March 25, 2011

நிறம் என்னடா நிறம் நிறம்பத்திரிகைகளில் பார்க்கிறோம்.மணமகள் தேவை விளம்பரத்தில்.”நன்கு படித்த,வேலைக்கு செல்லும்,நல்ல கலர் உள்ள மணமகள் தேவை.”படித்த..சரி..வேலைக்கு செல்லும் சரி..அதென்ன நல்ல கலர் உள்ள..?

மார்கெட் போகும் பங்கஜம் மற்ற காய்கறி வகையறாக்களை கால் கிலோவிலும்,அரைக்கிலோவிலும் வாங்கி விட்டு கேரட்டை மட்டும் 3 கிலோ வாங்குகின்றாள்.கூடவே சென்ற பரிமளம் “ஏண்டி மூன்று கிலோ கேரட் வாங்கி என்னடி செய்யப்போறே?” என்று கேட்டால் பதில் தடாலென்று வரும்.
“தினமும் கேரட் ஜூஸ் சாப்பிட்டால்தான் நல்ல கலர் கிடைக்கும்.பொண்ணுக்கு அலையன்ஸ் பார்க்கிறோமே.இதெல்லாம் பண்ணித்தான் ஆகணும்”

துபையில் இருக்கும் சீனு மனைவி உண்டாகி இருக்கிறாள் என்று டப்பா,டப்பாவாக குங்குமப்பூ வாங்கி பார்சல் போடுகிறான்.ஏன் என்றால் பிறக்கப்போகின்ற குழந்தை நன்கு சிகப்பாக பிறக்க வேண்டுமாம்.

“அம்மா,வெளியில் போய்ட்டு வர்ரேன்மா”சொல்லி விட்டு கிளம்பும் பையனிடம் ”டேய்..தெருவுலே அடிக்கற வெயிலை பூரா உடம்பிலே வாங்கிக்காதே.வெயில்லெ சுற்றினால் உடம்பு கருத்துப்போகும்.”பதைபதைக்கும் பெற்றவள்.

”ஒரே வாரத்தில் பளபளக்கும் வெண்மை’தொலைகாட்சி விளம்பரம் கண்டு பர்ஸை பறிகொடுப்பவர்கள் எத்தனை?

பிரசவவார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினரகள் பிரசவ அறையினுள் இருந்து வெளிப்படும் நர்ஸின் வருகையில் ஆர்வமாகி “என்ன குழந்தை”என்று கேட்டு தெரிந்து கொண்ட அடுத்த நொடி”பிள்ளை நல்ல கலராக இருக்கா”என்ற கேள்விதான் எழுகின்றது.’குறை இல்லாமல் இருக்கின்றதா’ என்ற கேள்விக்கே இடமில்லை.

கருப்பாக இருப்பவர்களைப்பார்த்து கவுண்டமணி ஸ்டைலில் ”அமாவாசையில் பொறந்தவனே”என்று கிண்டல் பண்ணுகின்றார்களே?ஏன் சிகப்பா இருப்பவர்களை “பவுர்ணமியில் பொறந்தவனே”என்று கிண்டல் பண்ணுவதில்லை?

சமீபத்திய நாளிதழ் செய்தி.’பெண் கருப்பாக இருக்கிறாள் என்று திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை ஓட்டம்’

ஆறு வயது சிறுமி தாயின் மடியில் படுத்துக்கொண்டு”அம்மா,அண்ணாவையும்,தங்கச்சியையும் நல்ல கலராக பெற்றுவிட்டு என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெற்றே?”

“ஹும்..இந்த கருப்புத்தோலை வச்சிண்டே புருஷனை இப்படி கைக்குள் போட்டுட்டாளே.கொஞ்சம் செவப்புத்தோலா இருந்தா கேட்கவே வேணாம்”முகவாய் கட்டையை தோளில் இடித்துக்கொள்ளும் நாத்தனார்.

வயதுக்கு வந்த பெண்ணிற்கு குங்குமப்பூவும்,பாதாமும்,பிஸ்தாவும் கொடுப்பதைப்பார்த்து சரி சத்துக்குத்தான் கொடுக்கிறார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை.இந்த சமயத்தில் இப்படி ஐட்டங்கள் கொடுத்தால்தான் பிற்காலத்தில் நல்ல நிறம் கிடைக்குமாம்.

