January 31, 2012

டெய்லர் கிச்சா

"தோ..மாமி..வீட்டுக்கு போயிண்டே இருங்கோ..பையன் கிட்டக்க பின்னாடியே கொடுத்தனுப்பிச்சுடுறேன்”

“கிச்சா..இந்த டயலாக்கை இன்னும் எத்தினி நாழிதான் சொல்லி சமாளிச்சுண்டிருப்பே..காரடையான் நோன்புக்கு உடுத்திக்க புதுசா ஜாக்கெட் கொடுத்தேன்.இந்தா அந்தான்னு ஜவ்வு மாதிரி இழுத்துண்டு தீபாவளி போய்டும் போலும்”மாமி அலுத்துக்கொண்டாள்.

“இந்த வாட்டி கண்டிப்பா தெச்சி கொடுத்துடுறேன் மாமி.அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்களாத்துக்கு ஜாக்கெட் வந்துடும் .யோஜனை பண்ணாமல் போங்கோ.இதோ அனுப்பிச்சுடுறேன்.கொலு முதல் நாளே ஜம்முன்னு புதுசு கட்டி பேஷா ஜமாய்ச்சுடலாம் மாமி”

மாமி எரிச்சலுடனும் அவநம்பிக்கையுடனும் அங்கிருந்து நகன்றாள்.பித்தான் கட்டிக்கொண்டிருந்த டைலர் கிச்சாவால் பையன் என்று பாசத்துடன் அறிமுகப்படுத்தப்படும் கிச்சாவின் அஸிஸ்டெண்ட் “அண்ணே..மாமி பாவம்ண்ணே..எத்தனை நாள் அலையறா..தெச்சிக்கொடுத்துடலாம்ண்ணே”

“டேய்..உன் கழிவிரக்கத்தை ஒரு ஓரமா மூட்டை கட்டி வச்சிட்டு கடகடன்னு பித்தான் கட்டு.இந்த மாமியை சமாளிச்சுடலாம்.வக்கீலாத்தம்மா வந்தாங்கன்னா பிச்சி உதறிடுவாங்க.அவங்களை இதுக்கு மேலே சமாளிக்க முடியாது”

”ஏண்ணே..சின்ன டவுட்டு.உங்க ஹிஸ்டரியிலே சமாளிக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை இருக்காண்ணே?”பையன் வாயை பொத்திகொண்டு சிரித்தான்.

“டேய்..வர வர குசும்பு ஜாஸ்தியாயிடுச்சுடா உனக்கு”கழுத்தில் கிடந்த் டேப்பை எடுத்து செல்லமாக வீசி அடித்தான்.

கிச்சா டெய்லர்ஸ் என்று துரு பிடித்த போர்டுடன் கூடிய அந்த தையலகம் அந்த ஏரியாவில் பிரபலம்.துணி மலைகளுக்கிடையே நடுவில் மெஷின் வைத்து தைத்துக்கொண்டிருப்பான்.ஓரத்தில் அஸிஸ்டெண்ட்.காதிடுக்கில் பென்ஸிலும்,கழுத்தில் இன்ச் டேப் சகிதமாக கண்ணும் கையும் காரியத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தாலும் தலைக்கு மேலே சோம்பல் பட்டுக்கொண்டு லொட லொடவென்றுஓடிக்கொண்டிருக்கும் ஒளரங்கசீப் காலத்து மின்விசிறிக்கு போட்டி போட்டுக்கொண்டு வாயால் லொடலொடத்துக்கொண்டு இருப்பது கிச்சாவின் டிரேட் மார்க்.

உதவிக்கு இன்னொரு மெஷின் வாங்கிப்போட்டு இன்னொரு ஆளை வைத்து தைப்பதற்கு மனமில்லாமல் ஏகப்பட்ட ஆர்டர்களுக்கு ஒப்புக்கொண்டு குறித்த நேரத்தில் தைத்துக்கொடுக்காமல் வாடிக்கையாளர்களை சமாளிப்பதில் வடிகட்டிய கில்லாடி.

