September 29, 2011

தூங்கிக்கொண்டிருக்கும் சென்னை மின்சாரவாரியம்.



“சார்,கரண்ட் இல்லை சார்.”
“பார்த்துடலாம்.எந்த ஏரியா”

“என்னையா நினைச்சிக்கொண்டு இருக்கீங்க.இது என்ன சிட்டியா?இல்லை பட்டிதொட்டியா .இப்படி மணிக்கணக்கிலே கரண்ட் கட் இருக்கு?”
“கொஞ்சம் பொறுங்க சார் இன்னும் ஒரு மணி நேரத்திலே வந்துடும்”

“எப்போதான் சார் கரண்ட் வரும்”
“இதோ ஆஃப் அன் அவரில் வந்துடும்”

“சார் நான் மினிஸ்டர்........ செகரட்ரி பேசறேன் .ரெண்டு மணிநேரமா கரண்ட் இல்லை.”
“மினிஸ்டர் வீட்டிலேயே கரண்ட் இல்லை சார்.வந்துடும்.”

“சார்..இப்படி லோ வோல்டேஜ் கொடுத்து அவஸ்தை படுத்துவதற்கு மொத்தமா ஆஃப் பண்ணி போட்டுடுங்க”
“சரிபண்ணிடலாம்ங்க”

மின்சாரவாரியத்துக்கு வரும் போன் கால்களும்,அதற்கு அவர்கள் கொடுக்கும் பதில்களும்தாம் மேற்கண்டவை.

700 சதுர அடி வீட்டிற்கு 3 டன்னில் ஏசி வைத்தால் என்னவாகும் என்று மக்களை கேள்விகேட்கின்றனர்.

அடிக்கடி நாளிதழ்களில் அவரவர்கள் ஏரியாக்களில் மின் தடை பற்றியும்,லோ வோல்டேஜினால் உள்ள பிரச்சினைகளையும் வாசகர்கள் கடிதத்தில் எழுதி வருவது பிரசித்தம்.இப்பொழுது எங்கள் ஏரியாவிலும்.

தலைக்கு மேல் சுழலும் ஆமை வேகம்,நத்தை வேகத்தில் சுழலும் மின் விசிறி திடுமென ராட்சச வேகத்தில் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..என்று சப்தமாக சுழலும் பொழுது மின் விசிறி கழன்று தலையில் விழுந்து விடுமோ என்ற கிலி வருகின்றது.

பவர் பிளக்சுவேசனால் அணைந்து அணைந்து எரியும் ஏஸிக்களால் நாளிதழகளில் வந்த ஏஸி விபத்துக்கள் மனக்கண்ணில் வந்து தூக்கத்தை தொலைக்கும் நாட்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

டியூப் லைட் மின் மினிப்பூச்சி போல் மின்னிக்கொண்டுள்ளதே தவிர முழுதாக எரிந்து வெளிச்சம் தர ஸ்ட்ரைக் பண்ணுகின்றது.

ஓடிக்கொண்டு இருக்கும் பம்ப் செட் லோ வோல்டேஜினால் காயில் ,புகைந்து,எரிந்து புதிய பம்ப்செட் வாங்கி பொருத்தும் நிலை அனைவருக்கும் வந்து கொண்டுள்ளது.மின்சார வாரியம் புண்ணியத்தில் பம்ப்செட் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்டெபிலைசர் இருப்பதால் சில பல பொருட்கள் தப்பி வந்தாலும் ஃபிரிட்ஜ்ஜில் உள்ள பொருட்கள் கெட்டுப்போய் குப்பையில் கொட்டும் இல்லத்தரசிகள் வயிறெரிந்து போகின்றனர்.

ஒரு சிறிய கூட்டத்தை திரட்டிக்கொண்டு நேரிலேயே மின்சார வாரியத்திற்கு சென்றாலோ அலட்சியமான பதில்.

