
”ஏங்க..உங்கம்மாவுக்கு எத்தனைதான் படிச்சு படிச்சு சொன்னாலும் அறிவே இல்லையா?”
“.....”
“சின்னஞ்சிறு பொண்ணாட்டம் ஜோல்னாபையையும் தூக்கி தோலில் மாட்டிட்டு அதென்ன கடமை போல வாரத்துக்கு மூன்று முறை பொண்ணை பார்க்கப்போறது?”
“....”
“பொண்ணைப்பார்க்கப் போறதுமில்லாமல் மாசத்துக்கு வாங்கிப்போட்ட மளிகை சாமானை வேறு வழிச்சு துடைச்சுடுறா.”
“....”
“போன வாரம் பொண்ணுக்கு காரட் அல்வா செய்றேன்னு இருந்த சர்க்கரை எல்லாம் காலி.மாசக்கடைசியிலே நானல்ல ததுங்கிணிதோம் அடிச்சுக்கணும்”
“....”
“மருமவன்பிள்ளை ஓட்டல் வச்சி நடத்தறான்.தினமும் வக்கனையா வாய்க்கு ருசியா வகை வகையா சாப்பாடு கொண்டு வந்து தருவான்னு தான் உங்கம்மா நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு பொண்ணு வீட்டுக்கு போறாங்க.இந்த வயசிலும் இத்தனை நாக்கு ருசிக்கு அலையக்கூடாது”
“....”
“பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம் இருக்கீங்களே..வாய் திறந்து ஏதாவது சொல்லுறீங்களா?”
“வைதேகி..என்னை என்ன பண்ணச்சொல்லுறே.வயசானவங்க.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க.இப்ப உனக்கு சர்க்கரைதானே வேணும்.ஆஃபீஸ் போய்ட்டு வர்ரச்சே ரெண்டு கிலோ வாங்கி வந்துடுறேன்.போதுமா”
“அதென்ன பொண்ணு வீடு கிட்டேவா இருக்கு.டிரைனில் போய் அங்கிருந்து பஸ் பிடித்து ஆவடி போறதுன்னா சும்மாவா?நம்ம வீட்டுக்குள்ளே கொஞ்ச நாழி இருந்தான்னா அங்கே வலிக்குது,இங்கே பிடிக்குதுன்னு எப்ப பாரு மாய்மாலம்.பொண்ணு வீடு போறதுன்னா ஜிங்கு ஜிங்குன்னு சின்ன பொண்ணு மாதிரி கிளம்பிடுறது”
விடாமல் தூற்றிக்கொண்டிருந்த மனைவியின் வாயால் சலிப்படைந்த சங்கர் எரிச்சல் மேலிட சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் கிளம்பினான்.
அவனுக்கு தன் தாய் மீதும் சற்று கோபம் வந்தது.அதென்ன ஒரு நாளில்லாமல் எப்பொழுதும் மகள் வீடு மகள் வீடு என்று அலைவது?வைதேகி சொல்லுவதிலும் சற்று நியாயம் உள்ளதுதானே?இருந்தாலும் நாக்கு ருசிக்காக தன் தாய் மகள் வீட்டுக்கு சென்று வருவதாக வைதேகி குறிப்பிட்டதை எண்ணி மிகவும் ரோஷப்பட்டான்.இங்கு கைக்குழந்தையுடன் வைதேகி தனியே கிடந்து அவஸ்தை படுவது எல்லாம் அம்மாவின் மனதை தைக்க வில்லை.மகள் இரட்டை குழந்தை பெற்று கஷ்டப்படுகிறாள் என்று அடிக்கடி இந்த வயதிலும் தனியாக அவ்வளவு தூரம் சென்று வருவது அவனது மனதினை உறுத்தியதுதான்.
