January 19, 2012

அஞ்சறைப்பெட்டி -7

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் எண்ணி முன்றே மூன்று வீல் சேர் மட்டிலுமே.அதிலும் இரண்டு ரிப்பேர்.மற்றொன்று விரைவில் ரிப்பேர் ஆகும் நிலைமை.முதிய பயணிகளை லக்கேஜ் வைத்து செல்லும் டிராலியில் உட்கார வைத்து இழுத்து செல்வது பார்க்க பரிதாபமாக உள்ளது.ஆபத்தானதாகவும் உள்ளது.வீல் சேர் இல்லாததால் டிராலியில் வைத்து முதியோர்களை அழைத்துச்செல்லும் போர்ட்டர்கள் இஷ்டத்திற்கு சார்ஜ் பண்ணி பயணிகளின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகுகின்றனர்.ரெயில்வே நிர்வாகம் கவனிக்குமா?


22 வருடங்கள் காணாத அளவிற்கு பனிப்பொழிவு சென்னையில்.காலையில் ஏழுமணிக்கே வெளிச்சம் சரியாக வருவதில்லை.போர்வைக்குள் சுருண்டு இருக்கும் பிள்ளைகளை தட்டி எழுப்புவதற்கு பெற்றோர்கள் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.எப்பொழுதடா வெயில்காலம் பிறக்கும் என்று சென்னை வாசிகள் வழி மீது விழி வைத்து காத்து இருக்கின்றனர்.ம்ம்ம்ம்...இக்கரைக்கு அக்கரை பச்சை.

பிரபலமான பிராண்ட் செருப்பு.இந்த செருப்பு வாங்குவதென்றால் சேல்ஸ் போடும் பொழுது வாங்கினால்தான் பர்ஸ் பழுக்காது.அந்த பிரபலமான மாலில் உள்ள ஷோ ரூமில் சேல்ஸ் நடைபெற்றுவருகின்றது என்று பத்திரிகை வாயிலாக அறிந்து அங்கு சென்றால் கடை வாசலிலேயே பிரமாதமாக விளம்பரம்.flat 40% off என்ற கொட்டை எழுத்துக்கள்.டிஸ்ப்ளே செய்து இருந்த செருப்புகளை செலக்ட் செய்து பில் போடும் பொழுதுதான் செருப்புகளுக்கு டிஸ்கவுண்டே போட வில்லை.கேட்டால் ஷோகேசினுள் உள்ள செருப்புகளுக்கு தள்ளுபடி கிடையாது.நடுவில் போடப்பட்டு இருக்கும் பெரிய மேஜையில் குவிந்து கிடக்கும் செருப்புகளுக்கு மட்டும்தான் தள்ளுபடி என்றார்களே பார்க்கலாம்.எனக்கு வந்த கோபத்தில் செருப்புகளை அங்கேயே கடாசிவிட்டு வந்துவிட்டேன்.

சென்றவாரம் பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றிருந்தேன்.எதிரில் பெட்ஷீட் விரித்து கூடை பிளாஸ்க் சகிதமாக ஒரு குடும்பத்தினர்.உடன் வந்திருந்த ஒரு ஆறு ஏழு வயது குழந்தை ஒரு கேரி பேக்கை வைத்துக்கொண்டு மிஞ்சிய உணவுப்பொருட்கள்,உபயோகித்த பேப்பர் கப் ,பிளேட்,கடலை தோல் போன்றவற்றை எல்லாம் சேகரித்து அந்த கேரிப்பேக்கினுள் நிரப்பிய வண்ணம் இருந்தாள்.அவர்கள் எழுந்து செல்லும் பொழுது குப்பை கூடை எங்கே உள்ளது என்று தேடி கண்டு பிடித்துப் அதில் போட்டு விட்டு சென்றாள்.இதே போல் அனைவரும் இருந்து விட்டால் இந்திய சாலைகளும் பொது இடங்களும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது.
சமீபத்தில் இறந்து போன வடகொரியா 2-ஆவது கிம் ஜோங் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும்,கலந்து கொண்டும் வாய் விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று அந்த நாட்டு நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.இதற்காக யார் அதிக அளவில் அழுதது?யார் அதிக அளவு துக்கத்தை வெளிப்படுத்தியது ?என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.சிம்பிள் மெட்டருக்கே கொல வெறி என்று நாமகரணம் சூட்டுகின்றோம்.இதை எதில் சேர்ப்பது?

