February 15, 2011

அஞ்சறைப்பெட்டி - 5

வங்கிகளில் சென்று பணம் எடுக்கும் பொழுது அனைவர் முன்னிலையிலும் பணத்தை வாங்கி எண்ண வேண்டியுள்ளது.இது திருடர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.பணம் பெற்றுக்கொள்ளும் கவுண்டரை சற்று மறைவாக வைத்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்தானே?
நாண்கு அல்லது ஐந்து அடி நீளமுள்ள மீன்பாடி வண்டிகளில் பத்து அடிக்கு மேலாக உள்ள கம்பிகள்,பைப்புகளை எப்படிப்பட்ட நெரிச்சலான போக்கு வரத்திலும் அனாசயாமாக கொண்டு செல்கின்றனர்.விளைவு பின்னால் வரும் வண்டிகளில் வருபவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது.நேற்று நடந்த இப்படிப்பட்ட விபத்தில் எங்கள் வீட்டிற்கு வரும் பிளம்பருக்கு கண்களில் செமத்தியான காயம் ஏற்பட்டு உள்ளது.போக்கு வரத்து போலீஸாரும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

இப்பொழுதெல்லாம் ஹாஸ்பிடல் என்று போனால் அரை நாள் முழுதாக செலவாகி விடுகின்றது.அங்கு காத்திருப்பவர்கள் தூங்கி வழிந்து கொண்டோ,அல்லது ஒலி வராமல் ஓடிக்கொண்டு இருக்கும் தொலைக்காட்சியின் ஒளிக்காட்சிகளையோ அசுவாரஸ்யமாக பார்த்துகொண்டு இருக்க வேண்டியுள்ளது.சமீபத்தில் சென்ற ஒரு மருத்துவ மனையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தனர்.நமக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிக்கொண்டு பொழுதை இனிமையாக ஓட்ட ஏதுவாக இருந்தது.இதனை அனைத்து இடவசதியுள்ள பிற மருத்துவ மனைகள் பின்பற்றலாமே.

இப்பொழுதெல்லாம் சில முக்கிய பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் பள்ளி விட்ட பிறகு போலீஸார் ரோந்து சுற்றுகின்றனர்.ஆங்காங்கு கும்பலாக நிற்கும் மாணவர்களை விரட்டிவிடுகின்றனர்.போலீஸார் தலை தெரிந்ததுமே கும்பலாக நிற்கும் மாணவ கூட்டம் சிட்டாக பறந்து விடுகின்றனர்.மாணவர்களை ஸ்நேகம் பிடிக்கும் முயற்சிக்கும் சமூக விரோதக்கூட்டத்தினரில் இருந்து பாதுகாப்பு கிடைகின்றது.வாழ்க சிட்டி போலீஸாரின் சேவை.

தங்கத்தின் விலை இப்பொழுது ஏறுமுகமாவே உள்ளது.சற்று விலை குறைந்தாலும் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாக உள்ளது.எவ்வளவு உயர்ந்தாலும் நகைக்கடையில் கூட்டத்திற்கு குறைவு இல்லை.பல கடைகளில் 1முதல் 5 சதவிகிதம் மட்டுமே சேதாரம் செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கின்றனர்.இது அவர்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகின்றது.தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

பீகாரில் பெரிய மூட்டையுடன் பதுங்கி பதுங்கி நடந்து சென்ற இருவரை போலீஸார் பிடித்து விசாரித்ததில் முட்டை நிரம்ப இறந்த காகங்களை வைத்து இருந்தனராம்.விசாரித்ததில் ரோட்டோர பாஸ்ட்ஃபுட் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்று இருக்கின்றனர்.இன்னொரு அதிர்ச்சி கரமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு காகங்களையும் எப்படி பிடித்தார்கள் என்று விசாரித்த பொழுது வெட்டவெளியில் உணவில் விஷம் கலந்து காகங்களை வேட்டை ஆடி விற்கின்றனராம்.விஷம் உண்டு இறந்த பிராணிகளின் இறைச்சிகளை சாப்பிடுபவர்களின் கதி.இறைவா!39 comments:

அரபுத்தமிழன் said...

