December 6, 2009

கதா பாத்திரங்கள் - 3

உஸ்மான்பாய்
"காப்பி..காப்பி..சாய்..சாய்.."சூடா..இட்லி,சப்பாத்தி,இடியாப்பம்,பாரோட்டா"
"கொஞ்சம் நவரு சார்.."
"அட..ஸ்பீடா போமே"
"பார்த்து..பார்த்து.."
இதற்கிடையே ஸ்பீக்கரில் பெண்குரல் கொஞ்சியது.
"வண்டி எண் 6713 ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல் பட்டு,விழுப்புரம்,மானாமதுரை,ராமனாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது பிளாட் பாரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்"
அறிவிப்பு ஒலித்ததும் கைகளில் தூக்கமுடியாமல் நெய்,பால்பவுடர்,பால்கோவா,வெண்ணெய் இத்யாதிகளை தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக தன் கம்பார்ட்மெண்ட்டுக்கு ஓடி வந்தார் உஸ்மான் பாய்.

மூச்சிரைக்க கம்பார்ட்மெண்ட்டில் ஏறி அமர்ந்தவரைப்பார்த்து எதிரில் அமர்ந்த கலீல் நக்கலாக சிரித்தார்.
"என்ன உஸ்மான்..துபையில் ஷாப்பிங்க்,போதாதற்கு சென்னையில் 2 நாளாக ரூம் போட்டுக்கொண்டு ஷாப்பிங்க் இது போதாதா?இப்ப ரயில்வே ஸ்டேஷனிலும் விட்டு வைக்கவில்லையே"
"அட..என்னப்பா நீயி..பொண்டாட்டி,புள்ளைங்க எல்லோரையும் விட்டுட்டு மாசக்கணக்கா அயல்நாட்டிலே இருந்துகொண்டு கை நிறைய சம்பாதிக்கறோம்.குடும்பத்துக்கு செய்யாமே வேறு என்ன செய்ய?"
லோவர் பர்த்துக்கு அடியில் திணித்து வைத்து இருந்தபெரிய பெரிய சூட்கேஸ்கள்,பத்திரமாக பேக் செய்த அட்டைப்பெட்டிகளை கண்களால்எண்ண ஆரம்பித்தார் கலீல்.

உஸ்மானின் மொபைல் அடித்து எண்ணுவதை குழம்ப செய்தது கலீலுக்கு.
"யாரு..காமேஷ்வரனா..என்னது..இன்னும் பஸ்ஸில் பெட்டி போடவில்லையா?என்னபபா இது..பஸ்காரங்க இடம் இல்லை என்றுவிட்டார்களா..சரிசரி..நாளைக்கு அனுப்பிடுவாங்களாமா?நல்லது கொஞ்சம் ஃபாலோ பண்ணிக்கப்பா"
"என்ன பாய்..பஸ்ஸில் வேறு லக்கேஜா.."வியப்புத்தாளவில்லை கலீலுக்கு.
"அட..ராம்னாட்டில் அஞ்சு நிமிஷம் நிறுத்தறான்.அதற்குள்ளே எல்லா லக்கேஜையும் இறக்குவதற்குள் போதும்,போதும் என்றுஆகி விடுதுப்பா"
"அது சரி"
"முக்கியமான சாமான்களை கையோட கொண்டு வந்துட்டேன்.இன்னொரு என்பது கிலோ கார்கோவில் போட்டு இருக்கேன்"
"பாய் எனக்கு ஒரு சந்தேகம்,துபையில் சம்பாதித்து பெட்டி,பெட்டியா சாமானை இறக்குறீங்க..சரி..அது பத்தலேன்னு மெட்ராஸிலே ரூம் போட்டு பாரீஸ் கார்னரில் இருந்து தாம்பரம் வரை காலையிலே இருந்து ராத்திரி வரை ஷாப்பிங்க்..அதுவும் போதாதற்கு இப்பஷாப்பிங்க் ஸ்டேஷனிலும் தொடருது.உங்க லாஜிக்கே புரிய மாட்டேன்கிறது பாய்"
"அட போய்யா..இதுலே என்ன லாஜிக்?பொண்டாட்டி,புள்ளைங்க சந்தோஷமா இருக்கணும் அதுதானே இந்த பாடு படுறோம்"

