February 3, 2010

கல்யாண சீர் பலகாரம்


எங்கள் ஊரில் மணமகளுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப வீடுகளை சீர்வரிசையாக கொடுப்பார்கள்.ஒருவருக்கு மூன்று பெண்கள் இருந்தால் மூவருக்கும் தனித்தனியாக வீடு கட்டிகொடுக்கபட்டாக வேண்டும்.திருமணங்களில் மாப்பிள்ளை வீட்டினரால கேட்கபடும் முதல் கேள்வி "வீடு எத்தனை ஸ்கொயர் பீட்?எத்தனை அடுக்கு"

இன்னொரு புதுமையான விஷயம் என்னவென்றால் திருமணமாகி கணவர் வீடுகளுக்கு பெண்கள் செல்லும் முறை கிடையாது.

98 சதவீதம் உள்ளூரில்தான் சம்பந்தம் வைத்துக்கொள்வார்கள்.

பொதுவாக கல்யாணம் என்றால் வந்தவர்களுக்கு எல்லாம் விருந்து படைத்து அனுப்புவார்கள்.ஆனால் எங்கள் ஊரிலோ விருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் அனைவரது வீடுகளுக்கும் அவரவர் வசதிக்கு ஏற்ற படி பிளாஸ்டிக் வாளி,எவர் சில்வர் பாத்திரங்கள் அல்லது பிளாஸ்டிக் கவர் போன்றவை நூற்றுக்கணக்கில் வாங்கி ,சாப்பாட்டை நிரப்பி வீடு வீடாக விநியோகிப்பார்கள்.இவற்றை விநியோகிப்பதற்கென்றே ஆட்களும் வாகனங்களும் ஏற்பாடு செய்து விடுவார்கள்.இப்படி மற்ற ஊர்களில் இருந்து எங்கள் ஊர் பல விஷயங்களில் வித்தியாசப்படுகிறது.இவற்றைப்பற்றி எல்லாம் வெவ்வேறு இடுகைகளில் பதிக்கிறேன்.

இப்பொழுது திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டிற்கு 'பால் பழம் கொடுத்தல்'என்ற வகையில் 30,40,50 என்ற எண்ணிக்கையில் தட்டுகளில் சீர் அனுப்புவார்கள்.அதனை வாங்கி மாப்பிள்ளை விட்டினர் அனைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்வார்கள்.அந்த காட்சிகளை இப்பொழுது பாருங்கள்.

பேரீச்சம் பழம்




முட்டைகள்




குடத்தில் காய்ச்சிய பால்.புது வெள்ளைத்துணியால் மூடி குடத்தை அலங்கரித்து இருப்பார்கள்.




பழ வகைகள்




சீப்பு பணியாரம்





அதிரசம்.இதனை வெள்ளாரியாரம் எனவும் சொல்வார்கள்.





அச்சுப்பணியாரம் என்ற அச்சு முறுக்கு





தண்ணீர் பணியாரம்




இந்த மெகா சைஸ் கல்யாணப்பணியாரங்களை முன்பெல்லாம் வீட்டில் வைத்தே நாள் கணக்கில் ஆட்கள் வைத்து தயாரிப்பார்கள்.இப்பொழுது இவை செய்து விறபனை செய்வதற்கென்றே ஆட்கள் இருக்கின்றார்கள்.




பணியாரவகைகள் அவரவர் வசதிக்கு ஏற்ப 1000,2000,3000 என்ற எண்ணிக்கையில் கொடுப்பார்கள்.




திருமணம் இல்லாத நாட்களில் இவ்வகை பணியாரங்களை மினி சைசில் செய்தும் விற்பனைக்கு வரும்.


58 comments:

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா எங்க ஊர் கல்யானத்தில் சீரை பற்றி மட்டும் சொல்கிறேன், இதே போல் தான் ,

நீங்கள் போட்டுள்ள படத்தில் என் பேவரைட், அதிரசமும், மடுக்கு பனியமும்.

ரொம்ப சூப்பர் என்ன சிம்பிளா முடிச்சிட்டீங்க,
இதெல்லாம் உங்கள் பொண்ணுக்கு நீங்க கொடுத்த சீரா?

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா என்ன வீடு கொடுத்து மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்து விடனுமா? அப்ப பொண்ணுக்கு ஜாலி, கண்கலங்க தேவையில்லை.

அப்பா மகளை மாப்பிள்ளை கையில் பிடித்து கொடுத்து என் பொண்ணை நல்ல பார்த்துகொள்ளுங்கள் என்று சொல்ல தேவையில்லை

மாப்பிள்ளையில் அப்பாதான் கல்யாண பெண்ணிடம் சொல்லனும் இல்லையா?

