December 8, 2009

கடந்து வந்த பாதை


தங்கை ஹுசைனம்மா அழைத்த தொடர் பதிவை ஏற்று இந்த பகிர்வு.
அறுசுவை தளத்தில் எழுதி வந்த எனக்கு பிளாக் பற்றி சமீபத்தில்தான் தெரிய வந்தது.தங்கை ஜலீலாதான் தனது பிளாக்கை பார்க்குமாறு லின்க் அனுப்பித்தந்தார்.பிற பிளாக்குகளை எப்படிப்பார்ப்பது என்றும் சொல்லித்தந்தார்.பிளாக்குகளைப்பார்வை இட்ட ஒரே நாளில் எனக்கும் பிளாக் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.பிளாக் உலகம் பற்றி 'அ' என்று கற்றுக்கொண்டு 'ஆ'என்று அடுத்து கற்றுக்கொள்ளும் முன்னரே அவசர,அவசரமாக பிளாக்கைத்தொடங்கி விட்டேன்.

தங்கை ஜலீலா கொடுத்த ஊக்கமும்,உதவியும்தான் என்னை தொடர்ந்து எழுத ஊக்குவித்தது.

பிளாக் உலகில் நுழைந்து பிறரது பிளாக்குகளை பார்த்தபொழுதுதான் எற்கனவே வேறு தளங்களில் பங்கேற்ற ஸ்நேகிதிகள் வலம் வந்ததை கண்ணுற்றேன்.

ஜலீலா,ஹுசைனம்மா,மலிக்கா,சுஸ்ரீ,விஜி,இலா,மேனகா,கீதா ஆச்சல்,ஹாஷினி,ஹைஷ் ,அம்மு,போன்றோர் பதிவுகளைப்பார்த்ததும் எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

இருந்தாலும் பிளாக் பற்றிய சந்தேகங்கள் நிறையவே உள்ளது.இன்னும் தெளிவு கிட்டவில்லை என்பதே உண்மை.கற்றது கை மண்ணளவு தான்.இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது.கற்றுக்கொள்ளும் ஆவலும் நிறையவே உள்ளது.பிளாக் பற்றி யாராவது கிளாஸ் எடுத்தால் அவசியம் தகவல் தாருங்கள். :-)

எனக்கு எழுத்து தாகம் இப்போது,நேற்று வந்ததல்ல.நான் பத்து வயது சிறுமியாக இருந்த பொழுதில் இருந்தே கதைகள் எழுதி,எழுதிய கதைகளை நானே திரும்ப,திரும்ப வாசித்து,மலை போல் குவிந்து போன பேப்பர் கற்றைகளை பெரிய பித்தளை டிரம்மில் போட்டு மொட்டை மாடியில் வைத்து கொளுத்திய அனுபவமும் உண்டு.அப்போதய என் கதைகளின் ஒரே வாசகி என் தங்கை.இப்பொழுதும் கூட "அநியாயத்திற்கு அத்தனை கதைகளையும் கொளுத்தி விட்டாயே "என்று இன்று வரை ஆதங்கப்படுவார்.

எனது எழுத்தார்வத்திற்கு நீரூற்றி,உரமிட்டு வளர்த்தவர் மரியாதைக்குறிய மறைந்த ஜமா அத்துல் உலமா பத்திரிகையின் ஆசிரியர் அல்லாமா.அபுல் ஹஸன் ஷாதலி சாஹிப் அவர்கள்.மாதாமாதம் அவரது பத்திரிக்கையில் எனது கட்டுரை வெளிவரச்செய்தார்.ஒரு மாதம் அனுப்பத்தவறினாலும் கடிதம் எழுதி கேட்டு விடுவார்.

