May 6, 2010

அபுதாபி- செட்டிநாடு உணவகம்

அபுதாபியில் eldorada cinema அடுத்து national cinema பின்புறம் அமையபெற்று இருக்கும் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட்டின் அழகிய உட்புறத்தோற்றம்.சுவையான இந்திய உணவு உண்டு மகிழ அருமையான ஒரு உணவகம்.
வசதியாக அமர்ந்து உணவு உண்ண விசாலமான இட அமைப்பு,அழகான உள் அலங்காரம்,கனிவான உபசரிப்பு,அபரிதமான சுவை,நியாயமான விலை,கண்ணைப்பறிக்கும் சுத்தம் அனைத்தும் ஒருங்கே பெற்ற தன்னிகரில்லாமல் விளங்கும் உணவகம்
ஆட்டுக்கால் சூப்..இந்தியாவில் உள்ள உணவகங்களில் கிடைக்கும் சுவையை பின்னுக்குத்தள்ளி விடும்.காராசாரமான சுவையான சூப்.பருகபருக திகட்டாது.
மின்னும் கிரில்ட் சிக்கன்.அருமையான இந்தியசுவைஉடன்,மெத்தென்ற கோழி இறைச்சியுடன் பதமாக மசாலா தடவிய கிரில்ட் சிக்கன்.சூடாக சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் இந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு போகத்தோன்றும்.
லேயர்,லேயராக வாய்க்குள் போட்டாலே கரைந்துவிடும் சுவைமிகு வீச்சுபரோட்டா.பதிவர் சந்திப்பு இனி அபுதாபியில் நடந்தால் தாரளமாக இங்கு இந்த ஐட்டங்கள் தவிர பிரியாணியும் சேர்த்து ஆர்டர் செய்துவிடலாம்.எத்தனை "மன்" பிரியாணி வேண்டுமோ கேட்கும் இடத்திற்கே கொண்டுவந்து டெலிவரி செய்து விடுவார்கள்.
கமகமக்கும் கார்லிக் நாண்.சைட் டிஷ்ஷுடன் உள்ளே தள்ளினால் போய்க்கொண்டே இருக்கும் அருமையான சுவை.
மணமணக்கும் பட்டர் நாண்.விதவித வடிவங்களில் சுவையுடன் இருக்கும்.
ஆஹா..இப்படி ஒரு சிக்கன்&எக் பிரைட் ரைஸ் நான் சாப்பிட்டதே இல்லை.அருமையான சுவை.மணக்க,மணக்க கண்களைப்பறிக்கும் வண்ணத்தில்,பார்த்தாலே நாவூரச்செய்துவிடும்.சாப்பிட்டதும் இல்லாமல் பார்சல் போட்டுக்கொண்டு வந்து வீட்டிலும் வைத்து சாப்பிடத்தோன்றும்.
சுவையான சிக்கன் டிக்கா."சுள்"என்ற சுவையுடன் எலுமிச்சைசாறு பிழிந்து சாப்பிட்டால் பிளேட் மளமளவென்று காலியாகிவிடும்.குழந்தைகள் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்.கூட ஓரிரு பிளேட் சேர்த்து ஆர்டர் செய்யவேண்டும்.இந்த சிக்கன் டிக்கா விதவித பிளேவர்களில் தயாரிக்கின்றனர்.
சில்லிசிக்கன்.மணக்கமணக்க மசாலாவுடம்,கருவேப்பிலை,மல்லி,மிளகாய் எல்லாம் பதமாக போட்டு சுவை அள்ளுகின்றது.நாணுக்கு ஏற்ற அருமையான சைட் டிஷ்
ஹைதரபாதி சிக்கன்.கிரேவியைக்கூட மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிடத்தோன்றும் அளவு சுவை மிக்கது.இந்த உணவகத்தின் நிறுவனர் உணவு தயாரிப்பவர்கள் யார் யார் என்று அறிந்து சுவையான உணவு புது விதமாக தயாரித்து விட்டால் கூப்பிட்டு பாராட்டி,பரிசும் வழங்கி வாடிக்கையாளரின் நாவுக்கு சுவையாக விருந்து படைப்பதில் கில்லாடி.இதன் செய்முறையை கேட்டபொழுது "அதனை மட்டும் கேட்டுவிடாதீர்கள்"என்று உணவகத்தின் நிறுவனர் பதறிய பதறலில் அமைதியாகிவிட்டேன்.
மொறு,மொறு நெய் ரோஸ்ட்.கூடவே பலவித சட்னி சாம்பார்வகைகளுடன்.பசும்நெய் மணக்க அசல் நெய் ரோஸ்ட் என்றால் இதுதான்
நீளமான பேப்பர் ரோஸ்ட்.சுவையிலும்,அளவிலும் பெரியது.இதுவும் பலவித சட்னி,சாம்பாருடன் பறிமாறுகின்றார்கள்.அசைவத்தில் மட்டுமல்ல சைவத்திலும் எங்களுக்கு நிகரில்லை என்கின்றது இதன் பாரம்பரியமிக்க சுவை.
ஹைலைட்..வேறென்ன ?லஸ்ஸிதான்.அருமையான மாங்கோ லஸ்ஸி.தவிர மிண்ட் லஸ்ஸி சுவையே அலாதியானது.தரமான பொருட்களைதேர்ந்தெடுத்து,கைதேர்ந்த் உணவுக்கலை நிபுணர்களை வைத்து தரமிகு,சுவை மிகு உணவு படைக்கின்றனர் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட் நிறுவனத்தினர்.இலவச டோர்டெலிவரிக்கு கீழ்க்கண்ட தொலைபேசிஎண்களில் தொடர்பு கொள்ளலாம்.
02-6777699
02-6780002