ஆயிரம்தான் இருந்தாலும் அம்மாமார்களுக்கு மகள் வயிற்று பேரன் பேத்திகள் என்றால் தனிப்பிரியம்தான் போலும்.நினைக்கும் பொழுது மனதை சற்று வலித்தாலும் தாயை தட்டிக்கேட்கும் தைரியம் துளி கூட வரவில்லை சங்கருக்கு.
குழந்தையை தூளியில் போட்டு தூங்க செய்து கொண்டிருந்த வைதேகி அடுக்களையில் இருந்து வந்த ஏலக்காயின் மணம் நாசியை துளைக்க எட்டிப்பார்த்தாள்.
மாமியார் செண்பகம் அடுப்பில் வைத்து எதையோ கிளறிக்கொண்டிருந்தாள்.
“என்னத்தை பண்ணுறீங்க?”
“பூர்ணிமாவுக்கு பிடிக்கும்ன்னு கொஞ்சம் தேங்காய் பர்பி கிளற்றேன்.”
“போன வாரம் காரட் அல்வா பண்ணியதில் இருந்த சர்க்கரை எல்லாம் காலி.உங்கள் மகன் கிட்டே சொல்லி இன்னும் ரெண்டு கிலோ வாங்கச்சொன்னேன்.அதனையும் காலி பண்ணுறீங்களா”
வைதேகியின் குரலில் சூடு கிளம்பியது.
“என்ன நீ..பூர்ணிக்கு செய்வதை எல்லாம் கணக்கு பார்க்கிறே?ஒவ்வொருத்தி மாதிரி அந்த சீர்,இந்த சீர் என்று அண்ணன் கிட்டே வந்து நிக்கறாளா?”வெடுக்கென்று செண்பகத்திடம் இருந்து பதில் வந்தது.
“இந்த வயசிலேயும்,வேகாத வெயிலிலேயும் இப்படி மைலாப்பூருக்கும்,ஆவடிக்குமா அலையறீங்களே.தேவையா?”
“எது தேவை தேவை இல்லேன்னு எனக்கு தெரியும்.நீ மேலே பேசாதே”
திருமணமாகி நாண்கு வருடங்கள் ஆகியும் இந்த மாமியாரை வழிக்கு கொண்டு வர முடியவில்லையே.பக்கத்து வீட்டு பவானியின் மாமியார் பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டாளே?இவளை அடக்க முடிய வில்லையே?எல்லாம் இவர் கொடுக்கின்ற இடம்.பற்களை கடித்துக்கொண்டு நகர்ந்தாள்.
செல் போன் அடித்தது.வைதேகியின் அண்ணன்தான்.செங்கல்பட்டில் வசிக்கும் அவர்கள் குடும்பத்துடன் ஒரு வேலையாக சென்னை வந்திருப்பதாகவும் அங்கு வந்து இரவு சாப்பாட்டுக்கு மேல் டிரைனில் செங்கல் பட்டு திரும்பபோவதாகவும் போனில் தகவல் வந்தது.
‘இந்த நேரம் பார்த்து மாமியாரும் மகள் வீட்டுக்கு கிளம்பி விட்டதே.ஒருத்தியாக இருந்தல்லவா அத்தனை வேலையையும் பார்க்க வேண்டும்.’எண்ணம் மனதில் ஓடோடிக்கொண்டிருக்க கைகள் தனிச்சையாக சாம்பாருக்கும் பருப்பை குக்கரில் வைத்து விட்டு பிரிஜ்ஜை திறந்து ஸ்டோர் பண்ணி இருக்கும் காய்கறியையை ஆராய்ந்தது.
கேரட் சாலட்,பீன்ஸ் பொரியல் உருளைக்கிழங்கு பொடிமாஸுடன் நாலு அப்பளத்தையும் பொரித்தால் முடிந்தது வேலை.கடகடவென்று வேலையை ஆரம்பித்தாள் வைதேகி.
சாப்பிட்டு முடித்து அண்ணனுடன் பேசிகொண்டிருந்தாள்.