43 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

செருப்பை கடாசிட்டு வந்திட்டீங்க; அந்த செருப்பு ஃபோட்டோ மட்டும் சுட்டுக்கிட்டு வந்திட்டீங்களா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

2ஆம் கிம் ஜோங் மேட்டர் கொடூரமான நகைச்சுவை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அஞ்சறைப்பெட்டித் தகவல்கள் யாவும் அருமையாக மணமாக உள்ளன.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

ப்ணி வெளிநாடுகளில் அப்படி தான்
காலையில் வெளிச்சட்த்தையே பார்கக்முடியாது

Jaleela Kamal said...

ஆஃபர் என்று எல்லா இடத்திலும் இப்படி தான் ஏமாற்று கின்றனர்.

Angel said...

//ரெயில்வே நிர்வாகம் கவனிக்குமா?//

இந்த ஒரு விஷயத்தில் இங்கே எவ்ளோ பரவாயில்லை முதியோர் /இயலாதவருக்கென்று என்று சகல வசதிகளும் இருக்கு
//கேட்டால் ஷோகேசினுள் உள்ள செருப்புகளுக்கு தள்ளுபடி கிடையாது.//

எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க !!!!!!!
சின்ன பெண்ணை பாராட்ட வேண்டும்

.//2-ஆவது கிம் ஜோங் //

.இந்த விஷயத்தை அன்றைக்கே நான் நன்கு கவனித்தேன் எல்லாருமே போலியாக அழுத மாதிரி தோன்றியது
நம்மூரு ஆட்கள் இதெல்லாம் பார்த்து கெட்டுடபோறாங்க

K.s.s.Rajh said...

பல தகவல்களை பகிர்ந்திருக்கீங்க அஞ்சறை பெட்டி நன்றாக இருக்கு

விச்சு said...

என்னதான் இருந்தாலும் வெயில்தான் சுகம். எப்போவாவது பெய்யும் தூறல் போல.

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... பிரியாணி கிடைக்காமல் பண்ணிட்டீங்களே ஸாதிகா அக்கா?:)))

முற்றும் அறிந்த அதிரா said...

காலையில் ஏழுமணிக்கே வெளிச்சம் சரியாக வருவதில்லை.போர்வைக்குள் சுருண்டு இருக்கும் பிள்ளைகளை தட்டி எழுப்புவதற்கு பெற்றோர்கள் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ எங்களைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ...:))

“இதுவும் கடந்து போகும்”

முற்றும் அறிந்த அதிரா said...

அந்தச் செருப்புச் சாதி 90 களில் இலங்கையில் பேமஸ் ஆக இருந்துது, நானும் போட்டிருக்கிறேன்... “சோழாப்புரி” செருப்புக்கள் என அழைப்போம்..

எல்லாம் வியாபார தந்திரம்தான்..சேல்ஸ் எனப் போட்டால்தானே, நீங்க உள்ளே வருவீங்க:))

முற்றும் அறிந்த அதிரா said...

//குப்பை கூடை எங்கே உள்ளது என்று தேடி கண்டு பிடித்துப் அதில் போட்டு விட்டு சென்றாள்.இதே போல் அனைவரும் இருந்து விட்டால் இந்திய சாலைகளும் பொது இடங்களும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது.//

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது.

முன்பு ஊரில் நாமும் சாப்பிட்ட டொபி பேப்பரை சிம்பிளாக ரோட்டோரம் போடுவோம், ஆனா இங்கு வந்த பின்பு, குட்டிப் பேப்பரைக்கூட கீழே போட கை கூசும், போட மாட்டோம், பழகிவிட்டது.

