February 10, 2011

அட்மிஷன் அட்டூழியங்கள்
மூன்றரை வயது பேரனை ஸ்கூலில் சேர்ப்பதற்காக டிஸம்பரில் இருந்தே அலைச்சல் ஆரம்பமாகி விட்டது.அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்க க்யூவில் காத்திருந்து எங்கள் முறை வந்த பொழுது டேபிளின் முன் அமர்ந்திருந்த பெண் “பைவ் ஹண்ட்ரட் ருபீஸ்”என்றார்.மெலிதான அதிர்ச்சியுடன் ஹேண்ட் பேகில் இருந்து எடுத்துக்கொடுத்த பொழுது அடுத்த அதிர்ச்சி.”திங்கள் கிழமைக்குள் சப் மிட் பண்ணிட வேண்டும்.சப்மிஷன் பீஸ் 1500.நாட் ரீஃபண்டபிள்”

எதுவுமே பேசாமல் வெளியில் வந்து விட்டேன்.”இது பரவா இல்லை.கே கே நகரில் உள்ள ஒரு ஸ்கூலில் அப்ளிகேஷன் ஃபார்ம் 1000 ரூபாய்.அப்ளிகேஷன் சப்மிஷனுக்கு 3000 ரூபாய் வாங்குகின்றனர்”என்னருகில் அமர்ந்திருந்த பெண் கூறிக்கொண்டிருந்தார்.

தனியார் பள்ளி நிறுவனங்களில் கட்டணம் அதிகம் என்று கூக்குரல் இடும் பொழுது கூட “கட்டணம் அதிகம் இருந்தால் தரமும் அதிகமாகும்”என்று சொன்னவள்தான் நான்.

எனக்கு தெரிந்த ஆசிரியை நண்பி ஒருவர் ”ஒரு செக்‌ஷனில் 30 பிள்ளைகளுக்குள் வைத்து சொல்லிக்கொடுத்தால் எங்களாலும் சுலபமாக சமாளிக்க முடியும்.ஒவ்வொரு பிள்ளைகளிடமும் தனி கவனம் செலுத்த முடியும்.அதே போல் அதிகம் சம்பளம் கொடுத்தால்தான் நல்ல அனுபவம் உள்ள ஆசிரியர் வைத்துக்கொள்ள முடியும்.இதனால் அதிகம்கட்டணம் என்பது இன்றியமையாதது.இப்பொழுது கட்டணக்குறைப்பினால் ஒரு செக்‌ஷனில் 50 - 60 பிள்ளைகளை வைத்து சொல்லிக்கொடுக்கும் நிலை.போன வருடம் டிகிரி முடித்தவர்களை இந்த வருடம் ஆசிரியர் பணிக்கு அமர்த்த வேண்டிய நிலை.இந்த ரீதியில் சென்றால் எப்படி..?”என்று புலம்பித்தள்ளினார்.அவரது புலம்பலில் நியாயம் புரிந்தது.இதனை மற்ற பெற்றோர்களிடம் ஒரு முறை எடுத்து சொன்னபொழுது வாங்கிக்கட்டிக்கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு.

ஆனால் இந்த ஆண்டு எல் கே ஜியில் சேர்ப்பதற்கு நடக்கும் அட்டூழியங்களைத்தான் சகிக்க முடியாமல் இந்த பகிர்வு.
நான் ஏறி இறங்கிய பல பள்ளிகளில் அதனை பள்ளிகளாகவே நினைக்கத்தோன்றாத அளவிற்கு பக்கா வியாபாரஸ்தலமாகவே அதன் நடவடிக்கைகள் இருந்தது.

இன்னொரு ஸ்கூல்.குறிப்பிட்ட மொழி பேசுபவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.அவர்களுக்கு மட்டுமே அப்ளிகேஷன் விநியோகம் நடக்கின்றது.நாம் போய் கேட்டால் அடுத்த வாரம் அதற்கு அடுத்த வாரம் என்று தவணை சொல்லுகின்றனர்.அப்ளிகேஷன் வழங்குவதிலேயே இத்தனை பாராபட்சம் என்ரால் குழந்தைகளுக்கிடையே எப்படியெல்லாம் காட்டுவார்கள்?

