September 18, 2011

விட்டுக்கொடுத்தல்



”மீரா..ஆஃபீஸில் இருந்து வந்து பத்து நிமிஷமாகுது.இன்னுமா காபி ரெடியாகவில்லை”
சதீஷ் எரிந்து விழுந்தான்.

அவசர அவசரமாக காபி டபராவுடன் அடுக்களைக்குள் இருந்து வெளிபட்டாள்.’ஆஃபீஸில் இருந்து வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தால் காஃபி எப்படி ரெடியாகி இருக்கும்’மீராவுக்கு கேட்கத்தோன்றினாலும் சதீஷின் முகம் காட்டும் கோபத்தைக்கண்டு வாயைக்கட்டுப்படுத்திக்கொண்டாள்.

ஆஃபீஸில் உள்ள பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வந்து கோபத்தின் உச்சத்தில் கணவர் இருப்பது புரிந்தது.

“என்னை என்ன சர்க்கரை வியாதிக்காரன் என்றா நினைச்சே”கோபம் தலைக்கேற காபி டம்ளரை தூக்கி அடித்தவனை விக்கித்துபோய் பார்த்தாள் மீரா.அவசரத்தில்,கணவன் காபி கேட்டு பட படத்ததில் பதறிப்போய் காபிக்கு சர்க்கரையே போட மறந்து விட்டாள்.சதீஷோ சகிப்புத்தன்மையின்றி,பொறுமை இன்றி ஆர்ப்பாட்டம் செய்கின்றான்.கணவன் மனைவி உறவுகளுக்குள் இப்பாற் பட்ட சின்ன சின்ன பிரச்சினைகள்தான் பெரிய பிளவுக்கு வித்திடுகின்றது.

அலுவலகத்தில் பிரச்சினை,நண்பர்களால் தொந்தரவு,உறவுகளுக்குள் விரிசல்,கடன் தொல்லை,பணம் பற்றாக்குறை,தன் மீது கூறப்படும் புகார்கள்,உடல் நலத்தில் பிரச்சினை,பெற்ற பிள்ளைகளால் கவலை,சந்தேகம்,கவுரவத்துக்கு குந்தகம்,இப்படி மனம்,உடல்,பணம்,சூழல் சார்ந்த குழப்பங்கள்,பிரச்சினைகள் மனிதனை அண்டும் பொழுது மனித மனம் பாரம் மிகுந்து அதனால் சிந்திக்கும் தன்மையும்அற்றும்,உச்சகட்ட கோபமும்,மன அழுத்தமும் ஏற்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தாமல்,கட்டுப்படுத்த தெரியாமல்,கட்டுப்படுத்த விரும்பாமல் வெறுப்புகளை உறவுகளிடம்,நட்புக்களிடம் உமிழும் பொழுதுதான் பிரச்சினைகளை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றான் மனிதன்.

நட்புகுள்ளும்,உறவுக்குள்ளும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,சகிப்புத்தன்மை இன்றி இருந்தால் நாளடைவில் அது பெரும் விரிசல் ஏற்பட்டு பெரும் விபரீதத்தில் வந்து முடியும் வாய்ப்பே அதிகம்.
இதனால் மன அமைதி கெட்டு,நிம்மதி இழந்து நட்புக்களை,உறவுகளை இழந்து மனிதன் தனிமரமாகி விடும் வாய்ப்பும் அமைந்து விடும்.

தேவையற்ற சந்தேகங்கள்.கேள்விகள்,குற்றம் சுமத்துதல்.ஒருவரை மற்றவர் தூற்றுதல் போன்ற காரணிகளால் மனிதமனம் கருத்துவேறுபாடுகளுக்குட்படுகின்றது.கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பொழுது மன அழுத்தம் ஏற்படுகின்றது.மன அழுத்தத்தினாலேயே பெரும் பிரச்சினைகள்,குடும்ப விரிசல்கள்,விபரீதங்கள் போன்ற விரும்பத்தகா சூழ்நிலைகள் வாழ்க்கையில் ஏற்பட்டு வாழ்க்கையை சின்னாப்பின்னப்படுத்தி விடுகின்றது.

