March 6, 2011

லேடீஸ் ஸ்பெஷலில் நான்இந்த மாத லேடீஸ் ஸ்பெஷலில் நான்

ஒவ்வொரு மாதமும் வலைப்பூவில் தேனெடுத்து சுவையூட்டும் ஒவ்வொரு பெண்பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உலகறியச்செய்யும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் பணி மகத்தானது.இம்மாத வலைப்பூதாரர் அறிமுகத்தில் என்னை அறிமுகப்படுத்திய லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் ஆசிரியை கிரிஜா ராகவன் மேமுக்கும் ,காரணகர்த்தவான அருமை தோழி தேனம்மை லெக்ஷ்மணனுக்கும் அன்பின் நன்றிகள் உரித்தாகட்டும்.

எண்ணம் போல் வாழ்வு

மனதின் எண்ணத்தைப்போல் வாழ்வு அமைவது என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லிச்சென்றார்கள்?எதனைப்பற்றி அடிக்கடி நினைக்கின்றோமோ அதுவே வாழ்க்கையில் நிஜமும் ஆகிப்போகின்றது என்பது பலர் அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை.

நம்மால் முடியும் என்ற தன்நம்பிக்கை,தன்னைப்பற்றிய அசாத்திய சுய நம்பிக்கை மனதில் நிறைந்து நின்றால் உண்மையில் நம்மால் எல்லாம் முடியும்.

நாம் கவனக்குறைவாக,அசுவாரஸ்யமாக இருக்கும் பொழுது,மனதில் உள்ள தன்னம்பிக்கை குறையும்.உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் செயல் பட்டால் நாடிய விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.நமக்கு செல்வம் வேண்டுமா?உடல் ஆரோக்கியம் வேண்டுமா?நல்ல கல்வி வேண்டுமா?மகபேறு வேண்டுமா?சந்தோஷம் வேண்டுமா?பத்திரிகையில் எழுத வேண்டுமா?எது தேவையோ அதனை முதலில் நினைவு முழுக்க கொண்டு வாருங்கள்.முயற்சித்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை மனதின் ஆழத்தில் இறுத்திக்கொள்ளுங்கள்.கண்டிப்பாக அது நடக்கும்.

சந்தோஷம் தேவை என்றால் அது கிட்ட என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டால் பலனளிக்கும் என்று சில நிமிடங்கள் செலவு செய்து ஆராயுங்கள்.சரி என்று பட்டதை செயல் படுத்துங்கள்.சின்ன விஷயத்தினையும் சந்தோஷமாக நினைக்கப்பழகுங்கள்.நிச்சயமாக நீங்கள் விரும்பும் சந்தோஷத்தை வெகு சீக்கிரமாகவே எட்டுவீர்கள்.


மணம் புரிந்து சில வருடங்கள் கழிந்தும் மகபேறு கிடைக்காத ஒரு பெண்இவ்வளவு மருத்துவம் செய்தும் கிட்டவில்லையே?இனி எங்கு நமக்கு அந்தப்பேறு கிட்டப்போகின்றது?” என்று அலுத்துக்கொண்டால் மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் வலிமை குன்றுவாள்.மகபேறு மருத்துவர்இந்த நம்பிக்கையின்மையே உனக்கு முதல் எதிரி.இந்த மனநிலை தொடர்ந்தால் எந்த மருத்துவமும் பலிப்பது கடினம்என்கின்றார்.விஞ்ஞான உண்மையும் இதுதான்.


பரிட்சைக்கு தயார் செய்து மகனையோ மகளையோ அனுப்பும் பொழுது நம்பிக்கை மிளிறும் வார்த்தைகளின்றிடேய்..ஒன் வேர்ட் ஆன்சரை கோட்டை விட்டுடாதேடா?எஸ்ஸே கரெக்டா எழுது.சின்ன தப்புன்னா மிஸ் மார்க்கை குறைத்துடுவாங்க.சூஸ் எழுதறச்சே குழப்பிக்காதேஇந்த ரீதியில் பள்ளி கிளம்பும் மகனை நெகடிவ் அப்ரோச்சால் குழப்பம் செய்து குழந்தையை டென்ஷன் செய்து நாமும் டென்ஷன் ஆவதை விடகண்ணா,நீ நல்லா பிரிப்பேர் பண்ணி இருக்கேடா.குழம்பாமல் எக்ஸாம் எழுது.நல்ல படியா எழுதுவே.கண்டிப்பா இந்த முறை கிளாஸ் பர்ஸ்டா வருவே.”என்று பாஸிடிவ் அப்ரோச்சில் குழந்தைகளை பரிட்சை எழுதி அனுப்பினால் குழந்தைகளுக்கும் இறுக்கம் தீரும்.நாமும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.


வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளுடன் நிறைவாக வாழவேண்டும் என்று மனதில் நினைத்தால் மட்டும் போதாது.அந்த நிலை கிட்ட என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அதனை நடைமுறை படுத்துவது மட்டு மின்றி,இப்படி எல்லாம் செயல் பட்டால் நிச்சயம் நாம் எண்ணிய இலக்கை அடைவோம் என்று மனதில் நிறைந்த நம்பிக்கையுடன் செயல் பட்டால் சிகரத்தை அடைவது சுலபம்.அதனை விட்டுஹ்ம்ம்ம்..என்ன செய்து என்ன செய்ய?சாண் ஏறினால் முழம் சறுக்குகின்றதுஎன்ற அலுப்பும்,சலிப்பும் மனதில் ஏற்பட்டால் இலக்குக்குறிய பாதை எப்படி கண்களுக்கு புலப்படும்?

தைரியமாக,தன்னம்பிக்கையுடன் இருக்க ஆசைத்தான்.அந்த எண்ணம் மனசு முழுக்க உள்ளதுதான்.என்ன இருந்து என்ன செய்வது?வாழ்க்கையில் சருக்கல்கள் மனவலிமையை,தன்னம்பிக்கையை தின்று விடுகின்றதேஎன்று சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.ஆனால் தன்னம்பிக்கையை,விடாமுயற்சியை,பாஸிடிவ் அப்ரோச்சை விடாப்பிடியாக மனதில் இறுத்திக்கொள்ளுங்கள்.உறுதியாக இருக்க மனதினை பழக்கிக்கொள்ளுங்கள்.எதிர்நீச்சல் போடுவதற்கும் தயக்கம் கொள்ளாதீர்கள்.சோர்வினை அகற்றி,சுறுசுறுப்பாக்கிகொள்ளுங்கள்.எதனை எண்ணினோமோ அதனை கண்டிப்பாக அடையமுடியும்,நல் விதை விதைத்து நல்லறுவடை செய்வோம்.
63 comments:

ராஜவம்சம் said...

லேடீஸ் ஸ்பெஷல்-வாழ்த்துக்கள்.

எண்ணம் போல் வாழ்வு சிந்திக்கவேண்டியது.

ஜெய்லானி said...

உங்களோட அந்த பக்கத்தையும் போட்டால் இன்னும் நல்லா இருந்திருக்குமே..!!

வடைப்போச்சே..!! அவ்வ்வ்வ்

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,முயன்றால் முடியாதது இல்லை தோழி.தெளிவாக உங்களைப்போல் சிந்திக்கும் பெண்களைப் பார்க்கும் பொழுது மனது மிகவும் மகிழ்ச்சியடைகிறது.மீண்டும் உங்கள் எண்ணம் போல் பல வெற்றிகளை அடைந்திட வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் தோழி.லேடீஸ் ஸ்பெஷல் பார்த்து விட்டு வருகிறேன்.

ஜெய்லானி said...

//எண்ணம் போல் வாழ்வு //

அருமையான வார்த்தை :-) இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

Unknown said...

vaazhthukkal madam...ungal vaarthaigal,ovvondrum arumai...miga avasiyamana positive approach manidhanukku thevai.

Jaleela Kamal said...

எண்ணம் போல் வாழ்வு தலைப்பும், பதிவும் அருமை, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா..,இந்த மாதம் லேடீஸ் ஸ்பெஷலில் நீங்களா... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
சகோதரர் ஜெய்லானி சொன்னது போல் அந்த பக்கத்தையும் போட்டிருந்தால் நாங்க பார்த்து ஆனந்தம் அடைந்திருப்போம்.ப்ச்ச்...
மென் மேலும் உங்கள் புகழ வளர வாழ்த்துக்கள் அக்கா...
\\எண்ணம் போல் வாழ்வு/// பதிவும் மிகவும் அருமை...
இதை நான் எனது அப்பா மூலம் கற்று கொண்ட பாடம்.மனதில் அந்த உறுதியும் முடியும் என்ற நம்பிக்கையோடு கொண்ட செயலும் சாதிக்க இயலும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை... அல்ஹம்துலில்லாஹ்.... உங்களை போன்றவர்களிடம் மூலம் நான் அதை மென் மேலும் நிறைய கற்று கொள்கிறேன்.
மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

athira said...