இப்படியாக என் எழுத்துப்பயணம் ஆரம்பமாகி நர்கிஸ்,மலர்மதி,முஸ்லிம் முரசு,மங்கையர் மலர்,மங்கை போன்ற பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன்.இந்நேரத்தில் மலர் மதி ஆசிரியை என் அன்பு அக்கா அலிமா ஜவஹர் என்னை ஊக்குவித்து என் சிறுகதைகள்,தொடர்கதை போன்றவற்றை வெளியிட்டு எனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துத்தந்தார்.இதே போல் மங்கையர்மலர் ஆசிரியை மஞ்சுளா ரமேஷ் அவர்களும் என் படைப்புகளை வெளியிட்டு கடிதம் மூலம் என்னை ஊக்கப்படுத்தினார்.இந்நேரத்தில் என் கணவரும் என் எழுத்துக்கு நிறைய ஊக்கமும்,உதவியும் செய்தார்.

இந்த எழுத்தே என்னை ஈ.டி.ஏ குழுமத்தலைவர் அல்ஹாஜ்.பி.எஸ் அப்துர் ரஹ்மான் அவர்களின் குடும்பத்தினருக்கும்,எனக்குமான நட்பை ஏற்படுத்தியது.டாக்டர்.ரஹ்மதுன்னிஷா அப்துர்ரஹ்மான் அவர்களை ஒரு பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்து மூன்று பாகங்களாக வெளியிடச்செய்தேன்.

கீழை நகருக்கே மகுடம் சூட்டியது போல் அமைந்த கீழக்கரையில் பிரமாண்டமாக நடந்த மாபெரும்உலகத்தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பெண்கள் மாநாட்டில் என்னை வரவேற்புரை நிகழ்த்த அழைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நிகழ்வு.அம் மாநாட்டிலும்,அம் மாநாட்டைத்தொடர்ந்தும் திருவை அப்துர் ரஹ்மான்,ஆளூர் ஜலால்,நர்கீஸ் அனீஸ்பாத்திமா ,ஹிமானாசெய்யத்,பானு முகைதீன்,ச்வுந்தரா கைலாசம்,கமருன்னிஷா அப்துல்லா,அஜீஜ்ஸுன் நிஷா,நஃபீஷாகாலீம்,கம்பம் அலி,கவிக்கோ அப்துர்ரஹான் ,கவிகாமு ஷரீப்,கே.ஜெய்புன்னிஷா ,பாத்திமுத்து சித்தீக் ,தமிழம்மா ,நாதிரா கமால் ,சுமையா போன்ற பற்பலஅறிஞர்களின் அறிமுகம் ,அவர்களுடன் அளவளாவும் இனிய தருணமும் கிடைத்தது.சிலரின் நட்பு இன்னுமும் தொடர்கின்றது. கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வெல்ஃபேர் கமிட்டி உறுப்பினராக பங்கேற்கும் வாய்ப்பையும் தந்தது.

குழந்தைகள் பிறந்து எனக்கும்.எழுத்துலகிற்குமான பாலம் அறுபட்டுப்போனாலும்,பார்ப்பவர் எல்லாம் என்ன எழுதுவதே இல்லை என்று கேட்டாலும்,பார்க்கும் நேரமெல்லாம் டாக்டர் ரஹ்மதுன்னிஷா அப்துர்ரஹ்மான்,டாக்டர் கமலா ராகுல் போன்றோர் உட்பட என் நலம் விரும்பிகள் பலரும் "நம்ம சைட் எழுத்தாளரை மிஸ் பண்ணுகிறோமே?மறுபடி எப்ப ஸ்டார்ட் பண்ணப்போகின்றாய்"என்று கேட்கத்தவற மாட்டார்கள்.

இந்நேரத்தில் சற்றேனும் நேரம் கிடைக்காவிட்டாலும்,எனக்காக தன் படிப்பை ஒத்தி வைத்து விட்டு சற்று நேரம் அவ்வப்பொழுது வந்து உதவும் என் அருமை மகனாரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கின்றேன்.தமிழ் வாசிக்கத்தெரியாவிட்டாலும் சிரத்தையாக டிராயிங்க் வரைந்து கொண்டே என் பிளாக்கை நான் வாசிக்க கேட்டு கமண்ட் அடிப்பது எனக்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசு.