“இருந்தாலும் உன் மாமியாருக்கு இத்தனை அழுத்தம் ஆகாது.அதென்ன இங்கே இருக்கும் பேரன் பேத்திகளை கவனிப்பதை விட்டுட்டு மகள் வீடு மகள் வீடு என்று அலைவது.ஒட்ட நறுக்கி வை உன் மாமியாரை..இல்லேன்னா உனக்குத்தான் கஷ்டம்”
வைதேகியின் அண்ணி தூபம் போட அன்றிரவு மாமியார் மகள் வீட்டில் இருந்து திரும்பி வந்ததும் சண்டைக்கோழியாக சீறீனாள்.
என்றுமில்லாமல் வார்த்தைகள் தடித்து,குரல்களின் தொணி ஓங்கி சண்டை உச்சகட்டத்தில் செல்ல தொலைக்காட்சியில் இருந்த சங்கர் என்றுமில்லாமல் தாயின் மீது பாய்ந்தான்.
“அதென்னமா..ஒரு நாள் போல் இல்லாமல் எப்ப பாரு மகள் வீடு மகள் வீடு என்று அலைவது.இவளும் கைக்குழந்தையுடன் தனியா இருந்துதானே கஷ்டப்படுறாள்”
“என் குழந்தைகள் எல்லாம் உனக்கு பேரன் பேத்திகளா தெரியலியா?”
“உன் பொண்ணு வயிற்று பிள்ளைகளைமட்டும்தான் கவனிச்சுப்பியா?”
“இருந்தாலும் உனக்கு நன்றியே இல்லேம்மா”
இந்த வார்த்தைகள் போதாதா?செண்பகம் மூக்கை சிந்திக்கொண்டு படாரென்று கதவை அடித்து சாற்றிக்கொண்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
தாயின் மீது கணவன் காட்டிய கோபம் வைதேகிக்கு ஆறுதலைத்தந்தது.
என்ன சண்டையிட்டு என்ன செய்ய?சற்றேனும் பொருட்படுத்தாமல் ஒருநாள் விட்டு ஒரு நாள் அலுப்பு சலிப்பு இல்லாமல் மகள் வீடு செல்வதும் தவறவில்லை.மகனும் மருமகளும் அவ்வபொழுது சாடைமாடையாகவும் நேரடியாகவும் சண்டையிட்டு வருவதும் அந்த வீட்டின் வழக்கமாகிப்போனது.
அன்று..
மதிய சாப்பாட்டுக்கு பின் குட்டித்தூக்கத்தில் ஆழ்ந்தவள் காலிங் பெல் ஒலி கேட்டு எழுந்து கதவைதிறந்தாள் வைதேகி.
மாமியார்தான்.வழக்கம் போல் காலையில் மகள் வீட்டுக்கு சென்றால் இரவு வருவதற்கு ஏழு எட்டு மணியாகி விடும்.இன்று அதிசயமாக நாண்கு மணிக்கே வந்து நிற்கிறாளே?அதுவும் முகமெல்லாம் சோர்ந்து போய்,விழிகள் எல்லாம் சிவந்து போய்...
வெறுப்பில் எதுவும் கேட்கப்பிடிக்காமல் விடு விடுவென்று தன் அறையினுள் சென்று தூக்கத்தை தொடர்ந்தாள் வைதேகி.
சங்கர் ஆஃபீஸில் இருந்து திரும்பி டிபன் காபி சாப்பிட்டு முடித்து விளக்கு வைத்த பிறகும் செண்பகம் தன் அறையினுள் இருந்து இன்னும் வராததை அறிந்து சங்கர்தான் தாயின் அறையை நோக்கிப்போனான்.
அங்கே அவன் கண்ட காட்சி அதிர்ச்சியை தந்தது.செண்பகத்தின் கண்களில் இருந்தல் தாரை தாரையாக கண்ணீர்.அழுது அழுது சிவந்த விழிகளுடன் தன் தாய் இருந்த கோலம் சங்கரை பதறச்செய்தது.
“அம்மா என்னம்மா ஆச்சு?ஏன் அழுதுட்டு இருக்கே?”