ஒரு மாதத்தில் சிவப்பாக மாறுவது எப்படி என்ற புத்தகத்தினை வெளியிட்டு விற்பனை செய்யும் பதிப்பகங்கள் ஏன் நாலு மாதத்தில் கருப்பாக மாறுவது எப்படி என்ற நூல்கள் வெளியிடுவதில்லை?

கருப்பாகவோ,வெளுப்பாகவோ,மாநிறமாகவோ இருப்பது மனித சருமம் பெற்ற இயற்கை.அமெரிக்கன் வெளுப்பாகவும்,ஆப்ரிக்கன் கருப்பாகவும்,இந்தியன் மாநிறமாகவும் இருப்பது இயல்பு.இதில் நம்மவர்கள் இந்த சிகப்புக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதும்,பிரயத்தனப்படுவதும் வியப்பாகவும்,புதிராகவும் தான் உள்ளது.


சமீபத்தில் எங்கள் ஆங்கிலோ இந்தியன் டெனண்ட் வீட்டிற்கு அவரது உறவினர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார்.படித்து விட்டு பெரிய நிறுவனத்தில் எக்கசக்க டாலரில் சம்பளம் வாங்குகின்றாராம்.அவருக்கு இந்தியாவில் பெண் பார்க்க வேண்டுமாம்.”ஏன்?”என்று கேட்டால் “நல்ல காபி கலரில் பொண்ணு வேண்டுமாம்”
ஹ்ம்ம்ம்..இக்கரைக்கு அக்கரைப்பச்சை.

67 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அருமையான இடுகை

//வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போயி அரை நூற்றாண்டு மேலாகியும் அந்த வெள்ளைக் கலர் மேலுள்ள மோகம் குறையாமல். வெயில் பிரதேச நாட்டைச் சேர்ந்த நமக்கு தோல் கருப்பாகத்தான் இருக்கும் அதுதான் அழகு, ஆரோக்கியம் என்பதை கூட உணராமல். உணவுக்கு செலவழிப்பதை விட முகத்தை சிகப்பாக்க பேர் அன் லவ்லி கீரிம்களுக்கு செலவழிக்கிற மனநிலை எப்படி உருவாக்கப்பட்டது?//

பார்க்க:
http://valaiyukam.blogspot.com/2011/02/blog-post_25.html

நன்றி சகோ

Unknown said...

சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு ஜோக்கே இருக்க்குதுங்க, என்ன செய்ய அழகை பார்க்கிறவனுக்கு அறிவு இருக்க மாட்டேங்குது, சரி இவனுங்கதான் செகப்பா இருப்பானுங்க போல அதனால பொண்ணையும் கலரா கேட்கரானுங்கன்னு நினைச்சா, இவனுங்க கரிச்சட்டி மாதிரி இருக்கறானுங்க...

ஹுஸைனம்மா said...

என்னத்த சொல்ல அக்கா!! இந்தக் காலத்துப் பசங்களும் பொண்ணு பாக்க ஆரம்பிக்கும்போதே “சிவப்புப் பொண்ணு”தான் வேணும்னு அடிச்சுச் சொல்லிடுறாங்க. அதை எந்தப் பெற்றோராவது தவறுன்னு எடுத்துச் சொல்றாங்களா?

முற்றும் அறிந்த அதிரா said...

ம்ம்ம் ஸாதிகா அக்கா, எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்... வெள்ளையர்களுக்கு கருப்பின மக்களைத்தான் அதிகம் பிடிக்குமாம்...

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க,இங்க எல்லாரும் சிகப்புத்தோலுக்கு ஆலாப்பர்றக்கிராங்க.
வெள்ளைக்காரங்களோ எண்ணையை தடவிகிட்டு வேகாத வெயீல கருப்புதோலுக்காக சன் பாத் எடுக்கராங்க.
என்னத்தைச்சொல்ல.?

GEETHA ACHAL said...

என்னத சொல்வது..இது முக்கியமாக நம்ம தமிழ்நாட்டில் அதிகம்..

எங்க வீட்டிலும் நாம் மட்டுமெ கலர் கம்மி...ஆனால் வீட்டில் ஒருத்தர் கூட ஒன்றுமே சொன்னது இல்லை...ஆனால் வெளிநபர்கள் நிறையவே சொல்லி இருக்காங்க...இதில் என்ன ஒரு ஜோக என்றால் சொன்னவர்கள் எல்லாருமே நிறம் கம்மி....

