November 1, 2011

வளைகுடா நாட்டில் தமிழகம்,கேரளாவின் ஆதிக்கம்.

செல்வாக்கான இந்தியர்கள் என்பது அவர்களின் செல்வத்தைப் பொறுத்தது மட்டுமல்ல; அவர்களின் தொழிலின் தன்மை, தொழிலாளர் எண்ணிக்கை, அவர்களின் தயாரிப்புகள் சந்தையைப் பாதிக்கும் அளவு, அவர்களின் தனிப்பட்ட சமூக செல்வாக்குப் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இப்பட்டியலில் அமீரகத்தைச் சார்ந்தவர்கள் 6 நபர்கள் உள்ளனர். அது போல் கேரளாவைச் சார்ந்தவர்கள் நால்வரும் தமிழகத்தைச் சார்ந்ச்ர் மூவரும் உள்ளனர். இதோ அப்பட்டியல்:

1. யூசுப் அலி :


செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மிக்கி ஜக்தியானியைப் பின்னுக்கு தள்ளி விட்டு செல்வாக்கான இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள கேரளாவைச் சார்ந்த யூசுப் அலி இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர்.
EMKE குழுமத்தின் நிர்வாக இயக்குநராக வெற்றிகரமாக நடத்தி செல்கிறார். வலிமையான போட்டிகள் நிறைந்த சிறு வர்த்தக பிரிவில் வெற்றிகரமாக விளங்கும் லூலூ சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் இவரின் எம்கே குழுமத்தைச் சார்ந்தவையே.
அபுதாபியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இவரின் குழுமத்தில் 22,000 இந்தியர்கள் உள்ளிட்ட 27,000 நபர்கள் பணி புரிவதோடு 3.75 பில்லியன் டாலர் ஆண்டுதோறும் வர்த்தகம் நடக்கிறது. 2005ல் அபுதாபி சேம்பர் ஆஃப் காமர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
2. மிக்கி ஜக்தியானி :
.லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான மிக்கி ஜக்தியானி தான் வளைகுடாவின் பணக்கார இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சார்ந்த மிக்கி ஜக்தியானி 1973ல் முதல் ஸ்டோரை பஹ்ரைனில் தொடங்கினார். இன்றோ, துபாயை தலைமையிடமாக கொண்டு சிறுவர் பேஷன், காஸ்மெட்டிக்ஸ் என்றும் நியூ லுக், மேக்ஸ், செண்டர் பாயிண்ட், பேபி ஷாப், ஹோம் செண்டர் என்று பல பிராண்டுகளுடனும் பரந்து விரிந்து உள்ளது இவரின் வர்த்தக சாம்ராஜ்யம்.

3. சன்னி வர்கீஸ் :
கேரளாவை சார்ந்த சன்னி வர்கீஸால் 1980ல் ஒற்றை பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட Our Own High School இன்று உலகின் மிக பெரிய கல்வி குழுமங்களில் ஒன்றாக திகழ்கிறது. 11 நாடுகளில் 100 பள்ளிகளில் சுமார் 1 இலட்சம் மாணவர்கள் கிண்டர் கார்டனில் இருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.
தற்போது வளைகுடாவையும் தாண்டி ஆப்பிரிக்காவிலும் ஒரு பள்ளிகூடத்தை ஆரம்பித்துள்ளது வர்கீஸின் ஜெம்ஸ் குழுமம்.

4. சங்கர்
கடந்த மே 2010ல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியகிழக்கின் தலைமை நிர்வாகியாக சங்கரை ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கி நியமித்தது. மத்தியகிழக்கின் அவ்வங்கியின் மிகப்பெரும் பொறுப்பில் உள்ள சங்கர் இவ்வங்கியில் 2001 ல் சேர்வதற்கு முன் பேங்க் ஆப் அமெரிக்காவில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழகத்தைச் சார்ந்த சங்கர் புகழ் பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூரில் எம்.பி.ஏவும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் இளநிலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. முஹம்மது அலி
கேரளாவைச் சார்ந்தவரும் கல்பார் எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷ்ண்ஸ் நிறுவனருமான முஹம்மது அலி மிக வெற்றிகரமான தொழில் முனைவர் ஆவார். கட்டுமானம், எண்ணைய் மற்றும் இயற்கை வாயு என விரிந்து பரந்துள்ள இவரின் நிறுவனம் இன்றைய நிலையில் ஓமனின் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ஆகும்.
ஓமன் பெட்ரோலியம் அல்லயண்ஸின் நிறுவனரான முஹம்மது அலி தனது பிஎம் பவுண்டேஷன் மூலம் கேரளாவில் கல்வி உதவிகளையும் செய்து வருகிறார்


