August 22, 2010

கொத்தவரங்கா போல உடம்பு...

"தொம்..தொம்..தொம்.."
மாடியில் இருந்து தொடர்ந்து வந்த சப்தத்தினால் தூக்கத்தை தொடர முடியாமல் போர்வையை உதறினான் மணி.
"மீனு..மீனு.."குரலுக்கு பதில் வராததால் எரிச்சலுடன் ஹாலுக்கு வந்தான்.நிசப்தமாக இருந்த ஹாலை ஒட்டி இருந்த அடுக்களைக்குள் நுழைந்து பார்த்தால் இந்நேரம் களைகட்டிக்கொண்டிருக்கும் அடுக்களை அன்று களை இழந்து போய் இருந்தது.
"மீனு..ஏய்..மீனு..எங்கே போனாள் இவள்.சே.. மனுஷனால் ஞாயிற்றுக்கிழமை கூட நிம்மதியாக தூங்கமுடியவில்லை"சப்தம் வந்த மாடியை நோக்கிச்சென்றால் அங்கு மணியின் பத்தினி வேர்க்க விறுவிறுக்க ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தாள்.

"மீனு ..என்ன ஆச்சு..?காலங்காத்தாலே ஸ்கிப்பிங்..?"
"முப்பத்தி அஞ்சு..வெயிட் ரெட்யூஸ்தான்.. முப்பத்தாறு.."
"அதுக்கு..இப்படி காலையிலேயேவா..?காபி கிடையாதா?
"முப்பத்தேழு...இப்ப என்ன அவசரம் காஃபிக்கு..முப்பதெட்டு..கொஞ்சம் பொறுங்கோ..முப்பத்தொன்பது.."

தொடர்ந்து அவளுடன் பேச பொறுமை இல்லாமல் திரும்பினான்.
எழுந்ததும் காபி கப்புடன் நிற்பவள் இன்று எழுந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு காபிகலந்து தந்தவளை அமைதியாக பார்த்தான்.
"இன்னிக்கு என்ன டிபன்?"
"ஓட்ஸ்.."
"ஓட்ஸா..இதென்ன புது பழக்கம்..?"
"ம்மா..நான் வன்மையாக இதை கண்டிக்கறேன்"கையில் பிரஸ்ஸுடன் வந்த அனு கர்ஜித்தாள்.
"நீ மெலிய வேண்டும் என்பதற்காக ஓட்ஸும் கூழுமா போட்டு எங்களை கடுப்பேற்றாதே..மரியாதையா இன்னிக்கு வழக்கம் போல் டிபன் பண்ணு..மதியம் மட்டன் பிரியாணியும்,சிக்கன் பிரையும் பண்ணு"
"அனு..அனு..ப்ளீஸ்..டாக்டர் கண்டிப்பா நான் வெயிட்டை ரெட்யூஸ் செய்யனும்ன்னு சொல்லி இருக்கார்.வைராக்கியமாக இருக்கேண்டி..கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்க ப்ளீஸ்"
"கண்டிப்பா என்னால் பொறுத்துக்க முடியாது..இன்னிக்கு நான் சொன்னதை செய்றே"
காலையில் டிபனாக மொறு மொறுப்பான பூரியும்,உருளைமசாலாவும் செய்து கணவனுக்கும்,மகளுக்கும் பறிமாறிவிட்டு ஓட்ஸை நீரில் காய்ச்சி சாப்பிட்டவளை மணியும்,அனுவும் பரிதாபமாக பார்த்தனர்.

மதியம் வழக்கம் போல் மட்டன் பிரியாணியும் சிக்கன் ஃபிரையும் ரைத்தாவும் செய்து மகளுக்கு கணவருக்கும் பறிமாரிவிட்டு இரண்டு சப்பாத்திகளை ரைத்தாவில் தோய்த்து விழி பிதுங்க சாப்பிட்டவளை மணியும் அனுவும் பரிதாபமாக பார்த்தனர்.

சாயங்காலம் ஏதாவது ஒரு மாலுக்கு போய் வரலாம் என்று மகள் அழைத்ததை நிராகரித்துவிட்டு "இதில் மட்டும் என்னை கம்பெல் பண்ணக்கூடாது"என்று விட்டு ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டு வாக்கிங் கிளம்பி விட்டாள்.