இப்பொழுது என் விரல்களில் பேனா நர்த்தனம் ஆடுவதை விட,கீ போர்டில் என் விரல்கள் நர்த்தனம் ஆடுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கின்றது.

40 comments:

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா, இவ்வளவு திறமையை அடக்கி இருப்பாக இவ்வளவு நாள் வைத்து இருந்ததை இயக்கமாக மாற்ற உதவிய அன்பு சகோதரி ஜலீலாவுக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன் இல்லை என்றால் இந்த பதிவை படித்து இருக்க முடியாதே.

அலலாஹ்வின் கருணையினால் இன்னும் மிக சிறப்பாக தங்களின் வலை பூக்கள் முழுவதுமாக மலர வேண்டிக் கொள்கிறேன்.

அன்பு சகோதரன்

ஸாதிகா said...

சகோதரர் ஹைஷ் நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும்,இன்னும் நிறையவே உள்ளது.தங்கள் வாழ்த்துக்களுக்கும்,பிரார்த்தனைக்கும் என் மனமார்ந்த நன்றி!

ஹுஸைனம்மா said...

அக்கா, நீங்க ஒரு எழுத்தாளர்னு தெரியும். ஆனா இவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியாது, மாஷா அல்லாஹ்!!

பத்திரிகைகளில் இதே பெயரில்தான் எழுதினீர்களா? நானும் வாசித்திருப்பேன் சிலவற்றை.

அறுசுவையில் நீங்கள் என் எழுத்து நடையைப் பாராட்டியது பெரிய ஊக்கமாக அமைந்தது எனக்கு.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நீங்க இவ்வளவோ பெரிய ஆளா, எனக்கு உங்கள் கிட்ட நிற்கவே பயமா இருக்கே?

ஸாதிகா அக்கா நான் உங்களுக்கு சொல்லி கொடுத்ததென்னவோ உண்மை தான் ஆனால் நானும் ஒரு அரை குறை தான் நான் சொன்னதும் டக்கு டக்குன்னு போட்டீங்க பாருக்னக்ள் அதான் உங்கள் திறமை.பிளாக் பற்றி சொல்கிறேன்.
டெம்ளேட் கூட மாற்றல ஏதாவது மாறிடுமோன்னு பயந்து தான்.

டாக்டர் ரஹ்மத்துன்னிசா , ஷிபா நர்சிங் ஹோம் எதிரில் குழந்தை பேறு கிளினிக் வைத்து இருந்தார்களே அவர்களா?

.

ஏன் கதைகளை எறித்தீர்கள்.

இது போல வரம் எல்லாம் சிலருக்கு தான் கிடைக்கும். என்னால் இப்ப நினைத்தால் கூட ஒரு சின்ன கதை கூட எழுத தெரியாது.


உங்கள் எழுத்து இன்னும் எல்லோரையும் சென்றடையனும். ஏன் எழுதுவதை நிருத்திவிட்டீர்கள்

Prathap Kumar S. said...

அடேங்கப்பா... பெரிய ஆளுதான் போங்க...
உங்களை எழுதக்கூப்பிட்ட ஹுசைனம்மா என்னையும் கூப்பிட்டிருக்காங்க... அதை நினைச்சு பெருமை படறதா... ஹூசைனம்மாவை நினைச்சு பரிதாபப்படறதான்னு தெரில :-)

Asiya Omar said...

ஸாதிகா உங்கள் நட்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.எல்லோரிடமும் சொல்லிக் கொள்வேன் எனக்கு ஒரு பெரிய பெண் எழுத்தாளர் தோழி இருக்கிறார் என்று.அபுதாபியில் இருக்கும் பொழுது நாம் வாய்ஸ் சேட் பண்ணும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பார்க்கிறேன்.இன்னும் என்னன்னவோ எழுத ஆசை.தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

சீமான்கனி said...

