April 9, 2013

சைதாபேட்டை ஜக்குஇன்னாது..அப்டி பாக்றே?நாந்தேன் ஜைதாபேட்டை ஜக்கு. கபாலீஸ்வரர் கோயிலண்டே பூக்கட்டி விக்கற பூக்காரின்னு என்னை வல்லிசா நெனச்சினியா?பஜார்ல உஜாரா இல்லைனா நிஜார கலட்டிடுவாங்க என்னை இஸ்துகினு வந்து கண்ணாலம் பண்ண கோவாலு பட்ச்சி தந்த பாடம்யா.

அது ஆச்சு ரெண்டு மாமாங்கம்.கண்ணாலம் கட்டுற வரைக்கும் கோவாலு தெண்டச்சோறாத்தான் இருந்துச்சு.கண்ணாலம் கட்டினு வந்தப்போ அது ஒரு குஜிலி கூட குஜாலா சுத்திகினு ஜல்சா பண்ணினு இருந்ததை பார்த்து மெர்சல் ஆயிட்டேன்.”யோவ்..சோமாரி..ஒரு தபா தப்பு பண்ணிட்டே.கண்டினியூவா இப்படி டபாய்ச்சே அப்பாலிக்கா காண்டாய்டுவேன்.இப்டி போங்குத்தனமா இருந்தே மெரிச்சுருவேன் மெரிச்சு.என் நைனா,அண்ணாத்தை பற்றி தெரிஞ்சு வச்சிகினு ஆட்டம் போடாதே.கீச்சுடுவாங்க கீச்சி”நான் இப்படி சொல்லாங்காட்டி கம்முன்னு கெடக்காது கோவாலு அப்படீன்னு நெனச்சது தப்பா பூடுச்சு.

திருந்தின பாடு இல்லை.சின்னதுலே வாத்தியார் படம் பார்த்த நியாபகம் சடுதியில் வந்துச்சு பாரு.எனக்கு வந்த கோவத்திலே சொம்மா பூரிக்கட்டையாலே வூடு கட்டி அடிச்சேன் பாரு.அவ்ங்கொப்பனும்..அதேங்..எம்மாமனார் கெயவனும்.மாமியா கெயவியும் அரண்டு போச்சுதுங்க.அடிச்ச அடியிலே கபாலம் ஒடன்ஞ்சி சல்லிசா ரத்தம் கொட்ட வேறென்ன  முச்சந்தியில் நின்ன மினியப்பன் ஆட்டோவிலே பெரியாஸ்பத்திரிக்கு இட்டாந்து தைய போட்டு வூட்டுக்கு இட்டாந்தேன்.அப்பாலிக்கா மச்சானுக்கு சவரட்சனை பண்ணி என் வழிக்கு கொண்டு வந்தேன்.

“ஏய்யா..கண்ணாலம் ஆச்சு,கொயந்தே குட்டிங்கன்னு ஆயிட்டா நம்ம கத என்னாத்துக்காகும்? எத்தினி காலத்துக்கு இப்படி தண்டமா குந்திகினு கிடப்பே?எத்தினி காலத்துக்கு உங்கம்மா கெயவி வூடு வூடா போய் சாமான் தேய்ச்சினு சம்பாரிச்சுன்னு வந்த துட்டுலே துன்னுகினு இருப்பே..புத்தியா பொழச்சிக்கோய்யா.”ராவும் பகலுமா நான் பொலம்பிய பொலம்பலில் மனுஷன் திருந்திட்டான்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடும்பாங்க.ஒட்னே அந்தாண்டே பஜார் பக்கம் பிளாட்பாரத்திலே கட போட்டுச்சு.கோவாலு மச்சான் கில்பான்ஸ் இல்லாங்காட்டியும் டொச்சானா அட்டு ஆசாமியா இருந்தாங்காட்டியும் தில்லான கில்லியான ஆளு.மெய்யாலுமே மினியப்பன் சாமி புண்ணியத்துலே யாபாரம் பிச்சுகினு தூள் கிளப்புச்சுன்னா பார்த்துக்கோயேன்.காலம்பற மிலிட்டரி ஓட்டலாண்டே போய் பரோட்டாவும் சால்னாவும் வாங்கி நாஷ்டா பண்ணினு யாவாரத்துக்கு போச்சுன்னா மச்சான் வீட்டாண்ட்ட திரும்ப ராவு மணி பதினொண்ணாயிடும்.

