா அல்லாஹ்..

Unknown said...

அக்கா எனக்கு தெரிந்து ஹாசினி இந்தியா வந்திருக்கங்க.. இன்னும் வரலைன்னு நினைக்கிறேன். நவாஸ் அண்ணை னை பற்றி ஜமால் அண்ணன் கிட்ட தான் கேட்க்கனும்...

Unknown said...

காணமால் போணவர்களின் ஒருவர் கண்டு பிடிச்சாச்சா?

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வட போச்சே ஸாதிகா அக்கா.

நல்ல முயற்சி.... வலைப்பதிவர்களுக்கே வலை வீசவேண்டியதாய் இருக்கே.

ஹார்சினி அம்மா.... அவதான் ஹா..ஹா...ஹா... ஹாசினி இருக்கிறாவே. நட்பிலே எனக்கு வந்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறா.

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா, தலைப்பு போட்டால் மட்டும் போதாது, ஊரூராகப் போய்த் தேடிக்கண்டுபிடியுங்கோ... செருப்புத் தேய்ந்தால் புதிசு வாங்கிடலாம்:).

ஜெய்லானி said...

ஹா.....ஹா... ஸாதிகாக்கா...நீங்க வீசிய வலையில ஒரு மீன்தான் வந்திருக்கு.......இப்பிடி சொல்லிதான் கூப்பிட வேண்டியிருக்கு போல .

:-)))))))))))))))))))

ஜெய்லானி said...

//ஸாதிகா அக்கா, தலைப்பு போட்டால் மட்டும் போதாது, ஊரூராகப் போய்த் தேடிக்கண்டுபிடியுங்கோ... செருப்புத் தேய்ந்தால் புதிசு வாங்கிடலாம்:).//

ஏன்..!! ஒரு மரத்து மேல் உட்கார வைத்து 16 மைல் பார்க்கும் திறமையை சொல்லி கொடுக்காலாமே..!! ஹி..ஹி....

சீமான்கனி said...

எந்த பதிவில் பார்த்தாலும் கடத்திவிடுவோம் கவலை வேண்டாம் அக்கா...அங்கங்க ஆளு போட்டிருக்கு...

நாஸியா கா தானா வந்து சரண் அடைந்ததால் காலவரையற்ற ஜாமீன் வழங்கப்படுகிறது...ஆனால் அடிக்கடி வந்து தலையை காட்டிட்டு போகணும்....இத்துடன் கோர்ட் கலைகிறது...

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா, சகோதரிக்கு உண்மையான அர்த்தம் சொல்லிவிட்டீர்கள், காணாமல் போன வலைபதிவர்களை வலைவீசி தேடி கண்டுபிடிக்கத் எடுத்த முயற்சிதான்!!! உங்களது பாசத்திற்கும், கரிசனத்திற்கு கண்டிப்பாக அல்லாஹ்வின் கருணை மிக அதிகமாகவே உண்டு.

1. நேற்றே வலையில் பிரியாணி மாட்டிக் கொண்டது.

2. ஹர்ஷினி அம்மா நட்பு பகுதியை ஒளிஞ்சு படிச்சு வந்தவக அதிராவின் திருமண நாள் என்றதும் பொறுக்க முடியாமல் வெளியே வந்து விட்டார்கள்.

3. நேற்று தான் மற்றொரு வலைபதிவருடன் தொலைபேசியில் பேசும் போது அண்ணாமலையானை பற்றி பேசினோம், லீவில் போகும் போது பிடித்து விடுகிறோம்.

4. அன்பு ச்கோதரி செந்தமிழ் செல்வி தன் மகளின் பராமரிப்புக்கும், வீட்டில் இருக்கும் அவரது உறவினர் அனைவரையை கவனிக்கவும் நேரம் போதவில்லை விரைவில் வருவரர்கள்.

மற்றோர் அனைவரும் இன்ஷா அல்ஹாவின் கருணையினால் நோன்பு முடியும் முன் வெளிவந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஹைஷ்126 said...

மேலே இருக்கும் படம் சூப்பர். நான் கூட தி கிரேட் பிரமி்ட் போனபோது “கிங்ஸ் சேம்பரில்” இருந்து வெளிவரவே மனமில்லை அங்கேயே படுத்துக் கொள்ள வேண்டும் என தோன்றியது. ராயல் மியூஸியம் அனைத்துமே மிக அருமை.

