April 8, 2010

தோஹா மியூஸியம்

கத்தார் மியூஸியம் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட்...கத்தார் தலைநகர் தோஹாவில் பார்க்கவேண்டிய ஒரு அதிஅற்புதமான கலைப்பொக்கிஷ‌ங்களின் உலகம்.கடலுக்கு நடுவில் அதி நவீனமாக,உயர்ந்த தொழில் நுடபத்துடன் அழகுற நிர்மானிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் கத்தாரில் 2008ஆம் ஆண்டு
நவம்பர்மாதம் 22ஆம் தேதி ஆரம்பிக்கபட்ட இந்த ஹைடெக் ஆர்கிடெக்சருடன் பிரம்மிக்கத்தக்கவகையில் பிரமாண்டமாக உலகில் மிக பிரபலமான முன்னணி கட்டிடக்கலை நிபுணர் IEOH MING PEIஎன்பவரால் வடிவமைக்கப்பட்டது.
பார்க்கவேண்டிய ஒரு அதிஅற்புதமான கலைப்பொக்கிஷ‌ங்களின் உலகம்.


தெற்குப்பகுதி கடற்கரை ஓரம் மேன் மேட் ஐலேண்ட் ஆக அமையக்க்ப்பட்டுள்ளது.3000 சதுர மீட்டர் ‍‍(376740 சதுர அடி)ஐந்து மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது

மேற்கூரையை பார்க்கும் பொழுது இறைவனின் அளப்பறிய ஆற்றலை எண்ணி வியந்தேன்.இத்தகைய கறபனை வளத்தை மனிதனுக்குள் தான் இறைவன் அமைத்தான் என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது.ஒரே மோல்டில்,மெட்டாலிக் எஃபெக்ட்டுடன் நிமிர்ந்து பார்ப்பவரை ஆச்சர்யப்படவைத்தது.
கண்ணாடித்தடுப்புக்குள் அமர்ந்து பார்த்தால் அருகிலேயே தெரியும் பரந்த கடல் தூரத்தே கட்டிடங்கள்,கடலில் ஜிவ் வென்று படகு சவாரி செய்யும் கத்தாரிகள்(இவர்களின் பொழுதுபொக்கே படகுசவாரிதான்)தகதகக்கும் வெயிலை மீறி வரும் ரம்யமான குளிர்..
அழகுமிகு பரந்து விரிந்த காரிடார்.ஹோட்டல்,ஷாப்பிங்மால் மற்றும் தியானக்கூடம் கஃபேட் ஏரியா என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட இங்கு நுழைவு கட்டணம் இல்லாவிட்டாலும் தீவிரமான பரிசோதனைக்குப்பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்ப்டுகின்றனர்.
வித்தியாசமான கோணத்தில் அகலமான படிக்கட்டுகள் கண்ணைகவருகின்றன.
நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலியெடுக்கும் உயரத்தில் மெட்டல் குதிரை கம்பீரமாக‌.
வைரம்,மற்றும் எமரால்ட் பதிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டின் நெக்லேஸ்.
தங்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட திருக்குர் ஆன்
டிரங்குப்பெட்டி.அதிகலை நயத்துடன் வருடங்கள் பல கடந்தாலும் பளீரிடுகின்றது.இங்கு செராமிக்,மெட்டல்,ஜுவல்,கிளாஸ் ,கிளாத் போன்ற கலெக்ஷன்களின் எண்ணிக்கை 2500க்கும் மேல் உள்ளது.
11 ஆம் நூற்றாண்டின் அரசருடைய ஆடை.விபரம்தரப்படவில்லை.தொட்டால் தூள் ஆகிவிடும்.பளபள கண்ணாடிப்பெட்டியினுள் பக்குவமாக பாதுகாத்து வருகின்றனர்.நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராவும்,ஊழியர்களும் பாதுகாப்பும் அனைத்துப்பொருட்களையும் கண்ணாடிக்கூண்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்து இருந்த விதத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அலங்கார கூஜா.பொன்னெழுத்து பொறிக்கப்பட்டு தகதகக்கின்றது.
12ஆம் நூற்றாண்டின் திரு குர் ஆன்.தங்க எழுத்துக்களில் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் அதனுடைய கருத்துக்களைப்போல்,அறிவுரைகளைப்போல்,சத்தியங்களைப்போல் மின்னுகின்றது.தொட்டு மகிழவேண்டும்,நெற்றி பதிக்க வேண்டும்,சிலவரிகள் ஓதி திளைக்கவேண்டும் ஆவல் எழுப்புகின்றது.
பார்ப்பதற்கு உருவத்திலும்,நிறத்திலும் கிளியைப்போல் தோற்றம் தரும் ஃபால்கான் பறவை.தங்கதில் ஆன எனாமல்,ரூபி,எமரால்ட்,வைரம் சபையர் போன்றவற்றினால் செய்யப்பட்டது.இதன் அழகைப்பார்த்து அதனை விட்டு நகரவே மனதில்லை.இங்கே அணிவகுத்து நிற்கும் பொருட்கள் 7வது நூற்றாண்டில் இருந்து 19 வது நூற்றாண்டு வரை உள்ளவையாகும்.மூன்று கண்டங்களில் முக்கியமாக இந்தியா,வளைகுடா,ஸ்பெய்னில் இருந்து திரட்டப்பட்டவை ஆகும்
வேலைப்பாட்டுடன் கூடிய 13 வது நூற்றாண்டின் செராமிக் தட்டு.
ஆபரணங்கள்.பல நூற்றாண்டுகளுக்கு முந்தய டிசைன்கள் இப்பொழுது ஆண்டிக்,குந்தன் என்று புதிய பெயரில் பவனி வருகின்றது.
மெட்டலில் ஆன மிருகம்.