இன்னொரு பிரபலமான ஸ்கூல்.1000 ரூபாய் கொடுத்து அப்ளிகேஷன் வாங்கி அதனை நிரப்புவதற்கு எத்தனிக்கும் பொழுது பிரஷர் உச்சபட்சத்தில் எகிறியது.கார் இருக்கா?வீடு சொந்த வீடா?வாடகை வீடா?சொந்த வீடு என்றால் தனிவீடா?பிளாட்டா?இப்படி கேணத்தனமான கேள்விகள்.

120 - 150 மாணவர்கள் மட்டுமே எல் கேஜியில் படிக்கும் வசதி உள்ள பள்ளியில் ஆயிரக்கணக்கில் அப்ளிகேஷன் விநியோகம் செய்து செமத்தியாக பணம் பார்த்து விடுகின்றனர்.

ஒரு பெரிய தொகை கொடுத்து பல பள்ளிகளில் அப்ளிகேஷன் வாங்கியாயிற்று.இனி நேர்காணல்.காத்திருக்கும் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளை டென்ஷனுடன் இது என்ன கலர்டா செல்லம்?இது என்ன ஃபுரூட்ஸ் “என்று கேள்வி கேட்டு கடைசி நிமிஷத்திலும் தயார் செய்த வண்ணமாக இருந்து, நேர்காணல் நடக்கும் அறைக்கு சென்றால் பிள்ளைகளுக்கு சொல்லித்தந்தவை அனைத்தும் வீண் என்பது போல் பெற்றோர்களிடம் தான் கேள்விகளை கேட்கின்றனர்.டொனேஷன் தொகையை சொன்னதும் பல பெற்றோர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை.அவ்வளவு பெரிய தொகையை டொனேஷனாக மறு நாளே கட்டிவிடவேண்டும் என்று கறார் ஆக கூறுகின்றனர்.குறிப்பிட்ட நாள் தவறி மறுநாள் பணத்தை கட்டச்சென்றால் “நேற்றோடு அட்மிஷன் முடிந்து விட்டது”என்று கூறுகின்றனர்.பிடிவாதமாக நின்றால் மேலும் 25 ஆயிரம் தந்தால்தான் அட்மிஷன் பண்ணுவோம் என்று பேரம் பேசி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஊட்டுகின்றனர்.

இந்த அட்மிஷன் அட்டூழியங்களால் இளம் பெற்றோர்கள் வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகிப்போவதுதான் உண்மை.இப்பொழுது பலரும் பேசிக்கொள்வது இதுதான் “பேசாமல் ஒரு ஸ்கூலை ஆரம்பித்தால் ரொம்ப சுலபமாக அம்பாணி ஸ்டேடஸுக்கு போய் விடலாம்”


21 comments:

Unknown said...

அதிக ஃபீஸ் வாங்குகிற பள்ளியில் தன் குழந்தை படிப்பதையே அந்தஸ்த்தாக நினைக்கும் பெற்றோர் இருக்கின்றவரை இதெல்லாம் தவிற்க்க முடியாது. அரசு பள்ளிகளில் குழந்தைகள் மிக மிக குறைவு.தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு அசைன்மெண்ட் நோட்டில் டெய்லி எழுதுவார்கள். நீங்கள் தான் வீட்டில் இருந்து உயிரைக்கொடுத்து சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்கள் பள்ளியில் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. மொத்தத்தில் எல்லோர்க்கும் பணம் வேண்டும் இந்த நடுத்தர வர்க்கம் எல்லாவற்றிலும் மாட்டிக்கொண்டு விழிக்கிறது.

Unknown said...

இண்ட்லி யில் சமிட் பண்ணுங்கோ.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி விஜயன் சார்.எற்கனவே சில தினங்களுக்கு முன்னர் போட்ட பதிவு இது.கைதவறுதலாக டெலிட் செய்து விட்டேன்.மீண்டும் பப்லிஷ் செய்தால் வந்திருந்த பின்னூட்டங்கள் ஏதும் மீண்டு வரவில்லை.

kobikashok said...