மீண்டும் ஒரு முறை போய் வர வேண்டும். மீனா ஓபராயின் உபசரிப்பு, நைல் க்ரூஸ், பெல்லிடான்ஸ் எல்லாம் நினைவுக்கு வருகிறது:)

இமா க்றிஸ் said...

முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் ஸாதிகா.

நானும் சிலரைத் தேடுகிறேன். ;)

Chitra said...

அதானே?????? லீவு இன்னும் முடியலியா?

சிங்கக்குட்டி said...

சுதாகர் மற்றும் அம்மு விடுமுறைக்கு செல்வதாக படித்த நினைவு.

athira said...

ஏன்..!! ஒரு மரத்து மேல் உட்கார வைத்து 16 மைல் பார்க்கும் திறமையை சொல்லி கொடுக்காலாமே..!! ஹி..ஹி....////

ஜெய்.... அதுக்கு முதல் முக்கியமா மரமேறத் தெரிஞ்சிருக்கோணுமே பூஸாரைப்போல ஸ்பீட்டா:).... ஹா...ஹா...ஹாஆ... இதுக்குத்தான் கிட்னியை வடிவா யூஸ் பண்ணோனும்:))).

தலைப்பு போட்டது ஸாதிகா அக்கா, செருப்பு தேய்ந்தது ஹைஷ் அண்ணனுக்கு.....
ஸாதிகா அக்கா, அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு, இனி அனைவரையும் கண்டுபிடித்திடலாம்.

ஸாதிகா said...

சகோ ஜமால்.தேடுதலுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி சரவணக்குமார்.எனது வலைப்பூ பக்கமும் உங்களை நீண்ட நாட்களாக காணவில்லையே?:)

ஸாதிகா said...

வாவ்...பிரியாணி சிக்கிடுச்சி.வாங்க நாஸியா.சைலண்ட் ரீடரா இருந்து பதிவுகளை படித்துக்கொண்டு நான் பதிவிட்டதுமே உடனே ஓடி வந்துட்டீங்க.மிக்க மகிழ்ச்சி.இனி உங்கள் வலைப்பூ நிறைய மலர வேண்டும்.புது வரவு வந்தாச்சா?

ஸாதிகா said...

பாயிஷா கருத்துக்கு நன்றி.ஆமாம .ஒருவரை கண்டு பிடிச்சாச்சு.

ஸாதிகா said...

அதிரா//தலைப்பு போட்டால் மட்டும் போதாது, ஊரூராகப் போய்த் தேடிக்கண்டுபிடியுங்கோ... செருப்புத் தேய்ந்தால் புதிசு வாங்கிடலாம்:).// எதுக்கு செருப்பு தேயுது?ஸாதிகா அக்காவா?கொக்கா?நாங்கதான் ஒட்டகம் மேலே அமர்ந்து சவாரி செய்துகொண்டே தேடுறோம்ல.

ஸாதிகா said...

ஜெய்லானி அதிராவுக்கு கொடுத்த பதிலை படியுங்கள்.மரத்து மேலே எல்லாம் ஏறி கஷடப்படாமல் ஒட்டகசாவரி செய்கிறோம்ல.

ஸாதிகா said...

//எந்த பதிவில் பார்த்தாலும் கடத்திவிடுவோம் கவலை வேண்டாம் அக்கா...அங்கங்க ஆளு போட்டிருக்கு...// நாட்டாமை சீமான்கனி தீர்ப்பு சொல்லியாச்சு.

ஸாதிகா said...

சகோதரர் ஹைஷ் ,கருத்துக்கும்,கண்டுபிடிப்புக்கும்,வாழ்த்துக்கும் மிக,மிக நன்றி.கிரேட் பிரமிட் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி இமா.

ஸாதிகா said...

தேடுவோம்.நம்மை மாதிரி இன்னும் எத்தனை பேர் தேடிக்கொண்டு இருக்காங்களோ.நன்றி கீதா ஆச்சல்

ஸாதிகா said...

சித்ரா..லீவு இத்தனை நாட்களா....?

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சிங்ககுட்டி

ஸாதிகா said...

அதிஸ் வடிவா உவமானம் சொல்லுறீங்களே!உண்மையை சொல்லுங்க.நீங்க எனக்கு அக்காவா?தங்கச்சியா?

நாஸியா said...

ஆஹா... நான் தண்டனையிலிருந்து தப்பிச்சிட்டேனா? வெரி குட், ரொம்ப நன்றி..

