July 3, 2010

விருதுகளும்,தொடர் பதிவும்.

சகோதரர் ஜெய்லானி கொடுத்த தங்க மகன் விருது.
நன்றி ஜெய்லானி.


சகோதரர் அஹ்மது இர்ஷாத் கொடுத்த விருது.
நன்றி இர்ஷாத்.

சகோதரர் சீமான்கனி அழைத்த தொடர்பதிவு.

முதலில் பாசத்திற்குரிய ஸாதிகா அக்கா மனிதர்கள் எல்லோரும் கடலுக்குள்ள வசித்தால் எப்படி இருக்கும்னு எழுத போறாங்க.தலைப்புதண்ணீர் தேசம்.

தண்ணீர் தேசம்.


1.ஏஸி,லைட்,ஃபேன் தேவை இல்லை.எலெக்ட்ரிக் பில் மிச்சம்.

2.எங்கும் கால் வலிக்க நடந்து போகத்தேவை இல்லை.நீந்தியே ஜாலியாக போய் விடலாம்.

3.வாகனமும் தேவை இல்லை.பெட்ரோல் செலவும் மிச்சம்.

4.பெரிய சுறா,டால்பின் போன்றவைகளின் நட்பு கிடைக்குமல்லாமல் கடல் கன்னியையும் பிரண்ட் பிடித்துக்கொள்ளலாம்.

5.சிறிய அறைகளுடன் ஒண்டு குடித்தனத்தில் வாழும் அவலமின்றி விஸ்தீர்னமாக,சுகாதராமாக வாழலாம்.


6வெளியில் நடக்கும் அரசியல் கூத்துகளை பார்க்க முடியாது.

7கலைஞர் ஐயா அறிவித்த இலவச பொருட்களை அனுபவிக்க முடியாது.

8முக்கியமா கம்பியூட்டர் பக்கமே வரமுடியாமல் பிளாக் எழுத முடியாது.

9மற்றவங்க பிளாக் படிச்சு பின்னூட்டம் போட முடியாது.

10பிளாக் உலகில் நடக்கும் சண்டைகள்,சச்சரவுகள்,ஒருத்தொருக்கொருத்தர் சகதி வாரி தூற்றிக்கொள்ளும் காணக்கிடைக்காத காட்சிகளை காண முடியாது.

11சீமான் கனி எழுதி வரும் தொடர் கவிதையின் இறுதிபாகத்தை படிக்கமுடியாமல் போய் விடும்.

தம்பி சீமான்கனி அநியாயத்திற்கு மாட்டி விட்டு விட்டார்.இதற்கு மேல் என்னால் மொக்கைபோட முடியவில்லை.அழைப்புக்கு நன்றி சீமான்கனி.
விருது கொடுத்தவர்களுக்கும்,தொடர் அழைப்பு அழைத்தவருக்கும் எதோ என்னால் ஆன சின்ன விருந்து.நானே..நானே செய்த பேக்ட் பிரட் புட்டிங்..விருது,அழைப்பும் விடுத்த சீமான்கள் சாப்பிடுங்கள்.பயப்படாமல் சாப்பிடுங்க.டேஸ்டா இருக்கும்.என்ன வெறும் ஸ்வீட் மட்டும்தானா என்று குரல் எழுப்புவோர் கீழே பாருங்கள்.
மிக்ஸட் கபாப்.இது நான் சமைக்கலீங்க.ஆயிரம்தான் மலையாளி உணவகங்கள் மற்ற உணவகங்களில் சாப்பிட்டாலும் இந்த அரபி கடையில் கிடைக்கும் மிக்ஸட் கபாபுக்கு அடிக்காது.ஒரு கிலோ எடை உள்ள ஒரு பிளேட் நூற்றிப்பத்து கத்தார் ரியால்தான்.

கத்தார் - தோஹாவில் உள்ள அல் ஷமி ரெஸ்டாரெண்ட் மிக்ஸட் கபாப் பிரசித்தம்.சான்ஸ் கிடைத்தால் மிஸ் பண்ணிடாதீங்க.



55 comments:

இமா க்றிஸ் said...

விருது பெற்றமைக்குப் பாராட்டுக்கள் ஸாதிகா.

Ahamed irshad said...

விருதுக்கு வாழ்த்துக்கள்... கட்டுரை அருமை...

ஜெய்லானி said...

//இதற்கு மேல் என்னால் மொக்கைபோட முடியவில்லை.அழைப்புக்கு நன்றி சீமான்கனி.//
அப்ப இதுக்கு பேர்தான் மொக்கையா..!!! நான் என்னவோ ஏதோன்னுல்ல நினைச்சிகிட்டு இருந்தேன்..ஹி..ஹி..