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை ஸாதிகா.

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் சகோ ஹைதர் அலி.முதல் கருத்துக்கு நன்றி.அவசியம் உங்களது பதிவை பார்த்து கருத்திடுகின்றேன்.

ஸாதிகா said...

//அழகை பார்க்கிறவனுக்கு அறிவு இருக்க மாட்டேங்குது//ஓ..இப்படி வேறு இருக்கின்றதோ?உண்மைதான் சகோ கறிசட்டியைப்போல் இருப்பவருக்கு வெண்ணெய்கட்டிபோல் பொண்ணு வேண்டுமாம்.கேட்டால் இனி வரும் வம்சத்திலாவது பிள்ளைகள் சிகப்பு சிகப்பாக பிறக்க வேண்டுமாம்.

நன்றி சகோ இரவுவானம்.

ஸாதிகா said...

//இந்தக் காலத்துப் பசங்களும் பொண்ணு பாக்க ஆரம்பிக்கும்போதே “சிவப்புப் பொண்ணு”தான் வேணும்னு அடிச்சுச் சொல்லிடுறாங்க.// இன்னும் கொடுமையைக்கேளுங்கள்.கருப்பான மகளை வைத்துக்கொண்டு தோல் சிவந்த மாப்பிள்ளை பார்க்கின்றார்கள்.வெறும் பணபலத்தை மட்டும் வைத்துக்கொண்டு.கேட்டால் நான் சகோ இரவு வானம் அவர்களுக்கு கூறிய பதில் பின்னூட்டத்தில் உள்ள காரணத்தைக்கூறுகின்றனர்.

நன்றி ஹுசைனம்மா.

ஸாதிகா said...

//வெள்ளையர்களுக்கு கருப்பின மக்களைத்தான் அதிகம் பிடிக்குமாம்.// இந்த உண்மை இப்பொழுது அறிய வந்ததினால் பிறந்ததுதானே இந்த இடுகை.நன்றி அதிரா.

ஸாதிகா said...

//வெள்ளைக்காரங்களோ எண்ணையை தடவிகிட்டு வேகாத வெயீல கருப்புதோலுக்காக சன் பாத் எடுக்கராங்க// கரெக்டா சொன்னீங்க லக்‌ஷ்மியம்மா.நன்றி.

ஸாதிகா said...

உண்மைதான் கீதாஆச்சல்.தமிழ்நாட்டுக்காரவர்கள் தான் இந்த சிகப்புத்தோல் விஷயத்தில் ஆளாக பறக்கின்றார்கள்.நன்றி கருத்துக்கு.

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

Chitra said...

“ஹும்..இந்த கருப்புத்தோலை வச்சிண்டே புருஷனை இப்படி கைக்குள் போட்டுட்டாளே.கொஞ்சம் செவப்புத்தோலா இருந்தா கேட்கவே வேணாம்”முகவாய் கட்டையை தோளில் இடித்துக்கொள்ளும் நாத்தனார்.


...,.Height of stupidity! :-(

ஸாதிகா said...

//...,.Height of stupidity! :-(// என்ன செய்வது சித்ரா.இது காதுகளில் சகிக்க முடியாமல் வந்து விழும் அமில வார்த்தைகள்தான்.என்று திருந்துவார்களோ?கருத்துக்கு நன்றி.

Anonymous said...

ஒரே வாரத்தில் பளபளக்கும் வெண்மை’தொலைகாட்சி விளம்பரம் கண்டு பர்ஸை பறிகொடுப்பவர்கள் எத்தனை?
//
செம பாயிண்டு

Anonymous said...

கறுப்பு காரர்களை வைத்து ஃபேர் அண்ட் லவ்லி அடித்த கொள்ளை எக்கசக்கம்...ஈகோவையும் கிளப்பி விடுகிறார்கள் விளம்பரத்தில்

ஸாதிகா said...

//கறுப்பு காரர்களை வைத்து ஃபேர் அண்ட் லவ்லி அடித்த கொள்ளை எக்கசக்கம்...ஈகோவையும் கிளப்பி விடுகிறார்கள் விளம்பரத்தில்//உண்மைதான் சகோ சதீஷ் குமார்.விளம்பரங்கள் தவிர,மனிதர்களின் விருப்பங்களும் ஈகோவை கிளப்பி விடுகின்றது.கருத்துக்கு நன்றி.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

நல்ல அலசல்

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.கருத்துக்கு நன்றி.