இணைப்பு கொடுத்துள்ளேன் அய்யா நன்றாக இருக்கிறது என்று http://enjoymails.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...

மும்பையில் இப்போது ஸ்கூல் பீஸ் ஒரு மடங்கு கூட்டி விட்டார்கள் போராட்டம் நடத்தி கேட்டால் சுப்ரீம் கோர்ட் போயி நோட்டீஸ் கொண்டு வர சொல்கிறார்கள் அங்கே வரை எவன் போவான் என்ற எண்ணத்தில் makkalum அவன் kedda peesai kodukkuraarkal.

MANO நாஞ்சில் மனோ said...

மும்பையில் இப்போது ஸ்கூல் பீஸ் ஒரு மடங்கு கூட்டி விட்டார்கள் போராட்டம் நடத்தி கேட்டால் சுப்ரீம் கோர்ட் போயி நோட்டீஸ் கொண்டு வர சொல்கிறார்கள் அங்கே வரை எவன் போவான் என்ற எண்ணத்தில் makkalum அவன் kedda peesai kodukkuraarkal.

kobikashok said...

நடுத்தர வர்க்கம் தான் இதில் மிகவும் பாதிக்கப்படுவது என்ன செய்வது ஆண்டவன் தான் காப்பாத்தனும்

Chitra said...

“பேசாமல் ஒரு ஸ்கூலை ஆரம்பித்தால் ரொம்ப சுலபமாக அம்பாணி ஸ்டேடஸுக்கு போய் விடலாம்”.... எல்லாமே வியாபாரமாக ஆகி போச்சு... :-(

Chitra said...

இது மீள்பதிவா?

ஆமினா said...

கொடுமைக்கா....

நினைத்த பள்ளியில் சேர்க்கணும்னு ஆசை பட்டா அவன் சொல்ற டொனேஷனுக்கு இன்னும் 10 வருஷம் என் வூட்டுக்காரரும் நானும் சம்பாதிச்சா தான் கட்ட முடியும் போலன்னு வந்துட்டேன்....


இது படிச்சதும் கமென்ட் போடாம போக முடியல...

நல்ல பள்ளியில் பேரனுக்கு அட்மிஷன் கிடைக்க வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

வேதனை தான் அக்கா...என்ன சட்டம் போட்டாலும் அத சத்தமில்லாம அழிச்சுபுடுறாங்கே...

Asiya Omar said...

தோழி ஸாதிகா,இப்ப தான் திரும்ப போஸ்ட் ஆனதை கவனிக்கிறேன்,நல்ல அக்கறையுள்ள பதிவு.அட்மிஷன் அட்டகாசம் எல்லா நாடுகளிலும் இருக்கு.

தூயவனின் அடிமை said...

அரசு பள்ளியில் படித்தவன் உயர் பதவிக்கு வரவில்லையா? நம் பிள்ளைகளை நாம் சரியாக வழி நடத்தினால் எல்லாமே முடியும். இது போன்ற கொள்ளையர்கள் உருவாவதையும் நாம் தடுக்கலாம்.

Unknown said...

Miga sariyana post.Correcta solli irukkeenga

அந்நியன் 2 said...

சாரிங்க இதுக்கெல்லாம் கொஞ்சம் கார சாரமா எழுதலாம்னு பார்த்தால் நான் கடைசி ஆளாப் போய் விட்டேன் அதுனாலே அடுத்த கட்டுரையில் பாப்போம்.

அருமையான பதிவு !

Jaleela Kamal said...

இதுப்போல பணத்த கரக்கிறாரக்ளே, இப்படி நலல் சம்பாதனை தான் அவர்களுக்கு

ஸாதிகா said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

ஸாதிகா said...

டெலிட் ஆன கருத்துக்களை மீண்டும் காப்பி பேஸ்ட் செய்கின்றேன்.