விருதுக்கு வாழ்த்துக்கள்....இன்னும் பல பெற பெறுவதுக்கு அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்..!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஸாதிகா அக்கா விருதும் விருந்தும் அருமை. வாழ்த்துகள்.. கடலுக்கடியில் இருந்தால் இவ்வளவு வசதியா..

ஜெய்லானி said...

ஸாதிகாக்கா எனக்கொரு சந்தேகம்..

1.. முக்கியமா குளிக்க தேவையில்லை

2 . பல் விளக்க தேவையில்லை

3. சோப்பு , சீப்பு , கண்ணாடி தேவையில்லை

4. மேக்கப் செட் வேண்டாம்.

5. கிச்சன்னு ஒன்னு தேவையே இல்லை.. எல்லாமே பச்சை கறிதான்

6. டீ வி இல்லாததால் அழுமுஞ்சி சீரியல் இல்லாம ’’பொழுது ‘’ நல்லா போகும்.

6.இதுக்கு மேல நான் மொக்கை போட்டா தாங்காது. அதனால் இதோட முடிக்கிறேன்.

//.என்ன வெறும் ஸ்வீட் மட்டும்தானா என்று குரல் எழுப்புவோர் கீழே பாருங்கள்.//


ஹை..சூப்பர்..கபாப்...

//ஒரு கிலோ எடை உள்ள ஒரு பிளேட் நூற்றிப்பத்து கத்தார் ரியால்தான்.//

எனக்கு சரியா இந்த ஃபாண்ட் தெரியல .ஏதோ எழுதீருக்கிற மாதிரி தெரியுது. ஆனா புரியல

எம் அப்துல் காதர் said...

விருதுக்கும் விருந்துக்கும் வாழ்த்துகள்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லது. தண்ணி அடிக்க முடியமா அப்டின்னு சொல்லவே இல்லியே

athira said...

ஆ... ஸாதிகா அக்கா “தங்கமகனு”க்கு வாழ்த்துக்கள். ஏற்கனவே 2 தங்கமகனோடு மூன்றாவதாக இவரையும் சேர்த்துக்கொள்ளுங்கோ:)).

காலையிலயே சாப்பாடெல்லாம் போட்டுக்காட்டி என் ஆசையைத் தூண்டி விட்டுவிட்டீங்கள்.

athira said...

ஜெய்லானி said...
ஸாதிகாக்கா எனக்கொரு சந்தேகம்..///

ஸாதிகா அக்கா.. எனக்கும் வந்திட்டுது... அதுதான் சந்தேகம்..

என்ன தொடர்பதிவு எழுதுறீங்க? எதைப்பற்றி எழுதுறீங்க? என்ன நிபந்தனை எனச் சொல்லிட்டு எழுதினால்தானே, என் போன்ற சின்னக் கிட்னி உள்ளவர்களுக்குப் புய்யும்:).

GEETHA ACHAL said...

ஆஹா...உங்களுக்காக சீக்கிரமாக என்னுடைய ப்ளாகிலும் ஒரு விருது காத்துகொண்டு இருக்கும்...அப்ப தானே நீங்க ஸ்வீட் மற்றும் விருந்தே கொடுப்பிங்க...வாழ்த்துகள்....

நட்புடன் ஜமால் said...

விருதுக்கு வாழ்த்துகள்


கத்தார் போக வாய்ப்பு அமைந்தால் அவசியம் சாப்பிடுவோம் ...

Unknown said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

//6வெளியில் நடக்கும் அரசியல் கூத்துகளை பார்க்க முடியாது.//
மனிதர்கள் எல்லாரும் கடலில் வசிக்கும் போது இதெல்லாம் இல்லாமலா?


//7கலைஞர் ஐயா அறிவித்த இலவச பொருட்களை அனுபவிக்க முடியாது.//

அங்கயும் அய்யா தான் முதல்வர்

Mahi said...

வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா! தொடர்பதிவு காமெடியா எழுதிருக்கீங்க.நல்லாருக்கு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

செம்மை மொக்கை, ஜாலியா இருக்கு.

ஸாதிகா said...

பாராட்டுகளுக்கு நன்றி இமா!

ஸாதிகா said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷாத்.

ஸாதிகா said...

இதெல்லாம் எலி மொக்கை.ஜெய்லானி போடுவதுதான் டைனோஷர் மொக்கை.கருத்துக்கு நன்றி ஜெய்லானி!

ஸாதிகா said...

ஸ்டார்ஜன் தம்பி//கடலுக்கடியில் இருந்தால் இவ்வளவு வசதியா.// நிஜமாகவே கேட்கின்றீர்களா??

ஸாதிகா said...