தீபிகா said...

அருமையான பதிவுங்கோ

Unknown said...

உண்மையான பதிவு அக்கா... அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தப்பில்லை ஆனால் இதில் கலர் கிடைக்கும் என்று பலர் நம்பி ஆயிரம் ஆயிரமாக செலவு செய்வது தான் கஷ்டமாக இருக்கு...

நல்ல பகிர்வுக்கு நன்றி அக்கா

vanathy said...

நல்ல பதிவு. நிறம் பார்ப்பது எங்க ஆளுங்களிடமிருந்து எந்த ஜென்மத்திலும் போகாது. வெள்ளைகாரருக்கு எங்கள் நிறங்கள் மீது அலாதி ஆசை, பிரியம். என் மாமி ஒருவர் பொது நிறம். அவர் சொல்வார், அவரின் வேலை இடத்தில் இவரின் தோல் கலருக்கு பெரிய மதிப்பாம். இதெல்லாம் எங்க ஆட்களுக்கு புரியாது.

Menaga Sathia said...

//சமீபத்தில் எங்கள் ஆங்கிலோ இந்தியன் டெனண்ட் வீட்டிற்கு அவரது உறவினர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார்.படித்து விட்டு பெரிய நிறுவனத்தில் எக்கசக்க டாலரில் சம்பளம் வாங்குகின்றாராம்.அவருக்கு இந்தியாவில் பெண் பார்க்க வேண்டுமாம்.”ஏன்?”என்று கேட்டால் “நல்ல காபி கலரில் பொண்ணு வேண்டுமாம்”
ஹ்ம்ம்ம்..இக்கரைக்கு அக்கரைப்பச்சை.
// உண்மைதான் அக்கா...ஏந்தான் தமிழினம் இப்படி இருக்குதோ...நல்ல அலசல்!!

எனக்கெல்லாம் இப்படி பதிவெழுத யோசனையே வரமாட்டேங்குது..கதையாவது எழுதலாம்னு பார்த்தா அதுவும் வரல..

ஜெய்லானி said...

ஏகப்பட்ட சந்தேகம் கேட்டுட்டு பதிலையே சொல்லக் கானோமே :-))

எல்லாருமே வெள்ளையா இருந்தா அது நல்லாவா இருக்கும் ..அப்புறம் ஃபேர் அண்ட் லவ்லி , நிவியா , கிரீம் 21 , இமாமி நேட்சுரல் இதுக்கெல்லாம் வேலையே இருக்காதே :-)))

ஸாதிகா said...

தீபிகா கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

நெடுநாள் கழித்து வந்து இருக்கீங்க பாயிஜா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

// நிறம் பார்ப்பது எங்க ஆளுங்களிடமிருந்து எந்த ஜென்மத்திலும் போகாது// எல்லா ஆளுங்களிடமும் இருந்து போகாது வானதி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

நீங்கள் தான் வகை வகையாக சமைத்து அசத்த்றிங்களே மேனகா.கண்டிப்பாக இப்படி கட்டுரைகளும்,கதைகளும் பதிவிட இயலும்.முயற்சி செய்யுங்கள்.படிக்க ஆவலாக உள்ளோம்.நன்றி மேனகா

ஸாதிகா said...

ஃபேர்னஸ் ஐட்டங்கள் லிஸ்ட் எல்லாம் லிஸ்ட் போட்டு இருக்கீங்களே.அனுபவமா ஜெய்லானி?கருத்துக்கு நன்றி.

பித்தனின் வாக்கு said...

you are very true.

அந்நியன் 2 said...

அக்காள்.... படத்தில் இRUக்கும் சிகப்பு பெண் கருப்பு கலரைத்தான் அதிகமா உபயோகம் பன்னியிருக்கார் மெருகூட்டுவதற்க்கு.

நல்லதொரு அலசல் வாழ்த்துக்கள் !

Rangarajan said...

Manamthaan veluppaka irukka vendum!! karumai niram allathu sivappu niram ethu vendumanalum tharkala vigjaana murayil saathiyame..

Anisha Yunus said...