ஸாதிகா அக்கா... துவா செய்யுங்க.. நாள் நெருங்கிட்டு

Ahamed irshad said...

Me too..

SUFFIX said...

ரமலான் வாழ்த்துக்கள், லீவூ முடிஞ்சு வந்தாச்சு, அப்புறம் கொஞ்சம் அங்கிட்டும், இங்கிட்டும் வேலைகள் விரைவில் பதிவிற்குள் வந்து விடுகிறேன். அன்பிற்கு நன்றி.

தேவதை said...

Hello, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil
bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady
bloggers. we planned to publish your blog in future. i want just
your o.k. and a recent photograph.
my mobile no is. +91 9500019222
E-Mail- devathaidesk@gmail.com
thanks
Navaneethan

ஜெய்லானி said...

//அதிஸ் வடிவா உவமானம் சொல்லுறீங்களே!உண்மையை சொல்லுங்க.நீங்க எனக்கு அக்காவா?தங்கச்சியா?//

பாட்டி

புல்லாங்குழல் said...

புது கவிதை தாத்தா என் மு.மேத்தாவை சொல்வது போல் பதிவுலக பாட்டி தானோ நீங்கள்.எல்லார் மீதும் எத்தனை கரிசனம்.

athira said...

ஜெய்லானி said...
//அதிஸ் வடிவா உவமானம் சொல்லுறீங்களே!உண்மையை சொல்லுங்க.நீங்க எனக்கு அக்காவா?தங்கச்சியா?//

பாட்டி
///////ஸாஆஆஆஆதிகா அக்கா.... ஜெய் யை ஒருக்கால் பிடிச்சுத்தாறீங்களோ? எதுக்கோ? “அந்தக்குளத்துக்குள்” தூக்கிப்போடப் போறேன்:)))).

ஸாதிகா said...

//ஸாதிகா அக்கா... துவா செய்யுங்க.. நாள் நெருங்கிட்டு//ரொம்ப சந்தோஷம் நாஸியா.உங்களுக்காக என் துஆக்கள் எப்பொழுதும் உண்டு.

ஸாதிகா said...

நன்றி இர்ஷாத்

ஸாதிகா said...

லீவ் முடிந்து வந்தாச்சா ஷஃபி.மிக்க மகிழ்ச்சி.தொடருங்கள் உங்கள் வலைப்பூ பணியை.

ஸாதிகா said...

ஜெய்லானி////அதிஸ் வடிவா உவமானம் சொல்லுறீங்களே!உண்மையை சொல்லுங்க.நீங்க எனக்கு அக்காவா?தங்கச்சியா?//

பாட்டி// ஜாக்கிரதை ஜெய்லானி.பிரித்தானியாவில் இருந்து ஒரு புயல் வந்துடப்போகுது.

ஸாதிகா said...

// பதிவுலக பாட்டி தானோ நீங்கள்.எல்லார் மீதும் எத்தனை கரிசனம்.// என்னங்க..நூருல் அமீன் காக்கா(அண்ணா)என்னை..என்னை..என்னைப்போயா இந்த வார்த்தைக்கேட்டீங்க...?பாட்டியாகத்தான் கரிசனம் காட்டவேண்டுமா?ஒரு தங்கச்சியா காட்டக்கூடாதா?

ஸாதிகா said...

/////////ஸாஆஆஆஆதிகா அக்கா.... ஜெய் யை ஒருக்கால் பிடிச்சுத்தாறீங்களோ? எதுக்கோ? “அந்தக்குளத்துக்குள்” தூக்கிப்போடப் போறேன்:)))).// ஹா..ஹா..அதீஸ்,ஜெய்லானி நீச்சல் தெரியாமல் குளத்திற்குள் இருந்து தவிப்பதை இமேஜின் பண்ணிப்பார்த்தேன்.சிரிப்பு,சிரிப்பா வருது.(ஏன் இந்த கொலைவெறின்னு சார்ஜாவில் இருந்து கூச்சல் போடுறது காதில் விழுறது.)

அந்நியன் 2 said...

அடப் பாவிகளா!! நீங்கள் எல்லோருமே வாத்தியாருகளா !!!
நான் மட்டும்தான் படிக்கும் மாணவனா?

அதானே பார்த்தேன், யாரு என்னப் போட்டாலும் ஐ ..நாந்தேன் fபஸ்ட் வடை எனக்குத்தான் சொல்றது இதுக்குத்தானா ?

