January 4, 2010

கங்காரு கண்டத்தில் மேற்படிப்பு.


பிள்ளை வெளிநாடு சென்று படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசையுடன் வங்கியில் லட்சகணக்கில் கடன் வாங்கி மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து கண்கள் நிறைய கனவுகளுடனும்,மனது நிறைய எதிர்பார்புகளுடனும் இருப்பதில் இன்றைய பெற்றோர் அநேகர் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கின்றனர்.இதுதான் இன்றைய நம் நாட்டுபெற்றோர்களின் நிலை.
இதில் எனக்கு மிகவும் நெருங்கிய ஸ்நேகிதி ஒருவரும் தன் ஒரே மகனை அனுப்பி வைத்து இருக்கிறார்,நேற்று நடந்த நிகழ்வும்,அதனைத்தொடர்ந்து என் ஸ்நேகிதி போன் செய்து என்னிடம் பதட்டப்பட்டதையும் தொடர்ந்து இந்த பதிவு.

ஆஸ்திரேலியாவில் இத்தனை நாள் இனவெறிதாக்குதல் நடந்து பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருந்த பற்பல வருந்ததக்க சம்பவங்கள் இன்று ,பூதாகரம் எடுத்து மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

ஆம்,இந்திய மாணவர் 21 வயதான நிதின் கார்க் என்பவர் கொல்லப்பட்ட செய்திதான்.எத்தனை கனவுகளுடன் அவரது பெற்றோர் மாணவரை படிக்க அனுப்பி வைத்தனரோ?முகம் தெரியாத அந்த பெற்றோரை நினைக்கையில் என் கண்கள் தளும்புகின்றது.

கடந்த மூன்ற ஆண்டுகளாக மாணவர்களை குறி வைத்து தாக்கும் போங்கு இன்று உச்ச கட்டமாகி ஒரு மரணத்தில் வந்து நின்றுஇருக்கின்றது.

அந்நாட்டு காவல்துறையினரின் மெத்தனபோக்கு மட்டுமல்லாமல்,அரசாங்கத்தின் மெத்தனப்போக்கும்,வேடிக்கைப்பார்க்கும் அலட்சியமும் இன்று நம் அத்தனைபேரையும் பதற வைத்து இருக்கின்றது.

உள் நாட்டு மாணவர்கள் தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமோ,வேலைவாய்ப்பில் பாதிப்பு வருமோ என்று அஞ்சியே இவ்வன்முறையில் ஈடு படுகின்றனர்.

குற்றம் செய்யப்பட்ட அந்நாட்டினரை அந்நாட்டு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டணை கொடுத்து மற்றவர்கள் மீண்டும் தவறுகள் செய்யா வண்ணம் கடும் தண்டனை விதிப்பதும் இல்லை.அப்படியே கண்டு கொண்டாலும் ஜெயில் வாழ்க்கையில் சகல வசதி வாய்ப்புகளையும் வழங்கி குற்றவாளிகளை பெருக்குவது கண்டிக்கத்தக்கது.

நம் அரசாங்கம் வெறும் அறிக்கைகளுடன் நின்று விடாமல் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.இப்படி நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுக்கப்படவேண்டும்.இதுவே முதலும்,இறுதியுமாக நடந்த துர்சம்பவமாக இருக்கட்டும்.

கடைசியாக பெற்றோருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்:
இவ்வளவு நடந்தும் ஆஸ்திரேலியா எம்பஸிக்கு பிள்ளையை மேற்படிப்பு சம்பந்தமாகதொடர்பு கொள்வதை பற்றி சிந்தியுங்கள்.அதிகம் முன்கோபமும்,இளமைத்துள்ளலும்,பயமறியாத்தனமும்,அதீத ஆர்வக்கோளாறும்,அசாத்திய துணிச்சலும்,ஹீரோத்தனமும் வாலிப பருவத்தின் ஆரம்பத்திலே சற்று என்ன மிகவுமே அதிகமாக இருக்கும்.இது இயற்கை.இவ்விளைய பருவத்தில் நாம் பெற்றெடுத்த செல்வங்களை,நம் கனவுகளை,நம் இலட்சியங்களை இந்த கரடுமுரடான பயணத்திற்கு உட்படுத்த வேண்டுமா?துஷ்டனைக்கண்டால் தூர விலகு என்பதைப்போல் விலகி இருப்பதே மேல்.நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பு.படிக்க வைக்கவும்,பிழைக்கவும் எத்தனையோ வழிகள்,இடங்கள் ,பாதுகாப்பான தேசங்கள் உள்ளது.ஆபத்தான இலக்கு வேண்டாமே.யோசியுங்கள்.

