July 30, 2010

எங்கே செல்லும் இந்தப்பாதை??



பள்ளியின் கழிவறையில் பள்ளி மாணவியின் பிரசவம்,கள்ளக்காதலனின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் காதலனின் மகனையே கதறகதற கொன்ற கொடூரம்..அன்றாடம் நாம் அறியும் செய்திகளில் இவை லேட்டஸ்ட்.

கடந்த வாரம் ஒரு மாலுக்கு சென்று இருந்த பொழுது அங்கு காட்சி அளித்த இளசுகளின் தோற்றம்,நடை.உடை பாவனை,அலட்சியபோக்கு,பொது இடம் என்ற இங்கிதமின்றி பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் அவர்களது நடவடிக்கை எப்படியும் வாழலாம் இதுதான் நாகரீகம் என்று நினைத்து வாழும் தான் தோன்றித்தனம்..இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அந்த இளசுகளின் மீது வெறுப்பு ஒரு பக்கம் வந்தாலும்,கலாச்சாரசீரழிவுக்கு பச்சைக்கொடிகாட்டிவிட்டு இறுமாந்து போய் இருக்கும் அந்த இளசுகளைப் பெற்றவர்களை,முகம் தெரியாத அந்த மனிதர்கள் மீது கோபம்தான் வருகின்றது.

எத்தனையோ விஷயங்களில் வாழ்க்கையில் முன்னேறி விட்டோம்,விரல் நுனியில் உலகையே கொண்டுவந்துவிட்டோம் என்று பெருமிதப்படும் இவர்கள் கலாச்சாரா சீரழிவை நினைத்துப்பார்க்க வேண்டாமா?

இளசுகளின் இந்த முற்போக்குத்தனம் சமுதாயத்தில் முளைவிட்டிருக்கும் நச்சுக்காளான்,வாழ்க்கையையே நொடியில் புரட்டிப்போட்டு விடும் ஒரு பயங்கரவாதம் என்று புரிந்தும் அதனை களைய மனதில்லாமல் நாகரீகம் என்ற போர்வையில் வாழும் அநாகரீக வாதிகளை என்னென்பது?

காசுக்காக ஆட்டம் போடும் திரைஉலகத்தினரைப்பார்த்து நிஜ வாழ்க்கையில் அதே நடை,உடை பாவனைகளை பின்பற்றி கலாசாராத்தை சீரழித்து வருவதோடு,தங்களையும் சீரழித்து தங்களையே அதலபாதாளத்திற்கு தள்ளி விடுகின்றனர்.

"இதோ இந்த மினி ஸ்கர்ட்டை எடுத்துக்கொள்"
"ஏற்கனவே தலைக்கு போட்டு இருக்கும் கலர் கொஞ்சம் டல்..இந்த முறை இன்னும் டார்க்கா வாங்கலாமா"
"உன் பாய்பிரண்டுக்கு பர்த்டே ன்னியே?என்ன பிரஷன்டேஷன் வாங்கலாம்?"
இப்படி கேள்விகளை ஒருதாயே கேட்கும் அளவிற்கு நாகரீகம் முற்றி விட்டது.

"கண்ணதாசன் காரைக்குடி..பேரைச்சொல்லி ஊத்திக்குடி"இப்படி நாண்கு வயது மகன் பாடி ஆடுவதை ரசித்து சிலாகிக்கும் அப்பா அம்மாக்கள் இருக்கும் வரை பள்ளிக்கழிவறையில் பிரசவங்களும்,கள்ளக்காதலால் கொலைகளும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கும்.

இறைவன் மேலுள்ள நாட்டம்,குடும்பத்தினர் மேலுள்ள நாட்டம் குறைந்து,மறைந்து போவதால் தான் இத்தகைய சீரழிவுக்கான காரணம்.
இறைவன் மேலுள்ள நாட்டமும்,அச்சமும் தவறு செய்யக்கூடிய தருணங்களைக்குறைக்கின்றன.குடும்பத்திலே ஒருவருக்கொருவரான ஆழமான பாசம் இக்காலத்தில் தகர்க்கப்பட்டு வருகின்றது.

சிறுவயதிலேயே சொல்லிக்கொடுக்கப்படவேண்டியவைகளை,கண்டிக்கப்படவேண்டிய காரியங்களை இக்கால பெற்றோர்கள் செய்யத்தவறி விடுகின்றனர்.

