January 18, 2010

அறிவான சந்ததிகள் - 2




மனித மூளை ஒரு மாபெரும் அதிசயம்.புத்திசாலித்தனம்,அறிவு என்பது மூளையில் உள்ள நியுரான்கள் எங்ஙனம் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன என்பதைபொறுத்தே அமைந்து இருக்கிறது .60000மில்லியனுக்கும் அதிகமான நியுரான்கள் மனித மூளையில் அமையப்பட்டுள்ளது என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு.தாயின் வயிற்றில் கரு தோன்றிய சில வாரங்களிலேயே கருவின் மூளையில் நியுரான்களின் உற்பத்தி ஆரம்பமாகி விடுகிறது.அதனால்தான் என்னவோ இன்றய மருத்துவ உலகம் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே ஆக்கப்பூர்வமான சில,பல செயல்களை கருவுற்ற தாய்மார்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.குழந்தை பிறந்து உலகின் முதல் சுவாசத்தை ஆரம்பித்த உடனேயே நமது கடமைகளும் ஆரம்பமாகி விடுகிறது.




குழந்தை பிறந்ததும்:
கருப்பையின் இளம் சூட்டில் இருந்து வெளிபட்டு உடனேயே தாயின் வயிற்றில் சிசுவை கிடத்துகின்றனர்.கருவறையின் கதகதப்பு சில சதவிகிதங்களாவது சிசு பெறும் அல்லவா?தான் இருக்கும் கிளைமேட்டின் நிலைக்கேற்ப சிசு தன்னை தயார்படுத்திக்கொள்கிறது.வாயை அசைத்து பாலை குடிக்க கற்றுக்கொள்கிறது.இந்த நேரத்தில் தாயின் அரவணைப்பும்,கதகதப்பும் அவசியம் தேவை.குழந்தை முகத்தைப்பார்த்து ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது தாயின் கட்டாய வேலகளில் ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.நேரம் கிடைக்கும் பொழுது குழந்தையுடன் பேசலாம் என்றிராமல் இதற்கெனவே நேரத்தை ஒதுக்கிகொள்ளுங்கள்.




1மாதம்:
இப்பொழுது வண்ணங்களை ஆராயும் .கண்களை சுழற்றிப்பார்க்கும் தன்மை ஏற்படுகிறது.இப்பருவத்தில்தான் முளையின் வளர்ச்சி முறையாக ஆரம்பமாகி விடுகிறது.வண்ணமயமான ஆடைகள்,பொருட்கள்,விளையாட்டு சாமான்கள்,திரை சீலைகள் என்று குழந்தையின் சுற்றுபுற சூழ்நிலையை வண்ண மயமாக அமைத்துக்கொள்ளுங்கள்.மென்மையான ஒலி எழுப்பகூடிய கிளுகிளுப்பைகளை உபயோகியுங்கள்.




3மாதம்:
இந்த நேரத்தில் குப்புறப்படுப்பது,திட உணவு கொடுத்தல்,உட்காருதல் போன்றவை செயல் படுத்தும் காலம்.அறையில் சீரியல் பல்புகளை தொங்க விட்டு சற்று தூரத்தில் நின்று அதனை பார்க்க செய்யுங்கள்.இதனால குழந்தையின் அறிவுத்திறன் பெருகும்.




6 மாதம்:
விளையாடுதல்,நடத்தல்,புரிந்துகொள்ளுதல் போன்ற செயல்கள் இருக்கும்.இச்சமயத்தில் மென்மையான விளையாட்டுப்பொருட்களை கஞ்சத்தனம் பண்ணாமல் வாங்கிகொடுங்கள்.உடைக்க விடுங்கள்.கயிற்றினால இழுக்கக்கூடியவண்டிகள் ,பொம்மைகள் போன்றவை நலம் பயக்கும்.




1வருடம்:
பொருட்களை தூக்கி வீசவும்,கீழ்படியவும்,பேச ஆரம்பிக்கவும் கூடிய பருவம்.மழலைகள் நாம் சொலவதை விட செய்வதைத்தான் அதிகம் ஏற்றுக்கொள்ளும்.ஆகவே நல்ல விஷயங்கள்,பண்பாடுகள்,செயல்களை குழந்தையின் எதிரே செய்வதற்கு பழகுங்கள்.வெறுப்பையும்,எரிச்சலையும்,கோபத்தையும்,சண்டை சச்சரவுகளையும் குழந்தை முன் காட்டாதீர்கள்.நல்ல பழக்க வழக்கங்களைப்பார்க்கும் மழலை தன் ஆழ்மனதில் பதித்துக்கொள்ளும்.பிற்காலத்தில்; நல்ல பிரஜையாக உருவெடுக்கும்.




