December 13, 2009

பொன்னி





பொன்னி..இந்தப்பெயரைக்கேட்டதும் ஒரு பெண்ணின் பெயர்,கல்கியின் பொன்னியின் செல்வன் என்றுதான் நினைவுக்கு வரும்.நான் சொல்ல வருவது பொன்னிக்குருவி.ஒரு அழகான,அபூர்வமான,அழிந்து வரும் பறவை இனம்.

பறவை இனங்களிலே அழகான,பிடித்தமான பறவைஇனம் எது வென்றால் நான் பொன்னிக்குருவியைத்தான் கூறுவேன்.அதே போல் இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு பிடித்த மாமிசமும் பொன்னிக்குருவியின் மாமிசம்தான்.

மழைக்காலங்களில் தோட்டம்,காடுகரைகளில் எங்கிருந்தோ வந்து தஞ்சம் அடையும் அழகிய இந்த சிறு குருவிகளை வேட்டை ஆடி,சிறார்கள்விளையாடி,கறிசமைத்தும் ஆனந்தப்படுவார்கள்.

சிறுவயதில் தோட்டக்காரரிடம் சொல்லிவைத்து வாங்கி வீட்டில் வைத்து அழகு பார்ப்போம்.மொத்தமாக ஒரு வாரத்திற்கும் மேலாக உயிர் வாழ்ந்ததாக சரித்திர ம் இல்லை.ஒன்பது வர்ண நிறங்களுடன் குள்ளமான வாலுடன்,நீளமான கால்கள்,குட்டையான மூக்குடன் பார்ப்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் இந்த குருவியை indian pitta என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.தமிழில் பலவட்டார பெயர்களாக பொன்னுத்தட்டான்,கம்பந்தட்டான்,தவிட்டான்,காச்சுஎன்றும் அழைப்பர்.ஒன்பது வர்ணங்களைக்கொண்டதால் இப்பறவைக்கு ஹிந்தியில் நவ்ரங்என்றொரு பெயரும் உண்டு.

குருவியின் உச்சந்தலை மயிரை நடு மற்றும் கட்டை விரலால் கிள்ளித் தூக்கினால் அக்குருவி இடமும்,வலமுமாக ஆடும்பொழுது "பேயாடம்மா பேயாடு!தோட்டக்காட்டில் விட்டுடுவோம்"என்று சிறார்கள் குதூகலக்குரலில் தாலாட்டும் பொழுது இன்னும் வேகமாக இடமும்,வலமுமாக ஆடுவதை நினைக்கும் பொழுது இப்பொழுது பரிதாபமாக உள்ளது.

மழைகாலம் முடிந்ததும் இப்பறவை இனம் வந்த சுவடே தெரியாமல் மறைந்து விடும்.சென்ற மழைக்காலத்தில் நான் ஊருக்கு சென்று இருந்த பொழுது பொன்னிக்குருவியை பார்க்கும் ஆவலில் கேட்டு இருந்தேன்.மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுவந்து சேர்த்தார் தோட்டக்காரர்."இப்போதெல்லாம் குருவி மாட்டுவதே கஷ்டமாக இருக்கு "என்கின்றார் அலுப்புடன்.

எனக்கோ அழிந்து வரும் அந்த பறவை இனத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது.அழகான இந்தப்பறவை இனம் உலகில் மனிதர்கள் இருக்கும் வரை அழிந்துவிடக்கூடாது என்று மனம் பதைபதைக்கின்றது. நான் ரசித்து விளையாடிய இந்த அழகிய பறவை இனத்தை நம் சந்ததிகளும் ரசிக்க வேண்டும் என்ற ஆவல் மிளிர்கின்றது. குருவியை ஆசைதீர பார்த்தேன்.மென்மையான முடிகளை நீவிய பொழுது மனம் சிறுபிள்ளையாகிப்போனது. உச்சந்தலை முடியை கிள்ளி சந்தோஷமாக பேயாட்டி விட்டு ,வறுத்து சாப்பிட துளியும் மனதில்லாமல் மொட்டை மாடிக்கு பொன்னிகளைத்தூக்கிக்கொண்டு போனேன்.
எதற்கா?
பறக்கவிடத்தான்.

33 comments:

Asiya Omar said...

பொன்னி பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.சின்ன சின்ன ஆசை,சிறகடிக்க ஆசை என்று மனது அசை போட்டது என்னவோ நிஜம்.

சீமான்கனி said...

Me the 1st....
பொன்னி குருவியா இது...நான் ஊரில் இருக்கும்போது பார்த்ததுண்டு...பெயர் தெரியாது...ரசிப்பதோடு சரி...நல்லதகவல் சகோ...வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

இப்பத்தான் இந்தப் பொன்னி பத்திக் கேள்விப்படுறேன். எனக்குத் தெரிந்த பொன்னி, “தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி”தான்..ஹி..ஹி..

வித்தியாசமான, விவரமான பதிவு.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா: விமானிகளுக்கு பறவைகள் என்றாலே அலர்ஜி, என்ஜினுக்குள் சென்றால் அது செயல் இழந்துவிடும் அல்லது தீ பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பொன்னி குருவி இது வரை பார்த்தது இல்லை இனிதான் ஆல்பத்தில் தேட வேண்டும்.

