May 4, 2010

தித்திக்குதே...


துபையில் பார்க்கில் நடைபெற்ற பெண்பதிவர் சந்திப்பின் பொழுது மலிக்கா சமைத்து எடுத்து வந்த நூடுல்ஸ் ஸ்டஃப்ட் தோசா..மகனுக்கு காய்ச்சலாக இருந்தும் கைவண்ணத்தை காட்டவேண்டி கொண்டு வந்தது இது.தோசையம்மா தோசை..யாரு சுட்ட தோசை..மலிக்கா சுட்ட தோசை..மலிக்கா..டேஸ்ட் ரொம்பவே நன்றாக இருந்தது.சீக்கிரம் ரெசிப்பி போடுங்கள்.
ஜலி தங்கச்சி ஆசை ஆசையாக அவித்துக்கொண்டு வந்த அவித்த வேர்கடலை.சூப்பராக கடலை போடுவதில் வல்லவரான,நல்லவரான என் ரங்க்ஸுக்கு ரொம்ப பிடித்த ஐட்டம்.அதனாலே எனக்கும் ரொம்ப பிடிக்கும்.இது உங்களுக்கு எப்படி தெரியும் ஜலி??
வாவ்..முர்தபா...முர்தபா என்று ஈஸியா சொல்லி விடலாம்.ஆனால் லேசுபட்ட விஷயம் இல்லேங்க.ஏகப்பட்ட வேலையும் நேரமும் பிடிக்கும் இந்த முர்தபா செய்ய.ஆஃபீஸ்.வீடு என்று அலைந்துகொண்டிருக்கும் ஜலி அத்தனை பிஸியிலும் அழகாக சமைத்துக்கொண்டு வந்து "சாப்பிடுங்க..சாப்பிடுங்க.."என்று உபசரித்துக்கொண்டே இருந்தே அழகே தனிதான்
ஆஆ...மொறு மொறு வடை..ஆனால் சூடாக அலுமினியம் ஃபாயிலில் சுற்றப்பட்டதால் மொறுமொறுப்பு குறைந்தாலும் அதில் ஜலியின் அன்பும் ,கள்ளமில்லா சிரிப்பும் நிறைந்து இருந்தது.ஜலீலா&மலிக்கா சந்திப்பின் பொழுது கொழுகட்டை முழுவதையும் காலி செய்துவிட்டு பாக்ஸில் ஒட்டிக்கொண்டிருந்ததை போட்டொ எடுத்துப்போட்டதுபோல் இதுவும் ஆகி விடக்கூடாது என்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக அவசரஅவசரமாக முதல் வடை வாய்க்குள் அகப்படுமுன் கிளிக்கியது.கேமராவைத்தூக்கியதும் மற்ற பதிவர்களும் தத்தம் கேமராவை தூக்கிவிட்டார்கள்
ஹை..நான் வென்ற பரிசு.நம்ம ஸ்நேகிதி ஆசியா மறக்காமல் தந்துவிட்டார்..சூப்பரான அல்வா.மைக்ரோவேவில் சூடு படுத்தி சுடசுட நெய்யொழுக பறிமாறினார்.கூடவே கோதுமை மாவு பணியாரத்தையும் ஊட்டிவிடாத குறையாக திணித்து விட்டார்.ஜெய்லானி புகை விடக்கூடாது.சார்ஜாவில் அடிக்கிற வெயிலுக்கு தாங்காது.
ஆசியா கொடுத்த அற்புதமான விருந்து.அந்த பெரிய மீன் சட்டியில் செய்த மீன் குழம்பு மட்டும் மிஸ்ஸிங்.திகட்டதிகட்ட ஆஸியா உபசரித்த விதம்..ம்ம்,..அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.
ஆஸியா கொடுத்த அன்பளிப்பு.ஆசியா சீக்கிரம் எங்கள் வீட்டிற்கும் வாருங்கள்.இதே கப்பில் சூடாக உங்களைப்போல் ஒரு சுலைமானி டீ போட்டு தருகிறேன்.(ஸ்டார்ட்டர்தான்)
ஜலீலா கொடுத்த அழகு கைக்கடிகாரம்.நேரம் தவறாமல் இருங்கக்கா என்று சொல்லுவதைப்போல் இருந்தது.ஜலீலாவின் சிரிப்பைப்போல் மினுமினுக்கின்றது.சில்வர்,கோல்ட் கலரிலான இரண்டு கைக்கடிகாரங்களைக்காட்டி எதுவேண்டுமோ செலக்ட் செய்துகொள்ளுங்கள் என்றார்.அப்ப எனக்கும்,ஜலீலாவுக்கும் ஒரே மாதிரி வாட்ச் இருக்கு.ஜலி நீங்க இந்தியா வர்ரப்போ ஒரே மாதிரியான கடிகாரங்களை அணிந்துகொண்டு ஸ்கைவாக்கில் வலம்வருவோம்.
எனக்கு பிடித்த இளநீலக்கலர் சேலை.மனோ அக்கா வீட்டிற்கு வந்திருந்தபொழுது கொடுத்தது.
மலிக்கா எனக்கே எனக்கு ஸ்பெஷலாக தந்தது.மலிக்கா நீங்க தந்த நேரம் துபையில் இருந்து திரும்பும் பொழுது நிறைய திர்ஹம் மிச்சம் பிடித்து இந்த பர்சில் பத்திரப்படுத்தி பத்திரமாக இந்தியா கொண்டுவந்து பத்திரமாக கப்போர்டில் வைத்து பத்திரமாக பூட்டிவைத்து விட்டேன்.


