August 17, 2012

வலையோசை - 3,4

மதுரையைச்சேர்ந்த மதுரை தமிழன் எழுதும் வலைப்பூ இவ்வார மதுரைப்பதிப்பில் அவர்கள் உண்மைகள் என்ற வலைப்பூவாக அறிமுகமாகி உள்ளது.தான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி இவர் வலைப்பூவில் பகிர்ந்துகொள்கின்றார்

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளத்தைச்சேர்ந்த ஹாஜா மைதீன் அதிரடி ஹாஜா என்ற தன் வலைப்பூவில் அரசியல்,சமூகம்,சினிமா,உடல்நலம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை எழுதி வருகிறார்.
சென்னையைச்சேர்ந்த ராஜேஸ்வரி சாஃப்ட்வேர் இன்ஜினியர்.சமூகம் தத்துவம் வாழ்க்கை என்று சகல தளங்களைப்பற்றியும் தன்னுடைய ரசனைக்காரி என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார்.

அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைபேராசிரியையாக பணி புரியும் கல்பனா கல்பனா சேக்கிழார் என்ற வலைப்பூவில் தமிழ் மொழி பண்பாடு இலக்கியம் சம்பந்த பட்ட பதிவுகளை எழுதி வருகிறார்.



குவைத்தில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த காயத்ரி பாலைத்திணை என்ற தன் வலைப்பூவில் ரசனைமிக்க கட்டுரைகளை எழுதி வருகிறார்.




கௌரி, சாதரணமானவள் என்ற வலைப்பூவில் தான் ரசித்ததை, உண்ர்ந்து மகிழ்ந்தை மற்றும் தன்னுடைய கற்பனைகளை எழுதிவருகிறார். போட்டோ ஆல்பம் டிசைனிங் செய்து வரும் இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர்

திருச்சி பி.ஹெச்.இ.எல். டவுன்ஷிப்பில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ் - மாலா தம்பதியினர் ஞானவயல் என்ற வலைப்பூவில் ஆன்மீகம், இலக்கியம், வரலாறு என்று பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்கள்.


கோவில்பட்டிய சேர்ந்த செங்கோவி வசிப்பது குவைதில்.சினிமா அரசியல் சமூகம் இப்படி பல தளங்களைப்பற்றியும் செங்கோவி என்ற தளத்தில் எழுதி வருகிறார்.

சிதம்பரத்தை சேர்ந்த நக்கீரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் நாய்-நக்ஸ் என்ற வலைப்பூவில் தான் ரசித்த விஷயங்கள்,நகைச்சுவை,துணுக்குகள்,போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்..

இலக்கியம்,சமுதாயம்,உணர்வுகள் என்று சகல தளங்களைப்பற்றியும் நினைத்தேன் எழுதுகிறேன் என்ற தலைப்பில் எழுதும் மாலா வாசுதேவன் சென்னையை சேர்ந்தவர்.

39 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல தளங்கள் அறியாதவை... மிக்க நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 2)

Menaga Sathia said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

Asiya Omar said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழி,பகிர்விற்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

தகவலுக்கு நன்றிகள்.

vgk

Athisaya said...

அனைத்துமு அறியாத தளங்கள்.இதுமுதல் அறிந்து கொள்கிறேன்.வாழ்த்துக்கள் சொந்தங்களே!வாழ்த்துக்கள் அக்கா சந்திப்போம்!

Avargal Unmaigal said...

விகடன் எனது பதிவுகளை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு எனது வலைத்தளத்திற்கான லிங்கை அவர்கள் தளத்தில் அறிமுகப்படுதாமல் விட்டு விட்டார்கள் ஆனால் அவர்கள் செய்ய மறந்ததை நீங்கள் செய்து அவர்களைவிட ஒரு படி மேலாக நிற்கிறீர்கள். சில பேர் சொன்னார்கள் புத்தக பதிப்பில் வந்து இருக்கிறது என்று அது யாருக்கு வேண்டும் புத்தகம் ஒரு வாரத்திற்கு அப்புறம் குப்பையில் போய்விடும் ஆனால் இணையதளத்தில் வருவது அப்படி இல்லை.