நீங்கள் கடந்து வந்த பாதை எனக்கு பிரமிப்பாய் இருக்கு அக்கா...
இன்ஷால்லாஹ்...பதிவுலகிலும் உங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகள்...தொடர்வோம்...
''எல்லாப்புகழும் இறைவனுக்கே''

http://sumazla.blogspot.com/இங்கே
போய் பாருங்கள் உங்களுக்கு உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்...

டெக்னிக்கல்:
டிப்ஸ்&ட்ரிக்ஸ்-என்பதில் சொடுக்கவும்...

சோனகன் said...

1980 முதல் 1990 வரையில் ஸாதிக்கா ஹஸனா ஹாஜா எனற பெயரில் நீங்கள் எழுத்துலகில், குறிப்பாக இஸ்லாமிய இதழ்களில் பிரகாசித்த காலங்கள் என் மனதில் இன்றளவும் நீடித்து நிலைத்து கொண்டிருக்கிறது, தாங்களின் ஏராளமான சிறுகதைகளை அந்த தருணங்களில் எனது இளமையில் வாசித்த அணுபவம் பெற்றவன் என்ற முறையில் தொடர்பு விடுபட்ட எழுத்துலக காலங்கள் துரதிஷ்டவசமானதே....

எனக்கு 2004 இல் அறிமுகமான இந்த பிளாக்கில் மிகக் குறைந்த நபர்களே தமிழில் எழுதி கொண்டிருந்தனர், அப்பொழுது மிக கடினமாகவும் இருந்தது.மறைந்த சாகரன், யூனிகோடு உமர், மற்றும் பலரின் பெரும் முயற்சியால் தமிழ் பிளாக்கர் மிக எழிதானதாக ஆகிவிட்டது, சமீப காலங்களில் தங்களின் ஆக்கங்கள் புதுணர்ச்சி பெற்று முதல் தர பதிவுலக வரிசையில் முண்ணெடுத்து செலவதை உணர்கிறேன், இச் சமயம் தங்களின் பிளாக்கில் தமிழ் மனம் பதிவு பட்டையை நிறுவி உங்களின் பதிவுகளை தமிழ் மனம் டாட் காமில் நிறுவ வேன்டியது அவசியமான ஒன்று. இதன் மூலம் தாங்களின் ஆக்கங்கள் உலகமெங்கும் இருக்கும் தமிழ மக்களுக்கு எளிதில் சென்றடயும் வாய்ப்புள்ளது, விபரங்களுக்கு இந்த லின்கில் செல்லவும்:http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

தாங்களின் எழுத்துலக நண்பர் டாகடர் ஹிமான செய்யதின் பதிவுகள் அனைதும் சித்தார் கோட்டை வலைத்தளத்தின் மூலம் பரப்பப்பட்டது போல் உங்களின் ஆக்கங்கள் அனைத்தும் தனியான ஒரு வல தளத்திலோ அல்லது பிளாக்கிலே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் ஆவல். இந்த லின்க்கையும் பார்க்கவும்: http://chittarkottai.com/himana/

Julaiha Nazir said...

ஸாதிகா லாத்தா மாஷாஅல்லாஹ் நீங்க எழுத்தாளரா தெரியவே தெரியாது நர்கிஸ்ல என்ன பெயரில் எழுதுவீர்கள் உங்களின் ழெஉத்து நடையை ரசித்து படித்துக்கொண்டே வந்தேன் இன்னும் எழுதுங்கள் கதையையும் தொடருங்கள் படிக்க நாங்க தயாராகி விட்டோம் உங்களின் எழுத்துக்கள் அனைத்தையிம் இதன் மூலம் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்

http://nahasi.blogspot.com/

angel said...

u r really great and i dont know what to say more than this

Unknown said...