"ம்மா..எயிட்டி கேஜி அக்பர் கோட்டையா இருக்கற நீ பிஃப்டி கேஜி தாஜ்மகாலா போறியா?"மகளின் கிண்டலையும் பொருட்படுத்தாமல்,

"மீனு..ரொம்ப மெனக்கெடாதே..ஒரே நாளில் இவ்வளவு சிரத்தை எடுத்தால் டயர்ட் ஆயிடுவே"கணவரின் கரிசனத்தையும் அலட்சியபடுத்தி விட்டு எடை குறைப்பில் தீவிரமானாள்.

"என்னங்க ஆஃபீஸ் விட்டு வர்ரச்சே காதிகிராப்டில் ஒரு கிலோ தேன் வாங்கிட்டு வாங்க.அங்கேதான் சுத்தமான தேன் கிடைக்கும்"
"ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு வாக் போவது சிரமமாக உள்ளதுங்க.பேட்டாவில் கேன்வாஸ்ஷூ வாங்கிட்டு வர்ரீங்களா?"
"மார்க்கெட்டில் வாழைத்தண்டும் ,அருகம்புல்லும் கிடைத்தால் வாங்கிட்டு வாங்க..கிடைக்கலேன்னா அப்படியே ஒரு எட்டு கோயம்பேடு போய்ட்டீங்கன்னா கண்டிப்பா கிடைக்கும்.இதுகளில் ஜூஸ் பண்ணி சாப்பிட்டால் வெய்ட் கட கடன்னு குறையுமாம்"
"டிஜிட்டல் வெய்யிங் மிஷின் ஒண்ணு வாங்கிட்டு வந்துடுங்க.அது ரொம்ப அவசியம்"

பக்கத்து தெருவில் இருக்கும் ஜிம்மில் சேர்ந்தே ஆகணும் என்று ஒற்றைக்காலில் நின்று கணவரிடம் இருந்து முள்ளங்கிபத்தையாக பத்தாயிரத்தை வாங்கிகொண்டு போய் ஜிம்மில் கட்டி நாண்கு நாள் தொடர்ந்தார்ப்போல் போய் வந்தவள் நாண்காம் நாள் ஆரம்பித்து விட்டாள்.

"அப்பப்பா.. இந்த மெட்ரோ வாட்டர் காரனும் ஈபிகாரனும் பள்ளம் நோண்டி போட்டு தெருவை தெருவாகவா வைத்திருக்காங்க.."
அலுத்துக்கொண்டவளை மேலும் கீழும் பார்த்தான் மணி.

பள்ளத்தில் விழுந்து கிழுந்து ஏடாகூடமாகிவிடப்போகுதுன்னு பயமா இருக்குங்க"
இப்படி ஆரம்பித்து எதை இவள் ஏடாகூடமாக கேட்டு வைக்கப்போகின்றாளோ என்ற கிலியுடன் மனைவியை ஏறிட்டான்.
"ஒரு டிரட் மில் ஒன்று வாங்கிடலாம்..நீங்க கூட காலையில் ஒரு அரைமணி நேரம் யூஸ் பண்ணினால் பிரிஸ்கா இருக்கும்"
"போச்சுடா"
"இதற்கெல்லாம் கஞ்சத்தனம் கூடாது.இது ஹெல்த் விஷயம்..நாளைக்கு ஒண்ணுன்னா டாக்டர் கிட்டே ஆயிரக்கணக்கில் கொட்டிகொடுக்கறதுக்கு இது எவ்வளவு நல்லது"
மறு நாள் டிரட்மில் வந்து இறங்கிய பிறகுதான் நிம்மதியானாள்.

டிரஸ்ஸிங் கண்ணாடி முன் நின்று தன்னை நிலைக்கண்ணாடியில் சுற்றும் முற்றும் பார்த்தவள்"என்னங்க..என்னங்க.."என்று அலறிய அலறலில் வாசித்துக்கொண்டிருந்த நியூஸ் பேப்பர் எகிற ஓடி வந்தவனிடம்"ஏங்க நான் மெலிந்தாற்போல் இருக்கென் இல்லே.."என்று அப்பாவியாக கேட்டவளைப்பார்க்க மணிக்கு கோபமும் சிரிப்பும் அடக்கமாட்டாமல் வந்தது.