41 comments:

Mahi said...

வாவ்..சூப்பர் சாப்பாட்டு வகைகள்..பரிசுகளும் சூப்பர்! என்ஜாய் சாதிகாக்கா!
அப்படியே பதிவர் சந்திப்பை ஒரு க்ரூப் போட்டோ புடிச்சு போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்! :)

செ.சரவணக்குமார் said...

ஆஹா, சூப்பர் பதிவு அக்கா. புகைப்படங்கள் அசத்தல். கடைசியா சுலைமானி சாப்பிட்டீங்களா?

ஸாதிகா said...

மகி..பதிவர் சந்திப்பை குரூப் போட்டோ எடுத்து போடலாமதான்.போட்ட மறு நிமிடம் அமீரகத்தில் இருந்து எங்கள் வீட்டிற்கு எட்டு ஏவுகனை வந்து விடும்.நீங்க என்னை காப்பாற்ற வந்துவிடுவீர்களா?

ஸாதிகா said...

சரவணக்குமார் அல் ஐன் சென்று மலை மேல் போய்விட்டு கிழே அடிவாரத்தில் இருக்கும் கிரீன்பார்க்கில் கும்மாளமிட்டு,அங்குள்ள சுடு நீரோடையில் கால்களை இதப்படுத்திவிட்டு அசந்து போய் ஆஸியா வீட்டிற்கு போனால் சூடான சுலைமானிடீதான் ஆசியாவுடன் போட்டி போட்டுக்கொண்டு எங்களை வரவேற்றது.

Anonymous said...

ஸாதிகா இந்த பதிவை படிக்க படிக்க நானும் அங்கு உங்களுடனிருந்தது போல் உணர்ந்தேன்....
//மகி..பதிவர் சந்திப்பை குரூப் போட்டோ எடுத்து போடலாமதான்.போட்ட மறு நிமிடம் அமீரகத்தில் இருந்து எங்கள் வீட்டிற்கு எட்டு ஏவுகனை வந்து விடும்.நீங்க என்னை காப்பாற்ற வந்துவிடுவீர்களா?//

:)))

Asiya Omar said...