அந்த ஏரியா இளவட்டங்களுக்கு கிச்சா கடை வாசல் போர்டு தொங்கவிடப்படாத சங்கம் பிளஸ் இளைஞர் மன்றம்.அரட்டை கச்சேரிகளில் வாயும் காதும் ஈடு பட்டு இருந்தாலும் கையும் காலும் கண்களும் காரியத்தில் மும்முரமாக ஈடு பட்டுகொண்டிருக்கும்

“எலே ..கிச்சா..இப்படி அரட்டை அடிச்சுட்டே தைத்தால் நாப்பது சைஸ் ஜாக்கெட் தைப்பதற்கு பதில் முப்பத்திரெண்டு சைஸில் தைத்து கஸ்டமர் கிட்டே வாங்கி கட்டிக்கப்போறே”
இப்படி யாராவது கேட்டால் கிச்சாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும்.

“என்னாது..கிச்சாவை என்னான்னு நெனைச்சே...பத்து வயசிலே அய்யணார் அண்ணேகிட்டே வேலைக்கு சேர்ந்தேன்.பதிமூணு வயசிலே மிஷின் முன்னாடி உக்காந்துட்டேன்.இந்த புரட்டாசி வந்தால் ஆச்சு நாப்பத்தேழு.முப்பத்தேழு வருஷ சர்வீஸில் ஒரு பழுது பார்த்திருப்பே..”

இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே மளிகைக்கடை வீட்டம்மா முகமெல்லாம் சிவக்க கோபம் கொப்புளிக்க வந்தாள்.

“வாங்கக்கா வாங்க..நேற்றே உங்கள் ஜாக்கெட்டெல்லாம் தெச்சி கொடுத்தனுப்பிட்டேனே.”

“ஜாக்கெட் தச்சி இருக்கற லட்சணத்தைப்பாரு.’ப’ கழுத்து வைக்க சொன்னால் ‘யு’கழுத்து வச்சி இருக்கே.ஜாக்கெட் தந்த அளவை விட நாலு இஞ்ச் பெரிசா தச்சி இருக்கே.நல்லா தாரளமா இருக்கட்டுன்னுதானே முக்கால் மீட்டருக்கு பதில் ஒரு மீட்டரா எடுத்துக்கொடுத்தேன்.அப்பவும் உள்ளுக்குள் ஒட்டு போட்டு அசிங்கப்படுத்திட்டே..”

“யக்கா..யக்கா..நான் ஐடியாவோடத்தான் தைத்து இருக்கேன்க்கா.நீங்க வாங்கி இருக்கின்ற துணி சரி இல்லை.ஒரு வாஷ் போட்டீங்கன்னா சுருங்கிடும்.வாஷ் பண்ணிட்டு அப்புறம் சொல்லுங்க.கிச்சா எப்படி தைத்து இருக்கான்னு..”

“இதுவா மட்டமான துணி?நான் என்ன பிட் துணியா எடுத்தேன்.டவுனுக்கு போய் மீட்டர் நூறு ரூபாய்க்கு எடுத்து வந்ததாக்கும்.”
கோபம் குறையாமல் கத்தினாள்.

“பர்ஸ்டு குவாலிட்டின்னு உங்களுக்கு செகண்ட் குவாலிட்டி கொடுத்து எவனோ ஏமாத்திட்டான்க்கா.முப்பத்தேழு வருஷ சர்வீஸ்.துணிமணி பற்றிஎனக்கு தெரியாதா என்ன?”

“சரி ப கழுத்துதானே வைக்க சொன்னேன்.எதுக்கு யு கழுத்து வச்சே”

“ஹா.ஹா..யக்கா...அதான் சொல்லுறேனே மட்டமான துணி ப கழுத்து வச்சேன்னா குறுக்காலே அப்படியே கிழிஞ்சுடும்.யு கழுத்துன்னா அப்படியே இருக்கும்.நான் என்ன கூலிக்கு மாரடிக்கறவனாக்கா.ஒவ்வொரு கஸ்டமருக்கும் தைக்கும் பொழுது என் சொந்த உபயோகத்துக்கு தைக்கிற மாதிரியில்ல சிரத்தை எடுத்து தைக்கிறேன்..என்னைப்போய்..”