சந்தேகத்திற்கு பெயர் போன ஆளாச்சே.பாவம் அதிஸ் உங்களைபார்த்து அவரும் சந்தேகம்புலியாகிவிட்டார்.//எனக்கு சரியா இந்த ஃபாண்ட் தெரியல .ஏதோ எழுதீருக்கிற மாதிரி தெரியுது. ஆனா புரியல// ஜெய்லானிக்கு புரியலியா?விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்.ஒரு ரியால் நோட்டில் பதினொன்று எடுத்தால் அது 110 ரியால்.ரெண்டு ஐம்பது ரியாலும் ஒரு பத்து ரியால் நோட்டும் எடுத்தால் அது 110 ரியால்.ஒரு முழு நூறு ரியால் நோட்டும் ஒரு பத்து ரூபாய் நோட்டும் எடுத்தால் அது 110 ரியால்.நூறு ஒரு ரியால் காயினும் ஒரு பத்து ரியால் நோட்டும் எடுத்தால் அது 110 ரியால்.விளக்கம் போதுமா?இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

சீமான்கனி said...

விருதுக்கு வாழ்த்துகள் அக்கா அழைப்பை ஏற்று முதலில் இவ்வளவு விரைவாய் பதிந்ததிற்கு பாராட்டுகள்...அப்போ ஆறு அறிவு இல்லாம கடைசில மனிதனும் மீன் மாதிரி இருப்பான்னு சொல்லவர்றீங்க... நல்லாத்தே யோசிக்குறீங்க ஆமா நீங்க ரெண்டுபேர மாட்டி விடணுமே...மறந்துடீங்களா??பேக்ட் பிரட் புட்டிங்க்கு நன்றி நல்ல ருசி...

ஸாதிகா said...

அப்துல்காதர் நன்றி கருத்துக்கு.

ஸாதிகா said...

//நல்லது. தண்ணி அடிக்க முடியமா அப்டின்னு சொல்லவே இல்லியே//ஏனுங்கோ 'ரமேஷ்ரொம்ப நல்லவன் சத்தியமா' கடலில் தண்ணீர் எல்லாம் தேவைப்படாதுங்களே.கஷடப்பட்டு அடிபம்பில் தண்ணிரெல்லாம் அடிக்கத்தேவை இல்லை.

ஸாதிகா said...

அதீஸ் இப்ப விளக்கம் சேர்த்துட்டேன்.இப்ப புரிஞ்சுதோ?///, என் போன்ற சின்னக் கிட்னி உள்ளவர்களுக்குப் புய்யும்:)/// ஹி..ஹி..ஹி

ஸாதிகா said...

விருது கொடுத்தால் விருந்து..அட..எழுதப்படாத சட்டமாக்கிடுவீங்க போல் இருக்கே.நன்றி கீதா ஆச்சல்.

ஸாதிகா said...

//கத்தார் போக வாய்ப்பு அமைந்தால் அவசியம் சாப்பிடுவோம் .// கண்டிப்பா போஉ சாப்பிட்டு பார்த்து மறக்காமல் ஒரு பதிவையும் போட்டு விடுங்கள் சகோ ஜமால்.

ஸாதிகா said...

கருத்துக்கும்,விருதுக்கும் நன்றி கலாநேசன்.//அங்கயும் அய்யா தான் முதல்வர்//:-(

ஸாதிகா said...

காமெடியாக இருந்துச்சா..அது..அது தான் வேண்டும். நன்றி மகி

ஸாதிகா said...

//செம்மை மொக்கை, ஜாலியா இருக்கு.//ரொம்ப சந்தோஷம் சகோ நிஜாம்.

ஸாதிகா said...

//ஆமா நீங்க ரெண்டுபேர மாட்டி விடணுமே.//அழைப்பு விடுறதுக்கு பயமா இருக்கு சீமான்கனி.கல்லைத்தூக்கி தலையில் போட்டுடுவாங்களோன்னு.விவகாரமானதலைப்பா இருக்கே...!

ஜெய்லானி said...

//ஜெய்லானிக்கு புரியலியா?விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்.ஒரு ரியால் நோட்டில் பதினொன்று எடுத்தால் அது 110 ரியால்//

ஸாதிகாக்கா அதெப்படிங்க திரும்பவும் படிங்க.. ஹி..ஹி.. எனக்கு விளக்க போய் ஆக குழம்பிட்டீங்களே ..!!!((ஜெய்லானீஈஈஈ வந்த வேலை முடிஞ்சுது எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப் ))

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//அதீஸ் இப்ப விளக்கம் சேர்த்துட்டேன்.இப்ப புரிஞ்சுதோ?///, என் போன்ற சின்னக் கிட்னி உள்ளவர்களுக்குப் புய்யும்:)/// ஹி..ஹி..ஹி //


க்கி..க்கி... இப்பவும் நொந்து நூடுல்ஸ்தான்...