பகிர்வுக்கு நன்றி சகோ.
//சாப்பிடுபவர்களின் கதி.இறைவா//
வெளிச்சத்துக்கு வராதது இன்னும் என்னவெல்லாம் இருக்கோ இறைவா

சக்தி கல்வி மையம் said...

வடை வாங்க வந்துட்டோம்ல ...

அரபுத்தமிழன் said...

//இப்பொழுதெல்லாம் ஹாஸ்பிடல் //
காலை மாலை திக்ரு செய்பவர்களுக்கு இது போன்ற காத்திருப்புகள்
வரப் பிரசாதமல்லவா, அரபிகள் குர் ஆனை ஓத ஆரம்பித்து விடுவார்கள்.

Jaleela Kamal said...

அஞ்சறை பெட்டி விஷியங்கள் ரொம்ப அருமை,

போலிசார் பள்ளி முடிந்த தும் ரோந்து போவது நல்ல விஷியம்

சக்தி கல்வி மையம் said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே...

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு. நடிகர் விவேக் (‘ரன்’ படம் என நினைக்கிறேன்) இதுபோல காக்கா பிரியாணியை தெரியாமல் சாப்பிட்டு விடுவதாக ஒரு காமெடி உண்டு. அது நிஜம் என்கிறதே கடைசித் தகவல்!

enrenrum16 said...

அப்ப நிஜமாவே அது காக்கா பிரியாணி தானா... நான் காமடின்னில்ல நினைச்சேன் :(... அதுவும் விஷம் சாப்பிட்ட காக்காவா...:(... எல்லாத்திலயும் ரொம்ப பயங்கரமான தகவல் இதுதான்...

அந்த நகைக்கடை...எனக்கும் சேம் டவுட்...;)

Unknown said...

காக்கா பிரியாணி என்பது இது தானோ. நான் முஸ்ல்லீம் சமுகத்தினரைதோழமையாக காக்கா என்று சிலர் அழைப்பது வழக்கம். அவர்கள் காக்கா கடையில் உள்ள பிரியாணி காக்கா பிரியாணி ஆகி இருக்கலாம் என்று நினைத்தால் உண்மையாகவே காக்காவா??????

எல் கே said...

கடைசி செய்தி மனதை கலங்க வைக்கிறது

Mahi said...

ஏதோ ஒரு படத்துல விவேக் காக்கா கறிய சாப்ட்டுட்டு 'கா..கா..'ன்னு கத்தினதுதான்நினைவு வருது ஸாதிகாக்கா. ஆனா நிஜத்திலே இது நடக்குது என்பது அதிர்ச்சியா இருக்கு! :-|


இன்ட்ரஸ்டிங் அஞ்சறைப்பெட்டி!

சுதர்ஷன் said...

// ஒலி வராமல் ஓடிக்கொண்டு இருக்கும் தொலைக்காட்சியின் ஒளிக்காட்சிகளையோ அசுவாரஸ்யமாக பார்த்துகொண்டு இருக்க வேண்டியுள்ளது//

உண்மை தான் ..ஆஸ்பத்திரி அனுபவம் ரொம்ப பிடிச்சிருக்கு :)

சிநேகிதன் அக்பர் said...

அனைத்தும் சேர்ந்த கலவை. அருமை.

அந்த கடைசி செய்தி ரோட்டோர கடைகளில் கறி சாப்பிடும் எண்ணத்தை மாற்றி விட்டது.

ஹுஸைனம்மா said...

//காத்திருப்பவர்கள் தூங்கி வழிந்து கொண்டோ//

ஆஸ்பத்திரியில காத்திருக்க மத்தவங்களைக் கவனிச்சுப் பாத்துகிட்டிருந்தாலே போதுமே - நேரமும் போகும்; பதிவெழுதவும் விஷயம் கிடைக்கும்!! :-)))))

புத்தக விற்பனை நல்ல விஷயம்தான்.

