December 31, 2009

அறிவான சந்ததிகள்.




எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே
என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.இது முழுக்க முழுக்க உண்மை.பாடலின் வரிகளை மேலோட்டமாக பார்த்தால் அபத்தமாகத்தான் தெரியும்.ஒரு தாய்க்கு தன் பிள்ளை கெட்டவன்(ள்)ஆவதற்கு பிடிக்குமா?நல்லவனாவதற்காகத்தானே பாடு படுவாள்.அதையே குறிகோளாக கொண்டுதானே வளர்ப்பாள்.அதற்காகத்தானே பிராயசித்தப்படுவாள்?இப்படித்தான் தோன்றும்.ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தோமானால் உண்மை புலப்படும்.

நம் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு சிறு தவறுகளுக்கும் பெற்றோர்கள் தம்மை தொடர்பு படுத்தி சிந்தித்து பாருங்கள்.உண்மை புரிபடும்.உதாரணமாக ஒரு இல்லத்தரசி ஒரு நூறே ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்குகிறாள்.கணவருக்கு தெரிந்தால் 'தேவையா'என்று கடிந்து கொள்ளுவார் என்று அவள் கணவரிடம் மறைத்து விடுகிறாள்.இது சாதாரண விஷயமாயினும் இதைப்பார்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையும் நாளைக்கு அந்த 'மறைத்தல்' என்ற விஷயத்தை பின் பற்றும்.சின்ன தவறுகளை செய்து விட்டு பெற்றோர் திட்டுவார்களே என்று மறைக்க ஆரம்பிக்கும்.இதுவே வளர்ந்து பள்ளிக்கு கட் அடித்து விட்டு ஸ்நேகிதர்களுடன் ஊர் சுற்றி பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்களே என்று தப்புக்கு மேல் தப்பு செய்தால் நம்மால் ஜீரணிக்க இயலுமா?

குழந்தை வயிற்றில் ஜனனம் ஆனதுமே பெற்றோர்களுக்கு கடமையும் பொறுப்புணர்வும் ஆரம்பித்து விடுகிறது.பெண்ணின் வயிற்றில் கரு தோன்றி விட்டது என்று உறுதி ஆனதுமே தாய் நல்ல மனநிலையிலும்,அமைதியான குடும்ப சூழ்நிலையிலும் உயரிய எண்ணங்களுடனும் ,பொய்,பொறாமை,காழ்ப்புணர்வு,வெறுப்பு,கோபம்,எரிச்சல்,சச்சரவு,அகம்பாவம்,ஆணவம் போன்றவற்றை விட்டொழித்து மனதினை நேரிய வழியில் வைத்துக்கொள்ள வேண்டும்.இதைத்தான் இன்றைய மருத்துவ உலகம் கூறுகிறது.

தனிமையில் இருக்கும் பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் அவளது கர்ப்பகாலத்தில் இதற்கெனவே நேரம் ஒதுக்கி அறையை மூடிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார்.மற்றொருவரோ தன் மதம் சார்ந்த உரையாடல்களை செல்போன் மூலம் ஒலிக்க விட்டு வயிற்றின் மேல் வைத்துக்கொள்வார்.

இறைவனின் படைபில் மனிதப்படைப்பு என்பது உன்னதமானது.மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு தனியான அந்தஸ்தையும்,சிறப்பையும்,பாக்கியத்தையும் இறைவன் கொடுத்துள்ளான்.ஒருவனின் திறமை,ஆளுமை அவனது புத்திக்கூர்மையை வைத்துத்தான் கணிக்கிறோம் அவன் வல்லவனா என்று.மனிதனின் புத்திகூர்மை,நினைவாற்றல்,விசாலமாக சிந்திக்கும் திறன்,செய்யும் ஒவ்வொன்றையும் பகுத்து,அலசி,ஆராய்ந்து,திட்டமிட்டு,ஆலோசனை செய்து செயலாக்கம் செய்தால் அவன் அறிஞனாக வெளிப்படுகின்றான்.