“நீங்கள் முன்னே போல் இல்லை”என்று பாசத்துடன் உங்கள் முன் விரல் நீட்டி கேட்கும் பொழுது,

“முன்பு போல் இப்ப அடிக்கடி வர்ரதே இல்லை”உரிமையுடன் உங்களிடம் கேள்வி கேட்க்கப்படும் பொழுதும்,

”என்ன முகத்தில் சிரிப்பைக்காணோம்.அடிக்கடி உம்மணாமூஞ்சாகி விடுகின்றீர்களே”என்று பாசத்துடன் உங்களிடம் வினா எழுப்பப்படும் பொழுதும்,

“இப்பல்லாம் உங்களை புரிந்து கொள்ளவே முடியவே இல்லை”என்று உங்களிடம் உள்ள அக்கரையில் கேட்கும் கேள்விகளின் பொழுதும்

“என்ன ஜி டாக்கில் எப்பவும் ஆஃப் லைனில் காட்டுறீங்க”என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பொழுதும்

விழித்துக்கொள்ளுங்கள்.கேள்விகேட்போரின் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவதை புரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுதே மனம் விட்டு பேசி சிக்கல்கள் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் சுமூக நிலை நிலவுவதற்கு வழிவகுங்கள்.

விட்டுக்கொடுத்தலும்,சகிப்புத்தன்மையும்,விரிசல் இல்லா உறவுகளும்,புரிதல் கொண்ட நட்புக்களும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.வாழ்கையை சுகப்படசெய்பவை.



60 comments:

ரிஷபன் said...

“இப்பல்லாம் உங்களை புரிந்து கொள்ளவே முடியவே இல்லை”என்று உங்களிடம் உள்ள அக்கரையில் கேட்கும் கேள்விகளின் பொழுதும்
விழித்துக்கொள்ளுங்கள்.கேள்விகேட்போரின் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவதை புரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுதே மனம் விட்டு பேசி சிக்கல்கள் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் சுமூக நிலை நிலவுவதற்கு வழிவகுங்கள்.

உண்மையான வார்த்தைகள். விட்டுக் கொடுக்கும் மனசு பறிபோனதால்தான் அமைதி குலைந்து மருத்துவரைத் தேடிப் போகிறோம்.
நம் நிம்மதி நம் கையில்தான் என்று உணர்ந்தால் என்றும் மலர்ச்சியே மனதில்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா விட்டுகொடுத்தல்
சரியா தலைப்பு எடுத்து எழுதி இருக்கீங்க

இப்ப யாருக்கும் விட்டுகொடுத்தல் என்பதே இல்லாமல் இருக்கு

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா விட்டுகொடுத்தல்
சரியா தலைப்பு எடுத்து எழுதி இருக்கீங்க

இப்ப யாருக்கும் விட்டுகொடுத்தல் என்பதே இல்லாமல் இருக்கு

Yaathoramani.blogspot.com said...

விழித்துக்கொள்ளுங்கள்.கேள்விகேட்போரின் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவதை புரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுதே மனம் விட்டு பேசி சிக்கல்கள் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் சுமூக நிலை நிலவுவதற்கு வழிவகுங்கள்.

மிகச் சரி நீங்கள் சொல்லுகிற மாதிரி
அதுதான் அன்னியோன்யத்தைப் பிரிக்கும்
லெட்சுமணக் கோடு
அதைப் புரிந்து கொண்டாலே சந்தோஷத்தின்
சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மாதிரிதான்
அற்புதமான பதிவு.தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

விட்டுக்கொடுத்தலும்,சகிப்புத்தன்மையும்,விரிசல் இல்லா உறவுகளும்,புரிதல் கொண்ட நட்புக்களும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.வாழ்கையை சுகப்படசெய்பவை.

ரொம்ப சரியா சொன்னீங்க.

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//அலுவலகத்தில் பிரச்சினை,நண்பர்களால் தொந்தரவு,உறவுகளுக்குள் விரிசல்,கடன் தொல்லை,பணம் பற்றாக்குறை,தன் மீது கூறப்படும் புகார்கள்,உடல் நலத்தில் பிரச்சினை,பெற்ற பிள்ளைகளால் கவலை,சந்தேகம்,கவுரவத்துக்கு குந்தகம்,இப்படி மனம்,உடல்,பணம்,சூழல் சார்ந்த குழப்பங்கள்,பிரச்சினைகள்//
ஒருத்தனுக்கு இவ்வளவு கஷ்ட்டம் ஆகாது :-((

ஸாதிகா said...