6. மகன்மால் பன்ஞ்சோலியா
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் சீன கார்கோ கப்பல் மூலம் கராச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு வந்து அங்குள்ள துறைமுகத்தில் சிறிய அளவில் பொருட்களை விற்றவர் இன்று அமீரக இந்திய தொழிலதிபர்களின் முகமாக விளங்குகிறார். 1957-லேயே மின்சாரத்தின் தேவையைத் தொலை நோக்காக கணிப்பிட்டு அமீரக அரசு, முறையாக மின்சார வாரியம் அமைக்கும் முன்னே ஜெனரேட்டர்கள் மூலம் துபாய் கிரீக் பகுதியில் உள்ள கடைகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்தார்.
சிறிய அளவில் படிப்படியாக முன்னேறியவர் இன்று அரேபியன் டிரேடிங் ஏஜென்ஸியின் தலைவர் ஆக உள்ளார். மேலும் துபாய் சேம்பர் ஆப் காமர்ஸ், அல் மக்தூம் மருத்துவமனை மற்றும் நேஷனல் பேங்க் ஆப் துபாய் உள்ளிட்டவற்றிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. சையது சலாஹுதீன்
அமீரகத்தில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சயமான பெயர் ETA. 1973 -ல் துபாயில் உள்ள அல் குரைரின் ஒத்துழைப்புடன் தமிழகத்தைச் சார்ந்த பி.எஸ். அப்துர் ரஹ்மானால் கட்டுமான நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஈ.டி.ஏ அஸ்கான் இன்று அமீரகத்தில் கட்டுமானம், லிப்ட், எலக்ட்ரோ மெக்கானிகல் சேவைகள், ஆடை, போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல்துறை நிறுவனமாக பரிணமிப்பதில் நிச்சயமாக ஈடிஏ ஸ்டார் நிர்வாக இயக்குநர் சலஷுத்தினுக்கு முக்கிய பங்குண்டு.
1.36 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்றியுள்ள இந்நிறுவனம் 21 நாடுகளில் உள்ளதோடு 75,000 பணியாளர்களையும் கொண்டுள்ள மிகப் பெரிய நிறுவனமாகும். தன் வர்த்தக திறன்களுக்காக மத்தியகிழக்கின் முன்னேற்றத்திற்குச் சிறந்த பங்காற்றிய ஆசியன் விருதைப் பெற்றவர் சலாஹுத்தின். மேலும் அவர் இந்திய முஸ்லீம் அஸோஷியனின் தலைவராகவும் உள்ளார்.
8. டாக்டர் திது மைனி
கத்தார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவின் தலைவராக விளங்கும் திது மைனி இதற்கு முன் லண்டனிலுள்ள இம்பீரியல் காலேஜில் பணியாற்றியவர் என்பதோடு பாதுகாப்பு, மிண்ணணுவியல், உற்பத்தி துறை, தொழில்நுட்ப நிறுவனங்களில் 30 வருட அனுபவம் கொண்டவர்.
மேலும் ஸ்கூலும்பெர்கர் நிறுவனத்தின் மூத்த துணை தலைவராகவும், சீமா குழுவின் நிர்வாக உறுப்பினராகவும், ஜீஈசி மார்கோனியின் துணை தலைவராகவும் ஜீஈசி சாப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக தலைவராகவும் இருந்தவர்.
9. பி.என்.சி.மேனன்
கேரளாவில் பிறந்த மேனன் 1976ல் ஓமனுக்குக் குடிபெயர்ந்து இண்டீரியர் டெக்கரேட்டிங் நிறுவனத்தை ஆரம்பித்தார். 1995ல் இந்தியாவில் ஷோபா டெவலப்பர்ஸை ஆரம்பித்து ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டி பறக்கிறார்.
35 வருடங்கள் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் அனுபவமுள்ள மேனன் சோபா டெவலப்பர்ஸ் மூலம் இது வரை 71 குடியிருப்பு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
10. சீத்தாராமன் :
கடந்த ஆண்டின் பட்டியலை விட 49 இடங்கள் முன்னேறியுள்ள தோஹா வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாகியான சீத்தாராமன் தமிழகத்தைச் சார்ந்தவர். எப்போதும் தனது அடையாளமான Bow tie எனப்படும் சிறு கழுத்துப் பட்டையுடன் காணப்படும் சீத்தாராமன் சுமார் 30 வருடங்கள் வங்கி, ஐடி மற்றும் நிர்வாக ஆலோசனை துறைகளில் அனுபவம் கொண்டவர்.
வங்கி துறையைத் தாண்டி புவி வெப்பமயமாகுதல் உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக கடந்த ஆண்டு சர்வதேச இந்தியன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்தவர். அது போல் பொருளாதார நெருக்கடியின் போது "இஸ்லாமிய வங்கியியலே தற்போதைய பிரச்னைகளுக்குத் தீர்வு" என்று கூறி சர்வதேச கவனத்தைக் கவர்ந்தவர்.
மெயிலில் வந்தது.படங்கள் மட்டும் கூகுள் உபயம்.