Jaleela Kamal said...

சில ஊர்களில் பெண் மாப்பிள்ளை வீட்டில் மதியத்துக்கு தேவையான வரை சமைத்து வைத்து விட்டு அங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு , மாலை ரெஸ்ட் எடுத்து விட்டு இரவு தான் வருவார்களாம்.

நாங்க கல்யாணம் பண்ணி விட்டால், பொண்ணு மாப்பிள்ளை வீட்டில் தான் இருக்கனும்.வாரத்தில் இரண்டு நாள் அம்மா வீட்டுக்கு போவதே அபூர்வம்.

Jaleela Kamal said...

அம்மாடி முன்று பெண் இருந்தால் முன்று வீடு அவரவருக்கு கொடுக்கனுமா?
எங்க போய் கொள்ளை அடிப்பது.
நாங்க 5 பெண்கள் கல்யாணம் பண்ணி விடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது, வீடு வேறு என்றால் அவ்வளவு தான்.

SUFFIX said...

ஓவ்வொரு பெண்ணுக்கும் வீடு கொடுப்பது, பெண் அவங்க வீட்டிலேயே இருப்பது, இந்த சடங்கையெல்லாம் பார்த்தா நீங்களும் நம்ம ஊருதானுங்களா? ஆனா இந்த பணியாரம், பதார்த்த வகைகள் கொஞ்சம் வேறுபடுகிற்தே!! பெண்ணுக்கு வீடு எனற வழக்கத்தினால் இப்புடி இருந்த ஊரு இந்தோ பெரிசாயிட்டே போகுது.

Jaleela Kamal said...

இது கீழக்கரை, காயல் பட்டணத்தில் தான் இப்படி சொல்வார்கள்.

ஏன் அப்படி பெண் வீட்டில் மாப்பிள்ளை தங்கனும் என்பதற்கு ரொம்ப வருடம் முன் ஒரு கதை கேள்வி பட்டுள்ளேன்.

சதக்கத்துல்லா அப்பா அப்படின்னு தான் நினைக்கிறேன்,வேறூ யாருன்னு தெரிய‌ல‌

பெண்ணை கீழக்கரையில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டு, ரொம்ப நாள் கழித்து பெண்ணை பார்க்க போன போது ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தாஙக்ளாம்.

அப்ப எப்படிம்மா இருக்க என்றாராம் பொண்ணை பார்த்து என்னை உள்ளங்கையில் உள்ள புண் போல பார்த்து கொள்கிறார்கள் என்றாளாம்,

அவ்ருக்கு புரியல உள்ளங்கையில் வைத்து தாங்குறாஙக் போல என்று நினைத்து கொண்டாராம்,

பிறகு தான் புரிந்த்து உள்ளங்கையில் சூடு (போட்டதா) இல்லை உள்ளங்கையில் சூடு போலவான்னு தெரியல அப்படீன்னு தெரிய வந்தது,

அதிலிருந்து வீடு கொடுத்து மாப்பிள்ளையை பெண்வீட்டாரோடு வைத்து கொள்ளும் முறை மாறியது,


இது தான் இதற்கு காரணமா என்று எனக்கு தெரியாது.

Jaleela Kamal said...

இப்படி மாறியது அந்த காலத்து மாமியார் கொடுமையால் வந்தது.
எனக்கு தெரிந்த பிரபல லேடிடாக்டர் ராம்நாடில் ரொம்ப (மாப்பிள்ளை,மாமியாரால் ரொம்ப கொடுமைக்குள்ளாகி பிறகு அவர்கள் அதிலிருந்து மீண்டு வந்து இப்ப அவங்க மாமியாரையும் அவர்கள் தான் பார்த்து கொண்டார்கள். இப்ப பேரன்களுடன் நல்ல இருக்கிறார்கள்.

இதுக்கு தான் எங்க ஊரில் உள்ளுக்குள்ளே தெரிந்த் பையன்களை எடுக்கிறார்கள் வெளி இடம் என்றாலே பயம், அதுவும் வெளியூர் என்றால் எடுக்கவே மாட்டார்கள்.

ஹுஸைனம்மா said...

கீழக்கரையில் சீர்வரிசைகள் ரொம்பவே அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு விஷயமும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பக்கெட்டில் சாப்பாடு கொடுத்து விடுவது என்பதெல்லாம் ரொம்ப ஓவர்தான். நல்லவேளை நான் கீழக்கரையில் பிறக்கவில்லை! பார்த்தவரையில் எங்க ஊரில்தான் இதெல்லாம் ரொம்ப ரொம்ப குறைய போல!!