//விட்டுக் கொடுக்கும் மனசு பறிபோனதால்தான் அமைதி குலைந்து மருத்துவரைத் தேடிப் போகிறோம்.
நம் நிம்மதி நம் கையில்தான் என்று உணர்ந்தால் என்றும் மலர்ச்சியே மனதில்// நல்ல கருத்தை பின்னூட்டி இருக்கின்றீர்கள் ரிஷபன்.நன்றி.

ஸாதிகா said...

//இப்ப யாருக்கும் விட்டுகொடுத்தல் என்பதே இல்லாமல் இருக்கு// இந்த காலத்தில் இது ரொம்ப குறைவுதான் ஜலீலா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//லெட்சுமணக் கோடு
அதைப் புரிந்து கொண்டாலே சந்தோஷத்தின்
சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மாதிரிதான்// அழகாக சொல்லி இருக்கீங்க ரமணிசார்.நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் ஆமினா.//ஒருத்தனுக்கு இவ்வளவு கஷ்ட்டம் ஆகாது :-((//

மேற்கூறியவைகள் ஒருத்தனுக்குத்தான் என்று நான் சொல்ல வரவில்லை.ஆமினா.மன அழுத்தம் வரக்காரணிகள்தாம் அவை என்பதினைத்தான் சொல்லி இருந்தேன்.

Asiya Omar said...

சரியாச்சொன்னீங்க ஸாதிகா.இதற்கெல்லாம் காரணம் எதிர்பார்ப்பு தான்,எதையும் அதிகமாக எதிர்பார்க்கவில்லை என்றால் வாழ்க்கை சுமூகமாகச் செல்லும்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அருமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

சரியா சொல்லி இருக்கீங்கக்கா....இதற்கெல்லாம் எதிர்பார்ப்புதான் காரணம்....

ஸாதிகா said...

//எதிர்பார்ப்பு தான்,எதையும் அதிகமாக எதிர்பார்க்கவில்லை என்றால் வாழ்க்கை சுமூகமாகச் செல்லும்.// நல்ல கருத்து ஆசியா.நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

அம்பாளடியாள் said...

விழித்துக்கொள்ளுங்கள்.கேள்விகேட்போரின் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவதை புரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுதே மனம் விட்டு பேசி சிக்கல்கள் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் சுமூக நிலை நிலவுவதற்கு வழிவகுங்கள்.

உண்மைதான் தோழி சரியாகச் சொன்னீர்கள் எதையும் நன்கு புரிந்துகொண்டு நிலைமைக்குத் தக்கவாறு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இன்னிக்கும்.
மிக்க நன்றி அருமையான கருத்துப் பகிர்வுக்கு ..........

Ahamed irshad said...

சொல்லியிருக்கும் வித‌ம் ஏற்றுக்கொள்ற‌ மாதிரி இருப்ப‌து அருமைங்க‌.. ஏற்றுக்கொள்ள‌ வேண்டிய‌துதான்..



ஆஃபீஸில் உள்ள பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வந்து கோபத்தின் உச்சத்தில் //



ஆஃபீஸ் கோப‌த்தை நானும் வீட்டில் காட்டியிருக்கிறேன் நேரில் இல்லை இதுவ‌ரைக்கும்(த‌ப்பிச்சிட்டோம்டா. :) ) #போனில்..

நட்புடன் ஜமால் said...

விட்டுக்கொடுக்கவே கூடாதுங்க விட்டுக்கொடுப்பதில்

நாம தான் முந்திக்கனும் விட்டுக்கொடுப்பதில் ...

அந்நியன் 2 said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அருமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள் அக்காள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா... பாருங்க ஸாதிகா அக்கா... வரவர ஆருமே விட்டுகொடுக்கிறாங்க இல்லை எனக்கு:)).... அதிரா பாவமெண்டு கொஞ்சம் விட்டுக்கொடுத்து பின்னூட்டம் ஓடிவந்து போடலாமெல்லோ:))சரி சரி நில்லுங்க வாறேன்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//”மீரா..ஆஃபீஸில் இருந்து வந்து பத்து நிமிஷமாகுது.இன்னுமா காபி ரெடியாகவில்லை”//

காபி எப்படிங்க ரெடியாகும்?:)) நாந்தானே அதை ரெடியாக்கோணும், கொஞ்சம் பொறுங்கோ... இந்த ~சீரியல்~ முடியட்டும்:)).. முக்கியமான கட்டத்தில காப்பியாம் காப்பி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

முற்றும் அறிந்த அதிரா said...