புதிய அறிமுகம், மிகவும் நன்றி

வாழ்க வளமுடன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புது விதமா இருக்கு நீங்க விளையாண்ட விசயங்கள்..கடைசியில் நீங்கள் பறக்கவிட்டதுக்கு பாராட்டுக்கள்.. :)

Thekkikattan|தெகா said...

oh! Indian Pitta காணாம போனதிற்கு உங்க ஊர்க் காரங்களும் ஒரு காரணமா :)). just kidding...

ஒரு முறை வால்பாறையில் நான் போட்ட எலி பொறிக்குள் பொன்னி சிக்கி ரொம்ப குலோசா பார்க்கிற வாய்ப்பு கிட்டியது, ரொம்ப அழகான சின்னப் பறவைதான்.

ஸாதிகா said...

ஆசியா,பின்னூட்டத்திற்கு நன்றி.இப்பொழுதும் பொன்னிக்குருவியை பார்த்தால் எனக்கு மனமெல்லாம் மகிழ்ச்சி பூக்கும்.

ஸாதிகா said...

இங்கு பின்னூட்டமிட்டவர்களில் ஒருவரைத்தவிர மற்றவர்க்கெல்லாம் பொன்னிக்குருவி பற்றி தெரியாதது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது சகோதரர் சீமான் கனி.நன்றி.

ஸாதிகா said...

அட தினமும் சாப்பிடும் பொன்னி புழுங்கல் அரிசி எனக்கே ஞாபகம் இல்லை ஹுசைனம்மா.பின்னூட்டத்திற்கு நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் ஹைஷ் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.தேடிப்பாருங்கள்.இதை விட நிறைய தகவல்கள் கிடைக்கலாம்.

ஸாதிகா said...

நன்றி முத்து லெட்சுமி முதல் வருகைக்கும்பின்னூட்டத்திற்கும்.
பொன்னிக்குருவியை பறக்கவிட்டது எனக்கும் மனநிறைவாக இருக்கின்றது

ஸாதிகா said...

முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி Thekkikattan.உண்மைதான்.உணவாக எடுத்துக்கொள்வதால்தான் இப்படிப்பட்ட பறவைகள் அழியக்காரணமாக இருக்கின்றது.இது மாற வேண்டும்.

athira said...

ஸாதிகா அக்கா, பொன்னி என்றதும் பொன்னியின் செல்வன் தொடர்கதைபற்றி ஒரு ஆராய்ச்சியாக்கும் என்றுதான் வந்தேன். இது சரியாக எங்கள் நாட்டில் இருக்கும் ரொபின்(Robbin) என்ற பறவை இனம்போல தெரிகிறது. ஆனால் இதைச் சாப்பிடுவார்கள் எனக் கேட்க ஒருமாதிரி இருக்கு. பழகினால் சரிதானே. சிக்கின் சாப்பிட்டுப் பழக்கமில்லாதவர்கள், சிக்கின் சாப்பிடலாமா என ஏங்குவார்கள் அப்படித்தான்.

படத்தில் பறவைகள் அழகாக இருக்கு, ஆமீர் பிடித்து விழையாடவில்லையா பொன்னியை?

அண்ணாமலையான் said...

எனக்கு தெரியாத விஷயம் தெரிந்து கொண்டேன் நன்றி..

suvaiyaana suvai said...

புது விதமா இருக்கு!!!!!!!!!!

ஸாதிகா said...

அண்ணாமலையான் ,முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி!

ஸாதிகா said...

சுஸ்ரீ,பின்னூட்டத்திற்கு நன்றி.

ஸாதிகா said...

தங்கை அதிரா,முதலில் சாப்பிடுபவர்களைப்பார்க்க சாப்பிடாதவர்களுக்கு வியப்பாக,அறுவெறுப்பாகத்தான் இருக்கும்.இந்த பறவையின் இறைச்சி ஹலால் ஆக்கப்பட்டது.நேற்று இந்தப்பதிவைப்பார்த்துவிட்டு என் தங்கை துபையில் டிபார்ட்மெண்ட்ஸ்டோரில் புரோஷன் புட் ஆக விற்பனைக்கு வைத்து இருப்பதாக சொன்னார்.

SUFFIX said...

தகவல்கள் அருமை, கடைசியில் பறக்க விட்டது அதை விட அருமை.

ஸாதிகா said...

சகோதரர் ஷஃபி,
முதல்வருகைக்கும்,முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி.

செ.சரவணக்குமார் said...

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

சோனகன் said...

அருமையான பதிவு, இந்த பொன்னி குருவிக்கு மன்னு சல்வா என்றும் பெயர் இருப்பதாக இலங்கை நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன், காடை, கௌதாரி, கொக்கு, மடையான், காடை, சிறவி போன்று இதுவும் சில பகுதி மக்களின் விருப்பமான உணவுதான், இப்பொழுது அழிந்து வரும் பறவை இனமாக இது கருதப்பட்டு இதனை வேட்டையாட வனாத்துறையினர் தடை விதித்தும் உள்ளனர். இருந்தாலும் இதன் சுவை அலாதியானது தங்களின் பதிவு போலவே......