டிஸ்கி:யாம் பெற்ற சுவை அனைவரும் பெறுக என்ற ஒரே நோக்கோடு போடப்பட்டது இவ்விடுகை

46 comments:

டவுசர் பாண்டி... said...

இது ஒரு விளம்பர பதிவு மாதிரி இருக்கு...

பசி நேரத்துல இந்த மாதிரி பதிவெல்லாம் காட்டின நீங்க நூறு வயசு எல்லா இன்பமும் பெற்று வாழனும்னு சபிக்கிறேன்....

ஜெய்லானி said...

ஸாதிகாக்கா!! இப்பதாங்க நிசமா காதுல புகை டிஸைன் டிஸைனா வருது.!! படம் போட்டு , கீழே பாட்டனி சப்ஜக்ட் மாதிரி குறிப்பு வேறயா ? இத்தனையும் ஒரே நேரத்தில்

கல்யாண சமையல் சாதம்.. காய்கறிகளும் பிரமாதம்....மாயா பஜார்...நினைவு வருது.

ஆமா எப்படி எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணுணீங்க ஒரே நேரத்தில.....

சீமான்கனி said...

அக்கா நம்மூர் ஐடெம் மொத்தமா ஒரு ரவுண்டு கட்டி அடிச்சுருக்க கூடாது அவ்வ்வ்வவ்வ்வ்....அபுதாபி க்கு டிக்கெட் எடுக்க ஆசை வருது...

athira said...

ஸாதிகா அக்கா... சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்திட்டீங்க.. நான் என் வயிற்றைச் சொன்னேன்...

டிஸ்கி:யாம் பெற்ற சுவை அனைவரும் பெறுக என்ற ஒரே நோக்கோடு போடப்பட்டது இவ்விடுகை//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Unknown said...

Akka Idu Bloga vilambarma?

ஹுஸைனம்மா said...

யக்கா, இப்பத்தான் புரியுது!! இந்த ஹோட்டலப் பேசி முடிக்கத்தான் அபிதாபி வந்தீங்களா!! ஆனாலும் எங்களுக்கு ஒரு ட்ரீட் அங்க குடுக்காமப் போயிட்டீங்க பாருங்க!!

சரி, பதிவர்ர்ர்ர்ர் சந்திப்பு ஃபோட்டோவைக் காட்டி, உங்க ஃபிரண்டுன்னு சொன்னா, ஃப்ர்ர்ர்ர்ரீயா சாப்பாடு தருவாங்களா?

;-)))))

ஹுஸைனம்மா said...

யக்கா, இப்பத்தான் புரியுது!! இந்த ஹோட்டலப் பேசி முடிக்கத்தான் அபிதாபி வந்தீங்களா!! ஆனாலும் எங்களுக்கு ஒரு ட்ரீட் அங்க குடுக்காமப் போயிட்டீங்க பாருங்க!!

சரி, பதிவர்ர்ர்ர்ர் சந்திப்பு ஃபோட்டோவைக் காட்டி, உங்க ஃபிரண்டுன்னு சொன்னா, ஃப்ர்ர்ர்ர்ரீயா சாப்பாடு தருவாங்களா?