//“என்னை என்ன சர்க்கரை வியாதிக்காரன் என்றா நினைச்சே”//

அச்சச்சோ... உங்களைப்போய் அப்படி நினைப்பேனா?, எமக்குப் பிடிக்காததை அடுத்தவருக்குச் செய்யப்படாதெண்டு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க?:)), எனக்குத்தான் சக்கரை பிடிக்காதே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. நில்லுங்க போட்டுக்கொண்டு ஓடிவாறேன்:)))).

முற்றும் அறிந்த அதிரா said...

//”என்ன முகத்தில் சிரிப்பைக்காணோம்.அடிக்கடி உம்மணாமூஞ்சாகி விடுகின்றீர்களே”//

இப்போவெல்லாம் சிரிப்பு ஸ்ரொக் சீக்கிரமா தீர்ந்துபோயிடுதூஊஊஊ?:)), ஏனெண்டால் பின்னூட்டம் போடுவோரெல்லாம் இப்போ மிகவும் நகைச்சுவையாக சிரிக்க வைக்கினம்:)), அடுத்த ஸ்ரொக் வரும்வரை உம்மெண்டுதானே இருக்கோணும்:)), வச்சிட்டா வஞ்சகம் செய்கிறோம்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

உஸ் அப்பா... ஸாதிகா அக்கா... நன்றாகச் சொல்லிட்டீங்க... தொடர்ந்து கலக்குங்கோ. எப்பூடித்தான் அழகாக எடுத்துரைத்தாலும் ஆரும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது விட்டுக்குடுக்காயினமாம்:)).

ஊ.கு:
நான் என் முருங்கையை ஆருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), வேணுமெண்டால் கொஞ்சம் அரக்கி இருப்பேன்:)))).

zumaras said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ்ரிகள் அத்தனையும் வைரங்கள்போல் ஜொலிக்கிறது.வாழ்த்துக்கள்...

Unknown said...

விட்டு கொடுப்போர் கொட்டுபோவதில்லை...

ஹுஸைனம்மா said...

கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு, உங்களுக்கு இவ்வளவு பொறுமையான்னு!! முன்னாடியும் இதே மாதிரி ‘சிரிச்ச முகமா’ இருக்கச் சொல்லியும் ஒரு பதிவு எழுதிருந்தீங்க. வாசிக்கும்போது இனி இப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறதுதான், ஆனா, கோவம் வந்தா... :-((((

Kanchana Radhakrishnan said...

அருமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

sultangulam@blogspot.com said...

நல்ல இடுகை.

விட்டுக் கொடுக்கும் நம் குணத்தை மற்றவர்கள் வேறு மாதிரி யோசிக்கும்போது..... என்ன செய்யலாம்?

மனோ சாமிநாதன் said...

//இதனால் மன அமைதி கெட்டு,நிம்மதி இழந்து நட்புக்களை,உறவுகளை இழந்து மனிதன் தனிமரமாகி விடும் வாய்ப்பும் அமைந்து விடும்.//

இவை மட்டுமல்ல, கோபத்தில் தன் நிலை மறந்து கத்தும்போது, பக்கவாதம் வரை மனிதனைத் தாக்குகிறது! எங்கள் குடும்ப நண்பர் ஒருத்தர் இப்படித்தான் மனைவியிடம் கத்திய கத்தலில் பக்கவாதம் தாக்கி கைகளும் காலும் செயலிழந்து, பேச முடியாது போய், 15 வருடங்களாகியும் முழுவதுமாக இன்னும் தேறவில்லை.

அருமையான‌ க‌ட்டுரை!

Anonymous said...

"""கேள்விகேட்போரின் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவதை புரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுதே மனம் விட்டு பேசி சிக்கல்கள் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்."""

- விட்டு கொடுத்தல்
இல்லையென்றால்..,
அனைத்தையும் இழக்க வேண்டியது இருக்கு
அழகாக சொல்லிருகிங்க தோழி...
பாராட்டுக்கள்

ஜெய்லானி said...