முற்றும் அறிந்த அதிரா said...

மொத்தத்தில அஞ்சறைப்பெட்டி அருமை. அதெதுக்கு இடையில முசல்:)ப்பிள்ளை:).

Starjan (ஸ்டார்ஜன்) said...

அஞ்சறைப்பெட்டி தகவல்கள் ரொம்ப அருமையா இருக்கு.

vanathy said...

.எனக்கு வந்த கோபத்தில் செருப்புகளை அங்கேயே கடாசிவிட்டு வந்துவிட்டேன்.//அதுதான் சரி. சில வேளைகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் சேல் போட்டிருப்பார்கள். பக்கத்தில் விலை கூடிய பொருட்களை விலை போடாமல் வைத்திருப்பார்கள். என்னைப் போல அப்பாவிகள் தெரியாமல் எடுத்துவிட்டு, பின்னர் விலை போடும் போது பொங்கி எழுந்து, திரும்ப குடுத்த கதையும் அடிக்கடி நடக்கும். இப்பெல்லாம் நான் நல்ல அலர்ட்டா இருக்கிறேன்.
நல்ல பதிவு, அக்கா.

பால கணேஷ் said...

எந்த இடத்திலுமே தள்ளுபடி என்றால் நான் நகர்ந்து விடுவேன். இப்படித்தான் பலர் ஏமாற்றுகின்றனர் என்பதால். பெசண்ட் நகர் பீச்சில் அந்தச் சிறுமியின் செயல் மனதைத் தொட்டது. அஞ்சறைப் பெட்டி மணம் வீசியது. அடிக்கடி இப்படிக் கொடும்மா!

Mahi said...

/“சோழாப்புரி” செருப்புக்கள்/ அது கோலாப்பூரி செருப்புகள்! :))))))))

ஸாதிகாக்கா,அஞ்சறைப்பெட்டிய கோவமா திறந்து காமிச்ச்சுட்டீங்க,சோழாப்புரி;) செருப்புனால!

வீல்சேர்...கொடுமைதான்!
பனி...அதுவும் ஒரு சந்தோஷமான தொந்தரவு!:)
பீச் குழந்தை...நம்பிக்கைக் கீற்று!
வடகொரியா...கொரில்லா அரசாங்கமோ??;)

Menaga Sathia said...

அஞ்சறைப் பெட்டி லேட்டா வந்தாலும் பல சுவையான தகவல்களோடு இருக்கு....குளிர்காலத்தில் காலை 10மணிவரை இருட்டாவே இருக்கும்.பிள்ளைகள் 8மணிக்கு பள்ளிக்குபோகும் போது பாவமா இருக்கும்.எங்களைலாம் நினைத்து பாருங்கக்கா.

சிநேகிதன் அக்பர் said...

இன்றைய காலகட்டத்தில் சூதாட்டத்தின் மறு பெயர்தான் வியாபாரம், ஏமாற்றுவதின் மறுபெயர்தான் வியாபார தந்திரம்.

இது கடைகளுக்கு மற்றுமல்ல அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும்.

நம்ம ஊரை விட இங்கு கம்மியாக ஏமாற்றுகிறார்கள் என்ற அளவில் கொஞ்சம் திருப்திதான் :)

அனைத்து பகிர்வுகளும் அருமை. குறிப்பாக வீல் சேர் குறித்த செய்தியை ஒரு புகாராக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பினால் நலம்.

Yaathoramani.blogspot.com said...

அஞ்சறைப் பெட்டிப் பொருட்கள் அருமை
ரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

அந்த செருப்பு ஃபோட்டோ மட்டும் சுட்டுக்கிட்டு வந்திட்டீங்களா?//வாங்க சகோ நிஜாம்.செருப்பு போட்டோ கடையில் இருந்து சுட்டதல்ல.கூகுளில் இருந்து..:)கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

பாரட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

உடன் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஜலி

ஸாதிகா said...

