இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்.என் மகனுடைய நண்பனொருவன் ஃபிரண்ட் ஷிப் டே கொண்டாடுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய கூட்டத்துடன் கார்களிலும் பைக்குகளிலும் பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்று இருந்தனர்.மகன் நோன்பு வைத்ததால் செல்ல மறுத்து விட்டான்.கடற்கரை ஓரமாகத்தான் நின்று விளையாடிக்கொண்டிருந்திருக்கின்றனர்.சென்னைக்கடல் மிகவும் ஆபத்தானது என்பது அறிந்தும் இந்த இளையவர்கள் இப்படி அடிக்கடி கடற்கரைக்கு சென்று பெரிய விபரீதத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
அலை இழுத்து சென்றதில் மூன்று பேர் அடித்து சென்று இருவரை காப்பாற்ற முடிந்தது.இந்த மாணவன் மட்டும் இறந்து விட்டான்.எல்லாம் ஐந்தே நிமிடத்தில் நடந்து முடிந்துள்ளது.நடந்ததைக்கேட்டு கதிகலங்கி விட்டேன்.என் மகனோ மூன்று நாட்கள் பித்துப்பிடித்தவன் போல் சிவந்த விழிகளுடன் இருந்தான்.
வாரம் ஒரு முறையாவது கடற்கரையில் மாணவர் பலி என்ற செய்தி வந்து கொண்டுதான் உள்ளது.இருப்பினும் விபரீதத்தை தடுக்க இயலவில்லை.பெற்றோர்கள் தான் நயம் பட எடுத்து சொல்லி இப்படிப்பட்ட ஆபத்தான பொழுதுபோக்குகளை விட்டும் விலக செய்யவேண்டும்.வார இறுதி நாட்களில்,விடுமுறைதினங்களில் கடற்கரையில் காவலர்கள் நிற்பதை அதிகப்படுத்தி விபரீதங்களை தடுப்பார்களா?
மாணவன் அபிநயசெல்வன் ஆத்மா சாந்தி அடையவும்,அபியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியையும்,பொறுமையையும் தரவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்.
மாணவன் அபியின் இறப்பினால பாதிக்கப்பட்டு,இப்பொழுது சற்று மனம் தெளிந்த என் முகன் தன் முகப்புத்தகத்தில் விடுத்திருக்கும் மெசேஜை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இருக்கின்றேன்.
PLS AVOID TAKING BATH IN BEACH(U GUYS KNOW WHAT HAS HAPPENED).IF U GO ALSO PLS SIT AND COME BACK.
THIS S A SOCIAL AWARENESS CREATED ON BE HALF OF THE ALPHIANS 2010-2011
this is really a very serious thing... which happened in our frnd's life..... plz make it as ur status frnds... plz.... :'( :'( :'
THIS S A SOCIAL AWARENESS CREATED ON BE HALF OF THE ALPHIANS 2010-2011
this is really a very serious thing... which happened in our frnd's life..... plz make it as ur status frnds... plz.... :'( :'( :'
சென்னையில் டிராஃபிக் ஜாம் என்பது சென்னையின் அடையாளமாகவே ஆகிவிட்டது.இந்த லட்சணத்தில் சிக்னலில் வண்டிகள் காத்திருக்கும் பொழுது கார்க்கண்ணாடியை லொட் லொட் என்று தட்டி விடாப்பிடியாக பிச்சை எடுப்பவர்கள்,கார் கண்ணாடியை நம் அனுமதி இல்லாமல் டஸ்டரால் துடைத்து விட்டு பணப் பறிக்கப்பார்க்கின்றவர்கள்,சிறு குழந்தைகள் இருந்தால் பொம்மைகள்,பலூன்களைக்காட்டி விற்பனை செய்பவர்கள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வது இன்னும் சிக்கல் ஆக்குகின்றது.டிராஃபிக் போலீஸார் இது குறித்து நடவடிக்கை எடுக்கத்தயங்கவது ஏன்?
தி நகரில் ஹோட்டல் பென்ஸ் பார்க்கில் மிட்நைட் பஃபட் வார இறுதிநாட்களில் நடக்கின்றது.இரவு
12 மணி முதல் மூன்று மணி வரை.நைட் ஷோ முடிந்து வருபவர்களுக்கு வரப்பிரசாதம்.இப்பொழுது நோன்புகாலத்திலும் இஸ்லாமியர்களுக்கு சஹர் செய்வதற்கு வசதியாக உள்ளது.பாக்கெட்டையும் அதிகம் கடிக்காத அளவுக்கு விலை நிர்ணயித்து இருக்கின்றனர்.
