September 6, 2010

நட்புச்சமையல்

பல பதிவுலக நட்புக்கள் படத்துடன் சமையல் குறிப்பை வெளியிட்டு உள்ளனர்.சமையல் என்பது பெண்களுக்கு சுலபமானதாக ஆனாலும் அதனை படம் எடுப்பதில் உள்ள ரிஸ்க் எனக்குத்தான் தெரியும்.ஒரு பிரபல வலைதளத்திற்கு சமையல் குறிப்பு செய்கின்றேன் என்று கொதிக்கும் குழம்புக்குள் சோனி சைபர்ஷாட் கேமராவை பலிகொடுத்த வலி எனக்குத்தான் தெரியும்.பின்னூட்டம் ஒன்றே மட்டும் பலனாக கொண்டு சமையல் குறிப்பை தங்களது பிளாக்கில் வெளியிடும் சில நட்புகளுக்கு இப்பொழுது பிரபல பத்திரிகைகள் அவர்களது ஆக்கங்களை வெளியிட அழைப்பு கொடுத்து இருப்பது மகிழ்வுக்குறிய விஷயம்.

பதிவுலக நட்புகளை ஊக்குவிக்கும் நிமித்தமாக அவர்கள் சமையல் குறிப்பில் இருந்து பார்த்து சமைத்த உணவுவகைகளை சில பகுதிகளாக பதிவிட விரும்புகின்றேன்.

முதல் பகுதியாக நோன்புகாலத்திற்கு ஏற்ற சமையல்களை செய்துள்ளதை படமெடுத்து வெளியிட்டுள்ளேன்.சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்களும்,நன்றியும்.குறிப்பு இடம் பெறாத சகோதரிகள் நிறைய பேர் இருந்தாலும் தொடர்ந்து அவர்களது சமையலை செய்து வெளியிடுவேன்.

செட்டிநாடு பெப்பர் சிக்கன்
கீதா ஆச்சலின் குறிப்பு.சுள் என்ற காரத்துடன் மணமும் சுவையும் மிக்க சிக்கன்கணவா பிரட்டல்
தங்கச்சி பூஸ் சமையலில் சைலண்டா பிலாக்கில் வலம் வந்தாலும் அசைவ உணவுவகைகள் சமைப்பதில் கில்லாடி.அருமையான கணவா பிரட்டால் எனக்கு கற்றுத்தந்து விட்டார்.இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை.அதிரா தேங்க்ஸ் அதிரா.(எஞ்சியது கொஞ்சமே கொஞ்சம்.அதனை வைத்து படம் எடுத்தேன்)

9.மசால் வடை
மனோ அக்காவின் மசால் வடை.வழக்கம் போல் இல்லாமல் கூட அரை டீஸ்பூன் பெருங்காயம் சேர்க்க சொல்லி இருக்கின்றார்.கூடவே மணமும்,பருப்புக்கான வாய்வுத்தொல்லையில் இருந்து நிவாரணமும் கிடைத்தது இம்முறையில் செய்ததனால்.ஜவ்வரிசிகடல்பாசி
ஜலீலாவின் ஜவ்வரிசி கடல் பாசி.எங்கள் வீட்டில் நிகழ்ந்த ஒரு இஃப்தாரில் பேப்பர் கப்புகளில் இட்டு,மேலே நட்ஸ்ஸால் அலங்கரித்து வைத்தேன்.குளுமையான சுவை.


முட்டை பப்ஸ்
ஹர்ஷினியின் குறிப்பு.இதன் ஸ்பெஷாலிட்டி என்ன வென்றால் குறிப்பில் உள்ளபடி பப்ஸ் பேஸ்ட்ரி ஷீட் உபயோகிக்கவில்லை.பரோட்டாவுக்கு பிசைந்த எஞ்சிய மாவில் செய்தேன்.அருமையாக இருந்தது.

ரோஸ்மில்க்
எங்கள் வீட்டில் இஃப்தாருக்கு தவறாது இடம் பெறும் கூல் ட்ரிங்.ஊறிய சப்ஜாவிதையுடன் குளுமையான பானம் ஜலீலாவின் குறிப்பு.எனது செய்முறை பிரகாரம் கூடவே எஞ்சிய மில்க் ஸ்வீட் இருந்தால் அதனை மிக்சியில் அரைத்தும்,பாதாம் முந்திரி விழுதும் சேர்த்து செய்தால் ரிச் ஆக இருக்கும்.