மக்கள் அதிகளவில் டாச்சர் கொடுத்தால் பெயருக்கு மின்சாரவாரியத்தில் இருந்து ஒரிரண்டு பேர் வந்து பார்த்து விட்டு ”சரியாகி விடும்”என்ற வார்த்தைகளில் பொய்தான் மிச்சம்.

இன்று சரியாகி விடும் நாளை சரியாகி விடும் என்று எதிர்பார்த்து ஏமாந்து மக்கள்தான் கேணையர்களாகிக்கொண்டுள்ளனர்.

மாநிலத்தலை நகருக்கே இந்த கதி என்றால் கடை நிலை கிராமங்களின் கதி....?

சென்ற ஆட்சி மீண்டும் வராததற்கு மின் தடையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தும் இந்த ஆட்சியாளர்கள் விழித்துக்கொள்ள வில்லையே?

வசதி உள்ளவர்கள் வீடுகளில் யூ பி எஸ் வைத்து மின்சாரம் இல்லாத சமயங்களில் உபயோகித்துக்கொள்ளவும்,ஸ்டெபிலைசர் வைத்து லோ வோல்டேஜை சமாளிக்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.யூ பி எஸ்,ஸ்டெபிலைசர்கள் எல்லா நேரத்திற்கும் அனைத்து மின்சாதனப்பொருட்களுக்கும் பொருந்தி வருமா என்று சொல்ல இயலாது.



இது ஒரு புறம் நடக்க மின்சார சேமிப்பு பேர்வழி என்று சில சாலைகள்,தெருக்களில் தெருவிளக்கைகூட அணைத்து விடுவதால் சமூகவிரோதிகளுக்கு கொண்டாட்டமாகிப்போய் விட்டது.

போகின்ற போக்கைப்பார்த்தால் இனி தாத்தா பாட்டி காலத்தில் இருந்ததைப்போன்று சாயங்காலம் ஆனால் ஹரிக்கோன் லைட்டை பளிச் என்று துடைத்து,கெரஸின் நிரப்பி தீப்பெட்டியுடன் தயாராகவேண்டும்.அது போல் பனை ஓலை விசிறிகளும் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் போலும்.

ஜெய்ப்பூரை பின்க் சிட்டி என்ற அடைமொழியுடன் அழைப்பதைபோல் வெகு விரைவில் சென்னைக்கு டார்க் சிட்டி என்ற அடை மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வெளிநாடுகளில் நொடிப்பொழுதேனும் மின் தடை இன்றி நிம்மதியாக வாழும் ஜீவன்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.









44 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஉ... பின்பு வாறேன் ஸாதிகா அக்கா.. இப்ப அவசரமாப் போறேன் அவ்வ்வ்வ்வ்வ்:)))).

Yaathoramani.blogspot.com said...

ஜெய்ப்பூரை பின்க் சிட்டி என்ற அடைமொழியுடன் அழைப்பதைபோல் வெகு விரைவில் சென்னைக்கு டார்க் சிட்டி என்ற அடை மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


அனைவர் மனதிலும் உள்ள ஆதங்கத்தை
மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
பாதிக்கப்பட்டோர் சார்பாக நன்றி

ஹுஸைனம்மா said...

அய்யோ பாவம், இந்த சென்னைவாசிகளுக்கு விமோசனமே கிடயாதான்னு “உச்” கொட்டிகிட்டே வாசிச்சுட்டு வந்தேன்... இந்த வரியைப் பார்க்கும் வரை...
//வெளிநாடுகளில் நொடிப்பொழுதேனும் மின் தடை இன்றி நிம்மதியாக வாழும் ஜீவன்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.//

க்ர்ர்ர்ர்... என்னை மறக்கவே முடியாதா உங்களால? :-)))))))))

இங்கேயுள்ள வெயிலுக்கு கரண்ட் கட் ஆச்சுன்னா அவ்வளவுதான், அவிஞ்சே போயிடுவோம்!! ஆனா, இப்ப ரெண்டு மூணு வருஷமா, ஓரிரு முறையாவது ”ஓவர் லோட்” காரணமாகவோ, பராமரிப்பு காரணத்துக்காகவோ சில மணி நேரங்கள் தொடர்ந்து போய்விடுகிறதுக்கா இப்பல்லாம். ஷார்ஜா வருடாவருட கரண்ட் கட் ரொம்பப் பிரசித்தமாச்சே?