செங்கல்பட்டில் வண்டி நின்றபொழுது இறங்கி பெரிய பாலித்தீன் கவர் நிறைய சாமான்களுடன் ஏறி அமர்ந்தார்.
பண்ருட்டியில் பலாசுளைகள் பாலித்தீன் பைகளில் பாக் செய்து விற்றதை வாங்கி அருகில் இருந்த ஜூட்பேக்கில் திணித்தவர் "சின்னவனுக்கு பலாப்பழம் என்றால் கொள்ளைப்பிரியம்"என்றார்.
விழுப்புரத்தில் விற்ற எள்ளு மிட்டாய்,கடலை மிட்டாய் பாக்கட்டுகளை அரை டஜனுக்கும் குறைவில்லாமல் வாங்கிக்கொண்டார்.
"பாருங்க கலீல்..நம்ம வீட்டம்மாவுக்கு இந்த எள்ளுமிட்டாய்,கடலைமிட்டாய்ன்னா கொள்ளைப்பிரியம்"
"அது சரி"
அதிகாலையிலேயே கூவி விற்ற கொய்யாப்பழங்களை மானாமதுரையில் வாங்கும் உஸ்மான் பாயை நினைக்கையில் கலீலுக்கு வியப்பு கலந்த எரிச்சலாக இருந்தது.
ஒரு வழியாக வண்டி ராமனாதபுரத்தில் நின்றதும் அவரை ரிஸீவ் பண்ண வந்திருந்த உஸ்மானின் மச்சினர் ஓடோடி வந்தார்.
"கலீல் பாய் எதற்கு வீணாக டாக்ஸி எடுக்கப்போறீங்க..ஸ்கார்பியோ வந்திருக்கு..என் கூடவே வந்துடுங்க"
காரின் பின்புறம்,முன்புறம் மேலே என்று பெட்டிகளை ,அடுக்கி,திணித்து காரில் ஏறி அமர்ந்தனர்.
"மச்சான்..வண்டியை திருப்புங்க"
"ஏன் மச்சான்"
"பேக்கரியில் போய் சூடா சாயா குடிச்சுட்டு அப்படியே ரெண்டு கிலோ மக்ரூன் வாங்கிட்டு போகலாம்.நம்ம தவ்லத்துக்கு ரொம்ப பிடிக்கும்."
கலீலுக்கு அலுப்பு தாங்கவில்லை.
மக்ரூன் பார்சலுடன் காரில் ஏறிய மச்சினர்"மச்சான்..ஐ போன் வாங்கிட்டு வாங்கன்னு மெசேஜ் பண்ணிணேனே?"
"வாங்காமல் வருவேனா மச்சான்.அப்படியே உங்கள் பையனுக்கு பிளே ஸ்டேஷன் வாங்கிட்டு வந்திருக்கோம்"
மச்சினருக்கு வாயெல்லாம் பல்.

சற்று நேரத்தில் காட்சி மாறுகின்றது.
உஸ்மானின் ரத்தங்களும்,பந்தங்களும் சுற்றி நிற்க உஸ்மான் மனதெல்லாம் பூரிப்புடன் ஒவ்வொரிடமும் அனுசரனையாக அளாவளாவிக்கொண்டிருந்தார்.
"வாப்பா..லேப்டாப் கேட்டேனே"
"வாப்பா..பாடிஷாப் செண்ட் கேட்டேனே"
"மாமா..எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க"
"காக்கா..பிரேரா கார்டின் ஷர்ட் சேல் போட்டானா?"
"மச்சான்..ஜினோ சேலை நான் கேட்ட கலரில் கிடைச்சுதா?"
"சாச்சா..எலக்ட்ரானிக் வாட்ச் வாங்கிட்டு வந்தீங்களா?"
"உஸ்மான் பாதாம் பருப்பும்,பிஸ்தா பருப்பும் வாங்கிட்டு வந்தியாப்பா"
"கோனிங்க் வேர் செட் கேட்டு இருந்தேனே?"
"லூலூ செண்டரில் டோஃபல் காடாய் நல்லா பெரிசா கிடச்சுதா?"
"பெரியப்பா..டெஸர்ட் நக்கட்ஸ் சாக்லேட் எனக்கு ரொம்ப பிடிக்குமே.அடுத்த முறை வாங்கிட்டு வர்ரேனு சொன்னிங்களே"
அனைவருக்கும் சலிக்காமல் இன்முகத்துடன் பதில் சொன்னார் உஸ்மான்பாய்.

இதெல்லாம் ஓய்ந்து மதியம் மனைவி படைத்த அறுசுவை விருந்தை மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு படுக்கையில் சாய்ந்திருந்த பொழுது இன் முகத்துடன் வந்த மனைவியிடம்
"தவ்லத்ம்மா..நான் உனக்கு வாங்கிட்டு வந்த நகைகள் பிடிச்சிருக்கா?
ஆர்வம் மேலிட கேட்டார்.
"வளையல் இன்னும் கொஞ்சம் வெயிட்டா வாங்கி இருக்கலாம் மச்சான்"
"நெக்லேஸ்?"
"அது கூட ஆண்ட்டிக்கில் வாங்கி இருந்தால் நன்றாக இருக்கும்.சரி பரவா இல்லை.அடுத்த முறை வரும் பொழுது............................."



18 comments:

Unknown said...

யம்மா....

நாஸியா said...

Wow maasha Allah,.. You have an amaznig knack of writing.. I really enjoyed reading this..

ஹுஸைனம்மா said...

அக்கா,

நிதர்சனமான உண்மைகள். பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஹுஸைனம்மா said...

அண்ணே, உங்களைத் தொடர் பதிவு எழுதச் சொல்லியிருக்கேன் இங்கே.

மத்தவங்களை எதிர்பாக்காம நீங்க எழுதிடுங்க அக்கா, சரியா?