என்னா ஒன்னு..போலீஸ் காரன் பிகில் சத்தம் கேட்டால் கடையை தூக்கிகினு ஓடணும்.அவனுங்களுக்கு மாலு கொடுத்து சொக்காவை கீய்ச்சுக்கணும்.இப்படிக்கா எங்க லைபு கன்பீஸ் இல்லாம மஜாவா போய்கினு இருந்துச்சு. அக்காங்..பீலா வுட்றேன்னு நென்ச்சிடாதே கண்ணூ..அவுல் கொடுக்குறது,கலாய்க்கிறது,டபாய்க்கிறது ,பீலா உட்றது,கப்ஸா வுட்றது எல்லாம் இந்த ஜக்கு கைலே சுட்டுப்போட்டாலும் வராது.

சம்பாரிச்சு என் மடியாண்டே வந்து கொட்டினான்தான்.என்ன ஒரு குறை அப்பப்ப  சல்பேட்டா வாங்கி கச்சேரி பண்ணி குடிச்சிகினு மட்டையாயிடுவான்.ஆரம்பத்திலே டர்ராயிட்டேன்.அப்பாலே அதுவே பயக்கமாயிடுச்சு.

கடையை மூடிட்டு வீட்டாண்டே வர்ரச்சே வாழை இலையிலே தம்மாதூண்டு பிச்சுப்பூவை கட்டிஎடுத்தாந்து “அடியே ஜக்கு கயிதை..குஜிலி கணக்கா  பிகரு மாரி ஷோக்கா டக்கரா கீறேடி.”இப்டிங்காட்டி குஜால் பண்ணி ஜல்சா பண்ணினா ”ஏன்யா உதாரு வுட்றே” ன்னு நான் ஒப்புக்கு சப்பாணியா கேட்டாலும் ஜக்குவுக்கு ஜல்பு புட்ச்சுடுன்னு உண்மை மச்சானுக்கு நல்லாவே  தெரியும்.

சொம்மா சொல்லப்படாதுய்யா.கடையிலே யாபாரம் ஷோக்கா நடந்துச்சின்னா பட்டையை போட்டுட்டு மட்டையாயிடுமே தவிர.பொட்டலம் போடறது,பிராத்தல் பண்றது,போங்கு பண்ணி பேரை கலீஜ் பண்றதுன்னு கேப்மாரி மொள்ளமாரித்தனம் அல்லாத்தையும் சல்லுன்னு தூக்கி கடாசிட்டு கோவாலு மச்சான் எனக்கேத்த புருஷனாத்தான் வாழ்ந்தான்.

எந்த பேமானி, சோமாறி ,கேப்மாரி,கஸ்மாலம் கேணன் எச்சக்கல,காலிப்பய பரதேசி பன்னாடை கபோதி கட்டேலேபோறவன்  கண்ணு பட்டுச்சோ.ஐயனாருக்கே வெளிச்சம்.கெரகம் புடிச்சு போய் ரோட்டாண்டே சீட்டு வெளாடினு கீந்தவனை சாவுகிராக்கி தூத்தேரி போலீஸ்காரன் தொறத்தி இருக்கான்.எகிறி குதிச்சு போங்கு காட்டினு இருந்தவனை கபால்ன்னு புச்சி மெரிச்சி போட்டதில் பகிலு ஒடஞ்சிப்பூடுச்சி.அப்பாலிக்கா பேஜாருதான்.வூட்டாண்டே வுழுந்து கெடக்குது கோவாலு மச்சான்.காலையிலே நாலு வூட்டாண்டே பத்துபாத்திரம் தேச்சி,சாயங்காலமாச்சுன்னா பூக்கட்டி வித்து வயித்தை கழுவிகினு கீறோம்.