25 comments:

Chitra said...

very nice photos. Super!

Menaga Sathia said...

படங்களும் அதன் விளக்கங்களும் சூப்பர்ர் அக்கா..பகிர்ந்தமைக்கு நன்றி!!

சீமான்கனி said...

ஆடை...கூஜா...12ஆம் நூற்றாண்டின் திரு குர் ஆன்... எல்லாமே சூப்பர் அக்கா...பொற்கிளி மட்டும்தான் ஒரு சின்ன திருத்தம் அது பறந்து போல் ஒரு பறவை தமிழில் ராஜாளி பறவைன்னு சொல்வதாய் கேள்வி...அற்புதமான பொக்கிஷ பதிவு அக்கா...நன்றி...

athira said...

நல்ல படங்கள் நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா.

ஆனால் எனக்கு வாழ்க்கையில் பிடிக்காத விஷயங்கள் சிலவற்றில் ஒன்று இந்த மியூஸியம் பார்த்தல். சின்ன வயதிலிருந்தே பிடிக்காது. இப்பவும் வீட்டிலே விட்டுவிட்டும் போகமாட்டார்கள் என்னை, கை காலைப்பிடிக்காத குறையாக கூட்டிப்போவார்கள்.... எப்படா திரும்புவோம் என்றிருக்கும்.

இங்கே எங்களிடத்தில்கூட பிரசித்தி பெற்ற 9 மியூஸியங்கள் இருக்கு, தவிர்க்கமுடியாமல் 2 மட்டும் பார்த்திருக்கிறேன்.. என் சொந்தக்கதை சோகக்கதை என்னோடுபோகட்டும் நீங்கள் தொடருங்கோ ஸாதிகா அக்கா..

ஜெய்லானி said...

//மேற்கூரையை பார்க்கும் பொழுது இறைவனின் அளப்பறிய ஆற்றலை எண்ணி வியந்தேன்.இத்தகைய கறபனை வளத்தை மனிதனுக்குள் தான் இறைவன் அமைத்தான் என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது.//

”உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யென கருதுகிறீர்கள் ?” (அல் குர் ஆன் 55:16 )

செ.சரவணக்குமார் said...

பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா. படங்களும் விளக்கங்களும் சூப்பர்.

athira said...

ஆ.... ஸாதிகா அக்கா... மியூஸியத்தில் ஜெய்..லானி இல்லையோ? இல்லாமல் இருக்காதே.. வடிவாப் பார்த்தனீங்களே?? சொக்கலேட்டில் செய்தமாதிரி, இது பஞ்சால செய்து..... இல்ல இல்ல நான் ஒண்ணுமே சொல்லல்லே.... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

மங்குனி அமைச்சர் said...

ஏன் மேடம் உங்களுக்கு ஏன் இந்த ஓர வஞ்சன , மியூசியம் வாசல்ல நம்ம ஜெய்லானி அந்த காலத்து சிப்பாய் உடையணிந்து , கைல ஒரு கொம்போட கண்சிமிட்டாம சிலையாட்டம் எவ்வளவு அழகா நிக்கிறான் , அத போட்டோ எடுத்து போடாம வுட்டிகளே

மின்மினி RS said...

வாவ் ரொம்ப அருமையான பொக்கிஷங்கள்.., இதெல்லாம் பார்க்கவேண்டிய காட்சிகள்., பொருள்கள். புகைப்பட தொகுப்பு அருமை அக்கா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்லாருக்கு.., புகைப்பட தொகுப்பு அருமை. காணவேண்டிய பொக்கிஷங்கள்.