//தமிழ் வாசிக்கத்தெரியாவிட்டாலும் சிரத்தையாக டிராயிங்க் வரைந்து கொண்டே என் பிளாக்கை நான் வாசிக்க கேட்டு கமண்ட் அடிப்பது எனக்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசு.//இத..இதத்தான் பெற்ற மனம் பித்து என்று சொல்லுவார்களோ?
//இப்பொழுது என் விரல்களில் பேனா நர்த்தனம் ஆடுவதை விட,கீ போர்டில் என் விரல்கள் நர்த்தனம் ஆடுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கின்றது.//
வரிகளில் கவிதை நர்த்தனம் ஆடுகிறது.வாழ்த்துக்கள்.

athira said...

ஸாதிகா அக்கா, ஸாதிகா அக்கா என் பொன்னான கருத்தையும் இங்கே பதிப்பதற்காக முதன் முதலில் உங்கள் புளொக்கில் காலடி எடுத்து வைக்கிறேன்.

உங்கள் புளொக்கின் முகப்பும் அதன் கலரும் என்னைக் கொள்ளை கொள்கிறது, மிக நன்றாக இருக்கு.

உங்களைப்பற்றி அறிந்ததில் மிக மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம்.

தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

நேரமுள்ளபோது வந்து போகிறேன்.

அன்புத் தங்கை அதிரா.

athira said...

ஸாதிகா அக்கா, ஸாதிகா அக்கா என் பொன்னான கருத்தையும் இங்கே பதிப்பதற்காக முதன் முதலில் உங்கள் புளொக்கில் காலடி எடுத்து வைக்கிறேன்.

உங்கள் புளொக்கின் முகப்பும் அதன் கலரும் என்னைக் கொள்ளை கொள்கிறது, மிக நன்றாக இருக்கு.

உங்களைப்பற்றி அறிந்ததில் மிக மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம்.

தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

நேரமுள்ளபோது வந்து போகிறேன்.

அன்புத் தங்கை அதிரா.

suvaiyaana suvai said...

வாழ்த்துக்கள்!! ஸாதிகா அக்கா உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி இவ்வளவு திறமை இருக்கும் உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்!! ஏன் தொடர்கதை எழுதகூடாது? உங்கள் எழுத்து இன்னும் மேலும் மேலும் வ‌ள‌ர‌ இந்த‌ த‌ங்கையின் வாழ்த்துக்கள்
//இப்பொழுது என் விரல்களில் பேனா நர்த்தனம் ஆடுவதை விட,கீ போர்டில் என் விரல்கள் நர்த்தனம் ஆடுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கின்றது//

இது ரெம்ப‌ ந‌ல்லா இருக்கு.

Menaga Sathia said...

பத்திரிக்கையில் எல்லாம் எழுதிருக்கிங்கன்னா உண்மையிலேயே நீங்க பெரிய எழுத்தாளர் தான் அக்கா.உங்கள் படைப்புகளை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.வாழ்த்துக்கள் அக்கா!!

Malar Gandhi said...

Dear,

I know, you're a Great cook and I adore your blog.

Just for a change...I am hosting a funny Event' in my site all about Kitchen Mishaps!

Please check it out:

http://www.kitchentantra.com/2009/12/kitchen-mishaps-event-announcement.html

Would you like to participate?

I will greatly appreciate your contribution.

Thanks
Malar Gandhi
www.kitchentantra.com

நட்புடன் ஜமால் said...

அழகு ஆட்டம் சகோதரி

தட்டச்சில் இன்னும் ஆடுங்கள் ...

ஸாதிகா said...

பின்னூட்டமிட்ட ஹுசைனம்மா நன்றி.பத்திரிகையில் இதே பெயர் தவிர ஸானா,உம்மு ஆயிஷா என்ற பெயரிலும் எழுதினேன்.

ஸாதிகா said...