Avargal Unmaigal said...

மின்சார வாரியத்திற்கு கூட்டமாக போவதைவிட அமைச்சர் விட்டிற்கு சென்று போராட்டம் தினசரி பண்ணுங்கள் முடிந்தால் கூட்டமாக சென்று அவர் வீட்டிற்கு செல்லும் பவரை கட் பண்ணுங்கள்.

Menaga Sathia said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது அக்கா..இந்தியா வந்த போது பவர்கட்ல ரொமப் கஷ்டப்பட்டுட்டோம்..

ஜெய்லானி said...

கடைசி வரியில புல்லரிக்க வைச்சிட்டீங்க :-))

((எங்க ஏரியாவில இந்த 12 வருஷத்துல ஒரு வேளை கூட கரெண்ட் கட்டானது இல்ல :-)

ஜெய்லானி said...

//இது என்ன சிட்டியா?இல்லை பட்டிதொட்டியா .இப்படி மணிக்கணக்கிலே கரண்ட் கட் இருக்கு?”//

பட்டித்தொட்டியோட அருமை கொஞ்சமாவது சிட்டி அனுபவிக்க வேனாமா..?? ஹி..ஹி... யாரோட சாபமோ :-)))))))))

((ஆனா நான் இல்லை ))

ஜெய்லானி said...

சின்ன ஸைஸ் ஜெனரேட்டர் இப்போதுதான் மார்கெட்டில் கிடைக்கிறதே...!!! :-))

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அவசியமான பதிவு ,சென்னை மக்களின் பிரச்சனை .
ஜெ அம்மையார் ஆட்சிக்கு வந்த பிறகு தினமும் ஒன்னவர் பவர் கட் { எங்க ஏரியாவில்}

இதில் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டார்.

ஆனால் வோல்டேஜ் பிரச்சனை இருக்கு .

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா.. இப்போதான் இதைப் படித்தேன்... ஒரே புலம்பல்தான்... இங்க கரண்ட் இல்லை என அழுகிறீங்க:)), அங்க இமாவுக்கு கரண்ட் கம்பி அடிக்குதாம் :)) ஹையோ ஹையோ:)).

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என சொல்வது கேட்குது..

முற்றும் அறிந்த அதிரா said...

//வெளிநாடுகளில் நொடிப்பொழுதேனும் மின் தடை இன்றி நிம்மதியாக வாழும் ஜீவன்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.//

அப்பூடிச் சொல்லமுடியாது, ஏனெண்டால் நம் நாட்டில் கரண்ட் இல்லாமல் போனாலும் சமாளிக்க முடியும். ஆனா வெளிநாட்டில ஏதும் இயற்கைப் பிரச்சனைகளால் இல்லாமல் போனால் அவ்ளோதான் நாறிப்போயிடுவோமே .... அதனால்தான் இல்லாமல் போவதில்லைப்போலும்:)).

ஸாதிகா said...

அதிரா,
//vஇப்ப அவசரமாப் போறேன் அவ்வ்வ்வ்வ்வ்:)))).//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ரமணி சார்.அநேக சென்னைவாசிகளின் புலம்பல்தான் இது.

ஸாதிகா said...

// ஷார்ஜா வருடாவருட கரண்ட் கட் ரொம்பப் பிரசித்தமாச்சே?//

நீங்க இப்படி சொல்லுறீங்க ஹுசைனம்மா.ஜெய்லானியின் பின்னூட்டத்தை மேலே பாருங்கள்.காலரை தூக்கி விடாத குறையாக அல்லவா தம்பட்டம் அடித்துக்கொள்கின்றார்.

ஜெய்லானி said...