என்னாது..வூட்டு வேல பாக்குறியான்னு கேக்குறியாஆஹாங்..மாமியா கெயவி பீச்சாங்கையி பீச்சாங்காலு இஸ்துகினு படுக்கையில் பத்து மாசம் கப்பு அடிச்சுக்கினு படுத்துடுச்சி.ஒரு தபா மார்லே வலிக்குதுன்ன்னு சொல்லி மறு நிமிட்டில் பல்பு வுட்டுறுச்சு.அது வேலை பார்த்த கொல்டி காரங்க,ஜட்கா காரங்க .ரெண்டு மாமிங்க வூட்டாண்டே பத்து பாத்திரம் தேச்சு டப்பு சம்பாரிச்சு உஷாயிராடேன்ல.அதான் தலப்பாலே சொன்னேனே பஜார்ல உஜாரா இல்லைனா நிஜார கலட்டிடுவாங்க இந்த மெட்ராஸ் ஊர்லே. இது எங்கோவாலு மச்சான் சொல்லித்தந்த பாடம்ன்னு.

இதான்யா மேட்டரு. எங்கதையை சொல்லி பீலிங்கு பண்ணிட்டேனா?இப்படிக்கா வூட்டாண்டே  போய்  லைபாய் சோப்பு வாங்கிட்டு மச்சானுக்கு குளிக்க கொடுத்து நாஷ்ட்டா வாங்கி கொடுக்கணும்.வர்ட்டா?இத்தினி தூரம் பொற்மையா குந்திகினு எங்கதையை கேட்ட உனக்கு ரொம்ப டாங்சு.

டிஸ்கி-1:மெட்றாஸ் பாஷையில் உங்க அல்லாத்துக்கிட்டேயும் ஒரு மினியம்மாவையோ கபாலியையோ கூட்டினு வந்து காட்டணும்ன்னு ரொம்ப நாளா ஆசை.ஜக்கை உருவாக்குவதற்குள் டங்குவாறு அந்து பேஜாரா பூடுச்சுங்கோ.ஜக்குவை பட்சிட்டு சூப்பரா சிரிச்சுட்டு அப்பாலிக்கா மறக்காமல் கருத்தை போட்டு ஓட்டும் போட்டுடுங்க..ஆமா சொல்லிபுட்டேன்...அக்காங்..

டிஸ்கி - 2:

படிப்பவர்களுக்கு  பல வார்த்தைகள் புரியவில்லை என்பதை அறிந்தேன்.பொருளறிந்து வயிறு வலிக்க சிரிக்க இந்த லிஸ்ட்