;-)))))

malar said...

செட்டிநாடு என்று சொல்ரேங்க பயங்கர காரமாக இருக்குமே.....

உங்கள் பதிவை பார்தாலே போய் சாப்பிடனும் தோனுது.
இன்ஸா அல்லா ....

Menaga Sathia said...

அப்படியே படத்தை பார்த்து ஜொள்ளு விட்டுட்டே பார்க்குறேன்....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

Ammu Madhu said...

ஸாதிகா இதில் நெய் ரோஸ்ட்,பெப்பர் ரோஸ்ட்,மற்றும் நாண் வகைகள் வாய் ஊற வைக்குது.

Chitra said...

நீங்கள் எழுதிய விதமும் படங்களும் சேர்ந்து, நாவில் நீர் ஊற வைத்து விட்டது.... இங்கே ஒரு பிரான்ச் திறக்க சொல்லுங்களேன். yummy!

GEETHA ACHAL said...

இப்படியா ஆசையினை காட்டுவது....இதற்காக அபுதாபிக்கு வரவழுச்சிடுவிங்க...அருமையான உணவு...

ஜெய்லானி said...

@@@ ஹுஸைனம்மா--//சரி, பதிவர்ர்ர்ர்ர் சந்திப்பு ஃபோட்டோவைக் காட்டி, உங்க ஃபிரண்டுன்னு சொன்னா, ஃப்ர்ர்ர்ர்ரீயா சாப்பாடு தருவாங்களா?

;-)))))//


ஹுஸைனம்மா நீங்க மகா புத்திசாலி நா ஒத்துக்கிறேன்.ஹா...ஹா...

ஸாதிகா said...

டவுசர் பாண்டி,
//இது ஒரு விளம்பர பதிவு மாதிரி இருக்கு...//
கீழே டிஸ்கி பார்க்கலியா?
//நீங்க நூறு வயசு எல்லா இன்பமும் பெற்று வாழனும்னு சபிக்கிறேன்..///நூறுவயசா?????அவ்வ்வ்வ்வ்வ்....

ஸாதிகா said...

தம்பி ஜெய்லானி,//ஆமா எப்படி எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணுணீங்க ஒரே நேரத்தில//நீங்களே சொல்லிவிட்டீர்களே எப்படி "டெஸ்ட்"பண்ணுணீங்க என்று

ஸாதிகா said...

சீமான் கனி முதல்லே அழுகாச்சிய நிறுத்துங்க..விரைவில் சென்னைக்கே பிரான்ஞ் வரவிருக்கின்றது.ஜாமாயுங்கள்..

ஸாதிகா said...

ஆஅ...அதிஸ் ..பற்களை கடித்தாகிவிட்டதா?இந்த அற்புத சவுண்ட் கேட்டு நாளாச்சு.அதென்ன டிஸ்கியை பார்த்து கர்ர்ர்ர்...

ஸாதிகா said...

தம்பி MAT,
இந்த குசும்புதானே வேண்டாங்கறது?டிஸ்கியை கவனிக்கவில்லையா?

ஸாதிகா said...

யம்மாடி ஹுசைனம்மா,செட்டிநாடு உணவகத்தின் நிறுவனரை கைபேசிமூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தேன்.அவரது சாதுர்யமான பேச்சை கேட்ட பின்னும் இப்படி ஒரு வினா எழுப்பலாமா?

ஸாதிகா said...

வாங்க மலர்,ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.காரமெல்லாம் அதிகம் இருக்காது.ஒரு முறை போய் டேஸ்ட் பண்ணுங்க.அப்புறம் சாப்பிடுவதற்காகவே அபுதாபி அடிக்கடி போய்டுவீங்க.

ஸாதிகா said...

மேனகா,//ஜொள்ளு விட்டுட்டே பார்க்குறேன்....ஸ்ஸ்ஸ்//ஆச்சா?கருத்துக்கு நன்றி.படத்தைக்காட்டி உங்களை எல்லாம் அதிகம் பசியை தூண்டி விட்டு விட்டேன்.

ஸாதிகா said...

அம்மு மது..ஓ நீங்க சைவமா?குறிப்பாக சைவௌணவுவகைகளை மட்டும் குறிப்பிட்டு சொல்லுகின்றீர்களே?கருத்துக்கு நன்றி அம்மு

ஸாதிகா said...