இனி இலவச திட்டம் யாராவது கொண்டு வந்தா ஜெனரேட்டாரா கேளுங்க ..!!! :-))))

ஹுஸைனம்மா சொல்றது சரிதான் .அது இண்டஸ்டிரியல் ஏரியாவில மட்டும் வெயில் காலங்களில் நடக்கும் அதுக்கு முக்கிய காரணம்... டிரான்ஸ் பார்மர் ஓவர் லோட் காரணமா வெடித்து விடும்...
ஒரு கடைக்கு குடுத்த அளவை விட அதிகமா ஏஸி போன்றதை யூஸ் செய்வதால் கேபிள் பிளாஸ்ட் ஆகுது.

என்ன சொல்லியும் யாரும் கேட்காததால் சில ஏரியாவுக்கு டெம்ப்ரவரியா பவர் கட் :-)) சிட்டியில் அப்படி இல்லை

ஸாதிகா said...

//Avargal Unmaigal said...
மின்சார வாரியத்திற்கு கூட்டமாக போவதைவிட அமைச்சர் விட்டிற்கு சென்று போராட்டம் தினசரி பண்ணுங்கள் முடிந்தால் கூட்டமாக சென்று அவர் வீட்டிற்கு செல்லும் பவரை கட் பண்ணுங்கள்.//

:-)கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//இந்தியா வந்த போது பவர்கட்ல ரொமப் கஷ்டப்பட்டுட்டோம்..//

ஹ்ம்ம்ம்...நாங்க கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறோம் மேனகா:-)

ஸாதிகா said...

//
((எங்க ஏரியாவில இந்த 12 வருஷத்துல ஒரு வேளை கூட கரெண்ட் கட்டானது இல்ல//

அதான் சொல்லிட்டேனே வெளிநாடில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று.நன்றி ஜெய்லானி கருத்துக்கு.

ஸாதிகா said...

ஜெய்லானி said...

//
பட்டித்தொட்டியோட அருமை கொஞ்சமாவது சிட்டி அனுபவிக்க வேனாமா..?? ஹி..ஹி... யாரோட சாபமோ :-)))))))))

((ஆனா நான் இல்லை ))//

என்னாதூஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்...

Asiya Omar said...

//வெளிநாடுகளில் நொடிப்பொழுதேனும் மின் தடை இன்றி நிம்மதியாக வாழும் ஜீவன்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.//

என்னதான் இருந்தாலும் நம்ம நாடு போல வருமா?

ஸாதிகா சமூகம் மீதான உங்கள் கண்ணோட்டத்தை பதிவில் பகிர்வது பாராட்டத்தக்கது.

என் கணவரும் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையின் நெருக்கடியான EB OFFICE(Pudupet) - AE -ஆக 4 வருடம் இருந்து விட்டு அனல் மின் நிலையத்திற்கு மாற்றல் வாங்கி விட்டு ஒடிவந்தவர் தான்,இன்னமும் சென்னை என்றால் அவருக்கு அலர்ஜி தான்.அவரிடம் இந்த பதிவை குறித்து பகிர்ந்தேன், அவருடைய கண்ணோட்டத்தை ஒரு பதிவாகவே இடலாம்.மிக நல்ல பகிர்வு தோழி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் அன்றாட பிரச்சனைகளை வெகு அழகாக கோர்வையாக எழுதியுள்ளீர்கள். அதற்கு முதற்கண் நன்றிகள்.

திருச்சியைப்பொருத்தவரை முன்பு இருந்த ஆட்சியைவிட, இப்போது கொஞ்சம் தேவலாம் என்று தான் உணர முடிகிறது.

ஆனால் கடந்த ஒரு வாரமாக தின்மும் 2 to 3 மணி நேரம் மின்தடை செய்து விடுகிறார்கள். மாதத்தில் ஒரு நாள் (நாளை கூட) 8 மணி நேரம் பராமரிப்பு என்று சொல்லி தடை செய்து விடுகிறார்கள்.