கிச்சாவின் அனுசரனையான பேச்சிலேயே ஓரளவு கூலாகிய மளிகைகடை வீட்டம்மா இன்னும் விட மனதில்லாமல் சற்று சுருதி குறைந்த தொணியில் “அப்ப எதுக்கு உள்ளுக்கு வேறு துணியாலே ஒட்டு போட்டு இருக்கே.பார்க்கவே அசிங்கமா இருக்கு”

“ஐயோ யக்கா...எந்த கடையிலே எடுத்தீங்க..உங்களை நல்லா ஏமாத்திட்டான்.நான் அளந்து பார்க்கும்பொழுது என்பது செண்ட் தான் இருந்தது.இனிமேல் ஜாக்கெட் பீஸ் வாங்கும் பொழுது வீட்டுக்கு வந்து அளந்து பாருங்க”

ஞாபகக்குறைவில் தவறுதலாக வெட்டிய உண்மையை ஒப்புக்கொள்ளவா முடியும்?

சட்டையை கிச்சாவிடமே கடாசி விட்டு வந்து விட வேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் வந்தவள் மேலே ஏதும் பேசாமல் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து தந்து விட்டு ஜாக்கெட்டை திரும்ப வாங்கிகொண்டு சென்றவளை வெற்றிகரமாக பார்த்தான் கிச்சா.

”அண்ணே..அந்தம்மாவுக்கு பித்தான் கட்டும் பொழுதே கேட்டேன்.இப்படி சொதப்பிட்டீங்களே.அந்தம்மாவிடம் வாங்கி கட்டிக்கப்போறீங்கன்னு”

“டேய்..படவா..சும்மா வாய் பேசிட்டு இருக்காமல் சட்டுன்னு பித்தானை கட்டுடா.அதுக்கு முன்னாடி நாயர் கடையிலே ஸ்ட்ராங்கா ரெண்டு டீ வாங்கிவா”

“அண்ணே..இந்நேரம் கடையிலே சூடா நண்டுக்கால் போண்டா போடுவாங்கண்ணே”

“டேய்..இன்னிக்கு அமாவாசை.நண்டுக்காலும் தின்ன மாட்டேன்.திமிங்கலக்காலும் தின்ன மாட்டேன்”

“அண்ணே திமிங்கலத்துக்கு கால் இருக்குமாண்ணே..நண்டுகால்ன்னா வெங்காயத்தை நண்டுக்கால் போல் நீள நீளமா வெட்டிப்போட்டு முறுகலா போண்டா போடுவாங்கண்ணே”

“சரி சரி..போய் சீக்கிரமா வாங்கி வந்துட்டு வேலையை ஆரம்பி”

நண்டுக்கால் போண்டா சாப்பிடும் ஆசையில் பையன் துள்ளிக்கொண்டு ஓடினான்.

பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல் மெஷினை கட கடவென்று ஒட்டிக்கொண்டு இருந்த பொழுது இரைச்சலாக வந்து சேர்ந்தார் பாஷாபாய்.

“என்னய்யா கிச்சா..உன் மனசிலே என்ன நினைத்துட்டு இருக்கே.”

“வாங்க பாய்..சிங்கப்பூரில் இருந்து சவுகரியமா வந்து சேர்ந்தீகளா”

“ம்ம்..அதெல்லாம் நல்ல படியா வந்து சேர்ந்தாச்சு.இதென்னா..என்ன தைத்து இருக்கே”

துணி மூட்டையை விசிறி அடித்தார்.தோணி பாய்ந்து பந்தை பிடிப்பதுபோல் லாவகமாக கீழே விழாமல் கேட்ச் செய்த கிச்சா “பாய் சூடா இருக்கறமாதிரி இருக்கு”சிரித்தான்.