ரமலான் நோன்புக்கஞ்சி
பொதுவாக இஸ்லாமிய சமையலில் காயல்க்காரர்கள் முதல் வரிசையில் இருப்பார்கள்.அதற்கு சான்று தங்கை பாயிஷா.அருமையான கஞ்சி.பாயிஷா இதற்கு ஜோடியாக காயல்வாடா குறிப்பை நோன்பு முடிவதற்குள் போடுங்கள்.


மாசி சம்பல் வதக்கல்.
தோழி ஆசியாவின் சூப்பர் மாசி சம்பல்.தக்காளி சேர்க்காமல் செய்தேன்.அவர் குறிப்பையும்,அவர் எடுத்துஇருந்த மாசி சம்பலின் படத்தினையும் பார்த்துமே உடனே செய்ய தூண்டி விட்டது.அடிக்கடி எங்கள் வீட்டில் இந்த சம்பல் இடம் பெறும்.


பஜ்ஜி
ஆசியா குறிப்புடன் சிறிது கார்ன் மாவு சேர்த்து செய்தேன்.மெத்தென்று,சுவையான பஜ்ஜி

27 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! காமெரா போச்சே

கனவா சாப்பிட்டதில்லை

மற்றவை எல்லாமே நம்ம ஃபேவரைட்

ஹுஸைனம்மா said...

//கொதிக்கும் குழம்புக்குள் சோனி சைபர்ஷாட் கேமராவை பலிகொடுத்த வலி எனக்குத்தான் தெரியும்.//

இவ்ளோ நல்லவங்களா நீங்க?

மற்றவர்களின் குறிப்பைச் செய்துபாத்து, அதைப் பாராட்டி எழுதுவதற்கும் ஒரு பெருந்தன்மை வேண்டும் அக்கா. வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

எல்லாத்திலும் ஒரு ஒரு செட்டு பார்சல் போதும்,, எங்க குடும்பமே உட்கார்ந்து நோன்பு திறக்கலாம் போலிருக்கு! அருமை!!

கேமரா போனதினால் வந்த வலி, கைமணம் மாறா உங்கள் விருந்தோம்பலில் பனியாய் கரைந்து போகும் ஸாதிகாக்கா!!

Ahamed irshad said...

பொருள் தொலைந்ததை பற்றி கவலைப்படாதீர்கள்..தொலைந்ததை விட மதிப்பு மிக்கது உங்களை தேடி வரும்..

ஹுஸைனம்மா said...

//கொதிக்கும் குழம்புக்குள் சோனி சைபர்ஷாட் கேமராவை//

அக்கா, இது புது ரெஸிப்பியா? குழம்புக்கு என்ன பேர்? செய்முறை சீக்கிரம் போடுங்க. புது காமிரா போடணுமா இல்லை பழசு செகண்ட்/தேர்ட் ஹாண்ட்ல வாங்கிப் போடலாமா? எவ்ளோ இரும்புச் சத்து கிடைக்கும் இதில?

டேஸ்ட் எப்பிடிருக்கும்? உடம்புக்கு ஒண்ணும் ஆகாதில்லா? (ஆமா, சாப்பிட்ட நீங்க நல்லாத்தானே இருக்கீங்க, அப்றமென்ன பயம்??)

;-)))))))))

Menaga Sathia said...

சூப்பர்ர் அக்கா,எல்லாமே கலக்கலான குறிப்புகள்..அடுத்தவர் குறிப்பை செய்து பார்த்து அதைப் பற்றி பாராட்டி எழுதிய உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் அக்கா..

vanathy said...

அக்கா, சூப்பர். சமையல் குறிப்புகள் அனுப்புவதற்கு நிறைய பொறுமை வேணும்.
எனக்கும் ஒரு வார இதழில் இருந்து அழைப்பு வந்திருக்கு. ஆனால், அந்த இதழ் பற்றி கேள்விப்பட்டது குறைவு. உங்களுக்கு அது பற்றி ஏதாச்சும் தெரியுமா அக்கா? இங்கே அந்த தளம் பற்றி குறிப்பிட விருப்பமில்லை. என் மெயில் ஐடி (mvany.2009@gmail.com) க்கு நேரம் கிடைக்கும் போது மெயில் அனுப்புவீங்களா? தவறாக எண்ண வேண்டாம்.

சீமான்கனி said...