ஆமா, ஜலீலாக்கா எங்க ஊர்ல பொண்ணுங்க மதியம் சாப்பிட்டுட்டு அம்மா வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டு மாலை அல்லது இரவு போவாங்க. ஆனா நான் உள்ளுர்ல கல்யாணம் பண்ணல, அதனால எனக்கு அப்படி கொடுத்துவக்கல!!

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா ஆண்டவனில் கருணையை என்னன்னு சொல்வது.

இந்த பலகாரம் பார்த்ததும் எனக்கு உடனே ஏதாவது சாப்பிடனும் போல் இருந்தது,

நிமிஷத்தில் அல்லாவின் காதில் விழுந்து விட்டது போல, உடனே அதில் ஒன்று எனக்கு கிடைத்து விட்டது சாப்பிட்டு கொன்டே தான் பதிவு இப்ப போடுகிறேன்.

ஹுஸைனம்மா said...

காயல்பட்டனத்திலும் இதே மாதிரி வீடு கொடுக்கும் பழக்கம் உண்டு. கேரளா கண்ணூர் என்ற ஊரில் பெண் வீட்டில் ஒரு ரூம் தனியாகத் தருவார்கள் மாப்பிள்ளை பெண் குடியிருக்க. ஆனால் அந்த ரூமை லட்சக்கணக்கில் செலவழித்து அழகுபடுத்த வேண்டுமாம் திருமணத்திற்கு முன்பு.

எப்பத்தான் இந்த மாதிரி ஷிர்க்கெல்லாம் ஒழியுமோ!!

Unknown said...

அக்கா சீர் வரிசை அழகாக இருக்கு. எங்க ஊரை விட உங்கள் ஊரில் சீர் அதிகம் தான்..
ஜலீலாக்கா //என்ன வீடு கொடுத்து மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்து விடனுமா? அப்ப பொண்ணுக்கு ஜாலி, கண்கலங்க தேவையில்லை.// காயல், அதிரையிலும் இதே முறை தான். வேறு ஏததவது ஊரில் இந்த முறை இருக்கா? தெரிந்தவர்கள் சொல்லவும்

அண்ணாமலையான் said...

அட்டகாசமா இருக்கு...

Jaleela Kamal said...

ஹுஸைன்னாமா யாரையும் குறை சொல்ல முடியாது வாழையடி வாழையா அவர்கள் பழக்க படுத்திவிட்டார்கள்,


பெண்வீட்டார் நல்ல பணக்காரராக இருந்தால்செலவுக்கு பஞ்சமில்லை.
தெருவுக்கு தெரு என்னா ஊருக்கே சாப்பாடு பக்கெட்டில் கொடுக்கலாம்.

ஆனால் கொஞ்சம் நடுத்தரத்தினர் பாடுதான் அல்லோலம்

ஜெய்லானி said...

Jaleela said...
ஸாதிகா அக்கா என்ன வீடு கொடுத்து மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்து விடனுமா? அப்ப பொண்ணுக்கு ஜாலி, கண்கலங்க தேவையில்லை.(பின்னே மாப்பிள்ளை தான் வெங்காயம் உரிக்கனும் )

அப்பா மகளை மாப்பிள்ளை கையில் பிடித்து கொடுத்து என் பொண்ணை நல்ல பார்த்துகொள்ளுங்கள் என்று சொல்ல தேவையில்லை

மாப்பிள்ளையின் அப்பாதான் கல்யாண பெண்ணிடம் சொல்லனும் இல்லையா?
ஒன்ஸ்மோர் பிளீஸ்...........
அப்ப உங்க ஊரில் அல்லி ராஜ்யம் தான்...

செ.சரவணக்குமார் said...

ஆகா இவ்வளவு விஷயம் இருக்கா? நல்ல பகிர்வு ஸாதிகா அக்கா. நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுங்களேன்.

Menaga Sathia said...

இவ்வளவு விஷயம் இருக்கா?..அப்போ உண்மையிலேயே நீங்கலாம் கொடுத்து வைத்தவங்கதான் அக்கா...ம்ம்ம் ஒரு ஏக்க பெருமூச்சு எதுக்குன்னா கல்யாணம் செய்தும் அம்மாவின் அருகில் இருப்பதுகூட ஒரு சுகம் தானே...

நாஸியா said...

என்னதான் கல்யாணத்துக்கு பிறகும் ம்மா வீட்டுலயே இருக்கலாங்குற வசதி இருந்தாலும் காயல்பட்டினம், கீழக்கரையில இருக்குற டவுரி ரொம்ப ஓவர்.