பக்கத்து வீட்டு பதமா,எதிர்வீட்டு இந்திரா,மூன்றாம் தெரு ருக்மணி,பால்ய ஸ்நேகிதி பவித்ரா இப்படி யார் யார் என்ன சொன்னார்களோ அத்தனையும் தவறாது கடைபிடித்தாள்.
"உடம்பை குறைக்கறேன்னு கண்டதையும் சாப்பிட்டு கஷ்டப்படாதே"கணவரின் எச்சரித்தலையும் அலட்சியம் செய்தாள்.
"அப்பா..இன்னும் ஒரு நாலு நாளைக்கு கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா..அம்மா..உங்க வழிக்கு வந்துடுவா.இப்ப நீங்க என்னதான் கரடியா கத்தினாலும் காதில் ஏறாது"சிரித்துக்கொண்டே சொன்ன மகளை பற்கள் நறநறக்க பார்த்தாள்.

ஒருவாரம் தொடர்ந்த வைராக்கியம் சற்று தளர்ந்தது உடம்பில் ஏற்பட்ட களைப்பினால்.தினம் காஃபிக்கு பதில் கொதிநீரில் கலந்த தேனை சாப்பிட்டு வறண்டிருந்த நாக்கு கெட்டி டிகாஷனுடன் டிகிரி காப்பி கேட்டது.
அரை டம்ளரில் என்ன ஆகிவிடபோகிறது என்று முழு டம்ளராகவே கூட ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்தாள்.ஒருவாரம் காபி குடிக்காத வாய்க்கு அமிர்தமாக இருந்தது.

கணவரும்,மகளும் ஆஃபீஸ் சென்ற நேரம் மொறுகலாக நாண்கு தோசை வார்த்து பசும்நெய்யில் பொடி கலந்து அரக்க பறக்க சாப்பிட்டாள்.

மதியத்தூக்கத்தை தியாகம் செய்து விட்டு டிரட்மில்லில் வேர்க்க வேர்க்க வாக் சென்றவள் அன்று காலில் பெயின் பாமை தடவிக்கொண்டு கணவர் ஆஃபீஸில் இருந்து வந்து காலிங்பெல் அடிக்கும் வரை தூங்கினாள்.

"தூங்கினியா"நமுட்டு சிரிப்போடு கேட்ட கணவரிடம்
"சரியான கால் வலிங்க"
"என்ன டிரட் மில் மேலே பூனை தூங்குது?"
கணவரின் அடுத்த நக்கலை தாக்கு பிடிக்க திராணி இல்லாமல் அடுக்களைக்குள் நுழைந்து விட்டாள்.

இரவு டைனிங் டேபிளில் மூவரும் அமர்ந்திருந்த பொழுது வழக்கத்துக்கு மாறாக அம்மாவின் தட்டில் வறட்டு சப்பாத்திக்கு பதிலாக எண்ணெய் மினுமினுக்க பரோட்டாவும்,வெண்னை மணமணக்க குருமாவும் தட்டு நிறைய இருப்பதைப்பார்த்து."ஐயோ..அம்மா உன் சப்பாத்தி எங்கே..?"கூவிய மகளை எரிக்கும் பார்வையினால் அடக்கி விட்டு "ஒரு வாரமா நான் பட்ட அவஸ்தை உனக்குக்கெங்கே தெரிய போகுது..பேசாமல் உன் பிளேட்டில் போட்டதை சாப்பிடு"கர்ஜித்தாள்.

அப்பாவும் பொண்ணும் நமுட்டு சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பரோட்டவை விண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

59 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப செலவாயிடுத்து போல

( கதைன்னு கதை விடாதீங்க :P )

athira said...

ஆ... ஸாதிகா அக்கா வடை எனக்குத்தான்... இதோ முழுவதும் பார்த்திட்டு வாறேன்.

athira said...

என்ன ஸாதிகா அக்கா, இப்பூடி வட இல்லாமல் பண்ணிட்டீங்களே....இட்ஸ் ஓக்கே..உங்கள் கதை படித்துச் சிரித்துக்கொண்டிருக்கிறேன்..... முக்கால்வாசி ஆட்களின் கதையும் இதேதான்.

எனக்கும் ஒரு கிழமையில் வெயிட் இறங்கியிருக்க வேணும் இல்லையென்றால் தொடர்ந்து செய்ய முடியாமல், கண்டறியாத சாப்பாடும் எக்ஸ சைசும், என்னத்தை காணப்போகிறோம் என விட்டுவிடுவேன்:),

அதுசரி இது சொந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்த அனுபவம்தானே ஸாதிகா அக்கா .