வெட்க உணர்வு இல்லாமல் போவதற்கு ஆண்,பெண் பாகுபாடின்றி வரைமுறையற்று பழகுதல்,எதிர்பாலினரில் எவ்வளவு நண்பர்களோ அவ்வளவு பெருமைக்குரிய விஷயம் என்று தங்களையே சிறுமைப்படுத்திக்கொண்டு வாழ்வது,எப்படியும் வாழலாம்,மனம் போல் வாழலாம் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

பிள்ளைகளைப்பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லை.பெற்றோர்களைப்பற்றிய பெருமிதம் பிள்ளைகளுக்கு இல்லை."என் பிள்ளை எஞ்சினியர் ஆகவேண்டும்,மருத்துவர் ஆக வேண்டும்,கலெக்டராக வேண்டும்,மேற்படிப்புக்கு யூ கே அனுப்ப வேண்டும்,அண்ணா யுனிவர்ஸிடி கவுன்ஸிலிங் வரை வெயிட் பண்ண முடியாதுன்னு பணத்தை பணம் என்று பார்க்காமல் நம்பர் ஒன் காலேஜில் எழு லட்சம் கட்டி சீட் வாங்கி விட்டேன்"இப்படி எண்ணங்கள் தான் இன்றைய பெற்றோருக்கு மிகுதியாக உள்ளதே ஒழிய நம் பிள்ளையை நல்ல பிரஜை ஆக்க வேண்டும்,நேரிய வாழ்வியலை பின்பற்ற வேண்டும்,இறை வழி நடக்கவேண்டும்,கலாசார சீரழிவுக்கு அடிபணிந்து விடலாகாது போன்ற உயரிய சிந்தனைகள் ,மேன்மையான போக்கும் இன்றைய பெற்றோரிடம் இல்லை.

அயல் தேசத்து உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிபணிந்து விட்டதைப்போல்,அந்நிய கலாசாராத்திற்கும் அடி பணிந்து வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவதுதான் பரிதாபம்.

நன்நடத்தை,விடா முயற்சி,விசாலமான அறிவு,தானே நல்ல முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்துடன் நோக்கவைக்கும் உயர்வு இவைகள் எல்லாம் ஒருங்கே பெற்று விஞ்ஞானத்தை நன் முறையில் பயன் படுத்தி வாழ்வில் சிகரங்களைத்தொடக்கூடிய நாளைய இளவரசர்கள்,இளவரசிகள் தறிகெட்டுப்போய் வாழ்க்கையை தவற விடுகின்றனர்.

சுகாதாரமாக வாழ நினைக்கிறோம்,சுற்றுப்புற தூய்மைகளை கவனிக்கின்றோம்.பொது இடத்தில் அமர்ந்தால் கூட ஆடை வீணாகி விடுமோ என்று ஆள்காட்டி விரலால் கோடிழுத்துப்பார்த்து விட்டு அமர முனைகின்றோம்.நம்முடல் அழுக்கேற்படாமல் சுத்தமாக வைத்திருக்க முனைகின்றோம்.ஆனால் நாம் அறியாமலே நம் சந்ததிகள் மனம் அழுக்கடைந்து,காலப்போக்கில் காட்டாற்று வெள்ளமாக எல்லை மீறிப்போகும் அவலத்திற்கு துணை நிற்கலாமா?

நாகரீகம் என்ற போர்வையில் அநாகரீகமாக நடமாடவிட்டு,நாட்டையும்,வீட்டையும் சீரழிக்க முனையும் பிள்ளைகளின் பெற்றோரே சிந்தியுங்கள்

43 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கருத்துகள்.. நல்லதொரு கட்டுரை ஸாதிகா அக்கா.

பிள்ளைகள் தறிக்கெட்டு போவது இந்த காலத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. என்னதான் பெற்றோர்கள் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்தாலும் டிமிக்கி கொடுத்துடுவாங்க. அவர்களை கண்காணிப்பது என்பது பெற்றோர்கள் மிகுந்த சிரத்தைதான்.

மதுரை சரவணன் said...

நல்ல சிந்தனையுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

athira said...