42 comments:

Menaga Sathia said...

தெரியாத தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி அக்கா!!

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா.நலமா...?
மிகவும் அருமையான பதிவு ஸாதிகா அக்கா... இதில் பாதி பேர் நமக்கு தெரிந்தவர் என்றாலும் மீதி பேரையும் நமக்கு அடையாளம் காட்டியுள்ளீர்கள்.
நான் முதன் முதலில் சலாஹுதீன்,யூசுப் அலி,சன்னி வர்கிஸ் இவர்களை பற்றி அறியும்போதெல்லாம் ஆச்சர்யம் கொண்டதுண்டு.எப்படி அயல் நாட்டில் இவ்வளவு பெரிய அளவில் இவர்களால் சாதிக்க முடிகின்றது? என்று.நம் நாட்டை சேர்ந்தவர்கள் என்ற வகையில் பெருமையும் அடைந்ததுண்டு.
நன்றி அக்கா.

அன்புடன்,
அப்சரா.

முற்றும் அறிந்த அதிரா said...

மீ த 1ஸ்ஸ்ட்டூஊஊஊ:)))

-தோழன் மபா, தமிழன் வீதி said...

வெளி நாடு வாழ் இந்தியர்கள் பல்வேறு தியாகங்களுக்கிடையே இந்த சாதனையைச் செய்திருக்கின்றனர்.
நமது இந்தியச் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் அவசியமான பதிவு.

வாழ்த்துக்கள்!.

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

என்ன சொல்றீங்க ஸாதிகா அக்கா? எனக்கு ஒண்ணுமே பிரியல்லே:))).

ஏதோ நல்லவிஷயம் சொல்லியிருக்கிறீங்க என்று மட்டும் தெரியுது.

ஊ.கு:
இங்கு அப்ஷராவைப் பார்த்ததும்தான் நினைவு வருது, நான் இன்னும் அப்ஷரா வீட்டுக்குப் போகல்லே... மீ எஸ்ஸ்ஸ்சூஉ அங்கின:)))

MyKitchen Flavors-BonAppetit!. said...

Thanks for the info Shadiqah akka,Nice to know

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மேனகா.

ஸாதிகா said...

அலைக்கும்சலாம் அப்சரா?நான் நலம் அல்ஹம்துலில்லாஹ்.நீங்கள் நலமா?ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கீங்க.கருத்திட்டமைக்கு நன்றி.

ஸாதிகா said...

என்ன சொல்றீங்க ஸாதிகா அக்கா? எனக்கு ஒண்ணுமே பிரியல்லே:))).////ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?புரியலே?ஒரு கப் சூடா டீ குடிச்சுட்டு பொறுமையா படியுங்கோ.புரியும்.ஒகே அதீஸ்?

ஸாதிகா said...

அதீஸ்..ஸாரி..நீங்க தேர்டூஊஊஊஊஊ

ஸாதிகா said...

தோழன் மபா, தமிழன் வீதி,கருத்திட்டமைக்கு நன்றி!

ஸாதிகா said...

MyKitchen Flavors-BonAppetit!.கருத்துக்கு நன்றி!

Angel said...

