August 18, 2011

காலம் - நூல் விமர்சனம்

பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து காலம் என்ற பெயரில் கவிதாயினி மதுமிதா புனைந்த அறிவு செறிந்த கட்டுரைகளின் தொகுப்பு.அறிவியலையும்,இலக்கியத்தையும்,அனுபவத்தினையும் வெகு சுவாரஸ்யமாக இணைத்து எழுதி இருபத்தியாறு கட்டுரைகளையும் வாசித்து முடித்து புத்தகத்தை செல்ஃபில் வைக்க மனமில்லாமல் நூலின் ஆரம்பவரிகளை மீண்டும் விழிகள் மேய விழைந்தது நூலாசிரியருக்கு கிடைத்த வெற்றி.

கட்டுரை வடிவில் விருப்பம்,கட்டுரை வடிவபடைப்பில் இனம் புரியாத வசீகரம்,கட்டுரை எப்போதும் ஈர்ப்பது,கட்டுரை மீதான பிடிப்பு நூலாசிரியரின் பள்ளி கட்டுரை நோட்டில் எழுத ஆரம்பிக்கும் பொழுதே ருசித்து விட்ட நூலாசிரியரின் திறமை கட்டுரைகளின் ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலிக்கின்றது.

பெண்களின் பிறப்பு விகிதம் ஆண்களின் பிறப்பு விகிதத்தை விட பெருமளவில் குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரங்களுடன் கூறி பெண் குழந்தைகள் அழிக்கப்படாது பெற்றுக்கொள்ளப்படவேண்டுமென்பதை இவர் வலியுறுத்தி இருப்பதில் சமூக அக்கறை மேலோங்கி நிற்கின்றது.

கப் கப்பல் காப்பி என்ற தலைப்பிட்ட கட்டுரை நல்லதொரு குழந்தை மனயியல்.அனைத்து இளம் பெற்றோராலும் வாசிக்கப்படவேண்டியதொரு அவசியமானதொரு கட்டுரை.

பொருளாதாரச் சிந்தனை என்ற தலைப்பிட்ட கட்டுரையில் உங்களிடம் இரண்டு பசுக்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று ஒவ்வொரு துறையைச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டைச்சேர்ந்த மனிதர்களின் பொருளாதாரப்பார்வையில் பொருளாதார வல்லுநர்களின் சிந்தனை எப்படி எல்லாம் வரலாம் என்றதொரு பட்டியலை படிக்கும் பொழுது நகைச்சுவையாக மட்டுமின்றி,சிந்திக்கக்கூடியதாகவும்,நடைமுறையில் உள்ளதக்கதாகவும்.நவீனமாகவும் இருந்தது.

நிலை பெயராதமனிதர்கள் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் மரங்களைப்பற்றிய விழிப்புணர்ச்சி மிளிர எழுதப்பட்டது.அனைவரும் படித்து அனுசரிக்கவேண்டிய அறிவுரைகள்.

குர் ஆன் ஷரிபில் இருந்து மேற்கோள் காட்டி தேவையான விஷயத்தில் கவனமும்,சிரத்தையும் இருந்து இருக்கவேண்டும்.தெளிவாக செல்லும் பாதையிலென்றாலும் நாம் அடி யெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கண்ணுக்கு தெரிந்த ,தெரியாத வலைகள் பின்னப்பட்டுப்பட்டு இருக்க ஜாக்கிரதை உணர்வுடன் செல்லவேண்டிய வாழ்வியலை அழகாய் எடுத்து இயம்பி இருப்பது அபாரம்.

ஆசிரியர்: மதுமிதா ராஜா
பக்கம்: 144
விலை: 80
புதுமைப்பித்தன் பதிப்பகம்
57. 53ஆவது தெரு,
9வது அவென்யூ
அசோக் நகர்,
சென்னை - 8319 comments:

rajamelaiyur said...

Good work . .

rajamelaiyur said...

Thanks for introducing this book

ஆமினா said...

புத்தக அறிமுகத்துக்கு நன்றி அக்கா...

சந்தர்ப்பம் கிடைக்கும் போது படிக்கிறேன்....

Riyas said...

நல்ல விமர்சனம்

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா... இது எப்ப தொடக்கம் ஆரம்பித்திருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

படம் பார்த்ததும் ஸாதிகா அக்காவுக்கும் துணிவு வந்து:) இப்போ படம் போட்டிருக்கிறாவாக்கும் எனப் பார்த்தால், பொட்டு இருக்கூஊஊஊஊ:)).

புத்தகத் தகவலுக்கு மியாவும் நன்னி.

vanathy said...

Good introduction.

குறையொன்றுமில்லை. said...

நல்ல புத்தகம் அறி முகம் செய்திருக்கீங்க. நன்றி.எப்ப கிடைக்குதோ வாங்கி படிச்சுடனும்.

Yaathoramani.blogspot.com said...

நல்ல நூலை நல்ல விதமாக
அறிமுகப் படுத்தி
எங்களைப் படிக்கத் தூண்டியமைக்கு
வாழ்த்துக்கள்
இம்மாத பாட்டியலில் அந்த நூலைச்
சேர்த்துக்கொண்டேன்
ஸாதிகா அவர்களின் அறிமுகம் என்றால் சும்மாவா?
தெரிந்த நல்ல நூலகளை முடிந்தால்
தொடர்ந்து அறிமுகம் செய்யவும்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

நூல் விமர்சனம் நன்றாக உள்ளது ஸாதிகா.

Rathnavel Natarajan said...

நல்ல விமர்சனம்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

ஜெய்லானி said...

கதை , கட்டுரை இப்போ நூல் விமர்சனம் ஓக்கே நடத்துங்க :-))

அந்நியன் 2 said...

என்னையும்தான் தமிழ் வாத்தியார் கட்டுரை எழுது கட்டுரை எழுதுனு இம்ஷை படுத்தினார் அப்போ கட்ட்டுரை எழுதி இருந்தால் கண்டிப்பாக நானும் இடம் பெற்றுருப்பேன் உங்கள் அறிமுகத்திற்கு.

நல்லதொரு பகிர்வு வாழ்த்துக்கள்.

அக்காள் படித்துவிட்டு அந்த புக்கு அலமாரியில் சும்மாதானே இருக்கும் அப்படியே பார்சல் அனுப்பி வைக்கிறது.
எதுக்கு சொல்றேன் என்றால் அந்த புக்கு அடுத்தவருக்கு பயன் பெரும்லே அதுக்குத்தான்.(எப்பூடி... ஓசியிலே படம் பார்த்திடுவோம்லே)

Jaleela Kamal said...

புதிய அறிமுகம் , அருமையான விமர்சனம்

Ahamed irshad said...

உங்க‌ ரெவிவ்யூ அருமை.. வாழ்த்துக்க‌ள்..

மாய உலகம் said...

புத்தக அறிமுகத்திற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் said...

நல்லதொரு நூல் அறிமுகம். நன்றி அக்கா.

காலம் என்ற தலைப்பில் வண்ணநிலவனின் நாவல் ஒன்றும் இருக்கிறது. வாய்ப்புக்கிடைத்தால் வாசித்துப்பாருங்கள் அக்கா.

ஸாதிகா said...

கருத்திட்ட அனைவருக்கும் அன்பு நன்றிகள்.

மதுமிதா said...

பதிவுக்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.