அஞ்சறைப் பெட்டியில எல்லாமே நல்ல (மசாலா தடவிய) காரமான டிப்ஸ்தான்!!

கோமதி அரசு said...

அஞ்சறைப்பெட்டியிலிருந்து வந்த விஷயங்கள் எல்லாம் நன்று.

விஷம் உண்டு செத்த காக்காவின் பிரியாணி சாப்பிட்டவர்களின் கதி நினைக்கவே மனம் பதறுகிறது.

நாஸியா said...

ஆஹா! காக்கா பிரியாணியாஆஆஆஆஆஆஆஆஆஅ!!!

Asiya Omar said...

அஞ்சறைப்பெட்டி பகிர்வு கூட உங்களின் சமூக அக்கறை தெரிகிறது ஸாதிகா.
நல்ல பதிவு.

GEETHA ACHAL said...

ஒவ்வொன்றுமே அருமை..

என்னத சொன்னாலும் குட்டி வண்டியில் அப்படி தான் ஜனங்கள் நிறைய load எற்றி சொல்வாங்க...திருந்தவே மாட்டாங்க..

தங்கம் விலை குறையுதோ இல்ல ஏறுதோ மக்கள் மனம் தங்கத்தின் மீது அளவிட முடியாத அளவிற்கு ஆசை அதன் மீது...

கடைசி கொடுமை...நல்ல வேலை நான் அதுமாதிரி கடையில் சாப்பிட்டது இல்லை...படித்தவுடன் விவேக் காமடி ஞாபகம் வருது...

அன்புடன் மலிக்கா said...

அஞ்சறைப் பெட்டியில் அனைத்தும் அருமையாக இருக்குக்கா அதே சமயம் அதிர்சியாகவுமுல்லயிருக்கு..

தொடர்ந்து அஞ்சரைபெட்டியின் வாசம் வீசட்டும்..

Menaga Sathia said...

அஞ்சறைப்பெட்டி கலக்கல்..

கடைசி பாராவைப் படித்ததும் திக்கென்றாகிவிட்டது...

பரவாயில்லை போலிசார் நல்லவேலை செய்கின்றனர்..வாழ்க!!

Kanchana Radhakrishnan said...

அஞ்சறைப்பெட்டி அருமை.

ஜெய்லானி said...

இப்படியே போனா இனும் கொஜ்ச நாளில எலி பிரியாணியும் வந்துடும் போல :-( (( ஒரு வேளை அதை மக்கள் விரும்புறாங்கப்போல ))

சமுத்ரா said...

nice continue...

சாந்தி மாரியப்பன் said...

வாசனையான பெட்டி..

Ahamed irshad said...

அருமையான‌ தொகுப்பு..

இராஜராஜேஸ்வரி said...

kaka piriyaniya.......//

All the posts are informatics.

vanathy said...

மருத்துவரிடம் போகும் போது நானே புத்தகங்கள் கையோடு கொண்டு செல்வேன். வரவேற்பறையிலும் நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார்கள். சிலர் வீட்டுக்கு வரும் புத்தகங்கள் படித்து முடித்ததும் தூக்கி வீசாமல் இங்கு கொடுத்து விடுவார்கள்.
நல்லா இருக்கு எல்லாமே.

அந்நியன் 2 said...

நல்ல உபயோகமான தொகுப்பு வாழ்த்துக்கள் சகோ !

பொன் மாலை பொழுது said...

பெட்டியில் நிறைய அறியவேண்டிய தகவல்கள். காக்கா மூட்டை - ரோட்டோரம் உள்ள கையேந்தி பவன்களை பார்த்தால் ஓடசெய்யும் பலரை!

ஸாதிகா said...