“பின்னே என்னய்யா..என்பொண்ணு அனார்கலி சுடிதார் வேணுமுன்னு ஆசை ஆசையா சிங்கப்பூரில் இருந்து துணி வாங்கியார சொன்னாள்.அனார்கலி தைக்க சொன்னால் ஆர்ட்னரி தைத்து இருக்கே..வர வர..தொழிலில் கவனமே இல்லாமல் போச்சு.சொல்லுற விதமா தைப்பதே இல்லை”

“பாய்..பாய்..என்ன பாய் இப்படி சொல்லிபுட்டீஹ..இந்த துணிக்கு அனார்கலி மாடல் தைத்தால் நல்லா இருக்காது..”

“இந்த துணியில் தைத்தால்தான் நல்லா இருக்கும்ன்னு சொல்லி வாங்கி வரசொன்னாள் என் பொண்ணு.சும்மா இல்லை.மீட்டர் பனிரெண்டு வெள்ளிக்கு வாங்கி வந்தேன்.இப்படி சொதப்பிட்டியே”

“எனக்கு தெரியாதா பாய்.பாய் என்ன ஒரு வெள்ளிக்கு ரெண்டு மீட்டர் வாங்கற ஆளா?துணி எத்தனி உசத்தின்னு தொட்டுப்பார்த்தாலே தெரியுமே.பாருங்க..லேசுலே யாருக்கும் போட மாட்டேன்.எக்ஸ்போர்ட் குவாலிடி நூலு..சும்மா மாஞ்சா கயிறு மாதிரி இருக்கும்.பித்தானை பாருங்க.செம்புலே வாங்கி போட்டு இருக்கேன்.சாதரணமா ஸ்டீல் ஹூக்தான் போடுவேன்.உங்களுக்குன்னு ஸ்பெஷல்..துணி கிழிந்தாலும் ஹூக் அறுந்துபோகாது”

“அதெல்லாம் சரிதான்..அனார்கலிக்குபதில் ஏன்யா ஆர்ட்னரி தைத்து இருக்கே”

“அதானே சொன்னேனே பாய்..இத்தனை ஒசத்தி துணியிலே அனார்கலி மாடல் தைத்தால் நல்லா இருக்காது பாய்.பொண்ணுக்கு விருப்பமா இருந்தால் சொல்லுங்க...நான் டவுனுக்கு போறச்சே நல்ல துணியா பார்த்து நானே பொருத்தமான துணி வாங்கி வந்து அனார்கலி மாடல் தைத்து தர்ரேன்.”

“அதை எங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமாக தைத்து இருக்கணும்.அதை விட்டுட்டு உன் இஷ்டத்திற்கு தைத்து இருக்கே.”

“ஐயோ..கேட்காமல் இருப்பேனா பாய்.நம்ம துணியை வெட்டுவதற்கு முன்னாடி பையன் கிட்டே கேட்டு அனுப்பத்தான் செய்தேன்,வீடு பூட்டி இருந்ததுன்னு வந்துட்டான் பாய்.லேட்டானால் சப்தம் போடுவீங்களேன்னு நானே தைக்க ஆரம்பித்துட்டேன்.கோவிச்சுக்காதீங்க பாய்”

“என்ன எழவோ போ..என் மவளை சமாளிக்கறதுக்குள்ளே நெஞ்சுதண்ணி காஞ்சி போகுது”விசிறி அடித்த துணியை திரும்பி வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினார் பாஷாபாய்.

‘உஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..’வெற்றிகரமாக சமாளித்துவிட்ட தெம்பில் மீண்டும் மெஷினை ஓட்ட ஆரம்பித்தான்.

பாஷா பாய்வீட்டில் இருந்து தைக்க வந்த துணியை பார்த்ததுமே கிச்சாவின் மனைவி துணியின் வழ வழப்பிலும் பள பளப்பிலும் தரத்திலும் டிஸைனிலும் நிறத்திலும் ஈர்க்கப்பட்டு கணவனிடம்”என்ன செய்வியோ ஏது செய்வியோ.நான் ஊருக்கு போவதற்கு முன்னாடி என் தங்கச்சி மகளுக்கு சின்ன கவுன் இந்த துணியில் தைத்தே கொண்டுபோய் கொடுத்தே ஆகணும்.இந்த துணியில் என் தங்கை மகளுக்கு கவுன் தைத்துப்போட்டே ஆகணும்”என்று வழக்கம் போல் கடும் கட்டளை போட்டதை மறுக்க முடியாமல் யோசித்ததின் விளைவுதான் அனார்கலி ஆர்ட்னரி ஆகி விட்டது.

