October 4, 2010

இனிய இல்லம்

ஒரு பாடல் வரிகள் உண்டு."சொர்க்கம் என்பது நமக்கு,சுத்தம் உள்ள வீடுதான்;சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்"எத்தனை அழகிய வரிகள்.சிலர் வீடுகளுக்குள் நுழைந்தால் அவர்கள் தரும் காப்பி கோப்பையை தொடவே அருவெறுப்பாக இருக்கும்.சுத்தம் அந்தளவு இருக்கும்.இதற்கு எதிர் மாறாக வேறு சில வீடுகளுக்குள் நுழைந்தால் மனதே ரம்யமாகி விடும்.பளபளக்கும் சுத்தத்தைப்பார்க்கும் பொழுது நாம் இவற்றை எவை எல்லாம் ஃபாலோ செய்து நம் வீட்டு சுத்தத்தினை இன்னும் மேம் படுத்திக்கொள்ளலாம் என்று மனம் அசை போடும்.

சிலருக்கு வீட்டினை தூய்மைப்படுத்துவது தூங்குவது,சாப்பிடுவது போல் அன்றாட வேலையாக,ஏன் மூச்சு விடுவது போல்.இதற்கு எதிர்மாறாக மற்ற சிலருக்கோ "ப்ச்ச்.."என்ற அலட்சிய மனோபாவம்.

நீங்கள் நுழையும் வீடுகள்,உங்கள் தெரிந்த,நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளை சற்று நேரம் மனக்கண்ணில் அலசுங்கள்.அசுத்தனமான இல்லங்களுக்கு சொந்தக்கார்களின் இல்லங்கள் அதகளமாக இருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் வீட்டில் எப்பொழுதும் இரைச்சலும்,கூச்சலும்,கணவன் மனைவி சச்சரவும்,ஒழுங்கில்லாத குழந்தைகளும்,பண்பில்லாத பழக்கவழக்கங்களும்,இன்னும் சொல்லப்போனால் ஒரு சுபிட்சமில்லாத வாழ்க்கை சூழ்நிலை இருக்கும்.ஆள் இல்லாத அறைகளில் விளக்குகளும்,மின்விசிறிகளும் சர்வசாதராணமாக ஓடிக்கொண்டிருக்கும்.எந்த வித ஒழுங்கும்,கட்டுபாடுகளும் இருக்காது.வேலை பார்ப்பவர்களால் அடிக்கடி சின்ன,பெரிய திருட்டுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.எல்லா செயல்களிலும்,நடவடிக்கைகளிலும் அலட்சிய மனப்போங்கு,ஸ்திரமாக முடிவெடுக்காத்தெரியாத தயக்கம்,இன்னும் எவ்வளவோ ரசிக்கதகாத அம்சங்கள் நிறைந்திருக்கும்.

தூய்மையான இல்லங்களுக்கு சொந்தக்கார குடும்பங்களை இப்பொழுது மனக்கண்ணில் அலசுங்கள்.கண்டிப்பாக சுபிட்சம் நிறைந்த,நிறைவான குடும்பமாக,தெளிவான சிந்தனை உள்ளவர்களாக,அமைதி நிறைந்த குடும்பமாக முதல் குடும்பத்திற்கு நேர் எதிர் அம்சங்கள் நிறைந்த அழகிய குடும்பமாக ,மற்றவர்களுக்கு முன்மாதிரியான குடும்பமாக திகழும்.

சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன்.வீட்டு சூழ்நிலையைப்பார்த்து விட்டு எனக்கு தலையே சுற்றி விட்டது,போர்க்களம் போல் வீடு காட்சி அளித்தது.சுத்தம் செய்யாத டம்ளர்கள்,ஈரடவல்கள்,சோபா மீது ஒரு செல்ஃப் முழுக்க அடுக்கி வைக்கும் அளவு பொருட்கள்,தரையில் அப்படி அப்படியே கிடக்கும் துணிகள்,கலைந்து போன பேப்பர் கற்றைகள்,ஒட்டடை தொங்கும் சுவர்கள்,பிசுபிசுப்பான தரைகள்..அடுக்கிக்கொண்டே போகலாம்.இப்படியான பரமரிப்பு இல்லாத இல்லங்களைக்காணும் பொழுது அறுவெறுப்புத்தான் மிஞ்சுகின்றது.

இதற்கு நேர் எதிராக இன்னொருவர் இருக்கின்றார்.நம் வீட்டிற்குள் வந்தாலே செருப்பை வாசலுக்கு எதிரே கழற்றி வைக்காமல் ஒரு ஒரமாக கழற்றி வைப்பார்.அந்த ஒரு ஜோடி செருப்பு கூட கழற்றி வைப்பதில் ஒரு நேர்த்தி இருக்கும்.