வெளிநாடு கூட வேண்டாம். நம் நாட்டிலேயே மும்பை போன்ற பெரு நகரங்களில் கரண்டு கட் இல்லையே. திட்டமிடுதல், விநியோகம், திருட்டு இவற்றில் அதிக கவனம் செலுத்தினாலே முன்னேற்றம் ஏற்படும்.

டார்ச் லைட், விசிறி, மெழுகுவர்த்தி போன்றவை அவசியம் தேவை. கொசுக்கடிக்கு ஃபேன் அல்லது ஏ.ஸி இல்லாவிட்டால் மிகவும் கொடுமை தான்.

நல்லகாலம் பிறக்குமா தெரியவில்லை. பார்ப்போம். vgk

குறையொன்றுமில்லை. said...

கரண்ட்கட்டினால் நாங்கல்லாம் படும் அவதி சொல்லி அடங்காது அதுவும் நாங்க ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக வேர இருக்கோமா. தினசரியுமே போராட்டம்தான்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அத்தனையும் உண்மை. அனால எருமையின் மீது மழையாய் பெய்திருக்கிரீர்கள்

கோமதி அரசு said...

//ஜெய்ப்பூரை பின்க் சிட்டி என்ற அடைமொழியுடன் அழைப்பதைபோல் வெகு விரைவில் சென்னைக்கு டார்க் சிட்டி என்ற அடை மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//

எங்கள் ஊரிலும் கரண்ட் கட் அடிக்கடி நடக்கிறது. மிகவும் கஷ்டமாய் உள்ளது.

எந்த ஆட்சி வந்தாலும் கரண்ட் கட் கட் தான்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆயிஷா.வோல்ட்டேஜ் பிரச்சினைதான் இப்பொழுது.

ஸாதிகா said...

//தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என சொல்வது கேட்குது..//உண்மைதானே அதிரா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//இனி இலவச திட்டம் யாராவது கொண்டு வந்தா ஜெனரேட்டாரா கேளுங்க ..!!! :-))))//

அட இது கூட நல்ல ஐடியாவாக உள்ளதே.

ஸாதிகா said...

வலைப்பூ வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வி கே ஜி சார்./நல்லகாலம் பிறக்குமா தெரியவில்லை. பார்ப்போம்.//

இதைத்தான் எதிர்ர்பார்த்து நாளும் பொழுதும் ஓடிக்கொண்டுள்ளது:)

ஸாதிகா said...

//அவருடைய கண்ணோட்டத்தை ஒரு பதிவாகவே இடலாம்.மிக நல்ல பகிர்வு தோழி..//அவசியம் பகிருங்கள் தோழி ஆசியா.ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா,உங்கள் ஊரிலும் இந்த போராட்டம்தானா?கருத்துக்கு நன்றியம்மா.

ஸாதிகா said...

// வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
அத்தனையும் உண்மை. அனால எருமையின் மீது மழையாய் பெய்திருக்கிரீர்கள்//

ஹா..ஹா..வித்யாம்மா,உங்கள் பின்னூட்டத்தை ரொம்பவே ரசித்து சிரித்தேன்.நன்றி.

ஸாதிகா said...

எங்கள் ஊரிலும் கரண்ட் கட் அடிக்கடி நடக்கிறது. மிகவும் கஷ்டமாய் உள்ளது.

எந்த ஆட்சி வந்தாலும் கரண்ட் கட் கட் தான்.//

என்ன பண்ணுவது?ஆனாலும் இந்த பவர் பிளக்சுவேஷன் என்பது இப்பொழுதான்.இதற்கு முன் இப்படி இருந்ததில்லை.கருத்துக்கு மிக்க நன்றி சகோ கோமதிஅரசு

Rathnavel Natarajan said...

பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

present

ரிஷபன் said...

சொல்லாத மின் வெட்டு இப்போதெல்லாம்.

எந்த அரசு வந்தாலும் பிரச்னைகள் பொதுவானதாய். தீர்வுகள் மட்டும் கண்ணுக்கு எட்டாததாய்.

மனோ சாமிநாதன் said...