வல்லிசா -சுலபமாக
இஸ்துகினு - இழுத்துக்கொண்டு
கண்ணாலம் - கல்யாணம்
குஜிலி  - இளம் வயதுப்பெண்
குஜாலா -கொஞ்சல்
ஜல்சா - சரசம்
மெர்சல்  - பயம்
சோமாரி - ஒழுக்கம் இல்லாதவன்
தபா - தடவை
டபாய்ச்சே - ஏமாற்றி
அப்பாலிக்கா  - அப்புறமா
காண்டாய்டுவேன் - கோபமாகிவிடுவேன்
போங்குத்தனமா - கள்ளத்தனமாக
மெரிச்சு - மிதிச்சு
நைனா - தந்தை
அண்ணாத்தை - அண்ணன் 
கீச்சி - கிழித்து
சடுதி - சீக்கிரம்
சொம்மா - சும்மா 
கெயன் - கிழவன்
கெயவி - கிழவி
கபாலம்  -மண்டை
சல்லிசா  - சுலபமாக
நின்ன - நின்ற
இட்டாந்து - கொண்டுவந்து
சவரட்சனை  - தேவை அறிந்து செய்தல்
கொயந்தே -குழந்தை
குந்திகினு - உட்கார்ந்து கொண்டு
கில்பான்ஸ்  - பளபளப்பான ஆள்
இல்லாங்காட்டியும் - இல்லாவிட்டாலும்
டொச்சானா - அழகில்லாத
அட்டு -சுமாரான
தில்லான -தைரியமான,ஆண்மை
கில்லியான - திறமையான
யாபாரம்-வியாபாரம் 
பிச்சுகினு - பிய்த்துக்கொண்டு
காலம்பற  - காலையில்
மிலிட்டரி ஓட்டலாண்டே - அசைவஹோட்டல் அருகே
நாஷ்டா - காலை டிபன்
பிகில் - விசில்
மாலு - மாமூல்
சொக்கா - சட்டை
கீய்ச்சுக்கணும் - கிழித்துக்கொள்ளவேண்டும்
கன்பீஸ் - குழப்பம்
மஜா  -கேளிக்கை
போய்கினு - போய்க்கொண்டு
அக்காங் - ஆமாம்
பீலா -பொய்
கலாய்- கலாட்டா
டபாய்க்கிறது -ஏமாற்றுவது
கப்ஸா  - பொய்
பல்பு - சாவு
சல்பேட்டா -மலிவு விலை மது
கச்சேரி -குழுவுடன் மது குடித்தல்
மட்டை - அதீத போதை
டர்ராயிட்டேன். - கோபமாகிவிட்டேன்
அப்பாலே-அந்தப்பக்கம்
பயக்கமாயிடுச்சு. - பழக்கமாகிவிட்டது
தம்மாதூண்டு  - சிறிய அளவில்
கயிதை - கழுதை
குஜிலி -இளம்பெண்
கணக்கா  - அது மாதிரி
பிகரு மாரி  - அழகு மாதிரி
ஷோக்கா  - அழகா
டக்கரா கீறே - சூப்பரா இருக்கே
உதாரு -பொய்
ஜல்பு -ஜலதோசம்
சொம்மா- சும்மா
பட்டையை - சாரயத்தை
பொட்டலம் - கஞ்சா
பிராத்தல் 
போங்கு - கள்ளத்தனம்
கேப்மாரி - திட்டு வார்த்தை 
மொள்ளமாரித்தனம் 
அல்லாத்தையும் - எல்லாவற்றையும் 
சல்லுன்னு - சட்டென்று
கடாசிட்டு  - தூக்கி வீசிவிட்டு
பேமானி - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
சோமாறி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கேப்மாரி-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கஸ்மாலம் - முட்டாள் 
கேணன் - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
எச்சக்கல-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
காலிப்பய -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
பரதேசி-கொடியவன்
பன்னாடை-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கெரகம்- ஏழரை நாட்டு சனி
சாவுகிராக்கி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
தூத்தேரி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
புச்சி - பிடித்து
மெரிச்சி - மிதிச்சி
பகிலு -இடுப்புப்பகுதி
பீச்சாங்கையி - இடதுகை
பீச்சாங்காலு -இடதுகால்
கப்பு - துர்நாற்றம்
தபா - தடவை
கொல்டி காரங்க  - தெலுங்கு பேசுபவர்கள்
ஜட்கா காரங்க  - ஹிந்தி பேசுபவர்கள்
மாமிங்க  - பிராமணர்கள்
டப்பு - பணம்
நிஜார் - கால்சட்டை
குந்திகினு  - உட்கார்ந்து கொண்டு
டாங்சு - நன்றி
கபோதி - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கட்டேலேபோறவன-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
பேஜாரு - தொல்லை

22 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மதராஸ் பாஷையில் ஜக்குவை சும்மா பூந்து விளையாட வெச்சுட்டீங்கோ.