2 வருடம்:
இந்நேரத்தில் குழந்தை ஆராயும் மன நிலைக்கு வந்திருக்கும்.மூளையின் சக்தி மேம்படும் பருவம் இது.நிறைய வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.எதிரே வரும் ஒவ்வொரு சம்பவத்தினையும் விளக்கிக்காட்டவேண்டும்.மழலையில் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் சலிக்காமல் கருத்தான பதில் கூறி தெளிவை ஏற்படுத்த வேண்டும்.டிவியில் மியூஸிக் சானலை ஆன் செய்து "மை நேம் இஸ் சுப்பு லக்ஷமி" போன்ற பாடலை அலற விட்டு அது ஆடுவதை ரசிக்காமல் அறிவுப்பூர்வமாக நேஷனல் ஜியாகிரபிக்,டிஷ் கவரி சேனல் போன்றவற்றை காட்டி விலங்குகள்,பறவைகள் போன்றவற்றை போட்டுக்காட்டி விளக்கம் சொலலாம்.பகுப்பாயும் திறனை வளர்க்கவேண்டும்.குழந்தையையும் பெரிய மனிதராக பாவித்து முக்கியத்துவம் கொடுங்கள்.




3 வருடம்:
நன்றாக பேச கற்றுக்கொள்கிறார்கள் .மொழிவளர்ச்சி அதிகரிக்கூடிய வயது.குழந்தை மீது தாய் அதிகம் கவனிக்க கூடிய பருவம் இது.குழந்தையின் ஆட்டம்,சேட்டைகளால் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் கண்களில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக்கொள்ள வேண்டிய சிக்கலான பருவம்.ஞாபகசக்தியை மேம்படுத்த நர்சரி ரைம்ஸ்,எழுத்துக்கள்,எண்கள் போன்றவற்றை பயிற்றுவிக்கவேண்டும்.அலுக்காமல் நல்ல கதைகள் கூறி கேள்வி கேட்டு பதில் கூறி தெளிவு படுத்த வேண்டும்.அவர்களையும் வினா எழுப்ப பழக்க வேண்டும்.வீர தீர கதைகள் கேட்கும் குழந்தைகள் தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆசைப்படுவார்கள்.வெற்றி பெற்ற மனிதர்களின் சரித்திரம் கேட்கும் மழலைகள் தானும் அவ்வாறே வரவேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்வார்கள்




4 வருடம்:
குழந்தையின் செயல்களை உன்னிப்பாக கவனியுங்கள்.நட்பு ஆரம்பமாகும் பருவம் இது.சேட்டைகள் தாங்காமல் அடிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.அடி வாங்கும் குழந்தை ஆராயும் அறிவு குறைந்து விடும்.சுறுசுறுப்பும் குறைந்து விடலாம்.நயமான வார்த்தைகள் பேசி பழகுங்கள்.




5 வருடம்:
நல்ல பள்ளியாக ஒரு வழியாக சேத்து இருப்பீர்கள்.குழந்தைக்கு கல்வி மீது ஈர்ப்பும்,ஆர்வமும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியருக்கும் உள்ள கடமை.ஆகவே குழந்தை வகுப்பாசிரியர்களுடன் தொடர்பு வைத்துகொள்ளுங்கள்.அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக பேசுங்கள்.குழந்தையின் ஆர்வம்தான் அது அதி புத்திசாலியாக நிர்மாணிக்கும்.ஆகவே குழந்தையின் ஆர்வத்தை மேம்படுத்துங்கள்.




6 வருடத்திற்கு மேல்:
கூச்ச சுபாவம்,குறைந்த கற்கும் திறன்,சோம்பல் போன்ற குறைபாடுகள் இருக்கும் குழந்தைகள் இனம் கண்டு திருத்தபடவேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர் கடமை.பிறரிடம் எப்படி பழகுதல்,உறவினர்கள்,பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுத்தல்,எப்படி நடந்து கொள்ளுதல் போன்றவை அழகுற அறிந்து கொண்டு இருக்கக்கூடிய பருவம் இது.பிள்ளைகளின் அபார உடல்,மூளை வளர்சியை பெற்றோர் அறிய முடியும்.அறிவையும்,ஆற்றலையும்,உடல் பலத்தையும் எப்படி மேம்பட வைக்கவேண்டும் என்று நல்ல ,சத்துமிகு உணவுபழக்கவழக்கங்களாலும்,அரவணைப்பான பேச்சுகளாலும்,வாஞ்சையான அறிவுரைகளாலும்,தோழமை உணர்வு மிக்க நெருக்கத்தாலும் பிள்ளைகளை பண்பட வைக்கவேண்டிய கால கட்டமிது.




