October 10, 2011

சாம்பிராணி


செந்நெருப்பு கனலில் இட்டால்
நாசி நிறைக்கும் நறுமணமும்
விழி சுருக்கும் புகை மண்டலமும்
கண்டு மனம் உவகை கொள்ளும்

பக்திமணம் கமழும் பொழுது
பவ்யமாய் உனை ஏற்றி
பரவசமாய் கண்மூடி
பாங்காக வணங்குகின்றர்.

வீட்டில் கொசுதொல்லை கண்டால்
சகித்துக்கொள்ள முடியாமல்
சலிக்காமல் தீயிலிட்டு
புகை காட்டி பலன் பெறுவர்.

அம்மா மீன் வறுக்கையில்
உவ்வே என்று சப்தம் போட்டால்
உடனே உன்னைத் தேடி
ஓடோடி வருகின்றனர்.

நீராடி முடித்து விட்டு
கச்சிதமாய் உனைக்காட்டி
கார்கூந்தல் மணமணக்க
உன் உதவி வேண்டுமென்பர்

சாமி அறையினுள்ளும் நீ
வரவேற்பறையிலும் நீ
சமையலறையிலும் நீ
சர்வ இடத்திலும் நீ

உன்னை புகைய விட்டு
கடை கடையாய் ஏறி இறங்கி
சல்லிசாய் காசு பார்த்து
காலத்தை கழிக்கின்றர்

பண்டிகை, நல்ல நாளென்றால்
மளிகைக்கடை பட்டியலில்
தவறாது இடம் பெற்று
முன்னணியில் நின்றிடுவாய்

இத்தனை முக்கியத்துவம்
உனக்கிங்கே இருந்தாலும்
மக்கு மட மாந்தர்களை
உன் பெயரில் அழைப்பது ஏன்?


64 comments:

Mahi said...

/இத்தனை முக்கியத்துவம்உனக்கிங்கே இருந்தாலும்மக்கு மட மாந்தர்களைஉன் பேரில் அழைப்பது ஏன்!/ அதானே? :)))))))

சூப்பர் ஸாதிகாக்கா!

ஸாதிகா said...

மகி ஓடோடி வந்து உடன் பின்னூட்டியதற்கு நன்றி.ஆல் அவுட் எலக்ட்ராணிக் கொசு வத்தி எரிந்தாலும் கொசுத் தொல்லை தாங்க முடியாமல் இந்த அர்த்த ராத்திரியில் சற்று முன் சாம்பிராணி ஏற்றி வைத்து விட்டு அது கக்கும் டிஸைன் டிஸைன் புகையை ரசித்துக்கொண்டிருக்கையில் சடாரென்று உதயமானது இந்த கவிதை.

Asiya Omar said...

//இத்தனை முக்கியத்துவம்உனக்கிங்கே இருந்தாலும்மக்கு மட மாந்தர்களைஉன் பேரில் அழைப்பது ஏன்!/ அதானே? :)))))))//

அட இனி யாராவது மக்கு மடசாம்பிராணின்னு சொன்னால் சிரித்துக்கொள்ள வேண்டியது தான்.

மௌலூது,பாத்திஹாவெல்லாம் ஓதும் பொழுது வீட்டில் சாம்பிராணி போடும் பொழுது அன்றைக்கு சாப்பாட்டு மணத்தோடு போட்டி போட்டு கொண்டு சாம்பிராணி மணப்பது தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

ஸாதிகா said...

//இத்தனை முக்கியத்துவம்உனக்கிங்கே இருந்தாலும்மக்கு மட மாந்தர்களைஉன் பேரில் அழைப்பது ஏன்!/ அதானே? :)))))))//


இதற்கும் ஒரு காரணம் இருக்கும்.தெரிந்தவர்கள் பின்னூட்டுவார்களா என்று பார்ப்போம்.மிக்க நன்றி ஆசியா தோழி.

Unknown said...

