November 26, 2013

மருத்துவர் மகாத்மியம்



வெளி நாட்டில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வரும் ஒரு உறவினர் வழக்கம் போல் ரெகுலர் செக் அப் சென்றுள்ளார்.பிரஷர் சுகர் கொலஸ்ட்ரால் என்று எதுவும் இல்லாதவர்.ஸ்டெத்தை வைத்து மட்டும் பரிசோதித்து விட்டு ஆஞ்சியோ கிராம் உடனே பண்ணி ஆக வேண்டும் என்று மருத்துவர் வற்புறுத்தினார்.குழந்தைகளுக்கு பேய்,பூச்சாண்டி என்று பயம் காட்டுவது போல் வாய்க்குள் நுழைய முடியாத பெயர்களைகூறி கதிகலங்க வைத்து விட்டார்.வழமையான செக் அப் சென்றவருக்கோ அதிர்ச்சி.எந்த பிரச்சினையும் இல்லாமல் எந்த வித பரிசோதனையும் முறைப்படி செய்யாமல் எடுத்த எடுப்பில் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்றால் அதிர்ச்சி வராமல் என்ன செய்யும்.

ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு  இருதயத்தில் உள்ள தசைகளின் பாதிப்பைப் பொருத்து, மீண்டும் நெஞ்சுவலி வந்தாலும், பாதிக்கப்பட்டவரின் வயதைப்பொருத்தும் ,உடல் நிலையைப்பொருத்தும் ஆஞ்சியோகிராம் செய்து, அதில் அடைப்பு உண்டா என்று கண்டறிந்து சிகிச்சை செய்வார்கள். இ சி ஜி ,டிரட்மில் ,எக்கோ என்று பல்வேறு பரிசோதனைகளுக்கே பின்னரே ஆஞ்சியோ செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்.

மருத்துவரிடம் இதனை கேட்டபொழுது “நீங்கள் பாரினுக்கு செல்கின்றீர்கள்.இதெல்லாம் தற்காப்புக்குத்தான்.மற்ற ஹாஸ்பிடலை விட 30%குறைவாகவே கட்டணம் பெறுகிறோம்.இந்த சலுகை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே.ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி விடுவோம்.நாளையே அட்மிட் ஆகி விடுங்கள்.” என்று வார்த்தை ஜாலம் செய்துள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே ஆஞ்சியோ என்பவர் அடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty),பைபாஸ் (CABG) லெவலுக்கு இழுத்து சென்று விடுவாரோ என்று பயந்து போய் ”வீட்டில் கன்சல்ட் பண்ணி விட்டு வருகிறேன்”என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று என்று ஓடி வந்து விட்டார்.

அதன் பிறகு எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல இயலும்.வேறொரு மருத்துவரை பார்த்து முறையாக பரிசோதனை செய்து பார்த்த பொழுது அந்த மருத்துவர் முதலாம் மருத்துவர் ஆஞ்சியோ பண்ண சொன்னதை கூறி சிரித்தாராம்.

பிறகுதான் கேள்விப்படுகிறோம்.முதலாம் மருத்துவர் சமீபத்தில்தான் புதிதாக நவீன வசதிகளுடன் ஒரு மருத்துவ மனை எகப்பட்ட லோனை வாங்கி கட்டி முடித்து இருக்கிறார் என்று.

இப்படி பட்ட மருத்துவர்கள் எண்ணற்றவர்கள் உண்டு என்பதுதான் உண்மை.வருத்தமூட்டும் இப்படி நிகழ்வுகளுக்குகிடையில் இப்படியும்  ஒரு மருத்துவர்.

சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் காய்ச்சல் ஏதும் இல்லாமலேயே குளிர் திடுமென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.குளிர் என்றால் தாங்க இயலாத குளிர்.உடனே ஒரு மருத்துவரிடம் சென்றோம்.பிரஷர் பார்த்த பொழுது 80/120 இருக்க வேண்டியது 160/250 காண்பித்தது.மருத்துவர் அதிர்ந்து போய் விட்டார்.நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் பிரஷர் செக் செய்து பார்த்தவருக்கு முகமே மாறி விட்டது.உடனே இ சி ஜி எடுத்துப்பார்த்ததில் அது நார்மலாகவே இருந்தது.உடனடியாக ஒரு இஞ்செக்‌ஷன் போட்டு ஒரு அரைமணி நேரம் தூங்க வைத்து மீண்டும் பிரசர் செக் செய்த பொழுது சற்றே குறைந்து இருந்தது.