என் நெருங்கிய தோழி காயல்பட்டினம். கிட்டத்தட்ட என் சகோதரி மாதிரி. அவ கூடப்பிறந்தவங்க ரெண்டு தங்கச்சிமார். அவங்க வாப்பாவுக்கு கொஞ்ச நாள் முன்ன கிடினி ஃபைலியர் வேற.. சொந்தத்துலயே (சாச்சி மகன் தான்) மாப்பிள்ளை முடிவாகி மூணு வருஷம் ஆகுது.. வீடு கட்ட இயலலன்டு இன்னும் கல்யாணத்த முடிக்காம இருக்காங்க. இந்த கொடுமைய எங்க போயி சொல்லுறது..

எங்க ஊரு பக்கம் நடக்குற கொடுமை இன்னும் அநியாயம். தங்கம் விக்குற விலையில சீர் வரிசையெல்லாம் போக குறைஞ்ச பட்சம் 100 பவுன் போடனும்.. அப்படியே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பெருந்தன்மையா எதுவும் கேக்காம விட்டாக்கூட பொண்ணோட வாப்பா 150 போடுறேன், 300 போடுறேன்னு சும்மா இருக்குறவங்கள கிளப்பி விடுறது.. பொண்ணு கிட்ட 100 வாங்கிட்டு பேருக்கு மஹரா ஒரு 10 பவுன போடுறது.. அல்லாஹ் அல்லாஹ்..

அல்லாஹ் சுப்ஹான வதாஆலா நமக்கு கல்யாணங்கறத எவ்வளவு லேசாக்கி வெச்சிருக்கான்.. பெண்க‌ளுக்கு அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ண‌க்கொடையை கொடுத்து விடுங்க‌ள்ன்னு அல்லாஹ் குரானில் ந‌ம‌க்கு ச‌ட்ட‌ம் கொடுத்திருக்கிறான்.. ஆனா இங்க‌ ந‌ட‌க்குற‌து எல்லாமே த‌லைகீழ்.. இறைய‌ச்ச‌ம் கொண்டு அல்லாஹ்வின் பொருத்த‌த்தை நாடுவ‌தை விட்டுவிட்டு ந‌ம்ம‌ள‌ சுத்தி உள்ள‌ நாலு பேர் ந‌ம்ம‌ள‌ ப‌த்தி பெருமையா பேச‌னும்னே இந்த‌ மாதிரி வேலைக‌ளை செய்கிறோம்..

எங்க‌ க‌ல்யாண‌மும் தேவையில்லாத‌ ஆட‌ம்ப‌ர‌ங்க‌ளோட‌ தான் ந‌ட‌ந்த‌து.. நிச்சயமா அதனால எங்களுக்கு அல்லாஹ்விடம் எந்த நன்மையும் இருக்கப்போவதில்லை... எங்க‌ளால‌ பெத்த‌வ‌ங்க‌ள‌ மீறி ஒண்ணும் செய்ய‌ முடிய‌ல‌.. ஆனா இன்ஷா அல்லாஹ் எங்க‌ பிள்ளைக‌ளுக்கு இஸ்லாத்தின் ப‌டி தான் எல்லாமே செய்ய‌னும், க‌ல்யாண‌ம் உட்ப‌ட‌ன்னு நிய்ய‌த் வெச்சிருக்கோம். துவா செய்ங்க‌..

suvaiyaana suvai said...

அசத்தல் தான்!!

சீமான்கனி said...

ஆத்தி...இவ்ளோ குடுப்பாங்களா...
நல்ல பகிர்வு ...இன்னும் தொடருங்கள்...ஆவலாய்.....

ஜெய்லானி said...

////நாஸியா said...நிச்சயமா அதனால எங்களுக்கு அல்லாஹ்விடம் எந்த நன்மையும் இருக்கப்போவதில்லை... எங்க‌ளால‌ பெத்த‌வ‌ங்க‌ள‌ மீறி ஒண்ணும் செய்ய‌ முடிய‌ல‌.. ஆனா இன்ஷா அல்லாஹ் எங்க‌ பிள்ளைக‌ளுக்கு இஸ்லாத்தின் ப‌டி தான் எல்லாமே செய்ய‌னும், க‌ல்யாண‌ம் உட்ப‌ட‌ன்னு நிய்ய‌த் வெச்சிருக்கோம். துவா செய்ங்க‌..///
இதைப் போல எல்லோரும் நினைத்து செயல் படுத்தினால் வரும் தலைமுறை மிகச்சிறந்த உன்மையான இஸ்லாமிய தலைமுறையாக மாறும்.
வாழ்த்துக்கள்.........