உள்ளே நுழையும் பொழுதே கால் மிதி சற்று கோணல் ஆக இருந்தால் தன் கால்களால் சரி செய்து விட்டுத்தான் உள்ளேயே நுழைவார்.ஷோபாவில் உட்காரும் நேர்த்தி,காப்பிக்கோப்பையை காலி செய்துவிட்டு அதன் கைப்பிடி இருக்கும் பகுதியைக்கூட ஒரு நேர்த்தியுடன் திரும்ப வைக்கும் பொழுது பிரமித்துப்போய் இருக்கின்றேன்.இப்படிப்பட்டவர் தனது இல்லத்தை எப்படி வைத்து இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்படிப்பட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் போல் இருக்கும்.

நம்முடைய பொருட்கள்,உடமை,வீடு அனைத்தும் இறைவன் நமக்குகொடுத்த அருட்கொடைகள்,பாக்கியங்கள்.அதனை முறைப்படி பராமரித்து சுத்தப்படுத்தி,ஏனோதனோ என்றிராமல்,ஒரு முன்மாதிரியாக இருந்தால் இல்லம் இனிய இல்லமாகிவிடும்.மனமும் நிறைந்ததாகிவிடும்.மற்றவர்கள் அதனைக்காணும் பொழுது நம் பால் உள்ள மரியாதை அதிகரிக்கும்.

சிறிய வீடோ,பெரிய வீடோ,பழைய வீடோ ,புது வீடோ வீடு,சொந்தவீடோ,வாடகை வீடோ நம்முடையது,நாம் ஜீவிப்பது..அதனை சுத்தமாகவும் சுகாதாரமாகும் வைத்திருப்பது நமது கடமை.ஆணும் சரி,பெண்ணும் சரி இருவரும் சேர்ந்தே இதில் ஈடுபாடு காட்டினால் பிற்காலத்தில் குழந்தைகளும் அதனைப்பின் பற்றுவார்கள்.

அடுத்த இடுகையில் வீட்டு பராமரிப்பில் எதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம் எனபதைப்பற்றி அலசுவோம்.

28 comments:

Jaleela Kamal said...

இனிய இல்ல பதிவு அருமை.

Jaleela Kamal said...

இந்த பதிவ படிப்பதன் மூலம் சிலருக்கு சுத்தம் செய்வதில் விழிப்பு வரும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சுத்தம் சோறு போடும்.. சுத்தம் சுகாதாரம் வீட்டையும் நாட்டையும் வளப்படுத்தும். சரியாச்சொல்லிருக்கீங்க ஸாதிகா அக்கா..

தொடருங்கள். வட போச்சே..

நட்புடன் ஜமால் said...

nice thoughts ...

keep going ...

Asiya Omar said...

நம்முடைய பொருட்கள்,உடமை,வீடு அனைத்தும் இறைவன் நமக்குகொடுத்த அருட்கொடைகள்,பாக்கியங்கள்.அதனை முறைப்படி பராமரித்து சுத்தப்படுத்தி,ஏனோதனோ என்றிராமல்,ஒரு முன்மாதிரியாக இருந்தால் இல்லம் இனிய இல்லமாகிவிடும்.மனமும் நிறைந்ததாகிவிடும்.மற்றவர்கள் அதனைக்காணும் பொழுது நம் பால் உள்ள மரியாதை அதிகரிக்கும்.

-அருமை ஸாதிகா.தொடருங்கள்.

ஹுஸைனம்மா said...

//அந்த ஒரு ஜோடி செருப்பு கூட கழற்றி வைப்பதில் ஒரு நேர்த்தி இருக்கும்.//

நானும் இப்படிப்பட்ட ஆளுதான். ஆனா, இதை வீட்டய்யாகிட்டயும், பிள்ளைங்ககிட்டயும் நடைமுறைப்படுத்துறதுல உள்ள சிக்கல்கள் இருக்கே, அப்பப்பா... தினம் தினம் போராட்டம்தான்.. இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கக்கக்கா..

Gayathri said...

super

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஜலி.//இந்த பதிவ படிப்பதன் மூலம் சிலருக்கு சுத்தம் செய்வதில் விழிப்பு வரும்//நிகழ்ந்தால் மகிழ்ச்சிதான்

ஸாதிகா said...

//
சுத்தம் சோறு போடும்.. சுத்தம் சுகாதாரம் வீட்டையும் நாட்டையும் வளப்படுத்தும்// நீங்களும் சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள் ஸ்டார்ஜன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ஊக்க வரிகளுக்கு நன்றி சகோ ஜமால்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஆசியா

ஸாதிகா said...