அரசினர் மருத்துவமனை அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.எளியவர்கள் சிகிச்சைக்கு போவது அங்குள்ள மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும் மிகவும் இளப்பமாக உள்ளது போலும்.லேபர் வார்டில் எவ்வளவு அழைத்தும் வர சுணக்கம் காட்டிய மருத்துவர்,செவிலியர் துணையின்றி,தானே பிரசவித்து,பிரசவம் நடக்கும் டேபிளில் இருந்து பிறந்த குழந்தை தவறி விழுந்து இறந்த அவலம் மறைவதற்குள் இப்பொழுது கடலூர் மருத்துவமனை குழந்தையை மாற்றிக்கொடுத்து பெற்றோர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி மரபணு சோதனை செய்ய வேண்டி நிர்பந்தித்துள்ளனர்.என்ன கொடுமை?கடுமையான உடனடி நடவடிக்கை மூலம் இது போன்ற நெஞ்சைப்பதறச்செய்யும் குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்கப்படவேண்டும்.
படங்கள் உதவி:கூகுள்
Tweet |
67 comments:
பகிர்வுக்கு நன்றி!
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
//அலை இழுத்து சென்றதில் மூன்று பேர் அடித்து சென்று இருவரை காப்பாற்ற முடிந்தது.இந்த மாணவன் மட்டும் இறந்து விட்டான்.//
மாணவன் அபிநயசெல்வன் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
இது போல் வேதனைக்குரிய சம்பவங்கள் அதிகமாக
நடந்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை. அல்லாஹ் அனைத்து மக்களையும் காப்பாத்துபவனாக !
:( இளைஞர்களுக்கு உயிரைவிட எதுவும் முக்கியமில்லைன்னே தெரியறதில்ல.. கொண்டாட்டமும் குதூகலமும் பெரிசாத் தெரியுது..
பகிர்வுக்கு நன்றி!
நல்ல பகிர்வு.
சென்னையில் நடந்தது பயங்கரம்ப்பா.. நாங்க அலிபாகில் இருந்தப்பவும் இப்படித்தான் வாரத்துக்கொரு சம்பவம் நடக்கும். இளங்கன்று பயமறியாதுதான். ஆனா,பெத்தவங்க நிலைதான் சொல்லி மாளாது :-(
சென்னையில் நடந்தது பயங்கரம்ப்பா.. நாங்க அலிபாகில் இருந்தப்பவும் இப்படித்தான் வாரத்துக்கொரு சம்பவம் நடக்கும். இளங்கன்று பயமறியாதுதான். ஆனா,பெத்தவங்க நிலைதான் சொல்லி மாளாது :-(
அச்சச்சோ வட போச்சேஏஏஏ..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
இப்போ விடுமுறை எல்லோ கொஞ்சம் வெள்ளெனப் போட்டிட்டீங்க போஸ்டை.... நான் எழும்பமுந்தி அவ்வ்வ்வ்வ்வ்:)).
இருங்க பார்த்திட்டன், இனி படிச்சிட்டு வாறேன்.. குழந்தைப் படம் ஒருமாதிரி இருக்கு ஸாதிகா அக்கா.
என்ன கொடுமை... எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் நண்பர்களோடு கடற்கரைசெல்ல விடக்கூடாது, பின்னால நாங்களும் போயிடோணும், ஆனாலும் என்ன செய்வது விதி வலியது.
உணவு அவ்வ்வ்வ்வ்வ்... சொல்லவே தேவையில்லை.
நியூசில் சொன்னார்கள் சென்னை/பாண்டிச்சேரியில ஒரு பெண்குழந்தை பிறந்ததும் தாய் தலைமறைவாகிட்டாவாம், இப்போ குழந்து, தொட்டில் குழந்தை பாதுகாப்பு ஆட்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்காம்... உலகில் என்னவெல்லாம் நடக்கிறது.
சென்னை ரபிக்கை நினைச்சாலே ஸாதிகா அக்காவும் குரிஸ்ஸிங்கும்:) தான் நினைவுக்கு வரும்.