மெட்ரோ நகரங்களில் தான் இந்த பிரச்சனை அதிகம் என நினைக்கிறேன்.
By சிநேகிதன் அக்பர் on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/15/11

அருமையான பதிவு...ரொம்ப தெளிவா எழுதுறீங்க..இந்த காலத்து அம்மாக்கள் என்னமா கலக்குறீங்க என்னை பொறுத்தவரை படிக்கும் பிள்ளை எங்கு சேர்த்தாலும் படிக்கும்..ஃபீஸ் பிரபலம் பாரக்காமல் வீட்டுக்கு பக்கமாக குழந்தைகளிடம் பாராபட்சம் பார்க்காமல் படிப்பில் கவனம் செலுத்தும் அன்பாக நடத்தும் பள்ளியில் சேர்த்தி விட வேண்டும்.
By தளிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/15/11

ஸாதிக்காக்கா,படிக்கவே கொடுமையா இருக்கு! பசங்களைப் படிக்கவைப்பதே ஒரு மெகா மெகா ப்ராஜக்ட் ஆகிடும் போல இருக்கே!! என்ன புலம்பினாலும் படிப்பு விஷயத்துல அசட்டையா இருக்க முடியாதே..உங்க பேரனை ஸ்கூல்ல சேத்தாச்சா?
By மகி on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/14/11

ஸாதிக்காக்கா,படிக்கவே கொடுமையா இருக்கு! பசங்களைப் படிக்கவைப்பதே ஒரு மெகா மெகா ப்ராஜக்ட் ஆகிடும் போல இருக்கே!! என்ன புலம்பினாலும் படிப்பு விஷயத்துல அசட்டையா இருக்க முடியாதே..உங்க பேரனை ஸ்கூல்ல சேத்தாச்சா?
By மகி on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/14/11

நல்ல பதிவு ஸாதிகா! இப்போதெல்லாம் கல்வியும் வியாபாரமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இத்தனை பண‌ம் செலவு செய்தும் படிப்பில் தரமாவது இருக்கிறதா என்றால் பல பெற்றோர்கள் இல்லயென்றுதான் சொல்கின்றார்கள். எதிர்கால சிறு குழந்தைகளின் கல்வியறிவு என்பது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது. கார்ப்பரேஷன் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் இப்போது நல்ல சதவிகிதம் எடுத்து தேர்வாகிறார்கள். பெற்றோர்கள் எல்லாம் இந்த மாதிரி பள்ளிகளை விலக்கி வைக்க வேன்டும்!! ‌
By மனோ சாமிநாதன் on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/14/11

star picture = ஸ்டார் பதிவு.பயனுள்ள தகவல்
By zumaras on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/14/11

கருத்துக்கு நன்றி மஹாவிஜய்
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

கருத்துக்கு நன்றி கீதா ஆச்சல்.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

கருத்துக்கு நன்றி இளம் தூயவன்,
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

கருத்துக்கு நன்றி.இந்த வருடம் இங்கேயா செட்டில் ஆகப்போறிங்க?பேசாமல் அங்கிருந்தே படிக்க வைக்கலாம்.நன்றி அப்சரா
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

// பேசாமல் குழந்தைகளை வீட்டிலேயே படிப்பு சொல்லி குடுத்து பத்தாவது எழுத வேண்டிய வயதில் டுட்டோரியல் மூலம் எழுத வைத்து விடலாம். நான் அப்படித்தான் நினைக்கிறேன்.// அன்னு இதெல்லாம் பிராக்டிகலா பண்ணும் பொழுது உள்ள கஷடம் ஏராளம்.கருத்துக்கு நன்றி.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

//இங்கே எந்தக் கெடுபிடி, டொனேஷன் என்ற தொல்லை இல்லை. எல்லாமே இலவசம் தான். பிரேக் ஃபாஸ்ட் கூடசில பள்ளிகளில் இலவசமாக குடுப்பார்கள். நல்ல பதிவு, அக்கா// நீங்க கொடுத்து வச்சவங்க வானதி,நல்லா எஞ் சாய்ப்பண்ணுங்க.நன்றி கருத்துக்கு,
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