ஸாதிகா அக்கா.. என்னாது எல்லோருமே கலக்குறீங்க... கேட்க சந்தோஷமாகவே இருக்கு.

வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா, லேடீஷ் ஸ்பெஷல் புக்குக்கு ஓடர் கொடுத்திட்டேன் ஒரு கிழமையில வந்திடும், என் பக்கத்தில உங்கட படத்தோட போடப்போறேன்....:).

இந்தியா முழுக்க காட்டலாமாம் எங்களுக்குத்தான் காட்ட மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

நான் மட்டும் என்ன சும்மாவா இருக்கிறேன்,நானும்தான் கலக்கிட்டிருக்கிறேன்.. ரீக்கு சுகர் போட்டு.... எஸ்ஸ்ஸ்.

மீண்டும் வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா.

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் அக்கா..

Ahamed irshad said...

லேடீஸ் ஸ்பெஷல்-வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா...

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் ஸாதிகா..

உங்கள் எண்ணமும் கட்டுரையும் பேசியது அங்கே..:))

ஜெய் பொறுங்க இனி அடுத்து லேடீஸ் ஸ்பெஷல் அப்புறம் இவள் புதியவள் என ஸாதிகா ஸிக்சர் பவுண்டரியா அடிக்கப் போறாங்க..

நாம ரசித்து மகிழ்வோம்.:))

ஸாதிகா said...

ராஜவம்சம்,கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//உங்களோட அந்த பக்கத்தையும் போட்டால் இன்னும் நல்லா இருந்திருக்குமே..!! // ஜெய்லானி கண்டிப்பா அடுத்த முறை பக்கத்தை ஸ்கான் செய்து போட்டு விடுகிறேன்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கும்,ஊக்க வரிகளுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

//அருமையான வார்த்தை :-) இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
// வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜெய்லானி.

ஸாதிகா said...

சவிதா ரமேஷ் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஜலி வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் அப்சரா.நீள்மான கருத்துரைக்கு மிக்க நன்ரி.படிக்க மகிழ்வாக இருந்த்து.

ஸாதிகா said...

//இந்தியா முழுக்க காட்டலாமாம் எங்களுக்குத்தான் காட்ட மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
// ஹா..ஹா.. ஹா..அதிரா..ரொம்ப பற்களை கடிக்காதிங்கோ.அப்புறம் பொக்கைவாய் பாட்டியாகிடப்போறிங்க.அட்டையை படம் எடுத்துட்டு உள்ளே உள்ள பக்கத்தை படம் எடுக்கலாம் என்று கேமராவை ஆன் செய்தால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போச்சு.சரி பேட்டரியை சார்ஜ் பண்ணலாம் என்று பிளக் பாயிண்ட் அருகே சென்ற உடனே டப் என்று பவரும் கட் ஆகி விட்டது.என்னை என்ன பண்ணச்சொல்லுறீங்க அதிரா.அவ்வ்வ்வ்வ்வ்...கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வேடந்தாங்கல் கருன்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி இர்ஷாத்

ஸாதிகா said...

நன்றி தேனம்மை. உங்கள் ஊக்கிவிப்பும் இதில் பங்குண்டு.மிக்க நன்றி.

ttpian said...

மேலும் உயர வாழ்த்துக்க்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள்

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

இமா க்றிஸ் said...

சந்தோஷமாக இருக்கு ஸாதிகா. வாழ்த்துக்கள். @}->-- லேடீஸ் ஸ்பெஷல் கிடைச்சா நல்லா இருக்கும், இங்க இருக்கிற ஆட்களுக்குக் காட்டலாம். எங்கள் அனைவரதும் அன்பு வாழ்த்துக்கள். ;)

-இமா, க்றிஸ் & அருண்

Chitra said...

”தைரியமாக,தன்னம்பிக்கையுடன் இருக்க ஆசைத்தான்.அந்த எண்ணம் மனசு முழுக்க உள்ளதுதான்.என்ன இருந்து என்ன செய்வது?வாழ்க்கையில் சருக்கல்கள் மனவலிமையை,தன்னம்பிக்கையை தின்று விடுகின்றதே”என்று சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.ஆனால் தன்னம்பிக்கையை,விடாமுயற்சியை,பாஸிடிவ் அப்ரோச்சை விடாப்பிடியாக மனதில் இறுத்திக்கொள்ளுங்கள்.உறுதியாக இருக்க மனதினை பழக்கிக்கொள்ளுங்கள்.எதிர்நீச்சல் போடுவதற்கும் தயக்கம் கொள்ளாதீர்கள்.சோர்வினை அகற்றி,சுறுசுறுப்பாக்கிகொள்ளுங்கள்.எதனை எண்ணினோமோ அதனை கண்டிப்பாக அடையமுடியும்,நல் விதை விதைத்து நல்லறுவடை செய்வோம்.