அதுசரி அஞ்சறைப் பெட்டியில 4 அறைதானே நிரம்பியிருக்கு, மற்றதில பூஸ் நித்திரை கொள்ளுதோ?:)) ஆ... முறைக்கப்பிடா... நாங்க கணக்கில புலியாக்கும்:).
ஸாதிகா... என்ன செய்வது! வாழ்க்கைப் பாதையில் நாம் விரும்பாத என்னென்னவோ எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
பாவம் அந்தப் பையன் குடும்பத்தார். ;( அவர்களுக்காக என் பிரார்த்தனைகள்.
உங்கள் மகனையும் யோசிக்க வேண்டாம் என்று சொல்லுங்க. வேறு வேலையில் கவனத்தைச் செலுத்த வையுங்க.
நன்றி விக்கியுலகம்.
வ அலைக்கும் சலாம்.//அல்லாஹ் அனைத்து மக்களையும் காப்பாத்துபவனாக !// இன்ஷா அல்லாஹ்.
//:( இளைஞர்களுக்கு உயிரைவிட எதுவும் முக்கியமில்லைன்னே தெரியறதில்ல.. கொண்டாட்டமும் குதூகலமும் பெரிசாத் தெரியுது..// உன்மைதான் சகோ முத்து லெட்சுமி.பிரேதத்தை போஸ்ட் மார்டம் வரை அனுப்பி விட்டு இரவு 11 1/2 மணிக்கு நண்பர்களுடன் வந்த மகனிடம் “அபி போய் சேர்ந்துட்டான்.ஆனால் அவனை பெற்றவர்களை நினைத்துப்பார்த்தீர்களா”என்று கேட்டு நான் கலங்கிய பொழுது அவனையும் அறியாமல் அழுதுவிட்டான்.மிகவும் கனக்க செய்து விட்டது அவனது மரணம்.
கருத்துக்கு நன்றி சமுத்ரா,
கருத்துக்கு நன்றி கே ஆர் விஜயன்
இன்னா லில்லாஹி...
பெற்றோரின் நிலைதான் பரிதாபம்.. என்னென்ன கனவுகள் இருந்திருக்கும்.. எங்கள் ஊரில் ஆற்றில் பயமில்லாமல் விளையாடும் பிள்ளைளைக் கோபிக்கும் பெரியவர்கள் தவறாமல் சொல்வது “தண்ணி முகம் பாக்காது” என்று.
இந்த மரணம் சக நண்பர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். பாரமாகவும் இருக்கும்.
//ஆனா,பெத்தவங்க நிலைதான் சொல்லி மாளாது :-(// உண்மைதான் சாரல்.அவங்களை நினைத்தாலே மனசெல்லாம் பாரமாகிவிடுகின்றது.
//என்ன கொடுமை... எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் நண்பர்களோடு கடற்கரைசெல்ல விடக்கூடாது, // இதைத்தான் படித்து படித்து பசங்களுக்கு சொல்லுகின்றோம்.ஆண்டவன்தான் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.
நோன்பு வழியாக, இறைவன் உங்கள் மகனைக் காத்திருக்கீறான். மயிரிழையில் தப்பினார் என்று சொல்வார்களே அதுபோல.. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
//அதுசரி அஞ்சறைப் பெட்டியில 4 அறைதானே நிரம்பியிருக்கு, மற்றதில பூஸ் நித்திரை கொள்ளுதோ?:)) ஆ... முறைக்கப்பிடா... நாங்க கணக்கில புலியாக்கும்:).// ஓ.அதிஸ் அஞ்சறைப்பொட்டியில் மொத்தம் ஏழு அறை இருக்குமோல்லியா?அக்கா கணக்கில் கொஞ்சம் வீக்காக்கும்.ஹி..ஹி..
//உங்கள் மகனையும் யோசிக்க வேண்டாம் என்று சொல்லுங்க. வேறு வேலையில் கவனத்தைச் செலுத்த வையுங்க.// சின்னவரை தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது இமா.கருத்துக்கு மிக்க நன்றி.
//இந்த மரணம் சக நண்பர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். பாரமாகவும் இருக்கும்.// இருக்கும்.இருக்க வெரெண்டும்.கருத்துக்கு மிக்க நன்றி ஹுசைனம்மா.