வீட்டில் போய் நன்கு ரெஸ்ட் எடுக்கும் படி கூறி விட்டு என் கணவரை தனியாக அழைத்து இரவு முழுதும் சற்று கண்காணியுங்கள்.ஏதாவது சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடனே இசபெல் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விடுங்கள் என்றிருக்கிறாராம்.

மறுநாள் காலையில் மீண்டும் பிரஷர் செக் செய்ததில் நார்மல்.இதனையே ஒரு உறவினரான இன்னொரு மருத்துவரிடன் பிரிதொரு நாள் சொல்லிக்காட்டிய பொழுது “இதையே வேறொரு டாக்டரிடம் சென்றிருந்தால் அந்நேரம் உன்னை ஐ சி யூ வில் படுக்க வைத்து ஆயிரத்தெட்டு பரிசோதனை செய்து ஒப்பன் ஹார்ட் சர்ஜரி வரை போய் இழுத்து விட்டு இருந்திருப்பார்கள் என்று கூறி சிரிக்கின்றார்.

38 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பிறகுதான் கேள்விப்படுகிறோம்.முதலாம் மருத்துவர் சமீபத்தில்தான் புதிதாக நவீன வசதிகளுடன் ஒரு மருத்துவ மனை எகப்பட்ட லோனை வாங்கி கட்டி முடித்து இருக்கிறார் என்று.

இப்படி பட்ட மருத்துவர்கள் எண்ணற்றவர்கள் உண்டு என்பதுதான் உண்மை.//

இதுபோன்ற சூழ்நிலைகளில்,சாதாரண + நடுத்தர வர்க்கத்தினரை நினைத்தால் வருத்தமாகவும் பயமாகவும் உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்னொரு மருத்துவர் மனதுக்கு சற்றே ஆறுதல் தருகிறார்.

//“இதையே வேறொரு டாக்டரிடம் சென்றிருந்தால் அந்நேரம் உன்னை ஐ சி யூ வில் படுக்க வைத்து ஆயிரத்தெட்டு பரிசோதனை செய்து ஒப்பன் ஹார்ட் சர்ஜரி வரை போய் இழுத்து விட்டு இருந்திருப்பார்கள் //

ஆம். உண்மை தான்.

உலகம் பலவிதம். நமக்கு நல்லகாலமாக இருக்கணும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

enrenrum16 said...

மனைவி மட்டுமல்ல... தக்க மருத்துவர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் போல...


அனைத்து நோய்நொடிகளிலிருந்தும் நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக.

Seeni said...

ada che.....!!
ennammaa seyya ippadi pattavarkalodathaan vaazha vendi irukku...

ஹுஸைனம்மா said...

மனித/ருத்துவ-ர்கள் பலவிதம்!! :-)

Asiya Omar said...

மருத்துவர்,மருத்துவமனை விஷயத்தில் மிக உஷாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பகிர்வு.
வை.கோ சார் சொன்ன மாதிரி நமக்கு நல்ல காலமாக இருக்கனும்.

ஸ்ரீராம். said...

நிறைய மருத்துவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் சொல்லியிருக்கும் பிரஷர் ரேஷியோ நம்ப முடியாத அளவு இருக்கிறது. எங்கள் ப்ளாக்கில் நாங்கள் ஷேர் செய்த மருத்துவ அராஜகங்கள் படித்தீர்களோ?

சாந்தி மாரியப்பன் said...

சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மருத்துவர்களை சல்லடை போட்டுத்தான் தேடணும் போலிருக்கு..

திண்டுக்கல் தனபாலன் said...

சேவை என்பது மாறி பல காலம் ஆகி விட்டது.... ம்...

RajalakshmiParamasivam said...

டாக்டரிடம் போக வேண்டுமென்றாலே
இப்பொழுதெல்லாம் பயமாக இருக்கிறது. என்ன செய்வது என்றே புரிவதில்லை. பேசாமல் நாமே டாக்டருக்குப் படித்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது.
நல்ல விழிப்புணர்வுப் பதிவு. எந்த ஹாஸ்பிடல் என்றுத் தெரிந்தால் அங்கு போகாமல் தப்பித்து விடலாம்.

Vaidheeswaran said...