பற்றவைப்பது மிகக் கடினம் என்பதால் சாம்பிராணி.

ஸாதிகா said...

தகவலுக்கு மிக்க நன்றி கலாநேசன்.

தலை மறைவான அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... மகிக்குக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வட போச்சே ஸாதிகா அக்கா....:((((

தலை மறைவான அதிரா said...

இத்தனை முக்கியத்துவம்
உனக்கிங்கே இருந்தாலும்
மக்கு மட மாந்தர்களை
உன் பேரில் அழைப்பது ஏன்!
///

ஹா..ஹா..ஹா... நல்ல கேள்விதான்...:))

“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”... இனி ஆரும் சாம்பிராணி என்றால்... நல்ல அறிவாளி, உழைப்பாளி என எடுத்துக்கொள்ளுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

தலை மறைவான அதிரா said...

//இந்த அர்த்த ராத்திரியில் சற்று முன் சாம்பிராணி ஏற்றி வைத்து விட்டு //

ஸாதிகா அக்காஆஆஆஆஆஆஆ?:))) என்ன ஆச்சு?:))) ஆ யூஊஊஊஊ ஓக்கை?:))))).

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆஹா...சாம்ப்ராணியில் ஒரு கவிதை .அருமை.

எப்படி இப்புடி தோணிச்சு.

இந்த கவிதைக்கு காரணம் கொசு. ஹி ஹி

Starjan (ஸ்டார்ஜன்) said...

சாம்பிராணிக்கும் கவிதை எழுதி அசத்திட்டீங்க அக்கா.

//கலாநேசன் said...

பற்றவைப்பது மிகக் கடினம் என்பதால் சாம்பிராணி.//

கலாநேசன் சொன்னமாதிரி ஒருவருக்கு ஒரு விசயத்தை புரியவைக்க நேரமாகுமாதலால் மட சாம்பிராணி என்று சொல்வார்களோ?.. :))

ஸாதிகா said...

அதீஸ் வடை மகிக்கு,சாம்பிராணி உங்களுக்கு.ஒக்கை?

ஸாதிகா said...

//இனி ஆரும் சாம்பிராணி என்றால்... நல்ல அறிவாளி, உழைப்பாளி என எடுத்துக்கொள்ளுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:))).//ஹா..ஹா..ஹா..

ஸாதிகா அக்காஆஆஆஆஆஆஆ?:))) என்ன ஆச்சு?:))) ஆ யூஊஊஊஊ ஓக்கை?:))))).
//
மகியின் பின்னூட்டத்திற்கு நானிட்ட பதில் கமெண்ட்டை பார்க்கவில்லையா?

நன்றி அதீஸ்.

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.//இந்த கவிதைக்கு காரணம் கொசு. ஹி ஹி//கொசுவேதான்.நன்றி ஆயிஷா.

ஸாதிகா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சாம்பிராணிக்கும் கவிதை எழுதி அசத்திட்டீங்க அக்கா. //
கருத்துக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

தலை மறைவான அதிரா said...

//ஸாதிகா said...
அதீஸ் வடை மகிக்கு,சாம்பிராணி உங்களுக்கு.ஒக்கை//

டபிள் ஓக்கை.. தாறதை வாணாம் எண்டு சொல்லமாட்டனே அவ்வ்வ்வ்:)).

//மகியின் பின்னூட்டத்திற்கு நானிட்ட பதில் கமெண்ட்டை பார்க்கவில்லையா?
//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அந்தப் பின்னூட்டத்துக்குத்தான் பின்னூட்டினேன்:)), சாமத்தில எல்லாம் சாம்பிராஆஆஆஆஆஆணி ஏத்துறீங்க அதுதான் அவ்வ்வ்வ்வ்:))))).

