November 7, 2009

பிடித்த பத்து ..பிடிக்காத பத்து..


இத்தொடரை எழுத அழைத்த தங்கை மேனகாவிற்கு நன்றி.

நிறம்
*****
பிடித்த நிறம் - இளநீலம்
பிடிக்காத நிறம் - கருப்பு

அரசியல்வாதி
***************
பிடித்தவர் - ஜெயலலிதா(எதிர் நீச்சல் துணிச்சலுக்காக)
பிடிக்காதவர் - வைகோ(தடாலடியாக அலுப்பில்லாமல் கட்சி மாறுகின்றாரே)

உணவு
********
பிடித்த உணவு-பிரியாணி
பிடிக்காத உணவு - மீன்

எழுத்தாளர்
***********
பிடித்த எழுத்தாளர் - தேவிபாலா
பிடிக்காத எழுத்தாளர் - ரமணி சந்திரன்(ஒரே மாதிரி எழுத்துநடை இருப்பதால்)

பாடகர்
********
பிடித்தபாடகர் - கே ஜே யேசுதாஸ்(மனைவி அமைவதெல்லாம்)
பிடிக்காத பாடகர் - சொல்லத்தெரியவில்லை

பாடல்
*******
பிடித்த பாடல் - காதோடுதான் நான் பேசுவேன்
பிடிக்காத பாடல் - சமீபத்தில் வருகின்ற டப்பாங்குத்து பாடல்கள்(உ - ம்)எக்ஸ்க்யூஸ்மீ மிஸ்டர் கந்த சாமி)

பூ
**
பிடித்தது - மல்லிகை
பிடிக்காதது - கனகாம்பரம்

சுற்றுலாதலம்
***************
பிடித்தது - பெங்களூர்
பிடிக்காதது - குற்றாலம்

நட்பில்
********
பிடித்தது - எதிர்பார்ப்பில்லாத நட்பு
பிடிக்காதது - எதிர்பார்ப்புடன் கூடிய நட்பு

பானம்
*******
பிடித்த பானம் - குளிரூட்டப்பட்ட ஜூஸ்வகைகள்

பிடிக்காதது - டீ


இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்


நான் அழைக்கும் பதிவர்கள்.

தம்பி - சோனகன்
தங்கை - ஜலீலா

14 comments:

ஹுஸைனம்மா said...

அக்கா,

நீங்களும் எழுதிட்டீங்களா? நல்லது.

அப்புறம் கரும்பு ஜூஸ் செய்திட்டேன். கரும்பை தோல் எடுத்து, நல்லா பொடியா வெட்டி, இஞ்சியுடன் மிக்ஸியில் அடித்துப் பின் பிழிந்தெடுத்தால் ஜூஸ் ரெடி.

நாஸியா said...

எனக்கும் குற்றாலம் புடிக்காம போச்சு.. சென்னை கூவாத விட மோசமா பராமரிக்குறாங்க.. ரொம்ப மோசம்! :(

ஸாதிகா said...

கரும்பு ஜூஸ் ரெஸிப்பிதந்தமைக்கு நன்றி.ஹுசைனம்மாவுக்கு வரும் இப்படி புதுபுது ஐடியாக்களை பிளாக்கிலோ,அறுசுவையிலோ போடலாமே?

ஸாதிகா said...

உண்மைதான் நாஸியா.அசுத்தம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கோர் முன்னிலையில் குளிப்பதென்பது எனக்கு உடன் படாத விஷயம்.

Unknown said...

நட்பில் பிடித்தது எதிராபாராமல் இருக்கும் ந்ட்பு,பிடிக்காதது எதிர்பார்ப்புடன் கூடிய நட்பு..சூப்பரா சொல்லிட்டீங்க..!

அன்புடன் மலிக்கா said...

ஸாதிக்காக்கா, சூப்பர்

நாங்களும் போட்டுயிருக்கோமுல்ல வந்து பாருங்க.

http://niroodai.blogspot.com/

உங்கள் தோழி கிருத்திகா said...

பிடித்தபாடகர் - கே ஜே யேசுதாஸ்(மனைவி அமைவதெல்லாம்)
பிடிக்காத பாடகர் - சொல்லத்தெரியவில்லை//////////////////
நல்ல பதில்....எல்லா பாடகர்களும் கஷ்டப்பட்டுத்தான் பாட்டு கத்துக்கொண்டு வருகிறார்கள்....ரொம்ப நல்லா சொன்னிங்க :)

ஸாதிகா said...

மலிக்கா,உங்கள் பிடித்த பத்தை நீங்கள் சொல்லும் முன்னரே பார்த்து விட்டேன்.

ஸாதிகா said...

சகோதரி கிருத்திகா என் பிளாக்கிற்கு வருகை தந்தமைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

//ஹுசைனம்மாவுக்கு வரும் இப்படி புதுபுது ஐடியாக்களை பிளாக்கிலோ,அறுசுவையிலோ போடலாமே?//

அக்கா, இது அறுசுவையில்தான் பார்த்துச் செய்தேன், ஆனால் சில மாற்றங்களோடு. எனக்காவது புது ஐடியா, அதுவும் சமையல்ல..போங்கக்கா, ஜோக்கெல்லாம் அடிக்காதீங்க.

Menaga Sathia said...

என் அழைப்பை ஏற்று பதில் தந்தமைக்கு நன்றி அக்கா!!

//நட்பில் பிடித்தது எதிராபாராமல் இருக்கும் ந்ட்பு,பிடிக்காதது எதிர்பார்ப்புடன் கூடிய நட்பு..//நச் நு அழகா சொல்லிருக்கிங்க.சூப்பர்ர்ர்!!

ஸாதிகா said...

ஹுசைனம்மா,நான் ஜோக் எல்லாம் அடிக்கவில்லை சீரியஸ் ஆகத்தான் சொன்னேன்.முதலில் அறுசுவை மூலம் குறிப்புக்கொடுக்க ஆரம்பியுங்கள்.அப்புறம் சமையலுக்கு என்றே அட்டகாசமான பிளாக்கே ஆரம்பித்து விடுவீர்கள்

ஸாதிகா said...

மேனகா,
பின்னூட்டத்திற்கு நன்றி.

Vijiskitchencreations said...

நான் உங்களை அழைக்க இருந்தேன். பாவம் இப்பதான் நிங்க பெண்களை பற்றி போட்டிருந்ததை பார்த்து சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று விட்டேன் இப்ப பார்த்தா நிஙகளும் கல்க்கிட்டிங்க.
எனக்கு உங்க பத்தில் பிடித்தது எதிர்பார்ப்பில்லாத நட்பு. நானும் இதே கட்சி தான். சியர்ஸ் ஸாதிகா.