பாதுகாப்பான இரத்த அழுத்தம் (BP normal) என்பது 160/100 என்பதாக இருந்தது. 140/90 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் 120/80 என்று 2003இல் WHO ஆல் குறைக்கப்பட்டது. ஏன்? உலகத்தின் பாதி மக்கள் தொகையை இரத்த அழுத்த நோயாளிகளாக வரையறுத்து தன் மருந்துக் கம்பெனியின் மருந்துகளுக்கான நீடித்த வியாபார நோக்கமன்றி வேறு என்ன இருக்க முடியும். இதனால் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப நிலை (pre hypertension, pre hypotension) நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இதே போல 1997ல் இரத்தத்தில் சர்க்கரை அளவையும் (fasting blood glucose level) 140 mg/dL இல் இருந்து 126/ mg/dL ஆக குறைத்தது அமெரிக்க டையபெடிஸ் அசோசியேசன். இதற்கும் அதே வியாபார காரணம்தான். இந்த அளவுகள் என்பது அதிக மக்களின் சர்க்கரை/BPஅளவு எந்த அளவு உள்ளது என்று கணிக்கப்பட்ட பின் வரையறுக்கப்பட்டது.


“உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது”

http://vaidheeswaran-rightclick.blogspot.in/2013/09/doctor-nurse-drug-politics-status-health.html

Vaidheeswaran said...

பாதுகாப்பான இரத்த அழுத்தம் (BP normal) என்பது 160/100 என்பதாக இருந்தது. 140/90 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் 120/80 என்று 2003இல் WHO ஆல் குறைக்கப்பட்டது. ஏன்? உலகத்தின் பாதி மக்கள் தொகையை இரத்த அழுத்த நோயாளிகளாக வரையறுத்து தன் மருந்துக் கம்பெனியின் மருந்துகளுக்கான நீடித்த வியாபார நோக்கமன்றி வேறு என்ன இருக்க முடியும். இதனால் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப நிலை (pre hypertension, pre hypotension) நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இதே போல 1997ல் இரத்தத்தில் சர்க்கரை அளவையும் (fasting blood glucose level) 140 mg/dL இல் இருந்து 126/ mg/dL ஆக குறைத்தது அமெரிக்க டையபெடிஸ் அசோசியேசன். இதற்கும் அதே வியாபார காரணம்தான். இந்த அளவுகள் என்பது அதிக மக்களின் சர்க்கரை/BPஅளவு எந்த அளவு உள்ளது என்று கணிக்கப்பட்ட பின் வரையறுக்கப்பட்டது.

“உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது”

http://vaidheeswaran-rightclick.blogspot.in/2013/09/doctor-nurse-drug-politics-status-health.html

Vaidheeswaran said...

பாதுகாப்பான இரத்த அழுத்தம் (BP normal) என்பது 160/100 என்பதாக இருந்தது. 140/90 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் 120/80 என்று 2003இல் WHO ஆல் குறைக்கப்பட்டது. ஏன்? உலகத்தின் பாதி மக்கள் தொகையை இரத்த அழுத்த நோயாளிகளாக வரையறுத்து தன் மருந்துக் கம்பெனியின் மருந்துகளுக்கான நீடித்த வியாபார நோக்கமன்றி வேறு என்ன இருக்க முடியும். இதனால் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப நிலை (pre hypertension, pre hypotension) நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இதே போல 1997ல் இரத்தத்தில் சர்க்கரை அளவையும் (fasting blood glucose level) 140 mg/dL இல் இருந்து 126/ mg/dL ஆக குறைத்தது அமெரிக்க டையபெடிஸ் அசோசியேசன். இதற்கும் அதே வியாபார காரணம்தான். இந்த அளவுகள் என்பது அதிக மக்களின் சர்க்கரை/BPஅளவு எந்த அளவு உள்ளது என்று கணிக்கப்பட்ட பின் வரையறுக்கப்பட்டது.


“உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது”

http://vaidheeswaran-rightclick.blogspot.in/2013/09/doctor-nurse-drug-politics-status-health.html

Yaathoramani.blogspot.com said...

அருமையாக இருவேறு உதாரணங்களுடன்
விளக்கினீர்கள்
இருவகை மருத்துவர்களில் முதல் வகையினர்தான்
அதிகம் இப்போது
மருத்துவர்களிடம் இருந்து ஆண்டவன்தான் நம்மைக்
காக்கவேண்டும்
ஒன்று நோய் வராமலோ
அல்லது வந்தால் உடன் கொண்டு சென்றோ
யதார்த்த நிலையை மிகச் சரியாகச்
சொல்லிப் போகும் பதிவு அதிகம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

மருத்துவம் இன்று வணிகமயமாகிவிட்டது.
நாம்தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நன்றி சகோதரியாரே
எனக்கும் இத்தகைய முன்அனுபவம் உண்டு

கார்த்திக் சரவணன் said...