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இத்தனை முக்கியத்துவம்
உனக்கிங்கே இருந்தாலும்
மக்கு மட மாந்தர்களை
உன் பேரில் அழைப்பது ஏன்!//


தன்னையே தீயிலிட்டு பொசுக்குபவர்களுக்கும், தன்னையே அழித்துக்கொண்டும். வருத்திக்கொண்டும். சுயநலம் இன்றி, பிறர் நலம் பேணி, நறுமணம் கொடுத்து வரும், பிழைக்கத்தெரியாத பொருள் என்பதால். மட சாம்பிராணி என்று அழைக்கப்படுகிறதோ!

எப்படியிருந்தாலும் கவிதையில் சாம்பிராணியின் நறுமணம் கமழ்ந்து மனதை மயக்குது. பாராட்டுக்கள். vgk

MyKitchen Flavors-BonAppetit!. said...

Very nice Kavithai Sadhika. Sambirani-i qn ketkireerkal .Pathil kidaithatha?.

ஸாதிகா said...

// சாமத்தில எல்லாம் சாம்பிராஆஆஆஆஆஆணி ஏத்துறீங்க அதுதான் அவ்வ்வ்வ்வ்:))))).//
அதீஸ் சாமத்திலேதானே கொசு வரும்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

ஸாதிகா said...

வி ஜி கே சார் உங்கள் பின்னூட்டமும் சாம்பிராணி போல் கமகமக்கின்றது.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

MyKitchen Flavors-BonAppetit கருத்துக்கு நன்றி.சகோ கலாநேசனின் பின்னூட்டத்தைப்பாருங்கள்.

குறையொன்றுமில்லை. said...

சாம்பிராணிக்காக ஒரு கவிதையா நல்லாவே சொல்லி இருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

ஹி.. ஹி.. நானும் ‘அந்த’ வார்த்தையை அடிக்கடி சொல்வதுண்டு, காரணம் தெரியாமல்தான். அந்த அரிய வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள உதவிய (உங்களைக் கடிச்ச) கொசுவுக்கு நன்றி!! :-)))))

//அது கக்கும் டிஸைன் டிஸைன் புகையை ரசித்துக் கொண்டிருக்கையில் சடாரென்று உதயமானது//
நியாயமாப் பாத்தா, சொசுவத்திப் புகையில உங்களுக்குக் கொசுவத்திதான் சுத்திருக்கணும். ஆனா கவிதை புனைஞ்சிட்டீங்க. சரி, சரி ரெண்டுமே கற்பனை, கதை வகைகள்தானே!! :-))))))))))

பால கணேஷ் said...

சாம்பிராணிப் புகையைப் பார்த்தால் உங்களுக்கு நல்ல கவிதை வருகிறது. கவிதையைப் படித்து ரசிக்க மட்டுமே முடிகிற எனக்கு... புகை வருகிறது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிஸ்டர்!

Kanchana Radhakrishnan said...

நல்ல கவிதை.

Kanchana Radhakrishnan said...

பொதுவாக சாம்பிராணி என்பது ஜாவா,சுமித்ரா போன்ற பிரதேசங்களில் வளரும் ஒருவகை மரத்தின் பால்.
அதேபோல் சிங்களம்,கேரளா போன்ற இடங்களில் ப்யிராகும் ஒருவகை மரத்தின் பால் மட்டிப் பால் எனப்படும்.
'மட்டிப்பால் சாம்பிராணி' என்பது நாளடவில் மருவி 'மட சாம்பிராணி' என ஆகிவிட்டது.அவ்வளவுதான்.

ஸாதிகா said...

//சாம்பிராணிக்காக ஒரு கவிதையா நல்லாவே சொல்லி இருக்கீங்க.//கருத்துக்கு நன்றி லக்ஷ்மிம்மா.

ஸாதிகா said...

// கணேஷ் said...
சாம்பிராணிப் புகையைப் பார்த்தால் உங்களுக்கு நல்ல கவிதை வருகிறது. கவிதையைப் படித்து ரசிக்க மட்டுமே முடிகிற எனக்கு... புகை வருகிறது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிஸ்டர்!//

என்ன பிரதர் இப்படி சொல்லிட்டிங்க.பின்னூட்டத்தையே கவிதையாக்கி அசத்திட்டீங்களே.நன்றி பின்னுட்டலுக்கு.