நன்றி காஞ்சனா
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா தோழி.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

நன்றி சித்ரா
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

//இந்தியாவுல இதெல்லாம் சாதாரணம்ங்க.. // இபடித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் போலும்.நன்றி தம்பி கூர்மதியான்.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

//இந்த ரேஞ்ஞில் போனால் குழந்தை பெற்று கொளவது குறையும். இந்தியாவில் ஜனத்தொகையும் குறைய வாய்ப்புகள் ஏராளம்.// நிஜம்தான் விஜி.கருத்துக்கு நன்றி.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/13/11

ஷர்புதீன் வருகைக்கு நன்றி.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/12/11

//விழுப்புரத்திலுள்ள ஒரு ஸ்கூலில் அம்மா அப்பா கிராஜுவேட்டா இருந்தால்தான் அட்மிஷனே கிடைக்கும் இது எப்படி இருக்கு :-// ஜெய்லானி இங்கு மட்டும் என்னவாம்.ஆயிரம் ரூபாய் கொடுத்து அப்ளிகேஷன் வாங்கிய பள்ளியில் இதே கதைதான்.கருத்துக்கு நன்றி.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/12/11

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.//நம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கணும் என்றால் அவர்கள் கேட்டதை கொடுத்து தான் ஆகணும்.// எல்லா பெற்றோர்களும் இப்படி நினைப்பதாலத்தான் அட்டூழியங்களும் நடைபெறுகின்ரது.நன்றி ஆயிஷா
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/12/11

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.//நம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கணும் என்றால் அவர்கள் கேட்டதை கொடுத்து தான் ஆகணும்.// எல்லா பெற்றோர்களும் இப்படி நினைப்பதாலத்தான் அட்டூழியங்களும் நடைபெறுகின்ரது.நன்றி ஆயிஷா
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/12/11

ரொம்பா அதிர்ச்சியாதான் இருக்கிறது இன்னொரு கொடுமை அம்மா அப்பா டிகிரி முடிச்சு இருக்கனும்.
By mahavijay on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/12/11

குறிப்பிட்ட பள்ளியில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் பெற்றோர்களை காரணம் சொல்லவா? கல்வியையும் வியாபாரம் ஆக்கியுள்ள மனிதர்களை காரணம் சொல்லவா?
By இளம் தூயவன் on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/12/11

உண்மை தான்...என்னத சொல்ல...நிறைய பள்ளிகளில் இப்படி தான் நடக்குது... donation, admission fee, school fee என்று பனத்தினை பிடுங்கிவிடுறாங்க.. அக்‌ஷ்தா குட்டியினை ஸ்குலில் சேர்க்கலாம் என்று PSBB ஸ்கூலில் விசாரித்தோம்...சும்மார் வருடத்திற்கு LKGயிற்கு போய் 1 லட்சம் ஆகும் என்றது போல் லிஸ்ட் கொடுத்தாங்க... என்னத சொல்ல...இருந்தாலும் குழந்தையினை பள்ளியில் சேர்க்க வேண்டுமே என்று பெற்றோரின் ஆசையினால் தான் அனைவருமே இந்த நிலைக்கு தள்ளப்படுகிறோம்...
By GEETHA ACHAL on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/11/11