ஆ... ஸாதிகா அக்கா.... வடை, பிட்ஷா, சட்னி எல்லாம் எனக்குத்தான்..... ஒருவருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இனித்தான் படிக்கப்போகிறேன்... தொடரும்ம்ம்ம்ம்ம்ம்.

Chitra said...

பிள்ளைகளைப்பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லை.பெற்றோர்களைப்பற்றிய பெருமிதம் பிள்ளைகளுக்கு இல்லை."என் பிள்ளை எஞ்சினியர் ஆகவேண்டும்,மருத்துவர் ஆக வேண்டும்,கலெக்டராக வேண்டும்,மேற்படிப்புக்கு யூ கே அனுப்ப வேண்டும்,அண்ணா யுனிவர்ஸிடி கவுன்ஸிலிங் வரை வெயிட் பண்ண முடியாதுன்னு பணத்தை பணம் என்று பார்க்காமல் நம்பர் ஒன் காலேஜில் எழு லட்சம் கட்டி சீட் வாங்கி விட்டேன்"இப்படி எண்ணங்கள் தான் இன்றைய பெற்றோருக்கு மிகுதியாக உள்ளதே ஒழிய நம் பிள்ளையை நல்ல பிரஜை ஆக்க வேண்டும்,நேரிய வாழ்வியலை பின்பற்ற வேண்டும்,இறை வழி நடக்கவேண்டும்,கலாசார சீரழிவுக்கு அடிபணிந்து விடலாகாது போன்ற உயரிய சிந்தனைகள் ,மேன்மையான போக்கும் இன்றைய பெற்றோரிடம் இல்லை.


..... தற்பெருமையே குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் போது தர்மத்துக்கு இடம் ஏது? உங்கள் ஆதங்கத்தையும் அக்கறையையும் பதிவு முழுவதும் காண முடிகிறது.

RURA said...

சிறந்த சிந்தனைகள், சிறந்த வழிகாட்டல். நன்றி அக்கா

தினசரி நிகழ்வுகளை அறிய கிளிக் செய்யவும் http://www.thedipaar.com/index.php

சீமான்கனி said...

//சிறுவயதிலேயே சொல்லிக்கொடுக்கப்படவேண்டியவைகளை,கண்டிக்கப்படவேண்டிய காரியங்களை இக்கால பெற்றோர்கள் செய்யத்தவறி விடுகின்றனர்.//

என் கருத்தும் இதுதான் அக்கா பெற்றோர்களின் கண்கள் வழியாகத்தான் ஒவ்வொரு விஷத்தையும் பிள்ளைகள் முதலில் பார்கிறார்கள்.சிறப்பான இடுக்கை வாழ்த்துகள் அக்கா...

ராஜவம்சம் said...

பிள்ளைகளுக்கு பெற்றேர்கள் ரோல்மாடலாக இருக்கவேண்டும்.
கண்டிப்பும் கண்கானிப்பும் ரொம்ப அவசியம்.

நல்லப்பகிவு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ... ஸாதிகா அக்கா, வடையில்லாமல் பண்ணிட்டீங்களே எனக்கு:).

நல்ல பதிவு ஸாதிகா அக்கா. ஆனால் ஒட்டுமொத்தமாக பெற்றோரைக் குறைசொல்லி என்ன பலன். பெரும்பாலான பெற்றோர் பாவம், பிள்ளைகள் இந்தக்காலத்தில் ஒரு வயதுக்கு மேல், எங்கே பெற்றோர் பேச்சைக் கேட்கிறார்கள்.

பெற்றோர் பிள்ளைகளின் எண்ணத்துக்கு ஒத்துப்போகாவிடில் சண்டைதானே. பாருங்கள் ஒரு 10,12 வயது வரை எல்லாக் குழந்தையும் நாகரீகமாகத்தானே உடையணிகிறார்கள், பின்புதானே எல்லாம் மாறுது. அதுக்குக் காரணம், இக்கால வளர்ச்சிதானே.

வெளிநாடுகளிலும் அப்படித்தான் அவதானிக்க முடியுது, பிறைமறி ஸ்கூல் வரை, முழங்கால் வரை ஸ்கேட் விற்கப்படுகிறது கடைகளில், ஆனால் ஹைஷ் ஸ்கூல் பிள்ளைகளுக்கு, அரையடிக்கு மேல் நீளமாக ஸ்கேட் கிடைக்காது, அப்போ பெற்றோர் என்ன செய்வது.