இந்த டாக்டர் அவசரக்குடுக்கையாக இருப்பார் போலிருக்கு... எடுத்த எடுப்பிலேயே ஆஞ்சியோகிராம் என்று சொன்னதால் நண்பர் சுதாரித்தார்... கொஞ்சம் நிதானமாக இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட் என்று இழுத்து பின்னர் சொல்லியிருந்தால் உடன்பட்டிருப்பார்... இல்லாத வியாதிகளை இருப்பதாகக் கூறி பணம் பறிக்கும் டாக்டர்கள் அதிகம் இருக்கிறார்கள்....

ஸாதிகா said...

இதுபோன்ற சூழ்நிலைகளில்,சாதாரண + நடுத்தர வர்க்கத்தினரை நினைத்தால் வருத்தமாகவும் பயமாகவும் உள்ளது//உண்மைதான் வி ஜி கே சார்.

உலகம் பலவிதம். நமக்கு நல்லகாலமாக இருக்கணும்.’//இறைவன் என்றும் எல்லோருக்கும் துணை நிற்பானாக.

ஸாதிகா said...


அனைத்து நோய்நொடிகளிலிருந்தும் நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக// ஆமீன்.நன்றி பானு.

ஸாதிகா said...

ippadi pattavarkalodathaan vaazha vendi irukku...//வேறு வழி?பொறுமையுடன் விழிப்புணர்ச்சியுடனும் வாழ்வேண்டும் என்பதை இந்த அனுபவம் கூறுகிறது.நன்றி சகோ சீனி.

ஸாதிகா said...

நன்றி ஹுசைனம்மா,.

ஸாதிகா said...

உண்மைதான் ஆசியா.நன்றி.

ஸாதிகா said...

நீங்கள் சொல்லியிருக்கும் பிரஷர் ரேஷியோ நம்ப முடியாத அளவு இருக்கிறது.//அது ஒரு மிராக்கிள் ஸ்ரீராம் சார்.என்னாலேயே இன்னும் நம்ப இயலவில்லை.பிரஷர் பார்க்க மட்டும் அந்நேரம் சுமார் கால் மணி நேரத்துக்கும் மேல் எடுத்துக்கொண்டது மில்லாமல் மற்றொரு பி பி பார்க்கும் கருவையை வைத்தும் மருத்துவர் பரிசோதித்தார்.மிக்க நன்றி சார்.

எங்கள் ப்ளாக்கில் நாங்கள் ஷேர் செய்த மருத்துவ அராஜகங்கள் படித்தீர்களோ?//அவசியம் அந்த லினகினை இங்கு பதிவு செய்யுங்கள் சார்.

ஸாதிகா said...

சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மருத்துவர்களை சல்லடை போட்டுத்தான் தேடணும் போலிருக்கு..//உண்மைதான் சாந்தி கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி தனபாலன் சார்.

ஸாதிகா said...

மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி வைதீஸ்வரன்.குறிப்பிட்ட பகிர்வை அவசியம் படிக்கின்றேன்.

ஸாதிகா said...

மருத்துவர்களிடம் இருந்து ஆண்டவன்தான் நம்மைக்
காக்கவேண்டும்
ஒன்று நோய் வராமலோ
அல்லது வந்தால் உடன் கொண்டு சென்றோ//அதுவே தான் எனது பிரார்தனையும் உங்கள் மனம் கவர்ந்த பதிவானதில் மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.

ஸாதிகா said...


மருத்துவம் இன்று வணிகமயமாகிவிட்டது.
நாம்தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நன்றி சகோதரியாரே
எனக்கும் இத்தகைய முன்அனுபவம் உண்டு//கண்டிப்பாக சகோதரர் கரந்தை ஜெயக்குமார் .உங்கள் அனுபவத்தையும் பகிர்வாக்குங்கள்.ஏனையோருக்கு விழிப்புணர்வூட்டும்.ஏற்கனவே பதிந்திருந்தால் லின்க் அனுப்புங்கள்.

ஸாதிகா said...

இந்த டாக்டர் அவசரக்குடுக்கையாக இருப்பார் போலிருக்கு.//வரிகள் சிரிப்பை தந்தது.நீங்களே ஐடியா கொடுப்பீர்கள் போலிருக்கே..அவ்வ்வ்வ்வ்வ்..நன்றி ஸ்கூல் பையன்

இளமதி said...

எல்லாமே வியாபார மயம்.