//ஒரு மாதத்தில் சிவப்பாக மாறுவது எப்படி என்ற புத்தகத்தினை வெளியிட்டு விற்பனை செய்யும் பதிப்பகங்கள் ஏன் நாலு மாதத்தில் கருப்பாக மாறுவது எப்படி என்ற நூல்கள் வெளியிடுவதில்லை?//

ஸாதிகாக்கா, அருமையான பதிவு. ஆனால் நிறத்தின் மீதுள்ள மோகம் யாரையும் விட்டுவைப்பதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுவே உண்மை. இங்கு அமெரிக்க பெண்களும் ஆண்களும் மாநிறத்தோல் வேண்டும் என்றுஅடிக்கடி Tanning செய்து கொள்கின்றனர். விளைவு, கேன்சரில் போய் முடிகிறது. சுப்ஹானல்லாஹ். இருக்கும் நிறத்தையும், அகத்தையும் புறத்தையும் மேம்படுத்தினாலே போதும். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொன்னதில் தவறில்லையே!!

ப்ரியமுடன் வசந்த் said...

//நல்ல காபி கலரில் பொண்ணு வேண்டுமாம்//

என்னவோ இந்தியா பொண்ணுங்களையெல்லாம் ப்ரூவும் சர்க்கரையும் போட்ட காபி மாதிரில நினைச்சுட்டானுங்க

நிறம் பற்றிய புரிதலுக்கு நிறைய பக்குவம் வேணும்க்கா..!எல்லாராலயும் சீக்கிரம் உணர்ந்துகொள்ளமுடியாது..!

Mahi said...

ஸாதிகாக்கா,//”நன்கு படித்த,வேலைக்கு செல்லும்,நல்ல கலர் உள்ள மணமகள் தேவை.”//இன்னும் இப்படிதான் மணமகள் தேவை விளம்பரங்கள் வருதா? ஹ்ம்ம்..நம்ம மக்களை திருத்தவே முடியாதுன்னு நினைக்கிறேன். டிவி-ல வர ப்ரோக்ராம்ஸ்லயும் இதே கண்டிஷனோடதான் வருவாங்க.
ஆனா எனக்கு தெரிந்த உறவு-நட்பு வட்டத்திலே இப்படி கண்டிஷன் போட்ட ஆட்கள் கிடையாது!

கலர் ப்ரச்சனை குறைந்துட்டு வருது,சீக்கிரம் முற்றிலுமாக காணாமப் போகட்டும். நல்ல பதிவு ஸாதிகாக்கா!

Asiya Omar said...

நல்ல அலசல்.ரொம்ப நாளாய் தோழி பதிவே போடலையேன்னு நினைச்சேன்.

பொன் மாலை பொழுது said...

// கருப்பாகவோ,வெளுப்பாகவோ,மாநிறமாகவோ இருப்பது மனித சருமம் பெற்ற இயற்கை.அமெரிக்கன் வெளுப்பாகவும்,ஆப்ரிக்கன் கருப்பாகவும்,இந்தியன் மாநிறமாகவும் இருப்பது இயல்பு.///

இதில் கொடுமையிலும் மகா கொடுமை என்னவென்றால் பட்டபடிப்பு படித்துவிட்டு (என்ன எழைவைத்தான் படித்தார்களோ!) கல்யாணம் ஆனா பெண்கள் எல்லாம் செய்யும் அலம்பல் மகா கொடுமை. தான் கருப்பு.தன கணவரும் கறுப்பாம் அதனால் , பிறக்கும் பிள்ளைகள் மற்றும் பெண் குழந்தைகள் மட்டும் வெள்ளையாக இருக்க வேண்டுமென கண்ட கழிசடைகளை வாங்கி பிறந்த குழந்தைகளின் மேல் தடவி தடவி விட்டு வருகிற போகிறவர்களிடம் எல்லாம் "என் பொண்ணு முன்னைவிட இப்போ கலரா இருக்காளா? என்று தங்களைத்தாங்களே ஏமாற்றிகொள்ளும் அறிவிலிகளாக இருப்பதாய் கண்டு மனம் நொந்தவன் நான். எதனை முறை சொன்னாலும் அவைகளை இந்த "படித்த மேதாவிகள்" காதில் போட்டுக்கொள்ளவோ, அறிவில் சேர்த்துக்கொள்ளவோ தயாராய் இல்லை. எல்லாம் விளம்பரம் செய்யும் கொடுமைகள்.