“அண்ணே..நண்டுக்கால் போண்டாண்ணே..சூடா சாப்பிட்டுட்டு டீயை குடிங்கண்ணே”

பசி வயிற்றை கிள்ள ஆவலுடன் போண்டாவை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான் கிச்சா.

“அண்ணே..போண்டா நல்லா இருக்காண்ணே..இன்னும் நாலு வாங்கிவரவா?நல்லா சாப்பிட்டீங்கன்னாத்தான் இனிமே வர்ர கஸ்டமரை தெம்பா சமாளிக்க முடியும்”சொல்லி விட்டு வாயை கைகளால் மூடிக்கொண்டு சிரித்த பையனை இன்ச் டேப்பால் அடிக்க கையை ஓங்கினான் கிச்சா.

















60 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

பலே கில்லாடியான டெய்லர்தான். சில பேர் இப்படித்தான் ஏமாற்றுவாங்க..

கதை ரொம்ப நல்லாருக்கு சாதிகாக்கா.

தலை மறைவான அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மட்டின் பிரியாணி எனக்கே எனக்கா.... எங்கிட்டயேவா... வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹைய்யா நாந்தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு....

தலை மறைவான அதிரா said...

ஸாதிகா அக்கா ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. நான் பின்புதான் வருவேன், பிரியாணி கிடைக்கேல்லையாம், இனி இப்ப வந்தா என்ன, பிறகு வந்தா என்ன அவ்வ்வ்வ்வ்:)))

ஸாதிகா said...

வாங்க தம்பி ஷேக்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஹையா..ஷேக்தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு..உங்களுக்கு இந்த முறை வடை பஜ்ஜி எல்லாம் வேண்டாம்.டெய்லர் கிச்சாவிடம் சொல்லி சூப்பர் சென்சூரிகாட்டனில் உங்களுக்குத்தான் புல் ஹேண்ட் சர்ட்....

ஸாதிகா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..பூஸ்..பிரியாணி இல்லாட்டி போனால் என்ன?கிச்சா டெய்லரிடம் சொல்லி உங்களுக்கு வடிவா ஒரு கர்ஷீப்..ஒகேவா...

ஸாதிகா said...

இனி இப்ப வந்தா என்ன, பிறகு வந்தா என்ன அவ்வ்வ்வ்வ்:)))///அச்சச்சோ...அதீஸ்...இனி மெயில் போட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டு பதிவை அக்கா போஸ்ட் செய்கிறேன் .சரியா?

Jaleela Kamal said...

வரேன் அப்பரம் வரேன்
இங்கு வடை கிடக்கலையே ஸ்டார்ஜன் முந்திகொண்டார்

தலை மறைவான அதிரா said...

ஸாதிகா said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..பூஸ்..பிரியாணி இல்லாட்டி போனால் என்ன?கிச்சா டெய்லரிடம் சொல்லி உங்களுக்கு வடிவா ஒரு கர்ஷீப்..ஒகேவா...//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண் துடைக்கவா?:)).

தலை மறைவான அதிரா said...

கதை கலக்கல்... ஒரிஜினல் கவுண்டமணி - செந்தில் ஸ்டைல்லயே எழுதிட்டீங்க.

Jaleela Kamal said...

கிச்சா டெய்லர் சரியான சமாளிப்பு திலகமா இருக்காரே..

பால கணேஷ் said...

இனிமே ட்ரெஸ் தெக்கக் குடுக்கறதுன்னா, டெய்லரைப் பத்தியும் விசாரிச்சுக்கணும் போலருக்கேம்மா... கில்லாடி டெய்லர்! சரளமாகப் படிக்கத் தூண்டிய எழுத்து நடைக்கு ஸ்பெஷல் பாராட்டு!

Unknown said...