விட்டுக் கொடுத்தல் ஒரு சில இடத்தில் சரிவராதே.......!!!

ஆனால் கண்வன் மனைவிக்குள் கண்டிப்பாக விட்டுக்கொடுத்தல் வேண்டும் :-)))

மாய உலகம் said...

ஆஹா..அருமையான மன இயல் பதிவு.. பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

athira said...
//”மீரா..ஆஃபீஸில் இருந்து வந்து பத்து நிமிஷமாகுது.இன்னுமா காபி ரெடியாகவில்லை”//

காபி எப்படிங்க ரெடியாகும்?:)) நாந்தானே அதை ரெடியாக்கோணும், கொஞ்சம் பொறுங்கோ... இந்த ~சீரியல்~ முடியட்டும்:)).. முக்கியமான கட்டத்தில காப்பியாம் காப்பி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

சூப்பர் ஹா ஹா ஹா

மாய உலகம் said...

athira said...
உஸ் அப்பா... ஸாதிகா அக்கா... நன்றாகச் சொல்லிட்டீங்க... தொடர்ந்து கலக்குங்கோ. எப்பூடித்தான் அழகாக எடுத்துரைத்தாலும் ஆரும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது விட்டுக்குடுக்காயினமாம்:)).

ஊ.கு:
நான் என் முருங்கையை ஆருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), வேணுமெண்டால் கொஞ்சம் அரக்கி இருப்பேன்:)))).//

அப்போ நானும் தேம்ஸ்யையும், முதலையும் விட்டுக்கொடுக்கமாட்டேன்... சொல்லிபுட்டேன் ஆமா

ஸாதிகா said...

//எதையும் நன்கு புரிந்துகொண்டு நிலைமைக்குத் தக்கவாறு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இன்னிக்கும்.
மிக்க நன்றி அருமையான கருத்துப் பகிர்வுக்கு ..//

மிகச்சரியாக சொன்னீர்கள் அம்பாளடியாள்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//ஆஃபீஸ் கோப‌த்தை நானும் வீட்டில் காட்டியிருக்கிறேன் நேரில் இல்லை இதுவ‌ரைக்கும்(த‌ப்பிச்சிட்டோம்டா. :) ) #போனில்//’


ஹா..ஹா..நல்ல வேளை வீட்டம்மா தப்பிச்சிட்டாங்க இர்ஷாத்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//ஆஃபீஸ் கோப‌த்தை நானும் வீட்டில் காட்டியிருக்கிறேன் நேரில் இல்லை இதுவ‌ரைக்கும்(த‌ப்பிச்சிட்டோம்டா. :) ) #போனில்//’


ஹா..ஹா..நல்ல வேளை வீட்டம்மா தப்பிச்சிட்டாங்க இர்ஷாத்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//நட்புடன் ஜமால் said...
விட்டுக்கொடுக்கவே கூடாதுங்க விட்டுக்கொடுப்பதில்

நாம தான் முந்திக்கனும் விட்டுக்கொடுப்பதில் ...// அட..இது கூட ரொம்ப நல்லா இருக்கே!

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம். தம்பி அந்நியன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//காபி எப்படிங்க ரெடியாகும்?:)) நாந்தானே அதை ரெடியாக்கோணும், கொஞ்சம் பொறுங்கோ... இந்த ~சீரியல்~ முடியட்டும்:)).. முக்கியமான கட்டத்தில காப்பியாம் காப்பி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

எல்லோரும் மிஸ்டர் அதீஸ் மாதிரி இருப்பாங்களா என்ன?

//அச்சச்சோ... உங்களைப்போய் அப்படி நினைப்பேனா?, எமக்குப் பிடிக்காததை அடுத்தவருக்குச் செய்யப்படாதெண்டு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க?:)), எனக்குத்தான் சக்கரை பிடிக்காதே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. நில்லுங்க போட்டுக்கொண்டு ஓடிவாறேன்:)))).// ஹையோ..அதீஸுக்கு ரொம்பத்தான் துணிச்சல்,வீட்டில் காட்டும் அதிகாரத்தை எல்லாம் புட்டு புட்டு வைக்கறீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம்.//வ்ரிகள் அத்தனையும் வைரங்கள்போல் ஜொலிக்கிறது.வாழ்த்துக்கள்..// வரிகளில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி ஜும்ராஸ்

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

//வாசிக்கும்போது இனி இப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறதுதான், ஆனா, கோவம் வந்தா... :-((((// என்ன செய்வது.இது நிறைய பேரின் அனுபவம்.நன்றி ஹுசைனம்மா.