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா...,எம்மாடியோவ்... உங்களோட இந்த பதிவை படித்ததும் ஒரு நிமிஷம் தலையை சுத்திடுச்சு..ஏன்னா..இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் நான் குழந்தைகளை ஊரில் சேர்க்க ஆயுத்தாமகி கொண்டிருக்கின்றேன்.ஒரு பிரவட் ஸ்கூலில் தான் சேர்க்க அட்மிஷன் பேப்பர் 500 ரூபாய்க்கு வாங்கி போட்டாச்சு...இனி மற்றதெல்லாம் குழந்தைகளை ஊருக்கு அழைச்சுட்டு வாங்க பேசிக்கலாமுன்னு சொல்லிட்டாங்க.... இந்த பதிவை படிச்சதும் ஒரு பக்கம் பயமாக இருக்கு அக்கா... இங்கே சித்ரா அவர்கள் சொல்லியிருப்பது போல் நல்ல படிப்போடு சேர்ந்து ஆக்டிவிட்டியும் உண்டே... குழந்தைகள் நிறைய தெரிந்து கொள்வார்கள் என்று நாம் தேடி நிறைய கொடுத்து போகதானே செய்கின்றோம்.இதை யாரும் மறுக்க முடியாது... ஹூம்....பார்க்கலாம்....மிகவும் பயனுள்ள விஷயத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா... அன்புடன், அப்சரா.
By apsara-illam on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/11/11

சுப்ஹானல்லாஹ் என்ன சொல்ல??? பேசாமல் குழந்தைகளை வீட்டிலேயே படிப்பு சொல்லி குடுத்து பத்தாவது எழுத வேண்டிய வயதில் டுட்டோரியல் மூலம் எழுத வைத்து விடலாம். நான் அப்படித்தான் நினைக்கிறேன். இன்னும் பல காரணங்களுக்காக குழந்தைகளை வீட்டில் வைத்தே சொல்லி கொடுப்பது என்பதுதேன் முடிவு. இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம். :)
By அன்னு on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/11/11

//கார் இருக்கா?வீடு சொந்த வீடா?வாடகை வீடா?சொந்த வீடு என்றால் தனிவீடா?பிளாட்டா?இப்படி கேணத்தனமான கேள்விகள்.// வாங்கி குடுக்கப் போறாங்களாக்கும்??????? இங்கே எந்தக் கெடுபிடி, டொனேஷன் என்ற தொல்லை இல்லை. எல்லாமே இலவசம் தான். பிரேக் ஃபாஸ்ட் கூடசில பள்ளிகளில் இலவசமாக குடுப்பார்கள். நல்ல பதிவு, அக்கா.
By vanathy on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

ஸாதிகா said...

பயனுள்ள தகவல்.
By Kanchana Radhakrishnan on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

அட இங்கேயும் அட்மிஷனுக்கு அல்லாடும் பெற்றோர்களை பார்க்கும் பொழுது மிக கஷ்டமாகத்தான் இருக்கு.நாங்களும் மிக கஷ்டப்பட்டு தான் அபுதாபியின் பிரபல பள்ளியிலும் இப்ப அல் ஐனிலும் அப்பா!.. வெறுத்தே போச்சி. நீங்கள் போடும் பதிவுகள் யாவும் சமுதாய நோக்கம் கொண்டு அசத்தலாக இருக்கு.
By asiya omar on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

Unmai unmai :(
By Chitra on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

இந்தியாவுல இதெல்லாம் சாதாரணம்ங்க..
By தம்பி கூர்மதியன் on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

முக்கியமான பதிவு அக்கா!! இந்த நிலையைப் பார்த்தால் வெளிநாட்டிலயே பிள்ளையை படிக்கவைக்கலாம்னு தோனுது..
By S.Menaga on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

என்ன சொல்வது எதற்க்கு எல்லாம் பனம் சேர்த்து வைக்கனும் என்ற கணக்கே இல்லை. ஒரு குழந்தை பிறக்கும் முன்பே நல்ல ஹாஸ்பிட்டல் நல்ல படியா டெலிவரி ஆகனும் என்று நல்ல மருத்துவமனையில் சேர்க்கனும் என்றால் நிறய்ய பணம் வேண்டும் இருந்து அப்பவே சேர்க்க தொடங்கி அது தொடர்கதை போல் போயி கொண்டே இருக்குமெ தவிர அடுத்து குழந்தை முதல் முறை பள்ளிக்கு அனுப்ப ,காலேஜ் அட்மிஷன். இந்த ரேஞ்ஞில் போனால் குழந்தை பெற்று கொளவது குறையும். இந்தியாவில் ஜனத்தொகையும் குறைய வாய்ப்புகள் ஏராளம். மக்களை குறை சொல்லவா, காசை வாங்கும் பள்ளிகளை சொல்ல்வா, அரசாங்கத்தை சொல்லவா?
By Vijisveg Kitchen on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