கதை ரொம்ப கலக்கலாக இருக்கு அக்கா.. சில டெய்லர்கள் இப்படி தான் இருக்காங்க.. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

K.s.s.Rajh said...

கில்லாடி டெய்லர் தான்
கதை கலக்கல் அக்கா

Asiya Omar said...

இந்த கிச்சா கதாபாத்திரமும் முத்திரையைப் பதிக்கிறது.நல்ல படைப்பு.
டெய்லர் கிட்ட இத்தனை சமாச்சாரமா?தோழி.

ஸாதிகா said...

வரேன் அப்பரம் வரேன்//பொறுமையா வந்து பதிவைபடித்துவிட்டு கருத்து சொல்லுங்க ஜலி.

ஸாதிகா said...

கதை கலக்கல்... ஒரிஜினல் கவுண்டமணி - செந்தில் ஸ்டைல்லயே எழுதிட்டீங்க.//ஸ்ஸ்ஸ்ஸ்..நான் படமே பார்ப்பதில்லை பூஸ்.நீங்க அடிக்கடி பார்ப்பதன் விளைவு அவங்க ஸ்டைல் இவங்க ஸ்டைல் என்று கண்டு பிடிக்க்றீங்க:)

ஸாதிகா said...

ஸ்பெஷல் பாராட்டுக்கு தங்கையின் ஸ்பெஷல் நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

கதை ரொம்ப கலக்கலாக இருக்கு அக்கா..//மிக்க நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

கில்லாடி டெய்லர் தான்
கதை கலக்கல் அக்கா/கருத்துக்கு மிக்க நன்றி ராஜ்.

ஸாதிகா said...

இந்த கிச்சா கதாபாத்திரமும் முத்திரையைப் பதிக்கிறது.//ரொம்ப சந்தோஷம் தோழி ஆசியா!

குறையொன்றுமில்லை. said...

கதை நல்லா இருக்கு எல்லா டெய்லர்களுமே இப்படித்தானோ?

ஸாதிகா said...

Lakshmi said...
கதை நல்லா இருக்கு எல்லா டெய்லர்களுமே இப்படித்தானோ?//எல்லா டெய்லர்களும் இப்படித்தான் என்று சொல்லிவிடமுடியாது லக்‌ஷ்மியம்மா.கேரக்டர் பற்றி எழுதி வருடம் ஒன்றாகி விட்டது .என்ன எழுதலாம் என்று யோசிக்கும் பொழுது கிச்சா டெய்லர் உதயமாகி விட்டார்.கருத்துக்கு மிக்க நன்றியம்மா!

Menaga Sathia said...

கிச்சா கில்லாடி டெய்லர் தான் போல...கிச்சா கதாபாத்திரம் சூப்பர்!!

Mahi said...

:) நல்ல கதை ஸாதிகாக்கா! எங்க டெய்லர் இப்படி சொதப்பல்ஸ் செய்யமாட்டார்,ஆனா இப்ப தரேன்,அப்ப தரேன்னு இழுஇழுன்னு இழுத்துதான் குடுப்பார். துணி திருடுவது, தப்பா வெட்டுவது போன்ற கோல்மாலெல்லாம் இதுவரை நான் தைச்ச டெய்லர்களிடம் நடக்கலை! touch wood! ;)

விச்சு said...

கிராமத்து டெய்லர்கள் இப்படித்தான்.பலே கில்லாடிகள்.

சிநேகிதன் அக்பர் said...

//ஹையா..ஷேக்தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு..உங்களுக்கு இந்த முறை வடை பஜ்ஜி எல்லாம் வேண்டாம்.டெய்லர் கிச்சாவிடம் சொல்லி சூப்பர் சென்சூரிகாட்டனில் உங்களுக்குத்தான் புல் ஹேண்ட் சர்ட்.... //

கிச்சா தச்ச சட்டையில சேக்கை நினைச்சு பார்த்தேன். ஹா...ஹா...ஹ்ஹா!

Yaathoramani.blogspot.com said...