பெற்றோரின் பங்கும் முக்கியம்தான், ஆனால் மொத்தப் பொறுப்பும் பெற்றோர் கையில் இல்லையே...

தூயவனின் அடிமை said...

படித்தேன் மனம் கனத்தது.கலாச்சார சீரழிவுக்கு துணை போகும் பெற்றோர்களே, நீங்கள் பிள்ளைகளோடு நண்பர்களாக
பழகுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை.தவறை தவறு என்று சுட்டி காட்டுங்கள். எங்கு புள்ளி ஸ்டாப் வைக்கவேண்டுமோ அங்கு வையுங்கள்.நல்ல பகிர்வு நன்றி.

Unknown said...

நல்ல சிந்தனையுள்ள பதிவு.நன்றி

நட்புடன் ஜமால் said...

வெட்க உணர்வை உயிர்ப்போடு வைப்பதில் பெற்றோரின் பங்கே அதிகம்

வீட்டினில் உடையனிதலில் இருந்தே கவணம் செலுத்த வேண்டும்

கண்டிப்பு மிகுதியாகமல் புரிதல் ஏற்படுத்த வேண்டும்

நல்ல இடுக்கை

vanathy said...

அக்கா, நல்ல பதிவு. இங்கு இது போலவே விடலைகளைப் பார்த்து பார்த்து இப்பெல்லாம் பெரிய மேட்டராக தெரியவில்லை. வேறு என்னத்தை சொல்ல?

kavisiva said...

சமூகாக்க்றையோடு கூடிய நல்ல பதிவு அக்கா.

இந்தியா வரும்போது அங்குள்ள இளம்வயது பிள்ளைகளைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. பெற்றவர்களும் அதை பெருமையாக நினைப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். நாம் ஏதாவது சொன்னால் வெளிநாடு போயும் இன்னும் நீ முன்னேறலியான்னு கேலி பண்றாங்க :-(. என்னத்த சொல்ல

sathishsangkavi.blogspot.com said...

அருமையான கருத்துகள்.....

ஹைஷ்126 said...

//பிள்ளைகள் இந்தக்காலத்தில் ஒரு வயதுக்கு மேல், எங்கே பெற்றோர் பேச்சைக் கேட்கிறார்கள்.//ஆம் யாரும் கேட்க மாட்டார்கள்தான். இவ்வுலகில் யாரையும் யாராலும் மாற்றவே முடியாது, ஒருவரை தவிர அது நாம் நம்மை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

மேலும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு கற்று கொள்வதை விட நம் எண்ணங்கள், சொற்கள், செயல்களை பார்த்து கற்றுக் கொள்வதே அதிகம்.

மக்கட்செல்வங்கள் பெற்றோரின் வினைபதிவின் தொடரே !

அருமையான சிந்திக்க தூண்டும் பதிவு

வாழ்க வள்முடன்

ஹைஷ்126 said...

//ஆ... ஸாதிகா அக்கா.... வடை, பிட்ஷா, சட்னி எல்லாம் எனக்குத்தான்..... ஒருவருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//
கழுவி கவுத்த தட்டை எடுத்து வைச்சிகிட்டு ஒருவருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர் என்றால் :))))

ஜெய்லானி said...

இந்த மாதிரி விஷயங்கள் கிராமங்களில் கிடையாது. நாகரீகமுன்னு சொல்லக்கூடிய நகரங்களில்தான் இருக்கு. கூட்டுக்க்குடித்தனங்களில் இந்த வாதமே இருக்க முடியாது. கண்டிக்க ஆள் இருக்கும்.



மொத்தத்துல 100/100 மார்க் பதிவு

ஸாதிகா said...

உடனே வந்து கருத்து தெரிவித்த ஸ்டார்ஜனுக்கு நன்றி.//பெற்றோர்கள் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்தாலும் டிமிக்கி கொடுத்துடுவாங்க// உண்மைதான்.இருந்தாலும் பிள்ளைகளின் மேல் எப்பொழுதும் கவனம் செலுத்தி நல் வழி படுத்துவது பெற்ரோர்களின் கடமை அல்ல்வா?

ஸாதிகா said...