Kanchana Radhakrishnan said...

அருமையான பதிவு.

Anonymous said...

கருப்புதான் அழகு அது பலருக்கு புரிவதில்லை.

கருப்பாக இருக்கும் ஆண்களே சிகப்பா பெண் தேடுகின்றனர்!!!

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல பதிவு அக்கா.

அன்புடன் மலிக்கா said...

அதேயேன் கேக்குறீங்கக்கா. கருப்புன்னா என்னாசெய்யுதுன்னே தெரியலை சிலருக்கு..

ஏம்மா இத்தனை கருப்பான ஆளை கட்டிகிறேன்னு கேட்டே நோகடிக்கும் கூட்டமும் திரியுதுக்கா.

வெள்ளை சிகப்பு அலையுஞ்சி திரிஞ்சி கட்டுது. அதுக வீட்டுக்குள் நடக்கிறதுபாரு கூத்து..

எல்லாம் வெளிவேசமுன்னு தெரியலை
கருப்பின் குணம் புரியல
வேறென்ன சொல்ல.

நல்ல இடுகைக்கா..

Ahamed irshad said...

Unga Kobam niyamaanathuthaan... wonderful Thought's shadika akka :)

ஸாதிகா said...

// படத்தில் இRUக்கும் சிகப்பு பெண் கருப்பு கலரைத்தான் அதிகமா உபயோகம் பன்னியிருக்கார் மெருகூட்டுவதற்க்கு.
// அட..நான் இப்பதான் கவனிக்கிறேன்.கருத்துக்கு நன்றி அந்நியன்.

ஸாதிகா said...

சுதாகர் சார் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்ரி China

ஸாதிகா said...

நீங்களும் நல்லதொரு கருத்தினை கூறி இருக்கின்றீர்கள் பின்னூட்டம் வழியே.நன்றி அன்னு.

ஸாதிகா said...

//நிறம் பற்றிய புரிதலுக்கு நிறைய பக்குவம் வேணும்க்கா..!எல்லாராலயும் சீக்கிரம் உணர்ந்துகொள்ளமுடியாது..!
// கரெக்டா சொன்னீங்க தம்பி வசந்த்.மிக நீண்ட இடைவேளைக்குப்பின் வந்து பின்னூட்டியதற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//கலர் ப்ரச்சனை குறைந்துட்டு வருது,சீக்கிரம் முற்றிலுமாக காணாமப் போகட்டும்.// உண்மையானால் நன்றாகத்தான் இருக்கும்.நன்றி மகி.

ஸாதிகா said...

நன்றி தோழி ஆசியா

ஸாதிகா said...

//இதில் கொடுமையிலும் மகா கொடுமை என்னவென்றால் பட்டபடிப்பு படித்துவிட்டு (என்ன எழைவைத்தான் படித்தார்களோ!) கல்யாணம் ஆனா பெண்கள் எல்லாம் செய்யும் அலம்பல் மகா கொடுமை. தான் கருப்பு.தன கணவரும் கறுப்பாம் அதனால் , பிறக்கும் பிள்ளைகள் மற்றும் பெண் குழந்தைகள் மட்டும் வெள்ளையாக இருக்க வேண்டுமென கண்ட கழிசடைகளை வாங்கி பிறந்த குழந்தைகளின் மேல் தடவி தடவி விட்டு வருகிற போகிறவர்களிடம் எல்லாம் "என் பொண்ணு முன்னைவிட இப்போ கலரா இருக்காளா? என்று தங்களைத்தாங்களே ஏமாற்றிகொள்ளும் அறிவிலிகளாக இருப்பதாய் கண்டு மனம் நொந்தவன் நான். //கரெக்டா சொல்லி இருக்கீங்க சகோ சுக்கு மாணிக்கம்.நீண்ட கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி காஞ்சனா ராதா கிருஷ்ணன்

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மஹாவிஜய்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி தம்பி சரவணக்குமார்

ஸாதிகா said...