கதாபாத்திர அறிமுகம் அட்டகாசம்
கிராமத்து டெய்லர்கள் பலரும்
சுவரில்லா சித்திரங்கள் கவுண்டமணியும் காஜா பையனும்
நினைவுக்கு வந்து போனார்கள்
அடுத்த கதாபாத்திர அறிமுகத்தை
ஆவலுடன் எதிர்பார்த்து..

vanathy said...

வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பது இது தானோ??!!! நல்ல கதை.

ஜெய்லானி said...

இந்த கிச்சா எங்க இருக்காருன்னு சொல்லுங்களேன் ..சில டிப்ஸ் கேக்கனும் /சொல்லனும் ஹா..ஹா.. :-)))

ஜெய்லானி said...

//“கிச்சா..இந்த டயலாக்கை இன்னும் எத்தினி நாழிதான் சொல்லி சமாளிச்சுண்டிருப்பே..// உங்களுக்கே போரடிக்கிற வரைக்கும் :-)))))))))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... பயங்கரமான டெய்லர் தான்... இனிமே நாங்களும் கவுன்ட்டர் குடுத்து சமாளிப்போம்ல...:)

ஸாதிகா said...

கிச்சா கில்லாடி டெய்லர் தான் போல...கிச்சா கதாபாத்திரம் சூப்பர்!!///மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

கோல்மாலெல்லாம் இதுவரை நான் தைச்ச டெய்லர்களிடம் நடக்கலை! touch wood! ;)//எனக்கு இந்த அனுபவம்தான் மகி.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி விச்சு.

ஸாதிகா said...

கிச்சா தச்ச சட்டையில சேக்கை நினைச்சு பார்த்தேன். ஹா...ஹா...ஹ்ஹா!//வாங்க அக்பர்.ரொம்ப நாள் கழித்து வந்து பயங்கர காமெடியை கொளுத்திப்போட்டு விட்டீர்கள்.உங்கள் பின்னூட்ட வரிகளை படித்ததில் இருந்து ஆரம்பித்த சிரிப்பு இன்னும் முடிந்த பாடில்லை எனக்கு ஹா..ஹா..ஹா..கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

அடுத்த கதாபாத்திர அறிமுகத்தை
ஆவலுடன் எதிர்பார்த்து..//ஊக்கவரிகளுக்கும் தொடர் வரவுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வானதி.

ஸாதிகா said...

இந்த கிச்சா எங்க இருக்காருன்னு சொல்லுங்களேன் ..சில டிப்ஸ் கேக்கனும் /சொல்லனும் ஹா..ஹா.. :-)))///கிச்சா ஊருக்கு போய் பெரிய ஆலமரத்தடிக்கு போனீங்கன்னா அங்கிருந்து சோத்தாங்கை பக்கம் போய் அதிலிருந்து ஒரு ரைஸ்மில் வரும் .அங்கிருந்து பீச்சாங்கை பக்கம் போய் மறுபடியும் சோத்தாங்கை பக்கம் போய்....உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடா..எதுக்கு ஜெய்லானி உங்களுக்கு இத்தனை சிரமம்.வயசானகாலத்தில் வழிதேடி அலைந்து கொண்டு சிரமப்படுறீங்க.விஷயம் என்னான்னு அடுத்த பின்னூட்டத்தில் சொல்லிடுங்க.நான் கிச்சா டெய்லரிடம் கேட்டு சொல்லிடுறேன்.ஒகேவா.

enrenrum16 said...

யப்பா..யப்பா...பயங்கர காமடிக்கா.... வாயுள்ள பிள்ளை புழைக்கும்னு சும்மாவா சொன்னாங்க... நண்டுக்கால் போண்டான்னதும் நான் அப்டியே ஷாக்காயிட்டேன்... ஓ...அது வெங்காய பக்கோடாவா?! நல்ல பாஸ் நல்ல அஸிஸ்டென்ட்... சூப்பர் கதை...

கோமதி அரசு said...

நல்ல நகைச்சுவை கதை.

எதையும் பேசி சாமாளிக்கும் காதாபாத்திரம் கிச்சா ,பிழைக்க தெரிந்தவர்.

Unknown said...

"அன்பு சகோதரி அவர்களே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!

ஹுஸைனம்மா said...