41 comments:

நட்புடன் ஜமால் said...

நீங்கள் சொல்லியிருக்கும் காரணம் விளங்குகிறது.


ஆனாலும் ...

ஸாதிகா said...

முழுதாக முடித்துவிடுங்கள் சகோதரரே தங்கள் கருத்துக்களை.நானும் தெரிந்து கொள்கிறேன்.உடன் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் கருத்து நல்ல கருத்து. மகன் மேல்நாடு சென்று படித்து நிறைய சம்பாரிக்க வேண்டும் என எண்ணும் பெற்றோர் இருக்கும் வரை நாம் ஒன்றும் செய்ய இயலாது.
என்னைப்பொறுத்தவரை அக்கரைக்கு இக்கரை பச்சை.

நாஸியா said...

\\நம் அரசாங்கம் வெறும் அறிக்கைகளுடன் நின்று விடாமல் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.இப்படி நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுக்கப்படவேண்டும்.இதுவே முதலும்,இறுதியுமாக நடந்த துர்சம்பவமாக இருக்கட்டும்.\\

இன்ஷா அல்லாஹ் இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க இறைவனை வேண்டுவோமாக.

இந்திய மண்ணில் மட்டும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? ஆறு மாதத்திற்கு ஒரு முறை எங்கோ ஒரு மூலையில் ரேக்கிங்கால் மாணவர்கள் இறந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஈவ் டீசிங்கால் பெண்களும் தற்கொலை செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம் சக மனிதர்களை மதிக்கும் பண்பை பெற்றொர்களும் சமூகமும் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருப்பது தான். அது வளர்ந்து பூதாகரமாகி தீவிரவாதம் வரை கொண்டு செல்கிறது

ஸாதிகா said...

சங்கவி,பின்னூட்டத்திற்கு நன்றி.மேல் நாட்டிற்கு சென்று படித்து சம்பாதிக்க வேண்டுமென்ற பெற்றோரின் ஆசைகள் தப்பல்ல.தேர்ந்தெடுக்கும் இடம்தான் இப்போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய கட்டாயம்.

ஸாதிகா said...

தங்கை நாஸியா,உங்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் வேண்டுகிறேன்.இந்த செய்தி கேட்டதும் உண்மையில் என் கண்கள் கலங்கி விட்டது.ஒரு செமஸ்டருக்கு 5லட்சரூபாய் வீதம் நாண்கு செமஸ்டருக்கு 20லட்ச ரூபாய் வங்கியில் கடன் வாங்கி இப்போதுள்ள பீதியில் மகனை திரும்ப அழைத்துக்கொள்ளலாமா என்று ஆலோசனை செய்யும் என் ஸ்நேகிதியின் துடிப்பைப்பார்த்து இந்த பதிவை எழுத தோன்றியது.

Jaleela Kamal said...

யார் விட்டு பிள்ளையா இருந்தாலும் இது போல் கேள்வி படும் போது மனசு ரொம்ப துடிக்கிறது.

நாஸியா said...

That is really sad.. But lets hope that it does not happen again. Insha Allah

ஸாதிகா said...

உண்மைதான் ஜலி.

Unknown said...

ஓவ்வொரு முறையும் இந்த மாதிரியான விஷயங்கள் டி.வீயில் பார்க்கும் பொழுது எனக்கும் இந்த எண்ணம் தோன்றும்..//நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பு.படிக்க வைக்கவும்,பிழைக்கவும் எத்தனையோ வழிகள்,இடங்கள் ,பாதுகாப்பான தேசங்கள் உள்ளது.ஆபத்தான இலக்கு வேண்டாமே.யோசியுங்கள்.// அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்.