உங்களின் செயலுக்கும் தனிப்பட்ட முயற்சிக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் ரமலான் வாழ்த்துக்கள்!! நன்றி.. வாழ்க வளமுடன்

முற்றும் அறிந்த அதிரா said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!.

MARI The Great said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Vijiskitchencreations said...

ஸாதிகா இது ஒரு நல்ல பதிவு. நாங்களும் இதன் வழி மற்ற பதிவர்களையும் அவர்களின் வலைதளாத்தையும் தெரிய ஒரு நல்ல சந்தர்ப்பம்.

இமா க்றிஸ் said...

பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.

Unknown said...

புதிய பல வலைப்பூவின் அறிமுகம் அழகு...

Yaathoramani.blogspot.com said...

ஆனந்த விகடனின் அறிமுகங்களைக் கூட
தங்கள் பதிவின் மூலம்தான் அறிந்து கொள்கிறோம்
நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

பகிர்வு மூலம் பல புதியவர்களைத்தெரிந்து கொள்ள முடிகிரது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

ரசனைக்காரி... பேரே அருமையா இருக்கு. இன்னும் பல புதிய முகங்கள் எனக்கு இன்று தெரிந்தன. அருமை தங்கையே. தொடரட்டும் உங்களின் இந்த சேவை.

அனைவருக்கும் அன்பு  said...

அருமையான அறிமுகங்கள் பாராட்டுகள் தோழி

NKS.ஹாஜா மைதீன் said...

நன்றி..விகடனின் அறிமுகப்படுத்தியதை தாங்கள் மேலும் பட்டை உள்ளீர்கள்...
மிக்க நன்றி

NKS.ஹாஜா மைதீன் said...

மிக்க நன்றி ....மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

சசிகலா said...

மதுரைத்தமிழனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் எனக்கு அறிமுகங்களே பகிர்வுக்கு நன்றிங்க.

Menaga Sathia said...

இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

Radha rani said...

நல்லதொரு பகிர்வு ...பகிர்வுக்கு நன்றி ஸாதிகா .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

மதுமிதா said...

வாழ்த்துகள் அனைவருக்கும். உங்கள் பணி சிறக்கட்டும் ஸாதிகா

Angel said...

இனிய பெரு நாள் வாழ்த்துக்கள் ஸாதிகா

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம். வலைப்பூக்களின் முகவரியை அறிமுகப்படுத்தி அனைவரும் அறியும்படியான முயற்சிகளைச் செய்து வருகிறீரகள். மகிழ்ச்சி. என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா!

ஸ்ரீ.... said...

சிறப்பான அறிமுகங்கள். தொடருங்கள்.

ஸ்ரீ....

VijiParthiban said...

அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.பகிர்விற்கு நன்றி.

அன்பு உள்ளம் said...

அறியப்படாத வலைப்பூக்களின் அறிமுக விழா அருமை!...தொடர வாழ்த்துக்கள் .

Thozhirkalam Channel said...

நல்ல அறிமுகங்கள்..

முற்றும் அறிந்த அதிரா said...

ஈத் முபாறக் ஸாதிகா அக்கா....

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.
----

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள்!

பித்தனின் வாக்கு said...

eid mubarak sathika

பித்தனின் வாக்கு said...

eid mubarak sathika

கோமதி அரசு said...

அறிமுகங்களுக்கு நன்றி ஸாதிகா.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

shueib said...

kaalai vanakkam enpathu / solvathu islaamiya panpaadu alla.

shueib said...

kaalai vanakkam enpathu / solvathu islaamiya panpaadu alla.

Jaleela Kamal said...

நல்ல தொகுப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

தேடி எடுத்துப் போட்டதற்கு உங்களுக்கும், இடம்பிடித்து பெயர் வாங்கியிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள்!

மாலா வாசுதேவன் said...

Thank u very much Sathika fr introducing me in ur blog