8 வயதுக்கு மேல்:
விளையாடும் ஆர்வம் அதிகமிருக்கும் பருவம் இது.படிப்பு மட்டுமல்லாமல் மற்ற நல்ல விஷயங்களிலும் ஈடுபட வையுங்கள்.பெற்றோர்கள் நல்லதொரு வழிகாட்டியாக ரோல்மாடலாக இருங்கள்.பெரியவ்ர்கள்,உறவினர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள்.கூட்டுக்குடும்பம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் அமர்ந்து அளவளாவும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள்.வெறுமனே ஹாய்..ஊய்..என்றிராமல் பொறுப்புடன் நடந்துகொள்ளும் பண்பை வளருங்கள்.




10 வயதுக்கு மேல்:
குழந்தை படிக்கும் முறை,அறை,நேரம்,நட்பு,அவர்களின் பொழுது போக்கு,செயல் முறை,உணவுபழக்கவழக்கங்கள்,பணப்புழக்கம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமிது.நீங்கள் அம்மா,அப்பா என்பதுடன் நல்ல நண்பன் முறையிலும் குழந்தைகளை அணுகுங்கள்.



பதின் பருவம்:
இப்பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு அதி முக்கியம் கொடுங்கள்.நட்பு என்ற சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள்.அதிலும் ஒரு அளவை நிர்மாணிக்க கற்றுக்கொடுங்கள்.பிள்ளையின் ஆர்வமும்,நோக்கமும் எந்த துறையின் மீது உள்ளதோ அதனை மேலும் விரிவு படுத்த உதவுங்கள்.உதாரணமாக் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் கோச்சிங் கிளாஸில் சேர்த்துவிடத்தயங்காதீர்கள்.வலுகட்டாயமாக உங்கள் விருப்பங்களை புகுத்தும் பொழுதுதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.இக்கால கட்டத்தில் ஜங்ஃபுட் போனன்றவற்றில் அதீத ஆர்வம் காட்டுவர்.அவைகளை குறைத்து நல்ல சத்துமிக்க ஆகாரங்களை,காய் பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வையுங்கள்.சுயமாக நல்ல முடிவெடுக்கும் திறனை ஊக்குவியுங்கள்
அறிவுப்பூர்வமான .ஆக்கமிகு விஷயங்களை அறியச்செய்வது,ஊக்குவித்தல்,அமைதியான சூழல் ஏற்படுத்திக்கொடுத்தல்.நல்ல பண்பாடு,நல்ல சிந்தனைகள்,நல்ல நட்புகள் போன்றவை சுற்றி இருக்குமாயின் பிள்ளைகளின் தன்னம்பிக்கை வலுப்பட்டு,நல்ல ,அறிவான சந்ததியினராக உருவெடுப்பார்கள்.சகாப்தத்தை படைப்பார்கள்.வெற்றி பெற்ற மனிதர்களாக ஜொலிப்பார்கள்.சாதனையாளர்களாக சாகப்தம் படைப்பார்கள்.

நம் அனைவரது சந்ததிகளுக்கும் அந்த பேறு கிடைத்திட வேண்டும்.

30 comments:

நட்புடன் ஜமால் said...

மாஷா அல்லாஹ்

நல்ல பகிர்வு.

Asiya Omar said...

ஸாதிகா அருமையான இடுகை,இந்த பதிவு ஒவ்வொரு இளம் கர்ப்பவதிகளும்,தாய்மாரும், படிக்க வேண்டியது.இடுகை பார்த்து மிக்க நிறைவாக இருந்தது.நான் தான் முதலா?

பித்தனின் வாக்கு said...

நல்ல பயனுள்ள கட்டுரை, மிகவும் பொறுமையாகவும்,சுருக்கமாகவும், அதே சமயம் நல்ல தகவல்கள் உடன் எழுதுகின்றீர்கள். மிகவும் நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

ஸாதிகா... நல்ல பயனுள்ள இடுக்கை...

பித்தனின் வாக்கு said...

பதிவர்கள் வீட்டு ஸ்மையல் அறையில் என்ற பதிவு போட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படிக்கவும். நன்றி.

சீமான்கனி said...

அட இவ்ளோ விஷயம் இருக்கா?? சூப்பர் பதிவு...வாழ்த்துகள்...
ஸாதி(கா)...