Vijiskitchencreations said...

அக்கா சூப்பர் போங்கோ எனக்கு படித்து படித்து இப்பவும் இப்படி எல்லாம் தான் இருக்கிறார்களா இல்லை ஏதாவது மாற்றங்கள் வந்திருக்கிறதா ஏன் என்றால் 1 பென் இருக்கிறவங்க குடுக்கலாம். 4 ,5,6 என்று என் கூடி இருக்கிற வீட்டில் என்ன் தலையில் குல்லா போட்டுட்டு ஒட வேண்டியது தான். அக்கா மேலும் எழுதுங்க தெரிஞ்சுகலாம். கேரளாவில் கூட பரவாயில்லை போல அங்கு ஏக்கர் கண்க்கில் இடம், கை நிறய்ய சம்பளம். பொன்னுக்கு அந்த காலத்தில் 100 பவுன் இப்ப அதோட டபுள் அல்லது த்ரிப்பிள் தான் இருக்கும்.
என்ன கொடுமை அப்பப்ப.. ஏதோ வசதி தகுந்தா மாத்ரி பயனுக்கு குடுத்து கல்யாணம் செய்தா போதாதது என்ன்மோ போங்கோ.

ஸாதிகா said...

ஜலீலா,//அம்மாடி முன்று பெண் இருந்தால் முன்று வீடு அவரவருக்கு கொடுக்கனுமா?//கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்"அவரவர் வசதிக்கு ஏற்ப"என்று. ஆனால் இதுதான் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகி வருகின்றது.ஒரு பெண்ணுக்கு தன் தாய் 1000 சதுர அடியில் வீடு கொடுத்தால் ,அந்த தாய்க்கு இரண்டு மகள் இருக்குமாயின் 500,500 சதுர அடியாக பிரித்துக்கொடுத்து விடுவார்கள்.நீங்கள் அறிந்த கதை உண்மைதான்.நானும் படித்து இருக்கிறேன்.கருத்துக்கு நன்றி ஜலி

ஸாதிகா said...

சகோதரர் ஷஃபி,உண்மைதான் இப்படி வீடு கொடுப்பதால் எக்சண்டஷன் என்று ஊர் விரிவடைந்து போய்க்கொண்டே உள்ளது.ஊருக்குள் இருக்கும்ஒரு வீட்டை விற்று விட்டு,விற்ற பணத்தில் நிலமும் வாங்கி,புதிதாக ஒன்றுக்கு இரண்டு வீடாகவும் கட்டி,பிள்ளைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள்.விடுகிறார்கள் இந்த எக்சண்டஷன் பகுதிகளில்.கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

ஹுசைனம்மா,//பக்கெட்டில் சாப்பாடு கொடுத்து விடுவது என்பதெல்லாம் ரொம்ப ஓவர்தான்.//பக்கட்டில் சாப்பாடு கொடுத்து விடும் பழக்கத்தால் வீட்டில் இருக்கும் வயதான் பெரியவர்கள்,குழந்தைகள் சாப்பிட்டது போலாகி விடும்.இதனால் அன்பு பலப்படுமே அன்றி குறைந்து விடாது.ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்பத்தான் செய்வார்கள்.// நல்லவேளை நான் கீழக்கரையில் பிறக்கவில்லை/இதற்கு எனது பதில் நல்ல வேளை நான் கீழக்கரையில் பிறந்துவிட்டேன்//:-)

ஸாதிகா said...

பாயிஷா,கீழை,காயல் அதிரை மற்றும் தொண்டி போன்ற ஊர்களில் இப்பழக்கம் உள்ளது.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

அண்ணாமலையான்,கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ஜெய்லானி,பெண்ணுக்கு வீடு கொடுப்பதால் அல்லி ராஜ்ஜியம் ஆகி விடமுடியுமா?இல்லை வீடு கொடுக்காத ஊர்களில் அரசன் ராஜ்ஜியம்தான் நடக்குமா?மகள்களுக்கு வீடு கொடுத்து ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுத்து விடுகின்றனர்.ஒரு பெற்றோர் தன் பெண்ணுக்கு வீடு கொடுத்தால் அந்த வீட்டில் மாப்பிள்ளையின் பெற்றோரோ.உடன் பிறந்தவ்ர்களோ இருக்கப்போவதில்லை.பெண்ணின் பெற்றோர்தான் இருப்பார்கள்.கணவரின் வேலை,தொழில் நிமித்தமாக் வெளிநாடு,வெளிஊர்களுக்கு புலம் பெயர்ந்தாலும் வீட்டில் இருப்பவர்கள் பெண்ணின் பெற்றோர்களே.தன் மகளுக்கு வீட்டை கொடுத்து விட்டு பெற்றோர்கள் ஆயுள் முழுக்க அந்த வீட்டிலேயே தங்கிக்கொள்வார்கள்.