தூயவனின் அடிமை said...

சகோதரி சொந்த அனுபவம் இல்லையே, நிச்சயமா கதை தானே, நம்புறேன்.

Asiya Omar said...

கற்பனையோ நிஜமோ சூப்பர் காமெடி. இதெல்லாம் இப்ப எல்லார் வீட்டிலும் சகஜமப்பா.

ஸாதிகா said...

ஜமால் தம்பி வாயிலே இருந்து இபடி கேள்வி வரும்ன்னு கொஞ்சம் கூட நான் எதிர் பார்க்கலே.ஒரு கதாசிரியரை(!!) போய் இந்த கேள்வி கேட்கலாமோ?

ஸாதிகா said...

ஜமால் தம்பி,நீங்க சொன்னதுக்காகத்தான் நகைச்சுவையாக எழுதினேன்.பார்ப்போம் நூறு பீட் பேக் வருதான்னு.(சிரிச்சீங்களா இல்லையா அதை சொல்லவே இல்லையே?

ஸாதிகா said...

அதெல்லாம் சரி.என்னை பார்த்த அதிராவும் இந்த கேள்வி கேட்கலாமோ?தப்பு தப்பு..

ஸாதிகா said...

//சகோதரி சொந்த அனுபவம் இல்லையே, நிச்சயமா கதை தானே, நம்புறேன்.//சகோதரர் இளம் தூயவன் நீங்களுமா?இனி கதை எழுதவே கதி கலங்கிப்போகும் எனக்கு.அடுத்த கதையில் ஹீரோவின் பாட்டி இறந்து விட்டதாக கொண்டு வர்ரேன்.அப்ப என்ன சொல்வீர்கள் என்று பார்ப்போம்.கருத்துக்கு நன்றிங்கோ.

ஸாதிகா said...

ஆசியா தோழி நீங்களுமா...!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஹுஸைனம்மா said...

அக்கா,

அதெப்பிடிக்கா என்ன எழுதினாலும் யாராவது ஒருத்தராவது “உங்க சொந்தக் கதையா?”ன்னு சந்தேகக்கண்ணோட கேட்டு எழுதுற மாதிரி கத விடுறீங்க, சாரி, எழுதுறீங்க?

அல்லது கதையல்ல, இது உண்மையென்று நினைக்குமளவு எழுதுவது உங்கள் திறமை போல!!

சரி, சரி, அடிக்க வராதீங்க!!

நிஜமாவே நல்ல சிரிப்பு; பல வீடுகளில் (உங்க வீட்டைத் தவிர) நடக்கும் உண்மைக் கதைதான் இது!!

:-)))

Mahi said...

:):) காமெடியான உண்மைக்கதை ஸாதிகாக்கா! கஷ்டப்பட்டு ஒரு வாரம் டயட் இருந்துட்டு வெறுத்துப்போய் ஒரே நாள்ல எல்லாத்தையும் சாப்புட வேண்டியதுதான்! ஹா...ஹா!!

அந்நியன் 2 said...

ஏனுங்க ...நீங்க என்னங்க சொல்ல வர்றியே ..அந்த அம்மநிதான் எடையை கொரேக்கேறேம்னு...குதிச்சிசுலே, அப்புறம் எதுக்குங்க பொராட்டோவை எண்ணையில் ஊத்தி சாப்புடனும், இது தப்பு இல்லிங்களா.

அம்மணி எடையைக் கொரேக்கேறேம்னு, அய்யா எடையை கொறைச்சு புடிச்சி, மெசின் வாங்கித்தா ..எங்கும் கிடைக்காதே,கம்மம்புள்ளே வாங்கித்தான்னு,

இதுக்கு தண்டனையை நான் வழங்கிபுட்றேன் .ஏலே ..நான் சொல்றது சரிதானே.
தண்டனை :1 மூணு மாசத்திற்கு வேலைகாரி அம்மணியிடம் அடுத்த வீட்டு சேதியை சொல்லக் கூடாது.

தண்டனை :2 எக்காரணத்தைக் கொண்டும் அம்மணி டிவி பார்க்கபுடாது.