//நானும் இப்படிப்பட்ட ஆளுதான். ஆனா, இதை வீட்டய்யாகிட்டயும், பிள்ளைங்ககிட்டயும் நடைமுறைப்படுத்துறதுல உள்ள சிக்கல்கள் இருக்கே, அப்பப்பா... தினம் தினம் போராட்டம்தான்.. இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கக்கக்கா.// 50 சதவிகிதமாக உள்ள உங்கள் பராமரிப்பை 95 சதவிகிதமாக உயர்த்திக்கொள்ளுங்கள்.வேறு வழி இல்லை.அல்லது அடுத்த இடுகையை உங்கள் வீட்டையாவுக்கு வாசித்துக்காட்டுங்கள்.பலன் வருதான்னு பார்க்கலாம்.நன்றி ஹுசைனம்மா.

ஸாதிகா said...

நன்றி காயத்ரி.

Menaga Sathia said...

very nice akka!!

இலா said...

நல்ல பதிவு ஆன்டி! சொல்லறாப்ல சிலர் வீட்டில காப்பி குடிச்சா எனிமா மாதிரி இருக்கு ( சுத்தத்தை பார்த்து) !

இங்க வந்தும் திருந்தறதில்லை. இங்க அதிக‌ மெயின்டெனெஸ் பண்ண வேண்டியதே இல்லை அதுக்கே அப்படி :)

சீக்கிரமா வீட்டய்யாக்களுக்கு ஒரு பதிவு போடுங்க.. எப்படி நாமளே 95% என்றால் என்ன ஆகறது :))

சீமான்கனி said...

சுத்தம் சோறு போடும்னு சும்மாவா சொன்னாங்க ...அருமையான பகிர்வு அக்கா...

GEETHA ACHAL said...

நல்ல பயனுள்ள பதிவு...நீங்க சொல்வது உண்மை தான்...நானும் எப்பொழுதும் வீட்டை clean செய்து கொண்டே இருப்பேன்...யாரவது போன் செய்து பேசினாலும் கூட என்ன கீதா க்ளின் செய்கின்றாயா என்று கேலியாக கேட்கிற அளவில் தினமும் 1 மணி நேரமாவது க்ளினிற்கு ஒதுக்கினால் அதனை எல்லாம் 1 நிமிடத்தில் அக்ஷ்தா குட்டி மாற்றிவிடுவாள்...

Ahamed irshad said...

சிறப்பான பகிர்வு..

மனோ சாமிநாதன் said...

எதையுமே நேர்த்தியாக செய்வதும் சுத்தமாக இருப்பதும் மனதையே சுத்தமாக வைத்துக்கொள்கிற மாதிரி ஸாதிகா! இதில் பெரும் பங்கு பெரியவர்களுக்கு இருக்கிறது! அவர்கள் எதிலுமே முன்மாதிரியாக இருந்தால்தான் வீட்டில் மற்றவர்களுக்கு தானாக அனைத்திலும் விழிப்புணர்ச்சி இருக்கும்.

Thenammai Lakshmanan said...

மிக அருமை ஸாதிகா..:))

Mahi said...

நானும் சில வீடுகள்ல கிச்சனைப் பார்த்து பயந்திருக்கேன் ஸாதிகாக்கா! ஒரொருமுறை சமையலுக்கப்புறம் க்ளீன் பண்ண டைம் இல்லைன்னாலும், யாரையாவது வீட்டுக்கு இன்வைட் பண்ணும்போதாவது கொஞ்சம் சுத்தமா வைத்துக்கலாமில்ல? ம்ம்..மனிதர்கள் பலவிதம்!

விழிப்புணர்வூட்டும் பதிவு.

Unknown said...

பதிவு நல்லா இருக்கு ஸாதிகா..

ஜெய்லானி said...

யக்காவ் வீட்டை விடுங்க .. முதல்ல அவங்க சரியா குளிக்கிறாங்க ளான்னாவது பாருங்க ..!! சில பேரை பார்த்தா பயந்து ஓட வேண்டி வருது பேசும் போது அவ்ளோ ’கப் ’ அடிக்கும் ..

Riyas said...

நல்ல பதிவு..

http://riyasdreams.blogspot.com/2010/10/blog-post_08.html

Unknown said...

thanks 4 sharing

ஸாதிகா said...

கருத்து தெரிவித்த

மேனகா

இலா

சீமான்கனி

கீதா ஆச்சல்

அஹ்மது இர்ஷாத்

மனோ அக்கா

தேனம்மை

மகி

ஜிஜி

ஜெய்லானி

ரியாஸ்

கஸ்தூரி ராஜம்

உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா...,இனிய இல்லம் பதிவு மிக அருமை.சரியாக சொன்னீங்க...வீட்டை பார்க்கும் போது முகம்சுலிக்கும்படி இருக்ககூடாது.ஆசையாக இருக்கணும்.இது என்னுடைய கருத்தும் தான்.... பலருக்கும் பயனுள்ளபடி இருக்கும்.

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

பயனுள்ள பதிவு..