ஸாதிகா said...

நன்றி பாயிஷா உங்கள் கருத்துக்கு.அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.இருந்தாலும் என்னுடைய கருத்துக்கு மாற்றுக்கருத்து உடையவர்களும் இருக்கிறார்கள்தான்.இறைவன் அனைவரையும் காப்பாற்றுவனாக!

அண்ணாமலையான் said...

படிப்ப ஒழுங்கா படிச்சா எங்கருந்தாலும் நல்லாருக்கலாம்... ஆனா இந்த வெளிநாட்டு மோகம்.....? என்னத்த சொல்ல...

ஸாதிகா said...

நீங்கள் சொல்லுவதும் ஏற்றுக்கொள்ள வேண்ண்டியதுதான்.நான் திரு சங்கவியின் பின்னூட்டத்திற்கு கொடுத்து இருக்கும் பதிலையும் படித்துப்பாருங்கள் அண்ணாமலையான்.தங்கள் கருத்துக்கு நன்றி.

பித்தனின் வாக்கு said...

ஒருமுறை நாங்கள் பதிவர் சந்திப்பில் ஒரு ஆஸ்த்திரேலியப் பதிவர் ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் கூறியது இது.
அடிவாங்கிய அல்லது அடிபட்டவர்களைப் பாருங்கள் பெரும்பாலும் வட இந்தியர் அல்லது ஆந்திராக்காரர்தான் இருப்பர். படிப்பு அல்லது பொழப்பு பார்க்கப் போன அதை மட்டும் செய்ய வேண்டும். அவங்க நாட்டுல அவங்க மாதிரி எல்லாம் வாழ ஆசைப்படக் கூடாது. அவன் டென்னிஸ் கேட்டில் போய் ஆடுவது,புட்பால் ஆடுவது. இதுவாது பரவாயில்லை. நட்ட நடு இராத்திரியில் அவன் குடித்து விட்டு கும்பலாய் காசில்லாமல் உக்காந்து இருப்பான். இந்த நம்ம ஊரு பீலா பார்ட்டிகள் காதில் இசையுடன், செல்பேனுடன் பந்தாவா போவன். இந்தியன் காசு வைத்து இருப்பான் என்பது அவர்கள் நம்பிக்கை. குடுத்தா விட்டு விடுவான். குடுக்காம உதார் விட்டா அடிதான். ஒருமுறை இவரிடமும் மடக்கி கேட்டு இருக்கின்றார்கள் காசும் தந்து செல்பேனையும் குடுத்து விட்டு, பின்பு எனது சிம் கார்டு மட்டும் தாருங்கள் என்று கேட்டுள்ளார். அவர்களும் கழட்டிக் கொடுத்து போய்விடு என்று சொன்னார்கள். கொஞ்சம் பதட்டம் பாடி ரீயாக்சன் காட்டி இருந்தால் அடிதான் விழுகும். இது இவர்கள் மட்டும் அல்ல மற்ற நாட்டவரும் வாங்குகின்றார்கள். அனால் அங்கு இருக்கும் இலங்கைத் தமிழர்கள், தமிழர்கள், மலையாளிகள் ஏன் இந்தப் பிரச்சனையில் சிக்குவதில்லை. ஏன் என்றால் அவர்கள் அமைதியாக பொழப்பை மட்டும் பார்ப்பார்கள். அவன் பப்பில் போய் ஆடமாட்டார்கள். நன்றி.

ஸாதிகா said...