கோவிச்சுக்கிராதியே என்னடா, இவன் இப்படி எழுதுகிறான் என்று சும்மா தமாசு...படிச்சு வாத்தியாரா ஆகிறதை விட, பேசாமல் இப்படி வாத்தியாரா ஆகிடலாம் போலத் தெரியுது.

ஆமாம் இதுக்கு சங்கம்லாம் இருக்கா ?

ஜெய்லானி said...

//ஸாஆஆஆஆதிகா அக்கா.... ஜெய் யை ஒருக்கால் பிடிச்சுத்தாறீங்களோ? எதுக்கோ? “அந்தக்குளத்துக்குள்” தூக்கிப்போடப் போறேன்:)))).//

நா இப்ப அந்த குளத்துக்குள்ள இருந்துதான் கத்திக்கிட்டு இருக்கேன் ஹய்யோ..ஹய்யோ...ஒருகால் இல்ல ரெண்டுகாலையும் பிடிச்சு வெளியே வீசுங்க.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பதிவுலக சகோ. இவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும்
உடனே மேடைக்கு வரவும்.

athira said...

ஜெய்லானி said...
//

நா இப்ப அந்த குளத்துக்குள்ள இருந்துதான் கத்திக்கிட்டு இருக்கேன் ஹய்யோ..ஹய்யோ...ஒருகால் இல்ல ரெண்டுகாலையும் பிடிச்சு வெளியே வீசுங்க.
/// ஹா...ஹா.... ஹா... சிரிச்சதில வயிறு நொந்து புரைக்கடிச்சுப்போச்சு.... இருந்தாலும் ஜெய் க்கு உதவாட்டில் நான் ஒரு பூஸே இல்லை:). ஜெய் பயப்புடவாணாம்.... “அந்தக்காவுக்கு” நீந்தத் தெரியும், அவ உங்களை கரையில கொண்டுவந்து சேர்த்திடுவா... தெகிரியமாக் கத்துங்க சீ..சீ... வார்த்தை எல்லாம் தடுமாறுது, தைரியமா இருங்கோ... நான் ஆண்டவனை வேண்டுகிறேன்:))).

ஜெய்லானி said...

//பாட்டி// ஜாக்கிரதை ஜெய்லானி.பிரித்தானியாவில் இருந்து ஒரு புயல் வந்துடப்போகுது.//

//பாட்டியாகத்தான் கரிசனம் காட்டவேண்டுமா?ஒரு தங்கச்சியா காட்டக்கூடாதா?//

கேள்வி கேட்டுட்டு நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க ..லைன் கிளியர்..( யப்பாஆஆஆ..தப்பிச்சாச்சு..)

எம் அப்துல் காதர் said...

// நா இப்ப அந்த குளத்துக்குள்ள இருந்துதான் கத்திக்கிட்டு இருக்கேன் ஹய்யோ..ஹய்யோ...ஒருகால் இல்ல ரெண்டுகாலையும் பிடிச்சு வெளியே வீசுங்க.//

நீங்க உள்நீச்சல் அடிச்சிக்கிட்டு ஏதோ சொல்றீங்க,, ஆனா என்ன சொல்றீங்கன்னு தான் எங்களுக்கு விளங்கலை பாஸ்.

கமலின் "விக்ரம்" படத்தில் கொடுக்கப் படும் சவுண்ட் மாதிரி தான் கேட்குது. க்கி க்கி

சிநேகிதன் அக்பர் said...

நவாஸுதீன், ஷாஃபி உட்பட அனைவரும் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

உங்களை தேடும் அன்பு உள்ளங்கள்.

வலைப்பதிவர்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா வலைவீசி தேடியிருக்கீக ஸாதிகா அக்கா..

தூயவனின் அடிமை said...

அனைவரையும் நினைவு வைத்து ,அவர்களின் எழுத்து பணியை மீண்டும் துவங்க அழைப்பு விட்ட சகோதரியின்
நல்ல மனதை பாராட்டுகிறேன்.

ஹுஸைனம்மா said...

கிடைச்சதும் சொல்லுங்கக்கா. நானும் சிலரைத் தேடிகிட்டிருக்கேன்.

அதுசரி, ஏன் பதிவை இப்படி “கோடிட்ட இடம் நிரப்புக” மாதிரி, அண்டர்லைன் பண்ணி வெச்சிருக்கீங்க?

;-))))

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மேனகா!

ஸாதிகா said...