சப்தம் கேட்டு வைதேகியும் உள்ளே நுழைந்தாள்.
“எனக்கு இந்த அவமானம் தேவையா?ரெட்டைக்குழந்தை பெற்று பொண்ணு தனிக்குடித்தனத்தில் கஷ்டப்படுறாளேன்னு பூரணி வீட்டுக்கு நீங்கள்ளாம் என்ன சொல்லியும் கேட்காமல் அவ்வளவுதூரம் என் வயசைக்கூட பார்க்காமல் போய் வந்தேனே.எனக்கு இதுவும் வேண்டும்,இன்னுமும் வேண்டும்”
“ஏம்மா என்ன ஆச்சு?”
“பூரணியோட மாமியார்க்காரி நான் அடிக்கடி அங்கே போய் வருவதை குறித்து அசிங்கமா பேசிட்டா என்னை?”
அங்கு நடந்தவைகளை அழுதபடி செண்பகம் விவரித்தபொழுது சங்கர் ஆத்திரப்பட்டான்.
“இதற்குத்தான் படிச்சு படிச்சு சொன்னேன்.கேட்டியா?பொண்ணு கஷ்டப்படுறா கஷ்டப்படுறான்னு புலம்பி தவித்தே.இப்ப அசிங்கப்பட்டு நிக்கறே.இதற்குத்தான் சொல்லுறது மகள் வீடானாலும் எல்லாம் லிமிட் தான்.லிமிட்டைத்தாண்டி போனதினாலே இப்ப இப்படி அவமானப்பட்டு அழறே.உனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்”
அருகில் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வைதேகி”என்னங்க..அவங்களே மனசொடிஞ்சி போய் இருக்காங்க.நீங்க வேற வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சறீங்களே..”கணவனை அதட்டினாள்.
“என்னான்னான்னு நினைத்துட்டு இருக்கா அந்த கண்டாங்கி சேலைக்காரி.உண்ணத்தின்ன வக்கிலாமலா நீங்க அங்கே போனீங்க?அள்ளிக்கொண்டுபோய் தட்டவல்லவா செய்தீங்க.நாக்கில் நரம்பில்லாமல் பேசிய அந்தபொம்பளையை நான் பக்கத்தில் இருந்தேன்னா என் அத்தையை நீ எப்படி அப்படி பேசப்போச்சுன்னு நாக்கை இழுத்து வச்சி அறுத்துடுவேன்.வரட்டும் ஒரு நாள் என்கிட்டே அந்த பொம்பளை மாட்டாமலா போய்டுவாள்.நம்ம குடும்பம் என்ன?அந்தஸ்து என்ன?தராதரம் இல்லாமல் என் அத்தையை பார்த்து பேசிய அந்த பொம்பளையை நினைச்சால் மனசெல்லாம் கொதிக்கறதே.வச்சிக்கறேன்.யாரைப்பார்த்து என்ன வார்த்தை பேசிட்டா அந்த பொம்பளை.அத்தே,நீங்க இதையே நினைச்சி உருகிட்டு இருக்காதீங்க அத்தே..எழுந்துக்குங்க..போய் முகம் அலம்பிட்டு வாங்க.சூடா கிச்சடி கிளறி வச்சிருக்கேன்.சாப்பிட்டுவிட்டு காபி குடிக்கலாம்.”
இதமாக பேசி கைகளை பிடித்து எழ உதவிய மருமகளின் கரத்தை பற்றிக்கொண்டு எழுந்த செண்பகத்திற்கு அந்த நொடி இதமாக இருந்தது.
Tweet |
56 comments:
ஹை... சிறு-கதை.
நல்லதொரு படிப்பினை தரும் கதை.