ஸாதிகா இதெல்லாம் சிம்பிள் தோழி,நீங்க நிச்சயமாக வருவீங்கன்னு தெரிந்திருந்தால் பெரிய விருந்தே ஏற்பாடு செய்து இருப்பேன்.நான் கூப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது கடைசி வரையில் வருவதாக சொல்லாமல் வீட்டு கிட்ட வந்ததும் வந்துவிட்டோம்,எது உங்க வீடுன்னு கேட்ட தருணம் என்னால் நம்பமுடியலை.அப்படியே வெளியே ஓடி வந்திட்டேன்,வீட்டிலும் யாருமில்லை,போன் போட்டு அவரை அழைத்து எல்லாம் இப்ப நடந்தமாதிரி இருக்கு.

மின்மினி RS said...

ஆஹா அருமையான பதார்த்தங்கள்.. தோழிகள் உங்களை நல்லாத்தான் கவனிச்சி அனுப்பிருக்காங்க ஸாதிகா அக்கா.. நல்லதொரு பயணம்.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் பதிவர் சந்திப்பு....பரிசுகள் எல்லாம் அருமையோ அருமை...சூப்பர்ப்...

ஜெய்லானி said...

அட, அன்பு கலந்த பரிசுப் பொருட்கள் , அழகா இருக்கு .

//ஜெய்லானி புகை விடக்கூடாது.சார்ஜாவில் அடிக்கிற வெயிலுக்கு தாங்காது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

சீமான்கனி said...

ஆஹா...அக்கா இன்னைக்கு கண்ணுல மட்டும் இல்ல வயித்துலயும் புகைவருது...ஒழுங்க மிச்சம் மீதியெல்லாம் ஒரு பர்செல் அனுப்பிருங்க இல்லனா வயிறு வலிக்கும்...சொல்லிபுட்டேன்...ஆமா...

Jerry Eshananda said...

பதிவில் அன்பும் கூடவே பரிமாற ப்பட்டு இருக்கிறது ஸாதிகா மேம்.

Chitra said...

எங்களை விட்டு விட்டு, நீங்கள் எல்லாம் சந்தித்ததோடு மட்டும் அல்லாமல், சுவையான உணவு, டீ மற்றும் பரிசு பொருட்கள் வேறு........... நல்லா இருங்க, மக்கா! ha,ha,ha,ha,ha......
nice post!

SUFFIX said...

வாவ்..கிரேட் அக்கா, படங்களையும் போட்டு அசத்திட்டீங்க.

கிளியனூர் இஸ்மத் said...

எங்க வீட்டுக்கு வராமல் போனதுதான் எனக்கு வருத்தம்....பதிவர் சந்திப்புன்னு சொல்லி சமையல் போட்டியே நடத்திருக்கீங்க...அமீரக அனுபவங்களை தொடராக எழுதுங்கள்....வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

பதிவர் சந்திப்பு
சாப்பாட்டு வகைகள்
புகைப்படங்கள் சூப்பர்...

Jaleela Kamal said...

ஆஹா இப்படி தேங்காய போட்டு ஒடச்சிட்டீங்களே?

எல்லாத்தையும் போட்டோ எடுத்துட்டீங்களா?

எல் கே said...

:)

Asiya Omar said...

தோழிகள் அனைவரின் கிஃப்டும் அசத்தலாக இருக்கு.
அய்யோ ஸாதிகா மேலோட்டமாக படித்து விட்டு கருத்து சொல்லிட்டு போய் விட்டேன்,இப்ப தான் நல்லா வாசித்து பார்க்கிறேன்,நான் ரொம்ப சாதாரணம் என்னைப் போய் ... "திகட்டதிகட்ட ஆஸியா உபசரித்த விதம்..ம்ம்,..அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.இது ரொம்ப சங்கடமாக இருக்கு.ஸாதிகா.உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

Menaga Sathia said...

சாப்பாட்டு பொருளைலாம் பார்த்தபோது என காதுல புகை வருது, பரிசு பொருட்கள் அழகா இருக்குக்கா....

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,

ஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .

வெற்றி வேல் , வீர வேல்
................................................
..............................................\

இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)

மேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்

Vijiskitchencreations said...