அக்கா, உங்க மெயில் ஐ.டி. தர முடியுமா? என் ஐ.டி. “hussainamma@gmail.com”

ஹைஷ்126 said...

முதல் தடவை உங்களின் கதையை படிக்கிறேன். சூப்பர். மீண்டும் வர தூண்டுகிறது.

வாழ்க வளமுடன்
அன்பு சகோதரன்

suvaiyaana suvai said...

ரெம்ப அருமை!!

இப்ப இது தான் உண்மை!!

இலா said...

Wow... The last line is making me feel nauseated... I just corelate this with god's blessings. How many of us are happy with what we get? Truly touching ..

Asiya Omar said...

ஸாதிகா தினமும் இரண்டு முன்று முறையாவது உங்கள் ப்ளாக் பக்கம் வருவேன்,எப்பல்லாம் அறுசுவையை ஓப்பன் பண்ணுகிறேனோ அப்பல்லாம் உங்களோடதையும் ஏதாவது இடுகை இருக்கான்னு பார்ப்பேன்,இன்று என்னை ஏமாற்றலை.நிறைய உஸ்மான் பாயை நேரில் பார்த்த அனுபவம் உண்டு,அதனை நீங்கள் எழுதி வாசிக்கும் பொழுது ரொம்ப டச்சிங்கா இருந்தது.

ஸாதிகா said...

செய்யத் சார்..ஏன் இந்த அலறு அலறுகின்றீர்கள்..?நன்றி பின்னூட்டத்திற்கு.

நாஸியா,மறுமொழிக்கு நன்றி.பதிவு உங்களை என் ஜாய் பண்ண வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

ஹுசைனம்மா,பின்னூட்டத்திற்கு நன்றி.நான் எழுதும் இந்த கதாபாத்திரங்கள் நான் ச்ந்திக்கும் நிஜமான ஆசாமிகள் தான்.உண்மை 10 சதவிகிதம் என்றால் என் கற்பனை 90 சதவிகிதம்.யாரு என்றெல்லாம் கேட்டுவிடக்கூடாது.

ஹைஷ் சார்,மறுமொழிக்கு மிக்க நன்றி.தொடர்ந்து வாசியுங்கள்.


சுஸ்ரீ,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.இதே போல் நிறைய நடக்கின்றதுதான்.

இலா,மிக்க நன்றி.மனதை தொட்டு விட்டது என்ற வரிகள் என் மனதையும் தொட்டுவிட்டது.அன்று போனில் ஒரு சுவாரஸ்யமான பிளாக்கர் என்று குறிப்பிட்டு சொன்னீர்களே.அவசியம் அந்த லின்க் அனுப்பி வையுங்கள்

ஸாதிகா said...

தவறாமல் வந்து கருத்து தெரிவித்துக்கொண்டு இருப்பதற்கு மிக்க நன்றி தோழி.

கிளியனூர் இஸ்மத் said...

சகோதரி ஸாதிகா அருமையான கதை வாழ்த்துக்கள்.
உஸ்மான் பாய் எத்தனைமுறை பயணம் வந்தாலும் அலுப்பில்லாமல் வாங்கி வருவார்.
அவர் வாங்கிவருவது பொருட்கள் அல்ல. அன்பு பண்பு பாசம் நேசம்.

ஸாதிகா said...

என் அழைப்பை ஏற்று என் வலைப்பூவிற்கு வருகை தந்த சகோதரர் கிளியனூர் இஸ்மத அவர்களுக்கு நன்றி. //உஸ்மான் பாய் எத்தனைமுறை பயணம் வந்தாலும் அலுப்பில்லாமல் வாங்கி வருவார்.
அவர் வாங்கிவருவது பொருட்கள் அல்ல. அன்பு பண்பு பாசம் நேசம்.//வரிகள் உங்கள் பரந்த மனப்பான்மையைக்காட்டுகின்றது.

Jaleela Kamal said...

உஸ்மான் பாயோட பாசம் ரொம்ப அதிகம், இது போல உலகத்தில் இன்னும் நிறைய உஸ்மான் பாய்கள் இருக்கிறார்கள்.

இத பற்றி நானும் நிறைய எழுதனும் என்று இருக்கேன்.


இப்ப நடக்கும் நடப்பை அப்படியே எழுதி இருக்கீங்க ஸாதிகா அக்கா.

Menaga Sathia said...

சூப்பர் போங்கக்கா கலக்கிட்டீங்க.எப்படி இப்படிலாம்....

உஸ்மான் பாயை நேரில் பார்த்தமாதிரி இருக்கு உங்க பதிவு..

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜலீலா

ஸாதிகா said...

என் பதிவு உங்களுக்கு நேரில் பார்த்ததைப்போல் இருந்ததா?மிக்க மகிழ்ச்சி,நன்றி மேனகா!

Vijiskitchencreations said...

அக்கா இப்ப தான் படிக்க தொடங்கியுள்ளேன். படித்ததும் வந்து சொல்கிறேன்.

ஸாதிகா said...

விஜி,ம்ம்..படிங்க..படிங்க..படிச்சிகிட்டே இருங்க.