...... well said!

Chitra said...

Ladies Special - Super news!
I am happy for you!

Congratulations!

enrenrum16 said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா... நல்ல கருத்துடனான இடுகை மனுதுக்கு உற்சாகத்தைத் தருகிறது.

ஸாதிகா said...

பதி,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

தமிழ்வாசி பிரகாஷ் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

இமா .குடும்பத்தினருடன் கூட்டாக சேர்ந்து வாழ்த்தியது என்னை குதூகலப்படுத்தியது.மிக்க நன்றி நட்பே.

ஸாதிகா said...

சித்ரா,பிடித்த வரிகளை காப்பி பேஸ்ட் செய்து பின்னூட்டுவதில் சூரர் நீங்கள்.இந்த முறை எனக்கு மிகவும் பிடிக்கின்றது.கருத்துக்கு நன்ரி.

ஸாதிகா said...

என் கருத்துக்கள் உங்களுகு உற்சாகம் தருகின்றது என்ற வரிகளில் நானும் உற்சாகம் அடைந்தேன் பானு.நன்றி

zumaras said...

ஸலாம்.
சிந்திக்கத் தூண்டும் ”வார்த்தை ஜாலம் எண்ணம் போல் வாழவு போன்ற இதுமாதிரியான பதிவுகளை தொடருங்கள் ..............

எம் அப்துல் காதர் said...

// அட்டையை படம் எடுத்துட்டு உள்ளே உள்ள பக்கத்தை படம் எடுக்கலாம் என்று கேமராவை ஆன் செய்தால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போச்சு.சரி பேட்டரியை சார்ஜ் பண்ணலாம் என்று பிளக் பாயிண்ட் அருகே சென்ற உடனே டப் என்று பவரும் கட் ஆகி விட்டது.என்னை என்ன பண்ணச் சொல்லுறீங்க//

இப்படியெல்லாம் சொல்லி எஸ்-ஆக முடியாது. அடுத்தப் பதிவுல அத போடுங்க. லேடீஸ் ஸ்பெஷல்-வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா...

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துகள் ஸாதிகா.. பவர் வந்தப்புறம் பக்கங்களையும் ஸ்கேன் செஞ்சு போடுங்க :-)))

பித்தனின் வாக்கு said...

good congrates

ஆயிஷா said...

லேடீஸ் ஸ்பெஷல்-வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அக்கா!!

vanathy said...

வாழ்த்துக்கள், அக்கா. அந்தப் பக்கத்தையும் போடிருக்கலாமே??!!

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் அக்கா...

உங்களுடைய படைப்புகள் அனைத்துமே அருமை...

Anonymous said...

முதலில் என் வாழ்த்துகள் உங்களுக்கு..

“எண்ணம் போல் வாழ்வு” நிஜமாகவே என் மனதில் தெளிவு ஏற்படுத்தி இருக்கிறது. நன்றி

ஸாதிகா said...

ஜும்ராஸ் உங்கள் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//இப்படியெல்லாம் சொல்லி எஸ்-ஆக முடியாது. அடுத்தப் பதிவுல அத போடுங்க. லேடீஸ் ஸ்பெஷல்-வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா.// ஹி..ஹி..இன்னும் போன கரண்ட் வரலே தம்பி.என்னை என்ன பண்ணச்சொல்றீங்க?நன்றி அப்துல்காதர்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்

ஸாதிகா said...

சுதாகர் சார் கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

ஆயிஷா வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸாதிகா said...

ஸ்பெஷல் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மேனகா

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வானதி.

ஸாதிகா said...

கிதா ஆச்சல் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மஹாவிஜய் கருத்துக்கு நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்பு ஸாதிகா அக்கா, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சமீபத்திய உங்களது பதிவுகளை படித்துப் பார்த்தேன். அனைத்தும் நல்ல கருத்தாழமிக்க பதிவுகள். உங்களது படைப்பு லேடீஸ் ஸ்பெஷலில் வந்ததுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எனது மனைவியும் உங்களுக்கு வாழ்த்துக்களும் ஸலாமும் சொல்ல சொன்னார்.