சமைத்ததை கேமராவால் போட்டோ பிடிச்சு போட சொன்னா கேமராவை போட்டு சமைத்துவிடீங்களா கா...ருசியா இருந்திருக்கும்ம்ம்ம்ம்...மே அக்கா...
நோம்பு நேரத்துல ருசியான பதிவு ....ஹும்ம்ம்ம்...

அந்நியன் 2 said...

உங்களுக்கு சுயமரியாதையை கொடுங்கள்!
மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!

உங்களின் சொத்துக்களை என்னிடம் கொடுங்கள்.
சமைக்கும் அத்தனையையும் எனேக்கே கொடுங்கள்.
ஒரு லாப் டாப் எனக்கு வாங்கிக் கொடுங்கள்.
ரெண்டு கிளாஸ் ரோஸ் மில்க்கை கிளாசோடு கொடுங்கள்.
கணவாயை ஜமால் அண்ணனுக்கு கொடுங்கள்.
கேப்பை,கேழ்வரகு,இதனைப் பற்றித் தகவலை கொடுங்கள்.
பெரியவருக்கு ஐஸ் க்ரீம் கொடுங்கள்.
சிறியவருக்கு மரியாதையைக் கொடுங்கள்.
ஆக மொத்தத்தில் சாப்பிட எனக்கு எதையாவது கொடுங்கள்.
நல்லா செய்ததற்காக எல்லோரும் ஒரு சல்யூட்டைக் கொடுங்கள்.

Asiya Omar said...

ஸாதிகா நட்பு சமையல் அருமையாக இருக்கு.என்னுடைய கேமரா மொபைல் எப்பவும் மசாலா நிறம் மணத்துடன் தான் இருக்கும்.மற்ற தோழிகளின் சமையல் அசத்தல்.இப்போதைக்கு சோகம் என்னோட ஏகப்பட்ட புது ரெசிப்பி சேவ் செய்து வைத்திருந்தேன்,சிஸ்டத்தை ஃபார்மட் பண்ணும் பொழுது அத்தனையும் அம்பேல்.உங்கள் சமையலை பார்த்த பிறகு சோகம் மறந்து மகிழ்ச்சியாக இருக்கு.தொடர்ந்து சமைத்து வெளியிடுங்க.

ஜெய்லானி said...

//பிரபல வலைதளத்திற்கு சமையல் குறிப்பு செய்கின்றேன் என்று கொதிக்கும் குழம்புக்குள் சோனி சைபர்ஷாட் கேமராவை பலிகொடுத்த வலி எனக்குத்தான் தெரியும்.//அடடா ... அதையும் வாஷிங் மிஷின்ல போட்டுட வேண்டியதுதானே...!!

ஜெய்லானி said...

ஓக்கே இப்ப என் டைப் கேள்வி....!!


இவ்வளவு சமையலும் நீங்கதான் செஞ்சீங்களா..??? ஹா..ஹா..

இந்த சப்ஜா விதை ரோஸ்மிலக் ஊர் நினைப்பை அதிகமாக்கிடுச்சே...அவ்வ்வ்

ஜெய்லானி said...

எல்லாத்திலேயும் ஒரு பிளேட் இந்த பக்கம் சீக்கிரம் தள்ளுங்க... பெப்பர் சிக்கன் மட்டும் சட்டியேட வேனும் ...

ஜெய்லானி said...

//புது காமிரா போடணுமா இல்லை பழசு செகண்ட்/தேர்ட் ஹாண்ட்ல வாங்கிப் போடலாமா? எவ்ளோ இரும்புச் சத்து கிடைக்கும் இதில?//

பிளாஸ்டிக் சத்து பத்தி இருந்தாலும் பரவாயில்லை .. போடும் போது மெமரி எத்தனை ஜி பி ல இருக்கனும் . அப்பதான் நமக்கு வெண்டைக்காய் வாங்க தேவையில்லை

ஜெய்லானி said...

//டேஸ்ட் எப்பிடிருக்கும்? உடம்புக்கு ஒண்ணும் ஆகாதில்லா? (ஆமா, சாப்பிட்ட நீங்க நல்லாத்தானே இருக்கீங்க, அப்றமென்ன பயம்??) //


ஹா..ஹா...ஹா...ஹா...

Chitra said...