வேறென்ன.. நல்ல அறிவுறுத்தற் பதிவு ஸாதிகா.

முன்பின் அனுபவமில்லாத டாக்டரிடம் போகும்போது மிகுந்த அவதானம் தேவை.

நினைக்கவே பயமாக இருக்கிறதே...:(

த ம.7

இராஜராஜேஸ்வரி said...

.பிரஷர் பார்த்த பொழுது 80/120 இருக்க வேண்டியது 160/250 காண்பித்தது.மருத்துவர் அதிர்ந்து போய் விட்டார்.நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் பிரஷர் செக் செய்து பார்த்தவருக்கு முகமே மாறி விட்டது.

வெளிநாட்டில் எனக்கு பிரஷர் செக் செய்ததில் அந்த உபகரணத்திலேயே இல்லாத லோ லெவலும் ஹை லெவலும் காட்ட இதை விட பெரிய ஹாஸ்பிடலில் காட்ட சொல்லி அந்த ஹாஸ்பிடலுக்கு போனும் செய்து ஸ்ட்ரெச்சரும் ரெடி செய்துவிட்டார்கள்..

ஐ சியூவில் வைத்து நாக்கின் அடியில் தண்ணீர் ஸ்பிரே செய்து கொஞ்சம் அமைதியாக இருக்கவைத்து சிறிது நேரம் கழித்து செக்செய்ததில் நார்மலுக்கு வந்துவிட குழம்பிய மருத்துவர்கள் இசிஜி எடுக்கவந்தார்கள்..

காத்திருந்த நேர்த்தில் அங்கே ஒட்டியிருந்த நோயாளிகளின் உரிமையை படித்த வீரத்தில் ஸ்ட்ரெச்சரிலிருந்து இறங்கி எனது உரிமையை நிலைநாட்டி மருத்துவம் செய்துகொள்ள மறுத்து வெளியேறினேன் ..

இராஜராஜேஸ்வரி said...

இன்றும் என் மகன்கள் -அம்மா சின்முத்திரை வைத்து பிராணாயாமம் செய்து தப்பித்துவிட்டார்கள் - என்று சொல்வார்கள் ..

நீண்ட பயணம் , அந்த நாட்டு தடபவெப்பநிலை மாற்றம் , எந்த உணவைப்பார்த்தாலும் அது மாமிசமாக இருக்குமா சந்தேகம் எனவே சாப்பிடாமல் இருந்தது என காரணமாக இருக்கலாம் ..!

ஸ்ரீராம். said...

//அவசியம் அந்த லினகினை இங்கு பதிவு செய்யுங்கள் சார்.//

http://engalblog.blogspot.in/2013/11/blog-post_18.html

Menaga Sathia said...

இப்பொழுதெல்லாம் உடம்பு சரியில்லன்னா மருத்துவரிடம் போக பயமா இருக்கு...நமக்கு நல்ல நேரம் இருந்தால் தான் தப்பித்தோம் இல்லன்னா கோவிந்தா கோவிந்தா தான்...

Jaleela Kamal said...

nalla vasathi ulla maruthtuva mania enRaal , antha loan selavukku thakunthaar poola fees, test kal koduppaarkaL poola..

பால கணேஷ் said...

மருத்துவர் பணி சேவை என்பதைத் தாண்டி வணிகமாகி ரொம்பக் காலம் ஆச்சும்மா. நாமதான் நம்பிக்கையான ஒரு நல்ல மருத்துவரைக் கண்டுபிடிச்சு வெச்சுக்க வேண்டியிருக்கு இன்றைய உலகில.

கோமதி அரசு said...

கடவுளாக நம்பி மருத்துவரிடம் போகிறோம், கடவுளே இப்படி நடந்து கொண்டால் யாரை நோவது?
சேவை மனம் இல்லாமல் காசுக்காக மருத்துவம் படித்தால் இப்படித்தான்.

Unknown said...



மருத்தும் வணிக மயமாகி வெகு நாட்களாகி விட்டது! நலமா சகோதரி!

அம்பாளடியாள் said...

மருத்துவர்களின் இது போன்ற செயல்களினால் வாழ்வில்
நம்பகத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது .யாரைப் பார்த்தாலும்
ஆடு தான் ஞாபகத்துக்கு வருகிறது தோழி :) அருமையான பகிர்வு
தந்தமைக்கு வாழ்த்துக்கள் .தொடரட்டும் மேலும் மேலும் சிறப்பாக
தங்கள் வலைத் தளப் பயணம் .