மனித மூளையின் அளவும்,திறனும் கரு உருவான உடனே ஆரம்பமாகி விடுகிறது.ஆரம்பத்தில்தான் அதன் அபரிதமான வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

எண்ணங்களின் கோர்வைதான் மனம்.அறிவுப்பூர்வமான,ஆக்கப்பூர்வமான,எல்லா விஷயங்களையும் கற்று பலதரப்பட்ட விஷயங்களையும் அறிந்து,புகட்டி,நல்லவற்றை ஏற்று,தீயவற்றை அகற்றி,கசடுகளை களை எடுத்து எண்ணங்களில் அசாத்திய தன்னம்பிக்கையும்,வரைமுறைக்குட்பட்ட தைரியத்தையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவித்தோமானால் நன் மக்களை அறுவடை செய்யலாம்.நல்ல சமுதாயமும் உண்டாகும்.

தன்னம்பிக்கை,ஆற்றல்,கம்பீரம்,சுயமாக தீர முடிவெடுத்தல்,விடா முயற்சி,அறிவு,நல்லொழுக்கம்,கல்வி போன்றவற்றில் உயர்ந்து,சிறந்து நம் சந்ததிகள் விளங்குமாயின் அது நமக்கும்,சமுதாயத்திற்கும் கிடைக்கும் பெரும் பேறல்லவா?

மற்றொரு பதிவில் குழந்தைவயிற்றில் ஜனித்ததில் இருந்து அதன் பதின் பருவம் வரை நாம் நம் சந்ததியருக்கு ஆற்றக்கூடிய கடமைகளையும்,பொறுப்புகளையும்,கட்டாயங்களையும் பார்ப்போம்.

இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்கவும்,.


27 comments:

தாஜ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]

அருமையான பதிவு.ஒவ்வொரு குழந்தையும் பிறக்கையிலே நல்லகுழந்தைதான்

வளரும் இடம் வளர்க்கப்படும் முறை
இவைதான் அவர்களை மாற்றுகிறது

பெற்றோர்தான் கவனமாய் இருக்கவேண்டும்

நாம்தானே பிள்ளைகளுக்கு ரோல்மடல்கள்.

இறைவன் நம் அனைவரது பிள்ளைகளையும் நம் எ்ண்ணப்படியே
அமைத்து வளர்க்க உதவி செய்யனும்.

சாதிகா உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி தாஜ்.பிள்ளைகளுக்கு நாம்தான் ரோல் மாடல்.எனக்கு மூன்று பிள்ளைகள்.அல்ஹம்துலில்லாஹ்.

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நல்ல பதிவு சகோதரி.

அடுத்ததுக்காக வெய்ட்டிங்ஸ் ...

ஸாதிகா said...

சகோதரர் அண்ணாமலையான்,பின்னூட்டத்திற்கு நன்றி.உங்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலபுத்தாண்டுதின நல் வாழ்த்துக்கள்.

சகோதரர் ஜமால்,உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி.அடுத்தது ஊருக்கு சென்று வருமுன் பதிவிட முயற்சிக்கின்றேன்

Asiya Omar said...

அருமை தோழி.விடுமுறையில் நான் என் குடும்பத்துடன் அதனால் கொஞ்சம் பிஸி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

உங்கள் படைப்புகளை இப்ப தான் பார்க்கிறேன் மிகவும் அருமையான பதிவுகள்.. இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
என்றும் நட்புடன்..
http://eniniyaillam.blogspot.com/

செ.சரவணக்குமார் said...

//எண்ணங்களின் கோர்வைதான் மனம்.அறிவுப்பூர்வமான,ஆக்கப்பூர்வமான,எல்லா விஷயங்களையும் கற்று பலதரப்பட்ட விஷயங்களையும் அறிந்து,புகட்டி,நல்லவற்றை ஏற்று,தீயவற்றை அகற்றி,கசடுகளை களை எடுத்து எண்ணங்களில் அசாத்திய தன்னம்பிக்கையும்,வரைமுறைக்குட்பட்ட தைரியத்தையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவித்தோமானால் நன் மக்களை அறுவடை செய்யலாம்.நல்ல சமுதாயமும் உண்டாகும்.//

எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், பகிர்வுக்கு நன்றி சகோதரி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

தோழி ஆசியா,கருத்துக்கு நன்றி.குடும்பத்தினருடன் விடுமுறையை என் ஜாய் பண்ணுங்கள்.

ஸாதிகா said...