பித்தனின் வாக்கு தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.எந்த மாநிலமானலும்,தேசமானாலும்,மனிதர்களுக்கு இப்படி விபரீதம் நடந்தால் மனம் துடிக்கிறது.புதிய தகவலையும் அறியத்தந்து இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி.என் பதிவில் வந்த வரிகளை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.நன்றி. //அதிகம் முன்கோபமும்,இளமைத்துள்ளலும்,பயமறியாத்தனமும்,அதீத ஆர்வக்கோளாறும்,அசாத்திய துணிச்சலும்,ஹீரோத்தனமும் வாலிப பருவத்தின் ஆரம்பத்திலே சற்று என்ன மிகவுமே அதிகமாக இருக்கும்.இது இயற்கை.இவ்விளைய பருவத்தில் நாம் பெற்றெடுத்த செல்வங்களை,நம் கனவுகளை,நம் இலட்சியங்களை இந்த கரடுமுரடான பயணத்திற்கு உட்படுத்த வேண்டுமா?//

பித்தனின் வாக்கு said...

புரிகிறது ஸாதிகா எனக்கும் மனித நேயமும், யார் துடித்தாலும் துடிக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் நாமாக ஆடி அடி வாங்கினால் அதுக்கு யாரைப் பொறுப்பு ஆக்குவது. நான் பிரிவினையே பாகுபாடு பார்க்கவில்லை. பொறுப்புனர்வைத்தான் கூறுகின்றேன். நன்றி.

ஸாதிகா said...

சகோரர் பித்தனின் வாக்கு.தங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான்.தங்கள் கருத்தை நிச்சயமாக நான் தவறாகவோ,தங்களின் மனித நேயத்தை குறை கூறியோ நான் தங்கள் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கவில்லை.தாங்கள் தவறாக புரிந்திருந்தால் அதனை மாற்றிக்கொள்ளவும்.நன்றி சகோதரரே.

அன்புடன் மலிக்கா said...

/யார் விட்டு பிள்ளையா இருந்தாலும் இது போல் கேள்வி படும் போது மனசு ரொம்ப துடிக்கிறது./

ஜலீலாக்கா சொல்வது சரி.

பணம் தேவைதான் அதற்காக தம்மை இழந்து தன்மானமிழந்து வாழ்வது நல்லதல்ல. முடிவு பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் தெளிவான முடிவு வேண்டும்..http://fmailkka.blogspot.com/

நேரம் கிடைக்கும்போது
இதையும் கொஞ்சம் பாருங்கள்

SUFFIX said...

தாக்குதலுக்கு சரியான காரணம் இனவெறி மட்டுமா அல்லது வேறு ஏதேனும் கூட இருக்குமா என பல சந்தேகங்கள் கிளப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். நானும் சில நண்பர்களிடம் கேட்கும்போது அது மாதிரி இங்கு இல்லை, அங்கு இல்லை என ஒவ்வொருவரும் தத்தமது இடத்தை உசத்தியாக சொல்கிறார்கள். ஒரே குழப்பமா இருக்கு. தாங்கள் இறுதியில் கூறியிருப்பது நல்ல கருத்து 'இத்தனை ரிஸ்க் தேவையா? மாற்று இடங்கள், உள் நாடு, என சிந்திக்கலாம்.

Priya said...

மனித நேயமுள்ள அருமையான பதிவு!

Asiya Omar said...

ஸாதிகா தங்கள் மனித நேயமிக்க இந்த இடுகை நிறைய பெற்றோர்களின் கண்ணை நிச்சயம் திறந்து இருக்கும்.உஷார் படுத்தியமைக்கு மிக்க நன்றி.

சீமான்கனி said...

//துஷ்டனைக்கண்டால் தூர விலகு என்பதைப்போல் விலகி இருப்பதே மேல்.நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பு.படிக்க வைக்கவும்,பிழைக்கவும் எத்தனையோ வழிகள்,இடங்கள் ,பாதுகாப்பான தேசங்கள் உள்ளது.ஆபத்தான இலக்கு வேண்டாமே.யோசியுங்கள்.//

என்னுடைய கருத்தும் இதுதான் அக்கா...நல்ல பகிர்வு ஸாதி(கா) ...

சீமான்கனி said...

நல்லா பகிர்வு...தமிலிஷில் இணைத்து விட்டேன்...ஸாதி(கா)

http://ganifriends.blogspot.com/

ஹுஸைனம்மா said...