தண்டனை :3 வீட்டுச் செலவை மறு மவள்தான் பார்த்துகோனும்.

தண்டனை :4 அடி பைப்புலே இருந்து அம்மணி எட்டு கொடம் தண்ணீர் தினமும் பிடிக்கோணும்.

இதுதான் இந்த நாட்டமையின் தீர்ப்பு , அப்புறம் பாருலே அம்மணி கொத்தவரங்கா மாதுரி போகும்லே. எடுலே வண்டியை (ஒத்தை மாட்டு வண்டி )

Unknown said...

அக்கா வீட்டில் நடக்கும் கதையினை கதையால் சொல்லியிருக்கிங்க...
நல்லா இருக்கு.. சொன்னவிதம்.

ஜெய்லானி said...

//"இன்னிக்கு என்ன டிபன்?"
"ஓட்ஸ்.."
"ஓட்ஸா..இதென்ன புது பழக்கம்..?" //

அதானே உப்புமா வுக்கு பதில் ஓட்ஸ் போட்டால் நாங்க நம்பிடுவோமாக்கும்..!! ஹி..ஹி..

இமா க்றிஸ் said...

;))

ஸாதிகா, மேல வைங்கோ. ;)

ஜெய்லானி said...

ஹி..ஹி.. கதை ( ????) ஜூப்பரு..

சீமான்கனி said...

அக்கா நீங்க மச்சானை அடிக்குறதே இல்லையா!!??? அதைவிட செலவில்லாத சிறப்பான உடற்பயிற்சி இல்லவே இல்லையாம் அனுபவசாலிகள் சொன்னது...ஏதோ என்னால முடிஞ்சது...
ஹி...ஹி...ஹி...ஹி...

Menaga Sathia said...

ha ha akka nijamave ithu kathai thanaa illai anupavamaa?? sema comedy...

Vijiskitchencreations said...

என்னக்கா ஒரே சிரிப்பா இருக்கு. சூப்ப்ர் அக்கா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஒருவழியா டயட்லருந்து மீண்டு வந்தாச்சா.. நான் மீனுவ சொன்னேன்.. :)) நல்லாருக்கு கதை..

கதை திரைக்கதை இயக்கம்
ஸாதிகா அக்கா.

Chitra said...

"இன்னிக்கு என்ன டிபன்?"
"ஓட்ஸ்.."
"ஓட்ஸா..இதென்ன புது பழக்கம்..?"


...... இது கதையா? இல்லை, கதை மாதிரி நடந்த அனுபவமா? ஹா,ஹா,ஹா,ஹா,... செம காமெடி!

ஸாதிகா said...

குழந்தையையும் ஆட்டி விட்டு அப்படியே கிள்ளியும் விட்டு என்று சொல்லுவார்களே அதானா இது ஹுசைனம்மா.ஹி..ஹி..நன்றிங்கோ.

ஸாதிகா said...

மகி கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் முஹம்மத் ஐயூப் நாட்டமையாக மாட்டுவண்டியில் வந்து சூப்பரா தீர்ப்பு வழங்கிட்டீங்க.நன்றி,

ஸாதிகா said...

பாயிஷா..கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஹ்ம்ம்ம்ம்ம்...ஜெய்லானி எதைத்தான் நம்பினீங்க நீங்க?

ஸாதிகா said...

இமா...மேலே வாங்கன்னு கூப்பிடுறீங்களே.ஐயோ..இப்பவே இந்த கும்மு கும்முறாங்களேப்பா.எப்படி மேலே வர்ரது?

ஸாதிகா said...

//ஹி..ஹி.. கதை ( ????) ஜூப்பரு.// ஜெய்லானி இப்படி எல்லாம் நோன்பு திறந்துட்டு வாய் நிறைய சமோசாவை அடைத்துக்கொண்டு பேசப்படாது.

ஸாதிகா said...