எல்லோர் மனதிலும் இந்தப் புலம்பல்தான். நீங்கள் கொட்டி விட்டீர்கள். அதுதான் வித்தியாசம் ஸாதிகா!

இங்கும் எப்போதாவ‌து ப‌வ‌ர் ஸ்டேஷ‌னில் பிர‌ச்சினை என்று க‌ர‌ண்ட் க‌ட் ஆகும். அப்போது பார்க்க‌ வேன்டுமே. அதுவும் எங்க‌ளைப்போல‌ ப‌த்தாவ‌து மாடியில் உட்கார்ந்து கொண்டு! என் க‌ண‌வ‌ரும் மகனும் எப்ப‌டி தொழிலைப்பார்க்க‌ப்போவ‌து என்று ம‌லைத்துப்போய் உட்கார்ந்திருப்பார்க‌ள். இற‌ங்கிப்போய் விட‌லாம்தான். ஆனால் இர‌வு வ‌ரை வ‌ரை க‌ர‌ண்ட் வ‌ர‌வில்லையென்றால் எப்ப‌டி 10 மாடி திரும்ப ஏறி வ‌ருவ‌து?

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரத்னவேல் சார்.

ஸாதிகா said...

நன்றி ஜலி.

ஸாதிகா said...

//எந்த அரசு வந்தாலும் பிரச்னைகள் பொதுவானதாய். தீர்வுகள் மட்டும் கண்ணுக்கு எட்டாததாய்//உண்மைதான் ரிஷபன்.இன்று முதலமைச்சர் மின் தட்டுப்பாட்டை நீக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.பார்ப்போம்.

ஸாதிகா said...

//அதுவும் எங்க‌ளைப்போல‌ ப‌த்தாவ‌து மாடியில் உட்கார்ந்து கொண்டு! என் க‌ண‌வ‌ரும் மகனும் எப்ப‌டி தொழிலைப்பார்க்க‌ப்போவ‌து என்று ம‌லைத்துப்போய் உட்கார்ந்திருப்பார்க‌ள். இற‌ங்கிப்போய் விட‌லாம்தான். ஆனால் இர‌வு வ‌ரை வ‌ரை க‌ர‌ண்ட் வ‌ர‌வில்லையென்றால் எப்ப‌டி 10 மாடி திரும்ப ஏறி வ‌ருவ‌து?//

அடேயப்பா..பத்துமாடி ஏறி இறங்கணுமா?அதிலும் காலையில் போன கரணட் இரவு வந்தாலும் வராதா?ஐயையோ...ரொம்ப டெரரா இருக்கே!வந்து உற்சாகமாக பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி மனோ அக்கா.

ராமலக்ஷ்மி said...

அனைவரின் ஆதங்கத்தையும் பிரதிபலிக்கிறது பதிவு.

எம் அப்துல் காதர் said...

// தூக்கத்தை தொலைக்கும் நாட்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. டியூப் லைட் மின் மினிப்பூச்சி போல் மின்னிக் கொண்டுள்ளதே தவிர முழுதாக எரிந்து வெளிச்சம் தர ஸ்ட்ரைக் பண்ணுகின்றது.//

இதை நினைத்தால் ஊர் போகவே பயமாயிருக்கு!!

// வெளிநாடுகளில் நொடிப் பொழுதேனும் மின் தடை இன்றி நிம்மதியாக வாழும் ஜீவன்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.//

//க்ர்ர்ர்ர்... என்னை மறக்கவே முடியாதா உங்களால? :-)))//



உண்மை தான். நாங்களும் அதை அனுபவிக்கிறோம்.

Jaleela Kamal said...

அன்று கமெண்ட் போட முடியாததால் , போய் விட்டேன்
ஆமாம் நான் அங்குஇருக்கும் போது
காலை ஒரு மணிநெரம், மாலை ஒரு மணி நேரம் என்றல்லாவா கண்க்கு வைத்து கட் பண்னாஙக்
இப்ப ஒரேடியா இப்படி கரண்ட் போனா
எபப்டி ?
ரொம்ப் சிரமம் ஆச்சே