ஜலீலா,டாக்டர் ரஹ்மத்துன்னிஷா துபையில் வேலை செய்தார்கள்.கீழை வரும் பொழுதெல்லாம் தான் சேர்மனாக இருக்கும் யூசுப் சுலைஹா மருத்துவ மனையில் அவரது சேவை இருக்கும்.சென்னையில் தனியாக கிளினிக் வைத்து இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

ஸாதிகா said...

நாஞ்சில் பிரதாப்,என்னங்க நீங்க..?என்னைப்போய் பெரிய ஆள் என்றுசொல்லிக்கொண்டு!ந்ம் பிளாக் உலகில் எத்தனை ஜாம்பவான்கள் இருக்கின்றார்கள்.அவர்களிடம் இருந்தெல்லாம் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது.கண்டிப்பாக ஹுசைனம்மாவின் அழைப்புக்கு பெருமைப்படுங்கள்.உங்கள் வரலாறையும் வாசிக்க ஆர்வமாகி விட்டோம்

ஸாதிகா said...

தோழி ஆசியா,உங்கள் அன்புக்குநன்றி.

ஸாதிகா said...

சோனகன்,ஆலோசனைக்கும்,அறிவுரைக்கும் நன்றி.டாக்டர் செய்யத் இப்றாஹீம் அண்ணனின் தள லின்க்கை அனுப்பித்தந்தமைக்கு நன்றி.எழுதி வந்த காலங்களில் சித்தார்கோட்டையில் அவரது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வாதங்கள் புரிந்த காலங்கள் எல்லாம் இப்பொழுது நினைவுக்கு வருகின்றது.அவரது மனைவி ஹிமானா அக்காவின் அன்பை நினைக்கும் பொழுது இப்பொழுதும் நெகிழ்ச்சியாக உள்ளது.இப்பொழுது மலேஷியாவில் செட்டில் ஆகி விட்டார்கள்.

ஸாதிகா said...

சகோதரர் சீமான்கனி,லின்க் கொடுத்தமைக்கு நன்றி.அவசியம் உபயோகப்படுத்திக்கொள்கின்றேன்.

ஸாதிகா said...

ஜுலைஹா,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஏஞ்சல்,உங்கள் பின்னூட்டத்திற்கு அன்புக்கு நன்றி.

ஸாதிகா said...

செய்யத் நன்றி.உண்மைதான் இதைத்தான் பெற்ற மனம் என்று சொல்லுவார்கள்.இதோ எனக்கு பின்னால் அமர்ந்து கொண்டு நாளை நடக்கவிருக்கும் இண்டர்னல் எக்ஷாம்க்காக பிரிப்பேர் செய்து கொண்டு கமண்ட்டுகளை என்னிடம் படித்துக்காட்டசொல்லிக்கொண்டிருக்கின்றார் என்மகன்.

ஸாதிகா said...

அதிரா,வந்துவிட்டீர்களா?நன்றி .பிறர் நலம் பேணும் நீங்கள் தன் நலம் எப்பொழுது பேணப்போகின்றீர்கள்?

ஸாதிகா said...

சுஸ்ரீ,பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.உங்கள் அனைவரது பின்னூட்டங்களும் எனக்கு மிகவுமே உற்சாகத்தைத்தருகின்றது.கதை எழுத ஆரம்பித்து விடலாமா என்று ஆவலும் தோன்றுகின்றது.இப்பொழுதே கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் செலவுசெய்கின்றேன்.கதை எழுத ஆரம்பித்தேனானால் இன்னும் அதிகம் நேரம் செலவாகுமே என்று பயமும் இருக்கின்றது.பார்ப்போம் ஆர்வம்,பயம் இதில் எது ஜெயிக்கின்றது என்று.

ஸாதிகா said...