Asiya Omar said...

ஸாதிகா போட்டோஸ் நச்சுன்னு இருக்கு.கத்தார் அல்கோரில் (ராஸ்கேஸ்)கொழுந்தனார் குடும்பம் உள்ளதால் போக ஒரு ப்ளான் இருக்கு.இன்ஷா அல்லாஹ்.

ஸாதிகா said...

சித்ரா,முதல் கருத்துக்கு மிக்க நன்றி.

மேனகா,கருத்துக்கு மிக்க நன்றி.

சீமான்கனி,கருத்துக்கு மிக்க நன்றி.திருத்ததிற்கு நன்றி.திருத்திவிட்டேன்.

சிரிக்கும் அதிராவைத்தானே நான் பார்த்து இருக்கிறேன்.பெருமூச்சுடன் சோகக்கதை என்று மூச்சு விடுகின்றீகள்??இனி கிக்கிக்கிக்...அதிராவைத்தான் நான் பார்க்கணும்.இந்த அவ்வ்வ்,,அழுகாச்சி அதிராவை பார்க்கக்கூடாது.சரியா?முதல்லே மியூஸியத்திற்கு பெயர் போன உங்கள் ஊரில் பார்த்ததை பகிரக்கூடாதா?

ஸாதிகா said...

மங்குனியாரே..நானும் அப்படிப்பட்ட ஆளை தேடித்தேடி பார்த்தேன்..கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவே இல்லையே?சென்னை கோல்டன் பீச்சில் ஒரு ஆள் நிற்பாரே .அவரா நீங்கள் சொல்லும் ஆள்??ம்ம் அதுவும் இருக்க முடியாதே..ஏன்னா..அவரை சிரிக்கவைத்து தோல்வி கண்டவர்கள் உங்கள் பெயரை சொல்லித்தான் அவரை திட்டிவிட்டுப்போவார்கள்.புரஃபைல் போட்டோவிலும் கிடத்தட்ட.......மீதியை ஜெய்லானி வந்து பார்த்துப்பார்..

ஸாதிகா said...

மின்மினி,ஸ்டார்ஜன் சார்,உற்சாகமூட்டும் கருத்துக்கள் .மிக்க நன்றி.

ஆசியா,பார்க்கவேண்டிய இடங்கள் துபையைப்போல் இல்லாவிட்டாலும் நிறையவே இருக்கின்றது.வந்து பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ஜெய்லாணி கருத்துக்கு நன்றி.அல்ஹம்துலில்லாஹ்.

சரவணக்குமார் உங்கள் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

//சென்னை கோல்டன் பீச்சில் ஒரு ஆள் நிற்பாரே .அவரா நீங்கள் சொல்லும் ஆள்??ம்ம் அதுவும் இருக்க முடியாதே..ஏன்னா..அவரை சிரிக்கவைத்து தோல்வி கண்டவர்கள் உங்கள் பெயரை சொல்லித்தான் அவரை திட்டிவிட்டுப்போவார்கள்.புரஃபைல் போட்டோவிலும் கிடத்தட்ட..//

சபாஷ்!! ஸாதிகாக்கா, கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க , அச்சச்சோ..மங்கு கண்ணை தொடச்சிக்க,

ஜெய்லானி said...

athira --//மியூஸியத்தில் ஜெய்..லானி இல்லையோ? இல்லாமல் இருக்காதே.. வடிவாப் பார்த்தனீங்களே?? சொக்கலேட்டில் செய்தமாதிரி, இது பஞ்சால செய்து........//.

இருந்தேனே , நல்ல வேளை யாரும் பாக்கல மொட்ட மாடில

//ஆனால் எனக்கு வாழ்க்கையில் பிடிக்காத விஷயங்கள் சிலவற்றில் ஒன்று இந்த மியூஸியம் பார்த்தல். சின்ன வயதிலிருந்தே பிடிக்காது//

அங்கு இருக்கிற கண்ணாடில உங்களையே பாத்துகிட்டீங்களா ??அதான் பயமா??

Jerry Eshananda said...

அற்புதம்..

athira said...

ஜெய்லானி வாழ்த்துக்கள்... இடதுகையாலயா இவ்வளவும் எழுதுறீங்க? ஆ.... புல்லரிக்குதெனக்கு உங்கட திறமையை நினைத்து...... வலது கை பற்றி காத்துவாக்கில் ஏதோ கேள்விப்பட்டேன் அதுதான் கேட்டேன்..... முறைக்கக்கூடாது... சொக்கலேட் பொம்மைமாதிரி கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ... ஸாதிகா அக்கா காப்பாத்துங்கோஓஓஓஓஓஓஓஓஓஒ

Thenammai Lakshmanan said...