ஸாதிகா said...

//ஒருவகை மரத்தின் பால் மட்டிப் பால் எனப்படும்.
'மட்டிப்பால் சாம்பிராணி' என்பது நாளடவில் மருவி 'மட சாம்பிராணி' என ஆகிவிட்டது.அவ்வளவுதான்.//

இதற்கான காரணத்தை தெரிந்தவர்கள் பின்னூட்டுவார்கள் என்றிருந்தேன்.தகவல்களாக வந்து சேருகின்றது.நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன் தகவலுக்கும்,கருத்துக்கும்.

கோமதி அரசு said...

இத்தனை முக்கியத்துவம்
உனக்கிங்கே இருந்தாலும்
மக்கு மட மாந்தர்களை
உன் பேரில் அழைப்பது ஏன்!//

அது தானே ஏன் அப்படி சொன்னார்கள்!

என் கணவர் அளித்த விளக்கம் இது:
மடத்தில் நிறைய சாம்பிராணி கட்டிகளை மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து இருப்பார்களாம் காலபோக்கில் அது பற்ற வைக்கமுடியாமல் போய் விடுமாம்.

அது போல தம் முளையை பயன் படுத்தாமல் இருப்பவர்களை மடத்து சாம்பிராணியுடன் ஒப்பிடுவார்கள் போலும் இது என் விளக்கம்.

கோமதி அரசு said...

அறிவில் மூன்று வகையை குறிப்பிடும்
போது கற்பூரம்,கரிதுண்டு, வாழைமட்டையை குறிப்பிடுவார்கள் பெரியவர்கள்.

கற்பூரம் உடனே புரிந்து கொள்ளும் ஆற்றலை குறிப்பிடும்.

கரிதுண்டு கொஞ்சம் கொஞ்மாய் பற்றும் மெள்ள புரிந்து ஆற்றலை குறிப்பிடும்.

வாழைமட்டை என்ன செய்தாலும் பற்றிக் கொள்ளாது. (பட்டினத்தாரை தவிர யாரும் பற்ற வைக்க முடியாது)
புரிந்து கொள்ள முடியாத அறிவற்ற தன்மையை குறிப்பிடும்.

அது போல தான் மடசாம்பிராணி (மடத்து சாம்பிராணி)எளிதில் பற்ற வைக்க முடியாததால் அப்படி குறிப்பிட்டு உள்ளார்கள் பெரியவர்கள்.

கோமதி அரசு said...

ஸாதிகா, கவிதை அருமை. அதை குறிப்பிடாமல் வேறு விளக்கங்கள் அளித்து கொண்டு இருக்கிறேன்.
சடாரென்று உதயமாவது எவ்வளவு பெரிய திறமை!

வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா மடசாம்பிரானின்னு யாராவது சொல்லட்டும் இருக்கு...!!!

Menaga Sathia said...

ஆஹா சாம்பிராணி கவிதை சூப்பர்ர்ர்ர்!!

Unknown said...

சகோதரி!
நல்ல கருத்துக்களைக்
கவிதை யாக்கி முடிவில் வைத்த
கேள்வியே தங்கள் திறமைக்குச்
சான்றாகும்
எதையுமே மற்றவர் பார்ப்பதற்கும் கவிஞர்கள் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு

புலவர் சா இராமாநுசம்

GEETHA ACHAL said...

கலக்குறிங்க...சாம்பிராணி ஏற்றி வைத்துவிட்டு கவிதையா...கலக்குறிங்க...

ரொம்ப ரொம்ப சூப்பர்ப்...

vanathy said...

நல்ல கவிதை, அக்கா. நான் யாரையோ திட்டுறீங்க போலன்னு நினைச்சு வந்தேன் ஹிஹி

ஸாதிகா said...