இதெல்லாம் தெரியாத தகவல்கள் இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன் .பகிர்வுக்கு நன்றி

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
கேரளாக்காரர்கள் உலகின் அனைத்து இடங்களிலும் உள்ளனர்.

தெரியாத விஷயங்களை நன்கு பகிர்ந்துள்ளீர்கள். மிகவும் பெருமையாக உள்ளது. பாராட்டுக்கள். vgk

K.s.s.Rajh said...

நல்லதொரு பதிவு...பகிர்வுக்கு நன்றி..பல தகவல்களை அறிந்து கொண்டேன்

Yaathoramani.blogspot.com said...

மனமகிழ்ச்சி தரும் தகவல்களைக் கொண்ட
அருமையான பதிவு
நாம் பெருமைப் பட்டுக் கொள்ளக்கூடிய தகவலை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

Asiya Omar said...

ஒரு சிலரைத்தவிர மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் புதிது..உங்கள் பதிவு நிறைய பொது விஷயங்களைத் தருவது நிறைவைத் தருகிறது..

ஸாதிகா said...

கேரளாக்காரர்கள் உலகின் அனைத்து இடங்களிலும் உள்ளனர்.//அதிலும் வளைகுடாவில் அதிகளவில் இருக்கின்றார்கள்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்ரி வி கே ஜி சார்.

பால கணேஷ் said...

நம்மவர்களைப் பற்றி எண்ணி நாம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். நல்ல விஷயங்களைத் தெரிந்து கொண்ட மனத்திருப்தியைத் தந்த பதிவு தங்காய். நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

// ஸாதிகா said...
கேரளாக்காரர்கள் உலகின் அனைத்து இடங்களிலும் உள்ளனர்.//அதிலும் வளைகுடாவில் அதிகளவில் இருக்கின்றார்கள்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வி கே ஜி சார்.//

ஆம். நான் 2004 ஆண்டு துபாயில் 45 நாட்கள் வந்து தங்கியிருந்தேன். அபுதாபியில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு கேரள மலையாளியை சந்தித்து 10 நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

”இந்த நாடும் தங்கள் வேலையும் தங்களுக்குப்பிடித்துள்ளதா” என நான் அவரைக் கேட்டபோது அவர் சொன்னார்:

“இங்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. மிகவும் சந்தோஷமாகவே உள்ளேன்.

நம் நாட்டில் அடிக்கடி நிகழும் அரசியல் ஊர்வலங்கள், பந்த், கடையடைப்பு, போராட்டங்கள், போக்குவரத்து பாதிப்புகள், மின்தடைகள் போன்ற எந்தவொரு தொல்லையும் இன்றி இங்கு நிம்மதியாக வேலைக்கு வந்து போகவும், திருப்தியுடன் வேலை பார்க்கவும், வேலைக்குத் தகுந்தபடி ஊதியம் சம்பாதிக்கவும், கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை சேமித்து குடும்பத்திற்கு அனுப்பவும், அங்கு என் குடும்பம் இந்தப்பணத்தால் ஓரளவுக்கு வசதி வாய்ப்புக்களுடன் வாழவும் முடிகிறது” என்றார்.

கேட்க சந்தோஷமாக இருந்தது. இருப்பினும் இவர்களைப்போன்ற பலரும் குடும்பத்தைப் பிரிந்து வாழ வேண்டியதாக உள்ளதே என்ற ஒரு சிறிய வருத்தமும் ஏற்பட்டது.

ஓரளவு நல்ல வருமானம் ஈட்டுபவர்கள் மட்டும், அங்கு குடும்பத்தை [மனைவி+குழந்தைகள்]அழைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிந்து கொண்டேன்.

vgk

MANO நாஞ்சில் மனோ said...

இங்கே பஹ்ரைனிலும் அதுபோல இந்தியர்கள் இருக்கிறார்கள், இருந்தாலும் உங்கள் தகவல் எனக்கு புதிதாக இருக்கிறது நன்றி ஸாதிகா...!!!!

vanathy said...

சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

கே எஸ் எஸ் ராஜ் மிக்க நன்றி கருத்திட்டமைக்கு.

ஸாதிகா said...

மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

மிக்க நன்றி தோழி ஆசியா

ஸாதிகா said...