அண்ணே அயூப் அண்ணே//அடப் பாவிகளா!! நீங்கள் எல்லோருமே வாத்தியாருகளா !!!
நான் மட்டும்தான் படிக்கும் மாணவனா?
// நாங்களாம் அப்பாவிங்கன்னே!கருந்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//கேள்வி கேட்டுட்டு நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க ..லைன் கிளியர்..( யப்பாஆஆஆ..தப்பிச்சாச்சு..)//ஒகே ஜெய்லானி.சாப்டர் க்ளோஸ்.போங்க..போய் நிம்மதியா தொழுதுட்டு ஓதிட்டு இருங்க.

ஸாதிகா said...

//பதிவுலக சகோ. இவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும்
உடனே மேடைக்கு வரவும்// நிஜாமுதீன் சாருக்கு மேடையில் பேசிய அனுபவம் அதிகமோ?கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

அதீஸ்..போதும்..நோன்பு காலம்.ரொம்ப சிரிக்க வைக்காதீங்க.பின்னூட்டத்தையே ஒரு கலகலப்பாக்கியமைக்கு நன்றி

ஸாதிகா said...

அப்துல்காதர்..என்னவோ பேசிக்கறீங்க.ஒன்றும் புரியலே.இருந்தாலும் நன்றியை வாங்கிக்குங்க.

ஸாதிகா said...

அக்பர்..நீங்களும் மேடைப்பேச்சாளர்தானா?கருத்துக்கு நன்றிங்க.

ஸாதிகா said...

ஸ்டார்ஜன் கருத்துக்கு நன்றி.பிஸியா?பதிவுகள் அதிகம் காணவில்லையே?

ஸாதிகா said...

இளம்தூயவன்,பாராட்டுக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

//அதுசரி, ஏன் பதிவை இப்படி “கோடிட்ட இடம் நிரப்புக” மாதிரி, அண்டர்லைன் பண்ணி வெச்சிருக்கீங்க?

;-))))// வேறொண்ணுமில்லை.உங்களைப்போன்றோர் கஷ்டம் இல்லாமல் படிப்பதற்குத்தான் ஹுசைனம்மா...அப்படியெல்லாம் சொல்லிடுவேன்னு பார்த்திங்களா?

என்ன வென்று தெரியலே.இப்படியே பப்லிஷ் ஆகி விட்டது.இதுவும் வித்தியாசமாகத்தான் இருக்குன்னு அப்படியே விட்டு விட்டேன்.

Asiya Omar said...

தேவையான இடுகை,சிலரை நானும் நீண்ட நாட்களாக பார்க்கவில்லை.அப்பாடா நாஸியா நான் நினைச்சது தான் போலும்.அண்ணாமலையானோட ஒட்டு இல்லையேன்னு தேடியது உண்டு,செல்விக்கா பிஸின்னு நினைக்கிறேன்.மலரையும் காணோம்.எல்லாரையும் நானும் தேடிகிட்டு தான் இருந்தேன்,ஸாதிகா தெரிவிச்சிட்டாஙக.எல்லாரும் சீக்கிரம் வாங்க.

புல்லாங்குழல் said...

// பதிவுலக பாட்டி தானோ நீங்கள்.எல்லார் மீதும் எத்தனை கரிசனம்.// என்னங்க..நூருல் அமீன் காக்கா(அண்ணா)என்னை..என்னை..என்னைப்போயா இந்த வார்த்தைக்கேட்டீங்க...?பாட்டியாகத்தான் கரிசனம் காட்டவேண்டுமா?ஒரு தங்கச்சியா காட்டக்கூடாதா?-
பதிவுலகில் எங்களுக்கு முந்திய தலைமுறை என்ற அர்தத்தில் மட்டுமே பாட்டி. வயதால் எங்கள் அவைவருக்கும் தங்கச்சி தான் நீங்க

vanathy said...

ஸாதிகா அக்கா, எல்லோரும் சேர்ந்தே தேடலாம். ஒட்டகத்தின் மேலே யாரது??? எங்கட ஜெய்யா?? ஒட்டகம் சூப்பர். பொருத்தமான படம்.

Malini's Signature said...

ஸாதிகா அக்கா அதுகுள்ளே காணமே போனவங்க பட்டியலே என்னையும் சேத்துட்டீங்களே?...

3 மாதம் விடுமுறைக்கு போயிட்டு இப்பதான் வந்து இருக்கேன் அக்கா .....உங்க பதிவை பாத்ததும் ஓடோடி வந்திட்டேன். :-)