//இங்கே ஒரு பிரான்ச் திறக்க சொல்லுங்களேன். yummy!//ஐடியாவெல்லாம் நிறுவனருக்கு நிறைய இருக்கு.விரைவில் வரலாம்.கருத்துக்கு நன்றி சித்ரா.

ஸாதிகா said...

//ஹுஸைனம்மா நீங்க மகா புத்திசாலி நா ஒத்துக்கிறேன்.ஹா...ஹா.//ஜெய்லானி இதில் என்ன சந்தேகம்.பார்த்தால்தான் ஹுசைனம்மா பூனை போல் இருப்பார்.ஆனால் உடம்பெல்லாம் மூளை அவருக்கு.

நாஸியா said...

vaai oorudhu.. innaiku eppadiyaachum thallittu poida vendiyadhu thaan.. abu dhabi illandaalum anjapparukkaachum

Asiya Omar said...

ஸாதிகா அபுதாபியில் செட்டிநாடு சூப்பராக இருக்குமே,நான்கு வருட அபுதாபி வாழ்க்கையில் செட்டிநாடு ரெஸ்டாரண்ட் போன நாட்கள் எத்தனையோ !அங்கு என்னோட ஃஃபேவரைடெ நெத்திலி ஃப்ரையை நீங்க டேஸ்ட் பண்ணலையா,முறுமுறுன்னு கருவேப்பிலை மணத்துடன் வைததவுடன் தட்டு காலியாகிவிடும்.இன்னும் என் விருப்ப உணவு அங்கு நிறைய இருக்கு,அட்வடைஸ்மெண்ட் சும்மா பண்ணமுடியுமா?அதன் உரிமையாளரிடம் சொல்லுங்கோ.நெத்திலி ஃப்ரை இனி அதிகம் போச்சுன்னா எனக்கு டிஸ்கவுண்ட் கூப்பன் தரச்சொல்லுங்க.

சிநேகிதன் அக்பர் said...

ஜெய்லானியின் பதில்களை (கேள்விகளை ) வழி மொழிகிறேன் யுவர் ஆனர்.

பார்த்தவுடன் பசியை தூண்டிவிட்டது. குப்பூஸ் சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான் :)

Jaleela Kamal said...

ஸாதிகா, இலவச விளம்பரமா?

ம்ம் துபாய் வந்துஒரு அல் ரவுண்டு போல் சுற்றி விட்டீர்கள்

இன்னும் அபுதாபி செட்டி நாடு போனதில்லை.
போனால் ஒரு பிடித்தான் பிடிககனும்/

நல்ல போட்டோவர் போட்டு காலையில் ஒரு புட்டு தான் சாப்பிட்டு வந்தேன், பசிய கிளப்பிட்டீஙகளே

Jaleela Kamal said...

@@@ ஹுஸைனம்மா--//சரி, பதிவர்ர்ர்ர்ர் சந்திப்பு ஃபோட்டோவைக் காட்டி, உங்க ஃபிரண்டுன்னு சொன்னா, ஃப்ர்ர்ர்ர்ரீயா சாப்பாடு தருவாங்களா?

ஆமாம் நானும் அங்க் போய் ஸாதிக்கா அக்காவின் ஒன்று விட்ட தஙக்ச்சின்னு சொன்னா என்க்கும் எல்லாம் பிரியா கிடைக்குமா?

ஹிஹி

SUFFIX said...

அட..அட..!! நாங்க இப்போ அபுதாபிக்கெல்லாம் போக முடியாது, ஜித்தாவிலேயும் இது மாதிரி ஒரு ரெஸ்டாரண்ட் திறக்க சொல்லுங்க..ஹி..ஹி:)

அன்புடன் மலிக்கா said...

யக்கா, இப்பத்தான் புரியுது!! இந்த ஹோட்டலப் பேசி முடிக்கத்தான் அபிதாபி வந்தீங்களா!! ஆனாலும் எங்களுக்கு ஒரு ட்ரீட் அங்க குடுக்காமப் போயிட்டீங்க பாருங்க!!

சரி, பதிவர்ர்ர்ர்ர் சந்திப்பு ஃபோட்டோவைக் காட்டி, உங்க ஃபிரண்டுன்னு சொன்னா, ஃப்ர்ர்ர்ர்ரீயா சாப்பாடு தருவாங்களா?//

அதேதான் நானும் இப்புடியா உட்டுபுட்டு துண்ணுறது போங்கக்கா உங்ககூட டூ..நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html

சீமான்கனி said...