மதுரை சரவணன் கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

அதிரா தங்கச்சி..வடை,பிட்ஷா,சட்னி எல்லாவற்ரையும் சூடா ஸ்டார்ஜன் சார் தூக்கிட்டு போய்ட்டாரே!

ஸாதிகா said...

//தற்பெருமையே குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் போது தர்மத்துக்கு இடம் ஏது? // கரெக்டாக சொன்னீங்க சித்ரா.

ஸாதிகா said...

RURA முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.கண்டிப்பாகா உங்கள் வலைதளம் வருகின்றேன்.

ஸாதிகா said...

//பெற்றோர்களின் கண்கள் வழியாகத்தான் ஒவ்வொரு விஷத்தையும் பிள்ளைகள் முதலில் பார்கிறார்கள்.// உங்கள் கருத்திலும் உண்மைஉண்டு சீமான் கனி.இது குறித்து பிரிதொரு தடவை இன்னொரு இடுகை போடுகின்றேன்.

ஸாதிகா said...

//பிள்ளைகளுக்கு பெற்றேர்கள் ரோல்மாடலாக இருக்கவேண்டும்.// கண்டிப்பாக.இக்காலத்து பிள்ளைகளிக்கேட்டால் ரோல் மாடல் யாரென்று கேட்டால் நடிகர் நடிகைகளையும் ஸ்போட்ர்ஸ் பிளேயரக்ளயும் தான் சுட்டிக்காட்டுவார்கள்.பெற்றோரின் மீது பிணைப்பும்,பிடிப்பும் இல்லாமல் போவதும் ஒரு காரணம்.நன்றி ராஜவம்சம்.

ஸாதிகா said...

//ஒரு வயதுக்கு மேல், எங்கே பெற்றோர் பேச்சைக் கேட்கிறார்கள்.
//அதீஸ் நீங்கள் இப்படி அலுத்துக்கொள்ளலாமா?பிள்ளைகள் சண்டை போடுவார்கள்,கோபப்படுவார்கள் என்பதற்காக அவரகளைக்கண்டிக்காமல் இருக்க முடியுமா?கத்தி உள்ளது.அந்த கத்தியினால் பழத்தை நறுக்கி சாப்பிட்டு ஆரோக்கியத்தையும் வளர்க்கலாம்.அதே கத்தியால் இன்னொருவர் முன் நீட்டி மிரட்டவௌம் செய்ய்லாம்.கழுத்தை வெட்டி கொலையும் செய்து கொலைகாரனாகவும் ஆகலாம்.கத்தியால் பழத்தினை மட்டும் நறுக்க பெற்றோரும்,பிள்ளைகளும் பண்படவேண்டும்.

ஸாதிகா said...

//நீங்கள் பிள்ளைகளோடு நண்பர்களாக
பழகுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை.தவறை தவறு என்று சுட்டி காட்டுங்கள். எங்கு புள்ளி ஸ்டாப் வைக்கவேண்டுமோ அங்கு வையுங்கள்.//அருமையான வரிகள் இளம் தூயவன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கலாநேசன்.

ஸாதிகா said...

// நட்புடன் ஜமால் said...
வெட்க உணர்வை உயிர்ப்போடு வைப்பதில் பெற்றோரின் பங்கே அதிகம்

வீட்டினில் உடையனிதலில் இருந்தே கவணம் செலுத்த வேண்டும்

கண்டிப்பு மிகுதியாகமல் புரிதல் ஏற்படுத்த வேண்டும்// அருமையான கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் ஜமால் தம்பி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி வானதி.

ஸாதிகா said...

//நாம் ஏதாவது சொன்னால் வெளிநாடு போயும் இன்னும் நீ முன்னேறலியான்னு கேலி பண்றாங்க // இதுவும் வேதனைக்குறிய விஷயம்.கருத்துக்கு நன்றி கவி.

ஸாதிகா said...

சங்கவி தங்கள் கருத்துக்கு நன்றி.கிராமத்து காட்சிகளை கண்களுக்கு விருந்தாக படைத்து ரசிக்க வைத்தீர்கள்.நீண்ட நாட்களாக புது இடுகை காணவில்லையே?

ஸாதிகா said...