செ.சரவணக்குமார் said...

மிக அருமையான இடுகை சகோதரி. உங்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் பயனுள்ள தகவல்களைக் காண முடிகிறது. நல்ல பகிர்வுக்கு நன்றி.

நாஸியா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

நிச்சயம் உங்க வலைப்பூ பாதுகாத்து வைக்க வேண்டிய புத்தகம் போல!

ஹைஷ்126 said...

மிக அருமையான பதிவு. ஒன்றுமட்டும் ஒப்பு கொள்ள முடியவில்லை.

// "மை நேம் இஸ் சுப்பு லக்ஷமி" போன்ற பாடலை அலற விட்டு அது ஆடுவதை ரசிக்காமல்//

All work No play makes Jack dull. இன்றய சூழ்நிலையில் DTH & Cyberspace காலத்தில், நாம் வாழ்ந்தது போல் வாழமுடியாது எப்படி நண்பருக்கு (வட்டத்தின் விட்டத்தை) தீர்மானிக்க சில மறைமுக உதவிகள் செய்கிறோமோ அதுபோல் இதற்கும் நாம் தான் உதவி செய்யவேண்டிம்.

வட்டத்தை அவர்கள் வரைந்து கொள்வார்கள், ஆனால் வட்டம் என்று ஒன்று உள்ளது என்பதை உணர நாம் கண்டிப்பாக உதவ வேண்டும்.

வாழ்க வளமுடன்.

ஹுஸைனம்மா said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், மிகவும் பயனுள்ள விஷயத்தோடுதான் வந்திருக்கீங்க அக்கா.

இலா said...

Nice Post Aunty!!! Looking at this post in a different angle. It is really a challenge to understand kids these days...

Anonymous said...

அழகா எழுதிருக்கீங்க..குழந்தைகளின் புகைப்படம் அருமை.

suvaiyaana suvai said...

நல்ல பயனுள்ள கட்டுரை!!! மிகவும் பொறுமையாகவும் அதே சமயம் நல்ல தகவல்கள்!!

பாத்திமா ஜொஹ்ரா said...

மாஷா அல்லாஹ்,மிக அருமையான பகிர்வு,நல்ல தகவல்கள்.இன்னும் மிளிர,அல்லாஹ் துணை நிற்பான்.

ஸாதிகா said...

சகோதரர் ஜமால்,கருத்துக்கு நன்றி.அல்ஹம்துலில்லாஹ்.

தோழி ஆசியா,உங்களுக்கு நிறைவாக இருந்தது என்ற வரிகளை நான் படித்து நிறைவடைந்தேன்.கருத்துக்கு நன்றி.

சகோதரர் பித்தனின் வாக்கு,நல்ல பயனுள்ள கட்டுரை என்று கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் 'பதிவர் வீட்டு சமையல்' பார்த்து பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்.

சகோதரர் சங்கவி,உங்களது ஊக்க வரிகளுக்கும் நன்றி.

சகோதரர் சீமான் கனி உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.//அட இவ்ளோ விஷயம் இருக்கா?//இதை விட இன்னும் நிறைய இருக்கு.எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு எல்லாம் போர் அடித்து விடும்.ஒரு டவுட்.என் பெயரை குறிப்பிடும் பொழுது "கா" வை ஏன் பிராக்கெட்டினுள் (paranthesis)அடைத்து விடுகின்றீர்கள் ??

சகோதரர் சரவணக்குமார்,கருத்துக்கு நன்றி.தங்கள் இடுகைகளிலும் நிறைய பயனுள்ள தகவல்களைத்தான் பார்க்கிறேன்.

தங்கை நாஸியா,வ அலைக்கும் வஸ்ஸலாம்.//நிச்சயம் உங்க வலைப்பூ பாதுகாத்து வைக்க வேண்டிய புத்தகம் போல//வரிகள் எனக்கு கிடைத்திருக்கும் புரொட்டீன்.நன்றி.

சகோதரர் ஹைஷ்,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

தங்கை ஹுசைனம்மா,தங்கள் கருத்துக்கும் நன்றி.உங்களைப்போல் எனக்கு தொடர் படியாக பதிவிட இயலவில்லை.மெயிலிலும் கேட்டிருந்தீர்கள்.ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

தங்கை இலா,வித்தியாசமான கோணத்தில் பார்த்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி.

சகோதரி அம்மு,பதிவோடு சேர்த்து படத்தினையும் பாராட்டி இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி.