//நோன்பு வழியாக, இறைவன் உங்கள் மகனைக் காத்திருக்கீறான். மயிரிழையில் தப்பினார் என்று சொல்வார்களே அதுபோல.. எல்லாப் புகழும் இறைவனுக்கே.// அல்ஹம்துலில்லாஹ்.இப்பொழுது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கின்றது ஹுசைனம்மா.
இளங்கன்று பயம் அறியாது,,உண்மைதான்,,
அதன் விளைவுகள் சில நேரம் பாரதூரமாகி விடுகிறது,,
பிச்சைக்காரர்கள்..இவர்களை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை...பிள்ளைகள் கடத்தப்படுவதற்கு இத்தொழிலும் முக்கிய காரணம்..
அரசு மருத்துவ மனை அவலம் குறீத்து சொல்லி இருந்தீர்கள்...
அன்னியன் ஸ்டைலில் தண்டனை அவசியம்,,
அன்புடன்
ரஜின்
//அலை இழுத்து சென்றதில் மூன்று பேர் அடித்து சென்று இருவரை காப்பாற்ற முடிந்தது.இந்த மாணவன் மட்டும் இறந்து விட்டான்./
மிக மனவேதனயா இருக்கு
பிள்ளைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்களோ, கண்டிபப உங்க பையனுக்கு ரொம்ப அதிர்சியா இருக்கும்
அரசு மருத்துவமனை நேற்று கூட ஒரு தோழி வீட்டுக்கு வந்திருந்தாங்க இத பற்றி தான்பேச்சு..
முதல்+கடைசி பாராவை படிக்கும் போது ரொமப் கஷ்டமாகிவிட்டது...
மாணவர் அபிநயசெல்வனின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனைகள்,மற்ற மாணவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்...கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்களே அதுபோல இருக்கு...கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும்...
அனைத்து துயர செய்திகளும் கேட்டு மனம் உடைந்தேன்.
எல்லார் துயரத்திலும் பங்கு கொள்கிறேன்.
மற்ற துணுக்கு செய்திகளை சாதாரணமாக வாசித்து கொண்டு வரும் போது, கடைசி தகவலும் படமும் ..... மனதை வலிக்க வைக்கிறது. .... இன்னைக்கு பூரா நினைச்சிக்கிட்டு இருக்க போறேன். :-(
கடற்கரைக்கு போனாலும் தூரமாக நின்று பார்த்திட்டு வந்துடணும். வளர்ந்தவர்களே இதில் அஜாக்கிரதையாக இருக்கும் போது வேறு என்ன சொல்வது. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
நானும் இது போல நிறைய நியூஸ்கள் படிப்பதுண்டு. குழந்தை பிறந்த போது பக்கத்தில் மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது, ஏழைகள் என்றாலே கேவலமாக நடத்துவது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இளம் கன்று பயம் அறியாது என்றாலும், பெற்றோர்களின் கட்டுப்பாட்டை மீறி எங்கும் செல்லாத, எதையும் செய்யாத குழந்தைகளாக இருந்தால் இதுபோன்ற ஆபத்துகளை பெரும்பாலும் தவிர்க்கலாம். அந்த நிகழ்வு மிகவும் சங்கடமாக உள்ளது. நாம் வருத்தமும், அனுதாபமும் தெரிவிக்கிறோம். ஆனால் அந்த பெற்றோர்களுக்கு எப்படி அது ஆறுதலாகும்? :(
சிகிச்சைக்கு வரும் எளியவர்கள் மருத்துவமனைகளில் அலட்சியப்படுத்தப்படுவது இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து நம் நாட்டில் மட்டுமே நடக்கும் இந்த கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எல்லா இடத்திலும் காசு விளையாடும்போது யார்தான் திருந்தப் போகிறார்கள்? :(
பகிர்வுகளுக்கு நன்றி ஸாதிகா அக்கா.
//ஓ.அதிஸ் அஞ்சறைப்பொட்டியில் மொத்தம் ஏழு அறை இருக்குமோல்லியா?அக்கா கணக்கில் கொஞ்சம் வீக்காக்கும்.ஹி..ஹி..//
திரும்பத் திரும்ப கணக்கில பிழை விடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), ஏழு அறை என்றால்.. அது ஏழறைப் பெட்டிதானே:)))(ஏழரைச் சனி அல்ல:))
//
அன்னியன் ஸ்டைலில் தண்டனை அவசியம்,,// சரியாகச்சொன்னிங்க ரஜீன்.:-)
//கண்டிபப உங்க பையனுக்கு ரொம்ப அதிர்சியா இருக்கும்// ஆமாம் ஜலீலா.அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததைதை அப்பொழுதுதான் பார்த்தேன்.
கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.
கருத்துக்கு மிக்க நன்றி அந்நியன்
நன்றி பிரியா,
//இன்னைக்கு பூரா நினைச்சிக்கிட்டு இருக்க போறேன். :-(
// பதிவு மனசை கனக்கச்செய்து ச்விட்டதா சித்ரா?:-(
//கடற்கரைக்கு போனாலும் தூரமாக நின்று பார்த்திட்டு வந்துடணும்.// இதைத்தான் பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி விட வேண்டியுள்ளது.கடற்கரையில் காலை நனைக்கிறேன்பேர்வழி என்று போவதாலத்தான் வினையே ஆரம்பிக்கின்றது நன்றி வானதி
//கடற்கரைக்கு போனாலும் தூரமாக நின்று பார்த்திட்டு வந்துடணும்.// இதைத்தான் பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி விட வேண்டியுள்ளது.கடற்கரையில் காலை நனைக்கிறேன்பேர்வழி என்று போவதாலத்தான் வினையே ஆரம்பிக்கின்றது நன்றி வானதி
வ அலைக்கும்சலாம் அஸ்மா.//இளம் கன்று பயம் அறியாது என்றாலும், பெற்றோர்களின் கட்டுப்பாட்டை மீறி எங்கும் செல்லாத, எதையும் செய்யாத குழந்தைகளாக இருந்தால் இதுபோன்ற ஆபத்துகளை பெரும்பாலும் தவிர்க்கலாம். அந்த நிகழ்வு மிகவும் சங்கடமாக உள்ளது. நாம் வருத்தமும், அனுதாபமும் தெரிவிக்கிறோம். ஆனால் அந்த பெற்றோர்களுக்கு எப்படி அது ஆறுதலாகும்? :(
// சரியாகச்சொல்லி இருக்கீங்க அஸ்மா.கருத்துக்கு நன்றி.
//திரும்பத் திரும்ப கணக்கில பிழை விடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), ஏழு அறை என்றால்.. அது ஏழறைப் பெட்டிதானே:)))(ஏழரைச் சனி அல்ல:))// அதீஸ்..எனக்கும் எப்பவுமே ஒரு டவுட்டு.அஞ்சறைப்பெட்டி என்றால் நடுவில் ஒன்றும்,சுற்றி ஆறும் மொத்தம் ஏழு பெட்டிகள்தான் இருக்கும்.ஆனால் அதற்கு அஞ்சறைபெட்டி என்று கூறுகின்றார்களே.ஆக்சுவலாக ஏழறைப்பொட்டி என்றுதானே கூற வேண்டும்?விஷயம் தெரிந்த அன்பர்கள் யாராவது வந்து நம் சந்தேகத்தை தீர்த்து வைப்பார்களாக.
மிக்க நன்றி ரத்னவேல் சார்
ஊருக்கு போன போது குடும்பத்துடன் வாரத்தில் இரெண்டு நாட்கள் கடற்கரை போவதுண்டு.
இங்கே வர 15 நாட்கள் முன் ரிலேட்டிவ் ஒருவர் குவைத் ரிட்டன் , தன் நண்பர்கள் 3 பேருடன் கடற்கரை போய் இருக்கிறார் . இவருக்கு பயம் அதனால் காலை கூட தண்ணீரில் வைக்க வில்லை
மீதி இரெண்டு பேரை அலை இழுத்து செல்ல காப்பாற்ற போய் இவர் மாட்டிக்கொண்டார் . மற்ற ரெண்டுப்பேர் திரும்ப வந்து விட்டார் .இவர் உயிருடன் வரவில்லை .