நம்மூரு ஆட்கள் இதெல்லாம் பார்த்து கெட்டுடபோறாங்க//ஓ அப்படிவேறு இருக்கோ..:(மிக்க நன்றி ஏஞ்சலின் கருத்திட்டமைக்கு.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ராஜ்.

ஸாதிகா said...

என்னதான் இருந்தாலும் வெயில்தான் சுகம். எப்போவாவது பெய்யும் தூறல் போல.///உண்மைதான் விச்சு.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ எங்களைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ...:))///ம்ம்ம்..உங்களை நினைத்துத்தான் ஆறுதல் பட்டுக்கறோம் அதீஸ்.

அந்த செருப்பு அந்த பிராண்ட் இல்லை அதீஸ்.படம் கூகுளில் எடுக்கப்பட்டது.

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது.//அதீஸ் வாயில் இருந்து சூப்பரா பழமொழிகள் வருதே..பலே...


மொத்தத்தில அஞ்சறைப்பெட்டி அருமை. அதெதுக்கு இடையில முசல்:)ப்பிள்ளை:).
//பூஸ்..முசல் பிள்ளை டஸ்ட் பின் தான்.தகவலுக்கேற்ற படம் போடணும் என்று அப்படி..ஹி..ஹி..ஹி..

ஸாதிகா said...

இப்பெல்லாம் நான் நல்ல அலர்ட்டா இருக்கிறேன்.
நல்ல பதிவு, அக்கா.//அலர்ட்டா இருந்தால்த்தான் வான்ஸ் நஷ்டம் போகமல் இருக்கலாம் .கருத்துக்கு மிக்க நன்றி வான்ஸ்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி தம்பி ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

எந்த இடத்திலுமே தள்ளுபடி என்றால் நான் நகர்ந்து விடுவேன். //இந்த முதிர்ச்சி எல்லோருக்கும் வராதே:(கருத்துக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

ஸாதிகாக்கா,அஞ்சறைப்பெட்டிய கோவமா திறந்து காமிச்ச்சுட்டீங்க,சோழாப்புரி;) செருப்புனால!//என்னப்பா மகி நான் அஞ்சரைப்பொட்டியை திறந்தாலே கோபம் கோபம்ன்னு கூப்பாடு போடுறாங்க.அடுத்த அஞ்சறைப்பொட்டி கூல ஓப்பன் பண்ண டிரைப் பண்ணுகிறேன்.நன்றி மகி,

ஸாதிகா said...

ரொம்ப நாள் கழித்து வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தங்கச்சி மேனகா,

ஸாதிகா said...

இன்றைய காலகட்டத்தில் சூதாட்டத்தின் மறு பெயர்தான் வியாபாரம், ஏமாற்றுவதின் மறுபெயர்தான் வியாபார தந்திரம்.//

கரெக்டா சொல்லி இருக்கீங்க அக்பர்.

//வீல் சேர் குறித்த செய்தியை ஒரு புகாராக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பினால் நலம்.// என் தாயாருக்காக வீல் சேருக்கு அலைந்து வெறுத்துப்போய் மேனேஜரிடம் புகார் கொடுத்து விட்டுத்தான் வந்தேன்.ஆனால் நேற்று வரை இதே ரீதியில்தான் .என் உறவினர் கூட ரொம்ப சிரமப்பட்டு இனி ரயிலையே மறந்து விடவேண்டும் என்று வெறுப்புடன் சொன்னார்.நன்றி அக்பர் கருத்துக்கு,

ஸாதிகா said...

கருத்துக்கு வாழ்த்துக்கு மிக்க நன்றி ரமணி சார்.

கோமதி அரசு said...

அஞ்சறைப் பெட்டி, கோபம், கஷ்டம், பாராட்டு, அழுவாதா! சிரிப்பதா! என்ற பலசுவைகளுடன் மணக்கிறது ஸாதிகா.

குறையொன்றுமில்லை. said...

அஞ்சறைப்பெட்டித் தகவல்கள் யாவும் அருமையாக மணமாக உள்ளன.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஸாதிகா said...