//அக்கா நீங்க மச்சானை அடிக்குறதே இல்லையா!!??? அதைவிட செலவில்லாத சிறப்பான உடற்பயிற்சி இல்லவே இல்லையாம் அனுபவசாலிகள் சொன்னது...ஏதோ என்னால முடிஞ்சது...
ஹி...ஹி...ஹி...ஹி..// எல்லாரும் சின்னதா குருவி வெடி,குச்சி வெடி,பொட்டுவெடி,லக்ஷ்மி வெடின்னு கொளுத்திப்போட்டுட்டு இருக்காங்க.நீங்க என்னன்னா டைம் பாமையே போடுறீங்களே.சீமான் கனி நான் வரலேப்பா இந்த ஆட்டத்திற்கு.அக்காவா சின்ன அட்வைஸ்.கேட்டுக்கறீங்களா..இப்பவே நல்லா களி,உப்புமா,ஓட்ஸ் சாப்பிட்டு உடம்பை தேத்திகுங்க...நாளைப்பின்னே அடி வாங்கரச்சே தாக்கு பிடிக்கனும்ல.

ஸாதிகா said...

மேனகா,நல்லா சிரிச்சீங்களா?ஸ்க்ரீனை பார்த்து நீங்களே சிரித்துக்கொண்டிருந்ததை பார்த்து ஷிவானி பயப்படவில்லையே?

ஸாதிகா said...

விஜி..சிரிங்க..சிரிங்க..சிரிச்சுக்கிட்டே இருங்க.

ஸாதிகா said...

//கதை திரைக்கதை இயக்கம்
ஸாதிகா அக்கா// அட இந்த ஆசைக்கும் தூபம் போட்டு விடுவீங்க போல் இருக்கு!:-)

ஸாதிகா said...

நம்பினால் நம்புங்க சித்ரா.இது காமெடிக்காகாத்தான் எழுதப்பட்டது சித்ரா.

ஹைஷ்126 said...

எனக்கும் ஏதோ கதை போலவும் இருக்கு ஆனால் உண்மை சம்பவமா இருக்குமோ எனவும் தோணுது:))

வேற ஊரில் கூட உண்மை சம்பவமா இருக்கலாம் இல்லையா???

சரி சரி என் பரோடா குருமா வந்து விட்டது சாப்பிட்டு வருகிறேன்:)

வாழ்க வளமுடன்

Thenammai Lakshmanan said...

ஸாதிகா இப்படி நல்ல மெனுவா சொல்லி ஜொள்ளு ஊற வைச்சிட்டீங்களே..

இலா said...

இந்த கதை வருசத்து ஒரு முறை ஜே ஜேன்னு எங்க வீட்டில ஒரு மாசத்துக்கு நடக்கும்.. அப்புறம் ஊர்ல ஒரு உயிர் விடாமா இளச்சிட்டேனா ந்னு கேட்டு உயிரை எடுத்து.. அப்புறம் மறுவாரமே சிக்கின் தான் மட்டன் தான் பிரியாணி என்ன அ.கோ.மு என்ன... நல்ல கதை...

சீமான்கனி said...

ஹி...ஹி..ஹி...அக்கா ரெண்டு வருசமா அதேதான் பண்ணிக்கிட்டு இருக்கேன் அக்கா அடுத்த கட்ட நடவடிக்கையா ரோட்டுல சாட்டை அடிச்சு வித்தை காட்டுற சடையாண்டி கிட்ட சிறப்பு ட்ரைனிங் எடுக்க அப்ளிகேசன் போட்டிருக்கேன் அக்கா...

vanathy said...

அக்கா, வெயிட் குறைப்பது ஒரு பெரிய சவால் தான். இது உங்கள் அனுபவமோ???

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இது எல்லார் வீட்டிலும் ந்டக்கும் உண்மை கதை தானே/

சகோ.முஹம்மத் சரியா 4 டிப்ஸ் கொடுத்து இருக்கிறார்.

Ahamed irshad said...

நல்லாவே சிரிச்சேங்க.. அருமை

ஸாதிகா said...

//
வேற ஊரில் கூட உண்மை சம்பவமா இருக்கலாம் இல்லையா???
// என் கறபனையில் உதித்த சம்பவம் ஹைஷ் சார்.

ஸாதிகா said...

தேனம்மை மெனுவை மட்டும் பர்டிகுலரா கவனிச்சிருக்கீங்க..தேங்க்ஸ்பா

ஸாதிகா said...

//அ.கோ.மு// இலா முதலில் இதற்கு விளக்கம் பிளீஸ்

ஸாதிகா said...