:)
By ஷர்புதீன் on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

இப்போதுள்ள நிலையில் கான்வெண்ட்தான் நல்ல பசையுள்ள பிஸினஸ் ..படிப்பா அப்படின்னா..?? விழுப்புரத்திலுள்ள ஒரு ஸ்கூலில் அம்மா அப்பா கிராஜுவேட்டா இருந்தால்தான் அட்மிஷனே கிடைக்கும் இது எப்படி இருக்கு :-(
By ஜெய்லானி on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

அஸ்ஸலாமு அழைக்கும் எல்லாப்பள்ளிகளிலும் இதே போல்த்தான் உள்ளது.என்ன செய்வது. நம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கணும் என்றால் அவர்கள் கேட்டதை கொடுத்து தான் ஆகணும்.
By ஆயிஷா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

பானு கருத்துக்கு நன்றி.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

கருத்துக்கு மிக்க நன்றி ஜலி.மிகவும் தெரிந்த பிரின்ஸ்பாலே கத்தரிக்காய் கடையில் பேரம் பேசுவது போல் பேசியதுதான் எனக்கு அதிர்ச்சி ஜலி.நீயும் வேண்டாம் உன் ஸ்கூலும் வேண்டால் என்று சுலபமாக சொல்லிவிட்டு வந்து விடலாம்.ஆனால் குளத்தோடு கோபித்துக்கொண்டு குளிக்காமல் இருந்தால் நஷ்டம் யாருக்கு என்று பொறுமை காக்க வேண்டிய நிலைமை.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

//ஸ்டார் பதிவரானதற்கு வாழ்த்துக்கள் :)), நல்லாருக்கு ஐகான். // குறைப்பா பார்த்து பாராட்டி இருக்கீங்க.எப்பவும் எனக்கு ஸ்டாரை பிடிக்கும்.கருத்துக்கு மிக்க நன்றி.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

நாஞ்சில் மனோ சார் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

//பேசாம, நாமளே குடும்பத்துக்கொரு ஸ்கூல்னு ஆரம்பிச்சுட்டா என்னன்னு தோணுது!! // டெரரா யோசிக்கறதில் நம்ம ஹுசைனம்மாவுக்கு நிகர் இல்லேங்கறதை மறுபடி நிரூபித்து விட்டீர்கள்.கருத்துக்கு நன்றி தங்கையே!
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

//~தலையணையை மாற்றுவதால், தலையிடி மாறாது// இறுதியில் ஒரு பஞ்ச் டயலாக்...சூப்பர் அதீஸ்.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

இராஜராஜேஸ்வரி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

//குறிப்பிட்ட பள்ளியில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் பெற்றோர்களை காரணம் சொல்லவா? கல்வியையும் வியாபாரம் ஆக்கியுள்ள மனிதர்களை காரணம் சொல்லவா? // அதான்.ஆனால்.இப்போதுள்ள நிலமை தங்கள் தகுதிக்கு மீறியும் செலவு செய்து பிள்ளகளை படிக்க வைக்க அநேக பெற்றோர்கள் தயாராக இருப்பதும் தான் வேதனை.கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

உண்மைதான சகோ எல் கே.எல்லாப்பள்ளிகளிலும் இதே போல்த்தான் உள்ளது.கருத்துக்கு மிக்க நன்றி!
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

ஸாதிகா said...