நான் பயந்துகொண்டு முதல் வேலையாக வோட் போட்டுவிட்டேன். பிறகு தான் படிக்க்வே ஆரம்பித்தேன்.

நல்ல வித்யாசமான முயற்சி. பாராட்டுக்கள்.

ஸாதிகா said...

உடன் வரவுக்கு நன்றி வி ஜி கே சார்.//
நான் பயந்துகொண்டு முதல் வேலையாக வோட் போட்டுவிட்டேன். // ஏன் சார் பயந்தீங்க?ஜக்குவைப்பார்த்தா?

Asiya Omar said...

நானும் முதலில் ஓட்டை போட்டுட்டுட்டேன்,நிறுத்தி நிதானமாக வாசித்தாலும் நிறைய வார்த்தைக்கு அர்த்தம் புரியலை.என்னமா பின்னி பெடல் எடுத்திருக்கீங்க ஸாதிகா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அடேங்கப்பா.. ஜக்கு உட்டு கடாய்ச்சிட்டமா. மெர்சலா பூடுச்சிம்மா.. நா அப்பாலிக்கா வாரேன் :)

Mahi said...

சும்மா வெளுத்து வாங்கிட்டீங்க ஸாதிகா அக்கா! :)
ஜக்குவின் கதை சென்னைத் தமிழில் படிக்க காமெடியா இருந்தாலும், ஒரு சோக இழை இடையூடாக ஓடிக்கொண்டே இருந்து விட்டது.

Menaga Sathia said...

ஆஹா அக்கா மெட்ராஸ் பாஷைல கலக்கிட்டீங்க...உண்மையை சொல்ல போனா இந்த பதிவை 2 தடவை படித்த பிறகுதான் புரிந்தது...கடைசியில் டிஸ்கி படித்ததும் கமெண்ட் போட்டுட்டேன்...

இளமதி said...

யப்பா... ஸாதிகாவோ கொக்கோ...:)
ச்சும்மா பின்னிப் பெயர்த்திட்டீங்கோ...
அருமையா இருந்திச்சு.
வாசிக்கிறதுக்கே 2 தரம் திருப்பித்திருப்பி வாசிச்சேன். எழுதுவதற்கு எத்தினை கஷ்டப்பட்டிருப்பீங்க...

ஆனாலும் ரொம்பவே திறமைதான் ஸாதிகா. வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

அய்ய....... இது என்னாடீம்மா ஜக்கு பொய்ப்பை அக்கக்கா கீச்சுப்போட்டுடெ!!!

சத்தியமா வுட்டேன்....ஜூப்பராக்கீது ஸாதிகாம்மா.

தேங்க்ஸ் ஸாதிகா. பொழுது விடிஞ்சு பார்த்துட்டு இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.

பால கணேஷ் said...

சைதாப்பேட்டை ஜக்குவப் பாக்கச் சொல்லோ கண்ணாமுழி ரண்டும் பிதுங்கிப் பூட்சும்மே இந்த ஜாம்பஜார் கொக்குவுக்கு! அசத்தலா எழுதிக்கினே!

திண்டுக்கல் தனபாலன் said...

எனது ஒரு பதிவில் (சிறப்பான செயலுக்கு என்ன தேவை ?) நாலு வரி சென்னை செந்தமிழை எழுதுவதற்கே மிகவும் சிரமப்பட்டேன்... நீங்க பூந்து விளையாடிட்டீங்க.... பாராட்டுக்கள்... ஓட்டு போட்டு விட்டு தான் படிப்பதே... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

மெட்றாஸ் பாஷையில் உங்க அல்லாத்துக்கிட்டேயும் ஒரு மினியம்மாவையோ கபாலியையோ கூட்டினு வந்து காட்டணும்ன்னு ரொம்ப நாளா ஆசை.//

ஆசை நல்லவிதமாக நிறைவேறியது, மிக அருமை.
நன்றாக சிரித்தாலும், எத்தனை மினியம்மாக்கள் இப்படி கஷ்டப்படுகிறார்களோ என்று வேதனைப்படுகிறது மனது.