//மேலும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு கற்று கொள்வதை விட நம் எண்ணங்கள், சொற்கள், செயல்களை பார்த்து கற்றுக் கொள்வதே அதிகம்// இதுவும் ஒரு அருமையான கருத்து ஹைஷ் சார்.ஹைஷ் சாரும் காமெடி பண்ண ஆரம்பித்து விட்டார்.தொடருங்கள்.

ஸாதிகா said...

//இந்த மாதிரி விஷயங்கள் கிராமங்களில் கிடையாது. // ஏன் கிடையாது?பள்ளிக்கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவமும் ஒரு கிராமப்பகுதியில்தான்.உடை விஷ்யத்தில் வேண்டுமானால் தான்தோன்றித்தனமாக இருக்க இயலாது.

ஹை //மொத்தத்துல 100/100 மார்க் பதிவு// ஜெய்லானி வாத்தியார் எனக்கு நூறு மார்க் போட்டுட்டார்.ஆத்தாஆஆஆஆ..நானு செண்டம் வாங்கிட்டேன்.(ஸ்கூலில் தான் 100/100 வாங்க முடியவில்லை.பதிவெழுதியாவது வாங்கிட்டேனேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டுக்கறேன்)

vasan said...

த‌ற்கால‌ த‌லைம‌றைக‌ளின் த‌றிகெட்ட‌ வாழ்க்கைக்கு, வேட்கைக்கு
கார‌ண‌ம்,ந‌ம் வீட்டுக்கூட‌த்திலிருக்கும் தொலைக்காட்சி,
அணுக்குடும்ப‌ங்க‌ளான‌ அவ‌ஸ்தை, சாரு போன்ற‌ பொறுப்ப‌ற்ற‌ எழுத்தாள‌ர்க‌ள்.
நக்கீர‌ன் போன்ற‌ உல‌வுப் பத்திரிகைக‌ள், காம‌ர‌ச‌ங்க‌ளுக்கு தரும் முக்கிய‌த்துவ‌மும்
அட்டைப் ப‌ட‌ங்க‌ளும். பொருக்கிக‌ளை ஹீரோவாக்கும் திரைப‌ட‌ங்க‌ள்.
சமுத‌யா அக்க‌றையே இல்லாத‌ காவ‌ல்துறை. ப‌ண்புக‌ளை விட‌, ப‌ண‌த்திற‌க்கு ம‌ட்டும்
ம‌திப்ப‌ளித்து, ப‌ல்லிளிக்கும் ச‌மூக‌ம். என்ன‌ செய்வ‌து?

Riyas said...

இன்றைய காலத்துக்கு ஏற்ற பதிவு அக்கா.. நாகரீகம் என நினைத்து இன்றைய இளசுகள் அனாகரீகத்தைதான் அதிகம் பின் தொடர்கிறார்கள்..

athira said...

ஹைஷ்126 said...
//ஆ... ஸாதிகா அக்கா.... வடை, பிட்ஷா, சட்னி எல்லாம் எனக்குத்தான்..... ஒருவருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//
கழுவி கவுத்த தட்டை எடுத்து வைச்சிகிட்டு ஒருவருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர் என்றால் :))))
////// ச்ச்ச்...ஸாதிகா அக்கா, இஞ்ச பாருங்கோ.... இதைப்பார்த்து, ஒரு கர்ர்ர்ர் சொல்லாமல் காக்கா போறீங்கள்....:)). அது ஏன் ஸாதிகா அக்கா, எனக்கு எங்க போனாலும் இப்போ வடையே கிடைக்க மாட்டேனென்கிறதே:)).

எனக்கொரு சந்தேகம் ஸாதிகா அக்கா.... கொஞ்சம் தீர்த்து வச்சால் புண்ணியம் கிடைக்கும்....

நான் எந்தக் கற்றக்கரியினுள் அடக்கம்?:))), அதாவது நான் மகளா? பெற்றோரா?:)), ஏனெண்டால் இப்பவும் அப்பா, அம்மா என்னைக் கண்டிக்கினம்ம்ம்ம்:))))).

Menaga Sathia said...

நல்ல சிந்தனையுள்ள பதிவு அக்கா...நானும் வாணி சொன்னதையே வழிமொழிகிறேன்...

athira said...

மேலும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு கற்று கொள்வதை விட நம் எண்ணங்கள், சொற்கள், செயல்களை பார்த்து கற்றுக் கொள்வதே அதிகம்.////இதை நான் ஆமோதிக்கிறேன், ஆனால் பெரியாட்களாக வந்தபின்னரும் அப்படியே இருப்பார்களோ தெரியாது.