ஸாதிகா அக்கா பயணம் எல்லாம் முடிந்து வந்தாச்சு. குட் நல்ல பரிசுகளோடு நல்ல பசுமையான தோழிகளின் நினைவுகள், உபசரிப்புகள் வாவ் எனக்கு இதை எல்லாம் பார்த்து படிக்கும் போது நம்ம உறவினர் வீட்டுக்கு வந்து போனது போல் ஒரு சந்தோஷம் தோன்றும் எனக்கு இது போல் அனுபவம் இருக்கு. இன்றும் அதை எல்லாம் நினைத்து பார்ப்பேன்.
வாவ் எப்ப அக்கா இந்த பக்கம்? எல்லாரும் உங்களை பார்த்தாச்சா? ச்சே நான் மட்டும் இன்னும் பார்க்கல்லை. ஒ ஐ மிஸ் யூ அக்கா.

ஸாதிகா said...

அம்மு மது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

ஆசியா,உங்கள் ப்ரியத்திற்கும்,அன்புக்கும் மிக்க நன்றி.அந்த அவசரத்திலும் எங்களை அன்புடன் உபசரித்தது மற்றக்கமுடியாது தோழி.

ஸாதிகா said...

மின்மினி,உங்கள் கருத்துக்கு மிக நன்றி

ஸாதிகா said...

கீதாஆச்சல் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.நீங்கள் சென்னை வாருங்கள் இது போல் ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம்.

ஸாதிகா said...

ஜெய்லானி உங்கள் கருத்துக்கு நன்றி.ஏதோ என் பாக்கியம்..இந்த அவ்வ்வ்வ்வ்வ் அழுகாச்சியுடன் விட்டீர்களே!

ஸாதிகா said...

சீமான் கனி என்னதம்பி இது இங்கு வந்த பிறகு கேடிகின்றீர்களே பார்சல்?

ஸாதிகா said...

//பதிவில் அன்பும் கூடவே பரிமாற ப்பட்டு இருக்கிறது //உண்மைதான் ஜெரி சார்.கருத்துக்கு நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

அல்ஹம்துலில்லாஹ்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஸாதிகா said...

//நல்லா இருங்க, மக்கா//hahahaha..nice comment சித்ரா.நன்றி

ஸாதிகா said...

சகோ.ஷஃபி,மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.

ஸாதிகா said...

சகோ.இஸ்மத் நீங்கள் இருந்த இடத்திற்கே வந்து உங்களை பார்க்க இயலவில்லையே?கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

அஹ்மது இர்ஷாத் கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

//ஆஹா இப்படி தேங்காய போட்டு ஒடச்சிட்டீங்களே?//என்னப்பா இப்படி சொல்லிவிட்டிர்கள்?? கருத்துக்கு நன்றி ஜலி

ஸாதிகா said...

எல்.கே வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஆசியா,உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

என்னங்க மங்குனியாரே ..இது புது பாணியாக இருக்கு காப்பி பேஸ்ட் செய்து எல்லோருக்கும் பின்னுட்டம் இடுவது.சரி வந்துபின்னூட்டிவிட்டீர்கள்.நன்றி.

ஸாதிகா said...

மேனகா,பிரான்ஸில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்திவிடலாமா?அங்கும் கூட என் நெருங்கிய உறவினர்கள் இஒருக்கின்றார்கள்.

ஸாதிகா said...

விஜி,//ஒ ஐ மிஸ் யூ அக்கா// பார்த்தீர்களா?எத்தனை பாசத்துடன் சொல்லுகின்றீர்கள்.அடுத்த முறைவரும் பொழுதாவது அவசையம் சந்தித்தே ஆகவேண்டும்.

ஸாதிகா said...

சகோ ஸ்டார்ஜன் கருத்துக்கு மிக்க நன்றி.

Menaga Sathia said...

//மேனகா,பிரான்ஸில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்திவிடலாமா?அங்கும் கூட என் நெருங்கிய உறவினர்கள் இஒருக்கின்றார்கள். // ஓஓஓ தாராளமாக நடத்தலாம்...இங்க வாங்க மீட் பண்ணிடலாம் அக்கா...