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ, அணைப்பில் அடங்குபவளும் அவளல்லவோ என்று கண்ணதாசன் சொன்னது போல, கொடுமைக்குள்ளாக்குவது, துன்பத்தில் ஆதரவளிப்பது எல்லாமே பெண்தான். அருமையான நடையில் கதை சொல்லியிருக்கிறீர்கள். தலைப்பு வைக்க மறந்து விட்டாயோ தங்காய்? ’சர்வம் சக்தி மயம்’ என்ற தலைப்பை நான் சிபாரிசு செய்கிறேன்.
அருமையான கதை
இன்றைய ஸ்பெஷல்
Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக
வாங்க சகோ நிஜாமுதீன்.உடன் கருத்துக்கு நன்றி!
கொடுமைக்குள்ளாக்குவது, துன்பத்தில் ஆதரவளிப்பது எல்லாமே பெண்தான். //மாந்தரை போற்றும் உங்களுக்கு ஒரு ஜே கணேஷ் அண்ணா.உங்கள் சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதற்கு மாமியார் என்று பெயரிட்டு இருந்தேன்.நீங்கள் வித்தியாசமான தலைப்பை தந்து விட்டீர்கள்.ராஜேஷ்குமாரின் நண்பரல்லவோ?
கருத்துக்கு மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா!
நல்லதொரு சுவாரஸ்யமான கதைக்கு பாராட்டுக்கள். vgk
இந்த வாரம் தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் தினமும் 4 சிறுக்தைக்ள் வீதம், வெளியிட்டு வருகிறேன். நேரமிருந்தால் வருகை தாருங்கள். அன்புடன் vgk
யதார்த்த நிலையை மிகச் சரியாகச் சொல்லிப்போகும்
அருமையான பதிவு
கதையெனச் சொல்ல மனம் வரவில்லை
நேரடி ஒளிபரப்பு மாதிரி அன்றாடம்
அனவரின் வீட்டிலும் நடப்பதை
நேரடிப் பதிவாகக் கொடுத்தது போல் உள்ளது
வாழ்த்துக்கள்
இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாயத்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ
கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.
**** ஆதாமின்டே மகன் அபு *****
.
Short story is very good and nice write-up.Well done Shadiqah Akka.
எதுவுமே ஒரு அளவோடு இருக்கனும் என்று சொல்வாங்க தெரியுமா?அது மாமியார் செண்பகத்திற்கு தெரியாமல் போய்விட்டதே!
பட்டால் தான் தெரியும்னு புரிய வச்சிட்டீங்க..
நல்ல கருத்துள்ள கதை.
ஹையோ இப்பத்தானே தலைப்பையே பார்க்கிறேன், நான் அங்கின நிண்டதில, இது கண்ணுக்குப் படேல்லை அவ்வ்வ்வ்வ்:)))... வடை சட்னி, பாயாசம், எல்லாமே போச்ச்ச்ச்...
நைட் வந்து படிக்கிறேன்...
அருமையான கதை .சிலருக்கு பட்டால்தான் புரியும் .
அருமையான நல்ல கதை....
அடடா நல்ல இன்ரஸ்ராகப் படித்தேன், எழுத்து நடை அழகாக இருக்கு. மகளின் மேல் கொண்ட பாசம் இப்படி ஆகிவிட்டது. ஆனாலும் மகளும் மருமகனும் தனிக்குடித்தனத்தில் இருப்பின், ஓக்கேதான்.
இது அங்கு மகளின் மாமி இருக்கும்போது, இவ ஓடி ஓடிப் போவது பிரச்சனையை உண்டு பண்ணிடும்தான்.
தாய் மனம் கேட்காதே.
நல்ல கதை. எதுக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்.
மரு-மகளையும் தன் மகளாக நினைக்கவேண்டும்.மாமியாரையும் தன் தாயாக நினைத்தால் குழப்பமேயில்லை.நல்ல குடும்பப்பாங்கான கதை.
நல்லதொரு கதை
mika arumaiyaana kathi . apparam vareen
நல்ல கதை ஸாதிகா. நடையும் அருமை.
சிந்திக்கவைத்த கருத்துள்ள கதை.