எங்கள் மகன், கேட்பார், அப்பாவைப்போலதான் கெயார் கட் தனக்கும் வேணும் அப்பாவின் வெகிகிள்தான் வேணும், சூஸ் அதேபோல் வேணும், அப்பாவின் பேர்ஸ் தான் தனக்கும் வேண்டும், அதுக்குள் இருக்கும் பாங்க் கார்ட்டுடன்:), ஏனெண்டால், மகன் நினைக்கிறார், அப்பாவின் பாங்க் காட்டை மெசினில் போட்டால் காசு வருகிறது, அப்போ அதையே தானும் பாவித்தால் நல்லதென:))).

மக்கட்செல்வங்கள் பெற்றோரின் வினைபதிவின் தொடரே !//// உண்மைதான் சில இடங்களில் பெற்றோர் தங்கமாக இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களுக்கா.... இப்படி ஒரு உதவாக்கரைப் பிள்ளை எனக் கேட்குமளவுக்கு பிள்ளை இருக்கும். அதேபோல், சில, குடி மது போதையிலேயே மூழ்கி காலம் கழிக்கும் தந்தைக்கு, தங்கம்போல மகன் உருவாகியிருப்பார்....

ஸாதிகா அக்கா நோட் திஸ் பொயிண்ட்ஸ்ஸ்ஸ்..... முறைக்காதீங்கோ.....:))).

athira said...

"உன் பாய்பிரண்டுக்கு பர்த்டே ன்னியே?என்ன பிரஷன்டேஷன் வாங்கலாம்?"
இப்படி கேள்விகளை ஒருதாயே கேட்கும் அளவிற்கு நாகரீகம் முற்றி விட்டது.//// ஸாதிகா அக்கா, சினிமாவில் நாடகங்களில் தான் பார்த்திருக்கிறேன், நீங்கள் நிஜம் என்கிறீங்களே..... உண்மையாகவோ?.

என்னைப்பொறுத்து, தன் பிள்ளை ஒருவரை விரும்புகிறார் என்று நன்கு தெரிந்தாலும், தெரியாததுபோல இருப்பதுதான் பெற்றோருக்கும் மரியாதை, பிள்ளைக்கும் பயம் இருக்கும்.(ஒத்து வராதெனில், புத்திமதி கூறலாம், பெற்றோருக்கும் பிடித்துவிட்டதெனில்,கால நேரம் கூடி வரும்வரை, காக்கா போவதுதான் நல்லது).

உஸ் அப்பாடா முடியல்ல ஸாதிகா அக்கா.... என் குட்டிக் கிட்னியை வைத்து எவ்ளோ விஷயத்தைத்தான் யோசிப்பேன்.....:))).

ஸாதிகா அக்கா, ஆரும் எனக்கு அடிக்க வந்தால் விட்டிடாதீங்கோ:))), நான் இங்கே கதைப்பவை எல்லாம் என் மனதில் தோன்றும் கருத்துக்களே... சரி பிழை சொல்லத்தெரியவில்லை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நாகரீகம் என்ற போர்வையில் அநாகரீகமாக நடமாடவிட்டு,நாட்டையும்,வீட்டையும் சீரழிக்க முனையும் பிள்ளைகளின் பெற்றோரே சிந்தியுங்கள் //

சிந்திக்க வைக்கும் அருமையான.. பதிவு..
வாழ்த்துக்கள்..

சிநேகிதன் அக்பர் said...

நியாயமான‌ ஆதங்கம் ஸாதிகா.

Angel said...

first pls forgive for typing in english.
excellant and wonderful.in most cases parents are to be blamed.the social network like face face book should hve some restrictions.a relative of mine who is under 15 had used swear words in the website when i reported it to the parent they said that its normal for kids to use bad words.something good will happen only when the reality shows are banned.moreover if the children are brough up with god fear and good morals everything will be alright.

Anisha Yunus said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகாக்கா,
அருமையான பதிவு. சிறு வயதிலேயே இதையெல்லம் பக்குவமாக சொல்லி வளர்க்காவிட்டல், நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். வேண்டப்பட்ட, சிறந்த பதிவு. நன்றி.