அந்தக் காலத்துல இப்படித்தான் டெய்லர்கிட்ட பெருநாளைக்கு பாவாடை, சட்டை தைக்கக் கொடுத்திட்டு ஆலாய் பறப்போம். இப்பல்லாம், ரெடிமேட் உலகம் என்பதால், அவ்வப்போது சீஸன் இல்லாத சம்யத்தில் பிளவுஸ் தைக்கக் கொடுத்தால் பிரச்னை இல்லை. ஆனாலும், சுடிதார் தைப்பதுன்னா இப்பவும் இழுபறிதான்....

கோமதி அரசு said...

மீலாடி நபி வாழ்த்துக்கள் ஸாதிகா.

கருணை நபியின் பிறந்தநாள் தானே இன்று.

அவர் மாதிரி எல்லோரிடமும் பாசமும், அன்புபோடும், , கருணையோடும் வாழ்வோம்.

இஸ்லாமிய பெருமக்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

தலை மறைவான அதிரா said...

விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..

http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

மனோ சாமிநாதன் said...

கலகலப்பான, நாட்டு நடப்பை அப்படியே பிட்டு வைக்கும் சிற‌ப்பான கதை ஸாதிகா!

ஸாதிகா said...

நண்டுக்கால் போண்டான்னதும் நான் அப்டியே ஷாக்காயிட்டேன்... ஓ...அது வெங்காய பக்கோடாவா?! //

எதற்கு இதற்கு போய் ஷாக்..?நீளமாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மைதாவுடன் சேர்த்து உருட்டி போடும் போண்டாவின் பெயர்தான் வெங்காயபோண்டா..ஐ மீன் நண்டுக்கால் போண்டா.பகோடா கடலை மாவில் தயாரிப்பதாச்சே?கருத்துக்கு நன்றி என்றென்றும்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வீடு அவர்களே!

ஸாதிகா said...

எனக்கு எப்பொழுதுமே இந்த பிரச்சினை இல்லை ஹுசைனம்மா.இது என் கற்பனை மட்டிலுமே.நன்றி.

ஸாதிகா said...

கருணை நபியின் பிறந்தநாள் தானே இன்று.

அவர் மாதிரி எல்லோரிடமும் பாசமும், அன்புபோடும், , கருணையோடும் வாழ்வோம்.//மிக்க மகிழ்ச்சி நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

athira said...
விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ....//ஆகட்டும் அதீஸ்.

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மனோஅக்கா.

மாதேவி said...

டெயிலர் என்றால் இப்படி எல்லோ இருக்கவேண்டும்... ஹா.....ஹா..

cheena (சீனா) said...

அன்பின் ஸாதிகா - டெய்லர் கிச்சா - கதாபாத்திர அறிமுகமும் - அவர் வாடிக்கையாளர்களைச் சமாளிக்கும் விதமும் விவரிக்கப் பட்டிருப்பது படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டுகிறது. நல்லதொரு சிறுகதை. மிக மிக இரசித்தேன். நகைச்சுவையுடன் எழுதப்பட்ட கதை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

வை.கோபாலகிருஷ்ணன் said...

நாட்டு நடப்பை நல்லா நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க, பாராட்டுக்கள்.

[இதுபோன்ற நகைச்சுவை வெளியீடுகள் வெளியிடும் போது மெயில் மூலம் லிங்க் உடன் கூடிய தகவல் கொடுத்தால், மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

என் டேஷ்போர்டில் பலநேரம் பல பதிவுகள் ஏனோ தோன்றுவது இல்லை.

மெயில் என்றால் அடிக்கடி செக்-அப் செய்வேன்.]

அன்புடன் vgk

ஸாதிகா said...

நன்கு சிரித்தீர்களா மாதேவி.நன்றி.

ஸாதிகா said...

என் வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்தும் வாழ்த்துகக்ளும் தந்த சீனா சாருக்கு நன்றி.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

இனி கண்டிப்பாக மெயில் செய்கின்றேன் வி ஜி கே சார்.ஆர்வத்திற்கும்,ஊக்கத்திற்கும் நன்றி.