//குறிப்பிட்ட பள்ளியில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் பெற்றோர்களை காரணம் சொல்லவா? கல்வியையும் வியாபாரம் ஆக்கியுள்ள மனிதர்களை காரணம் சொல்லவா? // அதான்.ஆனால்.இப்போதுள்ள நிலமை தங்கள் தகுதிக்கு மீறியும் செலவு செய்து பிள்ளகளை படிக்க வைக்க அநேக பெற்றோர்கள் தயாராக இருப்பதும் தான் வேதனை.கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா.
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

உண்மைதான சகோ எல் கே.எல்லாப்பள்ளிகளிலும் இதே போல்த்தான் உள்ளது.கருத்துக்கு மிக்க நன்றி!
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

கருத்துக்கு மிக்க நன்றி கருன்
By ஸாதிகா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

அப்பாடி... எல்லா தகவல்களுமே பயங்கரமா இருக்கு...:(
By enrenrum16 on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

athaan business kku pathil School, collage ena aarampiththu panaththa allukiRaarkaL
By Jaleela Kamal on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

padippu viyaanbaaram aaki viddathu een shathikaa akkaa niingka pooyumaa ippadi.
By Jaleela Kamal on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

ஸ்டார் பதிவரானதற்கு வாழ்த்துக்கள் :)), நல்லாருக்கு ஐகான்.
By அரபுத்தமிழன் on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

//“பேசாமல் ஒரு ஸ்கூலை ஆரம்பித்தால் ரொம்ப சுலபமாக அம்பானி ஸ்டேடஸுக்கு போய் விடலாம்// இது நல்ல ஐடியாவா இருக்கே மக்கா...........
By MANO நாஞ்சில் மனோ on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

பிள்ளை பொறந்த கல்யாணம், காட்சிக்குச் சேமிக்கணும்னு சொன்னதுபோக, எல்.கே.ஜி.க்கே சேர்க்கணும்னு அட்வைஸ் பண்ற நிலையாகிப் போச்சு!! பேசாம, நாமளே குடும்பத்துக்கொரு ஸ்கூல்னு ஆரம்பிச்சுட்டா என்னன்னு தோணுது!!
By ஹுஸைனம்மா on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

ஸாதிகா அக்கா... ஒரு நாளைக்காவது வடை வாங்கலாம் என்றால் முடியேல்லை:(, சரி பறவாயில்லை. தேவையான பதிவுதான் ஸாதிகா அக்கா. இந்த அட்மிஷன் பற்றி இந்தியாவில் புலம்பாதவர்களே இல்லை.... நாங்கள் வீட்டிலும் இதுபற்றி அடிக்கடி டிஷ்கஸ் பண்ணுவதுண்டு. என்னைப்பொறுத்து, உலகம் அழிந்தால் ஒழிய இந்நிலை மாறாது.... இன்னும் கூடிக்கொண்டுதான் போகும்.... அரசியல் மாறினாலும்... இது மாறாது.. ~தலையணையை மாற்றுவதால், தலையிடி மாறாது~....
By athira on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

“பேசாமல் ஒரு ஸ்கூலை ஆரம்பித்தால் ரொம்ப சுலபமாக அம்பானி ஸ்டேடஸுக்கு போய் விடலாம் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பிக்கலாமே??
By இராஜராஜேஸ்வரி on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

குறிப்பிட்ட பள்ளியில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் பெற்றோர்களை காரணம் சொல்லவா? கல்வியையும் வியாபாரம் ஆக்கியுள்ள மனிதர்களை காரணம் சொல்லவா?
By Chitra on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

என் மனநிலையை சொல்லி இருக்கீர்கள். வெளிப்பபடியாகவே சொல்கிறேன் கே கே நகர் வாணி வித்யாலயாவில் கேட்டபொழுது அட்மிசன் முடிந்து விட்டது என்றனர் (ப்ரீ கே ஜி ) பிறகு இப்பொழுது அப்ப்ளிகேசன் தருகிறார்கள் . டொனேஷன் 20000 , முதலில் 5000 பிறகு முதல் காலாண்டு இறுதியில் 6000 இரண்டாவது காலாண்டு இறுதியில் 4000 மூன்றாவது காலாண்டு இறுதியில் 4000 இப்படி செல்கிறது. பழையப் படி வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து விடலாமா என்று யோசிக்கறேன்
By எல் கே on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் See., http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html
By sakthistudycentre-கருன் on அட்மிஷன் அட்டூழியங்கள் on 2/10/11