ஸாதிகா said...

சரவணக்குமார்,தங்கள் கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

மேனகா,வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி!

ஸாதிகா said...

நாஸியா,தாங்கள் எடுத்து இருக்கும் முடிவு நல்ல முடிவு.அல்ஹம்து லில்லாஹ் செயல்படுத்துங்கள்.பெண்ணுக்கு சீர் கொடுக்கும் இதற்கே இப்படி சொல்லுகின்றீர்களே.பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டினர் தரும் சீரைப்பார்த்தால் என்ன சொல்வீர்கள்?இன்னொன்று தெரியுமா?வரதட்சணை திருமணங்கள் வெகுவாக குறைந்து விட்ட இக்கால கட்டத்தில் ஒரு திருமணம் நடத்தும் பொழுது பெண் வீட்டினரை விட பையன் வீட்டினருக்குத்தான் செலவு அதிகமாகிறது.இதுதான் இங்கு நடப்பில் இருக்கு உண்மை.மேலும் அனைவருக்கு சிறிய அளவேயாயினும் அது கண்டிப்பாக சொந்த வீடாகத்தான் இருக்கும்.அதனையே பெண்ணுக்கு கொடுத்து விட்டு பெற்றோரும் அவர்களது வாழ்நாள் முழுதும் அந்த வீட்டிலேயே தங்கிக்கொள்வார்கள்.ஒரு பெண் தன் தாயிடம் இருந்து ஒரு வீட்டினை பெறுகின்ற மாதிரி,அவள் தன் மகளுக்கும் தன் வீட்டினை அளிகின்றாள்.இரண்டு மகள் என் ஆகி விட்டால் வீட்டினை இரண்டாக பிரித்துக்கொடுத்து விடுகிறார்கள்.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

சீமான் கனி கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

சுஸ்ரீ,வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

ஸாதிகா said...

விஜி,கருத்துக்கு நன்றி.இன்னும் வித்தியாசமான சம்பவங்கள் உள்ளது.அவ்வப்பொழுது வந்து பகிர்கின்றேன்.

Malini's Signature said...

ஸாதிகா அக்கா முன்பே இந்த விசயம் எல்லாம் கேள்வி பட்டுஇருந்தாலும் உங்க போட்டோஸ் எல்லாம் பார்க்க சூப்பரா இருக்கு...கல்யாண சப்பாடு சாப்பிடும் ஆசையை அதிகமாக்குது போட்டோஸ் எல்லாமே :-)

நட்புடன் ஜமால் said...

அதிரையிலும் வீடு குடுக்கும் பழக்கம் தான். சில தெருக்களில் இல்லை, அதில் ஒன்றை சேர்ந்தவன்.

இப்படி நடப்பதால் ஊரு பெருசாகிறதென்பது உண்மை தானென்றாலும் - ஒரு தவறு பல நல்லது நடப்பது போல காட்டலாம்

முதல் போட இயலாதவர்கள் பல நல்லவர்கள் வட்டி வாங்கி நல்ல முறையில் தொழில் செய்து வட்டியை கட்டி - நல்ல நிலையில் இருக்கின்றார்கள் என்பதால் - வட்டி சரியாகிவிடாது.

இதெற்கெள்ளாம் விலக்கம் குடுத்து மாளாது - ஆனால் இதை பார்பவர்களுக்கு மிக மோசமான உதாரணமாக இஸ்லாமே குறை சாட்டப்படும் - வருத்தத்துடன் ...

பித்தனின் வாக்கு said...

புகைப்படங்கள் அருமை. படம் பார்த்தால் சாப்பிடும் ஆசை வருகின்றது. மிக அருமை. நன்றி.

Asiya Omar said...

தோழி ஸாதிகா நல்ல பகிர்வு.எங்கள் ஊரிலும் பெண் வீட்டிலும் மாப்பிள்ளை வீட்டிற்கு சீர் சிறப்பு என்று பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தாலும்,அதே அளவு மாப்பிள்ளை வீட்டாரும் செய்வதால் டேலியாகிவிடும்.விருந்திற்கு வராதவர்களுக்கு இந்த சாப்பாடு கொடுத்து விடும் பழக்கம் உண்டு.இந்த பண்டம் பணியாரம் எல்லாம் மொத்தமாக கல்யாணதப்ப கொடுக்காம வாழ்நாள் முழுவதும் ஏதாவது விஷேஷம் பொறுத்து கொடுக்கல் வாங்கல் இருக்கும்.உங்கள் ஊரின் கலாச்சாரம் நிச்சயம் அவரவர் வசதிக்கு தகுந்தபடி இருந்தால் அனுபவிப்பதில் தவறு இல்லை.interesting.

athira said...