எண்ணம் போல வாழ்வு _ அருமையான தலைப்பில் எல்லோரும் சிந்திக்க வேண்டிய கருத்துகள். வாழ்த்துகள் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ஸாதிகா.

தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.எண்ணம் நல்லா இருந்தா எல்லாம் நல்லா நடக்கும் என்பார்கள்.

//எண்ணியவெல்லாம் எண்ணியபடியேயாகும்
எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்//

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் ஸாதிகா.

//தன்னம்பிக்கையை,விடாமுயற்சியை,பாஸிடிவ் அப்ரோச்சை விடாப்பிடியாக..//

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

அந்நியன் 2 said...

வாழ்த்துக்கள் சகோ.


ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த நம் நாட்டிலே ஆண்களுக்கு ஒரு அமைப்பும் இல்லாததது வெட்கமாக இருக்கின்றது.
இதோ பெண்களுக்கென்று எண்ணற்ற அமைப்புகள் எனக்கு தெரிந்தவை சில.

காப்பியில் சர்ர்க்கரை குறைவு என்று மனைவியிடம் சொன்னால் கூட மகளிரணி காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்று பதில் வருகின்றது.

நான் அனுப்பிய பணத்திற்கு கணக்குக் கேட்டால் அதுலாம் கேட்க்கக் கூடாதுன்னு மகளிர் மன்றம் போர்க் கோடி தூக்குது.

சரி கன்னத்திலே ஒரு அரை கொடுக்கலாம்னு பார்த்தால் கூட மகளிர் வன் கொடுமை சட்டத்திலே உள்ளே தள்ளிடுவேன் என்று சட்டம் மிரட்டு கின்றது.

இப்படி பல சோதனைகளை தாண்டி வந்து கொண்டிருக்கும் எங்களுக்கு ஒரு ஆதரவும் இல்லாதது வருத்தமாக இருக்கின்றது.

பற்றாக் குறைக்கு லேடிஸ் ஸ்பெசல் என்ற பிரபல இதழும் நற்சான்றிதழ் வழங்குகின்றது,பேசாமல் பெண்ணாக பிறந்தால் நல்லது என்று மனம் ஏங்குகின்றது.

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

ஸாதிகா said...

சமூகத்தில் ஆண்களுக்கு கிடைத்திருக்கும் சலுகைகளை பட்டியலிட்டால் புல்லரித்து விடுவீர்கள் அந்நியன் சார்.
//பற்றாக் குறைக்கு லேடிஸ் ஸ்பெசல் என்ற பிரபல இதழும் நற்சான்றிதழ் வழங்குகின்றது,பேசாமல் பெண்ணாக பிறந்தால் நல்லது என்று மனம் ஏங்குகின்றது.
//ஹ்ம்ம்..இதற்கே இப்படி சொல்லுகின்றீர்கள்.நாளை பெண்கள் தினத்தில் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையை [படித்துப்பார்த்து விட்டு என்ன சொல்லப்போகின்றீர்களோ?அது சரி சார்.மகளிர் தினம் என்று ஒரு நாளை எங்களுக்கென ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள்.ஆண்கள் தினம் என்று ஒரு நாள் உண்டோ?

Mahi said...

வாழ்த்துக்கள் ஸாதிகாக்கா! கரன்ட் இன்ன்ன்ன்ன்னும் வரலியா? அப்படியே போட்டோ போடாம எஸ்கேப் ஆக நினைக்காதீங்க,எவ்வளவு நாளானாலும் போட்டொ வரவரைக்கும் மறக்காம கேப்போம்ல?! ;)

நல்ல பாஸிட்டிவ் தாட்ஸ் எல்லாம் கொடுக்கிறீங்க! பாராட்டுக்கள்!

R.Gopi said...

ஸாதிகா....

லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பிடித்தமைக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

தாங்கள் இது போல் மேலும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

//எண்ணம் போல் வாழ்வு//

மிக மிக சரியா சொன்னீர்கள்...

அன்புடன் மலிக்கா said...

லேடீஸ் ஸ்பெஷல்-வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா...

/எண்ணம் போல் வாழ்வு //

அருமையான வார்த்தை :-) இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

ஆன்மீக மணம் வீசும் said...

ஸாதிகா
ம். ப்ளாக்ல கலக்கறீங்க.
இப்ப பத்திரிகையிலுமா?
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெமாமி

Geetha6 said...

வாழ்த்துக்கள் சகோ.