அவ்வ்வ்வவ்வ்வ்....நான் சென்னைலயே இல்லையே....சவுதில இருக்கேனே....

மங்குனி அமைச்சர் said...

//டிஸ்கி:யாம் பெற்ற சுவை அனைவரும் பெறுக என்ற ஒரே நோக்கோடு போடப்பட்டது இவ்விடுகை///


அப்போ இவ்வளோ ஐடதையும் நீங்க ஒரே ஆள் சாப்டிகளா ?

ஸாதிகா said...

நாஸியா "தள்ளிட்டுபோனீங்களா?அபுதாபிக்கு?

ஸாதிகா said...

அட நெத்திலி ஃபிரை மிஸ் பண்ணி விட்டோமே?ஆனால் இங்கே உள்ள காரைக்குடியில் நீங்கள் சொன்னதைப்போல் நெத்திலி ஃபிரை கருவேப்பிலை மணக்க சாப்பிட்டு இருக்கிறேன்,

ஸாதிகா said...

குப்பூஸ் சாப்பிட்டால் தூக்கம் வருமா?அதென்னவோ தெரிய வில்லை.நிறைய ரெஸ்டாரெண்டுகளில் சைட் டிஷ் வாங்கினால் குப்பூஸ் ஃப்ரீயாகவே தருகின்றனர்.பத்து குப்பூஸ் அடங்கிஅய் பாக்கெட் வெறும் இரண்டு ரியால் .கருத்துக்கு நன்றி அக்பர்.

ஸாதிகா said...

ஹா..ஹா..ஜலி..இலவசமாக கிடைக்குமாவா?நேரில் போய் டிரை பண்ணுங்களேன்.

ஸாதிகா said...

// ஜித்தாவிலேயும் இது மாதிரி ஒரு ரெஸ்டாரண்ட் திறக்க சொல்லுங்க..ஹி..ஹி//அந்த ரெஸ்டாரெண்ட்டின் நிறுவனை இந்த பின்னூட்டங்களை படித்துக்கொண்டுதான் இருப்பார்.நன்ரி தம்பி ஷஃபி.

ஸாதிகா said...

மலிக்கா.கருத்துக்கு மிக்க நன்றி.டூ வெல்லாம் போடக்கூடாது.

ஸாதிகா said...

சீமான்கனி சவுதி போயாச்சா?

ஸாதிகா said...

//அப்போ இவ்வளோ ஐடதையும் நீங்க ஒரே ஆள் சாப்டிகளா //கண்ணு வைக்காதீங்க மங்குனியாரே.

SUFFIX said...

//ஸாதிகா said...
// ஜித்தாவிலேயும் இது மாதிரி ஒரு ரெஸ்டாரண்ட் திறக்க சொல்லுங்க..ஹி..ஹி//அந்த ரெஸ்டாரெண்ட்டின் நிறுவனை இந்த பின்னூட்டங்களை படித்துக்கொண்டுதான் இருப்பார்.நன்ரி தம்பி ஷஃபி.//

For your info. சமீபத்தில் ETA குரூப் ஆர்யாஸ் (சைவம் மட்டும்) ரெஸ்டாரண்ட் ஜித்தாவில் திறந்திருக்கிறார்கள்.

ஸாதிகா said...

//சமீபத்தில் ETA குரூப் ஆர்யாஸ் (சைவம் மட்டும்) ரெஸ்டாரண்ட் ஜித்தாவில் திறந்திருக்கிறார்கள்//ஓ..அப்படியா?மகிழ்ச்சி.அடிக்கடி அங்கு போய் உணவருந்தி எங்கள் ஊர்க்காரர்களின் வியாபரத்தை விருத்தி செய்யுங்கள்.தகவலுக்கு நன்றி ஷஃபி.

நட்புடன் ஜமால் said...

மற்றதெல்லாம் எப்படியோ

டிக்காஸ் அங்க உள்ள சுவை போல் இன்னும் வேறெங்கிலும் சுவைக்கவில்லை

ஸாதிகா said...

உண்மைதான் டிக்கா நல்ல சுவைதான்.கருத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஸாதிகா அக்க்கா என்ன அதற்கு பிறகு பதிவையும் காணும் ஆளையும் காணும். நெட் பிராப்ளமா? இல்லை எல்லோரும் இத பார்த்து கண்ணு போட்டுட்டாஙக்ளா?

இல்லை சென்னையில் செட்டிநாடு பிராஞ்ச் ஓப்பன் பண்ணியாச்சா?

என்ன தான் சேதி