Jaleela Kamal said...

ஹா
ஐய்ய்யே ரொம்ப நானுந்தா இந்த மினிம்மா வ பற்றி மெட்ராஸ் பாஷையில் ஒரு காமடி பதிவு போடனும் நினைச்சேன்..

அப்பாலிக்கா அல்லாத்தயும ஒரு தபா படிச்சிக்கீனி வரேன்,...

Jaleela Kamal said...

ஸாதிகா அககா என்னாத்த சொல்றது.

ஒரு கலக்கு கலக்கிட்டீங்க போங்க


//சைதா பேட்டை ஜக்கு கத படா ஷோக்கா கீது.///

Jaleela Kamal said...

ஸாதிகா அககா என்னாத்த சொல்றது.

ஒரு கலக்கு கலக்கிட்டீங்க போங்க


//சைதா பேட்டை ஜக்கு கத படா ஷோக்கா கீது.///

பூ விழி said...

யப்பா சும்மா பிச்சி பின்னி பெடல் எடுத்தீடீங்க் ஜூபரொஜூபருங்கொ

ADHI VENKAT said...

மெட்ராஸ் பாஷையில் ஜக்கு சும்மா வெளுத்து வாங்கிருச்சு. அசத்திட்டீங்க....

பாவம் இது போல் எத்தனை பேர் உள்ளார்கள்.

VijiParthiban said...


நல்ல வித்யாசமான முயற்சி பாராட்டுக்கள். மெட்ராஸ் பாஷைல கலக்கிட்டீங்க ஸாதிகா அக்கா...

ஸ்ரீராம். said...

சரமாரியாய் மெட்ராஸ் பாஷையில் சொல்லப் பட்டிருக்கும் கதையும் உருக்கமாகத்தான் இருக்கு! பலே.

Ranjani Narayanan said...

புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்றேன்னுட்டு கதையை அப்படியே வரிக்குவரி எழுதிட்டீங்களே!
ஸும்மா மெட்ராஸ் பாசையில பூந்து வெள்யாடிட்ட்டம்மா, கண்ணு ஸாதிகா பொண்ணு!
யாரு கண்ணாச்சும் பட்டுறப் போவுது. ஆத்தாகிட்ட சொல்லி சுத்தி போடசொல்லு...அக்காங்....!

ஸாதிகா said...

mohamedali abdulkader has left a new comment on your post "அறிவீர்களா இவரை - 1":

நான் கொடுத்த கருத்துரை ப்ளூ டைமென்ட் சகோதரி ஸாதிகா தளத்தில் காணவில்ல
Please visit
http://nidurseasons.blogspot.in/2012/03/blog-post_892.html
சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை
http://anbudanseasons.blogspot.in/2013/04/blog-post_6522.html
உனை நினைத்து இறைஞ்சுகின்றேன் ஏணையோர் போல்.

ஸாதிகா said...

mohamedali abdulkader has left a new comment on your post "அறிவீர்களா இவரை - 1":

சகோதரி ஸாதிகா சாதனை செய்வதில் ஒரு பதுமை விருப்பம் கொண்டவர் .வளரட்டும் அவர்கள் தொண்டு பல வழிகளிலும் .

திண்டுக்கல் தனபாலன் அவர்களை அனைவரும் அறிவார்கள்,
இருந்தாலும் அவர்கள் உங்கள் வழி சாதனைப் பட்டியலில் அவர் இருக்க அனைவரும் விரும்புவார்கள்

Asiya Omar said...

ஆஹா! ஜக்கு விளாசிய அத்தனை சென்னை பாஷை வார்த்தைக்கும் அர்த்தம் வேறு தந்து அசத்திட்டீங்க ஸாதிகா.தொடர்ந்து கதாபாத்திரங்கள் படைப்புக்கள் அசத்தலாய் வெளிவரட்டும்.