சிந்திக்க வைத்த சிறப்பான கதை.. பாராட்டுக்கள்
ஸாதிகா அக்காவைக் காணேல்லை...
ஸாதிகா அக்காவைக் காணேல்லை...
ஸாதிகா அக்காவைக் காணேல்லை...
ஸாதிகா அக்காவைக் காணேல்லை...
ஸாதிகா அக்காவைக் காணேல்லை...
ஸாதிகா அக்காவைக் காணேல்லை...:)))
அட அண்ணன் தலைப்புகொடுத்த தங்கையின் கதையை இப்பதான் படிச்சேன் நன்றாக இருக்கே சாதிகா! சாதிக்கபிறந்ததனால் இந்தப்பேரோ? வாழ்த்துகள் தங்கையே!
யதார்த்தமான நடைமுறைக்கு ஏத்த கதை. மிகவும் ரசித்தேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான கதை.பாராட்டுக்கள்
மிக்க நன்றி விஜிகே சார்.உங்கள் வலைப்பூ வந்து வாழ்த்தியும் விட்டேன்.மீண்டும் வாழ்த்துகக்ள்!
கதையெனச் சொல்ல மனம் வரவில்லை
நேரடி ஒளிபரப்பு மாதிரி அன்றாடம்
அனவரின் வீட்டிலும் நடப்பதை
நேரடிப் பதிவாகக் கொடுத்தது போல் உள்ளது///வரிகளில் மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.மறவாமல் வந்து தவறாது பின்னூட்டுவதற்கு மிக்க நன்றி!
MyKitchen Flavors-BonAppetit!மிக்க நன்றி சகோ
பட்டால் தான் தெரியும்னு புரிய வச்சிட்டீங்க..//மிக்க நன்றி தோழி ஆசியா.
மிக்க நன்றி ஏஞ்சலின்.
மிக்க நன்றி மேனகா.
நல்ல கதை. எதுக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்.//நல்ல தத்துவம்தான்.தொப்பி மப்ளர் கிளவுஸ் வாட்ச் எல்லாம் அணிந்து கொண்டு ஒரு லேடி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி வந்து இன்ஸ்டால்மெண்டில் பின்னூட்டும் பூஸுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ...
கருத்துக்கு மிக்க நன்றி விச்சு.
ராஜ் கருத்துக்கு மிக்க நன்றி!
அப்புறம் வர்ரேன் என்றுசொல்லிவிட்டு ஆளையே காணவில்லை ஜலி.கருத்துக்கு நன்றி.
கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி
கருத்திட்டமைக்கு நன்றி ஸ்டார்ஜன்.
மிக்க நன்றி பாயிஜா.
வாங்க ஷைலஜா அக்கா!முதல் வருகைக்கும் ,கருத்துக்கு மிக்க நன்றி.இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றிகள்.
கதையை படித்து ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கந்தசாமி சார்.
வ அலைக்கும் சலாம் ஆயிஷா.கருத்துக்கு நன்றி!
சூப்பர் கதை. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சும்மாவா சொன்னாங்க.
அருமையான கதை வாசித்தேன் பிடித்தது
சகோதரி
அருமையான படைப்புக்கு வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .....
நல்ல கதை ஸாதிகாக்கா! அனுபவித்துத் தெரிந்துகொள்ளும் பாடத்துக்குத்தான் தாக்கம் அதிகமாக இருக்கும். :)
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
இதற்காகத்தான் இருப்பதைவிட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே என்று சொன்னார்களோ?
பழமொழி உவமானத்துடன் பின்னூட்டியதற்கு நன்றி வான்ஸ்.
M.R said...
அருமையான கதை //மிக்க நன்றி சகோ.
அம்பாளடியாள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
வாழ்த்துக்கு நன்றி மாய உலகம் ராஜேஷ்.
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மகி.
கருத்துக்கு மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்!
அருமையான கதை.
சொல்லியவிதம் அருமை.
நன்றி கோமதிஅரசு.
Post a Comment