மடத்தில் நிறைய சாம்பிராணி கட்டிகளை மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து இருப்பார்களாம் காலபோக்கில் அது பற்ற வைக்கமுடியாமல் போய் விடுமாம்.

அது போல தம் முளையை பயன் படுத்தாமல் இருப்பவர்களை மடத்து சாம்பிராணியுடன் ஒப்பிடுவார்கள் போலும் ///

அட அழகிய விளக்கமாக உள்ளதே.கோமதி தங்கள் பின்னூட்டம் மூலம் அறியாததை அறிந்துகொண்டேன்.நன்றி.

//வாழைமட்டை என்ன செய்தாலும் பற்றிக் கொள்ளாது. (பட்டினத்தாரை தவிர யாரும் பற்ற வைக்க முடியாது)
புரிந்து கொள்ள முடியாத அறிவற்ற தன்மையை குறிப்பிடும்.//

இந்த வாழை மட்டையைப்பற்றியும் எனக்குத்தெரியாது.அறிந்து கொள்ளுமாவலில் இருந்தேன்,என் விருப்பத்தை பூர்த்தி செய்து விட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி கோமதி அரசு.

ஸாதிகா said...

//மடசாம்பிரானின்னு யாராவது சொல்லட்டும் இருக்கு...!!!///ஹா ஹா ஹா மனோ சார்.நச் என்ற உங்கள் பின்னூட்ட வரிகள் சிரிக்க வைத்தன,நன்றி.

ஸாதிகா said...

மேனகா..சாம்பிராணி கவிதை பிடித்துப்போனதற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

சகோதரர் புலவர் சா இராமாநுசம் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.

//எதையுமே மற்றவர் பார்ப்பதற்கும் கவிஞர்கள் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு//

வரிகள் உற்சாகம் ஊட்டுபவையாக உள்ளது.மிக்க நன்றி.

ஸாதிகா said...

//கலக்குறிங்க...சாம்பிராணி ஏற்றி வைத்துவிட்டு கவிதையா...கலக்குறிங்க.//
ஆஹா பின்னூட்ட வரிகளிலேயே நீங்க கலக்கறீங்க கீதா ஆச்சல்.மிக்க நன்றி

ஸாதிகா said...

நான் யாரையோ திட்டுறீங்க போலன்னு நினைச்சு வந்தேன் ஹிஹி//

என்னம்மா வான்ஸ் இப்பூடி சொல்லிபுட்டீஹ?கருத்துக்கு நன்றி.

ஆமினா said...

சாம்பிராணி வச்சே ஒரு கவிதையா....

இப்ப தான் அக்கா தெரியுது மட சாம்ப்ராணின்னு ஏன் சொல்றாங்கன்னு :-)

அம்மா வாரமொரு முறை வீட்டில் போடுவாங்க. எனக்கு தான் அதில் விருப்பமில்லை. ஆட்டோமெடிக் ஏர் பிரஷ்னர் இருக்க பயமேன்? :-)

ஸாதிகா said...

ஆயிரம் தான் ஏர்ஃபிரஷ்னர் இருதாலும் இயற்கையான சாம்பிராணியின் நறுமணத்திற்கு ஈடாகுமா? கருத்துக்கு நன்றி ஆமினா.

Yaathoramani.blogspot.com said...

மக்கு மட சாம்பிராணி என காதில் விழுந்த
ஒரு வார்த்தையை மிக அழகாக சிந்தித்து
அருமையான படைப்பைத் தந்துள்ளது
உண்மையில் பரவசமூட்டுகிறது
சிந்தனைச் செறிவு எனவும் சொல்லலாம்
வல்லவன் கையில் புல்லும் ஆயுதமெனவும் சொல்லலாம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

சாம்ராணியவைத்தும் ஒரு தீடீர் கவிதையா ஆஹா சூப்ப்பர் ஸாதிகா அக்கா
மட சாம்ராணின்னு திட்டுவதை கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் இங்கு எல்ல்லாத்துக்கும் விளக்கம் தெரிந்து கொண்டேன்.