12ஆம் நூற்றாண்டின் திரு குர் ஆன்.தங்க எழுத்துக்களில் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் அதனுடைய கருத்துக்களைப்போல்,அறிவுரைகளைப்போல்,சத்தியங்களைப்போல் மின்னுகின்றது.தொட்டு மகிழவேண்டும்,நெற்றி பதிக்க வேண்டும்,சிலவரிகள் ஓதி திளைக்கவேண்டும் ஆவல் எழுப்புகின்றது.//

மிக அருமையான உள்ள வெளிப்பாடு ஸாதிகா ..எனக்கு மிகப் பிடித்து இருந்தது...நெகிழ்ந்தேன் ..போட்டோக்களும் மிக அருமை

Jaleela Kamal said...

ரொம்ப அருமை அற்புதமான படங்கள்.

இப்போதைக்கு மங்குக்கு அங்கு வாசலலில் கம்பு வைத்து கொண்டு நிற்க ஆசை அதை ஜெய்லாணி என்று சொல்லி காட்டுகிறார் போல‌

ஹை ஹுஸைனாம்மா டிரெங்கு பெட்டியும் வந்து விட்டது.

குர் ஆன் எழுத்துக்கள் ரொம்ப விசித்திரம் பழங்கலா மியுஸியம் சென்றால் தான் இது போல் அரிய படங்களை பார்க்கலாம்
ஃபெல்கான், நெக்லஸ் கண்ணை பறிக்கிறது,.

நீங்கள் தான் வெளியூர் சென்றதை சரியாக ஓவ்வொரு இடத்தையும் போட்டோ எடுத்து இருக்கீங்க. எப்ப துபாய் வரீங்க.

சாமக்கோடங்கி said...

நல்ல படங்கள்..

மலைக்க வைக்கும் விஷயங்கள்..

பகிர்ந்தமைக்கு நன்றி..

ஹுஸைனம்மா said...

அக்கா, இந்த மியூஸியக் கட்டிடத்தின் படத்தைப் பலமுறைப் புத்தகங்களில் பார்த்திருக்கிறேன். வெளிப்புறத்தோற்றம் அத்தனை சுவாரசியமாகத் தெரியாததால், உள்ளே என்ன இருக்கப்போகிறது என்று அசிரத்தையாக இருந்தேன். எவ்வளவு அழகான விஷயங்கள்!! அதுவும் அந்த உள்புறக் கூரை - கட்டிடக்கலையின் அருமை வெளிப்படுகிறது!! யாரையும்/எதையும் புறத்தோற்றத்தால் எடைபோடக்கூடாது என்று மீண்டும் பாடம் படித்துக் கொண்டேன்!!

ஸாதிகா said...

ஹுஸைனம்மா has left a new comment on your post "ராணி கீரீடம்":

/அம்சஅடக்கமான தங்கை ஹுசைனம்மா//

அக்கா, என்னை அடக்கமான பொண்ணுன்னு சொல்லிருக்கீங்க பாருங்க, அதுக்காகவே உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்கணுங்கிற அளவுக்கு எனக்கு சந்தோஷமா இருக்கு!! முதல்முறை இப்படிச் சொல்லிக் கேட்கிறேன், அதான் ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு!! இதுதான் எனக்குப் பெரிய விருது!! :-))

விருதுக்கு ரொம்ப நன்றி அக்கா, சீக்கிரம் எடுத்து வச்சுக்கிறேன்

சில சமயம் சில கமெண்ட்டுகள் பப்லிஷ் செய்ய முடிவதில்லை.இப்படி பல கமெண்டுகள் மிஸ் ஆகிப்போகிறது.அதான் இப்படி.ஏன் இப்படி ஆகின்றது என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

ஸாதிகா said...

ஜெரி ஈசானந்தா சார் கருத்துக்கு நன்றி.

சகோதரி தேனம்மை,உங்கள் பின்னூட்டமும் எனக்கு நெகிழ்வைத்தந்தது.மிக்க நன்றி

ஜலீலா கருத்துக்கு நன்றி.துபை வந்ததும் போன் செய்கின்றேன்.

பிரகாஷ் (எ) சாம்கோடங்கி தங்கள் கருத்துக்கு நன்றி.

உண்மைதான் ஹுசைனம்மா..எதனையும் புறத்தோற்றத்தால் கணிக்க முடியாது.படத்தில்தான் அப்படி சிம்பிளான தோற்றம் தந்தாலும் நேரில் பார்க்கும்பொழுதே அதன் பிரமாண்டம் வியக்கத்தோன்றுகிறது.என்னைக்கவர்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.
அப்போ உங்களைப்பற்றிய என் கணிப்பு தப்பா?