கோபம், கஷ்டம், பாராட்டு, அழுவாதா! சிரிப்பதா! என்ற பலசுவைகளுடன் மணக்கிறது// ஆஹ..கோமதி அரசு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருத்தமான தலைப்பு வைத்துவிட்டீர்கள்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வாங்க லக்‌ஷ்மியம்மா.கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றியம்மா.

Unknown said...

அனைத்து தகவல் அருமை அக்கா.. தகவல் 1.. நானும் பல தடமை பார்த்திருக்கிறேன்.. இரயில்வே நிர்வாகம் கவனிப்பதாக தெரியவில்லை. தகவல்2... பனிப் பொழிவு கொஞ்ச நாள் குறைந்தது போல் இருந்துச்சு இப்ப அதிகம் ஆச்சு.. மகளை பள்ளிக்கு அனுப்புவதுக்குள் போது போதும் என்று ஆகிரதுதான்..சென்னை வாசிகள் மட்டும் அல்ல நாங்களும் தான் வெயிலுக்கு காத்துக்கொண்டுயிருக்கோம்

ராஜி said...

தகவல்கள்லாம் சூப்பர்

Asiya Omar said...

அஞ்சரைப் பெட்டி பகிர்வு வழக்கம் போல் அருமை.அந்த கடைசி நியூஸ் தான் உதைக்குது.ஆமாம் தோழி வணக்கம் சென்னை என்ற தலைப்பில் நீங்க பின்னி பெடல் எடுக்கலாம்.சென்னையைப் பற்றி அதிகம் பகிர்ந்து வருபவர்களுள் நீங்களும் ஒருவர்.ரீடர்ஸ் லிஸ்ட் தெரியாத்லால் என்னால் உங்க போஸ்டிங்கை உடன் அறிய முடியலை.

மனோ சாமிநாதன் said...

அஞ்சறைப்பெட்டியின் செய்திகள் அனைத்துமே அருமை!
எக்மோர் ஸ்டேஷனில் அதிக அளவில் வீல்சேர்கள் அவசியம் பற்றி எழுதியிருப்பது மிக அருமை!

ஹுஸைனம்மா said...

//வாய் விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை//

பத்திரிகைகளில் ராணுவ வீரரகள் உடபட வாய்விட்டு அழும்படங்கள் இருக்கும்போதே நினைத்தேன், ‘என்னடா, ஒரு சர்வாதிகாரிக்காக இப்படி அழுகிறார்களே’ என்று. இதான் விஷய்மா?? விவரமானவங்க!!
பாவம் அந்நாட்டினர்!! :-(((

ரயில் நிலையங்களில் வீல்சேர் பற்றிய செய்தி புதிது. முதியவர்களின் கஷ்டத்தை கண்டு உணர்ந்து, எழுதியிருக்கிறீர்கள். முடிந்தால் இந்திய ரயில்வே தளத்தில் கம்ப்ளெயிண்ட் பதியலாம். (போடற கல்லை போட்டால், வந்தாப் பழம், போனா கல்லு...) :-)))

காலையில பனி...பிள்ளைகளை விடுங்க.. என்னாலேயே ஏந்திரிக்க முடியல.... வூட்டுக்காரருக்கு சாப்பாடு செய்யணுமேன்னு வேற வழியில்லாம ஏந்திரிக்க வேண்டியிருக்கு.. ஹி..ஹி..

அக்கா, “சேல்ஸ், ஆஃபர், தள்ளுபடி” இந்த வார்த்தைகளின் அர்த்தமே “ஏமாற்று” என்பதுதான். அது தெரிஞ்சுமே, ஆடித் தள்ளுபடிக்குக் கூட்டத்தைப் பார்த்திருக்கீங்களா? யப்பா...

//இதே போல் அனைவரும் இருந்து விட்டால் //
அந்தக் குழந்தையைப் போல வேண்டாம், அட்லீஸ்ட், அவரவர் குப்பையை எடுத்துப் போட்டாலே போதுமே!!