Jaleela Kamal said...

நானும் மீன் சமைததால் கண்டிப்பாக இந்த சாம்ராணி கொசுவர்த்தி எல்லாம் வைப்பதுண்டு

Jaleela Kamal said...

இப்படி தீடீருன்னு ராத்திரில யோசித்து பதிவ போட்டா நாங்க எல்லாம் வருவதற்குள் பூஸார் முந்தி கொண்டு வந்துடுரார்.

கடைசியில நான் பின்னோட்டத்துக்கு கடைசி பென்சாகி போறேன்

நட்புடன் ஜமால் said...

கடைசி வரி செம பன்ச்

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

Thenammai Lakshmanan said...

அட .. சாம்பிராணி பத்தி கூட கவிதையா கலக்குறீங்க ஸாதிகா..:)

இமா க்றிஸ் said...

அழகாக ஒரு கவிதை; அதில் ஒரு கேள்வி.
ஒவ்வொருவர் கருத்தையும் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு படிக்கிறேன் ;)

ஸாதிகா said...

//உண்மையில் பரவசமூட்டுகிறது
சிந்தனைச் செறிவு எனவும் சொல்லலாம்
வல்லவன் கையில் புல்லும் ஆயுதமெனவும் சொல்லலாம்//ரமணி சார் இந்த புகழாரத்திற்கு தகுதி பெற்றவளா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.நீங்கள் தரும் கருத்தை ஊக்கமாக எடுத்து இன்னும் என் சிந்தனையை படர விட முயலுகின்றேன்.தங்கள் கருத்துக்கும்,ஊக்குவித்தலுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

ஸாதிகா said...

இந்த கவிதை எழுதுமுன் மடசாம்பிராணை என்ற வாரத்தயை பிரயோகித்தாலும் அர்த்தம் தெரியாமல்,புரியாமல்த்தான் உபயோகித்து வந்தேன்.கவிதையிலேயே கஏவி கேட்கவும் வந்த விளக்கங்கள நம்மை தெளிவைடைய வைத்து விட்டது உண்மைதான் ஜலி.கருத்துக்கு மிக்க நன்றி ஜலி.

ஸாதிகா said...

கடைசி வரி செம பன்ச்/////மிக்க நன்றி சகோ ஜமால்.

ஸாதிகா said...

வாங்க துபாய்ராஜா.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஆறுவருடத்திற்கும் மேலாக எழுதி வரும் தாங்கள் வலைஉலகிற்கு மிகவும் பரிச்சயம்.தொடர்ந்து தங்கள் ஆக்கங்கள் வெளிவரவேண்டும்.

ஸாதிகா said...

//அட .. சாம்பிராணி பத்தி கூட கவிதையா கலக்குறீங்க ஸாதிகா..:)//ஆஹா கவிதாயினியிடம் இருந்து வாழ்த்து .நன்றி தேனம்மை

ஸாதிகா said...

ஒவ்வொருவர் கருத்தையும் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு படிக்கிறேன் ;)/////நானும்தான் இமா.கருத்துக்கு நன்றி.

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

சாந்தி மாரியப்பன் said...

கமகமன்னு மணக்குது கவிதை..

அம்பாளடியாள் said...

அருமை!....அருமை !...அருமையான கேள்வி சகோ .இதைத் தெரியாமல்க் கேட்கின்றனரோ......!!!வாழ்த்துக்கள் சகோதரி அருமையான கவிதைப்
படைப்பிற்கு............................

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

Ranjani Narayanan said...

கவிதை கூட வருமா உங்களுக்கு? அருமையான கவிதை ஸாதிகா!
சாம்பிராணியின் அருமைபெருமைகளைச் சொல்லிவிட்டு கடைசியில் ஒரு கேள்வி கேட்டிங்களே, சூப்பர்!

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!