சீமான்கனி//ஹி...ஹி..ஹி...அக்கா ரெண்டு வருசமா அதேதான் பண்ணிக்கிட்டு இருக்கேன் அக்கா அடுத்த கட்ட நடவடிக்கையா ரோட்டுல சாட்டை அடிச்சு வித்தை காட்டுற சடையாண்டி கிட்ட சிறப்பு ட்ரைனிங் எடுக்க அப்ளிகேசன் போட்டிருக்கேன் அக்கா..// அட்றா சக்கை.தம்பி விவரமான ஆள்தான்.எஞ்ஜாய்.

ஸாதிகா said...

ஏம்பா வானதி நீங்களும் ஒருகதாசிரியர்.எழுதுவதை எல்லாம் அனுபவமான்னு கேட்கலாமோ?

ஸாதிகா said...

ஜலி..கருத்துக்கு நன்றிப்பா!

ஸாதிகா said...

இர்ஷாத் நல்லாவே சிரிச்சீங்களா?ரொம்ப சந்தோஷம்.

இமா க்றிஸ் said...

அ.கோ.மு = (அதிராவின்) அவிச்ச கோழி முட்டை ;)

எம் அப்துல் காதர் said...

ஸாதிகாக்கா கதை எழுதும் கமெண்ட்ஸ் போடுற மக்களையும் மனசில வச்சுக்கிட்டு தான் எழுதணும் போல.பாருங்க இந்த புள்ள என்னாண்டு கிண்டலடிக்கிதுன்னு!! ((ஜெய்லானி said... ஹி..ஹி.. கதை ( ????) ஜூப்பரு))

அருமை சகோதரி!!

ஸாதிகா said...

//ஸாதிகாக்கா கதை எழுதும் கமெண்ட்ஸ் போடுற மக்களையும் மனசில வச்சுக்கிட்டு தான் எழுதணும் போல.பாருங்க இந்த புள்ள என்னாண்டு கிண்டலடிக்கிதுன்னு!! ((ஜெய்லானி said... ஹி..ஹி.. கதை ( ????) ஜூப்பரு))
// அதெல்லாம் ஒண்ணும் இல்லை அப்துல்காதர்.நோன்பு திறந்து விட்டு ஜெய்லானி பிரியாணியை வாய் முழுக்க அதக்கிக்கொண்டு பேசி இருக்கார்.அதான் அப்படி வந்துடுச்சி.இல்லையா ஜெய்லானி?

ஜெய்லானி said...

/அதெல்லாம் ஒண்ணும் இல்லை அப்துல்காதர்.நோன்பு திறந்து விட்டு ஜெய்லானி பிரியாணியை வாய் முழுக்க அதக்கிக்கொண்டு பேசி இருக்கார்.அதான் அப்படி வந்துடுச்சி.இல்லையா ஜெய்லானி?//

பிரியாணி மட்டுமா..ஹி..ஹி.

சரி இப்ப மிஷின் என்ன பரன்ல தூங்குதா..?..!!!ஹா..ஹா..

ஜெய்லானி said...

//பாருங்க இந்த புள்ள என்னாண்டு கிண்டலடிக்கிதுன்னு!! ((ஜெய்லானி said... ஹி..ஹி.. கதை ( ????) ஜூப்பரு)) //

ஓய் அப்துல் ..நா அப்பாவி இந்த மாதிரி குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்க கூடாது..ஹி.. ஹி... இல்லயா ஸாதிகாக்கா..!!

ஸாதிகா said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி இமா!

GEETHA ACHAL said...

ஆஹா..ஸாதிகா அக்கா...இந்த பதிவினை பாதி படித்துவிட்டு அவசர வேலையால் மீதியினை படிக்காமல் விட்டுவிட்டேன்..இப்பொழுது தான் படித்தேன்...அருமையாக எழுதி இருக்கின்றிங்க...இது கதையா...அல்லது உண்மையா...

Menaga Sathia said...

அக்கா உங்களின் மெது பகோடா செய்து பதிவு போட்டுள்ளேன்.இப்பலாம் அடிக்கடி இதை தான் செய்கிறேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றிக்கா!!

மனோ சாமிநாதன் said...

பல வீடுகளில் நடந்து வரும் உன்மைக்கதையை சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் ஸாதிகா! வாழ்த்துக்கள்!!

புல்லாங்குழல் said...

நல்லா சிரிப்பு தான் போங்க. கதையும் எழுதிகிறீர்களே!

F.NIHAZA said...

சூப்பர் கதை...
இன்னும் நிறைய எழுதலாமே...