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

தொடர்பதிவு அருமை.

இங்கும் இது போல நல்ல உணவகங்கள் உண்டு.

எல் கே said...

/என்ன தொடர்பதிவு எழுதுறீங்க? எதைப்பற்றி எழுதுறீங்க? என்ன நிபந்தனை எனச் சொல்லிட்டு எழுதினால்தானே, என் போன்ற சின்னக் கிட்னி உள்ளவர்களுக்குப் புய்யும்:). ///

repeat

Unknown said...

ஆமா நீங்க ரெண்டுபேர மாட்டி விடணுமே...மறந்துடீங்களா????????????????????????????????????????

அன்புடன் மலிக்கா said...

விருது பெற்றமைக்குப் பாராட்டுக்கள் .

அப்படியே அந்த கடையிலிருந்து பத்து பார்சல் வாங்கி அனுப்பினா
அழுங்காமல் குழுங்காமல் சாப்பிட்டுவிட்டு எழுதுவேன் கவிதை கவிதையா.

மொக்கை மகாஆஆஆஆஆ சூப்பர்..

ஸாதிகா said...

//அதெப்படிங்க திரும்பவும் படிங்க.. ஹி..ஹி..// ஜெய்லானி நான் கொஞ்சம் கணக்கில் வீக்.

ஸாதிகா said...

//இங்கும் இது போல நல்ல உணவகங்கள் உண்டு// நீங்களும் பகிருங்களேன் அக்பர்.அங்கு வந்தால் எங்களுக்கும் உதவியாக இருக்கும்.

ஸாதிகா said...

// LK said...
/என்ன தொடர்பதிவு எழுதுறீங்க? எதைப்பற்றி எழுதுறீங்க? என்ன நிபந்தனை எனச் சொல்லிட்டு எழுதினால்தானே, என் போன்ற சின்னக் கிட்னி உள்ளவர்களுக்குப் புய்யும்:). ///
எல் கே சார் அதான் விளக்கத்தையும் அதீஸின் பின்னூட்டம் படித்த பிறகு சேர்த்துவிட்டேனே!

ஸாதிகா said...

//ஆமா நீங்க ரெண்டுபேர மாட்டி விடணுமே...மறந்துடீங்களா???????????????// கலாநேசன்,மாட்டித்தான் பழக்கம்.மாட்டிவிட்டு பழக்கம் இல்லையே?என்ன பண்ணுவது?

ஸாதிகா said...

மலிக்கா,பத்த்த்த்து பார்சலா?ஏங்க..தெரியாமல்த்தான் கேட்கிறேன்.வீட்டில் இருப்பதே நாலே பேர்.இதிலே பத்து பார்சல் எதுக்கு?

ஹைஷ்126 said...

வாழ்த்துகள்

ஹைஷ்126 said...
This comment has been removed by the author.
Menaga Sathia said...

விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா!! செம காமெடியான தொடர்பதிவு!!

தூயவனின் அடிமை said...

வாழ்த்துக்கள்.
விருந்து அருமை.

சாந்தி மாரியப்பன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

மொக்கை நல்லாருக்கு.

ஸாதிகா said...

வாழ்த்துக்கு நன்றி ஹைஷ் சார்.

ஸாதிகா said...

நன்றி மேனகா.

ஸாதிகா said...

இளம் தூயவன் நன்றி.

ஸாதிகா said...

அமைதிச்சாரல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

முக்கியமா கம்பியூட்டர் பக்கமே வரமுடியாமல் பிளாக் எழுத முடியாது//

ஐயயோ நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு.

அப்புறம் விருதுக்கு வாழ்த்துக்கள் ஸாதிகா..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

விருதுக்கு வாழ்த்துக்கள்... தொடர்பதிவு கலக்கல்... நல்ல கற்பனை தான்... ஆனா ப்ளாக் எழுதாம படிக்காம இருக்கறது ரெம்ப கஷ்டங்க.. ஹா ஹா ஹா

ஸாதிகா said...

ஹப்பா..//முக்கியமா கம்பியூட்டர் பக்கமே வரமுடியாமல் பிளாக் எழுத முடியாது//

ஐயயோ நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு.
// உங்களை எந்த அளவுக்கு கணினி ஆட்கொண்டுள்ளது என்று புரிகின்றது.

ஸாதிகா said...

//ஆனா ப்ளாக் எழுதாம படிக்காம இருக்கறது ரெம்ப கஷ்டங்க.. ஹா ஹா // எல்லோருக்கும் இதே நிலைதான் அப்பாவி தங்கமணி

Jaleela Kamal said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

பதிவுகள் நிறைய இருக்கு எத முதலில் படிப்பதுன்னு தெரியல.

நோன்பு என்பதால் அவ்வளவா நேரம் இல்லை.