ஸாதிகா said...

மிக்க நன்றி கருத்துக்கு காஞ்சனா.

ஸாதிகா said...

“நீங்கள் முன்னே போல் இல்லை”என்று பாசத்துடன் உங்கள் முன் விரல் நீட்டி கேட்கும் பொழுது,

“முன்பு போல் இப்ப அடிக்கடி வர்ரதே இல்லை”உரிமையுடன் உங்களிடம் கேள்வி கேட்க்கப்படும் பொழுதும்,

”என்ன முகத்தில் சிரிப்பைக்காணோம்.அடிக்கடி உம்மணாமூஞ்சாகி விடுகின்றீர்களே”என்று பாசத்துடன் உங்களிடம் வினா எழுப்பப்படும் பொழுதும்,
//விட்டுக் கொடுக்கும் நம் குணத்தை மற்றவர்கள் வேறு மாதிரி யோசிக்கும்போது..... என்ன செய்யலாம்?//



“இப்பல்லாம் உங்களை புரிந்து கொள்ளவே முடியவே இல்லை”என்று உங்களிடம் உள்ள அக்கரையில் கேட்கும் கேள்விகளின் பொழுதும்

“என்ன ஜி டாக்கில் எப்பவும் ஆஃப் லைனில் காட்டுறீங்க”என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பொழுதும்

விழித்துக்கொள்ளுங்கள்.

மேற் கூறிய வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள் சகோ சுல்தான்.

ஸாதிகா said...

நீண்ட கருத்திட்டமைக்கு மிக்க நன்ரி மனோ அக்கா.நானும் பலரதி வாழ்கையில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை கண்டு இருக்கின்றேன்.

ஸாதிகா said...

சின்னத்தூரம் அழகிய கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஜெய்லானி.

ஸாதிகா said...

மாய உலகம்.பூஸ் இப்பல்லாம் பயம் தெளிந்து வீறு நடை போடுறா.கருத்துக்கு நன்ரி.

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice message in this post...

Unknown said...

"விட்டுக்கொடுத்தலும்,சகிப்புத்தன்மையும்,புரிதல் கொண்ட நட்புக்களும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.வாழ்கையை சுகப்படசெய்பவை". என்ற வரிகள் அர்த்தமுள்ளவை. எல்லோரும் இதனைப் புரிந்து நடந்து கொண்டால் பிரச்சினைகளே வராது. நல்ல கருத்தை வலியுறுத்தும் பதிவு

MyKitchen Flavors-BonAppetit!. said...

Luvly Blog with fabulous posts and topics. Glad to know a fellow blogger from TamilNadu.ollowing U.

கதம்ப உணர்வுகள் said...

வாழ்க்கையில் ரெட் சிக்னல் வருமுன் உஷாராகி குடும்பத்தில் ஈடுபாட்டோடு இருங்கன்னு சொல்லவைக்கும் வரிகள் ஸாதிகா....

விட்டுக்கொடுத்து அன்புடன் பேசி என்ன விஷயம் என்ன பிரச்சனை என்பதை இருவரும் கூடி உட்கார்ந்து ஆலோசித்து செயல்படுவதே குடும்பத்திற்கு நன்மை என்றுஅருமையா சொல்லி இருக்கீங்கப்பா..

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

ஸாதிகா said...

மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் மிக்க நன்றி வியபதி.

ஸாதிகா said...

MyKitchen Flavors-BonAppeti,மிக்க மகிழ்ச்சி,நன்றி.

ஸாதிகா said...

..///
விட்டுக்கொடுத்து அன்புடன் பேசி என்ன விஷயம் என்ன பிரச்சனை என்பதை இருவரும் கூடி உட்கார்ந்து ஆலோசித்து செயல்படுவதே குடும்பத்திற்கு நன்மை என்றுஅருமையா சொல்லி இருக்கீங்கப்பா//நீங்களும் அழகாய் பின்னூட்டி இருக்கீங்கப்பா மஞ்சுபாஷினி.நன்றி.