தங்கை சுஸ்ரீ,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

தங்கை பாத்திமா ஜொஹ்ரா.
துஆவிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.அல்ஹம்துலில்லாஹ்.

SUFFIX said...

அடடா அருமையான பதிவு, தெரியாத நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன், நல்ல குறிப்புக்களை கொடுத்து இருக்கின்றீர்கள். சேகரித்து பலருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய இடுகை. நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் ஷஃபி,
தங்கள் ஊக்கவரிகளுக்கு மிக்க நன்றி

கிளியனூர் இஸ்மத் said...

பல விசயங்களை பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய அற்புதமான பதிவு...வாழ்த்துக்கள்.

athira said...

ஸாதிகா அக்கா... மிக அருமை. பொறுமையாக இருந்து ரைப்பண்ணி, அழகாக எடுத்துரைத்திருக்கிறீங்கள். வாழ்த்துக்கள்... இடையில பாட்டும் ரசித்தேன்....

30 வயதை தாண்டிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும்:) உங்களாலான அறிவுரைகளைச் சொல்லுங்கோ ஸாதிகா அக்கா.. ஐடியாத் தந்திருக்கிறேன்.

ஆசியா நீங்கள் முதலாவதில்லை, ஆனால் நான் தான் கடசியாக்கும்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா
சூப்பரா அக்கு வேறு ஆணி வேறா ஆதி முதல் அந்த வரை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.
அருமையான‌ ப‌கிவு ஓவ்வொரு தாய் மாரும் தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ ப‌திவு.

பதிவ முதலே படித்து விட்டு போய் விட்டேன் . பின்னூட்டம் தான் கொடுக்க முடியல. இப்ப தான் முடிந்தது,

கீழே யாரு உங்கள் வீட்டு ஜாம்பவான்களா?

ஸாதிகா said...

சகோதரர் இஸ்மத்,ஊக்க வரிகளுக்கு நன்றி.

தங்கச்சி அதிரா,
//30 வயதை தாண்டிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும்:) உங்களாலான அறிவுரைகளைச் சொல்லுங்கோ ஸாதிகா அக்கா..//அந்த வயது ஆனதக்கப்புறம் ஐடியா தருகிறேனே!!அப்படியே போய் விடாதீர்கள்.scroll செய்து பாருங்கள்.





























ஹே..ஹே..இப்படியே சொல்லிடுவேன் என்று பயந்து விட்டீர்களா?ஐடியா கொடுத்துட்டீங்கள் அல்லவா?ஆரம்பித்து விடுவோம்.

ஸாதிகா said...

தங்கை ஜலி,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

athira said...

ஹா..ஹா... ஹா.. ஸாதிகா அக்கா, ஒரு சின்ன சந்தேகம்...
///அந்த வயது ஆனதக்கப்புறம் ஐடியா தருகிறேனே!!அப்படியே போய் விடாதீர்கள்.//// இது உங்களுக்கானதுக்கப்புறமா? இல்ல எங்களுக்கானதுக்கப்புறமா?

ஸாதிகா said...

அதிரா இப்பவே உங்களுக்கு "கில்லாடி2010" விருது தருகிறேன்.பிடியுங்கோ.அது சரி ஸ்க்ரால் செய்து பார்த்தீங்களா?இல்லையா?

Priya said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, போட்டோஸும் அழகோ அழகு!
எனக்கு விரைவில் பயன்படும் என்று copy பண்ணிவைத்துக் கொண்டேன், நன்றி!

Menaga Sathia said...

நல்ல பகிர்வு.

ஸாதிகா said...

சகோதரி பிரியா,
தங்களுக்கு விரைவில் பயன் பட என் அன்பு வாழ்த்துக்கள்.மிகவும் மகிழ்ச்ச்சி.நன்றி.

தங்கை மேனகா,
நல்ல படியாக ஊருக்கு போய் திரும்பியாகி விட்தா?கருத்துக்கு நன்றி.

Anonymous said...

எனக்கு future ல use ஆகும்

ஸாதிகா said...

இப்பொழுதே வாழ்த்துகளை பிடியுங்கள்.வாழ்க வளமுடன்.

Anonymous said...

புது வரவை எப்படி எதிர் கொள்வது என்று சிறு திகைப்பில் இருந்த என்னை..அந்த வரவை எப்படி நல்ல வரவாக்கி...மேலும் அதை எப்படி நல்ல உறவாக மற்ற வேண்டும் என்பதனை தெளிவு படுத்திய என் சகோதரிக்கு என் நன்றிகள்.நல்ல பயனுள்ள குறிப்பு.