சூப்பர் ஸாதிகா அக்கா, படிக்க படிக்க ஆசையாக இருக்கு, ஒட்டுமொத்தமாக சோட் அண்ட் சுவீட் ஆக்காமல், பகுதி பகுதியாக விரிவாக எழுதினால் இன்னும் அழகாகவும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

உங்கள் ஊர், எங்கள் யாழ்ப்பாணத்து முறையோடு முக்கால்வாசியும் ஒத்துபோகிறது.. அங்கும் இபடித்தான்.. ஏன் கன இடத்திலிருந்து புகை வருகிறது...

பலகாரங்கள் நன்றாக இருக்கு...

இந்த அமளிக்குள்... ஹூசைனம்மாவின் பெருமூச்சைப் பார்த்தீங்களோ. .. எப கொட்டலாம் வயிற்றெரிச்சலை எனக் காத்துக்க். எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்.. நாந்தான் பேபி ஆச்சே...

Unknown said...

எந்த ஊரில்தான் ஷிர்க் நடக்காமல் இருக்கு?கைக்கூலியும்,வீடும் தராமல் கலியாணம் செய்து கொடுத்து பிறகு ஓவ்வொரு பண்டிகைக்கும்,பிள்ளைபிறப்புக்கும்,மாப்பிள்ளையின் தொழிலுக்கும் பெண்ணின் பெற்றோர்களை எத்தனை பேர்கள் சுரண்டுகிறாங்க?இதற்கு பெற்ற மகளுக்கு பொருப்பாக வீடு கொடுப்பதில் என்ன தவறு இருக்கு.மகளுக்கு வீடு கொடுத்தாலும் தன் வசிப்பிடமாக அந்த வீட்டிலே வாழும் மணமகளைபெற்றவர்கள் வசிப்பது ஒற்றுமையையும்,அந்நியோன்யத்தையும்,பெரியவர்களுக்கு மரியாதை செய்யும் கலாச்சாரத்தையும்.மனித நேயத்தையும்,கடைசி காலம் முட்டும் பெற்றவர்களை தன்னருகே வைத்து பராமரிக்கும் பாக்கியம் கிடைக்கிறதே.

ஸாதிகா said...

ஹர்ஷினி அம்மா,கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

சகோதரர் ஜமால் ,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

பித்தனின் வாக்கு கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

//பெண் வீட்டிலும் மாப்பிள்ளை வீட்டிற்கு சீர் சிறப்பு என்று பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தாலும்,அதே அளவு மாப்பிள்ளை வீட்டாரும் செய்வதால் டேலியாகிவிடும்.//"அன்பளிப்புகளைப்பறிமாறிக்கொள்ளுங்கள்"என்பது நபி மொழி.தனது சக்திக்கு உட்பட்ட அன்பளிப்புகளை உறவினர்களும்,நண்பர்களும்,சம்பந்திகளும் பறிமாறிக்கொள்வது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. இது போல் பெண் வீடு செய்யும் அன்பளிப்பை விட இன்னும் அதிக செலவில் மாப்பிள்ளை வீட்டினர் செலவு செய்வதுதான் இங்கு நடக்கின்றது.எதுவாகினும் சம்பந்தபட்டவர்கள் பாதிக்கபடாமல் எந்த காரியமும் நட்ந்தேறினானால் மகிழ்ச்சிதான்.

ஸாதிகா said...

அதிரா,ஓருவரது கருத்து மற்றவர்களுக்கும் இருக்கும் என்பது எதிர் பார்க்க இயலாது.மேலும் சுவாரஸ்யமாக இருக்குமே என்று எனக்கு மெயிலில் வந்த இந்த போட்டோக்களை அவர்கள் அனுமதியுடன் பதிவிட்டேன்.ஆனால் கருத்துக்கள் தடம் மாறி விட்டன.இன்னும் பையன் வீட்டினரால் செய்யப்படும் சீர் வரிசை இன்னும் சுவாரஸ்யமானது.அந்த படங்களையும் வெளியிட வேண்டி படத்தை எனக்கு அனுப்பித்தந்தவர்களிடம் அனுமதி வாங்கி இருந்தேன்,இப்பொழுது யோசிக்கிறேன்.கருத்துக்கு நன்றி அதிரா!

ஸாதிகா said...