//ஏம்மா இத்தனை கருப்பான ஆளை கட்டிகிறேன்னு கேட்டே நோகடிக்கும் கூட்டமும் திரியுதுக்கா.
// இது நிறைய பேருக்கு ஏற்பட்ட அனுபவம்தான் மலிக்கா.என் தோழி ஒருத்தி கதை கதையாக சொல்லி காட்டியதை வியப்பாக கேட்டு இருக்கின்றேன்.கருத்துக்கு நன்றி மலிக்கா

ஸாதிகா said...

நன்றி இர்ஷாத்.கோபம் அல்ல.ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வெள்ளை நிறம் ஒரு குறைபாட்டின் வெளிப்பாடே என்பதை மறைக்க ஆரம்பத்தில் அத்தகையவர்கள் கிளப்பி விட்ட புரளி தான் "வெள்ளை நிறம் தான் அழகு" என்பது... இதை யாரும் புரிஞ்சுக்கராப்ல இல்லீங்க ஸாதிகா...:(((

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா..,இன்றைய சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொன்றையும் அழகான முறையில் சொல்லிட்டீங்க...
ஒவ்வொன்றும் நூற்றுக்கு நூறு உண்மை.உள்ளம் அழகாக இருக்க வேண்டும் என்பதை அறிபவர்கள்தான் எத்தனை பேர்....???
இதை படிக்கும் இளைய கூட்டம் மட்டுமில்லை மற்றவர்களும் உணர்ந்தால் சரி...
அப்புறம்... தாங்களுக்கு என் நினைவாக ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளவும் அக்கா....
நன்றி

அன்புடன்,
அப்சரா.

கோமதி அரசு said...

நல்ல பதிவு ஸாதிகா.

சிவப்பு மட்டும் தான் அழகு என்று யார் சொன்னதோ!

இப்போது ஆண்களையும் விட்டு வைக்கவில்லை சிவப்பழகு விளம்பரங்கள்.

Vijiskitchencreations said...

கலரில் என்ன இருக்கு. குணத்தில் தான் எல்லாமே அடங்கி இருக்கு இது தெரிந்தும் திருந்தாத மக்கள் தான் அதிகம்.

மாதேவி said...

நல்ல அலசல்.

Jaleela Kamal said...

சரியான பதிவு ஸாதிகா அக்கா

கருப்பா இருப்பவர்களுக்கு ஸ்கின் பிராப்ளம் வராது,
வெள்ளையா இருப்பவர்களுக்கு அடிகடி ஸ்கின் பிராப்ல்ம் வரும்.
என்ன் நிறமோ/

சிநேகிதன் அக்பர் said...

//இக்கரைக்கு அக்கரைப்பச்சை.//

இக்கரைக்கு அக்கரை சிகப்பு

அக்கரைக்கு இக்கரை கருப்புன்னும் சொல்லலாம். :)

உண்மையைச் சொல்லப்போனால் கலர் பார்க்க கூடாதுன்னு சொல்லிக்கொண்டே அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது வெக்கக்கேடு.

மனோ சாமிநாதன் said...

நல்ல பகிர்வு ஸாதிகா!

இதெல்லாம் நம் சமுதாயத்தில் வேறோடிப்போன விஷயம்! அத்தனை சீக்கிரம் இதெல்லாம் மாற‌ வாய்ப்பே இல்லை!

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா! தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ சிறுகதையாக இருக்கும், பொறுமையா வந்து படிக்கலாம்னு இப்போதான் படித்தேன். அருமையான ஒரு விழிப்புணர்வு பதிவு, வாழ்த்துக்கள்! இத்தனை நாள் பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேன் :( ஸாரிக்கா.

கலர் மோகம் கொண்ட இந்த மக்களை எண்ணி நானும் உங்களைப்போல் பலமுறை வருத்தப்பட்டிருக்கேன் ஸாதிக்கா அக்கா. நீங்கள் அதை சொல்லி புரிய வைத்த விதம் நச்சுன்னு இருக்கு.

'கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு'ன்னு தன் கணவனை (பாட்டுக்காகவோ விளையாட்டாகவோ அல்ல; உண்மையாகவே) சொல்கிற‌ மனைவியும், அதேபோல மனைவியை புகழ்கிற கணவனும் நம்மிடையே உண்டு என்பதை நினைக்கும்போது நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான், கலர் ஆசைக் கொண்டவர்களை புற‌க்கணித்தவர்களாய். வேறு என்ன செய்ய..!

Geetha6 said...

நல்ல பதிவு .