நம்மவர்களைப் பற்றி எண்ணி நாம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்..//உண்மைதான் சகோ கணேஷ்.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

அனுபவத்தில் கேட்டதை வெகு அழகாக பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்துள்ளீர்கள் விகேஜி சார்.மிக்க மகிழ்ச்சி.நன்றி!

ஸாதிகா said...

இங்கே பஹ்ரைனிலும் அதுபோல இந்தியர்கள் இருக்கிறார்கள்//நீங்களும் இது பற்றி ஒரு கட்டுரையையை எழுதி விட வேண்டியதுதானே மனோ சார்.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

மிக்க நன்றி வானதி.

M.R said...

அருமையான தொகுப்பு ,அறியாத்தகவலுடன் அறியத் தந்தமைக்கு
நன்றி சகோ

குறையொன்றுமில்லை. said...

இதுவரை தெரியாத விஷயங்கள் தெரிந்துகொள்ள உதவிய பதிவுக்கு நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

//அதீஸ்..ஸாரி..நீங்க தேர்டூஊஊஊஊஊ//

karrrrrrrrrrrrrrrrr:))) ஒரு ரீ குடிச்சிட்டு வாறதுக்குள்ள தேர்ட்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆ?...

இசையும் கதையும் பாதிஎழுதியிருப்பீங்களென நினைக்கிறேன்:))).... ஒரு நீ குடிச்சிட்டுத் தொடருங்க ஸாதிகா அக்கா:)))....

ஓரம்போ....ஓரம்போ... ஸாதிகா அக்காவின் இசையும் கதையும் வருது... ஓடிவாங்கோ... வந்து பின்னூட்டம் போடுங்கோ....ங்கோ...ங்கோ:)))))

ஸாதிகா said...

எம் ஆர் கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

லக்ஷ்மிம்மா,கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

இசையும் கதையும் பாதிஎழுதியிருப்பீங்களென நினைக்கிறேன்:))).... ஒரு நீ குடிச்சிட்டுத் தொடருங்க ஸாதிகா அக்கா:)))....//டீ குடிச்சுட்டு உங்களுக்கு மெயில் போட்டு இருக்கேன் .பாருங்கோ பூஸ்.

Thenammai Lakshmanan said...

மிக அருமையான அழகான தொகுப்பு ஸாதிகா..:)

ஸாதிகா said...

நன்றி தேனம்மை!

ஸாதிகா said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி !

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

Jaleela Kamal said...

சிலர் தான் தெரிந்தவர்கள்.
பல முகம் பற்றி சூப்பாரா பகிர்ந்து இருகீஇங்க.


அதிரா அப்சாரா வீட்டுக்கு போயாச்சு அங்கிருந்து கதைக்கினம்...

ஹுஸைனம்மா said...

அக்கா, வளைகுடாவில் இருந்தாலும், இதில் சிலரையே அறிந்திருக்கிறேன். புதிய தகவலுக்கு நன்றி.

EMKE யூஸுஃப் அலி, வளைகுடா போர் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் எல்லாரும் கடைகளை அடைத்து வெளியேறிக் கொண்டிருக்கும்போது, இவர் புதிதாகக் கடைகள் தொடங்கினாராம்!! அவ்வளவு நம்பிக்கை!! தற்போது இவரது மகள் உணவகங்கள் நடத்தி வருகீறார்.

இடிஏவின் நிறுவனர் பி.எஸ்.ஏ. தற்போது எப்படி இருக்கிறார் என்ற தகவல் ஏதும் தெரியுமா? பல ஆயிரம் குடும்பங்களுக்கு வழிகாட்டியாக இருந்த வள்ளல் அவர். எளிமையானவர், பகட்டு இல்லாதவர்.

சன்னி வர்கீஸ், தன் தாயாரால் தொடங்கப்பட்ட பள்ளியைத்தான் தொடர்ந்து அவர் நிர்வகித்தார் என்று நினைத்திருந்தேன். சன்னிதான் தொடங்கினாரா? புதிய தகவல். பள்ளித் தரத்தைப் பெருமளவு மேம்படுத்தினாலும், அவரது நவீனப் பள்ளிகளில் கட்டணங்கள் மிக மிக அதிகம்.

திரு.சீத்தாராமனின் இஸ்லாமிய வங்கியியலுக்கான பரிந்துரையும் புதிய தகவல்.