ஆமாம் அக்கா, கேட்கும்போதே பதறுகிறது.

படிப்பைக் கூடிய மட்டும் இந்தியாவிலேயே (அங்கும் பிரச்னைகள் இருக்கின்றன) அல்லது பெற்றோரின் அருகாமையிலேயே முடித்துவிட்டு வேலைக்கென வெளிநாடு செல்லும்போது ஒரு பக்குவம் வந்திருக்கும் என்பது என் கருத்து.

இக்கரைக்கு அக்கரை பச்சை!!

Vijiskitchencreations said...

அக்கா எல்லா பெற்றோர்களுக்கும் இந்த வெளிநாட்டு மோகம் கூடி கொண்டே தான் போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை. எவ்வளவு கேட்டாலும், பேப்பரில் பார்த்தும்,படித்தும் ம்.ஹூம்
மாறாவே இல்லை மக்கள்.
அக்கா இதை படித்ததும் எனக்கு மேலும் மனதுக்கு கஷ்டமாக இருக்கு.

சத்ரியன் said...

நல்லதொரு பகிர்வு.

ஸாதிகா said...

மலிக்கா,
உங்கள் கருத்துக்கு நன்றி.அவசியம் தங்கள் புது வலைப்பூ காண வருகின்றேன்.

ஸாதிகா said...

ஷஃபி,
உண்மைதான்.பலர் பலவிதமாகத்தான் சொல்கின்றார்கள்.எதை நம்புவதென்றே தெரியவில்லை.இனி இது போல் துர் சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

ஸாதிகா said...

பிரியா,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

ஆசியா,
கருத்துக்கு நன்றி.மகன் விடுமுறை முடிந்து புறப்பட்டுவிட்டாரா?நீங்கள் ஃபிரீ ஆகி விட்டீர்களா?

ஸாதிகா said...

சீமான் கனி,
கருத்துக்கும்,ஓட்டுக்கும் நன்றி.

ஸாதிகா said...

ஹுசைனம்மா,
//டிப்பைக் கூடிய மட்டும் இந்தியாவிலேயே (அங்கும் பிரச்னைகள் இருக்கின்றன) அல்லது பெற்றோரின் அருகாமையிலேயே முடித்துவிட்டு வேலைக்கென வெளிநாடு செல்லும்போது ஒரு பக்குவம் வந்திருக்கும் என்பது என் கருத்து.//உங்கள் கருத்தையும் ஆமோதிக்கிறேன்.நன்றி

ஸாதிகா said...

விஜி,
கருத்துக்கு நன்றி.சற்ரு முன்னர்தான் உங்கள் வாழ்த்தைப்பார்த்தேன்.

ஸாதிகா said...

சத்ரியன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

SUMAZLA/சுமஜ்லா said...

அதிர வைக்கும் நிஜம்!

ஸாதிகா said...

சக்தியின் மனம்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

சுமஜ்லா,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

athira said...

ஸாதிகா அக்கா.. என்ன நீண்ட நாட்களாகிறதே.. உங்கள் அடுத்த தலைப்புக்காக அதிரா வெயிட்டிங்.. விரைவில் எழுதுங்கோ விறுவிறுப்பான சம்பவங்களை.

அன்புத்தங்கை அதிரா.

Asiya Omar said...

ஸாதிகா நான் தானே அங்கு சென்றிருக்கிறேன்.இப்ப அவங்க எல்லோருடனும் நாட்கள் கழிந்து கொண்டிருக்கிறது.என்ன இதற்கு அப்புறம் இடுகை இல்லை?அடுத்த கதாபாத்திரம் ரிலீஸ் எப்போ?

ஸாதிகா said...

அதிரா நீங்கள் கேடதுமே போட்டு விட்டேன்.பாருங்கள்.

ஆசியா,சற்று பிஸி.மேலும் ஊருக்குப்போய் வந்தேன்.கதாபாத்திரங்கள் விரைவில் வரும்.உங்களுக்காக ஒரு சீதாவோ,ராணியோ கற்பனை செய்து கொண்டு இருக்கிறேன்