சகோதரி பாயிஷா காதர்,என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.உங்கள் கருத்து என்னை உற்சாகப்படுத்துகிறது.

ஸாதிகா said...

சகோதரர் சரவணக்குமார்,உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

பனித்துளி சங்கர் said...

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியாவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

SUFFIX said...

ஆழ்ந்த கருத்துக்கள், முற்றிலும் உண்மை!!

அண்ணாமலையான் said...

கருத்தோட ஒர் ஓட்டும் போட்டா நல்லாருக்கும்...நன்றி...

'பரிவை' சே.குமார் said...

அருமையான பதிவு.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Vijiskitchencreations said...

ஸாதிகா அக்கா புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்ல அருமையான
கருத்துக்காள்.

ஸாதிகா said...

சகோ சங்கர்,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

சகோ ஷஃபி,உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

சகோ அண்ணாமலையான்,ஓட்டுபோட்டுவிட்டேன்.

சகோ சே.குமார்,உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

தங்கை விஜி,உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

நல்லதொரு பதிவு.வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

செய்யத் மிக்க நன்றி.

athira said...

ஸாதிகா அக்கா, நல்ல கருத்துக்களை புரியும்படியாகச் சொல்லியிருக்கிறீங்கள், போறிங் இல்லாமல் வாசிக்க வைக்கிறது. தொடருங்கள்.

உங்கள், மற்றும் இதைப் பார்க்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...(தூவானம் இன்னும் நிற்கவில்லையல்லவோ? புதுவருடத்தைச் சொன்னேன்).

அதுசரி சென்னைதானே உங்கள் ஊர்? அது என்ன ஊருக்குப் போய் வந்து எழுதுகிறேன் என்றீங்கள்.

அன்புத் தங்கை அதிரா.
"எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்"

இலா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஷாதிகா ஆன்டி!
சில நேரம் எனக்கு தோன்றுவதுண்டு... பிள்ளைக்காக மட்டுமல்லாமல் தன் உணர்வுடன் யாரும் இதனை செய்வார்களா?? எது சரியோ எது தர்மத்துக்குட்பட்டதோ.. எது இறை‍பிரியத்துகுட்பட்டதோ.. எது இம்மையிலும் மறுமையில் நம்மை காக்கும் சொல்.செயலோ அதனை விழித்திருக்கும் போது உணர்வுகளற்ற உறக்க நிலையிலும் யாராவது செய்வார்களா...
All I really want to say is "Are we doing all the good things jus because it will affect our children ??!!"
We should do good deeds no matter what the consequences will be...

Nice posting... Please do write often... I hope thatis one of your new year resolution :))

ஸாதிகா said...

அதிரா,என் பதிவு போர் அடிக்காமல் படிக்க முடிகிறது எனறு வரிகளைப்பார்த்ததும் அப்படியே கேண்டில் ஆகிவிட்டேன்.
ஜனவரி பூரா தூவானம் நிற்காது.சோ..மறந்துபோனவர்களுக்கெல்லாம் சாவகாசமாக வாழ்த்து சொல்லிக்கொண்டே இருங்கள்.
எந்த ஊர் என்றால் என்ன?நான் ஸ்காட்லாந்துக்கு வரக்கூடாதா?இருங்க அடுத்தவாரம் உங்கள் வீட்டு காலிங்க் பெல்லை அடிக்கிறேன்.

ஸாதிகா said...

//எது சரியோ எது தர்மத்துக்குட்பட்டதோ.. எது இறை‍பிரியத்துகுட்பட்டதோ.. எது இம்மையிலும் மறுமையில் நம்மை காக்கும் சொல்//பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வரிகள் இலா.அருமையான கருத்தைக்கூறி இருக்கின்றீர்கள்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா என்ன அருமையான சப்ஜெக்ட் எடுத்து சொல்லி இருக்கீங்க‌

உங்கள் அடுத்த பதிவை படிக்க காத்துகொண்டிருக்கிறேன்

ஸாதிகா said...

ஊக்க வரிகளுக்கு ரொம்ப நன்றி ஜலி.

Priya said...

சரியா சொல்லியிருக்கீங்க‌.

ஸாதிகா said...

பிரியா,
கருத்துக்கு நன்றி.