மையல் என்பது பெண்களுக்கு சுலபமானதாக ஆனாலும் அதனை படம் எடுப்பதில் உள்ள ரிஸ்க் எனக்குத்தான் தெரியும்.ஒரு பிரபல வலைதளத்திற்கு சமையல் குறிப்பு செய்கின்றேன் என்று கொதிக்கும் குழம்புக்குள் சோனி சைபர்ஷாட் கேமராவை பலிகொடுத்த வலி எனக்குத்தான் தெரியும்.பின்னூட்டம் ஒன்றே மட்டும் பலனாக கொண்டு சமையல் குறிப்பை தங்களது பிளாக்கில் வெளியிடும் சில நட்புகளுக்கு இப்பொழுது பிரபல பத்திரிகைகள் அவர்களது ஆக்கங்களை வெளியிட அழைப்பு கொடுத்து இருப்பது மகிழ்வுக்குறிய விஷயம்.


சிரிக்கவும் சந்தோஷப்படவும் வாயில் நீர் ஊறவும் வைத்த இடுகை. ......

சிநேகிதன் அக்பர் said...

எல்லோரும் வடபோச்சேன்னு சொல்வாங்க.
உங்களுக்கு வடைசட்டிக்குள்ளே கேமரா போயிடுச்சே :(

மற்றவர்களின் ரெஸிப்பிக்களை அறிமுகப்படுத்தியது அருமை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழ்கான தொகுப்புகள் அக்கா..

///ஒரு பிரபல வலைதளத்திற்கு சமையல் குறிப்பு செய்கின்றேன் என்று கொதிக்கும் குழம்புக்குள் சோனி சைபர்ஷாட் கேமராவை பலிகொடுத்த வலி எனக்குத்தான் தெரியும்.///

நீங்க வச்ச குழம்பை கேமராக்கு கொடுக்காம கொடுக்காம இதுவரைக்கும் நீங்க டிமிக்கி கொடுத்ததால அந்த கேமராவுக்கு சரியான கோபம்.. அதான் குழம்புக்குள்ள குதிச்சிருச்சி.. நாங்கெல்லாம் டேஸ்ட் பாக்கும்போது.. அந்த கேமராவுக்கு இருக்காதா பின்ன.. ஹா ஹா ஹா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

இப்ப எப்படி இருக்கு.. அந்த கேமரா.. :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// ஜெய்லானி said...

எல்லாத்திலேயும் ஒரு பிளேட் இந்த பக்கம் சீக்கிரம் தள்ளுங்க... பெப்பர் சிக்கன் மட்டும் சட்டியேட வேனும் ...///

அப்படியே இந்த பக்கமும் தள்ளுங்க ஜெய்லானி.. ஒத்தையில சாப்பிட்டா வயித்த வலிக்கும்.. ஆமா சொல்லிட்டேன்..

இலா said...

யம்மீ பதிவு!

Malini's Signature said...

ஆஹா என்னையும் சேர்த்ததுக்கு நன்றி ஸாதிகா அக்கா...இப்படியும் செய்யலாம்முன்னு ஒரு புது ஜடியா குடுத்துடுகிங்க சூப்பர்....அக்கா படம் எல்லாம் பார்த்த உடனே உங்க வீட்டு கதவை தட்டனும் போல இருக்கு!

GEETHA ACHAL said...

ரொம்ப நன்றி ஸாதிகா அக்கா...என்னுடைய குறிப்பும் இதில் இடம் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி..எல்லா குறிப்புகளும் கலர்புல்லாக சூப்பராக இருக்கின்றது...வாழ்த்துகள்...

ஜெய்லானி said...

இப்பிடி கோவபட்டுகிட்டு பதில் போடாம போவது கொஞ்சம்கூட சரியில்லை ஹி..ஹி...

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா எல்லா தோழிகளீன் சமையலையும் செய்து காட்டிய அசத்தல் ராணி நீங்கள் தான்.
//மற்றவர்களின் குறிப்பைச் செய்துபாத்து, அதைப் பாராட்டி எழுதுவதற்கும் ஒரு பெருந்தன்மை வேண்டும் அக்கா. வாழ்த்துகள்.//

ஹுஸைனாம்மா சொலவது மிகச்சரியே

ஸாதிகா said...

சகோ ஜமால்
ஹுசைனம்மா
எம்.அப்துல்காதர்
அஹமது இர்ஷாத்
மேனகா
வானதி
சீமான்கனி
முஹம்மத் ஐயூப்
ஆசியாஉமர்
ஜெய்லானி
சித்ரா
ஸ்நேகிதன் அக்பர்
ஸ்டார்ஜன்
இலா
ஹர்ஷினிஅம்மா
கீதாஆச்சல்
ஜலீலா
உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!

Vijiskitchencreations said...

super selections. Good thinking too.All the recipes are yummy.