மேனகா,நன்றி.பத்திரிகையில் எழுதுவதென்பது பெரிய விஷயமல்ல.நீங்கள் கூட வகைவகையான சமையல் குறிப்புகளை பிளாக்கில் போடுகின்றீர்கள்.இதை பத்திரிகைகளுக்கு அனுப்பிவையுங்கள்.அனுப்பியதில் பத்து நிராகரிக்கப்பட்டால் ஒன்று கண்டிப்பாக பிரசுரமாகும்.விடாமுயற்சி ஒன்றே போதும்.

ஸாதிகா said...

மலர் காந்தி நன்றி.உங்கள் பிளாக்கையும் பார்த்தேன்.புதுமையான உத்தி.அவசியம் பங்களிக்கின்றேன்.

ஸாதிகா said...

சகோதரர் ஜமால்,பின்னூட்டத்திற்கு நன்றி.தங்களது பிளாக்'குழந்தை ஹாஜர்'நான் ஆர்வமுடன் பார்க்கும் பிளாக்குகளில் ஒன்று.செப்டம்பர் மாதத்திற்கு அப்புறம் புதிய படங்கள் பதியவில்லையே???

Unknown said...

WoW.....

ஸாதிகா said...

முதல் வருகைக்கும் முதல் பதிவுக்கும் நன்றி MAT.பின்னூட்டத்தை ஒற்றை வரியில் முடித்து விட்டீர்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

அடேங்கப்பா.....உங்களை தாமதமாகத் தெரிந்துக் கொண்டிருக்கிறேன்...எனது பழைய நினைவுகளை உங்களின் அறிமுகம் தந்திருக்கிறது.
1985 சமயங்களில் நர்கீஸ் இதழ்களில் அவ்வபோது நானும் எழுதிவந்துள்ளேன்...மலர்மதியில் சிறுகதைகள் எழுதி உள்ளேன்....
நீங்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும்....வலைதளம் உங்கள் எழுத்துக்கு பாலமாக இருக்கும்...வாழ்த்துக்கள்..!

ஸாதிகா said...

சகோதரர் இஸ்மத் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.நான் எழுதி வந்த கால கட்டத்தில் உங்கள் ஆக்கங்களை நான் நிறைய படித்து இருக்கின்றேன் பத்திரிகைகளில்.அதே பெயரில் வலைப்பூவில் உங்கள் ஆக்கங்களைக்கண்டதும் இன்னும் ஆர்வத்துடன் உங்கள் பதிவுகளைப்படித்துவருகின்றேன்.

புல்லாங்குழல் said...

மனித சமுதாயம் உயர்வு பெறும் நோக்கோடு நீங்கள் அதகமதிகம் எழுத இறைவனை இறைஞ்சுகின்றேன்.

பேரொழியாகிய பரம் பொருளே
பேரின்ப பாக்கிய மீதருளே
பேதம் நீங்கிய மனதினுள்ளே
பேரருள் புரிவாய் யா அல்லாஹ்

உங்கள் தளத்தில் வாசித்த வரிகளே உங்களுக்கு துவாவாக கேட்கின்றேன்.
வஸ்ஸலாம்.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோதரர் நூருல் அமீன்.உங்கள் வரிகள் கண்டு மிக்க மகிழ்ச்சி.உங்கள் ஹக்கிலும் இந்த சகோதரி துஆ செய்கின்றேன்.

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

mohamedali jinnah said...

Please visit
http://nidurseasons.blogspot.in/2012/03/blog-post_892.html
சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
“Allâh will reward you [with] goodness.”
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான நல் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன் .
அன்புடன் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .

இப்னு ஹம்துன் said...

நன்றாக நினைவிருக்கிறது லாத்தா.
80களில் ஸாதிக்கா ஹஸனா ஹாஜா என்கிற பெயரில் எழுதிய உங்கள் எழுத்துகளை வாசித்திருக்கிறேன்.

உங்களைப் போலவே, எனக்கும் ஹிமானா சையத் அவர்கள் அன்பு அண்ணனாக வாய்த்தார். எழுதவும் தூண்டினார். நல்ல நினைவலைகள்.