அரபுத்தமிழன்

கருன்

ஜலீலா

ராமலக்‌ஷ்மி

பானு

கே ஆர் விஜயன்

எல் கே

மகி

சுதர்சன்

அக்பர்

ஹுசைனம்மா

கோமதி அரசு

நாஸியா

ஆசியா

மலிக்கா

மேனகா’

காஞ்சனா

ஜெய்லானி

சமுத்ரா

அமைதிச்சாரல்

இர்ஷாத்

வானதி

அந்நியன்

சுக்கு மாணிக்கம்

இராஜராஜேஷ்வரி

கீதாஆச்சல்

கருத்திட்ட அன்புள்ளங்கள்
அனைவருக்கும் இனிய நன்றிகள்!

ஆயிஷா said...

அஞ்சறைப்பெட்டி பகிர்வு அருமை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அஞ்சறைப்பெட்டி அருமை.

R.Gopi said...

அஞ்சறைப்பெட்டி வழக்கம் போல் பல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது..

வங்கிகளில் இது போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது.. தொடரும் கொள்ளைகளை வங்கி நிர்வாகம் ஏன் தான் இப்படி வேடிக்கை பார்க்கிறதோ என்று தெரியவில்லை...

மீன்பாடி வண்டிகளையே அரசாங்கம் தடை செய்தால் கூட அனைவருக்கும் சந்தோஷமே... மிக மிக ஆபத்தான ஒரு வாகனம் அது..

மருத்துவமனையில் புத்தகம் விற்பனை... ஐடியா ஓகேதான்...பட், நம்ம மக்களுக்கு தான் புத்தகத்தை திறந்தாலே சூப்பர் தூக்கம் வந்துடுமே!

பள்ளி, கல்லூரி வாசல்களில் கூடியிருக்கும் அநாவசிய கூட்டத்தை கலைப்ப்து மிகவும் நல்லது... சமூக விரோதிகள் பல ரூபங்களில், பல விரோத காரியங்களுக்காக கூட்டம், கூட்டமாக இன்றைய இளைஞர்களை வலைவீசி தேடுகிறார்கள்...

தங்கம் என்று காகிதத்தில் எழுதி தான் பார்க்க வேண்டும் போலுள்ளது.. டிமாண்ட் குறையாத வரை, விலையும் குறைய வாய்ப்பில்லை...

காக்கா கறி... விவேக் ஒரு படத்தில் இதை ஒரு நகைச்சுவை காட்சியாகவே வைத்திருப்பார்...

வெளியில் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி...

ஸாதிகா said...

ஆயிஷா கருத்துக்கு மிக்க நன்றி

தோழி பிரஷா கருத்துக்கு மிக்க் நன்றி.

கோபி நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

மாதேவி said...

நல்ல தகவல்கள் அடங்கிய அஞ்சறை பெட்டி.

Julaiha Nazir said...

அஸ்ஸலாமுஅலைக்கும் லாத்தா நலமா அஞ்சறைப்பெட்டி நல்ல பகிர்வு கடைசியில் உள்ள விஷம் உண்டு செத்த காக்காவின் பிரியாணி சாப்பிட்டவர்களின் கதி நினைக்கவே மனம் பதறுகிறது.தொடரட்டும் உங்களின் எழுத்துக்கள்

Unknown said...

உங்கள் தகவல்கள் அனைத்தும் உபயோகமாக,பயனுள்ளதாக உள்ளது.அதிலும் அந்தக் கடைசிச் செய்தி ஒரு விழிப்புனர்ச்சியைத் தூண்டுகிறது.

ஸாதிகா said...

மாதேவி கருத்துக்கு மிக்க நன்றி.

ஜுலைஹா வ அலைக்கும் வஸ்ஸலாம்.நீண்ட நாட்களாக பதிவுலகம் பக்கமே ஆலையே காணோமே?கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ஜி ஜி கருத்துக்கு மிக்க நன்றி.

Kannan.S said...

//பணம் பெற்றுக்கொள்ளும் கவுண்டரை சற்று மறைவாக வைத்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்தானே?//

கவுண்டரை மட்டும் தான் மறைவாக வைக்க வேண்டுமா? அப்ப செட்டியாரை??