Julaiha Nazir said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஸாதிகா லாத்தா பொன்னந்தட்டான்(எங்கள் ஊரில் இதை இப்படிதான் அழைப்போம்) பற்றி எழுதி சின்ன வயசு நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள் உங்களை^போல நானும் அதன் உச்சந்தலை மயிரை பிடித்துக்கொண்டு பேயாடம்மா பேயாடு காட்டுல அரையில விட்டுடுவேன் கள்ளன் வந்து பிடித்துக்கொள்வான்னு அதை ஆடவிட்டு சந்தோஷபட்டதை நினைத்தால் இப்பொழுது ஏனோ மனசுவலிக்கிறது ஆனால் எங்கள் வீட்டில் 2நாளைக்குதான் அதை கையில் கொடுப்பார்கள் 3நால் அது அனைவரின் வயத்திலும் இருக்கும் ரொம்ப பாவம் இல்லையா ஆனால் இப்போழுது ஊருக்கு போகும் பொழுது ஆசைபட்டு பார்க்கலாம்னு கேட்டால் கூட ஊரில் இருப்பவர்களே பார்த்து பல வருஷம் ஆச்சு என்கிறார்கல் ஊரில் உள்ளான் மடையான்னு ஒன்ரைக்கூட வீட்டுவைப்பதில்லையோனு தோணுது ஆனால் ஒன்று உங்களின் பதிவை படித்துவிட்டு நான் என்னவோ என் சின்ன வயசுக்கு போஉவிட்டு வந்தது நிஜம் ரொம்ப நன்றி லாத்தா

Julaiha Nazir said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஸாதிகா லாத்தா பொன்னந்தட்டான்(எங்கள் ஊரில் இதை இப்படிதான் அழைப்போம்) பற்றி எழுதி சின்ன வயசு நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள் உங்களை^போல நானும் அதன் உச்சந்தலை மயிரை பிடித்துக்கொண்டு பேயாடம்மா பேயாடு காட்டுல அரையில விட்டுடுவேன் கள்ளன் வந்து பிடித்துக்கொள்வான்னு அதை ஆடவிட்டு சந்தோஷபட்டதை நினைத்தால் இப்பொழுது ஏனோ மனசுவலிக்கிறது ஆனால் எங்கள் வீட்டில் 2நாளைக்குதான் அதை கையில் கொடுப்பார்கள் 3நால் அது அனைவரின் வயத்திலும் இருக்கும் ரொம்ப பாவம் இல்லையா ஆனால் இப்போழுது ஊருக்கு போகும் பொழுது ஆசைபட்டு பார்க்கலாம்னு கேட்டால் கூட ஊரில் இருப்பவர்களே பார்த்து பல வருஷம் ஆச்சு என்கிறார்கல் ஊரில் உள்ளான் மடையான்னு ஒன்ரைக்கூட வீட்டுவைப்பதில்லையோனு தோணுது ஆனால் ஒன்று உங்களின் பதிவை படித்துவிட்டு நான் என்னவோ என் சின்ன வயசுக்கு போஉவிட்டு வந்தது நிஜம் ரொம்ப நன்றி லாத்தா

புகழன் said...

உங்கள் எல்லாப் பதிவையும் பார்த்தேன்
(பார்க்க மட்டும்தானா படிக்கவில்லையா? எனக் கேக்கப்படாது)

நன்றாக இருந்தது.

ஸாதிகா said...

நன்றி சோனகன்!
//காடை, கௌதாரி, கொக்கு, மடையான், காடை, சிறவி போன்று இதுவும்//வரிகள் மறந்து போன பறவை இனங்களை ஞாபகப்படுத்திவிட்டன.

ஸாதிகா said...

நன்றி ஜுலைஹா!நீங்கள் கூட பொன்னந்தட்டானை பேயாட்டி இருக்கின்றீர்களா?எல்லா ஊர்களிலும் உண்டு போலும்.

ஸாதிகா said...

புகழன்,முதல் வருகைக்கும்,பதிவுக்கும் நன்றி.தொடர்ந்து வாசியுங்கள்.

Jaleela Kamal said...

பொன்னி குருவி இப்ப தான் பார்க்கிறேன்.

ரொம்ப அருமையான இடுகை ஸாதிகா அக்கா

ஸாதிகா said...

சமையலில் அட்டகாசம் பண்ணும் சமையல் திலகத்திற்கே இப்போதுதான் பொன்னிக்குருவியைப்பற்றித்தெரிகின்றதா!!!

Jaleela Kamal said...

அட நிறைய விஷியம் பதிவர்கலின் பதிவு மூலமா தான் தெரிய வருது, ஸாதிக்கா அக்கா

ஸாதிகா said...

இவ்விடுகையில் இரண்டாம் முறையும் பின்னூட்டம்.மிக்க நன்றி ஜலி.

அண்ணாமலையான் said...

hi kindly visit my blog
thank u