சகோதரர் செய்யத்!தங்கள் கருத்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

தகவலுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரர் ஜெய்லானி.விரைவில் உங்கள் படைப்பும் குட் பிளாக்கில் வர எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

இலா said...

I really like this post Aunty!!! I went to a nikha only once in my life... it was soo awesome...I want to learn more of customs of every one... Congrats on your good blog in Kumudam...

இப்னு ஹம்துன் said...

சகோதரி,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் சுட்டியுள்ள பலவும் எங்களூரிலும் நடப்பது தான். 'பல'காரங்களில் 'சில' வேற்றுமைகள் இருந்தாலும்.

முக்கியமாக, 'வீட்டோடு மாப்பிள்ளை'யாவதும்.

ஸாதிகா said...

இலா,அட இலாவை இன்னும் காணவில்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.உங்களுக்கு இந்த இடுகை பிடித்து இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் இபுனு ஹம்துன், தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.ஓரிரண்டு ஊர்களில்தான் இந்த வழக்கம் என்று நினைத்திருந்தேன்.நீங்கள் சொல்வதைப்பார்த்தால் நிறைய ஊர்கள் இருக்கும் போல் இருக்கே!!

செந்தமிழ் செல்வி said...

அன்பு ஸாதிகா,
உங்கள் பதிவுகள் அனைத்துமே சிந்திக்க வைப்பதாக உள்ளது. பெண்ணுரிமையை அந்தக் காலத்திலேயே நிலை நாட்டி உள்ளார்கள் உங்கள் ஊர்க்காரர்கள். மற்ற இடங்களில் இப்பத்தான் சொத்தில் பங்கு கொடுக்கும் பழக்கம் பரவி வருகிறது. சட்டமும் சமீபமாகத்தான் மாற்றப்பட்டது. அந்த வகையில் பாராட்டுக்கள். கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் தான் கஷ்டமாக உள்ளது.
சீர்வரிசை பார்க்க நன்றாக உள்ளது.
நிறைய முறை முயற்சித்து பதிவு போட இப்பத்தான் முடிந்தது:-)

Anonymous said...

நல்ல தகவல் ஸாதிகா. நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.

Anonymous said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

தோழி செல்வி,உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோதரி அம்மு,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

Shahul.Hameed, Abu Dhabi said...

சிறிது சிறிதாக சீராக வரிசை வரிசையாக வந்துக்கொண்டே இருப்பதால்தான் இதற்க்குப்பெயர் சீர் வரிசையோ. வாங்குவோர்க்கு கொண்டாட்டம்தான். ஆனால் கொடுப்பவருக்கு திண்டாட்டம்.
எங்கள் ஊரான அதிராம்பட்டினத்திலும் இந்த லொல்லு எல்லாம் உண்டு. வீடு கொடுக்கும் விஷயத்தில் பெண்களுக்கு பாதுகாப்புதான் என்றாலும், ஆண்கள் சம்பாதிக்கும் பணமெல்லாம் வீடு கட்டுவதிலேயே விரயமாகிவிடுகிறதே. இதனால்தான் அதிரை, கீழக்கரை போன்ற ஊர்களில் பணமிருந்தும் தொழில்துறையில் எந்த முதலீடும் இல்லாமல் போய்விட்டது. கடமைக்காக வீடுகட்டி அதை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விடுகிறார்கள். வாட்ச்மேன்களுக்கு நல்ல நசீபுதான்.

அன்புடன்,
உங்கள் சகோதரர்களின் நண்பன்,
அபுதாபி

ஸாதிகா said...

//சிறிது சிறிதாக சீராக வரிசை வரிசையாக வந்துக்கொண்டே இருப்பதால்தான் இதற்க்குப்பெயர் சீர் வரிசையோ//ஆஹா..அழகாக சொல்லிவிட்டீர்கள் சகோதரரே.//கடமைக்காக வீடுகட்டி அதை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விடுகிறார்கள்//சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.முதல் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.வருகையைத்தொடருங்கள் சகோதரரே!

zuhrisalafi said...

அக்கா உங்கள் ஊர் திருமணத்த பற்றி நன்றாக அறிந்து கொண்டேன். இந்த நடைமுறை இலங்கையின் சில இடங்களில் உண்டு.
இந்த முறை முழுக்க முழுக்க குர்ஆணுக்கும் நபிகளாரின் பொன் மொழிகளுக்கும் மாற்றம்ம்க இல்லையா? இதனை தடுக்க நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள், இவற்றை நியாயப்டுத்தியல்லவா கட்டுரை வரைந்திருக்கிறீர்கள்.

நன்றி