சின்னஞ்சிறு இரெண்டு குழந்தைகளுடன் அவர் மணைவி அழுதது இன்னும் கண்ணூக்குள் நிற்கிறது .((இன்னாலில்லாஹி ))
மறக்க நினைத்ததை மீண்டும் நினைவு படுத்திட்டீங்க :-((((
//ஓ.அதிஸ் அஞ்சறைப்பொட்டியில் மொத்தம் ஏழு அறை இருக்குமோல்லியா?அக்கா கணக்கில் கொஞ்சம் வீக்காக்கும்.ஹி..ஹி.//
அஞ்சறைன்னு சொல்லிட்டு ஏழரைன்னு திட்டுறீங்களே ஹா..ஹா... ஹய்யோ..ஹய்யோ..!! :-)
பதிவில் படிக்கவே சங்கடமாயுள்ளது
பெற்றோர்கள் இந்த இழப்பை எப்படித்தான்
தாங்கிக் கொள்வார்களோ
கடைசி பதிவும் மனம் சங்கடப் படுத்திப் போகிறது
மருத்துவத் தொழில் புனிதம் என்கிற நிலையைத் தாண்டி
வியாபாரப் பகுதிக்குள் முற்றிலும் நுழைந்துவிட்டது
விழிப்புணர்வு ஏற்படுத்திப் போகும்
தரமான பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்
//மாணவன் அபிநயசெல்வன் ஆத்மா சாந்தி அடையவும்,அபியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியையும்,பொறுமையை தரவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்.//
நாங்களும் உங்களுடன் சேர்ந்து வேண்டிக் கொள்கிறோம்.
இளங்கன்று பயம் அறியாது என்பதற்கு எடுத்து காட்டாய் உள்ளார்கள். பொறுப்புணர்ச்சி வர வேண்டும் மாணவ சமுதாயத்திற்கு.
உங்கள் மகன் நண்பரின் பிரிவு துயரத்திலிருந்து விடுபட இறைவன் அருள்வார்.
நீங்கள் ஊருக்குப்போய் இருந்த பொழுது நடந்த இன்ஸிடெண்ட் மிகவும் வருந்ததக்கது.அந்த முகம் அறியாத மனிதருக்காக வருத்தப்பட்டேன்,எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.கருத்துக்கு நன்றி ஜெய்லானி.
//விழிப்புணர்வு ஏற்படுத்திப் போகும்
தரமான பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்// வரிகளில் மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.தொடர்ந்து வருகை புரிந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி கோமதிஅரசு.
அருமையான பகிர்வு சகோதரி...ஹோட்டல் மற்றும் பிச்சைகாரர்கள் பற்றிய பதிவினை தனியே பதிவிட்டிருக்கலாம்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
முதல் பகிர்வு மனதை கனக்க வைத்து விட்டது. மூன்றாவது.. கண்டனத்துக்குரிய கவனக்குறைவு.
மனதை கனக்கச்செய்த பதிவு.
super!!
கடற்கரையின் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வு மிகையாக இருந்தும் ஆபத்தில் மாட்டிக்கொள்வதை என்னவென்று சொல்வது..
என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.. :(
வருத்தம் தரும் பதிவுகள் ஸாதிகா அக்கா! மறைந்த குருத்துக்களின் ஆன்மா சாந்தியடையப் ப்ரார்த்தனைகளும், அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்! :-|
ஹோட்டல் பதிவு விட்டுப்போச்சே..சூப்பர் ஹோட்டலா இருக்கும் போல! :)
///என்ன கொடுமை?கடுமையான உடனடி நடவடிக்கை மூலம் இது போன்ற நெஞ்சைப்பதறச்செய்யும் குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்கப்படவேண்டும்///இல்லாமையும்,இயலாமையும் ...இறையாண்மையை அல்லவா பதம் பார்க்கிறது....
அருமையான பகிர்வு
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
////ஹோட்டல் மற்றும் பிச்சைகாரர்கள் பற்றிய பதிவினை தனியே பதிவிட்டிருக்கலாம்...
வாழ்க வளமுடன்.
வேலன்.//// முதல்,கடைசியை தனிப்பதிவாகவே போட்டு இருக்கலாம்தான்.:-)
கருத்துக்கு நன்றி வேலன் சார்.
ராமலக்ஷ்மி கருத்துக்கு நன்றி.
வங்க லக்ஷ்மிம்மா கருத்துக்கு நன்றி.
கீதா6 கருத்துக்கு மிக்க நன்றி.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இர்ஷாத்
மிக்க நன்றி மகி கருத்திட்டமைக்கு.
// chella adimai said...
///என்ன கொடுமை?கடுமையான உடனடி நடவடிக்கை மூலம் இது போன்ற நெஞ்சைப்பதறச்செய்யும் குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்கப்படவேண்டும்///இல்லாமையும்,இயலாமையும் ...இறையாண்மையை அல்லவா பதம் பார்க்கிறது....// வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment